![]() |
|
பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து! (/showthread.php?tid=2291) |
பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து! - Rasikai - 11-25-2005 <b>பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும்:</b> உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் 1மீட்டர் உயர்ந்து விடும். உலகின் பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாறி வரும் தட்பவெப்ப நிலைகள், இயற்கைமாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிக்கு இடையே உலகின் வெப்பம் அதிகரிப்பு காரணமாக வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன. வடதுருவத்தில் வெப்பம் அதிகமாவதால் அங்கு பனிப்பாறைகள் இப்போது வேகமாக உருகி வருகிறது. இதனால் கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் அபாய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதன்படி இன்னும் 100 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயர்ந்து விடும். இந்த மாற்றம் உலகின் பல பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். புயல், பலத்த மழை போன்றவை அடிக்கடி ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்படும். கடல் நீர் மட்டம் உயர்ந்து பல பகுதிகளை மூழ்கடித்து விடும். இந்த அபாயத்தை விஞ்ஞான ரீதியில் தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் கூட அதற்கு 1000 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நன்றி http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2& - Thala - 11-25-2005 ம்ம்....... ஊரில மேட்டுநிலமாப் பாத்து ஒரு காணி வாங்கி விடவேணுமப்பா...... 100 வருசத்தில 1 மீற்றர் எண்டா 50 வருசத்தில ஒண்டரை அடிதானே தண்ணி கூடும்.. பறவாய் இல்லை நான் நீந்துவன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-25-2005 இப்ப இமயமலையில ஏக்கர் ஒன்று என்ன விலை போகின்றது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 11-25-2005 தூயவன் Wrote:இப்ப இமயமலையில ஏக்கர் ஒன்று என்ன விலை போகின்றது? <!--emo& அதில் ஒரு ஏக்கரும் இப்போதைக்கு விக்கிறதா இல்லை... :wink: நன்றி ரசிகை தகவலுக்கு...பயப்பிடதீர்கள் ரசிகை... எங்களுக்கு சிஎன் ரவர் இருக்கு.... - aathipan - 11-25-2005 RaMa Wrote:தூயவன் Wrote:இப்ப இமயமலையில ஏக்கர் ஒன்று என்ன விலை போகின்றது? <!--emo& அதை நான் தான் சொல்லவேண்டும் - அருவி - 11-25-2005 இது சில வருடங்களிற்கு முன்பே கூறிவிட்டார்கள். ஒவ்வொரு வருடம் கடல் மட்டம் 1cm இனால் உயர்வடைகின்றது. மெக்சிக்கோ சிற்றி ஒவ்வொரு வருடமும் கீழே தாழ்ந்து கொண்டு போகிறதாம். - Vaanampaadi - 11-26-2005 <b>ஓசோன் படலத்தில் ஓட்டை: பூமி வெப்பம் உயர்வால் கொட்டுது புயல் மழை- அதிர்ச்சி தரும் அறிவியல் தகவல் </b> ஒரு வருடம் கூட சரியாக மழை பெய்ய மாட்டேங்கிறதே என்று இவ்வளவு காலமும் நாம் புலம்பி கொண்டிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது இப்போது எல்லை மீறி சென்று அவை துன்ப அதிர்ச்சியாக மாறி இருக்கிறது. ஏன் இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. வாழ்நாளில் இப்படி ஒரு மழையை நான் பார்த்தது இல்லையே வரலாறு காணாத மழையாக அல்லவா இருக்கிறது என்று தான் ஒவ் வொருவரும் புலம்பிக் கொண் டிருக்கிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக மழை கொட்டுவது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல. உலகம் முழுவதுமே இதே நிலைதான் ஏற்பட்டு இருக்கிறது. கேதரீனா, ரீட்டா, வில்மா என அமெரிக்காவை அடுத்தடுத்து புயல் தாக்கி வெள்ளக்காடாக்கியது. இந் தியாவில் பீகாரிலும், மும்பையிலும் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு திக்கு முக்காட வைத்தது. இப்போது தமிழ்நாடு அதன் பிடியில் சிக்கி இருக்கிறது. இயற்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு விட்டதா? இதனால்தான் இப்படி மழை கொட்டுகிறதா? என்று கேள்விகள் எழுந்து விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து கொண்டிருந்தது. அமெரிக்க விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. நாம் பயன்படுத்தும் எரி பொருட்களினால் காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு சூரியனின் வெப்பம் பூமியை அதிகமாக தாக்குவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து சொல்லி இருந்த னர். இதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனி படிவங்கள் மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் பனிகள் உருகி கடல் மட்டம் உயரும். இதனால் பல தீவுகள் மூழ்கி விடும். கடற்கரை பகுதி களும் அழியும் என்று அவர்கள் கூறினார்கள். இப்போது ஏற்படும் புயல் மற்றும் மழைக்கு கூட இந்த வெப்ப நிலை மாற்றம்தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். பூமியில் வெப்பம் அதிகரித்து இருப்பது கடல் பகுதியையும் பாதித்து உள்ளது. அதாவது 1990க்கு பிறகு கடல் பகுதியில் 0.5 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது. எனவே கடலில் இருந்து தண்ணீர் ஆவியாவது அதிகரித்து உள்ளது. பொதுவாக குளிர் கடல் பகுதிகளில் தண்ணீர் ஆவியாவது குறைவாக இருக்கும். வெப்ப நிலை உயர்வால் அங்கேயும் கடல் நீர் அதிகமாக ஆவியாகிறது. அவை மேக கூட்டமாக உருமாறி காற்றழுத்தத்தை உருவாக்குகின்றன. அதன் மூலம் புயல் ஏற்பட்டு மழை கொட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தண்ணீர் அதிகமாக ஆவியாவதால் அந்த புயல்களின் வீரியமும் அதிகமாக இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர். உலகின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி இது போன்ற புயல்களையும், வெள்ளத்தை யும் அடிக்கடி சந்திக்க வேண்டியது வரும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். Maalaimalar - ப்ரியசகி - 11-26-2005 ஐயோ..என்ன பயப்பிடுத்துறீங்கள்?????? hock: hock: ஆளாளுக்கு இமய மலை...சிஏன் ரவர் இருக்கு எண்டிக்கிட்டு.. :twisted: :twisted: நான் வாழுற நாடு ஏற்கனவே..கடலில இருந்து மண் போட்டு உயர்த்தி எடுத்த நாடுங்கோ... :? கடல் மட்டத்துக்கு கீழ தான் இருக்கிறதே...ம்ம் மிச்சம் உங்களுக்கே தானா தெரியும் எண்டு நெக்கிறன்.. :roll: தூயவன்..நீங்கள் வாங்கும் போது எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கி வையுங்கோ..காசு அங்கே வந்து செட்டில் பண்ணுறேன்.. :wink: இல்லன்னா அக்காச்சியள். ஒரு குட்டி இடம் தராமலா போவீர்கள் என்ன :roll: :wink: - MUGATHTHAR - 11-27-2005 Thala Wrote:100 வருசத்தில 1 மீற்றர் எண்டா 50 வருசத்தில ஒண்டரை அடிதானே தண்ணி கூடும்.. பறவாய் இல்லை நான் நீந்துவன்.... <!--emo& தம்பி அதுக்கிடையிலை கலியாணமும் முடிஞ்சிடும் தானே அப்ப உமக்கு நீந்தி உயிர் தப்பவேணும் எண்ட எண்ணம் வராதே அப்பு......... - SUNDHAL - 11-27-2005 பேசமா ஆள் ஆளுக்கு ஒரு கப்பல் வாங்குங்கப்பா......... - RaMa - 11-28-2005 SUNDHAL Wrote:பேசமா ஆள் ஆளுக்கு ஒரு கப்பல் வாங்குங்கப்பா......... என்ன ரைரானிக் ரேஸ்சிலையா? - தூயவன் - 11-28-2005 ப்ரியசகி Wrote:தூயவன்..நீங்கள் வாங்கும் போது எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கி வையுங்கோ..காசு அங்கே வந்து செட்டில் பண்ணுறேன்.. அஸ்கு புஸ்கு. காசை இப்போ தாந்தாத் தான் காணி வாங்குவேன். இல்லாட்டில் இல்லை. ஆமா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-28-2005 RaMa Wrote:SUNDHAL Wrote:பேசமா ஆள் ஆளுக்கு ஒரு கப்பல் வாங்குங்கப்பா......... கிழிஞ்சுது இஞ்சை பேப்பரிலை கப்பல் செய்யவே வக்கைக் காணேலை இந்த லச்சணத்திலை ரைற்றானிக்.... பிள்ளை உங்கடை றேன்ஞ் கொஞ்சம் ஓவர்தான்......... - ப்ரியசகி - 11-29-2005 தூயவன் Wrote:முதல்ல ஓம்/இல்லை ஏதாவது ஒன்டை சொல்லுங்கோ தூயன்.. :roll:ப்ரியசகி Wrote:தூயவன்..நீங்கள் வாங்கும் போது எனக்கும் ஒரு ஏக்கர் வாங்கி வையுங்கோ..காசு அங்கே வந்து செட்டில் பண்ணுறேன்.. :? :? உயிர் போகிற நிலமையே வந்தாலும் உந்த பழக்கத்தை விட மாட்டீங்களே?? :evil: :evil: - தூயவன் - 12-02-2005 ப்ரியசகி Wrote:முதல்ல ஓம்/இல்லை ஏதாவது ஒன்டை சொல்லுங்கோ தூயன்.. :roll: சரி.. உங்களுக்காக ஒம். எண்டாலும் பண்பாட்டை மாத்தேலுமோ :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 12-03-2005 தூயவன் Wrote:ப்ரியசகி Wrote:முதல்ல ஓம்/இல்லை ஏதாவது ஒன்டை சொல்லுங்கோ தூயன்.. :roll: அதுதானே...அதெப்பிடி மாத்துறது? தண்ணி எழும்பி கழுத்தளவில நிண்டு..உயிர் போற நிலைமையே வந்தாலும் பண்பாடு மாறாது... இல்லையா?? :roll: :twisted: :twisted: :twisted: - தூயவன் - 12-05-2005 இதில் என்னுமொரு உண்மை என்னவென்றால் நாம் நினைப்பது போல நீர் மட்டம் என்பது மெதுவாகத் தான் அதிகரிக்கும் என்றில்லை. பொதுவாக ஒரு ஜஸ்கட்டி உருகும்போது பார்த்தீர்கள் என்றால் முதலில் மெதுவாக உருகும். பிறகு திடுப்பென நீராகி விடும். அவ்வாறே வெப்பம் அதிகரிக்கும் போது திடீர்ரென்று பனி எல்லாம் உருகி நீர்மட்டம் அதிகரிக்கும். அப்போ நாம் எல்லோரும் அம்போ தான். :wink: |