Yarl Forum
பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகூற அமைச்சரவை வேண்டுகோள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகூற அமைச்சரவை வேண்டுகோள் (/showthread.php?tid=2304)



பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகூற அமைச்சரவை வேண்டுகோள் - வியாசன் - 11-24-2005

பிரபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி அவரை சந்திப்பதற்கான விருப்பத்தை அறிவிக்க வேண்டும் அமைச்சரவையில் வலியுறுத்தல்
நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கான சமாதான முயற்சிகளை கூடிய விரைவில் ஆரம்பிப்பது என நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுஇ மாவீரரின் தினத்தையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றவுள்ள உரை குறித்தும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

புலிகள் இயக்கத்தின் தலைவர் எதிர்வரும் சனிக்கிழமை 26 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். அன்றைய தினம் ஜனாதிபதி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரை நேரடியாக சந்திக்க விரும்பும் விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்ததாக தெரிய வருகிறது.

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில் வெளியிட்ட மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கூடிய விரைவில் அமுல்படுத்த வேண்டும். சில விடயங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரமோ பாராளுமன்ற அங்கீகாரமோ தேவையில்லை. அமைச்சு மட்டத்தில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பது எனவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தை அடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கெத்தாராம விளையாட்டரங்கில் தஞ்சமடைந்த அகதிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்

சுட்டது லங்காசிறியிலிருந்த