Aggregator

வலி ஒன்று; நீதி இரண்டா

3 weeks 5 days ago

இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன இராணுவத்துடன் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் கூட்டணிகளை (நேட்டோ போன்று) ஏற்படுத்திக்கொண்டால் அது இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும். இன்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நேட்டோ வழங்கும் இராணுவ உதவிகள்போன்று, நாளை இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன இராணுவத்துக்கு வெளிப்படையான உதவிகள் வழங்கப்பட்டால், 'தான் அழிந்துபோவேன் அல்லது அமிழ்ந்துபோவேன்' என்பதுதான் சுதந்திர பலஸ்தீனத்தை இஸ்ரேல் தன் முழுப்பலத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்க்கக்காரணம்.

உலகின் உச்சபட்ச இராஜதந்திரமும், கருத்துத் தெரிவிக்க அசட்டுத்துணிவும் தேவையான இந்த விடயத்தில், இஸ்ரேல், அமெரிக்காவின் முகங்களை முறிக்காமல் அவற்றை நேருக்குநேராகச் சந்தித்து சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்திய வெகுசில தலைவர்களில் ரணிலும் ஒருவர். குறைந்தபட்சம் 'ஆயுதங்கள் தாங்கிய இராணுவத்தினர் அற்ற சுதந்திர பலஸ்தீனமாவது உருவாக்கப்படவேண்டும்' என்பது ரணிலின் திருத்தப்பட்ட கொள்கையாகவிருந்தது. அதுதான் இன்று உலகில் பல நாடுகளாலும் பொதுத் தீர்வுத்திட்டமாக' பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகவும் இருக்கின்றது. ஓர் இராஜதந் திரியாக, முதிர்ச்சிமிக்க தலைவராக, அனுபவ ரேகைகளைத் தாங்கியவராக ரணிலை இந்த விடயத்தில் எத்தனை பாராட்டினாலும் அத்தனையும் தகும்.

ஆனால், இந்த விடயத்தில் ரணில் சொல்ல மறந்த அல்லது உணர மறுத்த கதையொன்றும் உள்ளது. யூத சித்தாந்தங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இன்று பலஸ்தீனர்களை எவ்வளவுக்கெவ்வளவு வதைத் தெறிகின்றனவோ அதைவிட ஒருபடி மேலாகத்தான் பௌத்த சித்தாந்தத்தின் ஆக்கிரமிப்புகளால் ஈழத் தமிழர்கள் அனுபவித்த-அனுபவிக்கின்ற வேதனைகள் உள்ளன. அவை வார்த்தைகளால் அளந்தொழுத இயலாதவை - முடியாதவை. அங்கு பலஸ் தீனர்கள், இங்கு ஈழத்தமிழர்கள், அது மத்திய கிழக்கு, இது தெற்காசியா, அங்கு யூத ஆக்கிரமிப்பு, இங்கு பௌத்த ஆக்கிரமிப்பு. அவ்வளவும்தான் வேறுபாடு. மற்றும்படி வலி ஒன்றுதான், வதை ஒன்றுதான்.

தன் நாட்டில் உள்ள ஓர் இனக்குழுமம் நீதியைத் தேடி உழன்றுகொண்டிருக்கையில், அதற்கு ஒரு நிரந்தரத்தீர்வை வழங்காமல், எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நீதியைத் தேடத் தொடங்குவதெல்லாம் சுத்த அபத்தம். தமிழர்களுக்கு நீதியை வழங்கி விட்டு, தன்னையும் தன் நாட்டையும் சான்றாகக் காட்டி தன் விவாதப்புள்ளியை ரணில் எண்பித் திருப்பாராயின் மட்டுமே அது அவரது இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகளாக இருந்திருக்கும்...!

 

https://newuthayan.com/article/வலி_ஒன்று;_நீதி_இரண்டா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

3 weeks 5 days ago

Published By: RAJEEBAN   24 APR, 2024 | 11:01 AM

image
 

அமெரிக்காவின் பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கொலம்பிய பல்கலைகழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. நியுயோர்க் பல்கலைகழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

america_students_pro44.jpg

இதேவேளை அமெரிக்காவின் பல பல்கலைகழகங்கள் ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தினால் உருவாகியுள்ள பதற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொலம்பிய பல்கலைகழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பல்கலைகழகங்களில் கொலம்பிய பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நிலை உருவாகியுள்ளது.

நியுயோர்க் பல்கலைகழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பல்கலைகழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

america_students_pro1.jpg

முதலில் அவர்களை வெளியேற சொன்னோம்  எனினும் நிலைமை குழப்பகரமானதாக மாறிய பின்னர் பொலிஸாரை அழைத்தோம் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் கோசங்கள் மற்றும் யூத எதிர்ப்பு கோசங்களை கேட்க முடிந்ததாக  பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வளாகத்திற்குள் மாணவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழகம் அனுமதிப்பது கடும் கண்டணத்திற்குரியது என நியுயோர்க் பல்கலைகழக சட்டககல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

america_students_pro.jpg

ஆர்ப்பாட்டங்கள்காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைகழகங்கள் கண்டிக்கவேண்டும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இதேவேளை இஸ்ரேலிற்கு எதிரான விமர்சனங்கள் அனேகமாக யூதஎதிர்ப்பை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதுடன் ஹமாஸ் இன்னமும் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொலம்பிய பல்கலைகழகத்திலும் பதற்ற நிலை அதிகமாக காணப்படுகின்றது.

 

america_students_pro_3.jpg

https://www.virakesari.lk/article/181819

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

3 weeks 5 days ago
24 APR, 2024 | 02:27 PM ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்தார். உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/181837

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

3 weeks 5 days ago
24 APR, 2024 | 02:27 PM
image
 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா  ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என   உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட  திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்தார். 

உலகளாவிய  தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

f27d4287-b360-49e8-a4a0-c87c7bea2f9f.jpg

d66dd09d-f1b8-4672-abb5-02cc79ad4a95.jpg

https://www.virakesari.lk/article/181837

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

3 weeks 5 days ago
இதை தான் சுருக்கமாக குறிப்பிட்டேன். எமது தலைமைகளுக்கு போராடி எதிர்ப்பு அரசியல் செய்தும் பெறத் தெரிய வில்லை. ஆயுத போர் புரிந்தும் பெறத் தெரியவில்லை . இணைந்து அரசியல் செய்தும் பெற தெரிய வில்லை. கோட்பாட்டு ரீதியான (Theoretic) அரசியல், உணர்ச்சி ரீதியான வார்த்தை ஜால அரசியல் எழுதும் போதும் அதை வாசிக்கும் போதும் புளகாங்கித்தை ஏற்படுத்தும். ஆனால், உங்கள் கருத்துக்களில் தற்போதைய தாயக அரசியல் நிலை, ஜதார்த்தம் பற்றி எள்ளவும் கருத்து எடுப்பதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் எமது மக்களின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும். மக்களின் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், தொழில்துறை ஆகியவற்றின் உயர்வு மட்டுமே எமது வருங்கால இளம் சந்ததியினர் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவும். அதற்கான வழிமுறைகளை, தந்திரோபங்களை பற்றி சிந்திப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும். வெறும் உசுப்பேற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். தற்போதைய பலவீனமான தமிழர் அரசியலில் தம்மை தக்க வைத்து எமது இருப்பு காப்பாற்ற எப்படியான அரசியல் தந்திரோபாயங்கள் தமிழர் தரப்பில் கடைப்பிடிக்க படல் வேண்டும் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினராகி எமது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யலாம் என்று கூறி விட்டு அடுத்த பந்தியில் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்து வெளியில் வரவேண்டும் என்றும் கூறுகின்றீர்கள்.

போதைப்பொருட்களுடன் கைதான அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

3 weeks 5 days ago
Published By: DIGITAL DESK 3 24 APR, 2024 | 11:37 AM நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (23) கைதான குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை மேற்கண்டவாறு 05 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார். அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, கணக்களார் வசம் இருந்து 840 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 4 கிராமும் 540 மில்லி கிராம்கேரளா கஞ்சா மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன், தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக பணியில் இருப்பவர் எனவும்பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 39 வயது மதிக்கதக்க சந்தேக நபரான கணக்காளர் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/181825

போதைப்பொருட்களுடன் கைதான அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

3 weeks 5 days ago

Published By: DIGITAL DESK 3   24 APR, 2024 | 11:37 AM

image
 

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (23) கைதான குறித்த  சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை மேற்கண்டவாறு 05 நாட்கள் தடுப்பு காவல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில்  மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின்  வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய  துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது, கணக்களார் வசம் இருந்து 840 மில்லி கிராம்  ஐஸ் போதைப்பொருள், 4 கிராமும் 540 மில்லி கிராம்கேரளா கஞ்சா மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், குறித்த சந்தேக நபர்  கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன், தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக பணியில் இருப்பவர் எனவும்பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  39 வயது  மதிக்கதக்க சந்தேக நபரான கணக்காளர் மேலதிக விசாரணைகளை  பெரிய நீலாவணை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/181825

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 weeks 5 days ago
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியாவிற்குக் கூட்டாக அறிவித்த போராளி அமைப்புக்கள் ஈழத்தேசிய விடுதலை முன்னணி கூட்டாக வெளியிட்ட அறிக்கை - 29 ஆனி 1985 இலங்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்தை அறிவித்தல் நான்கு முன்னணி விடுதலைப் போராட்ட அமைப்புகளான, ஈழத்தேசிய விடுதலை முன்னணியினராகிய‌ நாம், இலங்கையரச‌ படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரதூரமான யுத்தநிறுத்த மீறல்களால் பூட்டானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்கிற தீர்மானத்திற்கு வந்திருக்கிறோம். எமது தாயகத்தில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்த நாம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துள்ள நிலையில், இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அட்டூழியங்களைப் புரிந்து வருகிறது. எமது மக்கள் தொடர்ந்து இராணுவ வன்முறைகளுக்கு முகம்கொடுத்து, அரச பயங்கரவாதமும், அச்சமும், பாதுகாப்பின்மையும் எமது பூர்வீகத் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையில் இலங்கையரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். எமது மக்களுக்கெதிரான இராணுவ அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலம், இலங்கையரசு இந்தியாவிற்குக் கொடுத்த வாக்குறுதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு ஏற்ப யுத்தநிறுத்தத்தினை சரியான முறையில் கடைப்பிடிப்போம் என்பதனை அப்பட்டமாக மீறியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கவும், பேச்சுக்களின்போது உதவியினை நல்கவும், பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும் எனும் உத்தரவாதத்தையும் தந்திருக்கும் இந்தியாவை நன்றியுணர்வுடன் பாராட்டும் அதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்துவிதமான ஆயுதச் செயற்பாடுகளையும் முடிவிற்குக் கொண்டுவந்து, இலங்கையரசாங்கம் தமிழருக்கு நிரந்தரமான அரசியல்த் தீர்வை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க நாம் விரும்புகிறோம். சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்தும் முகமாக நாம் சில நிபந்தனைகளையும் இத்தால் முன்வைக்கிறோம். பின்வரும் விடயங்களை இலங்கையரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், 1. இராணுவத்தை முகாம்களுக்குள் அழைத்துக்கொள்ளுதல் 2. வாகன நடமட்டாத்திற்கெதிரான தடையினை விலக்கிக் கொள்ளுதல். 3. அவசரகாலச் சட்டத்தினையும், ஊரடங்கு உத்தரவினையும் விலக்கிக் கொள்ளுதல். 4. கடற்கண்காணிப்பையும், தடைசெய்யப்பட்ட வலயங்களையும் விலக்கிக்கொள்ளுதல். 5. வடக்குக் கிழக்கில் ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல். 6. அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்தல். யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 - 12 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையரசாங்கம் இனப்பிரச்சினையினைத் தீர்க்க நிரந்தரமான தீர்வொன்றினை முன்வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். தீர்க்கமான தீர்வொன்றினை அடிப்படையாக வைத்தே பேச்சுக்களில் நாம் பங்குபற்ற முடியும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தோம். தமிழரின் பிரச்சினைக்கான கெளரவமான தீர்வொன்றைத் தருவதாக கூறிக் காலங்காலமாக தமிழரை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் ஏமாற்றிய வரலாற்றின் பின்னணியிலேயே நாம் அந்த நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களை தாமே கிழித்தெறிந்த சிங்கள அரசுகள் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது ஏமாற்றிய வரலாறே எம்முன்னால் இன்று இருக்கிறது. இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக எமது கோரிக்கைகளுக்கு ஆரம்பத்தில் இணங்கிய இலங்கையரசாங்கம், தற்போது எமது இணக்கப்பாடு இன்றியே ஒரு தலைப்பட்சமாக ஆவனி 18 ஆம் திகதியிலிருந்து யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தபோதிலும், நாம் அந்த யுத்தநிறுத்தத்தினை ஏற்றுக்கொண்டு, இலங்கையரசாங்கம் பேச்சுக்களுக்கான சாதகமான சூழ்நிலையினை ஏறப்டுத்தும் என்கிற நம்பிக்கையில், நாமும் வன்முறைத் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து வருகிறோம். யுத்த நிறுத்த திட்டத்திற்கேற்ப, நாம் அதனை நேர்த்தியாகக் கடைப்பிடித்து வருகையில், இலங்கையரசாங்கம் இடைவிடாது தனது இராணுவ அட்டூழியங்களை அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளிலும், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இராணுவத்தினர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு முரணாக, தமது முகாம்களை விட்டு வெளியே வந்து சோதனைகளிலும், தேடியழிக்கும் நடவடிக்கைகளிலும் இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இரவுவேளைகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரும், கடற்படையினரும், பொலீஸாரும் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதுடன், அப்பாவித் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களிலும், தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பல அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மன்னார், முருங்கன் மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுப் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாதவாறு இராணுவத்தினரால் எரியூட்டப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் அகதிகள் யுத்த நிறுத்ததையடுத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்ட தமது வீடுகளுக்குத் திரும்பியவேளை அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி மீண்டும் விரட்டியடித்திருக்கிறது இராணுவம். தமது காணிகளில் இருந்து அறுவடைகளை எடுத்துக்கொள்ளச் சென்ற விவசாயிகள் கூட இராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் தான் கடற்கண்காணிப்பையும், கடற் தடையினையும் விலக்கிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் எமது மீனவர்கள் கடற்படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் தொழிலுக்குச் செல்லவே அவர்கள் அஞ்சுகிறார்கள். அவசரகாலச் சட்ட விதிகளையும், மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான‌ தடையினையும் விலக்கிக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளபொழுதிலும், இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடைபோட்டு வருகிறார்கள். மேலும், ஊரடங்குச் சட்டம் தற்போதும் இராணுவத்தினரால் அமுல்ப்படுத்தப்பட்டே வருகிறது. அத்துடன், இலங்கையின் பல்வேறு சிறைகளிலும், இராணுவ முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 2,000 இற்கும் அதிகமான தமிழ் அரசியல்க் கைதிகளை அரசாங்கம் இதுவரை விடுதலை செய்யவில்லை. மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சரினால் விடுக்கப்பட்டிருக்கும் மூர்க்கத்தனமானதும், போர்க்குணம் மிக்கதுமான அறிக்கையில், சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பிரகடணம் செய்திருக்கிறார். இதனூடாக, சுமூகமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான யுத்த நிறுத்தத்தில் இதயசுத்தியுடன் ஈடுபட விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் நிரூபித்திருக்கிறது. எமது வேண்டுகோளான தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் ஆலோசனைகளை பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக முன்வைய்யுங்கள் என்பதனை இலங்கையரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது. அதற்குப் பதிலாக, பயனற்ற கருத்துப் பரிமாற்றத்திற்குள்ளும், பிரச்சினைகளை முன்கொண்டுவருவோம் என்கிற போர்வையில் முடிவில்லாத‌ வட்ட மேசை கூட்டங்களுக்குள்ளும் எம்மை இழுத்துவிட இலங்கையரசு முயன்று வருகிறது. அடுத்ததாக‌, உத்தேசப் பேச்சுவார்த்தைகளில், "ஆயுததாரிகளுக்கான" வழிகாட்டியாகவும், தமிழ் மக்களின் அரசியல்த் தலைமையாகவும் தம்மை தாமே வரிந்துகொண்டிருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டிற்கெதிரான எமது கருத்தினையும் இத்தால் பதிவுசெய்கிறோம். ஒரு அரசியல் அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பகத்தன்மையினையும், ஆதரவையும் இழந்திருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகக் கலந்துகொள்வதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். யுத்த நிறுத்தத்தினை அமுல்ப்படுத்துகிறோம் என்று கூறிய பின்னரும் எம்மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அட்டூழியங்கள் குறித்து வாய்மூடி மெளனமாக இருக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், ஈழத் தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் தற்போதைய செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகளின் போது இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்துக் கடுமையான சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான கெளரவமானதும், கண்ணியமானதுமான நிரந்தர அரசியல்த் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எமது முன்னைய அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தோம், அதனையே இப்போதும் நாம் கூறுகிறோம். இந்தியா, இலங்கையரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பேச்சுவார்த்தைகளுக்கான சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்ததை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அரசியல்க் குழு ‍- தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ‌ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலை இயக்கம் புரட்சிகர நிர்வாகக் குழு - ஈழப் புரட்சிகர முன்னணி

வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

3 weeks 5 days ago
24 APR, 2024 | 01:54 PM வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார். தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 4 வருடங்களுக்கு நான் இன மத மொழிக்கு அப்பால் சென்று அனைவரது சுகாதார மேம்பாட்டுக்கும் என்னால் இயன்ற சேவையை வழங்குவேன் என்றார். https://www.virakesari.lk/article/181840

வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

3 weeks 5 days ago
24 APR, 2024 | 01:54 PM
image
 

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார்.

தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 4 வருடங்களுக்கு நான் இன மத மொழிக்கு அப்பால் சென்று அனைவரது சுகாதார மேம்பாட்டுக்கும் என்னால் இயன்ற சேவையை வழங்குவேன் என்றார்.

1713941314802.jpg

1713941331744.jpg

1713941335212.jpg

1713941322788.jpg

1713941333599.jpg

1713941344582.jpg

1713941339738.jpg

https://www.virakesari.lk/article/181840

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

3 weeks 5 days ago
பொய்யோ, மெய்யோ, பழசோ, புதிசோ…. யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும். பழைய காணொளி, புதிய செய்தி என மாறி, மாறி போட்டு அடித்து வாசகர்களை குழப்பி விட வேண்டும். அதுதான் சிறிதரன் அரசியலுக்கு உவப்பானது. அப்போதுதான் அவரின் தகிடுதத்தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டர்கள். அதற்குமாறா யாரும் போய் உண்மையை கண்டு வந்து எழுதினால் - அவர்கள் மீது வடை, பாயாசம், வடை சுட்ட சட்டி ஈறாக எறியப்படும். இவ்வண், #சிறிதரன் ஆமி - இலண்டன் கிளை🤣

கொஞ்சம் ரசிக்க

3 weeks 5 days ago
இவருக்கு ........ சித்தப்பா = அமிதாப். பெரியண்ணன் = ரஜினி. சின்னண்ணன் = மம்முட்டி. தம்பி = கமல். இவருக்கு வயது எத்தனை......... யார் இந்தப் பிரபலம்........! 😂 சரியாகக் கணித்தவர்கள் நிலைக்கண்ணாடியில் பார்த்து ஒரு முத்தம் குடுத்துப் பெற்றுக் கொள்ளவும்.....! 😍

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

3 weeks 5 days ago
இப்பதான் சுட்ட வடை என்று காகம் கொத்த தொடங்க கீழே நின்ற நரி சொல்லியதாம் அது பழைய ஊசி போன வடை என்று சொல்ல சீ என்று காக்கா பாட்டு பாடாமல் காலால் தட்டி விட @goshan_che அந்த புதிய வடை யை தூக்கி கொண்டு ஓடினாராம் ஆனால் வடையை சுட்ட கிழட்டு பெருமாளுக்கு தெரியும் எது புதிது எது பழையது என்று . யூடுப் காணொளி பழையது செய்தி புதிது 😀

அதிசயக்குதிரை

3 weeks 5 days ago
Kollywood 24x7 Spdnreoost2f22tc8f24u5245g04vh211i9tl94i1c6a1 52luli r:t,42l · முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும், ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க... முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர், வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள். முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள், வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள். முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம், வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும். முத்துப்பாண்டி வேலுவால தனலட்சுமி க்கு ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப தன்மானத்தை விட்டு கழுத்துல துண்டை போட்டு தரதர ன்னு இழுத்துட்டு போறவரைக்கும் சரி ன்னுபொறுத்துக்கிட்டான். வேலு தனக்கு முத்துப்பாண்டி அடியாட்களால ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப தனலட்சுமி கழுத்தில கத்தி வைக்கவும் தயங்கல.. இப்படி உண்மையான காதல் இருக்கற முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி, ரெண்டாவது அண்ணனுக்கு ஒரு ஹாஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்.. முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம். ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை, வேலை வெட்டிக்குப் போகாத வேலுக்களைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள். முத்துப்பாண்டிகளின் உண்மை காதல் பல தனலட்சுமிகளுக்கு புரிவதில்லை.. #Ghilli #Vijay #Trisha........! 😂

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

3 weeks 5 days ago
வித்தவனும், வாங்கியவனும் மறந்தாலும், மன்னித்தாலும் - யாழ் களம் மறவாது🤣.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

3 weeks 5 days ago
xrp தண்டக்கட்டணத்தின் காரணமாக sec உடன் பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது. sec தான் இதை ஆரம்பித்தது. தலைப்பு செய்தி மட்டும் கீழே பதிவிடப்பட்டு உள்ளது. விபரங்களுக்கு இணைப்புக்குள் சென்று பார்க்கவும். https://en.bitcoinsistemi.com/there-is-no-calm-between-ripple-and-sec-there-has-been-a-new-development-in-the-xrp-case-here-are-the-details/ There is no calm between Ripple and SEC: There has been a new development in the XRP case! Here are the Details… Ripple objected to the SEC's $2 billion penalty request in a petition to the court. ஒன்றும் (நிதி) அறிவுரை அல்ல.

போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்

3 weeks 5 days ago
சிறீலங்கா இராணுவம் கொன்றதாக அறிவித்த புலிகளின் கணக்கை பார்த்தால் இலங்கையில் இவ்வளவு தமிழர்கள் இருந்தார்களா என தோன்றும்.