Aggregator

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

2 days 8 hours ago
பெருந்துறைதான் . இதில் மதிமுக 2 ஆம் இடத்தை பெற்றது . அதிமுக முதலிடம். திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ் கம்னியூஸ்ட் மூன்றாம் இடம்

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

2 days 8 hours ago
பெசன்ட் நகர் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி வீடு வழியாக அடையார் போகிற வீதியில்

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

2 days 9 hours ago
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் வழிநடத்திப்படும் டிரிபோலி பிளாட்டூன்னாலே (Tripoli Platoon) நடத்தப்பட்டது என்பது தற்பொழுது உலகறிந்த பரமரகசியமாகும். சஹாரன் குழுவையும், புலனாய்வு துறையையும் ஒருங்கிணைப்பதில் பிள்ளையானும், அவரது சகாக்களும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஈடுபடடவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கின்றது.

“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”

2 days 10 hours ago
“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்” April 26, 2024 — குசல் பெரேரா — வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன். அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் தங்களது மக்களுடன் நிற்கத் தவறியதே மதத்தீவிரவாதத்தை அனுமதிக்கிறது. இது உண்மையில் எங்கிருந்து ஆரம்பித்தது? 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததுடன் இது ஆரம்பித்தது. சமாதானத்தைப் பேசுவதற்காக வடக்கு — கிழக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவில் வாக்களித்து 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் “தமிழ் ஈழத்தை” வென்றெடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தது. “தமிழர்களுக்கு சமாதானம் இல்லை” என்று உரத்துக் குரலெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையுடன் “தனியான தமிழ் அரசு” ஒன்றுக்காக மேற்குலகின் ஆதரவைத் திரட்டவும் வசதியாக “கடும்போக்கு சிங்கள பௌத்தவாதியான” ராஜபக்சவை பதவியில் அமர்த்துவதற்கு அந்த சமூகம் தீர்மானித்தது. இந்த கர்வத்தனமான சிந்தனை “தமிழ் ஈழம்” என்ற பிரபாகரனின் வெறித்தனமான அபிலாசையின் வழியில் அமைந்தது. விடுதலை புலிகளினால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு 50.29 சதவீத வாக்குகளுடனும் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான பெரும்பான்மையுடனும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. வடக்கு — கிழக்கில் மாத்திரம் 10 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள். கடும்போக்கு சிங்கள பௌத்த தலைவர் ஒருவர் எந்தளவு செலவானாலும் அதைப் பொருட்படுத்தாமல் இறுதிவரை போரை முன்னெடுப்பார் என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தெரிந்திருக்கவில்லை. 2002 பெப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை போரில் ஈடுபட்டு நன்கு அனுபவத்தைப் பெற்ற விடுதலை இயக்கப் போராளிகளை “நிருவாகிகள்” பதிவிகளுக்கு மாற்றியது. வயதில் நாற்பதுகளின் நடுப்பகுதியிலும் ஐம்பதுகளின் முற்பகுதியிலும் இருந்த அவர்கள் போரில் சலிப்படைந்து சமருக்கு செயலூக்கத்துடன் தலைமைதாங்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். நியூயோர்க்கில் 9/11 தாக்குதல் அரசு அல்லாத ஆயுதக்குழுக்கள் சகலதையும் உள்ளடக்கியதாக “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற சுலோகத்தின் கீழ் போர் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு வாய்ப்பைக் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்கவும் புலம்பெயர் தமிழர்கள் இருந்தார்கள். விடுதலை புலிகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 35 நாடுகளில் அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது. 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது உயிருடன் எஞ்சியிருந்த தமிழர்களுக்கு வன்னியின் மனித அவலமே மிச்சமாக இருந்தது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு அவர்களது எதிர்காலத்துக்கு எதையும் விட்டு வைக்கவில்லை. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் விடுதலை புலிகளின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்கு பின்னரான குழப்பநிலையில் ஒரு அரசியல் தலைமைத்துவம் கூட இல்லாதவர்களாக கையறு நிலையில் இருந்தார்கள். வெறுமனே பெயரளவில் மாத்திரம் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுக்கு ஒத்தூதிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. அதுவே போருக்கு பின்னரான வடக்கு — கிழக்கு. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக ராஜபக்சாக்களைத் தண்டிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை விரைந்து பற்றிப்பிடித்துக் கொண்டது. அந்த தீர்மானங்களே தமிழ் மக்களின் “அதிமுக்கியமான அரசியல் தேவை” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்து நின்றது. அதேவேளை, போரின் முடிவுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் ஆணைக்குழ பொது விசாரணை அமர்வுகளை நடத்தியது. சிதறிப்போயிருந்த தமிழ்ச்சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின உடனடி மனக் குறைகளுக்கு தீர்வைக் கோரும் வாய்ப்பு அதன் மூலமாக உள்ளூர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது. ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை: ———————————/ போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டெம்பரில் சமர்ப்பித்த “இடைக்கால அறிக்கையில்” பல விடயங்களுக்கு மத்தியில் பின்வரும் முன்மொழிவுகளைச் செய்திருந்தது ; (1) நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொறிமுறை ( 2) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் (3) தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறு விடுவிக்கப்பட்டதற்கான சான்றுப்பத்திரம் வழங்கப்படவேண்டும். மீண்டும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படக்கூடாது (4) அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங்களுக்கு தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படாது என்று தெளிவான கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும்.(5) அதிமுன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ச விரோத அரசியலுக்கு இசைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான தங்களது செயற்பாடுகள் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சகல தீர்வுகளுடனும் கூடிய புதிய அரசியலைமைப்பு ஒன்றைத் தரும் என்று நம்பினார்கள். அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த மிகவும் அவசரமானதும் முக்கியமானதுமான முன்மொழிவுகளை அவர்கள் முற்றுமுழுதாக அலட்சியம் செய்தார்கள். வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அநாவசியமாக முரண்பட்டுக் கொண்டார்கள். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுத்து வடக்கு நிருவாகத்தை இராணுவமய நீக்கம் செய்வதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கி யிருக்கவேண்டும். முன்மொழிவுகளுக்கு முக்கியத்துவமில்லை: ——————————- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கும் 2011 டிசம்பர் 16 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 வது அத்தியாயத்தின் கீழ் 9.45 தொடக்கம் 9.74 வரையான பந்திகளில் காணப்பட்ட முன்மொழிவுகளை முற்றாக அலட்சியம் செய்தது. உனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை என்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அவதானங்களினதும் முன்மொழிவுகளினதும் ஒரு சுருக்கமாக அந்த பந்திகள் அமைந்திருந்தன. 8.193 பந்தியை கொழும்பு சிவில் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிச்சயமாக வலியுறுத்தியிருக்கவேண்டும். “சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவில் நிறுவனமே பொலிஸ் திணைக்களம். அதனால் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகளுடனான தொடர்புகளில் இருந்து பொலிஸ் திணைக்களம் பிரிக்கப்படவேண்டும் என்று அந்த பந்தியும் சிவிலியன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகளின் ஈடுபாடு படிப்படியாக நீக்கப்படவேண்டும் ; பாதுகாப்பு படைகளினால் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை நியாயபூர்வமான கால எல்லை கொடுக்கப்பட்டு இல்லாமல் செய்யவேண்டும் என்று 9.171 பந்தியும் கூறுகின்றன. மேற்குலகில் பெரிய ஆரவாரம் செய்ப்பட்டபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 14 வருடகால தீர்மானங்கள் வடக்கு — கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசியமான தேவைகளுக்கு முக்கியமானதாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் வடக்கு — கிழக்கு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும் தாங்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். ராஜபக்சாக்களை தண்டிப்பதற்கு முன்னதாக “காணாமல்போன” தங்களது உறவினர் பற்றிய தகவல்கள் அந்த மக்களுக்கு அவசரமானவையாகும் முக்கியமானவையாகவும் இருந்தன. இழந்த தங்களது நிலங்களையும் அன்றாட வருமானத்துக்கான ஆதாரங்களையும் மீளப்பெறுவதில் அவர்கள் கடும் அக்கறை செலுத்தினார்கள். அன்புக்குரிவர்கள் எங்கே? காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஒருபோதும் நினைக்கவில்லை. வடக்கு,கிழக்கில் சிவில் சமூகத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டி அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவும் முயற்சிகள் செயயப்படவில்லை. 2,495 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராடுவது என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லை. “எங்களது அன்புக்குரியவர்கள் எங்கே?” என்ற கேள்வியுடன் 2023 டிசம்பர் இறுதிவரை தொடர்ச்சியாக ஆறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் பகிடி இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த தாய்மாரையும் மனைவிமாரையும் மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு மூன்று ஜனாதிபதிகள் ஏழு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 180 க்கும் அதிகமான தாய்மாரும் உறவினர்களும் கடந்த ஏழு வருடங்களில் இறந்துவிட்டதாக வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பிரகடனம் செய்த கடந்த ஆகஸ்ட் 30 காணாமல்போனேரின் உறவினர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அந்த ஏழு வருட காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் எங்கே போனார்கள்? தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழர்களின் நிலங்கள் சிங்கள சமூகத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருக்கிறது அல்லது அரச ஆதரவுடன் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை செய்கிறார்கள். மன்னாரிலும் வடபகுதி கடல் பரப்பிலும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த அரசாங்கம் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. இடம்பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகளும் மனக்குறைகளும் அதிகரிக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவருக்குமோ அவற்றைப் பற்றி அக்கறை கிடையாது. அரசியல் அலட்சியத்தின் விளைவுகள்: ———————————————— வெட்கக்கேடான இந்த அரசியல் அலட்சியத்தின் விளைவுகளை வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள தெற்கின் இரு பொது வேட்பாளர்களை ஆதரித்த பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வைக்காணும் உறுதிமொழியுடன் கூடிய விஞ்ஞாபனத்தை முன்வைத்து போட்டியிட்டது. கூட்டமைப்பில் இருந்து கூடுதல்பட்ச எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பெரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் சமஷ்டித் தீர்வொன்றுக்கு உறுதியான ஆணையைத் தந்தால் தெரிவு செய்யப்படவிருந்த விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறினார்கள். சமஷ்டித் தீர்வைப் பிரதான சுலோகமாகக் கொண்டு கூட்டமைப்பில் இருந்து 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். பதிவுசெய்யப்பட்ட 884, 326 வாக்குகளில் மொத்தம் 470, 542 வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தன. 45 ஆயிரம் வாக்குகளுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஒரேயொரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து எல்லாமாக கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள். ஒவ்வொரு பிரச்சினையிலும் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பிரமையுடன் செயற்பட்ட சம்பந்தன் — சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேலும் ஒரு ஐந்து வருடங்களை அதிகரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுடனும் வேதனையுடனும் தமிழ் மக்கள் கழித்தார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் அலட்சியத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பை 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். தெரிவுசெய்யப்பட்ட முன்னைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரை இழந்த கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலமும் ஒரேயொரு ஆசனமே கிடைத்தது. வேறு மூன்று தமிழ்க்கட்சிகளில் இருந்து நான்கு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 327, 168 வாக்குகள் கிடைத்தன. 2020 ஆம் ஆண்டில் வாக்காளர்கள் தொகை பத்து இலட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்திருந்த போதிலும், 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குளையும் விட இது 143, 374 வாக்குகள் குறைவானதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் அதன் மக்கள் ஆதரவின் சரிவைத் தடு்க்க முடியவில்லை. தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற அரசியல் போக்கை மாற்று அரசியல் அணியொன்று சவாலுக்கு உட்படுத்தாத நிலையில், சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவத்துக்கு ஒரு மாற்றாக இந்து சார்பு நகர்வொன்றின் மூலம் மாற்றம் பிரதிபலித்திருக்கிறது போன்று தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் கூட “மக்கள் சார்பான” எந்தவொரு அரசியல் மாற்று அணியும் இருப்பதாக தெரியவுமில்லை. தமிழரசு கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவக் குழப்பத்தையும் தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் அணியான்று இல்லாத நிலையையும் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்து தீவிரவாதம் செல்வாக்குப் பெறக்கூடிய ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் இந்து மதம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்றும் அதனால் நாட்டில் உள்ள இந்துக்களை ஓரணியில் திரட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் இந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் “சிவசேனை” என்ற உதிரி அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல் துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை அது அவசரமாக வேண்டிநிற்கிறது. (பைனான்சியல் ரைம்ஸ்) https://arangamnews.com/?p=10677

“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”

2 days 10 hours ago

“நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”
“நான் கற்றுக் கொண்டதும்  தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்”

 — குசல் பெரேரா —

   வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற  தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன்.

  அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் தங்களது மக்களுடன் நிற்கத் தவறியதே மதத்தீவிரவாதத்தை அனுமதிக்கிறது.

  இது உண்மையில் எங்கிருந்து ஆரம்பித்தது? 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததுடன் இது ஆரம்பித்தது. சமாதானத்தைப் பேசுவதற்காக வடக்கு — கிழக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவில் வாக்களித்து 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

  ஆனால், அதற்கு பதிலாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் “தமிழ் ஈழத்தை” வென்றெடுப்பது  பற்றி பேசிக்கொண்டிருந்தது. “தமிழர்களுக்கு சமாதானம் இல்லை” என்று உரத்துக் குரலெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையுடன் “தனியான தமிழ் அரசு” ஒன்றுக்காக மேற்குலகின் ஆதரவைத் திரட்டவும் வசதியாக “கடும்போக்கு சிங்கள பௌத்தவாதியான” ராஜபக்சவை பதவியில் அமர்த்துவதற்கு  அந்த சமூகம் தீர்மானித்தது.

  இந்த கர்வத்தனமான சிந்தனை “தமிழ் ஈழம்” என்ற பிரபாகரனின் வெறித்தனமான அபிலாசையின் வழியில் அமைந்தது. விடுதலை புலிகளினால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு 50.29 சதவீத வாக்குகளுடனும் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான பெரும்பான்மையுடனும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. வடக்கு — கிழக்கில் மாத்திரம் 10 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள்.

 கடும்போக்கு சிங்கள பௌத்த தலைவர் ஒருவர் எந்தளவு செலவானாலும் அதைப் பொருட்படுத்தாமல்  இறுதிவரை போரை முன்னெடுப்பார் என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தெரிந்திருக்கவில்லை. 2002 பெப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை போரில் ஈடுபட்டு நன்கு அனுபவத்தைப் பெற்ற விடுதலை இயக்கப் போராளிகளை “நிருவாகிகள்” பதிவிகளுக்கு மாற்றியது. வயதில் நாற்பதுகளின் நடுப்பகுதியிலும் ஐம்பதுகளின் முற்பகுதியிலும் இருந்த அவர்கள் போரில் சலிப்படைந்து சமருக்கு செயலூக்கத்துடன் தலைமைதாங்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.

  நியூயோர்க்கில் 9/11 தாக்குதல் அரசு அல்லாத ஆயுதக்குழுக்கள் சகலதையும் உள்ளடக்கியதாக “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற சுலோகத்தின் கீழ் போர் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு வாய்ப்பைக் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்கவும் புலம்பெயர் தமிழர்கள் இருந்தார்கள். விடுதலை புலிகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 35 நாடுகளில் அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது.

  2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது உயிருடன் எஞ்சியிருந்த தமிழர்களுக்கு வன்னியின் மனித அவலமே மிச்சமாக இருந்தது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு அவர்களது எதிர்காலத்துக்கு எதையும் விட்டு வைக்கவில்லை. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் விடுதலை புலிகளின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்கு பின்னரான குழப்பநிலையில்  ஒரு அரசியல் தலைமைத்துவம் கூட இல்லாதவர்களாக கையறு நிலையில் இருந்தார்கள்.  வெறுமனே  பெயரளவில் மாத்திரம் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுக்கு ஒத்தூதிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.

  அதுவே போருக்கு பின்னரான வடக்கு — கிழக்கு. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக ராஜபக்சாக்களைத் தண்டிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை விரைந்து பற்றிப்பிடித்துக் கொண்டது. அந்த தீர்மானங்களே தமிழ் மக்களின் “அதிமுக்கியமான அரசியல் தேவை” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்து நின்றது.

  அதேவேளை, போரின் முடிவுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் ஆணைக்குழ பொது விசாரணை அமர்வுகளை நடத்தியது. சிதறிப்போயிருந்த தமிழ்ச்சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின  உடனடி மனக் குறைகளுக்கு தீர்வைக் கோரும் வாய்ப்பு அதன் மூலமாக உள்ளூர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது.

 ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை:

———————————/

 போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டெம்பரில் சமர்ப்பித்த “இடைக்கால அறிக்கையில்” பல விடயங்களுக்கு மத்தியில் பின்வரும் முன்மொழிவுகளைச் செய்திருந்தது ; 

 (1) நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொறிமுறை ( 2)  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் (3) தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறு  விடுவிக்கப்பட்டதற்கான சான்றுப்பத்திரம் வழங்கப்படவேண்டும். மீண்டும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படக்கூடாது (4) அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங்களுக்கு தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படாது என்று தெளிவான கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும்.(5)  அதிமுன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டும்.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ச விரோத அரசியலுக்கு இசைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான தங்களது செயற்பாடுகள்  தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சகல தீர்வுகளுடனும் கூடிய புதிய அரசியலைமைப்பு ஒன்றைத் தரும் என்று நம்பினார்கள். அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த மிகவும் அவசரமானதும் முக்கியமானதுமான முன்மொழிவுகளை அவர்கள் முற்றுமுழுதாக அலட்சியம் செய்தார்கள்.

   வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அநாவசியமாக முரண்பட்டுக் கொண்டார்கள். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுத்து வடக்கு நிருவாகத்தை இராணுவமய நீக்கம் செய்வதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கி யிருக்கவேண்டும்.

  முன்மொழிவுகளுக்கு 

  முக்கியத்துவமில்லை:

——————————-

 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கும் 2011 டிசம்பர் 16 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 வது அத்தியாயத்தின் கீழ் 9.45 தொடக்கம் 9.74 வரையான பந்திகளில் காணப்பட்ட முன்மொழிவுகளை முற்றாக அலட்சியம் செய்தது.  உனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை என்று  ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அவதானங்களினதும்  முன்மொழிவுகளினதும் ஒரு சுருக்கமாக அந்த பந்திகள் அமைந்திருந்தன.

  8.193 பந்தியை கொழும்பு சிவில் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிச்சயமாக வலியுறுத்தியிருக்கவேண்டும். “சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவில் நிறுவனமே பொலிஸ் திணைக்களம். அதனால் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகளுடனான  தொடர்புகளில் இருந்து பொலிஸ் திணைக்களம் பிரிக்கப்படவேண்டும் என்று அந்த பந்தியும் சிவிலியன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகளின் ஈடுபாடு படிப்படியாக நீக்கப்படவேண்டும் ; பாதுகாப்பு படைகளினால் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை நியாயபூர்வமான கால எல்லை கொடுக்கப்பட்டு இல்லாமல் செய்யவேண்டும் என்று 9.171 பந்தியும் கூறுகின்றன.

  மேற்குலகில் பெரிய ஆரவாரம் செய்ப்பட்டபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 14 வருடகால தீர்மானங்கள் வடக்கு  — கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசியமான தேவைகளுக்கு முக்கியமானதாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் வடக்கு — கிழக்கு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும்  தாங்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

  ராஜபக்சாக்களை தண்டிப்பதற்கு முன்னதாக “காணாமல்போன” தங்களது உறவினர் பற்றிய தகவல்கள் அந்த மக்களுக்கு அவசரமானவையாகும் முக்கியமானவையாகவும் இருந்தன. இழந்த தங்களது நிலங்களையும் அன்றாட வருமானத்துக்கான ஆதாரங்களையும்  மீளப்பெறுவதில் அவர்கள் கடும் அக்கறை செலுத்தினார்கள்.

  அன்புக்குரிவர்கள் எங்கே? 

 காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் தாய்மார்களுக்கும்  மனைவிமார்களுக்கும் ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஒருபோதும் நினைக்கவில்லை. வடக்கு,கிழக்கில் சிவில் சமூகத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டி அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவும் முயற்சிகள் செயயப்படவில்லை.

  2,495 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராடுவது என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லை. “எங்களது அன்புக்குரியவர்கள் எங்கே?” என்ற கேள்வியுடன் 2023 டிசம்பர் இறுதிவரை தொடர்ச்சியாக ஆறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் பகிடி இல்லை.

 போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த தாய்மாரையும் மனைவிமாரையும்  மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு மூன்று ஜனாதிபதிகள் ஏழு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 180 க்கும் அதிகமான தாய்மாரும் உறவினர்களும் கடந்த ஏழு வருடங்களில் இறந்துவிட்டதாக வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பிரகடனம் செய்த கடந்த ஆகஸ்ட் 30 காணாமல்போனேரின் உறவினர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அந்த ஏழு வருட காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தலைவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் எங்கே போனார்கள்? 

  தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழர்களின் நிலங்கள் சிங்கள சமூகத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருக்கிறது அல்லது அரச ஆதரவுடன் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை செய்கிறார்கள்.

  மன்னாரிலும் வடபகுதி கடல் பரப்பிலும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த அரசாங்கம் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. இடம்பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகளும் மனக்குறைகளும் அதிகரிக்கின்றன. ஆனால்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவருக்குமோ அவற்றைப் பற்றி அக்கறை கிடையாது.

  அரசியல் அலட்சியத்தின் விளைவுகள்:

————————————————

 வெட்கக்கேடான இந்த அரசியல் அலட்சியத்தின் விளைவுகளை வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள தெற்கின் இரு பொது வேட்பாளர்களை ஆதரித்த பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வைக்காணும் உறுதிமொழியுடன் கூடிய விஞ்ஞாபனத்தை முன்வைத்து போட்டியிட்டது. கூட்டமைப்பில் இருந்து கூடுதல்பட்ச எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

  பெரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் சமஷ்டித் தீர்வொன்றுக்கு உறுதியான ஆணையைத் தந்தால் தெரிவு செய்யப்படவிருந்த விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறினார்கள். சமஷ்டித் தீர்வைப் பிரதான சுலோகமாகக் கொண்டு கூட்டமைப்பில் இருந்து 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். பதிவுசெய்யப்பட்ட 884, 326 வாக்குகளில் மொத்தம் 470, 542 வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தன. 45 ஆயிரம் வாக்குகளுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஒரேயொரு  உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து எல்லாமாக கூட்டமைப்பின் சார்பில்  16 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள்.

  ஒவ்வொரு பிரச்சினையிலும் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பிரமையுடன் செயற்பட்ட சம்பந்தன் — சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேலும் ஒரு ஐந்து வருடங்களை அதிகரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுடனும் வேதனையுடனும் தமிழ் மக்கள் கழித்தார்கள்.  மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் அலட்சியத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பை 2020 ஆகஸ்ட் பொதுத்  தேர்தலில் வடக்கு,கிழக்கு  தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். தெரிவுசெய்யப்பட்ட முன்னைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரை இழந்த கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலமும் ஒரேயொரு ஆசனமே கிடைத்தது.

   வேறு  மூன்று தமிழ்க்கட்சிகளில் இருந்து நான்கு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 327, 168 வாக்குகள் கிடைத்தன. 2020 ஆம் ஆண்டில் வாக்காளர்கள் தொகை பத்து இலட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்திருந்த போதிலும், 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குளையும் விட இது 143, 374 வாக்குகள் குறைவானதாகும்.

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் அதன் மக்கள் ஆதரவின் சரிவைத் தடு்க்க முடியவில்லை. தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற அரசியல் போக்கை மாற்று அரசியல் அணியொன்று சவாலுக்கு உட்படுத்தாத நிலையில், சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவத்துக்கு ஒரு மாற்றாக இந்து சார்பு நகர்வொன்றின் மூலம் மாற்றம் பிரதிபலித்திருக்கிறது போன்று தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் கூட  “மக்கள் சார்பான” எந்தவொரு அரசியல் மாற்று  அணியும் இருப்பதாக தெரியவுமில்லை.

தமிழரசு கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவக் குழப்பத்தையும் தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் அணியான்று  இல்லாத நிலையையும் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்து தீவிரவாதம் செல்வாக்குப் பெறக்கூடிய ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் இந்து மதம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்றும் அதனால் நாட்டில் உள்ள இந்துக்களை ஓரணியில் திரட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் இந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் “சிவசேனை” என்ற உதிரி அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

  தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல்  துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை  அது அவசரமாக வேண்டிநிற்கிறது.

  (பைனான்சியல் ரைம்ஸ்)

https://arangamnews.com/?p=10677

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா

2 days 11 hours ago
ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா April 27, 2024 ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர். அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா். https://www.ilakku.org/ஆணைக்குழுக்களை-அமைத்து-ஈ/

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா

2 days 11 hours ago

ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா
April 27, 2024
 

ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர்.

அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா்.

https://www.ilakku.org/ஆணைக்குழுக்களை-அமைத்து-ஈ/

வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்

2 days 11 hours ago
வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன் April 27, 2024 வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் பணியொன்று இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்கத்துடன் இந்த அகழ்வுப் பணி நடக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடக்கு, கிழக்கில் மூத்த பேராசிரியர்கள், தொல்லியல் சார்ந்தவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எவரையும் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தாமல் இரகசியமான முறையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன . யுனெஸ்கோவின் கண்காணிப்பிலேயே இந்தப் பணிகள் நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். இல்லையென்றால் குரூந்தூர் மலையை போன்று வரலாறு திரிபுபடுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது. இதனால் யுனெஸ்கோவின் கண்காணிப்பில் அகழ்வுப்பணி நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார். https://www.ilakku.org/வெடுக்குநாறிமலை-பகுதியி/

வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்

2 days 11 hours ago

வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன்
April 27, 2024
 

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் பணியொன்று இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்கத்துடன் இந்த அகழ்வுப் பணி நடக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் மூத்த பேராசிரியர்கள், தொல்லியல் சார்ந்தவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எவரையும் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தாமல் இரகசியமான முறையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன . யுனெஸ்கோவின் கண்காணிப்பிலேயே இந்தப் பணிகள் நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். இல்லையென்றால் குரூந்தூர் மலையை போன்று வரலாறு திரிபுபடுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது.

இதனால் யுனெஸ்கோவின் கண்காணிப்பில் அகழ்வுப்பணி நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார்.

 

https://www.ilakku.org/வெடுக்குநாறிமலை-பகுதியி/

இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

2 days 11 hours ago
இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி Vhg ஏப்ரல் 27, 2024 இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2024/04/blog-post_113.html

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

2 days 11 hours ago
படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல் எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு gayanApril 27, 2024 தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன. ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது. இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது. ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ரபா மீதான படையெடுப்பு இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இஸ்ரேல் எதிர்பார்த்ததை அடையாது’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத் தெரிவித்தார். ஏழு மாத போரில் ஹமாஸை ஒழிப்பது அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகிய எந்த இலக்கையும் இஸ்ரேல் அடையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். காசா போர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதலை தூண்டி இருக்கும் சூழலில் அது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமகன் ஒருவன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. கபர் சுபா மலைப் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி மேற்கொண்ட சிக்கலான அதிரடி தாக்குதலில் இரு இஸ்ரேலிய வாகனங்களை அழித்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது. இது தொடர்பில் இஸ்ரேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தெற்கு லெபனானில் ஷெபா கிராமத்தைச் சூழ ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. இதில் பல வீடுகளும் சேதமடைந்திருப்பதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா மோதல்களில் லெபனானில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 252 ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்தக் காலப்பகுதியில் 11 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/04/27/world/56907/படையெடுப்பை-நெருக்கும்-இ/

வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் ஆதிக்கங்கள் : ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 days 13 hours ago
27 APR, 2024 | 10:21 AM வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது. இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது. அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும். எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/182071

வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் ஆதிக்கங்கள் : ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 days 13 hours ago
27 APR, 2024 | 10:21 AM
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ்.  மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.

அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும். 

எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/182071

தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு

2 days 14 hours ago
நான் நினைக்கிறேன் , 2009க்கு முன்பு வன்னியில் போராளிகள், தலைவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளற்களுடன் தொடர்பில் இருந்தார். 2009 க்கு பிறகு அவர்தொடர்பில் இருந்த வன்னியில் இருந்துதப்பியவர்களில் ஒரு சிலரும் , புலம்பெயர் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளராக இருந்தவர்களில் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்திய இலங்கை உளவு அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். இவர்கள் சொல்வதினை நெடுமாறன் அவர்கள் உண்மை என்று நம்பியிருக்கலாம்.

குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் - விமல் வீரவன்ச

2 days 14 hours ago
Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது. பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060

குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் - விமல் வீரவன்ச

2 days 14 hours ago

Published By: VISHNU

27 APR, 2024 | 01:12 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.

 பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/182060

தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்

2 days 14 hours ago
மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும். கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo