ஊர்ப்புதினம்

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!

1 week 3 days ago

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!

06 Mar, 2026 | 03:47 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்தக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் தற்போதைய நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு நாங்கள் முயற்சிப்பதில்லை. ஆனால் அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம், போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்தியாவுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த விடயங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சபையில் இருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவுக்கு எதிராக கதைக்கமாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல. கடற்படை பயிற்சி முகாம் எமது நாட்டில் நடத்தவில்லை. கடந்த மாதம் 18ஆம் திகதி இந்திய விசாலாப்பட்டினத்திலே இடம்பெற்றது.

ஆனால் ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விடயத்தில் இந்தியா லாவகமாக எமது நாட்டுக்கு அதனை திசை திருப்பி இருக்கிறது. இந்தியாவுடன் உங்களது ஜனாதிபதிக்கு தோல்மேல் கை போட்டுக்கொண்டு இருக்கக் சொல்லுங்கள். ஆனால் முதுகில் குத்தும்வரை தெரியாமல் இருக்கும். ஈரானின் இரண்டாவது கப்பலை இந்தியா எடுப்பதாக நீங்கள் இந்த சபையில் தெரிவித்து வந்தீர்கள். ஆனால் இரண்டாவது கப்பலையும் இந்தியா எமக்கு தள்ளிவிட்டார்கள்.

கடற்படையின் பயிற்சி எமது நாட்டிலா இடம்பெற்றது என கேட்கிறேன். இந்தியாவில் தானே இடம்பெற்றது. இந்தியா லாவகமாக இரண்டு கப்பல்களையும் எமது பக்கம் தள்ளிவிட்டார்கள். ஈரான் தூதரகத்துக்கு நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) சென்றோம்.

அப்போது தூதுவர் எங்களிடம் தெரித்த விடயம்தான், கடற்படை தளபதி இந்தியாவில் இடம்பெற்ற பயிற்சியில் இருந்துள்ளார். அப்போது, இலங்கைக்கு வருமாறு ஈரான் கடற்படைக்கு வாய்ப்பேச்சாக தெரிவித்திருக்கிறார்.,இதுதொடர்பாக கடற்படை தளபதி பொறுப்புடனா தெரிவித்தார் என்பது தொடர்பில் விசாரித்து, பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்தியா என்பது எம்மை போன்று சிறிய நாடு அல்ல. உலகில் இருக்கும் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்று. அப்படியான நாடு, இந்த விடயத்தில் மெளனம் காத்து, பந்தை எமது பக்கம் எறிந்துவிட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.என்றாலும் ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என பலர் தெரிவிக்கப்பட்டனர். முன்னாள் சட்டமா அதிபர் தப்புலலிவேராவின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்து தருமாறு கோட்டாபய ராஜபக்ஷ்விடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனை கோட்டாபய ராஜபக்ஷ் நிராகரித்ததாலே, தப்புலலிவேரா ஓய்வு பெற்றுச்செல்லும்போது, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருக்கிறார் என தெரிவித்தார். ஆனால் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு தெரிவித்தபோது, அவர் செல்லாமல் மறைந்திருந்தார் என்றார்.

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

1 week 3 days ago

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

06 Mar, 2026 | 06:37 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அவசரகால சட்டத்தின் அமுலாக்க காலத்தை நீட்டிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தமானிக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை பற்றி கேட்பதற்காகவே காலையில் உரையாற்றுவதற்கு அனுமதி கேட்டேன்.ஆனால் நாங்கள் பேசினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெளிவருமோ என்ற அச்சத்தில் சபாநாயகர் எமக்கு பேசுவதற்கு இடமளிப்பதில்லை.

சட்டம் அனைவருக்கும் சமம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்தியா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு செயற்படுகிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் வழமைக்கு மாறாக துரிதமாக செயற்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.ஆகவே ஆணைக்குழு குமார ஜயகொடிக்கு ஒரு வகையிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிறிதொரு வகையிலும் செயற்படுகிறது.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டமும் மீறப்பட்டுள்ளது.தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பார்க்க வருபவர்கள் பொலிஸ் அறிக்கை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுடன் சட்டத்தரணி உரையாடும் போது அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளார்கள்.இதுவொரு புதுமையான சட்டம்.

ஈரான் கப்பலை ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் பாதுகாத்தார், அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்டார் என்று குறிப்பிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இலங்கை கடற்பரப்பில் மார்ச் 02 ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த உளவு தகவல்களுக்கு அமைவாகவே ஈரான் கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். கடந்த கால ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்துகிறார்கள் என்றார்.

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!

1 week 3 days ago

ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!

07 Mar, 2026 | 11:09 AM

image

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையின் வசம் உள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் மூழ்கியது.

அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள 'ஐரிஸ் புஷெர்' என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மாலுமிகளை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அவர்களைத் திருப்பி அனுப்பும் விடயத்தில் இலங்கை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மார்ச் 06 ஆம் திகதியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டுத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாலுமிகள் விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

1 week 4 days ago

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Vishnu

06 Mar, 2026 | 08:18 PM

image

சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பு தேவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'பாலஸ்தீனத்தின் நண்பர்கள்' (Friends of Free Palestine) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-03-06_at_19.18.43.jp

WhatsApp_Image_2026-03-06_at_19.18.42.jp

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது

1 week 4 days ago

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது 

06 Mar, 2026 | 05:55 PM

image

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், 2 டிங்கிகள், 3 படகுகள் மற்றும் 7 பாரம்பரிய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளால் திருகோணமலை கதிரவேளி, கோட்பே, கோகிலாய், மூதூர், நோர்வே தீவு மற்றும் மன்னார் தால்பாடு மற்றும் இரணைதீவு ஆகியவற்றின் தெற்கு கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த 19 பேரும் பிடிபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் 19 பேரும், புல்முடை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, வாழைச்சேனை, கோட்பே, மூதூர், கிண்ணியா மற்றும் மன்னார் மீன்வள ஆய்வு அலுவலகங்கள் மற்றும் முலன்காவில் பொலிஸ் நிலையம் ஆகியவற்றிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed__1_.jpg

unnamed__3_.jpg

unnamed__2_.jpg

unnamed__4_.jpg

unnamed.jpg

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

1 week 4 days ago

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 05:06 PM

image

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் படி, வீட்டிலிருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளிட்ட சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என். கெட்டியாராச்சி அவர்களின் பணிப்புரையின் பேரில், மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான தலைமையிலான பொலிஸ் குழு விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

WhatsApp_Image_2026-03-06_at_4.20.06_PM_

இதன் போது பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மற்றும் மீட்கப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

1 week 4 days ago

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 10:43 AM

image

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான 'போர் கால இடர் காப்புறுதியை' மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் இரத்து செய்துள்ளன.

கடந்த வாரம் கப்பல் பெறுமதியில் 0.2 சதவீதமாக இருந்த காப்புறுதி கட்டணம், தற்போது 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உதாரணமாக, 100 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் ஒன்றுக்கான காப்புறுதி கட்டணம் 02 இலட்சம் டொலரிலிருந்து 10 இலட்சம் டொலர் வரை அதிகரித்துள்ளது.

காப்புறுதி கட்டண அதிகரிப்பு மற்றும் கப்பல்கள் மாற்றுப் பாதையில் பயணிப்பதால் ஏற்படும் மேலதிக செலவுகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை இலங்கையில் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் பேச்சாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதால் இலங்கையை வந்தடைவதற்கு மேலதிகமாக 10 முதல் 14 நாட்கள் வரை தாமதமாகும்.

ஆடை மற்றும் இறப்பர் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகின் 20 சதவீத மசகு எண்ணெய் விநியோகம் ஹோமுஸ் நீரிணை ஊடாகவே இடம்பெறுகிறது. தற்போது இப்பாதை மூடப்பட்டுள்ளதால், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 டொலரைக் கடந்துள்ளது.

இது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு

1 week 4 days ago

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:05 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் நின்றனர். புதிதாகத் திருமணம் செய்யும் தம்பதியினர் கூட ஒரு எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள அடகுக்கடைக்குச் செல்லும் நிலையே காணப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிப்பதாகக் கூறுகிறார். இதனை நாம் வரவேற்கிறோம் ஆனால் இந்த முடிவை அவர் முன்னரே எடுத்திருக்க வேண்டும்.

அதேநேரம், தற்போது சந்தைக்கு வரும் சிலிண்டர்களில் எரிவாயுவின் அளவு குறைவாக இருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை உறுதிப்படுத்த நாம் வரும் நாட்களில் தராசுகளைப் பயன்படுத்தி சிலிண்டர்களின் வெற்று எடை மற்றும் எரிவாயுவின் எடையை அளவிட்டு நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக நிரூபிப்போம். லாஃப்ஸ் போன்ற நிறுவனங்கள் தமது இலாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சரியான விலையில் தரமான சேவையை வழங்க வேண்டும்.

தற்போது காணப்படும் எரிபொருள் வரிசைகளுக்குப் பின்னாலும் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினரின் கைவரிசை உள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைப் பதுக்கி வைத்து போத்தல்களில் 2000 ரூபாவுக்கு விற்றவர்கள் இவர்களே. இவர்களது ஆதரவாளர்களே எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நின்று தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

தற்போது நாட்டில் எரிபொருள் கையிருப்பு தாராளமாக உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக ஜே.வி.பி உறுப்பினர்களின் வீடுகளைச் சோதனையிட வேண்டும். அங்கு சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி எரிபொருளைத் தேவையற்ற முறையில் சேமிக்க வேண்டாம் என்றார்.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு

ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

1 week 4 days ago

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:57 AM

image

இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானிய கடற்படை கப்பலான IRIS Bushehr-இல் பணியாற்றியிருந்த 208 கப்பற் பணியாளர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

WhatsApp_Image_2026-03-06_at_06.43.15.jp

இலங்கை கடற்படையினரின் தகவலின்படி, இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து குறித்த ஈரானிய கடற்படை கப்பலில் இருந்த அனைத்து 208 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

WhatsApp_Image_2026-03-06_at_06.43.13.jp

மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கப்பலில் இருந்த பணியாளர்கள் தற்போது கொழும்பு நோக்கி கரைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், IRIS Bushehr கப்பலை இலங்கை கடற்படை தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான காரணங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கப்பலில் ஏற்பட்ட அவசர நிலைமை குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

1 week 4 days ago

மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

Mar 5, 2026 - 08:16 PM

மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக இன்று (05) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுக்கொண்டது.

இந்த சூழலில் போதுமான ஆதாரங்கள் இன்றி தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவை மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்காக, இது தொடர்பான வழக்குக் கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்குமாறு சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நேற்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

தனது கட்சிக்காரரைச் சந்திப்பதற்கு மேலதிக ஒரு நாளை ஒதுக்கித் தருமாறும், அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரினர்.

வழக்குக் கோப்புகளின் பிரதிகளை வழங்க நீதவான் உத்தரவிட்ட போதிலும், ஏனைய கோரிக்கைகளை நிராகரித்தார்.

சுரேஷ் சலேயைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதுவரை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காததே இதற்குக் காரணமாக அமைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேயைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது.

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பப்பட்டமை, சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 35882/24 இலக்க வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளார்.

தற்போது தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபரை, நீதவான் பொருத்தமான ஒரு நாளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து பார்வையிடுமாறும் திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இதற்கான விடயங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், விரைவில் அங்கு சென்று சந்தேக நபரைப் பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmmdk45af0005356p4812ol20

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்

1 week 4 days ago

WhatsApp-Image-2026-03-06-at-10.49.12.jp

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்.

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1467362

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

1 week 4 days ago

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

Published By: Digital Desk 1

06 Mar, 2026 | 10:52 AM

image

இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது

அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன.

சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏனைய அனைத்து விதிகளும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மின்சாரசபையின் மறுசீரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.  

WhatsApp_Image_2026-03-06_at_10.18.40.jp

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்

1 week 4 days ago

வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்

Published By: Vishnu

06 Mar, 2026 | 05:39 AM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அண்மைய காலநிலை பேரழிவைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மன்னார். முல்லைத்தீவு வவுனியா,கிளிநொச்சி,மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடி நிலை குறித்து, விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அவசர கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

நாடு பயிர்ச் சேதங்கள் குறித்து கவனம் செலுத்தி வரும் வேளையில்,எமது கால்நடை விவசாயம் மீது ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சிய மழை காரணமாக, 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகளும் மற்று கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்க குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும்.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக் மாடுகள் மற்றும் எருமைகளும், மற்றும் ஆடுகளும் உயிரிழந்துள்ளன.இறப்புக்கு சராசரி வெப்பநிலையை விட கணிசமாகக் குறைந்த கடும் குளிர் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இருந்த கால்நடைகளுக்குப் போதிய தங்குமிட வசதி இல்லாமையுமே இதற்குக் காரணம் என கால்நடை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

நீண்டகால பால் உற்பத்தி இழப்பைத் தவிர்த்து,நேரடியாக கால்நடைகளின் பெறுமதி மட்டும் சுமார் 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே உயிரிழந்த கால்நடைகள் குறித்து அமைச்சு முறையான கணக்கெடுப்பை நடத்தி,ஒரு தெளிவான தரவுத் தொகுப்பை உருவாக்கியுள்ளதா?

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மாடு மற்றும் எருமை உரிமையாளர்கள் கோழிபாண்ணையாளர்களுக்கும், அதேபோல் தொடர்புடைய பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அமைச்சு எவ்வளவு இழப்பீடு வழங்கியுள்ளன? ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் விவசாயிகளுக்கு, உயிரிழந்த ஒவ்வொரு கால்நடைக்கும் உடனடி இழப்பீட்டுத் தொகுப்பை வழங்க அரசாங்கம் முன்வருமா?

பலவீனமான நிலையில் இருக்கும் எஞ்சிய கால்நடைகளுக்கு அவசர விற்றமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இது போன்ற அனர்த்தங்களுக்கு உள்ளாகும் வடக்கு மேய்ச்சல் நிலங்களில், வானிலையைத் தாங்கக்கூடிய கால்நடைத் தொழுவங்களை அமைப்பதற்கு மானியங்களை வழங்க அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளதா?இந்த விவசாயிகளே எமது குழந்தைகளின் பசியைத் தீர்க்கும் பாலை வழங்குகிறார்கள். அவர்கள் தம்மால் கையாள முடியாத ஒரு காலநிலை பேரழிவினால் மேலும் கடனாளிகளாக மாற நாம் அனுமதிக்க முடியாது என்றார்.

வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்

ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை

1 week 4 days ago

ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை

Published By: Vishnu

06 Mar, 2026 | 05:08 AM

image

தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும்  நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது  எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

WhatsApp_Image_2026-03-06_at_04.40.38.jp

மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல்  நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையிலே இரு ஈரான் நாட்டு கப்பல்கள்   தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அதிலும் நாம் நடுநிலையையே பின்பற்றியுள்ளோம். நாடென்ற வகையில் எந்த வகையிலும் நடுநிலையை பாதுகாக்கும் அதே சமயம் மனிதாபிமானத்திற்கு முதன்மையளிக்கிறோம். மனித உயிர்களை பாதுகாக்க ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். 

கடந்த மாதம் 26 ஆம் திகதி  எமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக மார்ச் 9 முதல்  13 வரை எமது துறைமுகத்திற்கு வருகை தர அனுமதி வழங்குமாறு ஈரான் கோரியிருந்தது. ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான விஜயமாக அது குறிப்பிடப்பட்டிருந்தது.  இது தொடர்பில் நாம் ஆராய்ந்ததில் எமது நாட்டு கடற்பரப்பிற்கு அருகில் அதற்கு வெளியில் ஈரான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.ஒத்துழைப்பு விஜயங்கள் அவ்வாறு முன்னெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பல செயற்பாடுகள் இருக்கின்றன.   அது தொடர்பில் நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

இந்த நிலையில் நாம் தற்பொழுது எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள கப்பலில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி எமக்கு அறிவிக்கப்பட்டது. அவரையும் அதிகாரி ஒருவரையும் கரைக்கு எடுத்து வர அனுமதி கோரியிருந்தனர். அதற்கமைய அவர்களை அழைத்து வந்து தேவையான சிகிச்சைகளை வழங்கினோம்.

இந்த நிலையில் தான் கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 5.08- 5.30 ற்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி துறைமுகத்தில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் கப்பலொன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அனர்த்த சமிக்ஞை எழுப்பப்பட்டிருந்தது.

எமது கடற்படையும் விமானப் படையும் பாரிய முன்னெடுப்பில் ஈடுபட்டன. நாம் பக்கசார்பற்றவர்கள் என்பதைப் போன்றே மனிதாபிமானம் கொண்டவர்கள். பலர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர். எனவே எமது கடற்படையினரும் விமானப் படையினரும் துரிதமாக தலையிட்டு 32 பேரை மீட்டனர். 84 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டன. அந்த சடலங்களையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு எடுத்து வந்தோம். காயமடைந்தோர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த IRIS கப்பலில் இருந்து 4 அல்லது 5 ஆம் திகதியில் எமது துறைமுகத்தில் நங்கூரமிட வெளிவிவகார அமைச்சின் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தனர். நாம் அது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம். எமது வெளிவிவகார அமைச்சர் , ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் இது தொடர்பில் கலந்துரையாடினார். தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு தரப்பினரும் கூட ஆராய்ந்தனர். கப்பலின் ஒரு இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

எமது கடற்பரப்பில் பின்பற்றப்படவேண்டிய சர்வதே உடன்பாடுகள் உள்ளன. யுத்தத்துடன் தொடர்புள்ள ஒரு தரப்பிற்குரிய கடற்படை கப்பல் என்பதால் நடுநிலையான நாடு என்ற வகையில் எவ்வாறு அவ்வாறான கப்பல் தொடர்பில் செயற்படுவது என்பது குறித்தும் ஐ.நா. சமுத்திர சட்டம், 1907 ஹேக் சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.

இது சாதாரண நிலைமை அல்ல. நடுநிலையான நாட்டில் ஒரு தரப்பிற்குரிய கப்பலொன்று எமது துறைமுகத்திற்கு பிரவேசிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதனை சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே கையாள வேண்டும். இதனை அவசரப்பட்டு செய்ய முடியாது. சட்டங்கள் மற்றும் சர்வதேச பிணைப்புகள் தொடர்பில் இருதரப்பும் ஒரு புரிந்துணர்விற்கு மற்றும் உடன்பாட்டிற்கு வர வேண்டும். எமது கடற்படை அதிகாரிகளும் அந்த கப்பலின் மாலுமியுடனும் ஈரான் தூதரகத்துடனுடன் கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கப்பலில் உள்ளவர்களையும் கப்பலையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நாம் தயார் என அறிவித்தோம். கப்பலில் இருப்போரை மீட்கவும் கப்பலை நங்கூரமிடும் இடம் தொடர்பிலும் பொது உடன்பாட்டிற்கு வந்தோம். கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலே இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக துறைமுகமாகும். இந்த கப்பலை இங்கு நிறுத்துவது எமது கடல் சார்ந்த வர்த்தகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அதனால் அந்த கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். கப்பலில் இருப்போரை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்காக எமது கடற்படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

208 பேர் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 53 அதிகாரிகளும் 84 கெடட் அதிகாரிகளும் 48 சிரேஸ்ட கடற்படையினரும் 23 கடற்படையினரும் உள்ளனர். அவர்களை எமது படகுகளில் ஏற்றி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் பின்னர் ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைத்து கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே நாம் தெளிவான நிலைப்பாட்டையே பின்பற்றுகிறோம். எந்த நாட்டுக்கு பக்கசார்பாகவோ எந்த நாட்டுக்கு அடிபணிந்தோ நாம் செயற்பட மாட்டோம். எமது நாடு இறையான்மையுள்ள நாடு. அரசாங்கமென்ற வகையில் எமது கடற்பரப்பு தொடர்பிலும் எமது நாடு தொடர்பிலும் எமது மக்கள் தொடர்பிலும் எமக்குப் பொறுப்புள்ளது.

அவையும் எமக்கு முக்கியமானவை. அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அன்றி எமது மக்கள் மற்றும் எமது தாய்நாடு தொடர்பில் முன்னுரிமை அளித்தே தீர்மானங்களை எடுக்கின்றோம். வெளியில் எவ்வாறான கோசம், அழுத்தம் இருந்தாலும் நாம் குழப்பமடைய மாட்டோம்.

எமது நடுநிலை போக்கை பாதுகாத்து எமது மனிதாபிமானத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது எமது நிலைப்பாடாக இருந்தது. எந்த நாட்டுப் பிரஜையும் இவ்வாறான மோதலினால் உயிரிழப்பதை நாம் ஏற்கவில்லை. சகல பிரஜைகளினதும் உயிர்கள் தமது உயிர்களுக்கு சமமானதாக கருதி செயற்பட வேண்டும். அதற்கமையவே நாம் இந்த முடிவுகளை எடுத்து செயற்படுத்தினோம்.

அதன் படி அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். உலகின் அமைதிக்காக தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என யுத்தத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினரிடமும் கோருகிறோம். மக்கள் உயிரிழக்கின்றனர். பாரிய பொருளாதார நெருக்கடி சூறாவளியாக வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் எங்கும் சிக்கல் நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளது. அமைதியையே முழு உலகமும் எதிர்பார்க்கிறது. அமைதிக்காக அனைவரும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். நாடென்ற வகையில் அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம்.

இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் நாம் இந்த தலையீட்டை செய்தோம். இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும்.

ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை

தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன்

1 week 4 days ago

தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன்

Published By: Vishnu

06 Mar, 2026 | 04:14 AM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக் கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரம் விதவைகள் வாழ்வதாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்  உறவுகளை தேடும் போராட்டமும், பயணமும் இன்றளவிலும் முடிவடையவில்லை.  

வலிந்து காணாமல் போனோர் இன்றும் தமது உறவுகளுக்காக வீதிகளில் போராடுகிறார்கள். பல தமிழ் பெண்கள் நெற்றியில் குங்குமத்துடனும், கழுத்தில் தாலியுடனும் தனது கணவனுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பதிலை சொல்ல போகிறது.

உலக நடப்புகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது பற்றி இன்று சபையில் பலர் பேசுகிறார்கள். இதே நிலைமை தான் அன்று வடக்கு மற்றும் கிழக்கில் நடந்தது. செஞ்சோலை பகுதியில் பல பெண் பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். விமானம் ஊடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்தார்கள்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களுக்கு நேர்ந்தது என்னவென்பது இன்றளவிலும் மறைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி குடும்பத்தாருடன் இராணுவத்தில் சரணடைந்தார். அதேபோல் வனவளத்துறை பிரிவின் அதிகாரி சக்தி, பாலா, ராஜா உட்பட பலர் வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இராணுவத்தில் சரணமடைந்தார்கள். இவர்கள் இன்றும் திரும்பவில்லை.

யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக் கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.

இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன்

சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்!

1 week 5 days ago

சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்!

05 Mar, 2026 | 05:19 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ள பின்னணியில் முன்வைக்கப்படும் இந்த கேள்விகளுக்கு பதிலை ஆராய்வது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலங்கை இராணுவத்தால் தேடப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகியோர் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் 2000 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இதில் காட்டிக்கொடுக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே இது தொடர்பான புகைப்படத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றனர் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்ற இந்த மூவரும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பியோட முயற்சித்த நிலையில் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. எனவே இந்த சம்பவத்தையும் மீண்டும் விசாரணை செய்தால் தற்போதைய விசாரணைகளுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களை நான் தனிப்பட்ட முறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதங்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. இவர்கள் வைத்த ஆயுதங்களை இவர்களே தற்போது மீள வழங்குகிறார்கள். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய வேண்டும். அது தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாதகமாக அமையும் என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஒருபகுதி பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையது. ஆகவே விரிவான பதிலை நாளை (இன்று வெள்ளிக்கிழமை ) முன்வைக்கிறேன் என்றார்.

சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்!

ஏறாவூரில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்

1 week 5 days ago

கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்

05 Mar, 2026 | 06:42 PM

image

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தபாலம் பகுதியில் உள்ள வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர்.

இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கிச் சென்றதையடுத்து அவர்களை பின்தொடர்ந்து பொலிஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் தப்பிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனைத் தடையை அமைத்து, வாகனத்தை நிறுத்துமாறு பணித்தபோது அந்த தடையையும் மீறி கனரக வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றுள்ளது.

வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கனரக வாகனத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.

அதனையும் மீறி வாகனம் தப்பிச் சென்று மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகரின் திருகோணமலை வீதியில் சந்தி பகுதியில் வீதித் தடை விதித்து, குறித்த கனரக வாகனத்தை நிறுத்திப் பிடித்துள்ளனர்.

அதன் பின்னரே சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அவர் சில காலமாக தலைமறைவாகி வந்துள்ளதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு

1 week 5 days ago

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு

Published By: Digital Desk 3

05 Mar, 2026 | 05:07 PM

image

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல இன்று வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குதல் ஆகிய பணிகளுக்காக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து செயற்படும் இந்த விசேட பிரிவுக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார்.

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு

"மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

1 week 5 days ago

வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு – நரம்பியல் மாநாட்டில் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் நெகிழ்ச்சி

05 Mar, 2026 | 04:43 PM

image

அபிலாஷனி லெட்சுமன்

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நரம்பியல் பேராசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதம விருந்தினராக பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வைத்திய நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் நீல் ராபர்ட்சன், உலக பக்கவாத அமைப்பின் தலைவரும், நரம்பியல் பேராசிரியருமான பேராசிரியர் ஜெயராஜ் பாண்டியன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர, சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட நரம்பியல் ஆலோசகருமான பேராசிரியர் ரஞ்சனி கமகே, நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ உட்பட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பல நரம்பியல் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக, வைத்தியத் துறையில் சிறந்து விளங்கிய நிபுணர்களுக்குப் பின்வரும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன:

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகரவுக்கு உயரிய பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இளம் நரம்பியல் நிபுணர்கள் மன்றத்தில் (Young Neurologists’ Forum) சிறந்த முறையில் ஆய்வுகளைச் சமர்ப்பித்த வைத்தியருக்கு விருது வழங்கப்பட்டது.

நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட சிறந்த ஆய்வாளர்களுக்கு ஆராய்ச்சி விருதுகள் வழங்கப்பட்டன.

சிறுவர்களுக்கான வலிப்பு நோய் அறுவை சிகிச்சை குறித்து "சாத்தியங்களின் கலை" (The Art of the Possible) என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரைக்காக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஆலோசகர் சிறுவர் நரம்பியல் நிபுணர் வைத்தியர் சஞ்சய பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டார்.

அதுமட்டுமன்றி இந் நிகழ்வில், இலங்கையின் நரம்பியல் துறை இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமான மூத்த நிபுணர்களின் சேவை இதன்போது விசேடமாக நினைவுகூரப்பட்டது.

இலங்கை நரம்பியல் துறையின் பிதாமகரான வைத்தியர் ஜே.பி. பீரிஸ் மற்றும் நாட்டின் முதல் பெண் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ரஞ்சனி கமகே ஆகியோரின் பங்களிப்புகள் மாநாட்டில் விசேடமாகப் போற்றப்பட்டன.

இவர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளமே இன்று நவீன நரம்பியல் சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவடையக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் பக்கவாத (Stroke) சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்த உலக அளவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆற்றி வரும் சேவை பாராட்டப்பட்டது.

"வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் (Survival curves) அல்ல; அது தைரியம், அன்பு மற்றும் நோயாளியின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது பற்றியது. இதுவே ஒருங்கிணைந்த நரம்பியல் துறையின் உண்மையான வெற்றி" என இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நினைவு தப்பிய நிலையில் (Coma) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய் பிழைப்பது கடினம் எனக் கருதப்பட்ட நிலையிலும், வைத்தியக் குழுவின் தளராத முயற்சியால் 800 கிராம் எடையுடன் ஒரு குழந்தை பிறந்தது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் தனது தாயின் நினைவு நாளில் அந்த வைத்தியருக்கு இனிப்பு வழங்க வந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

வைத்தியக் கல்வியில் இளம் நரம்பியல் நிபுணர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகள் நடத்தப்பட்டன.

இளம் வைத்தியர்களை வழிநடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், சிறந்த ஆய்வுக்காக வைத்தியர் ஷிராத் மதுரபெரும விருது பெற்றார்.

நரம்பியல் சிகிச்சை என்பது வைத்தியசாலை வார்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

வலிப்பு நோய் (Epilepsy), பக்கவாதம் (Stroke) மற்றும் மூளை ஆரோக்கியம் குறித்து நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து, நரம்பு மண்டலம் சார்ந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள சி.டி ஸ்கேன் (CT Scan) வசதிகளை மேம்படுத்தவும் இலங்கை வைத்தியச் சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக பெப்ரவரி 22ஆம் திகதி "உலக மூளைக்காய்ச்சல் தினமாக" (World Encephalitis Day) அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு காணொளிகள் மற்றும் மல்டிமீடியா துண்டுப் பிரசுரங்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டன.

நாட்டின் வைத்தியத் துறை எதிர்கொள்ளும் மிகமுக்கியமான சவால்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆளுமைகள் குறித்த முக்கிய தகவல்கள் முன்வைத்து, சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜந்தா கேசவராஜ் தனது உரையில் நாட்டின் தற்போதைய வைத்திய பற்றாக்குறை குறித்து கவலை வெளியிட்டார்.

ஏனைய வைத்திய துறைகளை விட நரம்பியல் துறையிலேயே மிக அதிகமான நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இளம் நரம்பியல் நிபுணர்களில் சுமார் 60 சதவீதமானோர் தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் அதிக பணிச்சுமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்துடன் (ABN) மீண்டும் பலமான கல்விசார் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச நிபுணர்களின் அனுபவங்களை இலங்கையில் உள்ள இளம் வைத்தியர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தனது வைத்தியப் பயணத்தில் நரம்பியல் துறையைத் தேர்ந்தெடுத்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், மாணவர் பருவத்தில் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட அரிய வகை நரம்பியல் பாதிப்பை (Ramsay Hunt Syndrome) அவதானித்த தருணமே தனது வாழ்நாள் உந்துதலாக அமைந்தது என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

ஆராய்ச்சி, கொள்கை வகுத்தல் மற்றும் பல்நோக்கு கூட்டாண்மை மூலம் இலங்கையின் நரம்பியல் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுவதோடு, சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு வைத்தியக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான அழைப்பாகவும் இலங்கையின் நரம்பியல் துறையை உலகத் தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு மைல்கல்லாக அமையும்.

"வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை (Clinical Protocols) பின்பற்றுவது மட்டுமல்ல; அது தைரியம், அன்பு மற்றும் மனித மாண்பு ஆகியவற்றால் ஆனது" என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கும்.

இந்தத் தனித்துவமான நோயாளி அனுபவத்தின் ஊடாக, "ஒருங்கிணைந்த நரம்பியல்" (Integrated Neurology) என்பதன் முக்கியத்துவத்தை மாநாடு வலியுறுத்துவதாக காணப்படும்.

பல்துறை நிபுணர்களின் கூட்டு ஒத்துழைப்பு (Multidisciplinary Collaboration)

இளம் வைத்தியர்களுக்கான கல்வி மற்றும் வழிகாட்டல் (Academic Mentorship)

இவை அனைத்தும் ஒன்றிணையும் போது, வைத்திய அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதும், நோயாளிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை (Transformative Outcomes) உருவாக்க முடியும் என்பதும் இம்மாநாட்டின் பிரதான செய்தியாக காணப்படுகின்றது.

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கம் கடந்த காலங்களில் அடைந்த கட்டமைப்பு ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இதன்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், மக்களின் விழிப்புணர்வு மற்றும் சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சி ஆகியவற்றில் சங்கம் காட்டி வரும் அக்கறை பாராட்டப்பட்டுவதாக மேலும் தெரிவித்தார்.

(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)

_DSC2954.JPG

_DSC2958.JPG

_DSC2877.JPG

_DSC2869.JPG

_DSC2847.JPG

_DSC2914.JPG

_DSC2843.JPG

_DSC2847.JPG

_DSC2843.JPG

வைத்தியம் என்பது வெறும் உயிர்வாழும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு

காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி

1 week 5 days ago

காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி

05 Mar, 2026 | 12:22 PM

image

காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சிற்றுண்டிச்சாலை புனரமைப்பு: ஜப்பான் அரசாங்கம் ரூபா 12.6 மில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் சிற்றுண்டிச்சாலை கட்டிடத்தை மீள்புனரமைப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் ரூபா 12.6 மில்லியன் நிதியுதவியை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் 'மானிட பாதுகாப்புக்கான அடிமட்டத் திட்டங்களின்' கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது.

இந்த புனரமைப்பு திட்டத்தை ஜப்பானிய தூதரகம் காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.ஐ.எம். தையூப் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

• நிதி ஒதுக்கீடு: ரூபா 12.6 மில்லியன்.

• நோக்கம்: மாணவர்களின் சுகாதார மற்றும் போசாக்குத் தேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் நவீன சிற்றுண்டிச்சாலை வசதிகளை ஏற்படுத்துதல்.

• நடைமுறைப்படுத்தல்: காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் (MPCS)

கடந்த 2025 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரவூப் ஏ. மஜீத் மற்றும் முன்னாள் செயலாளர் சபீல் நளீமி ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜப்பான் தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, ஜப்பான் தூதரகம் இந்த நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த ஒப்பந்தக் கைச்சாத்திடும் நிகழ்வில் பின்வரும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்:

• எம்.என்.எம். பௌசான் (காத்தான்குடி மத்திய கல்லூரி பிரதியதிபர்)

• ரவூப் ஏ. மஜீத் (காத்தான்குடி சம்மேளன பிரதித் தலைவர்)

• எம்.வை.எம். ரமீஸ் (பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி)

"இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாக இந்த உதவி அமைந்துள்ளது. இத்திட்டம் எமது மாணவர்களின் சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், சிறந்த கற்றல் சூழலை உருவாக்கவும் பெரிதும் உதவும்" என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள் மற்றும் காத்தான்குடி பொதுமக்கள் சார்பில், இந்த மகத்தான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பழைய மாணவர் சங்கம் - காத்தான்குடி மத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.

IMG-20260305-WA0004.jpg

IMG-20260305-WA0001.jpg

IMG-20260305-WA0000.jpg

IMG-20260305-WA0003.jpg

IMG-20260305-WA0005.jpg

காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி

Checked
Tue, 03/17/2026 - 19:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr