Aggregator

நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்

3 weeks 2 days ago
பொதுவாக சமூக வலைத்தளங்களின் போக்கு என்பது பின்வருமாறு உள்ளது. பரந்துபட்ட அறிவுத்தேடல் உள்ளவர்களை அதை நோக்கி உந்தித் தள்ளும் ஆரம்ப புள்ளியாக செயற்பட்டு அவர்களுக்கு சேவை செய்யும் கருவியாக செயற்படும் அதேவேளை, பொது அறிவுக்கு தன்னைமட்டுமே முழுமையாக நம்பியவர்களை அவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவையும் மங்க வைத்து அடி முட்டாளாக்கிவிடும்.

நியூயோர்க்கில் பூமி அதிர்வு.

3 weeks 2 days ago
ஆமாம் நானும் செய்தியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். நியூயார்க் மாநிலத்தில் இருந்து 1200 மைல்கள் தொலைவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் நான் வசிக்கிறேன்🙂

நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்

3 weeks 3 days ago
நானும் இந்த அர்த்தத்தை நம்பிக்கொண்டிருந்தேன். ஒர் இந்திய பாண்டிச்சேரி கத்தோலிக்க பாதிரியார் ஒரு பிரசங்கத்தில் இப்படி கூறினார்.

மனம் சூடான ஒன்றை விரும்புகிறது

3 weeks 3 days ago
என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்

மனம் சூடான ஒன்றை விரும்புகிறது

3 weeks 3 days ago
என் வீட்டின் சாளரங்களை
விருப்பப்பட்ட நேரம்
நான் திறக்க விரும்புகிறேன்
பனி மூடிய வீதிகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்
எப்போதாவது ஒரு
வசந்த நாளை நான்
எதிர்பார்த்திருக்கிறேன்
குளிர் சலித்துப் போய்விட்டது
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது
 

"காதல் அழிவதில்லை"

3 weeks 3 days ago
"காதல் அழிவதில்லை" யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில் சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், அங்கு தமக்கேயுரிய சமையல் மசாலாக்களின் வாசனை காற்றில் மிதக்க, பாடசாலை மாணவ மாணவிகளின் துடிப்பான வாழ்க்கையின் ஒலிகளுக்கு மத்தியில், யாழோன் என்ற உயர் வகுப்பு மாணவன் வெளிநாடு ஒன்றில் உயர் கல்வி கற்க கனவு கண்டான். அவனது விருப்பம், ஏக்கம் எல்லாம் அவனை சொந்த ஊரின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றது, யாழோனின் கனவுகள் நியமாகி, தனது சொந்த ஊரின் அமைதியான அரவணைப்பிலிருந்து லண்டனின் பரபரப்பான பெருநகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அது மட்டும் அல்ல, அங்கே தனக்கு காதல் மலர்ந்து, கசப்பான நினைவுகளை அது விட்டுவிட்டு வாடிப்போகும் என்றும் அவனுக்கு அப்பொழுது தெரியாது. "காதல் அழிவதில்லை" என்பது தான் அவனின் நினைவாக, கருத்தாக அன்று இருந்தது. யாழோனின் கல்வித் திறமையும் இடைவிடாத உறுதியும் அவனுக்கு லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் புலமைப் பரிசு வழங்கியது. பரபரப்பான பெருநகரமும் அதன் வான் உயரும் கட்டிடங்களும் புதிய வாழ்வின் தொடக்கங்களின் வாக்குறுதிகளும் அவனை வரவேற்றது. லண்டன், கலை, இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து கொண்டு இருக்கிற இங்கிலாந்து நாட்டின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தலைநகரம் ஆகும். பலப்பல இனம், பண்பாடு, மொழி ஆகியன பேசும் மக்கள் சுமார் ஒன்றரைக் கோடி பேர் லண்டனில் வாழ்கிறார்கள். அதில் 125000 க்கும் - 150000 க்கும் மேலான தமிழர்கள் இங்கிலாந்துவில் வாழ்கிறார்கள், அதில் கூடிய தொகையினர் லண்டனில் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, லண்டனை சுற்றி பல மலைகள் சூழ்ந்துள்ளன. லண்டன் நகரத்தை அணைத்தபடியே தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தேம்ஸ் நதி ஓடுகிறது. போக்குவரத்தை மிக இலகுவாகும் லண்டனின் பாதாள ரெயில் ஐரோப்பாவில் மிகவும் பழமையானதும் நீளமானதும் கூட. ஆகவே அவனுக்கு அங்கு படிப்பதில் மட்டும் அல்ல, தமிழ் பண்பாடும் அங்கு நிறைந்து இருந்தது. ஒருமுறை பல்கலைக்கழகத்தின் மாணவ கொண்டாட்டம் ஒன்றில் யாழோனின் பாதை, அமோதினி என்ற இளம் மலையாளப் பெண்ணின் பாதையுடன் குறுக்கிட்டது. அவளும் தொலைதூர தேசத்தில் இருந்து வந்தவள்தான்! கண்ணகி கோவலன் மாதவி வாழ்ந்த, பண்டைய தமிழ் பேசும் மன்னன் சேரனின் பூமி, இன்று அது மலையாளம் பேசும் பூமியாக மாறிவிட்டது. என்றாலும் இன்னும் இலங்கைத் தமிழரின் தோற்றமும் பண்பாடும் அங்கு ஓரளவு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்துப்பூச்சி (moth) யைப் போல யாழோனை இழுத்துச் செல்லும் ஒரு புதிரான வசீகரத்தைக் அவள் கொண்டிருந்தாள். யாழோன், அளவான உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, பொது நிறம், நெற்றியை முத்தமிடும் முடி, கர்ணனின் வில் போல், வளைத்து இணைந்த புருவங்கள், காண்போர் அனைவரையும், குறிப்பாக இளம் பெண்களை கண்டிப்பாக ஈர்க்கும் அளவான கூர்மையான விழிகள், செதுக்கிய மூக்கு, கொஞ்சம் இறுக்கமான, கொஞ்சம் மென்மையான உதடு, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படையான நேர்மையான குணம் கொண்டவன். அதனாலோ என்னவோ அமோதினியும் தன் விழிகளை அவன் மேல் இருந்து எடுக்கவே இல்லை. மகிழ்ச்சியான பெண் என்ற பெயரைக் கொண்ட அமோதினியைக் கண்டதும் அவனுக்கு அவள் மேல் மையல் உண்டாகிவிட்டது. அவன் ஆசை கரை கடந்து போய் அவளைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள வேண்டு மென்று எண்ணம் கொண்டான். இளம் பெண்ணான அவளும் அவனைக் கண்டவுடன் அவன் மீது மோகம் கொண்டு விட்டாள். அவளை அவன் கூர்ந்து கவனித்தான். அவளும் அவனை ஒரு புரியாத உணர்ச்சியுடன் நோக்கினாள். அப்படி இருவரின் பார்வைகளும் சந்தித்த போது அவர்களின் உயிரும் உடலும் ஒன்றாய்க் கலந்தது போல் உணர்ந்தார்கள். அவள் உள்ளம் பூரித்தாள், மகிழ்ச்சி கொண்டாள். பேரலை போல் வந்த மகிழ்ச்சியில் மூழ்கி வெட்கத்தை நீக்கினாள், இவ்வுலக நினைவுகளே இல்லாமல், எல்லையில்லா இன்பக் கனவினிலே உறைந்து விட்டாள். யாழோனின் திண் தோளை ஆசையோடு கட்டித் தழுவிக் கொண்டு, அவன் இதழில் தேன்பருக சிந்தை கொண்டாள். யாழோனோ தேனில் விழுந்த ஈயினைப் போல், விந்தைமிகு காந்தத்தால் இழுக்கப்படும் இரும்பினைப் போல், ஆசையோடு அவளை ஆறத் தழுவி முத்தமிட முயன்றான், எனினும் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்றே ஒருவரை ஒருவராவர் தங்கள் கண்ணுக்குள் சிறைவைத்தனர். அவர்களின் சந்திப்புகள் அதன்பின் தொடர் ஆரம்பித்து, நெரிசலான விரிவுரை மண்டபங்களில் கண்ணியமான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டது. அவளது சிரிப்பு காற்றில் நடனமாடும் ஒரு மெல்லிசையாக இருந்தது, அவளுடைய கண்கள் ரகசியங்களை புதைத்து வைத்திருந்தன. அவர்களின் ஆரம்ப சந்திப்புகள் வெட்கப் புன்னகை மற்றும் தயக்கமான வார்த்தைகளால் ஆரம்பித்தாலும் ஒவ்வொரு நாளும், அவர்களின் தொடர்பு ஆழமாகி ஆழமாகி, வெறும் அறிமுகத்தின் எல்லைகளைத் தாண்டியது. சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் என்றால் எந்தக் குறையும் இல்லாத படி, செய்கின்ற அந்த வடிவத்தில், சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, பார்ப்போரின் மனம் கொள்ளும் புன்னகையை நிலையாக வடித்துப் போகமுடியும். ஆனால் இங்கோ எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று தன் முன் நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின், அமோதினியின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று அவன் மனதுக்குள் ஏங்கிக் கொண்டான். “புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்," அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை உடையவள். பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். என் உள்ளத்தைக் கட்டி வைத்திருப்பவள். என் நெஞ்சு அவளைக் கண்டு அல்லாடுகிறது என்று உள்ளத்தில் புலம்பினான். "நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..." அமோதினி, நீயும் தவறிலை. உன்னைத் [லண்டன் பல்கலைக்கழக] தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட பெற்றோரும் [சுற்றத்தாரும்] தவறுடையவரில்லை. [அந்த காலத்தில்,] மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் பல்கலைக்கழக அதிகாரிகளே [இந் நாட்டு மன்னனே] தவறுடையவன் போல அவன் உணர்ந்தான். யாழோனும் அமோதினியும் பல்கலைக்கழகத் பூந் தோட்டத்தின் ஒதுக்குப்புறமான மூலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து, மறையும் சூரியனின் மென்மையான ஒளியில் குளித்தனர். அமோதினியின் கை யாழோனின் கையை வருடியது, அவளது அந்த பட்டும்படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வால் அவன் எல்லையற்ற ஒரு உணர்வை அனுபவித்தான். அவர்கள் இருவரும் நெருக்கமாக ஒருவர் மேல் ஒருவர் இறுக்கமாக சாய்ந்தனர், அவர்களின் உதடுகள் ஒரு மென்மையான முத்தத்தில் முதல் முதல் சந்தித்தன, அது ஒருவருக் கொருவர் புரியாத மொழியில் பேசியது. அவர்கள் இருவரும் தங்கள் உணர்ச்சியின் ஆழத்தில் தங்களை இழந்தார்கள். யாழோனுக்குத் தெரியாமல், அமோதினி ஆங்கில பையன் ஒருவனுடனும் சில உறவுகளை வைக்க தொடங்கினாள். அவளைப் பொறுத்தவரையில் வாழ்வை எப்படி எப்படி விதம் விதமாக அனுபவிக்க வேண்டுமோ அப்படி அப்படி அனுபவித்து, பின் ஒரு நேரம் நல்ல வசதியான, தன் மனதுக்கு ஏற்ற பையன் கிடைக்கும் பொழுது அவனை நிரந்தரமாக தனக்கு ஏற்றவனாக மாற்றிட வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வமாக இருந்தாள். அதில் முதல் அவளின் சந்திப்புத் தான் யாழோன். ஆனால் யாழோன், முதல் காதலே இறுதிக்காதலும் என்றும், 'காதல் அழிவதில்லை' என்பதிலும் முழு நம்பிக்கை உள்ளவன். அவன் அமோதினியை முழுதாக நம்பினான். ஏன் அமோதினி கூட 'காதல் அழிவதில்லை' என்று தான் சொல்லுவாள், ஏன் எனறால், தன் உணர்ச்சிகளுக்காக மட்டும் வெவ்வேறு ஆண்களுடன் தற்காலிகமாக பழகுகிறாள், பொழுது போக்குகிறாள், அவ்வளவுதான்! காதலுக்காக அல்ல என்பதுதான் அவளின் கொள்கை! காலம் செல்ல, அவளின் நடத்தையில் கொஞ்சம் கொஞ்சமாக யாழோனுக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது. ஒருமுறை யாழோன் அவர்களுக்குப் பிடித்தமான ஓட்டலில் அமோதினிக்கு எதிரே அமர்ந்திருந்தான், என்றாலும் ஒரு அமைதியின்மை அங்கு நீடித்தது. அவர்களுக் கிடையில் இப்ப வளர்ந்து வரும் இடைவெளியை, அதன் தூரத்தைப் பற்றி, அவனது குரல் கவலையுடன் அமோதினியிடம் கேட்டது. ஆனால் அமோதினி அதை தந்திரமாக சமாளித்து, அவனின் மடியில் தலை வைத்து படுத்தபடி, அவனுக்கு எம் காதல் அழியாது என்று, ஒரு இனிய முத்தத்துடன் உறுதியளித்தாள். அவளது வார்த்தைகள் என்றென்றும் பொய்யான வாக்குறுதிகள் என்பது அவனுக்கு அந்தநேரம் விளங்கவில்லை. "நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல அவள் பெண்மை திரண்டு நிற்கிறதே! திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா? என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!" அவன் வாய் அவளின் உறுதியை நம்பி முணுமுணுத்தது! நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறிய போது, யாழோன் மற்றும் அமோதினியின் உணர்ச்சி பூர்வமான காதல் வசந்த காலத்தின் வெம்மையில் ஒரு மென்மையான மலராக மலர்ந்தது. அவர்களின் காதல் நெரிசலான விரிவுரை அரங்குகளில் திருடப்பட்ட பார்வைகளிலும், நிலவொளி வானத்தின் அடியில் கிசுகிசுக்கப்பட்ட உரையாடல்களிலும் வெளிப்பட்டது. அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவழித்த போது, யாழோன் அமோதினியிடம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். அவளது சிரிப்பு அவன் காதுகளுக்கு இசையாக இருந்தது, அவளது புன்னகை லண்டனின் குளிரை போக்கும் அரவணைப்பாக இருந்தது. ஆனால் அத்தனையும் பொய் என்பதை அவன் மனது நம்பவில்லை. ஒரு நாள், யாழோனும் அமோதினியும் இருக்கமாகப் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு, தங்களையே மறந்து ஒரு பூங்காவின் ஓரத்தில் அமைந்து இருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தார்கள், அவர்களுக்கு தேவைப்பட்டது தனிமை, எங்கே போகிறோம் என்று தெரியவில்லை, அந்தப் பாதையில் ஆள் நடமாற்றம் குறைவு, அந்த மாலை நேரத்தில் அவர்களுக்கு அது தான் தேவைப்பட்டது. அமோதினி எப்போதும் பார்க்க அடக்கமான பொண்ணு, கேரளாவில் பாடசாலை காலத்தில் அடர்த்தியான முடியை இரட்டை பிண்ணல் பிண்ணி ரிபன் கட்டி குனிந்த தலை நிமிராமல் பாடசாலை போனவள் தான், ஆனால் இப்ப குடும்பத்தில் இருந்து தொலை தூரத்தில், எந்த பயமும் மனதில் இல்லாமல், எவனோ ஒருவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தனிமையில் நடக்கும் அளவிற்கு தைரியத்தை கொடுத்துள்ளது காதல், இல்லை, இல்லை, இளமை பாலின்ப விருப்பம், பருவ ஆசை!, ஒரே பல்கலைக்கழகத்தில் இருவரும் கற்றல் நெறியை பயின்றாலும், பார்த்து, கதைத்து சிரித்ததால் அதை காதல் என்று யாழோனும் முழுமையாக நம்ப, இருவரும் இவ்வளவு தூரம் தனிமையைத் தேடி வந்திருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவளின் நிலைப்பாடும் அவனின் நிலைப்பாடும் முரண்பாடானது என்பது அவனுக்குத் தெரியாது. நம்முள் இருக்கும் அழியா தன்மை தான் ஆத்மா. காற்று அதை தீண்டாது; தீ அதை சுடாது. இந்த உடல் ஆனது வெறும் சட்டையை போன்றது. நாம் சட்டையை மாற்றுவது போல் ஆன்மாவும் உடலை மாற்றுகிறது. இறுதியில் அது தக்க தருணம் கிடைக்கும் பொழுது அழிவில்லாத ஒரு முத்தியை அடைகிறது, அது போல காதலை சோதித்து சோதித்து, தனக்கு ஏற்ற, ஒத்த காதல் கிடைக்கும் பொழுது அதை அழியவிடாமல் பற்றிக்கொள்வது தான் அவளின் உள்நோக்கம், அவளைப் பொறுத்தவரையில் காதல் ஒரு இனக்கவர்ச்சி, வருக்காலத்தை ஒன்றாக வெற்றிகரமாக அமைக்க ஒன்று சேர வழிவகுக்கும் ஒன்று, எனவே சோதித்து, வயதுக்கு ஏற்ற ஆசையை அனுபவித்து, தெரிந்து எடுப்பதில் தவறு என்ன ? ஆனால் அவன், காதல் என்று ஒன்று முதலில் வந்தவுடனேயே, அது அழிவதில்லை என்று நம்புகிறவன். காதல் புனிதமானது, ஒரு நாளும் நாங்கள் பிரிய மாட்டோம், கடைசி மட்டும் சேர்ந்து வாழ்வோம், உங்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியுமா? என்று மற்றவர்களை திருப்பி கேட்பவன்! பிறந்த நாள் பரிசு, காதலர்தின பரிசு என்று இருவரும் பரிமாறிக் கொண்டார்கள், கையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்து உதட்டளவில் வந்து நிற்கின்றார்கள், அத்துமீறல் தொடுகைகளும் இருக்கவே செய்தது, எதுவென்ன வென்றாலும் என்றாவது தன் எதிர்காலத்தைப் பற்றி அவள் அவனுடன் கதைத்தது உண்டா? இருக்கவே இருக்காது, அன்று, அந்த தருணம் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மட்டுமே யோசிப்பாள் அவள், அது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் அமோதினி மெல்ல மெல்ல யாழோனிடம் தந்திரமாக விலகத் தொடங்கினாள். அவள் யாழோனை சந்திக்காததற்கு சாக்குப்போக்கு சொன்னாள், அவளது பொய்கள் ஒவ்வொரு நாளிலும் மேலும் விரிவடைந்தன. யாழோனின் சந்தேகங்களும் அதிகரித்தன, ஆனால் அவர்களின் காதல் அனைத்தையும் வெல்லும் என்ற நம்பிக்கையில் அவன் இன்னும் அவளுடன் ஒட்டிக் கொண்டே இருந்தான், அவனின் பலவீனமான காதல் இதயத்தில் தாக்கத் தயாராக இருக்கும் அமோதினி என்ற குத்துவிளக்கை அறியும் பக்குவத்தில் அவன் இருக்கவில்லை. அவன் இன்னும் "காதல் அழிவதில்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறான்! என்றாலும் அவன் லண்டன் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவனது இதயம் சோகத்தால் கனத்தது, யாழோன் இனி ஒருபோதும் அன்பின் கொடூரமான அரவணைப்பிற்கு சிக்க மாட்டேன் என்று தனக்குத்தானே சபதம் செய்தான். பேராசை மற்றும் தன்னல லட்சியத்தால் நுகரப்படும் இந்த நவீன உலகில், காதல் என்பதும் ஒரு வியாபாரம் தான் என்ற கசப்பான உண்மையை அவன் கற்றுக் கொண்டான்! அதனால், கனத்த இதயத்துடனும், சோர்வுற்ற உள்ளத்துடனும், யாழோன் லண்டன் தெருக்களில் இருந்து பிரியா விடை பெற்றான், ஒரு காலத்தில் பிரகாசமாக எரிந்த காதலின் சிதைந்த துண்டுகளை தன்னுடன் சுமந்தான். ஏனென்றால், அவர்களது உடைந்த காதலின் சாம்பலில், காதல் மங்கினாலும், அதன் உடனடி அரவணைப்பின் நினைவுகள் நெஞ்சில் அழியாமல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால்! காலப்போக்கில் அமோதினி மீதான அவனது காதல் வெளி உலகத்துக்கு மங்கிவிட்டாலும், அவர்களின் பகிர்ந்த காதல் பயணத்திலிருந்து அவன் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள் என்றென்றும் அவனது இதயத்தில் அழியாமல் பதிந்து இருந்தது! ஆமாம் அவனது நினைவுகளின் திரையில், சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு மத்தியில், அமோதினி மேல் அவன் கொண்ட காதல் மற்றும் அனுபவம் அதன் அனைத்து சிக்கலான தன்மையிலும், உண்மையில் ஒருபோதும் இறக்காமல், அவனுக்கு, அவனின் வருங்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக இருந்து, மீண்டும் ஒரு பொய்யான சிக்கலான நிலைக்குள் மாட்டுப்படாமல் இருக்க, சரியான வழியைக் காட்டிக்கொண்டு இருந்தது! காதல் நம் சமூகத்திற்குப் புதிதல்ல. அது சங்க இலக்கியங்கள் முதல் தற்போதைய நவீன இலக்கியங்கள் வரை காதலைப் பற்றி எழுதாத இலக்கியவாதிகளே இல்லை. ஆனால் சமூகம் அதை எப்படி ஏற்று நடந்து கொள்கிறது என்பதில் தான் சிக்கல்கள் உருவாகிறது. காதலைப் புரிந்துகொள்வோம்! சிறந்து வாழ்வோம்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

"காதல் அழிவதில்லை"

3 weeks 3 days ago

"காதல் அழிவதில்லை"

யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில்  சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. 


அப்படியான யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், அங்கு தமக்கேயுரிய சமையல் மசாலாக்களின் வாசனை காற்றில் மிதக்க, பாடசாலை மாணவ மாணவிகளின் துடிப்பான வாழ்க்கையின் ஒலிகளுக்கு மத்தியில், யாழோன் என்ற உயர் வகுப்பு மாணவன் வெளிநாடு ஒன்றில் உயர் கல்வி கற்க கனவு கண்டான். அவனது  விருப்பம், ஏக்கம் எல்லாம் அவனை சொந்த ஊரின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றது, யாழோனின் கனவுகள் நியமாகி, தனது சொந்த ஊரின் அமைதியான அரவணைப்பிலிருந்து லண்டனின் பரபரப்பான பெருநகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அது மட்டும் அல்ல, அங்கே தனக்கு காதல் மலர்ந்து, கசப்பான நினைவுகளை அது விட்டுவிட்டு வாடிப்போகும் என்றும் அவனுக்கு அப்பொழுது தெரியாது. "காதல் அழிவதில்லை" என்பது தான் அவனின் நினைவாக, கருத்தாக அன்று இருந்தது. 


யாழோனின் கல்வித் திறமையும் இடைவிடாத உறுதியும் அவனுக்கு  லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் புலமைப் பரிசு வழங்கியது. பரபரப்பான பெருநகரமும் அதன் வான் உயரும் கட்டிடங்களும் புதிய வாழ்வின் தொடக்கங்களின் வாக்குறுதிகளும் அவனை வரவேற்றது. லண்டன், கலை, இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து கொண்டு இருக்கிற இங்கிலாந்து நாட்டின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தலைநகரம் ஆகும். பலப்பல இனம், பண்பாடு, மொழி ஆகியன பேசும் மக்கள் சுமார் ஒன்றரைக் கோடி பேர் லண்டனில் வாழ்கிறார்கள். அதில் 125000 க்கும் - 150000 க்கும் மேலான தமிழர்கள் இங்கிலாந்துவில் வாழ்கிறார்கள், அதில் கூடிய தொகையினர் லண்டனில் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, லண்டனை சுற்றி பல மலைகள் சூழ்ந்துள்ளன. லண்டன் நகரத்தை அணைத்தபடியே தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தேம்ஸ் நதி ஓடுகிறது. போக்குவரத்தை மிக இலகுவாகும் லண்டனின் பாதாள ரெயில் ஐரோப்பாவில் மிகவும் பழமையானதும் நீளமானதும் கூட. ஆகவே அவனுக்கு அங்கு படிப்பதில் மட்டும் அல்ல, தமிழ் பண்பாடும் அங்கு நிறைந்து இருந்தது. 


ஒருமுறை பல்கலைக்கழகத்தின் மாணவ கொண்டாட்டம் ஒன்றில் யாழோனின் பாதை, அமோதினி என்ற இளம் மலையாளப் பெண்ணின் பாதையுடன் குறுக்கிட்டது. அவளும் தொலைதூர தேசத்தில் இருந்து வந்தவள்தான்! கண்ணகி கோவலன் மாதவி வாழ்ந்த, பண்டைய தமிழ் பேசும் மன்னன் சேரனின் பூமி, இன்று அது மலையாளம் பேசும் பூமியாக மாறிவிட்டது. என்றாலும் இன்னும் இலங்கைத் தமிழரின் தோற்றமும் பண்பாடும் அங்கு ஓரளவு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்துப்பூச்சி (moth) யைப் போல யாழோனை இழுத்துச் செல்லும் ஒரு புதிரான வசீகரத்தைக் அவள் கொண்டிருந்தாள். 


யாழோன், அளவான உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, பொது நிறம், நெற்றியை முத்தமிடும் முடி, கர்ணனின் வில் போல், வளைத்து இணைந்த புருவங்கள், காண்போர் அனைவரையும், குறிப்பாக இளம் பெண்களை கண்டிப்பாக ஈர்க்கும் அளவான கூர்மையான விழிகள், செதுக்கிய மூக்கு, கொஞ்சம் இறுக்கமான, கொஞ்சம் மென்மையான உதடு, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படையான நேர்மையான குணம் கொண்டவன். அதனாலோ என்னவோ அமோதினியும் தன் விழிகளை அவன் மேல் இருந்து எடுக்கவே இல்லை. 


மகிழ்ச்சியான பெண் என்ற பெயரைக் கொண்ட அமோதினியைக்  கண்டதும் அவனுக்கு அவள் மேல் மையல் உண்டாகிவிட்டது. அவன் ஆசை கரை கடந்து போய் அவளைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள வேண்டு மென்று எண்ணம் கொண்டான். இளம் பெண்ணான அவளும் அவனைக் கண்டவுடன் அவன் மீது மோகம் கொண்டு விட்டாள். அவளை அவன் கூர்ந்து கவனித்தான். அவளும் அவனை ஒரு புரியாத உணர்ச்சியுடன்  நோக்கினாள். அப்படி இருவரின் பார்வைகளும் சந்தித்த போது அவர்களின் உயிரும் உடலும் ஒன்றாய்க் கலந்தது போல் உணர்ந்தார்கள்.


அவள் உள்ளம் பூரித்தாள், மகிழ்ச்சி கொண்டாள். பேரலை போல் வந்த மகிழ்ச்சியில் மூழ்கி வெட்கத்தை நீக்கினாள், இவ்வுலக நினைவுகளே இல்லாமல், எல்லையில்லா இன்பக் கனவினிலே உறைந்து விட்டாள். யாழோனின் திண் தோளை ஆசையோடு கட்டித் தழுவிக் கொண்டு, அவன் இதழில் தேன்பருக சிந்தை கொண்டாள். யாழோனோ தேனில் விழுந்த ஈயினைப் போல், விந்தைமிகு காந்தத்தால் இழுக்கப்படும் இரும்பினைப் போல், ஆசையோடு அவளை ஆறத் தழுவி முத்தமிட முயன்றான், எனினும் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்றே ஒருவரை ஒருவராவர் தங்கள் கண்ணுக்குள் சிறைவைத்தனர்.


அவர்களின் சந்திப்புகள் அதன்பின் தொடர் ஆரம்பித்து, நெரிசலான விரிவுரை மண்டபங்களில் கண்ணியமான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டது. அவளது சிரிப்பு காற்றில் நடனமாடும் ஒரு மெல்லிசையாக இருந்தது, அவளுடைய கண்கள் ரகசியங்களை புதைத்து வைத்திருந்தன. அவர்களின் ஆரம்ப சந்திப்புகள் வெட்கப் புன்னகை மற்றும் தயக்கமான வார்த்தைகளால் ஆரம்பித்தாலும் ஒவ்வொரு நாளும், அவர்களின் தொடர்பு ஆழமாகி ஆழமாகி, வெறும் அறிமுகத்தின் எல்லைகளைத் தாண்டியது.


சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் என்றால் எந்தக் குறையும் இல்லாத படி, செய்கின்ற அந்த வடிவத்தில், சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, பார்ப்போரின் மனம் கொள்ளும் புன்னகையை நிலையாக வடித்துப் போகமுடியும். ஆனால் இங்கோ எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று தன் முன் நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின், அமோதினியின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று அவன் மனதுக்குள் ஏங்கிக் கொண்டான். 


“புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,"


அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை உடையவள். பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். என் உள்ளத்தைக் கட்டி வைத்திருப்பவள். என் நெஞ்சு அவளைக் கண்டு அல்லாடுகிறது என்று உள்ளத்தில் புலம்பினான். 


"நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..."


அமோதினி, நீயும் தவறிலை. உன்னைத் [லண்டன் பல்கலைக்கழக] தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட பெற்றோரும் [சுற்றத்தாரும்] தவறுடையவரில்லை. [அந்த காலத்தில்,] மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் பல்கலைக்கழக அதிகாரிகளே  [இந் நாட்டு மன்னனே] தவறுடையவன் போல அவன் உணர்ந்தான்.


யாழோனும் அமோதினியும்  பல்கலைக்கழகத் பூந் தோட்டத்தின் ஒதுக்குப்புறமான மூலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து, மறையும் சூரியனின் மென்மையான ஒளியில் குளித்தனர். அமோதினியின் கை யாழோனின் கையை வருடியது, அவளது அந்த பட்டும்படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வால் அவன் எல்லையற்ற ஒரு உணர்வை அனுபவித்தான். அவர்கள் இருவரும் நெருக்கமாக ஒருவர் மேல் ஒருவர் இறுக்கமாக சாய்ந்தனர், அவர்களின் உதடுகள் ஒரு மென்மையான முத்தத்தில் முதல் முதல் சந்தித்தன, அது ஒருவருக் கொருவர் புரியாத மொழியில் பேசியது. அவர்கள் இருவரும் தங்கள் உணர்ச்சியின் ஆழத்தில் தங்களை இழந்தார்கள்.


யாழோனுக்குத் தெரியாமல், அமோதினி ஆங்கில பையன் ஒருவனுடனும் சில உறவுகளை வைக்க தொடங்கினாள். அவளைப் பொறுத்தவரையில் வாழ்வை எப்படி எப்படி விதம் விதமாக அனுபவிக்க வேண்டுமோ அப்படி அப்படி அனுபவித்து, பின் ஒரு நேரம் நல்ல வசதியான, தன் மனதுக்கு ஏற்ற பையன் கிடைக்கும் பொழுது அவனை நிரந்தரமாக தனக்கு ஏற்றவனாக மாற்றிட வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வமாக இருந்தாள். அதில் முதல் அவளின் சந்திப்புத் தான் யாழோன். ஆனால் யாழோன், முதல் காதலே இறுதிக்காதலும் என்றும், 'காதல் அழிவதில்லை' என்பதிலும் முழு நம்பிக்கை உள்ளவன். அவன் அமோதினியை முழுதாக நம்பினான். ஏன் அமோதினி கூட  'காதல் அழிவதில்லை' என்று தான் சொல்லுவாள், ஏன் எனறால், தன் உணர்ச்சிகளுக்காக மட்டும் வெவ்வேறு ஆண்களுடன் தற்காலிகமாக பழகுகிறாள்,  பொழுது போக்குகிறாள், அவ்வளவுதான்! காதலுக்காக அல்ல என்பதுதான் அவளின் கொள்கை! காலம் செல்ல, அவளின் நடத்தையில் கொஞ்சம் கொஞ்சமாக யாழோனுக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது.


ஒருமுறை யாழோன் அவர்களுக்குப் பிடித்தமான ஓட்டலில் அமோதினிக்கு எதிரே அமர்ந்திருந்தான், என்றாலும் ஒரு அமைதியின்மை அங்கு நீடித்தது. அவர்களுக் கிடையில் இப்ப வளர்ந்து வரும் இடைவெளியை, அதன் தூரத்தைப் பற்றி, அவனது குரல் கவலையுடன் அமோதினியிடம் கேட்டது. ஆனால் அமோதினி அதை தந்திரமாக சமாளித்து, அவனின் மடியில் தலை வைத்து படுத்தபடி, அவனுக்கு எம் காதல் அழியாது என்று, ஒரு இனிய முத்தத்துடன் உறுதியளித்தாள். அவளது வார்த்தைகள் என்றென்றும் பொய்யான வாக்குறுதிகள் என்பது அவனுக்கு அந்தநேரம் விளங்கவில்லை.


"நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல அவள் பெண்மை திரண்டு நிற்கிறதே! திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா? என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!" அவன் வாய் அவளின் உறுதியை நம்பி முணுமுணுத்தது! 


நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறிய போது, யாழோன் மற்றும் அமோதினியின் உணர்ச்சி பூர்வமான காதல் வசந்த காலத்தின் வெம்மையில் ஒரு மென்மையான மலராக மலர்ந்தது. அவர்களின் காதல் நெரிசலான விரிவுரை அரங்குகளில் திருடப்பட்ட பார்வைகளிலும், நிலவொளி வானத்தின் அடியில் கிசுகிசுக்கப்பட்ட உரையாடல்களிலும் வெளிப்பட்டது. அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவழித்த போது, யாழோன் அமோதினியிடம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். அவளது சிரிப்பு அவன் காதுகளுக்கு இசையாக இருந்தது, அவளது புன்னகை லண்டனின் குளிரை போக்கும் அரவணைப்பாக இருந்தது. ஆனால் அத்தனையும் பொய் என்பதை அவன் மனது நம்பவில்லை.  


ஒரு நாள், யாழோனும் அமோதினியும் இருக்கமாகப் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு, தங்களையே மறந்து ஒரு பூங்காவின் ஓரத்தில் அமைந்து இருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தார்கள், அவர்களுக்கு தேவைப்பட்டது தனிமை, எங்கே போகிறோம் என்று தெரியவில்லை, அந்தப் பாதையில் ஆள் நடமாற்றம் குறைவு, அந்த மாலை நேரத்தில் அவர்களுக்கு அது தான் தேவைப்பட்டது. அமோதினி எப்போதும் பார்க்க அடக்கமான பொண்ணு, கேரளாவில் பாடசாலை காலத்தில் அடர்த்தியான முடியை இரட்டை பிண்ணல் பிண்ணி ரிபன் கட்டி குனிந்த தலை நிமிராமல் பாடசாலை போனவள் தான், ஆனால் இப்ப குடும்பத்தில் இருந்து தொலை தூரத்தில், எந்த பயமும் மனதில் இல்லாமல், எவனோ ஒருவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தனிமையில் நடக்கும் அளவிற்கு தைரியத்தை கொடுத்துள்ளது காதல், இல்லை, இல்லை, இளமை பாலின்ப விருப்பம், பருவ ஆசை!, ஒரே பல்கலைக்கழகத்தில் இருவரும் கற்றல் நெறியை பயின்றாலும், பார்த்து, கதைத்து சிரித்ததால் அதை காதல் என்று யாழோனும் முழுமையாக நம்ப, இருவரும் இவ்வளவு தூரம் தனிமையைத் தேடி வந்திருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவளின் நிலைப்பாடும் அவனின் நிலைப்பாடும் முரண்பாடானது என்பது அவனுக்குத் தெரியாது. 


நம்முள் இருக்கும் அழியா தன்மை தான் ஆத்மா. காற்று அதை தீண்டாது; தீ அதை சுடாது. இந்த உடல் ஆனது வெறும் சட்டையை போன்றது. நாம் சட்டையை மாற்றுவது போல் ஆன்மாவும் உடலை மாற்றுகிறது. இறுதியில் அது தக்க தருணம் கிடைக்கும் பொழுது அழிவில்லாத ஒரு முத்தியை அடைகிறது, அது போல காதலை சோதித்து சோதித்து, தனக்கு ஏற்ற, ஒத்த காதல் கிடைக்கும் பொழுது அதை அழியவிடாமல் பற்றிக்கொள்வது தான் அவளின் உள்நோக்கம், அவளைப் பொறுத்தவரையில் காதல் ஒரு இனக்கவர்ச்சி, வருக்காலத்தை ஒன்றாக வெற்றிகரமாக அமைக்க ஒன்று சேர வழிவகுக்கும் ஒன்று, எனவே சோதித்து, வயதுக்கு ஏற்ற ஆசையை அனுபவித்து, தெரிந்து எடுப்பதில் தவறு என்ன ? ஆனால் அவன், காதல் என்று ஒன்று முதலில் வந்தவுடனேயே, அது அழிவதில்லை என்று நம்புகிறவன். காதல் புனிதமானது, ஒரு நாளும் நாங்கள் பிரிய மாட்டோம், கடைசி மட்டும் சேர்ந்து வாழ்வோம், உங்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியுமா? என்று மற்றவர்களை  திருப்பி  கேட்பவன்! 


பிறந்த நாள் பரிசு, காதலர்தின பரிசு என்று இருவரும் பரிமாறிக் கொண்டார்கள், கையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்து உதட்டளவில் வந்து நிற்கின்றார்கள், அத்துமீறல் தொடுகைகளும் இருக்கவே செய்தது, எதுவென்ன வென்றாலும் என்றாவது தன் எதிர்காலத்தைப் பற்றி அவள் அவனுடன் கதைத்தது உண்டா? இருக்கவே இருக்காது, அன்று, அந்த தருணம் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மட்டுமே யோசிப்பாள் அவள், அது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் 


அமோதினி மெல்ல மெல்ல யாழோனிடம் தந்திரமாக விலகத் தொடங்கினாள். அவள் யாழோனை சந்திக்காததற்கு சாக்குப்போக்கு சொன்னாள், அவளது பொய்கள் ஒவ்வொரு நாளிலும் மேலும் விரிவடைந்தன. யாழோனின் சந்தேகங்களும் அதிகரித்தன, ஆனால் அவர்களின் காதல் அனைத்தையும் வெல்லும் என்ற நம்பிக்கையில் அவன் இன்னும் அவளுடன் ஒட்டிக் கொண்டே இருந்தான், அவனின்  பலவீனமான காதல் இதயத்தில் தாக்கத் தயாராக இருக்கும் அமோதினி என்ற குத்துவிளக்கை அறியும் பக்குவத்தில் அவன் இருக்கவில்லை. அவன் இன்னும் "காதல் அழிவதில்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறான்! 


என்றாலும் அவன் லண்டன் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவனது இதயம் சோகத்தால் கனத்தது, யாழோன் இனி ஒருபோதும் அன்பின் கொடூரமான அரவணைப்பிற்கு சிக்க மாட்டேன் என்று தனக்குத்தானே சபதம் செய்தான். பேராசை மற்றும் தன்னல லட்சியத்தால் நுகரப்படும் இந்த நவீன உலகில், காதல் என்பதும் ஒரு வியாபாரம் தான் என்ற  கசப்பான உண்மையை அவன் கற்றுக் கொண்டான்!


அதனால், கனத்த இதயத்துடனும், சோர்வுற்ற உள்ளத்துடனும், யாழோன் லண்டன் தெருக்களில் இருந்து பிரியா விடை பெற்றான், ஒரு காலத்தில் பிரகாசமாக எரிந்த காதலின் சிதைந்த துண்டுகளை தன்னுடன் சுமந்தான். ஏனென்றால், அவர்களது உடைந்த காதலின் சாம்பலில், காதல் மங்கினாலும், அதன் உடனடி அரவணைப்பின் நினைவுகள் நெஞ்சில் அழியாமல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால்! 


காலப்போக்கில் அமோதினி மீதான அவனது காதல் வெளி உலகத்துக்கு மங்கிவிட்டாலும், அவர்களின் பகிர்ந்த காதல் பயணத்திலிருந்து அவன் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள்  என்றென்றும் அவனது இதயத்தில் அழியாமல் பதிந்து இருந்தது!

ஆமாம் அவனது  நினைவுகளின் திரையில், சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு மத்தியில், அமோதினி மேல் அவன் கொண்ட காதல் மற்றும் அனுபவம் அதன் அனைத்து சிக்கலான தன்மையிலும், உண்மையில் ஒருபோதும் இறக்காமல், அவனுக்கு, அவனின் வருங்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக இருந்து, மீண்டும் ஒரு பொய்யான சிக்கலான நிலைக்குள் மாட்டுப்படாமல் இருக்க, சரியான வழியைக் காட்டிக்கொண்டு இருந்தது!


காதல் நம் சமூகத்திற்குப் புதிதல்ல. அது சங்க இலக்கியங்கள் முதல் தற்போதைய நவீன இலக்கியங்கள் வரை காதலைப் பற்றி எழுதாத இலக்கியவாதிகளே இல்லை. ஆனால் சமூகம் அதை எப்படி ஏற்று நடந்து கொள்கிறது என்பதில் தான் சிக்கல்கள் உருவாகிறது. காதலைப் புரிந்துகொள்வோம்! சிறந்து வாழ்வோம்!! 


நன்றி 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

3 weeks 3 days ago
இந்த இடத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு, பூர்வீகமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு விவசாய பொறிமுறையைச் செய்யுமாறு ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்,” என்றார். அதாவது தமிழர் நிலத்தைபிடுங்கி...சிங்களவரிடம் கொடு...அதற்கு நீதான் இடைதரகன்...உன்னை பிழை சொன்னால் இந்தியா விடாது...எப்படியிருக்கிற்து நரியின் தந்திரம்.. இதுமட்டுமில்லை..சோனகரிடம் மன்னிப்பு கேட்கிறார் ஒரு பாதி மந்திரி...நரித்தந்திரம் இப்ப அரை இந்தியரை மையம்கொண்டு ...வோட்டுக்காக சுழல்கிறது..

மற்றொரு ‘அரகலய ’விற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க முயற் சிக்கும் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டம்

3 weeks 3 days ago
கிஷாலி பின்ரோ ஜயவர்த் தன – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின் முன்னுதாரணங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில்சமுகமளித்திருந்தவர்கள் மத்தியில் உறுதியளித்த அவர், அரசாங்கத்தின் நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு(அப்பாவிகளின்) உதவும்’ சட்டங்களைக் கொண்டுவருவது மட்டுமே என்றார். அந்த முடிவில், ஐக்கிய இராச்சியத்தில்நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பார்க்குமாறு அவரது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டமாஅ திபருக்கு ‘பிரிட்டனின் விதிமுறைகளில் சட்டமூலத்தை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கு முடிவெடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெறலாம் .குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்த பிறகு, கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி திடமாக உறுதியளிக்கிறார். ,[‘ஜனாதிபதி செயலகம்,2023 ஜூன் 15, ). நிச்சயமாக, ஜனாதிபதியின் ஊடகக் குழு அந்த வாக்கியத்தை பொது வெளியீடாக வடிவமைத்ததில் உள்ள கசப்பான மொழி விரும்பத்தக்கதாகவே இருந்தது. இருந்தபோதிலும், ஒலி பரப்பு சட்டமூலம் , பொது ஆலோசனையிலிருந்து வெளிப்படையாக வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும், ஹோமாகமவில் ஜனாதிபதி அந்த இலகுவானஉறுதிமொழிகளுக்கு பொய்யை வழங்குவது அதன் பின்னரான அவரது அமைச்சரவையின் நடவடிக்கைகள் ஆகும். உதாரணமாக அருவருப்பான இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எடுத்துக் கொண்டால் , அது ஒலி பரப்பு சட்டமூலத்தை மிக மோசமான வடிவத்தில் பின்பற்றுவதாகும். சட்டமியற்றும் வரைவு வேலை வெளிப்படையாக, இந்த சட்டமூலம் அதன் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அதிர்ச்சி யான வடிவத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான உச்சகட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில், இந்த ஆவணம் ‘பிரிட்டனின் முன்னுதாரணங்கள்’ அல்லது வேறு எந்த முன்னுதாரணத்தின் மீதும் வரைவு செய்யப்பட்டதாக எந்தவித பாசாங்குகளும் இல்லை. முற்றுகையின் கீழ் ஒரு அரசியல் ஸ்தாபனத்தால் சட்டமியற்றும் வேலையாக இது திகழ்வதுடன் என்னகஷ்டம் ஏற்பட்டாலும்அவற்றுக்கு எதிராக அனைத்து பாதுகாப்புகளையும் திரட்ட தயாராகிறது. சட்டமூலத்தின் சில அம்சங்கள் கடந்த வார பத்தியில் விவாதிக்கப்பட்டன. ஆனால் அதன் உள்ளடக்கங்கள் குறிப்பாக அழுகிய வெங்காயம் போன்றவை. அருவருப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் ஒரு அடுக்கை நீங்கள் உரிக்கும்போது, அவை ‘சட்டத்தை உருவாக்கும்’ மற்ற மோசமான சாகச முயற்சிகளால் பின்பற்றப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உற்று நோக்குமாறு ஜனாதிபதி தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலாம். இது அதன் கொடூரமான இலங்கைப் பெயருக்கு அப்பாற்பட்ட உலகம். அதிகாரத்தில் இருப்பவர்களால் ‘இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின்’ உண்மையான சுயவிவரம் எப்படி இருக்கும் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். தற்செயலாக, பிரிட்டன்சட்டமூலம் இந்த மாதம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்குஉட் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது .அரசரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால்ஏனைய எல்லா வழிகளிலும், இது நாம் இங்கு காணும் கேலிக்கூத்தலில் இருந்து வேறுபட்டது. உலகளாவிய சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு விரிவான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு பிரிட்டன்சட்டமூலம் வந்தது. திகைப்புமற்றும்அச்சத்திலிருந்து ஒரு அரசாங்கத்தை பாதுகாத்தல் அதன் உள்ளடக்கங்கள் கணிசமாக திருத்தப்பட்டன, பொது மக்களால். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், மக்கள்பிரதிநிதிகள் சபை மற்றும் பிரபுக்கள்சபை ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு அலுவலகம், அரச கட்டுப்பாட்டாளர், செயற் படுத்தல் மற்றும் அமு லாக்கத்தில் பணிபுரியும். சட்ட அமு லாக்க முகவர் சமூக ஊடக தளங்களில் பிள்ளைகளை ப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் சட்ட விரோதமான இணையவழி உள்ளடக்கத்தை உடனடியாகச் சமாளிக்க சட்ட அமு லாக்க முகவரமைப்பு களுக்கு இந்தசட்டமூலம் உதவுகிறது. இதற்கு நேர்மாறாக, இலங்கையின் சட்டமூலம், நான் பார்ப்பது போல், வெளிப்படையாகவே ‘அச்சத்துடன்’ இருக்கும் அரசாங்கத்தை, மற்றொரு ‘அரகலய ’ (பாரியளவிலான எதிர்ப்பு) சாத்தியப்பாட்டிற்குஎதிராக பாதுகாக்க முயல்கிறது. அங்கே நாம் சுருக்கமாக விட யம் உள்ளது. சட்டமூலத்தின் தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற ‘நோக்கங்கள்’ கடந்த வாரம் விவாதிக்கப்பட்டன, இதில் ‘எச்சரிக்கை அல்லது துன்பகரமான’ அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஆட் களைப் பாதுகாப்பது அடங்கும். உண்மையில், அதன் நீண்ட தலைப்பு கூட கொடூரமான வார்த்தைகளால் ஆனது. ‘உண்மையின் சில அறிக்கைகளை’ தடை செய்வதே இதன் நோக்கம் என்று இது கூறுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள மிகக் கொடூரமான சட்டம், இணையவழி பொய்கள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரர்களின் மகிழ்ச்சியாக உள்ளது. ‘உண்மைகுறித்த பொய்யான அறிக்கைகளை’ தடைசெய்வது போன்ற அதன் நோக்கத்தை இன்னும் கேவலமாக அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூர் சட்டம் மோசமாக இருந்தால், முன்மொழியப்பட்ட இலங்கையின் சட்டமூலத் தின் மோசமானதன்மை எல்லையற்றது. தீங்கிழைக்கும் வகையிலான வரைவு விதிகள் தடைசெய்யப்பட்ட மற்றும் தவறான அறிக்கைகளை வரையறுக்கும் இலங்கை சட்டமூலத்தின் உட்பிரிவுகள் விரிவானவை. கடந்த வாரம் விவாதிக்கப்பட்டதைப் போல, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் (ஐ சி சி பி ஆர் சட்டம், 2007) அதே தடைசெய்யப்பட்ட தன்மையும் இதில் அடங்கும், இது விமர்சகர்களுக்கு எதிராக இரக்கமின்றி ஆயுதம் ஏந்தப்பட்டது. மேலும் காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், எங்களிடம் ஏனைய உட்பிரிவுகள் உள்ளன. ச ரத்து 14 ‘தவறான முறையில் அல்லது வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வழங்குவதைத் தடுக்கிறது.உண்மையான கலவரம் ஏற்படாவிட்டாலும், இந்தக் குற்றம் (குறைந்த தண்டனையுடன் இருந்தாலும்) எழுவதாகக் கருதப்படுவது மிகவும் ஆபத்தானதாக இல்லாவிட்டால் அதன் விளைவுவேடிக்கையாக இருக்கும். தேவைப்படுவதெல்லாம், சுயாதீனமற்ற இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழுவின் மதிப்பீடு மட்டுமே. உட்பிரிவு 15, 16 மற்றும் 17 ஆகியவை முறையே ஒரு மதக் கூட்டத்தின் ‘தொந்தரவு’ அல்லது வேண்டுமென்றே ‘காயம்’ மற்றும் ‘சீற்றம்’ மத உணர்வுகளை ஏற்படுத்தும் தவறான அறிக்கைகளுடன் தொடர்புடையது. ஐ சி சி பி ஆர் சட்டத்தின் குறைந்தபட்சம் பிரிவு 3 (1) குற்றத்தின் ஒரு பகுதியாக பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறைக்கு ‘தூண்டுதல்’ பரிந்துரைக்கிறது என்றாலும், பொலிசாரின் கைதுகள் மற்றும் வழக்குகள் அந்த அம்சத்தை எப்போதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும், இந்த சட்டமூலத்தில் குற்றமாக கருதப்படும் செயல்களின் முட்டாள்தனம் புரிதலை மீறுகிறது. எந்த விதத்தில் ஒரு ‘தொந்தரவு’ அல்லது ‘நோக்கம்’ ‘காயம்/ சீற்றம்’ உணர்வுகளை குற்றமாக விளக்கலாம்? அரச முகவர்களை வெறித்தனமாக செல்ல அனுமதித்தல் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், இலங்கைப் பிரஜைகள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் ‘சீற்றம்,’ ‘காயமடைந்த’ அல்லதுஇரண்டும் ‘கலந்த’ நிலையில் உள்ளனர். சட்டரீதியான பின்விளைவுகளைத் தீர்மானிப்பது போன்ற திட்டவட்டமான பேச்சுவழக்கு சொற்றொடர்களுக்கு இது ஒரு முட்டாள்தனம். இவ்வாறான குற்றச்செயல்கள் இலங்கையின் தண்டனைச் சட்டத்தை இருண்ட மற்றும் சோதிக்கப்படாத நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றன. அரச முகவர்கள் காட்டுமிராண்டித்தனமாக செல் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீச்சை மிகைப்படுத்த முடியாது. இதற்கிடையில், ஒரு நபரை ‘அச்சுறுத்தல், பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்துதல்’ மற்றும் மிகவும் விசேட மாக, ‘ஒரு நபரின் கண்ணியத்தை மீறும்’ விளைவைக் கொண்ட எந்தவொரு செயல் தொடர்பாக . வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிடுவதை 21-வது பிரிவு தடை செய்கிறது. பின் வரும்உதாரணங்கள் தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையவை, ஆனால் சரியான கடுமையான கட்டமைப்பில் இல்லாததால், இந்த ச ரத்து ஒரு ‘இலக்குவைக்கப்பட்ட நபரின்’ அரசியல் விமர்சனத்தை மறைக்கப் பயன்படுத்தப்படலாம். ஹோமாகமவில் ஜனாதிபதியின் கூற்று, கேள்விக்குரிய ச ரத்து ‘பொய்யான’ அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கொள்கையளவில் அதை எதிர்க்க வேண்டும். அரசில் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை அமைத்தல் ஒட்டுமொத்தமாக, கூச்சமின்றி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட (மற்றும்நிராகரிப்பு செய்யப்பட வேண்டிய) இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு இந்த மிகவும் போட்டியிட்ட கேள்விகளை மதிப்பிடுகிறது. இங்குதான் இந்தசட்டமூலத்தின் திகில் உள்ளது. ‘எந்தவொரு நபராலும்’ தூண்டப்பட்டு, மீறல் குறித்து திருப்தி அடைந்த பிறகு, ஆணைக்குழு இயற்கை நீதியின் விதிகளைக் கடைப்பிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்கவும் கடமைப்பட்டிருக்காது. அதற்கு பதிலாக, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கீழ்ப்படிய வேண்டிய உள்ளடக்கத்தின் புழக்கத்தைத் தடுக்க இது அறிவிப்பை வெளியிடலாம். இல்லையெனில், இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரால் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், அதன் பிறகுதான், கிட்டத்தட்ட ஒரு பின் சிந்தனையாக. ‘இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்’ ஆணைக்குழுவின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததற்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம். உண்மையிலேயே பயமுறுத்துவது என்னவென்றால், இது எதிர்காலத்திற்கு அமைக்கும் ஓர்வெல்லியன் [எதிர்கால எதேச்சாதிகாரதிற்கான ]முன்னுதாரணமாகும் சண்டே டைம்ஸ் https://thinakkural.lk/article/275330

மற்றொரு ‘அரகலய ’விற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க முயற் சிக்கும் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டம்

3 weeks 3 days ago
 

கிஷாலி  பின்ரோ  ஜயவர்த் தன  –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல்  ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார்.
ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின்  முன்னுதாரணங்கள்
மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, திசைதிருப்பும் ஒரு முயற்சியுடன் மறுத்தார். ஹோமாகம பிரதேச செயலகத்தில்சமுகமளித்திருந்தவர்கள்  மத்தியில்  உறுதியளித்த அவர், அரசாங்கத்தின்  நோக்கம் ‘ஊடகங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு(அப்பாவிகளின்) உதவும்’ சட்டங்களைக் கொண்டுவருவது மட்டுமே என்றார்.

அந்த முடிவில், ஐக்கிய இராச்சியத்தில்நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பார்க்குமாறு அவரது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டமாஅ திபருக்கு ‘பிரிட்டனின்  விதிமுறைகளில் சட்டமூலத்தை  முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் அங்கு முடிவெடுப்பதில் முன்னுதாரணங்களைப் பெறலாம் .குற்றவியல் அவதூறு சட்டத்தை ரத்து செய்த பிறகு, கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி திடமாக  உறுதியளிக்கிறார். ,[‘ஜனாதிபதி செயலகம்,2023 ஜூன் 15, ).
நிச்சயமாக, ஜனாதிபதியின் ஊடகக் குழு அந்த வாக்கியத்தை பொது வெளியீடாக வடிவமைத்ததில் உள்ள கசப்பான மொழி விரும்பத்தக்கதாகவே இருந்தது.
இருந்தபோதிலும், ஒலி பரப்பு சட்டமூலம் , பொது ஆலோசனையிலிருந்து  வெளிப்படையாக வாபஸ் பெறப்பட்டது. எவ்வாறாயினும், ஹோமாகமவில் ஜனாதிபதி அந்த இலகுவானஉறுதிமொழிகளுக்கு பொய்யை வழங்குவது அதன் பின்னரான  அவரது அமைச்சரவையின் நடவடிக்கைகள் ஆகும். உதாரணமாக  அருவருப்பான இணையவழி  பாதுகாப்பு சட்டமூலத்தை  எடுத்துக் கொண்டால் , அது ஒலி பரப்பு சட்டமூலத்தை மிக மோசமான வடிவத்தில் பின்பற்றுவதாகும்.

சட்டமியற்றும் வரைவு வேலை வெளிப்படையாக, இந்த சட்டமூலம்  அதன் உள்ளடக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அதிர்ச்சி யான  வடிவத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான உச்சகட்டத்தில் உள்ளது. பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சரின் கைகளில், இந்த ஆவணம் ‘பிரிட்டனின்  முன்னுதாரணங்கள்’ அல்லது வேறு எந்த முன்னுதாரணத்தின் மீதும் வரைவு செய்யப்பட்டதாக எந்தவித பாசாங்குகளும் இல்லை. முற்றுகையின் கீழ் ஒரு அரசியல் ஸ்தாபனத்தால் சட்டமியற்றும் வேலையாக இது திகழ்வதுடன் என்னகஷ்டம் ஏற்பட்டாலும்அவற்றுக்கு   எதிராக அனைத்து பாதுகாப்புகளையும் திரட்ட தயாராகிறது.

சட்டமூலத்தின்  சில அம்சங்கள் கடந்த வார பத்தியில் விவாதிக்கப்பட்டன. ஆனால் அதன் உள்ளடக்கங்கள் குறிப்பாக அழுகிய வெங்காயம் போன்றவை. அருவருப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட உட்பிரிவுகளின் ஒரு அடுக்கை நீங்கள் உரிக்கும்போது, அவை ‘சட்டத்தை உருவாக்கும்’ மற்ற மோசமான சாகச முயற்சிகளால் பின்பற்றப்படுகின்றன.

ஐக்கிய இராச்சியத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உற்று நோக்குமாறு ஜனாதிபதி  தனது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலாம். இது அதன் கொடூரமான இலங்கைப் பெயருக்கு அப்பாற்பட்ட உலகம்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் ‘இணையவழி  பாதுகாப்புச் சட்டத்தின்’ உண்மையான சுயவிவரம் எப்படி இருக்கும் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். தற்செயலாக, பிரிட்டன்சட்டமூலம்  இந்த மாதம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்குஉட் படுத்தப்பட்டு  நிறைவேற்றப்பட்டது .அரசரின்  ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால்ஏனைய  எல்லா வழிகளிலும், இது நாம் இங்கு காணும் கேலிக்கூத்தலில் இருந்து வேறுபட்டது.

உலகளாவிய சமூக ஊடக தளங்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நீடித்த ஒரு விரிவான ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு பிரிட்டன்சட்டமூலம்  வந்தது.
திகைப்புமற்றும்அச்சத்திலிருந்து   ஒரு அரசாங்கத்தை பாதுகாத்தல்
அதன் உள்ளடக்கங்கள் கணிசமாக திருத்தப்பட்டன, பொது மக்களால். முன்மொழியப்பட்ட திருத்தங்கள், மக்கள்பிரதிநிதிகள்  சபை  மற்றும் பிரபுக்கள்சபை ஐக்கிய இராச்சியத்தின் தகவல் தொடர்பு அலுவலகம், அரச கட்டுப்பாட்டாளர், செயற் படுத்தல் மற்றும் அமு லாக்கத்தில் பணிபுரியும். சட்ட அமு லாக்க முகவர் சமூக ஊடக தளங்களில் பிள்ளைகளை ப் பாதுகாப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் சட்ட விரோதமான இணையவழி உள்ளடக்கத்தை உடனடியாகச் சமாளிக்க சட்ட அமு லாக்க முகவரமைப்பு களுக்கு இந்தசட்டமூலம் உதவுகிறது.

இதற்கு நேர்மாறாக, இலங்கையின் சட்டமூலம், நான் பார்ப்பது போல், வெளிப்படையாகவே ‘அச்சத்துடன்’ இருக்கும் அரசாங்கத்தை, மற்றொரு ‘அரகலய ’ (பாரியளவிலான எதிர்ப்பு) சாத்தியப்பாட்டிற்குஎதிராக  பாதுகாக்க முயல்கிறது. அங்கே நாம் சுருக்கமாக விட யம் உள்ளது. சட்டமூலத்தின்  தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற ‘நோக்கங்கள்’ கடந்த வாரம் விவாதிக்கப்பட்டன, இதில் ‘எச்சரிக்கை அல்லது துன்பகரமான’ அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஆட் களைப் பாதுகாப்பது அடங்கும்.

உண்மையில், அதன் நீண்ட தலைப்பு கூட கொடூரமான வார்த்தைகளால் ஆனது. ‘உண்மையின் சில அறிக்கைகளை’ தடை செய்வதே இதன் நோக்கம் என்று இது கூறுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள மிகக் கொடூரமான சட்டம், இணையவழி  பொய்கள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரர்களின் மகிழ்ச்சியாக உள்ளது. ‘உண்மைகுறித்த  பொய்யான அறிக்கைகளை’ தடைசெய்வது போன்ற அதன் நோக்கத்தை இன்னும் கேவலமாக அறிமுகப்படுத்துகிறது. சிங்கப்பூர் சட்டம் மோசமாக இருந்தால், முன்மொழியப்பட்ட இலங்கையின் சட்டமூலத் தின் மோசமானதன்மை எல்லையற்றது.

தீங்கிழைக்கும் வகையிலான  வரைவு விதிகள்
தடைசெய்யப்பட்ட மற்றும் தவறான அறிக்கைகளை வரையறுக்கும் இலங்கை சட்டமூலத்தின் உட்பிரிவுகள் விரிவானவை. கடந்த வாரம் விவாதிக்கப்பட்டதைப் போல, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தில் (ஐ சி சி பி ஆர் சட்டம், 2007) அதே தடைசெய்யப்பட்ட தன்மையும்  இதில் அடங்கும், இது விமர்சகர்களுக்கு எதிராக இரக்கமின்றி ஆயுதம் ஏந்தப்பட்டது. மேலும் காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில், எங்களிடம் ஏனைய உட்பிரிவுகள் உள்ளன.
ச ரத்து 14 ‘தவறான முறையில் அல்லது வேண்டுமென்றே தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வழங்குவதைத் தடுக்கிறது.உண்மையான கலவரம் ஏற்படாவிட்டாலும், இந்தக் குற்றம் (குறைந்த தண்டனையுடன் இருந்தாலும்) எழுவதாகக் கருதப்படுவது மிகவும் ஆபத்தானதாக இல்லாவிட்டால் அதன் விளைவுவேடிக்கையாக இருக்கும்.  தேவைப்படுவதெல்லாம், சுயாதீனமற்ற இணையவழி  பாதுகாப்பு ஆணைக்குழுவின்  மதிப்பீடு மட்டுமே. உட்பிரிவு 15, 16 மற்றும் 17 ஆகியவை முறையே ஒரு மதக் கூட்டத்தின் ‘தொந்தரவு’ அல்லது வேண்டுமென்றே ‘காயம்’ மற்றும் ‘சீற்றம்’ மத உணர்வுகளை ஏற்படுத்தும் தவறான அறிக்கைகளுடன் தொடர்புடையது.

ஐ சி சி  பி  ஆர்  சட்டத்தின் குறைந்தபட்சம் பிரிவு 3 (1) குற்றத்தின் ஒரு பகுதியாக பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறைக்கு ‘தூண்டுதல்’ பரிந்துரைக்கிறது என்றாலும், பொலிசாரின்   கைதுகள் மற்றும் வழக்குகள் அந்த அம்சத்தை எப்போதாவது கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும், இந்த சட்டமூலத்தில் குற்றமாக கருதப்படும் செயல்களின் முட்டாள்தனம் புரிதலை மீறுகிறது. எந்த விதத்தில் ஒரு ‘தொந்தரவு’ அல்லது ‘நோக்கம்’ ‘காயம்/ சீற்றம்’ உணர்வுகளை குற்றமாக விளக்கலாம்?

அரச முகவர்களை வெறித்தனமாக செல்ல
அனுமதித்தல் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், இலங்கைப் பிரஜைகள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் ‘சீற்றம்,’ ‘காயமடைந்த’ அல்லதுஇரண்டும்  ‘கலந்த’ நிலையில் உள்ளனர். சட்டரீதியான பின்விளைவுகளைத் தீர்மானிப்பது போன்ற திட்டவட்டமான பேச்சுவழக்கு சொற்றொடர்களுக்கு இது ஒரு முட்டாள்தனம். இவ்வாறான குற்றச்செயல்கள் இலங்கையின் தண்டனைச் சட்டத்தை இருண்ட மற்றும் சோதிக்கப்படாத நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றன. அரச முகவர்கள் காட்டுமிராண்டித்தனமாக செல் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வீச்சை மிகைப்படுத்த முடியாது.

இதற்கிடையில், ஒரு நபரை ‘அச்சுறுத்தல், பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்துதல்’ மற்றும் மிகவும் விசேட மாக, ‘ஒரு நபரின் கண்ணியத்தை மீறும்’ விளைவைக் கொண்ட எந்தவொரு செயல் தொடர்பாக . வேண்டுமென்றே தவறான அறிக்கைகளை வெளியிடுவதை 21-வது பிரிவு தடை செய்கிறது.

பின் வரும்உதாரணங்கள்  தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான உறவுகளுடன் தொடர்புடையவை, ஆனால் சரியான கடுமையான கட்டமைப்பில் இல்லாததால், இந்த ச ரத்து ஒரு ‘இலக்குவைக்கப்பட்ட  நபரின்’ அரசியல் விமர்சனத்தை மறைக்கப் பயன்படுத்தப்படலாம். ஹோமாகமவில் ஜனாதிபதியின் கூற்று,  கேள்விக்குரிய ச ரத்து ‘பொய்யான’ அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கொள்கையளவில் அதை எதிர்க்க வேண்டும்.

அரசில் ஒரு பயங்கரமான முன்னுதாரணத்தை அமைத்தல் ஒட்டுமொத்தமாக, கூச்சமின்றி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட (மற்றும்நிராகரிப்பு  செய்யப்பட வேண்டிய) இணையவழி  பாதுகாப்பு ஆணைக்குழு  இந்த மிகவும் போட்டியிட்ட கேள்விகளை மதிப்பிடுகிறது. இங்குதான் இந்தசட்டமூலத்தின்  திகில் உள்ளது. ‘எந்தவொரு நபராலும்’ தூண்டப்பட்டு, மீறல் குறித்து திருப்தி அடைந்த பிறகு, ஆணைக்குழு  இயற்கை நீதியின் விதிகளைக் கடைப்பிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கேட்கவும் கடமைப்பட்டிருக்காது.

அதற்கு பதிலாக, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கீழ்ப்படிய வேண்டிய உள்ளடக்கத்தின் புழக்கத்தைத் தடுக்க இது அறிவிப்பை வெளியிடலாம். இல்லையெனில், இணைய அணுகல் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரால்  இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், அதன் பிறகுதான், கிட்டத்தட்ட ஒரு பின் சிந்தனையாக. ‘இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்’ ஆணைக்குழுவின் உத்தரவுக்கு கீழ்ப்படியாததற்கு  ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

உண்மையிலேயே பயமுறுத்துவது என்னவென்றால், இது எதிர்காலத்திற்கு அமைக்கும் ஓர்வெல்லியன் [எதிர்கால எதேச்சாதிகாரதிற்கான  ]முன்னுதாரணமாகும்

சண்டே டைம்ஸ்

https://thinakkural.lk/article/275330

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்

3 weeks 3 days ago
திம்புப் பேச்சுவார்த்தை முஸ்தீபுகள் 1985 ஆம் ஆண்டு வைகாசி 23 ஆம் திகதி இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை அவரது அலுவலகம் அமைந்திருக்கும் செளத் புளொக்கில் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரைச் சந்தித்து டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக செவ்வி காணவே அங்கு சென்றேன். நான் அங்கு இருந்த நேரத்தில், அறையின் கதவைத் திறந்துகொண்டு சற்றுக் குட்டையான உருவ அமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தார். "மன்னிக்க வேண்டும், ஒரு இரண்டு நிமிடங்கள் தருவீர்களா?" என்று என்னிடம் கேட்டுக்கொண்ட பண்டாரி, எழுந்துசென்று அந்தக் குள்ளமான மனிதரைக் கைலாகு கொடுத்து வரவேற்றார். சில நிமிட நேரம் அவருடன் பேசிய பின்னர், "நான் உங்களைக் கொழும்பில் சந்திக்கிறேன்" என்று கூறி விடைகொடுத்தார். பின்னர், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு பேசத் தொடங்கினார். "இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்தியத் தூதுவரே அவர். நான் இலங்கைக்குச் செல்லும்போது, அவரும் அங்கிருப்பார்" என்று என்னிடம் கூறினார். "அப்படியா, ஏன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை? நான் அவரிடமும் பல விடயங்கள் குறித்து செவ்வி காணவேண்டுமே?" என்று நான் கேட்டேன். பதிலளித்த பண்டாரி, "நீங்கள் அவரை கொழும்பில் சந்திப்பீர்கள்" என்று கூறினார். அந்தக் குள்ளமான மனிதர் வேறு யாருமல்ல. அவர்தான் வைகாசி 27 ஆம் திகதி கொழும்பிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட ஜே.என்.டிக்ஷீட். அதற்கு முதல்நாள் கொழும்பை வந்தடைந்த டிக்ஷீட், தனது நியமனக் கடிதத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹமீதிடம் கையளித்து பணியை ஆரம்பித்திருந்தார். தனது நியமனத்தை ஜெயவர்த்தனவிடமும் அவர் அன்றிரவு 9:30 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்று காண்பித்தார். அவரை முதன்முதலாக பேட்டிகண்ட செய்தியாளரும் நான் தான். மறுநாள் காலை தில்லியிலிருந்து புறப்பட்டு இலங்கை செல்லும் வழியில், திருச்சியில் இறங்கி எனது சகோதரனுடன் ஒருநாளைக் கழித்தேன். திருச்சியில் இருந்த நாளில், கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியும் எனது நண்பருமான ஒருவரைச் சந்திக்க முயன்றேன். அவர் அப்போது தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது இந்தியாவின் கட்டளைகளுக்கு அமைந்து நடக்கும் அழுத்தத்தினை கொடுக்கும் அதிகாரிகளுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். ஆனியில், தில்லிக்குப் பயணித்த தமிழர் பிரதிநிதிகளுடன் அவரும் சென்றிருந்தார். பண்டாரியிடம் விடைபெற்று கொழும்பு செல்ல டிக்ஷீட் வந்தபோது, நான் இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து பண்டாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். தென்னாசியாவில் சமாதான வலயம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ரஜீவ் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். இந்தியாவின் அயல் நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவினை உருவாக்க ரஜீவ் முயன்றுகொண்டிருந்தார். அயல்நாடுகளுடன் கெடுபிடியான மூத்த அண்ணன் எனும் அவப்பெயரைக் களைந்துவிட ரஜீவ் முயன்றுவருவதாக கூறப்பட்டது. ஆகவே, ரஜீவின் இந்த சிந்தனையூடாகவே இலங்கையுடனான உறவும் இருக்கவேண்டும் என்று தாம் விருபுவதாக நான் சந்தித்த இந்தியர்கள் என்னிடம் கூறினார்கள். "சிறிலங்காவில் சண்டைகள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். 28 ஆம் திகதி நான் இலங்கைக்குச் செல்லும்போது இதற்கான அடித்தளத்தினை இடும் பணிகளை ஆரம்பிப்பேன்" என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் கூறும் அடித்தள வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பதை நான் அறிவேன். பங்குனியில் அவர் முதன்முதலாக இலங்கை வந்திருந்தபோது, "இந்தியாவின் விருப்பத்தின்படி ஒழுகி நடக்க போராளிகள் ஒத்துக்கொள்கிறார்களா?" என்று நான் அவரிடம் கேட்டபோது, "அவர்களுக்கு வேறு வழியில்லை, இந்தியா சொல்வதை அவர்கள் நிச்சயம் கேட்கவேண்டும். பேச்சுவார்த்தைகள் ஊடாக தமக்குத் தேவையானதை அவர்கள் பெற்றுக்கொள்ள முயலவேண்டும்" என்று பண்டாரி என்னிடம் அன்று கூறியிருந்தார். இயல்பாகவே அடுத்ததாக அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியொன்று எண்ணத்தில் வந்துபோனது, "அப்படியானால், ஜெயாரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி நடப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், அன்று அதனைக் கேட்பதை நான் தவிர்த்துக்கொண்டேன். எனது தகவல்களைத் தாங்கியவாறு டெயிலி நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. நான் கொழும்பை வந்தடைந்தவுடன், லலித் அதுலத் முதலி எனக்கு நன்றி தெரிவித்திருந்ததாக எனது ஆசிரியர் மணிக் டி சில்வா என்னிடம் கூறினார். மேலும், டிக்ஷீட்டை இந்திய வெளியுறவகத்தில் சந்தித்து செவ்வி கண்டமைக்காகவும் மணிக் என்னிடம் நன்றி தெரிவித்தார். டிக்ஷீட் என்னைக் கண்டவுடன் அதிசயித்துப் போனார். "நான் கொழும்பு வருமுன் வெளியுற‌வுச் செயலாளரைச் சந்திக்க வந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருந்தது நீங்கள் தானே?" என்று என்னைக் கேட்டார். அந்தச் சந்திப்பும், மட்ராஸ் கிறிஸ்ட்டியன் கல்லூரியில் நாம் இருவரும் கல்விகற்றோம் என்கிற விடயமும் எம்மிருவரையும் நெருங்கி வரப்பண்ணியிருந்தது. என்னிடம் பேசும்போது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மிகுந்த கண்ணியத்துடன் தன்னை நடத்தியதாக டிக்ஷீட் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தீர்க்கமான உறவு ஒன்று உருவாகும் வேளையில் நீங்கள் வருகை தந்திருக்கிறீர்கள் என்று தன்னை ஹமீது வாழ்த்தியதாகவும் டிக்ஷீட் என்னிடம் கூறினார். இலங்கை தொடர்பாக இந்திரா கடைப்பிடித்த கொள்கைகள், நோக்கங்களை விடவும் ரஜீவ் காத்திரமான கொள்கைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொள்வார் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஹமீது டிக்ஷீட்டிடம் கூறியிருக்கிறார். இந்த நிபந்தனையுடனேயே இந்தியாவின் கோரிக்கையான போராளிகளுடன் இலங்கையரசாங்கம் நேரடியாகப் பேசவேண்டும் என்பதனை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஹமீது மேலும் கூறியிருக்கிறார். டிக்ஷீட்டுடனான முதலாவது சந்திப்பிலேயே அவர் பத்திரிக்கையாளர்களுடன் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர் என்பதை அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்களை எப்படி இலாவகமாகக் கையாளவேண்டும் என்கிற உத்தியையும் அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். பத்திரிக்கையாளர்கள் தன்னிடமிருந்து எதனை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்ட அவர், அவர்களைத் தனது நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். ஜெயவர்த்தன்விடம் தனது நியமனக் கடிதத்தினைக் காண்பிக்கச் சென்றபோது, ஜெயவர்த்தனவுடன் தான் பேசிய விடயங்கள் சிலதை, "இதனை வெளியில்க் கூறவேண்டாம்" என்கிற எச்சரிக்கையுடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார் டிக்ஷீட். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, பண்டாரி நாளை இலங்கை வருகிறார். வந்தவுடன் உங்கள் அரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒழுங்குகள் பற்றிப் பேசுவார் என்று கூறியிருக்கிறார் டிக்ஷீட். மேலும், தமிழ்ப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்போர் குறித்த விடயங்கள் தொடர்பாகவும் பண்டாரி உங்களிடம் அறியத் தருவார் என்றும் ஜெயாரிடம் அவர் கூறியிருக்கிறார். அடுத்ததாக, ரஜீவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான உத்தியோக பூர்வமான‌ அழைப்பினையும் பண்டாரி விடுப்பார் என்று டிக்ஷீட் கூறியிருக்கிறார். டிக்ஷீட்டிடம் பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடந்தகால கசப்புணர்வுகளையும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கைகளையும் களைய ரஜீவ் முயற்சிப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்களுக்கான நடவடிக்கைகள் குறித்த செயற்திட்டத்தினை ரோ வின் இயக்குனர் சக்சேனாவே வரைந்திருந்தார். அதன் பிரதியொன்று லலித் அதுலத் முதலியுடனான சந்திப்பின் பின்னர் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள், கால அட்டவணை போன்றவை உள்ளிட்ட பல இரகசிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்னவெனில், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதுதான் என்று டிக்ஷீட் என்னிடம் கூறினார். எனது செவ்வியினூடாக இலங்கையரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் யுத்த நிறுத்தம் குறித்த செய்தியை இலங்கை மக்களுக்கு அறியத்தரவும், அதற்காக அவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர் எண்ணியிருந்தார்.

நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்

3 weeks 3 days ago
சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா . வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .