ஊர்ப்புதினம்

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

1 month 2 weeks ago

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்

adminSeptember 17, 2025

4-3-1.jpg?fit=1170%2C823&ssl=1

யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட  காவல்துறை அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் போது, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு  தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் மக்களிடம், நடந்தவற்றை கேட்டறிந்து காவல்துறையினரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் எடுத்து கூறினார். அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது என அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார்.

4-2-1.jpg?resize=800%2C544&ssl=14-4-1.jpg?resize=800%2C444&ssl=14-1-2.jpg?resize=800%2C493&ssl=1

https://globaltamilnews.net/2025/220449/

யாழ். உடுவில் பகுதியிலுள்ள 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை!

1 month 2 weeks ago

17 Sep, 2025 | 04:26 PM

image

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் துறை சார் அதிகாரிகளினால் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (16) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் அப்பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது.

அந்த அதிகாரி இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 5 பாடசாலைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப விவரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, அந்த மாணவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களும் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களாக உள்ளமை தெரியவந்துள்ளது.

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பது கிராம சேவையாளர் பிரிவுகளில் 5 கிராம சேவையாளர் பிரிவு போதைப்பொருள் தொடர்பான அடையாளப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் இவ்வருடம் தை மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளாக குறிப்பாக, பாடசாலை இடைவிலகல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொடர்பு, குடும்ப வன்முறை உள்பட 67 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே குறித்த பிரதேச பகுதிகளில் வழி தவறி செல்லுகின்ற பாடசாலை மாணவர்களை சரியான வழியை காட்டுவதற்கும், ஏனைய மாணவர்களை விழிப்படையச் செய்வதற்கும் அனைத்து தரப்பி னர்களையும் உள்ளடக்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/225315

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago

4-7.jpg?resize=750%2C375&ssl=1

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

 

0.jpg?resize=600%2C400&ssl=1 4-5.jpg?resize=600%2C450&ssl=1 4-8.jpg?resize=600%2C450&ssl=1

https://athavannews.com/2025/1447545

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பானவை - மைத்திரிபால சிறிசேன

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 12:00 PM

image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன் எனத் தெரிவித்த அவர், பொலன்னறுவைக்கு செல்ல விரும்பினாலும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொலன்னறுவையிலிருந்தே ஆட்சி செய்யதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை நான் சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவை முற்று முழுதாக போலியான தரவுகளாகும் என்றும், பாதுகாப்பு செலவுகளைக் கூட அவர்கள் எமது செலவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என்பதை அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனது ஆட்சி காலத்தில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை. நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/225217

இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினர்!

1 month 2 weeks ago

Published By: Priyatharshan

17 Sep, 2025 | 10:15 AM

image

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை (Peace Corps) வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள், வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மூன்று மாத காலப் பயிற்சிக்குப் பிறகு சேவை செய்ய உள்ளனர்.

இந்த அமைதிப் படையினர், இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்காக, மூன்று மாதங்களுக்கு முன்-சேவை பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள்.

பயிற்சிக்குப் பின்னர், அவர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சமூகங்களுடன் இணைந்து, ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் சமூக வாழ்க்கையின் அங்கமாகச் செயல்படுவார்கள்.

அமெரிக்காவின் மதிப்புகளான சேவை, அமைதி மற்றும் நட்பு ஆகியவற்றை இந்தத் தன்னார்வலர்கள், நட்புறவை வளர்ப்பதன் மூலமும், உண்மையான அயல் வீட்டாராக வாழ்வதன் மூலமும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அமைதிப் படையினரின் வருகை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மக்கள் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

G097X91aEAMd61H.jpeg

G097X-Hb0AAyQ9X.jpeg

https://www.virakesari.lk/article/225284

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!

1 month 2 weeks ago

New-Project-236.jpg?resize=750%2C375&ssl

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SLTB ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1447484

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை.

1 month 2 weeks ago

இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அந்தக் காலப்பகுதியில் 300,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் துறை வளர்ச்சி

எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை | Sri Lanka Faces Severe Job Shortage

உலக வங்கியின் துணைத் தலைவரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை

உலக வங்கியின் துணைத் தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாராட்டியுள்ளார்.

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை | Sri Lanka Faces Severe Job Shortage

மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

https://tamilwin.com/

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

1 month 2 weeks ago

Published By: Priyatharshan

16 Sep, 2025 | 01:00 PM

image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான  இருதரப்பு  இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறது. இந்தப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

549257127_2214785495687711_1457299062745

https://www.virakesari.lk/article/225220

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

1 month 2 weeks ago

1502462336.JPG

யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கடந்த தினங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக, அறுவடைசெய்யப்பட்டு, வயல்களில் உலரவிடப்பட்டிருந்த வெங்காயங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடத்தனைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள், வயல்களில் உலரவிடப்பட்டிருந்தன.

கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வயல்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால், வெங்காயங்களை உலரவிட முடியாது விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கடந்த ஆறுவருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு அறுவடை நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை விவசாயிகள் படகின்மூலம் ஏற்றிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு

முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 11:15 AM

image

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட  கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து  நேற்று திங்கட்கிழமை (15)  இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாகப்பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார்.

குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு  மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் கடலில் இருந்து பார்வையிடும் கரையில்தெரியும் வெளிச்சத்தைவிடவும் சட்டவிரோத வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டில் ஈடுபடுபடும் படகுகளின் வெளிச்சம் அதிகமாக தென்படுகின்றது.

அந்த அளவிற்கு மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம்பாச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் இந்தநிலமைகளை வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குநேரடியாக காண்பித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறான அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கடற்றொழிலாளர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்கமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே நேரடி களவிஜயத்தின்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆதாரப்படுத்தும்வகையில் சேகரிக்கப்பட்ட விடயங்களை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். 

IMG-20250915-WA0255.jpg

IMG-20250915-WA0269.jpg

IMG-20250916-WA0018.jpg


முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு | Virakesari.lk

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 11:56 AM

2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 95,119 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 85,667 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk

ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது!

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 03:24 PM

image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சீன பிரஜை  ட்ரோன் கமரா மற்றும் அதனை பறக்க விட பயன்படுத்திய பொருட்களுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சீன பிரஜை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தியவடன நிலமேவின் வீட்டை அண்டிய பகுதியில் ட்ரோன் கமராவை பறக்க விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது! | Virakesari.lk

புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமம்!

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 04:30 PM

image

புற்றுநோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் (Linear Accelerator) கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக  அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு ஐந்து லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு 2013ஆம் ஆண்டு திட்டமிட்டிருந்தது.

ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகள் காரணமாக லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை 2024ஆம் ஆண்டு வரை கொள்வனவு செய்ய முடியவில்லை. 

இருப்பினும், புதிய அரசாங்கத்தின் வருகையின் பின்னர் லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக அரசாங்கம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

ஆனால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் இந்த திட்டம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை.

இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.

எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கேட்டுக்கொண்டுள்ளார்.

புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமம்! | Virakesari.lk

யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம்

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 06:49 PM

image

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

அதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல் மற்றும் தாதியியல் துறைகளில் மூன்று பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இங்கு மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல், தாதியியல் மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பாடத்துறைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 952 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

இதன் காரணமாக, பீடத்திற்கு மோசமான உட்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக, விரிவுரை மண்டபங்கள், ஆய்வகம், ஆய்வுக்கட்டுரை அறை, பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடம் ஆகிய வசதிகளைக் கொண்ட ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம் | Virakesari.lk

வௌிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமைக்காக அமைச்சரவை எடுத்த முடிவு

1 month 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும். வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு.

சமகால தேர்தல் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.

ஆயினும், இந்தியா, பங்களாதேசம், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டரீதியான மூலோபாயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டிலுள்ள பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmfmak1yi00fxqplpalcpcg9z

அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகம்

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 11:12 AM

image

(எம்.மனோசித்ரா)

அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும் வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் முறை கையொப்பங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும், இந்த தொழில்நுட்பத்தை கிராம அலுவலர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த முயற்சிக்கு அமைவாக, இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் இல. 19, 2006 இன் ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை இலக்கமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்கு அமைவாக, டிஜிட்டல் முறைமை கையொப்பங்களை வழங்குவதற்கான அதிகாரியாக லங்கா பே நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறைமை உத்தியோகபூர்வ கடிதப் பரிமாற்றங்களைச் செயற்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, விரைவான, மிகவும் வினைத்திறன் மிக்க, பயனுள்ள அரச சேவையை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/225204

உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல்

1 month 2 weeks ago

உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல்

16 Sep, 2025 | 11:06 AM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 26 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் திங்கட்கிழமை (15) தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

இன்றைய நாளில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் 26வது ஆண்டு வலிதீரா நினைவு மந்துவில்லில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப்பட்டது. 

குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது 

தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் தலைவர்  த.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.யூட் பிரசாத் தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1000541642.jpg

1000541634.jpg

1000541654.jpg

1000541638.jpg

1000541856.jpg

1000541461__1_.jpg

https://www.virakesari.lk/article/225198

”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” - மீனவர் சங்க பிரதிநிதிகள்

1 month 2 weeks ago

”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்”

யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா  மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர்  மற்றும் பொருளாளர்  ஆகியோர் நேற்று  யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அதற்கு மேற்கு பக்கமாக ஏற்படும் கடலரிப்பிற்கு முகம்கொடுத்து அழிவை சந்திக்கும் முதல் கிராமமாக எமது சுப்பர்மடம் மீனவ கிராமமே காணப்படுகிறது.

1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது எமது சங்கம் உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாக பருத்தித்துறை துறைமுக சூழலில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தாம் ஒருபோதும் நடைமுறப்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் கலந்துரையாடிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு மக்கள், சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை சமூகம் என்பவற்றின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட துறைமுக திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயல்கிறது.

அருகில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடவில்லை, எமக்கு எவருக்குமே அறிவிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடி முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செயற்பாடு எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் என்றனர்

https://www.samakalam.com/பருத்தித்துறை-துறைமுகம/

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

1 month 2 weeks ago

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

adminSeptember 16, 2025

world-bank-22.jpg?fit=1170%2C658&ssl=1

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட்  உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இலங்கை சென்றுள்ள உலக வங்கியின்  குழு   நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன்  அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாக  கூறியுள்ளார்.

https://globaltamilnews.net/2025/220402/

அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் - கடற்படை

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 08:55 AM

image

(எம்.மனோசித்ரா)

தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது எமது வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

இது தொடர்பான தரவுகளையும் நாம் அவ்வப்போது ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதை கடந்த சகல அரசாங்கங்களிடம் நாம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படையுடன் எமது நட்புறவு தொடர்ந்தும் சுமூகமாகப் பேணப்படுகிறது. இது குறித்த புதிய வழிமுறைகளை நாம் அரசாங்கத்திடம் யோசனைகளாக முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய வடக்கு மீனவ சமூகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த பிரச்சினை காலி கலந்துரையாடலில் முக்கிய விடயமாகப் பேசப்படும். நாமும் அதில் அவதானமாக இருக்கின்றோம்.

அத்தோடு எமது கடற்பரப்பின் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட ஏனைய சட்ட விரோத பொருட்கள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. சகல நாடுகளுடனும் இணைந்து கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் நூறு சதவீதம் அவை கட்டுப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சட்ட ரீதியாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இது தொடர்பில் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகமகே தெரிவிக்கையில்,

வடக்கு கடற்பகுதியே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கத்தின் செய்தி அவர்களை சரியாக சென்றடைந்திருக்கிறது என்று நம்புகின்றோம். கடந்த 3 வாரங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை. எமது கடற்படை படகுகளை அணுப்பி நாம் இந்த எல்லையிலிருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு காண்பிக்கின்றோம்.

உள்ளக மீனவர்களும் பெருமளவில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீன்பிடிப் படகுகளை விட எமது மீன் பிடிப்படகுகளின் எண்ணிக்கை அதிகமாகும். தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சற்று குறைவடைந்துள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/225191

Checked
Sun, 11/02/2025 - 20:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr