ஊர்ப்புதினம்

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்

2 weeks 5 days ago

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்

26 Feb, 2026 | 04:02 PM

image

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் திராணியற்ற தமிழ் மாணவர் அமைப்புகளே இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவியின் கூற்றுப்படி, நாமல் ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்க தமக்கு முடியாது என தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்கு முடியாது என்பது உறுதியாகியுள்ளதோடு, சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது கலாசாரத்தைக் காட்டிக் கொடுத்தமை வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, இது கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் ஆடிய ஒரு நாடகம் எனச் சாடினார்.

விவசாயிகளின் சாபம் மற்றும் நிலக்கரி மோசடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சலேயைக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

2018இல் சலே சஹ்ரானைச் சந்தித்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், அந்த காலப்பகுதியில் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் பணியாற்றி வந்தமையால் அவர் இலங்கையிலேயே இருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவும் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டு பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சிறந்த புலனாய்வு அதிகாரியான சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் போன்றவர்களை வெளியே நடமாடவிடுவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காகவே செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், டயஸ்போராவுக்கு நோகும் என்பதால் ஜனாதிபதி இன்று 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்றும், சுதந்திர தினத்தில் இராணுவத் தளபாடங்களைக் காட்சிப்படுத்தாததற்கும் இதுவே காரணம் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்ச்சியாளர்களின் சொற்களைக் கேட்காமல் மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்று ஈழக் கனவைத் தகர்த்த காரணத்தினாலேயே ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சர்வதேசமும் டயஸ்போராவும் இன்றும் வைரம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமது கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239646

மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை

2 weeks 5 days ago

மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை

26 Feb, 2026 | 01:57 PM

image

மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாக பேண அமைச்சரவையின் அனுமதியைப்பெற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழு கூட்டம் 25 ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

இரணைஇலுப்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான்- முள்ளிக்குளம் வீதியை மக்கள் பாவனைக்கு மேம்படுத்த பிரதேச செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அபிவிருத்திக்குழுவின் பரிந்துரை கோரப்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மேலிடத்திடம் கோரிக்கை வைப்பதாக சபைக்கு அறிவித்தார். ஆனால் இவ்வீதியானது மாந்தை மேற்கு பிரதேச சபையால் வர்த்தமானியூடாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அறிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக (Extraordinary No. 1920/3 on June 22, 2015) 2015ம் ஆண்டு மடு சரனாலயமாக இருந்த காடுகள் எந்தவித கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மடு- தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேசிய பூங்காவினுள் மக்களின் வாழ்விடங்கள், வீதிகள், வணக்க நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடங்கியதாக உள்ளது.

28/06/1968 ம் ஆண்டு ஐம்பதிற்கும் குறைந்த சதுர கிலோமீற்றரிற்கும் குறைவான நிலப்பரப்புடன் பிரகடனப்படுத்தப்பட்ட சரனாலயம் எந்த கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய தேசிய பூங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

சரனாலயமாக உள்ளபோது அப்பிரதேசமூடாக மக்கள் பயன்படக்கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் அந்த சரனாலயத்தினூடாக பயணித்த பாதைகள், வயல்கள் என எந்த பயன்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலைவரும் என எச்சரித்தார்.

எனவே 2015 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானியை இரத்துச்செய்யுமாறும் தொடர்ந்தும் சரணாலயமாகவே இப்பிரதேசத்தை பேனுமாறும் முன்மொழிவை பிரேரித்து இப்பிரேரனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அபிவிருத்தி குழுவின் தலைவரை கேட்டுக்கொண்டார்.

இப்பிரேரனையை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் வழிமொழிந்து சபையானது ஏற்றுக்கொண்டது.

https://www.virakesari.lk/article/239626

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

2 weeks 5 days ago

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

Published By: Digital Desk 3

26 Feb, 2026 | 05:26 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றிருந்தார்.

அத்துடன் கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239667

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

2 weeks 5 days ago

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

Feb 26, 2026 - 07:23 PM

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.

நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் நாளை (27) அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmm3iwrx3000f356p7xm9exso

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

2 weeks 5 days ago

MediaFile-21-2.jpeg?resize=750%2C375&ssl

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடிவிட்டு, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் விளையாட்டரங்க சிற்றுண்டிச்சாலையின் முன் பக்க கண்ணாடியைத் தடியால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த இனிப்பு வகைகளை பொலித்தீன் பைகளில் நிரப்பிக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று அவற்றை மறைத்து வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இவ்வாறான திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2026/1466375

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

2 weeks 5 days ago

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்நாட்டில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டால், சிலர் சட்டத்திற்குப் பயப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு மறைந்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது. எனவே, குற்றங்கள் செய்வதற்குப் பயமின்மை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோரையும், கைது செய்யப்படுவதற்குப் பல்வேறு வியாக்கியானங்களை அளிப்போரையும் பார்க்கும் போது புரிகிறது, அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்று. எனவே இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது.

அவ்வாறின்றி இந்த விசாரணைகளைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் பார்க்கிறோம். எனவே, நாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். இந்த விசாரணைகள் தொடர வேண்டும். இவ்விசாரணைகள் மூலம் ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.

இதன் மூலம், பலர் பேசுகின்ற அரசியல் சதியொன்று இருந்ததா இல்லையா என்பதையும், அவ்வாறு இருந்திருந்தால் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை நாம் கட்டாயம் கண்டறிய வேண்டும். அதற்கு எவரேனும் இடையூறு விளைவிப்பார்களாயின், அதனைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு மாபெரும் குற்றமாகவே நாம் கருதுகிறோம். எனவே, தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து, பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."

No image previewஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் 7 வாரங்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு

2 weeks 5 days ago

இலங்கையில் 7 வாரங்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு

Published By: Vishnu

25 Feb, 2026 | 10:36 PM

image

யானை மனித மோதலில் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகளும், 10 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளன. நாட்டின் மனித சமூகத்திற்கும் குறைந்து வரும் யானை கூட்டங்களுக்கும் இடையிலான நீடித்த மோதல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பயிர் நிலங்களை பாதுகாக்க சட்டவிரோத மின்சார வேலிகளை அமைத்தல், விஷம் கொண்ட உணவுகளை உட்கொண்டதனால் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் பலியாவதாக பதிவாகியுள்ளது.

மேலும், ரயில்களுடன் மோதல் மற்றும் நீரில் மூழ்குவது போன்ற விபத்து சம்பவங்களும் சில உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளன.

இதே காலப்பகுதியில் மனித யானை மோதல் பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 51 நாட்களுக்குள் யானை தாக்குதல்களால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனித யானை மோதலை கட்டுப்படுத்துவதற்கான அவசரமான மற்றும் நீடித்த தீர்வுகள் தேவைப்படுகின்றன என்பது வலியுறுத்தப்படுகிறது.

https://www.virakesari.lk/article/239588

சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!

2 weeks 5 days ago

சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!

சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் அறுக்கப்பட்டது.

சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு

குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில்  சந்தேகநபரான, மயிலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/jaffna-woman-s-chain-stolen-army-arrested-1772029201

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

2 weeks 5 days ago

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

தொல்புரம் - பானாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும், பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று(24.2.2026)வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டது.

பானாவெட்டி வைத்தியசாலையானது தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வைத்தியசாலையாகும்.

வளப்பற்றாக்குறை

இது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இதனை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை! | Do Not Transfer Doctor Tholpuram Hospital Jaffna

இந்தநிலையில் வைத்தியர் குருபரன் இந்த வைத்தியசாலையை பொறுப்பேற்ற பின்னர் இங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையும் கிடைக்கின்றது.இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் நன்மையடைகின்றனர்.

கோரிக்கை 

இதனால் இந்தப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக மருத்துவர் வே.குருபரனை குறைந்தது அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளாவது இங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை! | Do Not Transfer Doctor Tholpuram Hospital Jaffna

இந்த கோரிக்கை கடிதம் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/do-not-transfer-doctor-tholpuram-hospital-jaffna-1772028405

ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு

2 weeks 6 days ago

ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு

25 Feb, 2026 | 06:35 PM

image

(நா.தனுஜா)Geographic Reference

தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

ஆகவே இம்முறை நடைபெற்றுவரும் 61 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்பதுடன் விவாதங்களும் இடம்பெறாது.

இருப்பினும் இப்பேரவை அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்கும் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஏனைய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பான விவாதங்களின்போது இலங்கை சார்பில் கருத்துரைப்பர்.

அதேவேளை இக்கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் துநரநௌளந நுவரனயைவெந வுயஅழரடந எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/239580

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

2 weeks 6 days ago

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

Feb 25, 2026 - 07:16 PM

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) உத்தரவிட்டார்.

முன்னைய நீதவான் இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய சி.ஐ.டி-க்கு போதுமான அவகாசம் வழங்கியிருந்தும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார்.

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்ததில் உயிரிழந்த இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரான இஃப்லால் அஹமட், குறித்த சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி அவற்றை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாகக் கோரியிருந்தார்.

தற்போது அந்தப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அவற்றை விடுவிக்க மேலதிக அவகாசம் கோரியதுடன், இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் என நீதவான் வலியுறுத்தினார்.

நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தத் தவறுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் ஒரு வாரத்திற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ஏ.எச்.எம். ரிஃபாஸ் மற்றும் மொஹமட் நிலாம் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmm2351h6000o356pt6q7cyo5

மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர்

2 weeks 6 days ago

மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர்

25 Feb, 2026 | 05:30 PM

image

மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று புதன்கிழமை (25) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

IMG-20260225-WA0019.jpg

IMG-20260225-WA0017.jpg

கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரை ஆற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். 

கல்மடுக் குளத்திலிருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது

மேலும், கடந்த 'டித்வா' பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கிளிநொச்சியில் உள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

IMG-20260225-WA0035.jpg

இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதால், அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

IMG-20260225-WA0016.jpg

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான பல்வேறு விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடான வீட்டுத் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களின் முன்னுரிமைப் பட்டியல், இடர் முகாமைத்துவத் திட்டம் மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகள் கோரப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா, பொ.கஜேந்திரகுமார் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

அதேவேளை, வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணி வழங்கல் மற்றும் பொருளாதார மத்திய நிலையக் கடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்குக் குழுவினால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்திடமிருந்து 10,821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. 

இது தொடர்பில் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியையும் விடுவிக்கவேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது. 

IMG-20260225-WA0032.jpg

வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விபரங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20260225-WA0028.jpg

IMG-20260225-WA0024.jpg

https://www.virakesari.lk/article/239579

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

2 weeks 6 days ago

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

25 Feb, 2026 | 04:10 PM

image

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின்  (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.

அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

31074446-f62d-4638-89f6-d0b0bebaefec.jpg

1966ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது.

தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக  இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு  (Academic Conference) நவம்பர் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. உலக அமைதிக்காக அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நவம்பர் 30ஆம் திகதி மாலை நடைபெறும். டிசம்பர் 1ஆம் திகதி ருவன்வெளி சேய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

10d5a128-a418-4d0d-8e6c-28a0b6af6f67.jpg

“வஸ்” காலம் முடிந்த பிறகு நடைபெறும் இந்த விழா, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி குறித்து உலகிற்கு சிறந்த செய்தியை வழங்கும் என்றும், நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நிறைவு நிகழ்வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்பாடு செய்வதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நியமிக்கப்படும் விசேட குழுவினால் அரசாங்கத் தரப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழு நிறைவேற்றவேண்டிய பணிகளை உடனடியாக அடையாளம் கண்டு, எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் இலங்கையின் விருந்தோம்பல் குறித்து மிகவும் சிறந்த செய்தியை முழு உலகிற்கும் எடுத்துக்காட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்நாட்டிற்கு வருகை தரும்போதும், புறப்பட்டுச் செல்லும்போதும் விமான நிலையத்தில் சிறப்பு நுழைவாயில்களை (VIP facilities / Counter) நிறுவுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக முறையான இராஜதந்திர அழைப்புகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தவும், நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கவும் இந்த நிகழ்வு வழங்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் உப தலைவர், கலாநிதி வண, அக்குரெட்டியே நந்த நாயக்க தேரர், நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாக் குழுவின் தலைவர் கலாநிதி வண, போதாகம சந்திம நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

dbdc3343-9f7e-4d6e-a6fe-69aa853373f2.jpg

https://www.virakesari.lk/article/239559

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை

2 weeks 6 days ago

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை

Published By: Priyatharshan

25 Feb, 2026 | 01:59 PM

image

( வீ. பிரியதர்சன் )

இந்திய கடற்படையின் “நட்புப் பாலங்கள்” (Bridges of Friendship) திட்டத்தின் தொடர்ச்சியாக, பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி (INS Tarangini ) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறது.

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பலான INS Tarangini, 2026 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் தரித்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகக் கட்டத்தில் மற்றும் கடல் பயணக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

Commander Nitin Gajjar தலைமையில் வரும் இந்த பாய்மரக் கப்பல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற International Fleet Review 2026 நிகழ்வில் பங்கேற்ற பின்னர் திரும்பும் பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன இயந்திர மற்றும் வாயு டர்பைன் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்றைய காலகட்டத்தில், பாய்மரப் பயிற்சிக் கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்தியாவின் கடற்படையும் ஒன்றாக விளங்குகிறது.

INS Tarangini கப்பல் பிரபல யாட்ச் வடிவமைப்பாளர் Colin Mudie இனால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் Goa Shipyard Limited நிறுவனத்தில் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது.

சுமார் 54 மீற்றர் நீளமுடைய இந்த பாய்மரக் கப்பல், சுமார் 500 மெட்ரிக் தொன் இடப்பெயர்ச்சித் திறனைக் கொண்டுள்ளது. 20 பாய்மரங்கள் மற்றும் 10,000 சதுர அடிக்கும் அதிகமான பாய்மரப் பரப்பையும், 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுள்ள கயிறு அமைப்புகளையும் கொண்டுள்ளது.

மூன்று மாஸ்டுகளை கொண்ட பார்‌க் வகை பாய்மரப் பயிற்சிக் கப்பலான INS Tarangini, Indian Navy இன் முதல் பயிற்சிப் படையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

இந்த விஜயத்தின் போது, திருகோணமலையில் மூன்று அதிகாரிகளும் 25 இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளும் கடல் பயணப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தாலும், பாய்மரக் கப்பலில் பயிற்சி பெறுவது கடல், காற்று மற்றும் கடற்பயண அடிப்படைத் திறன்களை கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பாகும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

04__3_.jpg

03__4_.jpg

01__6_.jpg

https://www.virakesari.lk/article/239545

சுன்னாகத்தில் கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு : சந்தேகநபர் கைது

2 weeks 6 days ago

சுன்னாகத்தில் கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு : சந்தேகநபர் கைது

25 Feb, 2026 | 12:16 PM

image

யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்றிரவு கத்தி முனையில் வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மீட்டர் வட்டி பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் ஏற்கனவே தற்கொலைகள், அச்சுறுத்தல் சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ் பொறுப்பதிகாரி மீட்டர் வட்டி வன்முறை சம்பவம் குறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/239532

உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!

2 weeks 6 days ago

உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. 

"உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளுள் அடங்குகின்றன. 

இந்தத் தீர்மானத்தில், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய நீதியான, முழுமையான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், போருடன் தொடர்புடைய அனைத்துப் போர்க் கைதிகளையும் முழுமையாகப் பரிமாற்றம் செய்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்தல் ஆகியன ஒரு முக்கியமான படியாக இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் உட்பட உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான வலுவான அர்ப்பணிப்பும் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmm1dw0z90019356p6o2v3azf

மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

2 weeks 6 days ago

மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

adminFebruary 25, 2026

637293864_824350560679273_33750511705810

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   எருவிட்டான் கிராமத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளமான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று செவ்வாய் (24)  மாலை   வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  குறித்த  வீதி புனரமைப்பு பணிகளுக்காக 57.82 மில்லியன் ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

615836921_898777303051082_73286359688164 639408449_1457791385953182_5924304409793641199553_1280580670691178_2041872698482642527465_935075418958913_57499810298455

https://globaltamilnews.net/2026/229713/

மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

2 weeks 6 days ago

மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

25 Feb, 2026 | 09:49 AM

image

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட லங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எல்லை நிர்ணய சபையினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று (24.02.2026) நான் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்களை சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றேன். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ அ. பிறேமாகரன், கௌரவ ம. கோபிநாத், கௌரவ கா. யோகராசா மற்றும் கௌரவ தே. ஜேனுகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இதில் சில முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தின் சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, “சமகிபுர” என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல் ,மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல் போன்ற திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/239514

85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம் ; வங்கி கணக்கு இல்லாததால் 16,800க்கும் அதிகமானோர் நன்மைகளைப் பெறுவதில்லை - நலன்புரி நன்மைகள் சபை தகவல்

2 weeks 6 days ago

85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம் ; வங்கி கணக்கு இல்லாததால் 16,800க்கும் அதிகமானோர் நன்மைகளைப் பெறுவதில்லை -  நலன்புரி நன்மைகள் சபை தகவல்

Published By: Digital Desk 3

25 Feb, 2026 | 11:19 AM

image

(எம்.மனோசித்ரா)

அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலகெதர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தெரிவு செய்யப்பட்டால், அவர் 12 மாத காலத்துக்கு தடையின்றி கொடுப்பனவுகளைப் பெறுவார். அதன் பின்னர், அந்தப் பயனாளி அடுத்த 12 மாத சுழற்சிக்கும் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க வருடாந்த மீளாய்வு செய்யப்படுவது கட்டாயமாகும். இந்த மீளாய்வுக்காகத் தகவல்களைப் புதுப்பிக்கும் பணி 2025 நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் சுமார் 85,000 பயனாளிகள் இதுவரை தங்களது தகவல்களைப் புதுப்பிக்கவில்லை.

அந்த வகையில் வருடாந்த மீளாய்வுக்காகத் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது நன்மைகளை இழக்கும் நிலையில் உள்ளனர். அஸ்வெசும பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை 2025 நவம்பர் 20 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை ஏழை பிரிவைச் சேர்ந்த 56,547 பயனாளிகளும், மிக ஏழை பிரிவைச் சேர்ந்த 28,608 பயனாளிகளும் இச்செயல்முறையைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர்.

இதற்கான புதிய காலக்கெடு கடந்த 20ஆம் திகதி வரை மீள புதுபிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தங்களது தகவல்களை இணையவழியூடாகவோ அல்லது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பதன் மூலமோ புதுப்பித்துக்கொள்ள முடியும். இது ஒரு பாரிய சிக்கலாகும். மக்கள் தங்கள் தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்காவிட்டால், அடுத்த கொடுப்பனவு சுழற்சியில் அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள். நாம் பிரதேச செயலகங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளோம், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக இதன் அவசரத்தை உணர்த்தியுள்ளோம், மேலும் இணையவழியூடாக தகவல்களைப் புதுப்பிப்பதை எளிதாக்க தனியார் தகவல் தொடர்பு மையங்களுக்கு சிறப்பு அனுமதியையும் வழங்கியுள்ளோம்.

இம்மையங்கள் மூலம் ஏற்கனவே கணிசமானளவு தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 இலட்சத்து 70 000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகள் இன்னும் புதுப்பித்தல் செயல்முறையைச் செய்யவில்லை. பயனாளிகள் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இந்த எண்ணிக்கையினரையும் எவ்வாறாவது உள்வாங்க நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் அவர்களைக் கைவிடப் போவதில்லை. பொதுமக்களுக்குச் செய்தியைச் கொண்டு சேர்க்க நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இன்னும் ஒரு தகவல் தொடர்பு இடைவெளிஇருப்பதை உணர முடிகிறது. இதற்கிடையில், தகுதி வாய்ந்த 16,800 விண்ணப்பதாரர்கள் வங்கி கணக்கு இல்லாத காரணத்தினால் நன்மைகளைப் பெறாமலுள்ளனர். இவர்களில் 8900 பேர் ஏழை பிரிவிலும், 4400 பேர் மிக ஏழை பிரிவிலும் அடங்குகின்றனர். வங்கி கணக்கு இல்லாதவர்களின் அதிகப்படியான எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த எண்ணிக்கை 4,655 ஆகும். நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் சுமார் 1000 பயனாளிகள் வங்கி கணக்குகளை ஆரம்பிகாமலுள்ளனர்.

பயனாளிகள் வங்கி கணக்கை ஆரம்பிக்காமைக்கான காரணம் அவர்களிடம் தேசிய அடையாள அட்டை இன்மையாகும். தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் வங்கி கணக்கைத் திறக்க முடியாது. ஒன்று அவர்களிடம் அடையாள அட்டை இல்லை, அல்லது அவர்களுக்கு நலன்புரி நன்மைகளைப் பெறுவதில் ஆர்வம் இல்லை. பயனாளிகளைத் தெரிவு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டதும், அவர்கள் நிதியைப் பெறுவதற்கு வங்கி கணக்கைத் திறக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் பயனாளிகளுக்கு ஒரு கடிதத்தை வழங்கும். அவர்கள் அந்த கடிதத்துடன் வங்கிக்குச் சென்று தெரிவு செய்யப்பட்ட அரச வங்கிகளில் 'அஸ்வெசும' கணக்காக (பூச்சிய மீதி கணக்கு - Zero-balance account) அதனைத் திறக்க வேண்டும்.

ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் பயனாளிகள் வங்கி கணக்கு இன்றி இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளோம். ஆனால் இன்னும் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தாம் இந்த நன்மையைப் பெற தகுதி பெற்றுள்ளோம் என்பதை அறியாதுள்ளனர். அவர்களுக்கு நாம் கடிதங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளோம், ஆனால் செய்தி அவர்களைச் சென்றடையவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/239524

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

2 weeks 6 days ago

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

Feb 25, 2026 - 09:26 AM

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (25) அதிகாலை பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmm1i55xv0001356pfd1d2w9i

Checked
Tue, 03/17/2026 - 22:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr