புதிய பதிவுகள்2

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

3 months 2 weeks ago
மானமுள்ள தமிழன் தன்மான தமிழன் என்று முழங்கிய வெறிநாடுகளில் உள்ள பல ஈழதமிழர்கள் நிலை இன்று அநுரகுமார திசாநாயக்கவின் காலடி மண் எடுத்து நெற்றியிலே பொட்டு வைப்போம், அவர் சொல்லுக்கே கட்டுபடுவோம் என்ற நிலயில் வந்திருக்கின்ற து 🤣

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி

3 months 2 weeks ago
சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய வெறும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மட்டும் போதாது என்றும், அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, வசதியான சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்கள் குறித்து வர்த்தகர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அப்பொன்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் தரப்பினர்கள் குழு இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1445262

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

3 months 2 weeks ago
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்! உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது. உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கப்பல் தாக்கப்பட்டதை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கியேவ் இன்டிபென்டன்ட்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா, அண்மைய மாதங்களில் உக்ரேன் மீதான மோதலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை துரிதப்படுத்த நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445160

ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

3 months 2 weeks ago
ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்திற்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது. எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார். அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார். இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, ஆனால் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன. https://athavannews.com/2025/1445216

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

3 months 3 weeks ago
ICUவில் உயிருக்கு போராடிய ரணில்! 2 நாளில் எழுந்து வீடு சென்ற அதிசயம். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இவ்வாறு பல நோய் நிலமைக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு விரைவில் வீடு சென்றார். அது மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள எவ்வாறு திட்டமிட்டு இருந்தார் என்கின்ற பல கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை!

3 months 3 weeks ago
இப்ப நல்ல ஆரோக்கியமாக இருக்கின்ற கோத்தாவுக்கும், மைத்திரிக்கும்… இதயத்தில் அடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், கிட்னியில் கல்லு, மூத்திரம் போவதில் சிக்கல் என்று வியாதிகள் வர ஆரம்பிக்குமே. 😂 🤣
Checked
Sat, 12/20/2025 - 05:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed