ஊர்ப்புதினம்

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

1 month 2 weeks ago

12 Sep, 2025 | 05:49 PM

image

(எம்.மனோசித்ரா)

சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் என்றும், இன்று நாட்டில் அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியாழக்கிழமை (11) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியியேறியிருந்த அவர் வெள்ளிக்கிழமை (12) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்ட மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வியாழன் (11) மாலை நான் வெளியேறினேன். இதற்கு முன்னர், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சிலர் ஊடகங்கள் முன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததை நான் கண்டேன்.

மக்களுக்கு எதையும் செய்ய இயலாமல் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், அவர்கள் புதிய சட்டங்களை இயற்றிய பிறகு, 24 மணி நேரத்திற்குள் நான் விஜேராம இல்லத்திற்கு விடை கொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன்.

தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக, அதன் விளைவாக எழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக நான் ஒருபோதும் வருந்த மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன்.

சுவாசம் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. இதில் இன, மத பேதங்கள் இல்லை. நம் சுவாசத்திற்காக தங்கள் சுவாசத்தை இழந்தவர்கள் இராணுவ வீரர்கள். அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாம் அனைவரும் சேர்ந்து அநுராதபுரம் புனித நகரத்தில் சந்த ஹிரு சேயவை (சந்திரன் மற்றும் சூரியன் தாதுகோபுரம்) உருவாக்கினோம். சந்திரன், சூரியன் இருக்கும் வரை நமது தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை அது குறிக்கிறது.

எனது மூத்த மகன் நாமல் கூறியது போலவே, எல்லாம் தொடங்கிய எனது கிராமத்திற்கு நான் திரும்ப வந்துள்ளேன். நாம் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகவே நான் வந்தேன். இப்போது கிராமத்தில் புளிக்குழம்பில் உள்ள மீனை ருசித்து மகிழ என்னால் முடியும். கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எது எப்படி இருந்தாலும், எல்லாம் இந்த மண்ணிலிருந்துதான் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் போட்டியிட்டான்.

அதற்கான வாய்ப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க வழங்கினார். ஒரு இளம் அமைச்சராக நான் பயணிக்க வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவியாகவும், தாயாகவும் இருந்தார் என்றால் அது சரியானது. அரசியலில் சரியான வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்கவுக்கு பின்னால், ரூ{ஹணுவின் மக்கள் பிரதிநிதியாக இருந்த எனது அன்புக்குரிய தந்தை எப்போதும் காணப்பட்டார். எனது தந்தை ரூ{ஹணுவின் பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினராக, 1970 ஆம் ஆண்டு மக்கள் அரசாங்கத்தின் முதல் சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன்.

அங்கு பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணாமல் போனவர்களுக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி 'வழக்கறிஞர் மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்கல்லை' என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்.

பாதயாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். தங்கள் அரசியல் அழுத்தங்களையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்காக யாரும் ஜனநாயகத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியது.

மக்கள் எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளின் தீவிரம் காரணமாகவே கடந்த காலத்தில் சில சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மஹிந்த ராஜபக்ஷ தன் மனசாட்சிக்கு இணங்க நாட்டிற்காக முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது வேறு எதுவும் இல்லை. கடந்த காலத்தில் பெற்ற அதே மக்கள் அன்பை இன்றும் அதே போல் பெறுவது எனக்குக் கிடைத்த பாக்கியம். அந்த பாக்கியத்தை யாரிடமும் இழக்க முடியாது.

மதத் தலைவர்களிடமிருந்து இடமிருந்து தினமும் நான் பெறும் ஆசீர்வாதம், பௌதீக வரப்பிரசாதங்களை விட மேலானது. எனது அன்பு மனைவி சிரந்தி, அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை அளித்து எனக்கு எப்போதும் பலமாக இருந்தார். அப்போதும், இப்போதும் என் அருகில் இருந்த மற்றும் இருக்கும் எனது பிரதான பாதுகாப்பு அதிகாரி உட்பட எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு, பணியைத் தாண்டிய ஒரு பாசமான பிணைப்பாகும். மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் வாழும் வரை, நாம் அனைவரும் வாழும் அல்லது ஒருநாள் அடக்கம் செய்யப்படும் சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கிறேன். அன்று தேவைப்பட்டால் எனக்குத் தோள் கொடுக்க இந்த நாட்டில் மகா சங்கரத்தினத்தை உள்ளடக்கிய அன்பு மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை.

https://www.virakesari.lk/article/224932

கீரிமலை நகுலேச்சரத்தில் தேர் இருப்பிட கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

1 month 2 weeks ago

12 Sep, 2025 | 04:35 PM

image

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் (12) அடிக்கல் நாட்டப்பட்டது.

41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான  வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.

IMG-20250912-WA0056.jpg

IMG-20250912-WA0054.jpg

IMG-20250912-WA0050.jpg

IMG-20250912-WA0057.jpg

IMG-20250912-WA0058.jpg

https://www.virakesari.lk/article/224920

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

1 month 2 weeks ago

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No image preview12K views · 319 reactions | அனைத்து போக்குவரத்து பொலிஸாரு...
அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் - சிக்கப்போவது யார்..? #SriLankanPolitician #Srilankanpolice #TrafficPolice #tamilwin.

https://tamilwin.com/article/another-procedure-to-implemented-next-two-weeks-1757487619

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

1 month 2 weeks ago

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.

பிணையில் விடுதலை

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள் | Meeting Between Ranil And Chinese Ambassador

அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,  

முன்னாள் ஜனாதிபதிகளுடனான சீனத்தூதுவரின் சந்திப்பானது உள்நாட்டு அரசியலில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள் | Meeting Between Ranil And Chinese Ambassador

https://ibctamil.com/article/meeting-between-ranil-and-chinese-ambassador-1757659599#google_vignette

மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

1 month 2 weeks ago

மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

சமீபத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கமாண்டோ சாலிந்தா'வுக்கு ரி-56 தோட்டாக்களை விற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணலிடமிருந்து பல குற்றவியல் விஷயங்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியபோது, மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார், மேலும் அவர் ஒரு பாதாள உலகக் குழுவிற்கு 260 ரி-56 தோட்டாக்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஒன்றரை கோடிக்கு 

மேலும் விசாரித்ததில், கமாண்டோ சாலிந்தா தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து எல்எம்ஜி துப்பாக்கியை கோரியதாக அவர் கூறினார்.

மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் | Lt Colonel Arrested Illegal Weapons

இருப்பினும், லெப்டினன்ட் கேணல் அதை வழங்க முடியாது என்றும், கமாண்டோ சாலிந்தா தன்னிடம் 2 கிளேமோர் குண்டுகளை வழங்குமாறு கோரியதாகவும் கூறியுள்ளார்.

இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள்

பல்வேறு காரணங்களுக்காக இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தலைமறைவான உறுப்பினர்களின் விவரங்களை இந்த இராணுவ அதிகாரி கமாண்டோ சாலிந்தாவுக்கு வழங்கியதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஒரு தனி குழுவை உருவாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் | Lt Colonel Arrested Illegal Weapons

இந்த இராணுவ அதிகாரி இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு வழங்கியதாக பாதுகாப்புப் படையினரிடையே சில சந்தேகங்கள் உள்ளன.

இந்த இராணுவ அதிகாரி அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அடிக்கடி இரவு விடுதிகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது.

https://ibctamil.com/article/lt-colonel-arrested-illegal-weapons-1757612476

மன்னாரில் பறவைகள் கடத்தல்; இருவர் கைது

1 month 2 weeks ago

Published By: Digital Desk 3

12 Sep, 2025 | 11:35 AM

image

மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர்.

கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பறவைகள் மற்றும்  படகுடன்  சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/224884

ஹெந்தலவிலுள்ள ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜப்பான் தூதுவர் விஜயம்

1 month 2 weeks ago

Published By: Priyatharshan

12 Sep, 2025 | 10:46 AM

image

வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார். 

1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது. 

1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 

2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான

தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும்.

வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். 

தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

WhatsApp_Image_2025-09-11_at_14.32.56.jp

WhatsApp_Image_2025-09-11_at_14..jpg

Image__1___1_.jpg

https://www.virakesari.lk/article/224878

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

1 month 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது.

இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது.

சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும்.

இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயல்பட்டதாக பொலிஸார் தகவல்

1 month 2 weeks ago

12 Sep, 2025 | 10:08 AM

image

“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக  குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில்,  “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த  கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224874

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல : பெரியோர்களுக்கு அறிவுரை கூறுகிறார் பிரதமர் ஹரிணி

1 month 2 weeks ago

Published By: Priyatharshan

12 Sep, 2025 | 09:52 AM

image

( வீ. பிரியதர்சன் )

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு  ITC ரத்னதீப் ஹோட்டலில் வியாழக்கிழமை (செப்டம்பர் 11 ) நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,

சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார்.

தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய சமூகத் தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து பாதுகாப்பது நமது பணியல்ல, மாறாக, அதனை புத்திசாலித்தனமாகவும், விமர்சன ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மாற்ற அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.

இலங்கையின் கல்வி முறையை அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, மற்றும் உறுதியானதாக மாற்றுவதற்காக, அரசாங்கம் ஒரு பல்துறை சார்ந்த பணிக்குழுவை அமைத்துள்ளதை வலியுறுத்தினார். இந்த பணிக்குழுவில் அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-09-11_at_20.23.43.jp

WhatsApp_Image_2025-09-11_at_20.23.44__1

WhatsApp_Image_2025-09-11_at_20.23.42.jp

WhatsApp_Image_2025-09-11_at_20.23.44.jp

WhatsApp_Image_2025-09-11_at_20.23.45.jp

WhatsApp_Image_2025-09-11_at_20.23.47.jp

WhatsApp_Image_2025-09-11_at_20.23.41.jp

https://www.virakesari.lk/article/224872

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

1 month 3 weeks ago

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

September 12, 2025 10:13 am

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுக்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசாங்க வீட்டை விட்டு வெளியேற இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாது எனவும் அவர் வலயுறுத்தியுள்ளார்.

சீரமைப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால் அதற்கும் குறைவான காலப்பகுதியில் அரசாங்க வீட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு செய்து கொண்டு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் குணமடைந்து வருவதாகக் கூறிய அவர், மேல் மாடியிலிருந்து கூட கீழே நகர முடியவில்லை என்றார்.

“சில புதுப்பித்தல் பணிகள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வீட்டைக் கண்டுபிடித்தேன். என் மகன் ஒரு வாரம் வந்து எனக்கு உதவுவதாகச் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் விழுந்து என் இடுப்பு எலும்பு முறிந்தது. எனக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை.

எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது. எனவே, அந்த புதிய வீட்டில் தற்போது என்னால் நகரவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாது,” என்று அவர் கூறினார்.

புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி தனது வாழ்நாள் முழுவதும் தற்போதைய இடத்தில் வாழ அனுமதி கேட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார்.

எனினும், அது மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஓய்வு பெற்ற பிறகு அது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக ஒதுக்கப்பட்ட பிறகு, அதைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக ஏற்கனவே 14 மில்லியன் ரூபாய் செலுத்திவிட்டதாகவும் கூறினார்.

“நான் இங்கு வந்தபோது, இங்கே ஒரு புல் கூட இருந்திருக்கவில்லை. அது வெறும் சரளைக் கற்கள் மட்டுமே. நான் நிலத்தோற்றப் பணிகளைச் செய்து முடித்தேன்.

அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது,” என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான எனது கடிதப் பரிமாற்றத்தில், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரிக்கப்படாத ஒரே நபர் தான் என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

“நான் எந்தத் தவறும் செய்யவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு கொழும்பில் வீடு இல்லை. என்னுடைய ஒரே வீடு ரோஸ்மீட் பிளேஸில் இருந்தது. நான் அதை விற்றுவிட்டேன். அந்தப் பணத்தில் நான் வாழ்கிறேன். நான் ஊழலில் ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்

https://oruvan.com/i-will-move-out-of-the-house-in-two-months-chandrika-kumaratunga/

ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

1 month 3 weeks ago

ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

12 Sep, 2025 | 10:30 AM

image

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த  ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அரசியல் அதிகாரம் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக  உள்ளூராட்சி நிறுவனங்களை பயன்படுத்தும் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முடிவுக்கு வந்துள்ளது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். 

 நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக  மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட  வரவு செலவுத் திட்ட  ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு  செய்வதற்காகவும் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக்  கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலைகள் குறித்து  விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளும் இங்கு ஆராயப்பட்டன.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் நாட்டிற்கு கிடைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் விசேட  திட்ட அலுவலகங்களை நிறுவி அதற்காக பாரிய நிர்வாக செலவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மக்களுக்கு அதன்  நன்மைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பாடசாலை கட்டமைப்பை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.  வலய மட்டத்தில் ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று அவற்றை நெருக்கமாக ஆராய்ந்து , அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான சிறந்த தீர்வை முன்வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர்  கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள்  மற்றும் நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள்  இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

Budget_Discussion_2026-__Provincial_Coun

Budget_Discussion_2026-__Provincial_Coun

Budget_Discussion_2026-__Provincial_Coun

Budget_Discussion_2026-__Provincial_Coun

Budget_Discussion_2026-__Provincial_Coun

Budget_Discussion_2026-__Provincial_Coun


https://www.virakesari.lk/article/224875

அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

1 month 3 weeks ago

அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

12 Sep, 2025 | 10:44 AM

image

அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம்  09ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்காக மோசடி செய்தமைக்காக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும் என குறித்த வழக்கினை தாக்கல்செய்த புலம்பெயர் தொழிலதிபரான கிறிஸ்டி குணரெட்னம் தெரிவித்தார்

https://www.virakesari.lk/article/224876

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

1 month 3 weeks ago

25-677f965c6f35d.webp?resize=600%2C375&s

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72  பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும் நாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதரகமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் சோதனை சாவடிகள் போடப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 34 துப்பாக்கிதாரிகளும், ஒத்தாசை வழங்கியவர்கள் உட்பட 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் டுபாய், இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ்ர்லாந்து, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமான முறையில் பதுங்கியுள்ளார்கள்.

இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல நாம் இடமளிக்கடாட்டோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446907

’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன்

1 month 3 weeks ago

’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன்

முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11)  அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.
 
 மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி   வாழ ஆரம்பித்தனர். அது  நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர். இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர்.

இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள், நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம், பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன .

இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர்.

குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன.

மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன .

இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர்.

முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர். அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும். அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். 

https://www.tamilmirror.lk/செய்திகள்/முள்ளிக்குளம்-கிராமத்தை-முற்றாக-அபகரித்து-விட்டனர்/175-364454

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

1 month 3 weeks ago

New-Project-167.jpg?resize=750%2C375&ssl

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது .

இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை சனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்”

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுகிறது.

இந்நிகழ்வில் சீன தூதுவராலயத்தின் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2025/1446908

தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர!

1 month 3 weeks ago

தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு;

புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர!

103374540.jpeg


 
பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் .

மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள். அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பைத் தோற்கடித்து 30 வருடகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிக்கடன் செலுத்துவது- என்றார்.

https://newuthayan.com/article/தமிழ்_டயஸ்போராக்களுக்காக_மஹிந்தவின்_மாளிகை_பறிப்பு;

நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!

1 month 3 weeks ago

New-Project-164.jpg?resize=750%2C375&ssl

நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளார்.

இதில், CEB உள்ளிட்ட ஒரு குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (11) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் அசாதாரண நடவடிக்கை இலங்கையில் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி சட்டத்தரணி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

https://athavannews.com/2025/1446888

வெளிநாடுகளில் இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

1 month 3 weeks ago

மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது

Published By: Vishnu

11 Sep, 2025 | 06:33 PM

image

இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

"இந்த குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என்றார்.

இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலக குற்றங்களை ஒழிக்க பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

https://www.virakesari.lk/article/224853

யாழில் இராணுவ வாகனத்துடன் விபத்து - இளைஞன் படுகாயம்

1 month 3 weeks ago

11 Sep, 2025 | 10:12 AM

image

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/224784

Checked
Mon, 11/03/2025 - 05:41
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr