ஊர்ப்புதினம்

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

2 weeks 2 days ago

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

Mar 1, 2026 - 07:10 PM

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருந்தபோதிலும், சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் கலன்கள் அல்லது வேறு கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதால், அத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்காகத் தவிர, வேறு எந்தத் தேவைகளுக்கும் கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேகரித்து, களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும், எரிபொருள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல்வேறு போலிப் பிரசாரங்களை வெளியிடும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் செயற்படுவார்கள் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்

2 weeks 2 days ago

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்

Mar 1, 2026 - 07:01 AM

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான 07/2026 ஆம் இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கை, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துதல், இதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட சமூக உரையாடலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அரசாங்க அமைச்சுகள் உட்பட அனைத்து இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வகையான புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையப்படுத்தி பல்வேறு பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஊடாகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இந்தத் தேசிய செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு அவசியமான பரந்த சமூக விழிப்புணர்வை இந்த அனைத்துத் திட்டங்கள் மூலமும் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmm72onn70002356p0gq80mxy

சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு நீதியரசர் குமாரரத்தினம் வலியுறுத்து

2 weeks 2 days ago

சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு நீதியரசர் குமாரரத்தினம் வலியுறுத்து

01 Mar, 2026 | 09:18 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

சட்டமும் மொழியும் ஒரு தேசத்தின் இரு கண்களைப் போன்றவை சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வித்தக விழா மற்றும் 57 ஆவது நீதி முரசு சஞ்சிகை வெளியீட்டு விழா சட்டக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்றது.

தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு ‘மன்று 75’ எனும் துணிப்பொருளில் இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்1950 ஆம் ஆண்டு மறைந்த பெருந்தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறு விதையாக விதைக்கப்பட்ட இந்தத் தமிழ் மன்றம் இன்று விழுதுகள் பரப்பிய ஆலமரமாக 75 ஆண்டுகளைக் கடந்து நிற்பது பெருமைக்குரியது.

சட்டம் என்பது வெறும் கருப்பு அங்கியும் தடிமனான புத்தகங்களும் மட்டுமல்ல அது ஒரு சமூகத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் அரண். அந்த அரணுக்கு உயிர் கொடுப்பது நமது தமிழ் மொழி. தமிழ் இலக்கியங்கள் காலங்காலமாக நீதியை வலியுறுத்தி வந்துள்ளன.

குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரம் நீதியின் மேன்மையை உரக்கச் சொல்லியுள்ளது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய சட்ட மாணவர்கள் திகழ வேண்டும்.

ஒரு மாணவன் கலைகள் வழியாகத் தனது இதயத்தை மென்மையாக்கிக் கொள்ளும் போதே நாளை சமுதாயத்திற்கு உண்மையான நீதியை வழங்க முடியும். சட்டத்தின் சிக்கலான விடயங்களை எளிய தமிழில் பாமர மக்களுக்குப் புரிய வைக்கும் கடமை உங்களுக்கு உண்டு.

உங்கள் வாதத் திறமையை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகப் பயன்படுத்துங்கள். அறிவும் ஆற்றலும் ஒருபுறம் இருக்க அறமும் ஈரமும் மறுபுறம் இணைய வேண்டும். அத்தகைய முழுமையான சட்டத்தரணிகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனகஈஸ்வரன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினரான சட்டக் கல்லூரி முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்வி ஸின்

வாழ்த்துச் செய்தியும் பகிரப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் சிறப்புரையினை நிகழ்த்தினார்.

57 ஆவது நீதி முரசு சஞ்சிகையினை வெளியிட்டு வைத்து அதன் நூல் மதிப்புரையினை மேலதிக அரசாங்க சட்டவாதியும் தமிழ் மன்றத்தின் பொருளாளருமான செல்வராகவன் வழங்கினார்.

விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியதுடன் பவள விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதப் போட்டி சட்ட ஆய்வு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/239854

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து

2 weeks 2 days ago

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து

written by admin March 1, 2026

Gtn1-4.png?fit=900%2C1200&ssl=1

வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள்:

விமான இலக்கம்

புறப்படும் இடம் – சேருமிடம்

UL 231

கொழும்பு – துபாய்

UL 232

துபாய் – கொழும்பு

UL 225

கொழும்பு – துபாய்

UL 226

துபாய் – கொழும்பு

UL 217

கொழும்பு – தோஹா

UL 218

தோஹா – கொழும்பு

UL 253

கொழும்பு – தம்மாம்

UL 254

தம்மாம் – கொழும்பு

UL 265

கொழும்பு – ரியாத்

UL 266

ரியாத் – கொழும்பு

UL 229

கொழும்பு – குவைத்

UL 230

குவைத் – கொழும்பு

பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மேலதிக விபரங்களுக்குத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது அழைப்பு மையத்தைத் (Call Center) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வான்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் உள்ளதாலேயே, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான மாற்றுப் பயணத் திகதிகள் அல்லது பணம் மீளப் பெறுவது (Refund) குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#FlightAlert #SriLanka #SriLankanAirlines #MiddleEastWar #TravelUpdate #ColomboAirport


https://globaltamilnews.net/2026/229935/

கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம்

2 weeks 2 days ago

கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம்

Published By: Digital Desk 1

01 Mar, 2026 | 08:31 AM

image

(கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்)

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சத்தீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

புனித கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவின் ஒரு அடையாளமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய மக்களின் புனித தலமாகவும் கச்சத்தீவு காணப்படுகிறது.

இந்தியாவில் ஏதேனும் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் அங்கு கச்சத்தீவு ஒரு பிரதான பேசுபொருளாக காணப்படும். இந்திய அரசியல்வாதிகளில் ஒருசிலர் தமது வாக்கு வங்கிக்காக கச்சத்தீவு பற்றி பேசுவார்கள். அதனூடாகவேனும் தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கச்சத்தீவின் அடையாளத்தை இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/239849

நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!

2 weeks 2 days ago

நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!

Published By: Digital Desk 1

01 Mar, 2026 | 07:39 AM

image

(நமது நிருபர்)

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய லங்கா நிலக்கரி நிறுவனம் விலைமனுக் கோரியுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனம் இவ்வாறு அவசர நிலக்கரி கொள்வனவுக்கான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்கு 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!

2 weeks 2 days ago

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!

Published By: Digital Desk 1

01 Mar, 2026 | 07:48 AM

image

(நா.தனுஜா)

டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு மில்லியன் யூரோ (சுமார் 370 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த மேலதிக நிதியுதவி மூலம் மீளுறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிதியுதவியானது மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்புக்கள் ஊடாக மக்களைச் சென்றடையும் எனவும், இந்நிதி அடிப்படை சேவை வழங்கல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தமது சக முகவரமைப்புக்கள் ஊடாக 2.35 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!

மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

2 weeks 2 days ago

மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

Published By: Vishnu

28 Feb, 2026 | 07:48 PM

image

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.இலங்கை விளையாட்டு

நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு திரளுகின்ற நிலை காணப்படுகின்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

அவரது விளக்கத்தின் படி, 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 35 நாட்களுக்கு தேவையான டீசல், 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். மேலதிக கப்பல்கள் வராதிருந்தாலும் கூட, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையூறு இல்லாமல் விநியோகிக்க முடியும்,” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் விளக்கமளித்தார்.

மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியில் மட்டுமே சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாயினும், அதற்கான கையிருப்பும் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தால் அதிகளவில் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

எரிபொருள் விலை உயர்வு: ஒட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் அதிகரிப்பு

2 weeks 3 days ago

எரிபொருள் விலை உயர்வு: ஒட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் அதிகரிப்பு

Published By: Vishnu

28 Feb, 2026 | 10:17 PM

image

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி சனிக்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 4 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் ரூ. 6 உயர்ந்து ரூ. 329 ஆக விற்பனை செய்யப்படும்.

மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 1 அதிகரித்து ரூ. 293 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், 95 ஒக்டேன் பெற்றோல் (ரூ. 340) மற்றும் மண்ணெண்ணெய் (ரூ. 182) விலைகளில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/239835

எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள்

2 weeks 3 days ago

எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள் 

28 Feb, 2026 | 04:48 PM

image

காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழில் சனிக்கிழமை (28), பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சவால்களை நீக்காமல் இந்த சட்டத்திற்குள்ளே எங்களை அடிமையாக வைத்துக்கொண்டு இன்னொரு சட்டமான ஆறாம் திருத்த சட்டத்தின் ஊடாக கருத்து சுதந்திரத்தை அடக்கி வைத்துக் கொண்டு பேச வாருங்கள் என்றால், சட்டங்களாலே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூகம் எவ்வாறு சுதந்திரமாக பேச முடியும்?

ஆகவே இதற்காக தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய சர்வதேச நாடுகளாக இருக்கலாம் இவை அனைத்தும் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதன் ஊடாக தான் இந்த சட்டங்களை நீக்கவும், எமக்கு உதவி செய்யவும் முடியும்.

ஆகவே பேதங்கள் கடந்து எமது மக்கள் தமிழர்களாக ஒன்றிணைந்தது மகிழ்ச்சிக்குரியது. ஆகவே எமது இலக்கு அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என்றார்.

https://www.virakesari.lk/article/239812

தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல்

2 weeks 3 days ago

தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல்

28 Feb, 2026 | 04:32 PM

image

யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில்  வெள்ளிக்கிழமை (27), பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் மற்றும் இனத்துவ அரசு என்பவை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி. ம.திருவரங்கன், மூத்த சட்டத்தரணி கலாநிதி. கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த சா.சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், பொ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20260227-WA0109.jpg

IMG-20260227-WA0094.jpg

IMG-20260227-WA0085__1_.jpg

IMG-20260227-WA0078.jpg

தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல்

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

2 weeks 3 days ago

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

28 Feb, 2026 | 04:55 PM

image

பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அந்த சட்டமானது மிகவும் மோசமானது என தெரிவித்து, புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வேண்டும், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், மத குருக்கள், சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20260228-WA0012.jpg

IMG-20260228-WA0005__1_.jpg

IMG-20260228-WA0011__1_.jpg

IMG-20260228-WA0009.jpg

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!

2 weeks 3 days ago

பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!

Published By: Digital Desk 1

28 Feb, 2026 | 10:33 AM

image

பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட 02 வேன்களை பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு கையளிக்கும் நிகழ்வு, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவு 2010.12.02ஆம் திகதியன்று நிறுவப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் அதன் கடமைகளுக்காக கெமராக்கள் பொருத்தப்பட்ட 02 வேன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்களின் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக, 'பிரிமா' நிறுவனத்தின் பங்களிப்புடன் ஒரு வேன்  நவீன தொழில்நுட்ப கெமராக்களுடன் மேம்படுத்தப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வேன்களுக்காக சுமார் 9,794,000 ரூபாய்  செலவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை அவதானித்து வழக்கு தொடர்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கடமைகள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வில் பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார கம்லத், பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் பெரேரா, குறித்த பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.என்.எல்.பீ. ஏநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

WhatsApp_Image_2026-02-28_at_07.15.27.jp

WhatsApp_Image_2026-02-28_at_07.15.29__1

WhatsApp_Image_2026-02-28_at_07.15.29.jp

WhatsApp_Image_2026-02-28_at_07.15.28.jp

பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

2 weeks 3 days ago

New-Project-2-24.jpg?resize=750%2C375&ss

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரதிபலிக்கிறது.

அதன்படி, ஜனவரி செயல்திறன் சீரற்ற உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதுடன், பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது என்று கூட்டு ஆடை சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி 2.73 சதவீதம் குறைந்து 165.11 மில்லியன் டொலர்களாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி (இங்கிலாந்து தவிர்த்து) 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் டொலர்களாக உள்ளது.

இங்கிலாந்துக்கான ஏற்றுமதி நிலையாக இருந்தது, 0.23 சதவீதம் அதிகரித்து 61.71 மில்லியன் டொலர்களாக இருந்தது.

அதே நேரத்தில் ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதம் குறைந்து 71.63 மில்லியன் டொலர்களாக இருந்தது என்று JAAF தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத முடிவுகள் சீரற்ற உலகளாவிய தேவையைக் குறிக்கின்றன என்றும், நாட்டின் ஆடைத்துறையின் பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் JAAF கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஓரளவு வளர்ச்சி, 2026 ஜனவரி 1, முதல் அமுலுக்கு வந்த திருத்தப்பட்ட வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ் வர்த்தக சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகிறது.

இந்த மாற்றங்கள் மூலத் தேவைகளுக்கான விதிகளைத் தளர்த்தியுள்ளன, இப்போது இலங்கை உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகளவில் மூலப்பொருட்களை வாங்கும்போது கூட, வரியின்றி ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.

மேலதிகமாக, சீரான 10% தற்காலிக அமெரிக்க வரியை அறிமுகப்படுத்துவது, முன்னர் இருந்த அதிக நாடு சார்ந்த விகிதங்களை மாற்றியுள்ளது மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக குறுகிய கால விலை நிர்ணய உறுதிப்பாட்டை வழங்குகிறது என்றும் JAAF தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1466585

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

2 weeks 4 days ago

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம்

Published By: Vishnu

27 Feb, 2026 | 09:18 PM

image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_5473.jpeg

IMG_5475.jpeg

IMG_5474.jpeg

IMG_5472.jpeg

https://www.virakesari.lk/article/239755

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!

2 weeks 4 days ago

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!

Published By: Digital Desk 1

27 Feb, 2026 | 04:13 PM

image

நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

இதனூடாக, திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள், ஊழல் மோசடிகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் குறித்துத் தெரிவிக்கலாம்.

இதன்மூலம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அத்தியட்சகர்கள் ஊடாக உரிய பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், இங்கு வழங்கப்பட்ட தீர்வுகளில் திருப்தி இல்லையெனில், மீண்டும் இணையவழியில் பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், முறைப்பாடுகளை https://telligp.police.lk இணையத்தளத்தினுடாகவும் telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும், தெரிவிக்கமுடியும்.

ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/239728

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 weeks 4 days ago

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Vishnu

27 Feb, 2026 | 04:59 AM

image

(செ. சுபதர்ஷனி)

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

"இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான 'க்ளோபோகேன்' ஆய்வறிக்கையின்படி, 1.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 இலட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிக நோயாளர் மற்றும் மரண வீதத்தைக் கொண்ட நோய் பட்டியலில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த தரவுகளுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண், பெண் என இருபாலாரும் இப்புற்றுநோய்க்கு ஆளாகின்ற போதிலும், அந்தவகையில் அவ்வாண்டு 1564 ஆண்களும், 1519 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வாய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் முதலாவதாகவும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகவும் உள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்த போதிலும், தற்போது 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.

சமிபாட்டை இலகுவாக்கும் மற்றும் அனைத்து போசாக்குகளும் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் சிறு கட்டிகள் (பொலிப்ஸ்) நாளடைவில் புற்றுநோய் கலங்களாக மாற வாய்ப்புள்ளது. உரிய பரிசோதனையின் மூலமே இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். உடல் இயக்கமின்றி இருத்தல், உடற்பருமன், உடனடி உணவுகள் மீதான நாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன. அத்துடன், மரபணு மூலமும் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/239680

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

2 weeks 4 days ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

27 Feb, 2026 | 11:51 AM

image

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.   

IMG_5411.jpeg

IMG_5412__1_.jpeg

IMG_5413.jpeg

IMG_5414.jpeg

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

2 weeks 4 days ago

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

Feb 27, 2026 - 08:28 AM

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டில் இவ்வாறான சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போதுள்ள அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

அதேபோன்று, சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபருடன் மொத்தம் 14 பேரை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளது.

சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இல்லாத நிலையில், அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு குற்றங்கள் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் அந்த நாடுகள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்களை எம்மால் அழைத்து வர முடிந்தது.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

2 weeks 4 days ago

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது.

ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 16,730 வருமானம் அவசியமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 18,044 தேவைப்படுகிறது.

பணவீக்கம்

மேலும் மொனராகலை மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 15,997 போதுமானதாகும்.

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை | Money Need Live In Sri Lanka Report

வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச செலவினைக் குறிக்கிறது.

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களுக்கு ஏற்ப இது மாதாந்தம் திருத்தியமைக்கப்படுகிறது.

தரவுகள் மதிப்பீடு

இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடானது 2012/13 ஆம் ஆண்டின் 'குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின்' (HI&ES) அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை | Money Need Live In Sri Lanka Report

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (NCPI) பயன்படுத்தி, மாவட்டங்களுக்கு இடையிலான விலை வேறுபாடுகளுக்கு ஏற்ப இந்தத் தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

Checked
Tue, 03/17/2026 - 22:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr