Aggregator

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா

2 days 10 hours ago
ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால் கேட்டு சொல்லுங்கள். 🤣

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

2 days 10 hours ago
ஆனால் மகிந்தவை தோற்கடிக்க முடியுமாயின் அதை செய்ய, குறைந்த பட்சம் மகிந்தவின் அணுகுமுறையை நிராகாரிக்கிறோம் என்பதை மக்கள் சொல்ல அந்த தேர்தலை பயன்படுத்தி கொண்டார்கள். 2009 ற்கு பின், சத்தியாகிரகம், பகிஸ்கரிப்பு, பொது வேட்பாளர் போல வெல்ல முடியாத குதிரைகளில் பணம் கட்டுவதில்லை என் தமிழ் மக்கள் முடிவு செய்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்த முறையும் எல்லா தமிழ் தேசிய கட்சியினரும் ஒருமித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

2 days 10 hours ago
துரதிஸ்ர ஆட்டுக்குட்டி. இந்தியாவில் பிறந்திருந்தால் இந்த ஆட்டு (?)க்குட்டியைக் கடவுளாகக் கொண்டாடியிருப்பார்கள். 😁

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

2 days 10 hours ago
எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம்? இது நடக்க வாய்புள்ளது.

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா

2 days 11 hours ago
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1380064

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா

2 days 11 hours ago
visa-free-sri-lanka-e1714215746267-750x3 ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக,

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1380064

கட்டமைப்புவாத இனப்படுகொலை முறைமைக்குள் தமிழ் மக்களின் அரசியல்

2 days 11 hours ago
இலங்கைத் தீவு ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவுகளையும் எட்டாத திரிசங்கு நிலையில் தொங்குகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு கால ஜனநாயக அரசியலில் சிங்கள தலைவர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவர்களின் வரிசையில் இன்றைய தமிழ் தலைவர்களும் தம்மை இணைத்துக் கொள்ள முண்டியடிப்பதாகத் தோன்றுகிறது. சிங்களத் தலைவர்கள் திருந்தி விட்டார்கள், இப்போது உண்மையை உணர்ந்து விட்டார்கள், கடந்த காலத் தலைவர்கள்தான் ஏமாற்றி விட்டார்கள், அவர்கள் தவறு இழைத்து விட்டார்கள், அவற்றையெல்லாம் மறந்து புதிய இலங்கையை உருவாக்குவோம், தமிழர்களும் சிங்களவர்களும் கலந்து மனம்விட்டு பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும், சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து நின்று பேசினால்தான் பிரச்சினை. இப்போது சிங்களவர்கள் கீழ்ழிறங்கி வந்து பேசத் தயாராக உள்ளனர். நாம் பேசித்தான் பார்ப்போம். சிங்களவர்கள் மனம் திரும்பி குணப்பட்டு விட்டார்கள் என்றெல்லாம் இன்று சிங்கள தரப்பு அரசியல் ஆசாமிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.தமிழ் தரப்பு ஏமாளிகளும் கம்யூனிசிய குஞ்சுகளும் இதை அப்படியே விழுங்கி பிதற்ற தொடங்கி விட்டார்கள். இந்த இடத்தில் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் கலாச்சாரத்தில் இன ஒழிப்பு கட்டமைப்பு வாதமும் (structural genocide) அதன் வரலாற்றுப் போக்கு பற்றிய புரிதல் அவசியமானது. அரசியல் கலாச்சாரம் இலங்கை அரசியல் கலாச்சாரம் என்பது தேரவாத பௌத்த தத்துவ நூலான "மகா மகாவம்ச"மகாநாம தேரரின் வாயிலான இனக்குரோத வாதமாக வெளிப்பட்டு நிற்கிறது. அது தமிழின பரிசீலனை , இந்திய எதிர்ப்பு என தத்துவத்தை முன்வைக்கிறது. பௌத்தத்தை பாதுகாப்பதற்கு இலங்கை தீவில் தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனை "தம்மதீபக்" கோட்பாட்டின் மூலம் நியாயப்படுத்துகிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) கட்டமைப்பு வாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் என்பது தனி ஒரு மகாநாம தேரரினாலோ அல்லது சில மனிதனாலோ மட்டும் கட்டமைப்புச் செய்து வளர்க்கப்பட்டதல்ல. இது ஒரு நீண்ட வரலாற்று வளர்ச்சியில் (Historical development) வடிவம் பெற்று ஒரு முறைமைக்கு (System) உட்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமைக்குள் இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இறுக்கமாக கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இனப்படுகொலை முறைமைக்குள் இலங்கை தீவில் உள்ளே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விருப்புக்கள் அல்லது அபிலாசைகள் பூர்த்தி செய்வதற்கு சிங்கள தேசத்தின் அரசியலில் கட்சிகளோ தலைவர்களோ தயாரா? இவை எல்லாவற்றிக்கும் மேலான அரச இறைமையை பிரயோகிக்க வல்ல பௌத்த மகா சங்கம் இடமளிக்குமா? இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் அரச இயந்திரம் இதற்கு அனுமதிக்குமா? இன்று நிலவும் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் முறைமைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டுமா? ஒற்றை ஆட்சி முறமையை மீறி எந்த ஒரு சிங்களத் தலைவர்களாலும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் முன்வைக்க முடியாது என்பதை ஈழத்தமிழர் யதார்த்த பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. உலகளாவிய வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து இனப்படுகொலைகளும் ஒரு தத்துவார்த்த அடித்தளத்தையோ (Philosophical base) அல்லது கோட்பாட்டு தளத்தையோ (theoretical base) கொண்டிருந்தன. இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கின் தொடர் விளைவுகளின் அறுவடையாகவே நிகழும். வரலாற்று வளர்ச்சிப் போக்கு ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் குரோதம் என்பது தனி மனிதர்களால் ஒரு சில நாட்களிலோ சில வருடங்களிலோ ஏற்படுத்திவிட முடியாது. இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கட்டமைப்பு பெறும். அது அந்தச் சூழலின் யதார்த்தமாக இருக்கும். சூழலின் யதார்த்தம் அந்தச் சூழலில் ஏற்படுகின்ற தொடர் நிகழ்வுகளின் போக்கின் விளைவு என்பதைக் கருத்துக் கொள்ள வேண்டும். எனவே இனப்படுகொலையை தத்துவம் (Philosophy) கோட்பாடு (Theory) என்ற இரண்டிலிருந்தும் பிரித்தெடுக்க முடியாது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) என்பது ஒரு முறைமை(system). எங்க இந்த முறைமை இருக்கிறதோ அங்கு அதற்கான ஒரு தர்க்கம்(logic) இருக்கும். எங்கு தர்க்கம் இருக்கிறதோ அதற்கு ஒரு தர்க்க ரீதியான செயல்முறை (logical process) இருக்கும். அந்தச் செயல்முறை தர்க்க ரீதியான வளர்ச்சியை (logical development) கொண்டிருக்கும். இத்தகைய நீண்ட வரலாற்றைக் கொண்ட இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இலங்கை தீவில் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தகைய தொடர் வளர்ச்சி போக்கின் விளைவாக தோற்றம் பெற்றதுதான் இன்றைய சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமை. இந்த அரசியல் முறைமையை இலகுவில் எந்த கொம்பனாலும் மாற்றிட முடியாது. யாரும் மாற்றவும் முனைய, துணிய மாட்டார்கள். இந்த யதார்த்தத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் பற்றி சிந்திக்கவும், பேசவும் வேண்டும். இலங்கை - இந்திய புவிசார் அமைவிட அடித்தளம்தான் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலின் அச்சாணியாக உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் புவிசார் கட்டமைப்பு (geographical structure) நிலையானது. இந்தப் புவியியல் அமைவிடம் இனப்படுகொலை கலாச்சாரத்தை தோற்றுவிப்பதற்கான முதன்மை காரணி ஆகவும் உள்ளது. அடுத்ததாக இப்பிராந்தியத்தில் நிலவும் அரசியல் கட்டமைப்பு (Political structure) இரண்டாவது காரணியாக உள்ளது. இந்த இரண்டு காரணிகளும் இணைகின்ற போது புவிசார் அரசியல் (Geopolitics) என்ற அரசியல் வாதம் செல்வாக்கு செலுத்த முனைகிறது. இந்த புவிசார் அரசியல் மடிக்கணினி போட்டியில் இலங்கை அரசும், இந்திய அரசும் மோதுகின்றன. ஈழத் தமிழினம் இந்த மோதலுக்குள் ஈழத் தமிழினம் இரண்டுக்கும் இடையில் அகப்பட்டு நசிந்து அழிவைச் சந்திக்கிறது. இந்தியாவின் புவிசார் அரசியல் மேலாண்மையை இலங்கைதீவில் இருந்து அகற்றுவதற்கு அல்லது தமக்கு சாதகமாக மாற்றுவதற்கு ஈழத் தமிழரை இலங்கை தீவில் இருந்து அகற்றுவதே சரியானது என கடந்த 14 நூற்றாண்டுகளாக இலங்கை பௌத்த பேரினவாத அரசு நம்புகிறது. இந்த புவிசார் அரசியலை தமக்கு சாதகமாக திருப்புவதற்காகவே இலங்கை அரசு இனப்படுகொலையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இத்தகைய தொடர் வரலாற்று வளர்ச்சி ஊடான இனப்படுகொலை இன்று கட்டமைப்பிற்கு உட்படுத்தப்பட்ட வடிவம் பெற்று இலங்கை தீவின் அரசியலில் தவிர்க்க முடியாத கோட்பாடாக, தத்துவமாக நிலை பெற்றுவிட்டது. இந்த தத்துவார்த்த உண்மையை (Philosophical truth) புரிந்து கொள்ளாமல் தமிழர் அரசியலை ஒரு அடிதானும் நகர்த்த முடியாது. மாறாக சிங்கள தரப்புடன் சமரசம் பேசுவோமேயானால் தொடர்ந்து சீரழிந்து ஈழத் தமிழினம் தனது தாயகத்தை இழக்க நேரிடும். ஈழத் தமிழர்கள் முற்றிலும் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய காலம் இது. எனவே தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற யதார்த்தம் (Given reality), ஈழத் தமிழர்களின் வாழ்விடத் தாயகத்தின் உலகளாவிய அரசியலின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் (Geo-strategic importance) என்பவற்றை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை நிர்ணயம் செய்ய வேண்டும். வெறுமனே ஒத்தோடி அரசியலையோ, அடிபணிவு அரசியலையோ, ஓடுகாலி அரசியலையோ, சோம்பேறித்தனமான அரசியலையோ விடுத்து முற்றிலும் அறிவு சார்ந்து ஈழத் தமிழினத்திற்கு அதன் தாயாக அமைவிடம் சார்ந்து இருக்கின்ற உலகளாவிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் இலங்கை இனப்படுகொலை அரசை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்பதை நுண்மான் நுழைபுலத்தோடு அணுக வேண்டும். இலங்கையின் சிங்கள இடதுசாரிகள் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசிய ஒரு காலம் இருந்தது. ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் அவர்களால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்திட முடியவில்லை. அது மட்டுமல்ல அவ்வாறு தமிழ் மக்களுக்காக பரிந்து பேசியவர்கள் பின்னாளில் அந்தக் பஜ்ஜி கொள்கையில் நின்றுபிடிக்கவும் முடியவில்லை. மாறாக தமிழர்களை அழிக்கும் செயற்திட்டங்களை உருவாக்கினார்கள், ஒத்துழைத்தார்கள். அரசியல் முறைமை இவ்வாறே சிங்கள முற்போக்கு தலைவர்கள் என வந்தவர்களும் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிட முடியவில்லை என்பதனை ஒரு வரலாற்று தத்துவார்த்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதற்கு ஒரு வரலாற்று தத்துவார்த்த, கோட்பாட்டியல் செல்நெறி உள்ளது என்பதை இனங்காண வேண்டும். இனப்படுகொலை முறைமைக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைத்தீவின் அரசியலில் எந்த ஒரு தனிமனித படகு அரசியல் தலைவர்களினாலோ, அல்லது ஒரு அரசியல் கட்சியினாலோ தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதற்கு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியல் முறைமை ஒருபோதும் இடம் அளிக்காது. இத்தகைய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலை அதற்குரிய நடைமுறை அர்த்தத்தில் புரிந்துகொள்ளாமல் வெறுமனே சிங்களத் தலைவர்களின் தேர்தல் வேட்டையாட்டத்திற்கு உட்பட்டு அலந்த நாய் மலத்தில் வீழ்தது போல சிங்களத் தலைவர்களுக்குப் பின்னால் ஓடிக் குடைபிடிப்பது அழிவுக்கான அரசியலேயாகும். எனவே தமிழ் மக்கள் இங்கே அறிவு பூர்வமாக செயற்பட்டு சிங்கள தலைவர்களையும், சிங்களக் கட்சிகளையும், சிங்கள தேசத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படும் என்பதுதான் வரலாற்று உண்மை. இந்த உண்மையில் இருந்து இன்று இலங்கைத்தீவு எதிர்நோக்கி இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும். சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலில் சிங்களத் தலைவர்கள் யாரும் இலகுவில் வெற்றி பெறுவது என்பது கடினமானதாக இருக்கப் போகிறது. இன்று சிங்களதேசத்தின் அரசியலில் மும்முனைப் போட்டி இருப்பதாக பலர் சொல்லத் தலைப்படுகின்றனர். மும்முனைப் போட்டி இருப்பதாக வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் உண்மையில் அங்கு இருமுனைப் போட்டியே உள்ளது. பொது வேட்பாளர் இந்த உலகில் மூன்று அணிகள் என்ற ஒரு நிலை ஒருபோதும் இருந்தது கிடையாது. உண்மையில் அங்கு இரண்டு அணிகளே இருக்கும். மூன்றாவது அணி என்பது வெற்றி பெறும் அணியை சார்ந்ததாகவோ அல்லது ஓர் அணியை தோற்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அணியாகவே இருக்கும். ஆகவே இங்கே இரண்டு அணிகள் மட்டுமே இருக்கும். உலகளாவிய அரசியலிலும், மனிதகுல வரலாற்றில் எப்போதும் இரண்டு அணிகளே இருந்துள்ளன. இது இன்றைய சிங்களதேச அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் தமக்கான ஒரு தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கும், தமிழர்களுக்கான தலைமையை உருவாக்குவதற்கும் ஏற்ற ஒரு அரசியல் சூழல் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் விரிந்து கிடக்கிறது. எனவே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இறைமையை தமிழ் வேட்பாளருக்குரிய வாக்குகளாக பிரயோகித்து தமது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். சிதைந்துபோயிருக்கும் தமிழீழழ மக்களை இதன் வாயிலாக ஒரு தேசியச் சக்தியாகத் திரட்டி எடுக்க முடியும். அத்துடன் இதனை தமிழ் தேசிய இனத்தின் மக்கள் ஆணையாக வெளி உலகத்திற்கு காட்டவும் முடியும். அதனையே ஒரு சர்வதேச அரசியல் செயற்பாட்டுக்கு மூலதனமாக முன்வைக்கவும் முடியும். தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் வழி ஒன்றை திறக்க முடியும் அதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது. https://tamilwin.com/article/politics-tamil-people-structuralist-genocidal-1714021831

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

2 days 11 hours ago
ரி20யில் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்து உலக சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ் 27 APR, 2024 | 06:44 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 42ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் உலக சாதனையுடன் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. இதன் மூலம் சகலவிதமான ரி20 கிரக்கெட் போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற உலக சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்தது. கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 259 ஓட்டங்களே தென் ஆபிரிக்காவினால் கடக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி இலக்காக இதற்கு முன்னர் இருந்தது. ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சிக்ஸ்களுக்கும் பவுண்டறிகளுக்கும் பஞ்சமில்லாமல் கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட அப் போட்டியில் 42 சிக்ஸ்கள் மொத்தமாக விளாசப்பட்டது. இதுவும் ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் குவிக்கப்பட்ட அதிகூடிய சிக்ஸ்களுக்கான உலக சாதனையாகும். சன்ரைசர்ஸ் - மும்பை ஐபிஎல் போட்டியிலும், பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐபிஎல் போட்டியிலும் இந்த வருடம் தலா 38 சிக்ஸ்கள் மொத்தமாக குவிக்கப்பட்டதே போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிக சிக்ஸ்களுக்கான சாதனையாக இதற்கு முன்னர் இருந்தது. பஞ்சாபின் வெற்றியில் ஜொனி பெயாஸ்டோவின் ஆட்டம் இழக்காத சதம், ப்ரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின. பஞ்சாப் கிங்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ப்ரப்சிம்ரன் சிங், ஜொனி பெயாஸ்டோவ் ஆகியோர் பவர் ப்ளேயில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ப்ரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்து பெயாஸ்டோவ், ரைலி ருசோவ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ருசோவ் 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜொனி பெயாஸ்டோவ், ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். ஜொனி பெயாஸ்டோவ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 9 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 108 ஓட்டங்களையும் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்களையும் குவித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைக் குவித்தது. பில் சோல்ட், சுனில் நரேன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 62 பந்துகளில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சுனில் நரேன் 32 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைக் குவித்தார். மொத்த எண்ணிக்கை 163 ஓட்டங்களாக இருந்தபோது பில் சோல்ட் 37 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களை விளாசினார். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் (39), அண்ட்றே ரசல் (24) அணித் தலைவர் ஷ்ரயேஸ் ஐயர் (28) ஆகியோரும் சிக்ஸ்களை விளாசி துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் இரண்டு அணிகளிலும் துடுப்பெடுத்தாடிய 11 பேரில் ஒருவரைத் தவிர மற்றைய எல்லோரும் சிக்ஸ்கள் விளாசியிருந்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். https://www.virakesari.lk/article/182064

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூனில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு!

2 days 11 hours ago
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளது. அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகும். சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வௌிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300389

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூனில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு!

2 days 11 hours ago
shehan-semasinghe-300x200.jpg

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளது. அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகும். சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வௌிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/300389

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

2 days 11 hours ago
பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது 27 APR, 2024 | 11:16 AM நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர். சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர். மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார். https://www.virakesari.lk/article/182076

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

2 days 11 hours ago
யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. காணி மோசடி குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அதற்கமைய காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/jaffna-land-scammer-court-order-police-arrests-1714181334

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

2 days 11 hours ago

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

காணி மோசடி

குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் | Jaffna Land Scammer Court Order Police Arrests

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள்

அதற்கமைய காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் | Jaffna Land Scammer Court Order Police Arrests

புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/jaffna-land-scammer-court-order-police-arrests-1714181334

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

2 days 11 hours ago
இதைச் சொல்லித் தான் கஜே குழுவினர் பொதுவேட்பாளரை நிறுத்தினால் இரண்டாவது வாக்கு எண்ணும் பட்சத்தில் அது ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு போகும். அதனால் பகிஸ்கரிப்பே சிறந்தது என்கிறார்கள். இந்த முறை நடக்க இருக்கும் தேர்தல் அனேகமாக இரண்டாவது தடவை வாக்குகள் எண்ணவேண்டி வரலாம். சிவாஜிக்கு சொற்ப வாக்குகளும் இனத்தைக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு மிக அதிகமான வாக்குகளும் கிடைத்தன. இதை ஜீரணிக்க முடியாமலே இருந்தது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு

2 days 12 hours ago
27 APR, 2024 | 01:51 PM காணாணல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை இன்று சனிக்கிழமை (27) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது . கடந்த யுத்த காலத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அது தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 48 உறவுகளுக்காக விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இதில் திருகோணமலை சார்பாக 16 , கந்தளாய் 06, மொறவெவ 04, தம்பலகாமம் 22 என விசாரணைகளுக்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு இடம்பெற்றன. இதில் காணாமல் போன அலுவலக தவிசாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மன்னார், மட்டக்களப்பு, யாழ்ப்பாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182090