Aggregator

யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை.

3 weeks 5 days ago
ஆளுனர் போலிசில் முறைப்பாடு செய்யும் அளவுக்கு பத்திரிகையாளர் என்னத்தை எழுதினார்? சிமார்ட் போன், சமூக ஊடகங்களின் வரவின் பின் இப்போது எல்லாரும் ஊடகவியலாளர்கள். பத்திரிகையாளருக்கு எதையும் எழுதுவதற்கு உரிமை உள்ளது என்றால் ஆளுனருக்கு போலிசில் முறைப்பாடு செய்வதற்கு உரிமை இல்லையா?

மைத்திரிபால இராஜினாமா?

3 weeks 5 days ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தோவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள். சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் ஓற்றுமையாக இருந்த இனம் மீது, விஷ விதையை விதைத்து... சிங்கப்பூர் மாதிரி இருக்க வேண்டிய நாட்டை குட்டிச் சுவராக்கியதன் பலனை அந்தக் கட்சி அனுபவிக்கின்றது.

அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்

3 weeks 5 days ago
விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள். ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது. இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள். இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
தாத்தா என் கூட‌ நீங்க‌ள் ம‌ல்லுக் க‌ட்டுவ‌தை தான் சொல்ல‌ வ‌ந்தார் ஹா ஹா..........................அவ‌ர் தன் த‌லையில் ம‌ண் அள்ளி போட‌ மாட்டார் ஹா ஹா........................................ வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சியை பார்த்து ஏன் பொறாமை ப‌டுறீங்க‌ள் 1 , 3 , 7 , 10 , இப்ப‌டி தாம் நாம் த‌மிழ‌ரின் வ‌ள‌ர்ச்சி இருக்கும்........................................... திமுக்காவுக்கு துணிவு இருக்கா த‌னித்து நிக்க‌ 2011க‌ளில் எதிர் க‌ட்சியா கூட‌ அவ‌ர்க‌ளால் வ‌ர முடிய‌ வில்லை ஹா ஹா

ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது

3 weeks 5 days ago
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது Posted on April 23, 2024 by தென்னவள் 20 0 ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது – குறியீடு (kuriyeedu.com)

ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது

3 weeks 5 days ago
ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது

2100083-spy-300x180.webpஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர்.

இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் சீனாவுக்கு உளவு பார்த்த 3 பேர் கைது – குறியீடு (kuriyeedu.com)

யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை.

3 weeks 5 days ago
யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை. Posted on April 23, 2024 by தென்னவள் 18 0 யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.யாழ். ஊடக அமையம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களிற்கு சேவையாற்றவென அரச நிதியிலிருந்து சம்பளம் பெறுகின்ற எந்தவொரு அரச பணியாளரும் தமது சேவைகள் தொடர்பில் சமானியன் ஒருவனது விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியவர்கள் என்பது பரகசியமான தொன்றல்ல. அவ்வகையில் வடக்கு ஆளுநரும் அவரது நிர்வாக கட்டமைப்பும் விதிவிலக்காகவும் முடியாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கழுத்தை நெரித்து தடுக்க ஆட்சியாளர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவது தெரிந்ததொன்றே. அதிலும் சமூக ஊடகங்களை முடக்கிவிடவென இலங்கை அரசு அனைவரது எதிர்ப்புக்களிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றது. ஆனால் ஆட்சியாளர்களோ தேர்தல் வெற்றிக்கான கனவில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிவிட தொடர்ந்தும் முனைப்பு காண்பித்தே வருகின்றனர். இத்தகைய சூழலில் நல்லாட்யொன்றை எதிர்பார்த்து தீட்டப்பட்ட ஆசிரிய தலையங்கமொன்றிற்கு எதிராக பொலிஸாரைப் பயன்படுத்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை மிரட்டி அடிபணிய வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை கேலிக்குரியதொன்றாகவே உள்ளது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள திராணியற்றதாகவோ அல்லது பாராட்டத்தக்க நிர்வாக கட்டமைப்பு ஒன்றினை தோற்றுவித்து பாராட்டு பெற்றுக்கொள்ளவோ வடக்கு ஆளுநர் தவறியே உள்ளமை இத்தகைய அச்சுறுத்தல் பாரம்பரியத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய ஊடகத்துறை கடந்து வந்திருந்த பாதையொன்றும் மகிழ்ச்சிகரமானதாக கடந்த காலங்களில் இருந்திருக்கவில்லை. அது மரணங்களும் வலிகளும் நிரம்பியதாகவே இருந்திருந்தது. வடகிழக்கு தமிழர் தாயகங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீது கடந்த காலங்களில் அரச இயந்திரம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளால் 39 பேர் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஊடகவியலளார்கள் நாட்டை விட்டு உயிருக்கஞ்சி வெளியேறிய இருண்ட நாட்கள் பற்றியெல்லாம் வடக்கு ஆளுநர் சிலவேளைகளில் அறிந்திருக்காதிருக்கலாம். ஆனால் அவற்றினையெல்லாம் தாண்டி பயணித்த ஊடக வரலாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களிற்கும் பணியாற்றிய ஊடகவியலாளர்களிற்கும் உள்ளதென்பதை மீண்டுமொரு முறை ஆளுநர் கவனத்திறகு எடுத்து செல்ல விரும்புகின்றோம். ஊடகவியலாளர்களது மரணங்களிற்கு நீதி கோரிய கோவைகள் பலவும் இதே பொலிஸ் களஞ்சியங்களில் கிடப்பிலுள்ளமையும் இரகசியமொனதொன்றல்ல. அவ்வகையில் மக்கள் வரிப்பணத்தில் நல்லதொரு மக்கள் சேவையினை வடமாகாணசபை வழங்கவேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கங்களை தம்மை செம்மைப்படுத்த முன்வைக்கப்பட்டதொரு கருத்தாக கவனத்தில் கொள்ள வடக்கு ஆளுநர் தவறியமை நல்லாட்சி தொடர்பில் கேள்விகளையே எழுப்பி நிற்கின்றது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிய பின்னராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் சர்வாதிகாரத்தின் சின்னமாக பார்க்கப்படுமென்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றுள்ளது. யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை – குறியீடு (kuriyeedu.com)

யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை.

3 weeks 5 days ago
யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை.

jhc-300x200.jpgயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு எதிராக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொலிஸ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.யாழ். ஊடக அமையம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களிற்கு சேவையாற்றவென அரச நிதியிலிருந்து சம்பளம் பெறுகின்ற எந்தவொரு அரச பணியாளரும் தமது சேவைகள் தொடர்பில் சமானியன் ஒருவனது விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியவர்கள் என்பது பரகசியமான தொன்றல்ல.

அவ்வகையில் வடக்கு ஆளுநரும் அவரது நிர்வாக கட்டமைப்பும் விதிவிலக்காகவும் முடியாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடொன்றில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கழுத்தை நெரித்து தடுக்க ஆட்சியாளர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவது தெரிந்ததொன்றே.

அதிலும் சமூக ஊடகங்களை முடக்கிவிடவென இலங்கை அரசு   அனைவரது எதிர்ப்புக்களிற்கும் மத்தியில் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றது.

ஆனால் ஆட்சியாளர்களோ தேர்தல் வெற்றிக்கான கனவில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிவிட தொடர்ந்தும் முனைப்பு காண்பித்தே வருகின்றனர்.

இத்தகைய சூழலில் நல்லாட்யொன்றை எதிர்பார்த்து தீட்டப்பட்ட ஆசிரிய தலையங்கமொன்றிற்கு எதிராக பொலிஸாரைப் பயன்படுத்தி நாளிதழ் ஒன்றின் ஆசிரியரை மிரட்டி அடிபணிய வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை கேலிக்குரியதொன்றாகவே உள்ளது.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள திராணியற்றதாகவோ அல்லது பாராட்டத்தக்க நிர்வாக கட்டமைப்பு ஒன்றினை தோற்றுவித்து பாராட்டு பெற்றுக்கொள்ளவோ வடக்கு ஆளுநர் தவறியே உள்ளமை இத்தகைய அச்சுறுத்தல் பாரம்பரியத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் தேசிய ஊடகத்துறை கடந்து வந்திருந்த பாதையொன்றும் மகிழ்ச்சிகரமானதாக கடந்த காலங்களில் இருந்திருக்கவில்லை. அது மரணங்களும் வலிகளும் நிரம்பியதாகவே இருந்திருந்தது.

வடகிழக்கு தமிழர் தாயகங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீது கடந்த காலங்களில் அரச இயந்திரம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளால் 39 பேர் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான ஊடகவியலளார்கள் நாட்டை விட்டு உயிருக்கஞ்சி வெளியேறிய இருண்ட நாட்கள் பற்றியெல்லாம் வடக்கு ஆளுநர் சிலவேளைகளில் அறிந்திருக்காதிருக்கலாம்.

ஆனால் அவற்றினையெல்லாம் தாண்டி பயணித்த ஊடக வரலாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களிற்கும் பணியாற்றிய ஊடகவியலாளர்களிற்கும் உள்ளதென்பதை மீண்டுமொரு முறை ஆளுநர் கவனத்திறகு எடுத்து செல்ல விரும்புகின்றோம்.

ஊடகவியலாளர்களது மரணங்களிற்கு நீதி கோரிய கோவைகள் பலவும் இதே பொலிஸ் களஞ்சியங்களில் கிடப்பிலுள்ளமையும் இரகசியமொனதொன்றல்ல.

அவ்வகையில் மக்கள் வரிப்பணத்தில் நல்லதொரு மக்கள் சேவையினை வடமாகாணசபை வழங்கவேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கங்களை தம்மை செம்மைப்படுத்த முன்வைக்கப்பட்டதொரு கருத்தாக கவனத்தில் கொள்ள வடக்கு ஆளுநர் தவறியமை நல்லாட்சி தொடர்பில் கேள்விகளையே எழுப்பி நிற்கின்றது.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்கிய பின்னராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் சர்வாதிகாரத்தின் சின்னமாக பார்க்கப்படுமென்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றுள்ளது.

யாழில் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக ஆளுநரின் நடவடிக்கை – குறியீடு (kuriyeedu.com)

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
நான் யாழை தவிர வேறு எங்கும் எழுதுவதில்லை. பராக்கு பார்ப்பதோடு சரி. வேறு எங்கும் எழுத வேண்டிய தேவையும் எனக்கில்லை. என்னை பொறுத்து ஈழதமிழரின் அபிப்பிராயம் எனபதை அறிய யாழை தவிர வேறு திறமான இடம் இல்லை. பேச்சோடு பேச்சாக உங்களை சின்னப்பொடியள் லிஸ்டில் சேர்துள்ளதை கண்டிக்கிறேன்🤣. ஈழத்தமிழர் பெரும்பான்மையானோர் இன்றும் தமிழக அரசியலில் நடு நிலமைதான். சோசல் மீடியாவில் நாதக ஆதரவு உள்ளது ஆனால் தமிழ் நாட்டு தேர்தலில் 10% தாண்ட முக்கும். அதே போலதான் ஈழதமிழரில் உரக்க கத்துதும் சிறுபான்மை நாதக விசுவாசிகள். ஆனால் பெரும்பான்மை கட்சி சாராதோர்.

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
இப்ப‌ தெரியுதா ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் உறுதியான‌ கொள்கையில் நிப்ப‌வ‌ர்க‌ளை மாற்ற‌ம் செய்ய‌ முடியாது....................... சீமாம் 2013ம் ஆண்டு ஈழ‌த‌மிழ‌ர்க‌ளின் க‌டும் எதிர்ப்புக்கு ஆள் ஆகின‌வ‌ர் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் சீமானை ஆத‌ரிச்சாலும் அவ‌ர் விடும் பிழைக‌ளை சுட்டி காட்டி இருக்கின‌ம் ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை கோஷான்............................................................ அங்கை இவ‌ரின் ப‌ருப்பு வேக‌து யாழில் ஆவ‌து இவ‌ரின் க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளி இட‌ ஒரு சில‌ அப்பாவிக‌ள் இருக்கின‌ம் ஹா ஹா😁...........................................

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை

3 weeks 5 days ago
ஐ.நா.சபை ஒரு தோல்வியுற்ற அமைப்பாகிப் பதினைந்து ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. ஈழத்திற் தமிழின அழிவுக்கு மௌனமாக அனுமதித்து வெளியேறியபோதே அதனது தாற்பரியம் உலகறிந்தது. ஐ.நாவை அமெரிக்க அவையென்பதே பொருந்தும். நன்றி

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை

3 weeks 5 days ago
ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை 2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய இரு இராணுவ வல்லுனர்கள் கொல்லப்பட்ட அனைவரும் குண்டுத்தாக்குதலில் நேரடியாகவும், குண்டுச்சிதரல்களால் பின்னரும் கொல்லப்பட்டனர் என்றும், அமெரிக்கத் துருப்பினரின் துப்பாக்கித் தாக்குதலிலோ அல்லது இங்கிலாந்துத் துருப்பினரின் தாக்குதலிலோ கொல்லப்படவில்லை என்றும் விசாரணைகளை நிறைவுசெய்திருந்தனர். ஆனால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆப்கானியர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்களைத் தாம் பார்த்ததாகக் கூறியிருந்தனர். இதனையும் மறுத்த அமெரிக்க அரசாங்கம், துருப்பினர் வான் நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை மட்டுமே சுட்டதாகவும் மக்களை நோக்கியல்ல என்றும் கூறியிருந்தது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் சாட்சியங்களின்படி, கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானவர்கள் அமெரிக்கத் துருப்பினரின் நேரடித் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. தாக்குதல் நடந்தவேளை தனது GO PRO கமெராவில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேலாக அங்கு நடந்தவற்றை ஒரு அமெரிக்க வீரர் படமாக்கியிருக்கிறார். அத்துடன் இன்னும் இரு வீரர்கள் அமெரிக்கத் துருப்புக்கள் மக்கள் மீது சுட்டதைத் தாம் கண்டதாகக் கூறுகிறார்கள். இவர்களை விடவும் காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் ஒருமுறை இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களும், அந்த ஐந்து நிமிட நேர ஒளிப்படமும் சி என் என் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. https://edition.cnn.com/2024/04/24/world/new-evidence-challenges-pentagon-account-kabul-airport-attack-intl/index.html

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை

3 weeks 5 days ago

ஆப்கானிஸ்த்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியபோது நடந்த படுகொலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்க வீரர்களால் நடத்தப்பட்டவை

 

2021 ஆம் ஆண்டு ஆவணியில் அமெரிக்கப்படை அவசர அவசரமாக ஆப்கானிஸ்த்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பொழுது, அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கப் படைகளுடன் விமானம் ஏறித் தப்பித்துக்கொள்ள காபூல் விமான நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றனர். 

இந்தச் சனக்கூட்டத்தை அவதானித்த ஐஸிஸ் பயங்கரவாதிகள், மக்கள் கூட்டத்திற்கு நடுவே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடத்த பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களுள் 13 அமெரிக்கத் துருப்பினரும், 170 ஆப்கானியர்களும் அடங்கும். இத்தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்திய இரு இராணுவ வல்லுனர்கள் கொல்லப்பட்ட அனைவரும் குண்டுத்தாக்குதலில் நேரடியாகவும், குண்டுச்சிதரல்களால் பின்னரும் கொல்லப்பட்டனர் என்றும், அமெரிக்கத் துருப்பினரின் துப்பாக்கித் தாக்குதலிலோ அல்லது இங்கிலாந்துத் துருப்பினரின் தாக்குதலிலோ கொல்லப்படவில்லை என்றும் விசாரணைகளை நிறைவுசெய்திருந்தனர்.

ஆனால், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆப்கானியர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், பலரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்களைத் தாம்   பார்த்ததாகக் கூறியிருந்தனர். இதனையும் மறுத்த அமெரிக்க அரசாங்கம், துருப்பினர் வான் நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை மட்டுமே சுட்டதாகவும் மக்களை நோக்கியல்ல என்றும் கூறியிருந்தது.

ஆனால், தற்போது கிடைத்திருக்கும் சாட்சியங்களின்படி, கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானவர்கள் அமெரிக்கத் துருப்பினரின் நேரடித் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. தாக்குதல் நடந்தவேளை தனது GO PRO கமெராவில் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேலாக அங்கு நடந்தவற்றை ஒரு அமெரிக்க வீரர் படமாக்கியிருக்கிறார். அத்துடன் இன்னும் இரு வீரர்கள் அமெரிக்கத் துருப்புக்கள் மக்கள் மீது சுட்டதைத் தாம் கண்டதாகக் கூறுகிறார்கள். இவர்களை விடவும் காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் ஒருமுறை இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 

இதுகுறித்த மேலதிக விபரங்களும், அந்த ஐந்து நிமிட நேர ஒளிப்படமும் சி என் என் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

https://edition.cnn.com/2024/04/24/world/new-evidence-challenges-pentagon-account-kabul-airport-attack-intl/index.html

 

 

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂 முடிந்தால் x சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
அப்படி யாரும் சொல்லவில்லை. ஆனால் ஈழத்தமிழர் தளங்களில் எல்லாம், நாதக அபிமானம், திக,திமுக, அதிமுக, விசிக, மதிமுக மீதான விமர்சனம் மட்டுமே முன்வைக்கப்படின் - அப்படி ஒரு மாயத்தோற்றம் எழுவது தவிர்க்கவியலாலது.

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

3 weeks 5 days ago
முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர‌ வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட‌ அவர்களை கறுப்பு யூலையில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன‌ என்பது நாம் தெரியாதது அல்ல. இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்க‌ப்படுவர், நீங்கள் எப்பிடி?