Aggregator

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
1ம், 3ம் விதிகளை தளர்த்தலாமே? எப்படியோ ஜூன் 4 வரை இனி எது நடந்தாலும் முடிவுகள் மாறப்போவதில்லை. எனவே இறுதி நாளை ஜுன்3 எனவும், அதுவரை விடைகளை மாற்றலாம் எனவும் வைக்கலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக.

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
@புலவர், @nunavilan, @suvy, @Eppothum Thamizhan, @விசுகு@புரட்சிகர தமிழ்தேசியன், @சுப.சோமசுந்தரம், @நிழலி, @ரசோதரன், @ஏராளன், @Kandiah57, @பெருமாள், @நியாயம், @satan, @Kapithan, @நீர்வேலியான், @நன்னிச் சோழன், @நந்தன், @MEERA, @தமிழன்பன், @kandiah Thillaivinayagalingam

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
அண்ண‌ன் வேல் முருக‌னை தொட‌ர்வு கொண்டால் மீத‌ம் உள்ள‌ உண்மைக‌ளை அவ‌ர் சொல்லுவார்...................... போர் 2008 க‌ட‌சியில் தான் உச்ச‌த்த‌ தொட்ட‌து இவ‌ர் த‌மிழ் நாடு வ‌ந்த‌ கையோட‌ செய்த‌ ச‌ம்ப‌வ‌ம்........................... 2004 வீர‌ப்ப‌ன் குடும்ப‌த்தோடு த‌மிழீழ‌த்துக்கு போக‌ வெளிக்கிட்ட‌ போது தான் மோருக்கை விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார் இதை வீர‌ப்ப‌னின் ம‌னைவி கூட‌ அன்மையில் சொல்லி இருந்தா உங்க‌ளுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற‌ நினைப்பை முத‌ல் கைவிடுங்கோ.........................வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ ம‌ண்ணில் வைச்சு தான் க‌ண் ஒப்பிரேச‌ன் செய்ய‌ திட்ட‌ம் போட்ட‌வை ஈழ‌த்துக்கு வெளிக்கிட‌ சில‌ நாட்க‌ளுக்கு முன்பு வீர‌ப்ப‌ம் விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்...................... ஆம் வீர‌ப்ப‌ன் என் குல‌சாமி இதை நான் யாழில் 4வ‌ருட‌த்துக்கு முத‌லே எழுதி நான்........................வீர‌ப்ப‌னின் நேர்மை ஒழுக்க‌ம் கொண்ட‌ கொள்கை வீர‌ப்ப‌ன் கூட‌ ப‌ழ‌கின‌வைக்கு தான் தெரியும்............................... வீர‌ப்ப‌ன் 1993 அந்த‌ கால‌ப் ப‌குதியில் கொடுத்த‌ பேட்டிய‌ பாருங்கோ எங்க‌ட‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ போராட்ட‌த்தை எப்ப‌டி எல்லாம் நேசித்த‌ ம‌னித‌ர் என்று.............................. நீங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூற‌ விட‌ சீமான் பெரிதாக‌ ப‌ர‌ப்ப‌ வில்லை ஹா ஹா ம‌று ப‌டியும் சொல்லுறேன் உங்க‌ட‌ கூவ‌ல் யாழில் ம‌ற்றும் போலி முக‌ நூலில் ம‌ட்டும் தான் கேட்க்கும் அதை தாண்டி போகாது ப‌டித்த‌ பிள்ளைக‌ள் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை புரிந்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ளை பின் தொட‌ர்வ‌து கிடையாது......................... இப்போது இருக்கும் ஆதிமுக்கா திமுக்காவை விட‌ ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு வெற்ற‌ர்.............................

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே? பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும். ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும். எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள். சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை. ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன. சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

எனது அறிமுகம் 

3 weeks 5 days ago
அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய??????? கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக் குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....அன்பு செய்ய சொல்லிய தையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ???? எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்.... மீண்டும் மீண்டும்.... எது வரை....?? மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம். உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
நீங்க‌ள் சொன்னாப் போல‌ ஒட்டு மொத்த‌ ஈழ‌த‌மிழ‌ர்க‌ளும் கேட்டு ந‌ட‌ந்து விடுவின‌ம் தானே😂😁🤣 த‌மிழ‌ர்க‌ள் எங்கெல்லாம் வ‌சிக்கின‌மோ அங்கெல்லாம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிளைக‌ள் இருக்கு..................யாழுக்கு வெளியில் ப‌ல‌ ஆயிர‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமான் பின்னால் தான் நிக்கினம் ஆன‌ ப‌டியால் வீனா போவ‌து உங்க‌ட‌ நேர‌ம் தான்..............................புரிந்து செய‌ல் ப‌டுங்கோ.......................... 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது உங்க‌ளை மாதிரி சிறு கூட்ட‌ம் சீமானை சீண்டினார்க‌ள் பொது வெளியில் வேலை பார்க்கும் ந‌ப‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஒரு காணொளி மூல‌ம் ந‌ச்ச‌ன‌ ஒரு ப‌தில் அதோட‌ அட‌ங்கிட்டின‌ம் த‌மிழ் நாட்டில் ப‌டிச்ச‌ இளைஞ‌ர்க‌ள் ஜ‌ப்பாம் அமெரிக்கா ஜ‌ரோப்பா என்று ப‌ல‌ நாட்டில் வேலை செய்கின‌ம் அவ‌ர்க‌ள் எல்லாம் லீவு போட்டு விட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌வை இந்த‌ தேர்த‌லில் உங்க‌ளால் முக‌ நூலில் போலி ஜ‌டியில் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் கூவ‌த் தான் முடியும் ஆனால் உங்க‌ட‌ கூவ‌ல் நீண்ட‌ தூர‌ம் கேட்க்காது.........................

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்

3 weeks 5 days ago
சாதாரண தமிழை புரியாது, விஞ்ஞானத்தை, தமது பிம்பப்படி, பிரயோகிக்க எத்தனிக்கும் விஞ்ஞான அதிமேதாவி கொசுக் கடி தொல்லை தாங்க முடியவில்லை. இவ்வளவுக்கும், சுழித்தோ, நெளித்தோ எழுதவில்லை. இப்போதைய ஈரான் சனத்தின் பொது நிறத்தை வைத்து - அந்த நேர எந்த சனத்தின் நிறத்தை சொல்லலாம். (இந்த விஞ்ஞான விளக்கத்தின் படி , குளிர் பிரித்தானியாவில், தொடக்க ( ~ 12, 000) கறுப்பர் இருந்து இருக்க கூடாது.) அதுவும் சொந்த மொழியையும், விஞ்ஞானத்தையும் போட்டு குழப்பி, உணர்வு கொப்பளிக்கும் கொசு கடி தொல்லை. எடுகோள் கொசு கடி, மற்றவர்கள் எதோ ஒரு வழியால் வரலாம், திராவிடர் வனத்தில் இருந்து விழுந்து முளைத்தவர்கள். கப்பில், விவிலியம் சொல்லுவது கொசு கடி பிம்பத்துக்கு ஆகா, ஓகோ. அதில் உள்ள அடையாள வேறுபாடு கூட தெரியவில்லை. அப்போ மகாவம்சத்தை ஏற்று கொண்டு, orientalists சொன்ன இலங்கைத் தீவு சிங்கள தீவு என்று சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தானே. (அதை தான் வாழைப்பழ ஊசி ஏற்றுகிறார்களோ என்பது- வாசகர் தீர்மானிக்க வேண்டியது).

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்

3 weeks 5 days ago
அதுதான் ஈரான் சனாதிபதி வாறரே...வரும்போது 2 கலன் பெற்றோல் கையுடன் கொண்டு வந்திட்டால் போச்சு..

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க. அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த. திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை. இரெண்டுமே அதிமுக. அடித்தும் திருத்த முடியாத கழுதைகள். இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி….. ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣. 2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣. இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன். உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் கட்டுப்பணம் இழக்காது என்று ஊகத்தைச் சொல்லுங்கள். ஒரு தொகுதியிலும் வெல்லப் போவதில்லை. ஆனால் ஏன் போட்டியிடுகின்றார்கள்? கிடைக்கும் வாக்குகளின் வீதத்தை வைத்து எதிர்காலக் கூட்டணிகளில் பேரம் பேசத்தான். பா.ம.க. பிஜேபியுடன் கூட்டில் சேர்ந்ததும் இந்தக் கணக்கில்தான். சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில் திமுக, அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேரத்தில் ஈடுபட இந்தத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் முக்கியம்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
அப்ப‌ என்ன‌த்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய‌ திரிக்குள் நின்று முக்கிறீங்க‌ள் உங்க‌ட‌ வேலைய‌ பார்க்க‌ வேண்டிய‌து தானே..........................என‌து நினைவில் சீமான் ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் நூறு த‌ட‌வைக்கு மேல் உங்க‌ளுக்கு விள‌க்கி விட்டேன்..................எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுத‌ யாழில் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ ச‌லித்து போய் விடும்................................... சீமானை திருத்த‌ முடியும் க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது............................ த‌லைவ‌ர் 2008க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ள் ம‌ற்றும் சில‌ காணொளிக‌ள் வேனும் என்று கேட்டாராம்....................த‌மிழ‌க‌ வாழ்வுரிமை க‌ட்சி த‌லைவ‌ர் அண்ண‌ன் மேல் முருக‌னிட‌ம் இருந்து 2008ம் ஆண்டே தான் வ‌ன்னிக்கு அனுப்பி விட்ட‌தாய் அன்மையில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வ‌தெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் தான் த‌லைவ‌ர் இப்ப‌டி ப‌ட்ட‌ குழு 2009க்கு முத‌ல் எம் த‌லைவ‌ருக்கு பின்னால் குத்தாம‌ல் இருந்து இருப்பார்க‌ளா என்று என்னை அறியாம‌லே யோசிப்ப‌துஉண்டு.............................................

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகொப்டர் – இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி !

3 weeks 5 days ago
கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகளை தொடக்கியுள்ள அந்நாட்டு அரசு, விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு அமைத்துள்ளது. கென்யா இராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்த ஒகோலா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு கென்யா நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒகோலா அந்தப் பகுதிக்குச் சென்றதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விபத்தா, அல்லது சதிவேலையா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. https://thinakkural.lk/article/299717

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகொப்டர் – இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி !

3 weeks 5 days ago
கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி விபத்து

கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது.

அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கென்யா நாட்டு ராணுவ தளபதி பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழப்பு

இதையடுத்து மீட்பு பணிகளை தொடக்கியுள்ள அந்நாட்டு அரசு, விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு அமைத்துள்ளது.

கென்யா இராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்த ஒகோலா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு கென்யா நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒகோலா அந்தப் பகுதிக்குச் சென்றதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விபத்தா, அல்லது சதிவேலையா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

https://thinakkural.lk/article/299717