ஊர்ப்புதினம்

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

1 week 5 days ago

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

Mar 5, 2026 - 04:06 PM

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்க சந்திரசேகர் பாராளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வௌியிட்டார்.

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

1 week 5 days ago

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

Mar 5, 2026 - 01:58 PM

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி செயலிழந்து, அது கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியில் 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால், நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சில நிமிடங்களிலேயே நிலைமையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை.

1 week 5 days ago

images-31.jpg?resize=275%2C183&ssl=1

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை.

நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினமானது பிறை தெரிவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

இலங்கை பிறைக் குழுவின் தீர்மானம் சில நேரங்களில் இரவு வேளையிலேயே அறிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, நாட்காட்டியில் உள்ளபடி சனிக்கிழமைக்கு பதிலாக, மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறான திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வதிலும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலும் பாரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்வார்கள்.

இந்த நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித தடையுமின்றித் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை முன்கூட்டியே பொது விடுமுறையாக அறிவிப்பது அவசியமாகும்.

நாட்காட்டியின்படி சனிக்கிழமை பெருநாள் வந்தாலும், வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாக அமைந்து நன்மையளிக்கும்.

இலங்கையின் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாக இம்ரான் மகரூப் எம்.பி. தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2026/1467253

மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு

1 week 5 days ago

மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு

image_c384766d97.jpg

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது.

ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.

இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மற்றுமொரு-ஈரானிய-கப்பலால்-சலசலப்பு/175-373430

யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை

1 week 5 days ago

யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை

adminMarch 4, 2026

pratheepan.jpg?fit=1100%2C732&ssl=1

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொலன்னாவலையில் இருந்து எடுத்து வரப்பட்ட போதிலும் , இன்றைய தினமும் நீண்ட வரிசை காணப்பட்டது.

இந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமையும் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லிட்டர் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளாா்


Global Tamil News
No image previewயாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்க...
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கடந்த 5…

நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை!

1 week 5 days ago

நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை!

04 Mar, 2026 | 03:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் சட்டமியற்றாது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் நிபுணராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம் கலக்கமடையவில்லை. எதிர்க்கட்சிகள் இன்று கலக்கமடைந்து மக்களை குழப்பமடையச் செய்கின்றன.போலியான விடயங்களை குறிப்பிட்டு மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அல்லது மக்களுக்கு எதிரான வகையில் சட்டமியற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கம்.

மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போது கட்டம் கட்டமாக திருத்தம் செய்யப்படுகின்றன. மக்களுக்கு இணக்கமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.இதன் ஒரு அங்கமாகவே நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வறுமை நிலையில் உள்ள நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டே இந்த நுண்கடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். நுண்கடன் திட்டம் குறித்து கடந்தகால அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

நுண்கடன் திட்டங்களை முறையாக கண்காணிக்கும் வகையில் தான் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் இருந்து எதிர்க்கட்சியினர் விடுபட வேண்டும். மக்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட போவதில்லை என்றார்.

நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

1 week 5 days ago

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

Mar 4, 2026 - 03:21 PM

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

யாழ்ப்பாணம், வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் எமது மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும், கடற்கரையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தோம் ஆனால் ஆறு நாட்களாகியும் இதுவரை எமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை கச்சதீவுக்கு அருகாமையில் இந்திய எல்லைக்கு அருகில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாகவும் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கியதாக இந்தியா மீனவர்கள் எமது மீனவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள் என தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது

1 week 5 days ago

2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது

Mar 5, 2026 - 08:38 AM

2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.

சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து சுகாதார அமைச்சுக்குக் கட்டடமொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதன் பின்னர், அதற்கான வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் செலுத்துவதில் எவ்வித தாமதமும் இன்றிச் செயற்படுவதற்காகவே சந்தேகநபர் இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான உதவியை வழங்குவதற்கும், அவரது குடும்ப உறவினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உதவியை வழங்குவதற்கும் குறித்த வர்த்தகர் இவ்வாறு இலஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபரும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சம்: இருவர் கைது

மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

1 week 6 days ago

மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

04 Mar, 2026 | 04:05 PM

image

(செ. கவிஷனா)

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கை சுற்றுலாத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு வாரத்துக்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 30 சதவீதமானோர் மத்திய கிழக்கு வான் பரப்புகள் வழியாகவே வருகை தருகின்றனர். தற்போது காணப்படும் பதற்ற நிலைமை காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், வாரத்துக்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும்.

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு வழியாகவே பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் துபாய், கட்டார் மற்றும் அபுதாபி விமான சேவைகள் தடைப்பட்டிருப்பது இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் ஐரோப்பிய பயணிகளின் வருகையில் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அத்துடன் சீனா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வருகை தருகின்றனர்.

மேலும், ஐரோப்பாவுக்கு நேரடி விமான சேவைகளை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளதுடன் எதிஹாட், கட்டார் ஏர்வேஸ் போன்ற பிரதான விமான சேவைகள் இன்னும் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கவில்லை.

தொடர்ந்தும், மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சகம் உள்ளிட்ட தரப்புகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 89,000 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 236,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு - சுற்றுலாப் பிரதி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

1 week 6 days ago

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

04 Mar, 2026 | 05:16 PM

image

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு வடக்குமாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது எமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எரிபொருள் பெறுவதற்கு 3 அல்லது 4 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற எரிபொருள் அவசியமாகவுள்ளது. எனவே எரிபொருள் விநியோகத்தைச் சீரமைத்து தேவைக்கேற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க QR குறியீட்டு நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கோருகின்றோம் இக் கோரிக்கையைக் கருணையுடன் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றுள்ளது.

எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது!

1 week 6 days ago

யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது !

04 Mar, 2026 | 04:59 PM

image

யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது!

இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

1 week 6 days ago

இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

04 Mar, 2026 | 04:33 PM

image

இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாகாண கூட்டுறவு ஆணையாளர் செல்வி அகல்யா ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .

குறித்த அரைக்கும் ஆலை யில்  அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகளுடன்  கூடிய வகையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-03-04_at_7.10.42_AM.

WhatsApp_Image_2026-03-04_at_7.02.27_AM.

WhatsApp_Image_2026-03-04_at_7.09.32_AM.

WhatsApp_Image_2026-03-03_at_11.22.20_PM

WhatsApp_Image_2026-03-04_at_7.09.12_AM.

இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது

1 week 6 days ago

இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது

Mar 4, 2026 - 04:24 PM

இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது

எம்மைப் போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் இவ்வாறானதொரு போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (04) முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு நாடாகத் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், அதாவது ஒரு கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு, இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

"போரினால் உயிர்களை இழந்த அனைவருக்காகவும் நாங்கள் வருந்துகிறோம். அரச தலைவர்கள், இராஜதந்திரிகள், சாதாரண மக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என எந்தத் தரப்பிலாவது பாதிக்கப்பட்டவர்களாக மாறி அவர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும் நாங்கள் கவலையைத் தெரிவிக்கிறோம். இந்த போர் மோதல்கள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்."

"இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறான போர் மோதல்களை நிறுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அந்த சர்வதேச நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ளோம். அந்த நிறுவனங்களுக்கும் தங்களது அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கான பொறுப்பு உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் இந்த அனைத்து விடயங்களுடனும், இது ஒரு புவியியல் எல்லைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது. அது எப்போது, எங்கு விரிவடையும் என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு நாடாக நாங்கள் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு இந்த மோதல்களை நிறுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்."

பெருமளவான இலங்கையர்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை யார் ஆரம்பித்திருந்தாலும், இது இப்போது எந்தளவுக்கு விரிவடைந்திருந்தாலும், இது விரைவில் முடிவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவைக் கண்டு பயமா? ஈரான் தூதுவரும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரியிருந்தார்....? மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகள் மாறிவிட்டனவா?

அமைச்சரின் பதில்: "போர் ஒருபோதும் உலகிற்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. அரசியல் தேவைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டவர்களாக மாறினர். போரில் ஒரு பக்கத்தை ஆதரிக்க எவரும் முயற்சிக்கவில்லை. அது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாடு உங்களுடைய நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம், அதாவது எங்களைப் போன்ற ஒரு நாடு இந்தப் போரில் இடைத்தரகர்களாகவோ அல்லது போரின் இரையாகவோ மாறக்கூடாது. எனவே, இந்தப் போர் மோதல்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரப்பில் சொல்லாலும் செயலாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம்."

இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

1 week 6 days ago

tourists.jpg?resize=750%2C375&ssl=1

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் (LGBTQ+) சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவு இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ‘தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இத்தகைய சுற்றுலாத் திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை எனத் தற்போது கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதால், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பரிசீலித்து வருகிறது.

https://athavannews.com/2026/1467161

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்

1 week 6 days ago

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 12:59 PM

image

இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்காக 200 முழுமையான நிதியுதவியுடனான (Fully-funded) புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் சட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடத்துறைகளிலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டங்கள்

அனைத்து மட்டங்களிலுமான கற்கைகளுக்காக பின்வரும் நான்கு பிரதான திட்டங்களின் கீழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம் (Nehru Memorial Scholarship): பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், கலை மற்றும் மானுடவியல் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) பட்டப்படிப்புகளுக்கு இது பொருந்தும்.

மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டம் (Maulana Azad Scholarship): பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலைப் பட்டப்படிப்புகள் (Masters).

ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் (Rajiv Gandhi Scholarship): தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இளங்கலை பொறியியல் (B.E) மற்றும் தொழில்நுட்ப (B.Tech) பட்டப்படிப்புகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காமன்வெல்த் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம் உட்பட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்குப் பொருந்தும்.

மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்:

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதுடன் பின்வரும் மேலதிக வசதிகளும் வழங்கப்படும்:

மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு

புத்தகங்கள் மற்றும் எழுதுகருவிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு.

இந்தியாவுக்கான விமானப் பயணச் சீட்டு.

கல்விச் சுற்றுலாக்களுக்கான விசேட நிதி உதவி.

பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே தங்குமிட வசதி (Hostel facility).

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரிகள் இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மெரிட் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தகுதி அளவுகோல்களை www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை (eduwing.colombo@mea.gov.in) அல்லது இலங்கை கல்வி அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/240123

நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்

1 week 6 days ago

நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்

04 Mar, 2026 | 10:00 AM

image

மாலைதீவு கடற்படை கப்பலான 'HURAVEE' 02 ஆம் திகதி நாட்டுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.

அதன்படி, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Offshore patrol vessel வகை 'HURAVEE' என்ற  கப்பலானது 48.9 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் அஹமட் நபியு மொஹமட் செயல்படுகின்றார்.

மேலும், இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-03-04_at_09.38.42.jp

WhatsApp_Image_2026-03-04_at_09.38.43.jp

WhatsApp_Image_2026-03-04_at_09.38.43__1

நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்

2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

1 week 6 days ago

2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 04:29 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2019 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை மீண்டும் செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் கீழ் இயங்கி வரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் பல தசாப்தங்களாக பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக இயங்கி வந்தன.

இந்நிறுவனங்கள், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு சமய ஒழுங்குகளை பாதுகாத்தல்,கலாசார விழுமியங்களை நிலைநிறுத்தல், இளைஞர் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி விளையாட்டு மற்றும் சமூக சேவைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான சமரச மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வந்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும். சமூக நல்லிணக்கத்தினை பேணவும் இந்நிறுவனங்கள் முன்னனியில் செயல்பட்டன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு,அப்போது இருந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய. பதிவு செய்யப்பட்டிருந்த இந்நிறுவனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து செய்யப்பட்டன. இவ்வாறு. எந்தவிதத் தனிப்பட்ட விசாரணை அறிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டிருப்பது, குறித்த நிறுவனங்களை பல்வேறு நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கியதுடன் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.

இந்த தீர்மானத்தின் காரணமாக, பல சமூக சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கல்வி மற்றும் கலாசார திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இளைஞர் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் தடைப்பட்டன, சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் குறைந்துள்ளன. இவ்வாறான பல காரணங்களால் இந்த நாடும் நாட்டின் குடிமக்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை பெற்றுக் கொள்வதிலும் நிலையான அபிவிருத்திகளை அடைவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

ஒரு சில நிறுவனங்கள் தொடர்பாக சந்தேகங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை தனித்தனியாக விசாரித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளையும் ஒரே நேரத்தில் ரத்துச் செய்திருப்பதை ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக கருதுவதுடன் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகவும் துரோகமுமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நிலைமையில், நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு முன்பு சிறப்பாக இயங்கி வந்த இந்நிறுவனங்களின் பதிவுகளை உடனடியாக மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும். அவர்கள் தங்களது பணிகளை சட்டபூர்வமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றும் வகையில் வழிகாட்ட தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

1 week 6 days ago

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் 

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 04:12 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு 071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118 என்ற துரித இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை நேரடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் தற்போது 608 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண சேவையில் 71,424 உத்தியோகத்தர்கள், 7,256 விசேட அதிரடிப்படையினர், ஆதரவு சேவையில் 1,032 உத்தியோகத்தர்கள், உப சேவை அடிப்படையில் 70 உத்தியோகத்தர்கள், என்ற அடிப்படையில் மொத்தமாக 79,782 பேர் சேவை புரிகிறார்கள்.

பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறை விதிகள் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பதவி உயர்வுகள் செய்யப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 துப்பாக்கிதாரிகள், 14 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்,கூர்மையான ஆயுதத் தாக்குதல்கள் அல்லது ஏனைய தாக்குதல்களில் தொடர்புடைய 50 பேர், குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்த 142 பேர்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 57 பேர், துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த 22 பேர், ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்ட 08 பேர் என்ற அடிப்படையில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள் இனங்காணப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபட வழிவகுக்கும் சூழ்நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை அடையாளம் காண்பதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளத. அதன்பிரகாரம் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும்,அத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உகந்த மட்டத்துக்கு அதிகரிப்பதற்கும்,நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்புடனும் , நேர்மையுடனும் விசாரணைகளை மேற்கொள்வாற்கும் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பும் வழங்கப்படும்.

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118 என்ற துரித இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை நேரடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார்.

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் 

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

1 week 6 days ago

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Mar 4, 2026 - 11:40 AM

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார்.

குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

1 week 6 days ago

New-Project-4-1.jpg?resize=750%2C375&ssl

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும், துபாயிலிருந்து கொழும்புக்கு UL232 விமானங்களும் இன்று இயக்கப்படும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமலில் இருக்கும்.

சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு அதன் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று விமான நிறுவனம் வலியுறுத்தியது. 

https://athavannews.com/2026/1467109

Checked
Tue, 03/17/2026 - 19:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr