புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
'டிரம்ப் கெஞ்சினார்' : இரான் - இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முதலில் அழைத்தது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' வேண்டி நின்றதாக அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், இரான் அரசுத் தொலைக்காட்சியோ, சண்டை நிறுத்தத்துக்காக டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக கூறியுள்ளது. எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை என்று கூறியுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்? இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' ஏற்பட வேண்டும் என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த கட்டத்தில், "அதற்கான நேரம் இது என்று எனக்குத் தெரியும்" என்று அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்பே அறிவித்த சண்டை நிறுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், "உலகமும் மத்திய கிழக்கு நாடுகளும் உண்மையான வெற்றியாளர்கள். இரு நாடுகளும் தங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும்" என்று தெரிவித்துள்ளார். இரானும் இஸ்ரேலும் சண்டை நிறுத்தத்தை பகிரங்கமாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, இருப்பினும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் தாங்களும் சண்டையை நிறுத்துவோம் என்று இரான் சமிக்ஞை செய்தது. "இரு நாடுகளும் பெறுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால், நீதி மற்றும் உண்மையின் பாதையில் இருந்து விலகிச் சென்றால் இழக்க நிறைய இருக்கிறது" என்றும், இஸ்ரேல் மற்றும் இரானின் எதிர்காலம் "வரம்பற்றது மற்றும் பெரிய வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்றும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS 'சமாதானம் வேண்டி டிரம்ப் கெஞ்சினார்' இரான் அரசு தொலைக்காட்சி செய்தி சேனலான ஐ.ஆர்.ஐ.என்.என். (IRINN) சண்டை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான "வெற்றிகரமான" தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சண்டை நிறுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், இரானின் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் சண்டை நிறுத்தத்துக்காக "கெஞ்சினார்" என்றும் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட அறிக்கையை தொகுப்பாளர் சத்தமாக வாசித்தார். இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் இராணுவத்தை இந்த அறிக்கை பாராட்டியதுடன் இரானியர்களின் "எதிர்ப்பையும்" பாராட்டியது. 'சண்டை நிறுத்தம்' - டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் கட்டடம் தீப்பிடித்து கரும்புகை எழுந்த காட்சி. இஸ்ரேலுக்கும் இரானுக்கும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில்" சண்டை நிறுத்தம் தொடங்கும் என்று அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் அறிவிப்பில் பரஸ்பர பகைமை குறித்த தகவல்கள் இருந்தாலும், "24 வது மணி நேரத்தில்" மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. "எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ள டிரம்ப், இந்த இஸ்ரேல்-இரான் மோதலை "12 நாள் போர்" என்று குறிப்பிட்டுள்ளார். "இது பல ஆண்டுகள் நீடித்து, முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது!" என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சண்டை நிறுத்தத்துக்கு கத்தார் உதவியது' கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, இரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உதவினார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர். பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளின் கூற்றுப்படி, கத்தார் உட்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இரான் தாக்கிய பின்னர், இரானிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய போது சண்டை நிறுத்தம் பற்றி அமெரிக்கா தரப்பில் முன்மொழியப்பட்டது. இதில் கத்தாரும் முக்கிய பங்கு வகித்தது. சண்டை நிறுத்தம் - வெள்ளை மாளிகை அதிகாரி தகவல் இஸ்ரேலும் இரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இரு தரப்பினரும் முறையான அல்லது பொது பதிலை வெளியிடவில்லை. அவரது கூற்றுப்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டிரம்ப் நேரடியாக தொடர்பு கொண்டார். இரான் இனிமேல் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் சண்டை நிறுத்தத்துக்கு தயார் என்று நெதன்யாகு ஒப்புக் கொண்டார் என்று சிபிஎஸ் செய்தி கூறுகிறது. அந்த செய்தியின் படி, இரான் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மூத்த இரானிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இரானியர்களுடன் நேரடி மற்றும் மறைமுக வழிகள் மூலம் தொடர்பு கொண்ட பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேல் தனது "சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை" இப்போது நிறுத்தினால், இரான் பதிலடியைத் தொடர எந்த நோக்கமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் ஏற்கெனவே கடந்துவிட்டது: "இரான் பலமுறை தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல்தான் இரான் மீது போரை தொடங்கியது, மாறாக நாங்கள் அல்ல. தற்போது, எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி இரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்." என்று சையத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். "இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன," என்று சையத் அப்பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ypepk0l1qo

சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்!

3 months ago
சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்! adminJune 24, 2025 யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர். இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் ஏனும் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர். அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும் உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது. போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச் சீட்டு மூலம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217195/ கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும் சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தவிசாளர் தெரிவின்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் செ.மயூரனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு மாறாக அவர் நடுநிலை வகித்தார். இதனாலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, கட்சியின் தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/கட்சி_முடிவுக்கு_மாறாக_நடுநிலைமை;_முன்னணியின்_உறுப்பினர்_மீது_ஒழுக்காற்று_நடவடிக்கை_பாயும்

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை

3 months ago
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை 24 JUN, 2025 | 10:27 AM யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி பெற்று , பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர். அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் மனைவியும், அப்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று, விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன. 2022ஆம் ஆண்டு திருவெம்பாவை உற்சவத்திற்கு ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் இருந்த பழமை வாய்ந்த முருகன் சிலை உள்ளிட்ட சிலைகள் சில என்பன களவாடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும் , ஆலயத்திற்கு செல்லும் மக்கள் ,கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும் , அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இராணுவத்தினர் அவ்வாறு அறிவித்து 06 மாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட முடியாத நிலைமையே காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி பலாலி மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆலயத்தில் இராணுவத்தினரிடம் விசேட அனுமதி பெற்று , விசேட பூஜைகளை நடாத்தி இருந்தனர். குறித்த பூஜையில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர தற்காலிக வீதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்திருந்தார். அந்நிலையில் தற்போது தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை திங்கட்கிழமை (23) நாடாளுமன்ற உறுப்பினர் , க. இளங்குமரன் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். குறித்த தற்காலிக வீதி அமைத்து முடிந்ததும் இராஜ இராஜேஸ்வரி அம்மனை மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உறுதி அளித்துள்ளார். https://www.virakesari.lk/article/218289

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார்

3 months ago
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார் 24 JUN, 2025 | 11:11 AM பலாலி பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் தற்போது துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த நிலையில், துறைமுகத்தினதும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நீர்ப்பாதைகள் மற்றும் அடித்தளங்கள் மோசமாக சேதமடைந்திருந்தன. மேலும், கடல் பகுதியில் பலத்த கற்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது கடலின் ஆழம் சரிவர இல்லாததுடன், அடிக்கடி படகுகள் சேதமடைவது போன்ற இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து, பல ஆண்டுகளாகக் கடற்தொழிலாளர்கள் துறைமுக பகுதிகளை புனரமைக்கக் கோரி வந்த நிலையில், தற்போது இந்த பணி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திங்கட்கிழமை (23) அப்பகுதிக்கு நேரில் சென்று நிலவரத்தை பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/218294#google_vignette

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months ago
பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 24 JUN, 2025 | 11:45 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் கருத்துக்களை தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் , பொருளாதாரம் மற்றும் சமூகத்தை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைத்தல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் கனவம் செலுத்தி வருவதாக பிரதமர் எடுத்துக்காட்டினார். இந்த கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கலர் டேர்க் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218295

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு

3 months ago
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு 24 JUN, 2025 | 11:12 AM யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதிக்கு திங்கட்கிழமை (23) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பூம்புகார் பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கடற்தொழில் செய்வோர், உரிய தொழில் உபகரணங்கள் இன்றியும் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இது தொடர்பில் பூம்புகார் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளின் அழைப்பினை ஏற்று , நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் , உபதவிசாளர் ஜெயகரன், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மற்றும் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க விரைந்து தம்மால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என உறுதி அளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218297

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது - டிரம்ப் 24 JUN, 2025 | 11:01 AM இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுடனான யுத்தநிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218296

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு(23) ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கட்டாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார். இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436811

யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!

3 months ago
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதமாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன. அதேசமயம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436816

மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

3 months ago
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL குறிப்பிடவில்லை. ஆனால் பயணிகள் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பிராந்திய வான்வெளி இடையூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) – எந்தவொரு அவசர தரையிறக்கங்கள் அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும் விமானங்களையும் பொருத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கட்டார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிவில் விமான நிறுவனங்களுக்கு உதவ ஆணையம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436779

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

3 months ago
இன்று இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்! தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில், முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். நேற்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, நாளை யாழ் வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436821

புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!

3 months ago
கண்ணாடி காலம் போல, நம் நினைவுகள் தேடும் சாலைகள். பேராசான் எங்கள் தெய்வம், பேசாமல் சொல்லும் ஒரு நூற்றாண்டு செய்கை! (நூற்று இருபத்தைந்து ஆண்டு நிறைவு விழா,)

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

3 months ago
ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; ஆச்சரியப்படுத்தும் வசதிகளுடன் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம்! ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கும் ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமருக்காக குறைந்தது ஆறு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு (B-2 stealth bombers) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜூன் 20 அன்று மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து உலகம் முழுவதும் 37 மணி நேர விமானப் பயணத்திற்காக படையினர் புறப்பட்டு, ஈரானுக்குச் சென்று திரும்பி வந்தன. ஜூன் 21 அன்று தாக்குதல் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், இந்த நீண்ட தூர நடவடிக்கைகள் ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. B-2 ஸ்டெல்த் குண்டு வீச்சு விமானம் ஒரு படுக்கை, ஒரு கழிப்பறை, ஒரு மைக்ரோவேவ், ஒரு சிறிய குளிர்சாதனப் பெட்டி மற்றும் மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நீண்ட கால மூலோபாய குண்டுவீச்சுப் பணிகளில் விமானிகள் நன்கு உணவளிக்கவும், பயணத்தை குழுவினரால் எளிதாக நிர்வகிக்க உதவும். விமானி அறையில் ஒரு விமானி படுத்துக் கொள்ளவும், மற்றொரு விமானி பறக்கவும் ஒரு இடம் உள்ளது. இது இரண்டு பேர் கொண்ட குழுவினருக்கு கடினமான பயணத்தை நிர்வகிக்க உதவுகிறது. பயணத்தின் போது, குண்டுவீச்சு விமானிகள் நடுவானில் பல முறை எரிபொருள் நிரப்பியதாக அதிகாரிகள் நியூயோர்க் போஸ்ட்டிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு B-2 ஸ்டெல்த் விமானமும் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேல் பெறுமதி வாய்ந்ததாகும். மேலும், 2008 ஆம் ஆண்டு விபத்தில் ஒன்றை இழந்த பின்னர், அமெரிக்க விமானப்படை தற்போது அவற்றில் 19ஐ இயக்குகிறது. பொதுவாக பெரும்பாலான குண்டுவீச்சு விமானங்களில் அத்தகைய ஆடம்பரங்கள் இல்லை. ஆனால் விதிவிலக்குகள் உள்ளன. குறிப்பாக US B-2 Spirit அல்லது B-52 Stratofortress போன்ற நீண்ட தூர மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் அவை 24 மணி நேரத்திற்கும் மேலான பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அண்மைய தாக்குதலில் B-2 ரக விமானங்கள் ஈரானிய வான்வெளியை நெருங்கியபோது, ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் முக்கிய பாதுகாப்புகளை செயலிழக்கச் செய்ய இரண்டு பல டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது. சில நிமிடங்களுக்குப் பின்னர், ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் 14 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி-குண்டுகளை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வீசின. அமெரிக்கா போரில் 15 தொன் எடையுள்ள மிகப்பெரிய GBU-57 வகையான பதுங்கு குழி குண்டுகளை வீசியது இதுவே முதல் முறை. 37 மணி நேர பயணத்தின் போது இரண்டு விமானிகளும் மாறி மாறி ஓய்வெடுத்ததாக தி யுகே டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436802

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஈரான் – இஸ்ரேல் முழுமையான போர் நிறுத்தம்; தெஹ்ரான் மறுப்பு! இஸ்ரேலும் ஈரானும் திங்களன்று (23) ‘முழுமையான போர்நிறுத்த’ ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேறிய 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்களை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் போர்நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது – என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும். 12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும். இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இரு தரப்பினரும் புதிய தாக்குதல்களை அச்சுறுத்திய சில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் இது வருகிறது. போர் நிறுத்தத்தை மறுத்த தெஹ்ரான். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே திங்களன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க ட்ரம்ப் கூறிய நிலையில், தெஹ்ரான் அந்தக் கூற்றை மறுத்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து போர் நிறுத்தம் கோரும் எந்த போர் நிறுத்த முன்மொழிவையும் பெறவில்லை என்றும் அது கூறியுள்ளது. இதற்கிடையில், போர் நிறுத்தக் கோரிக்கை குறித்து இஸ்ரேல் அமைதியாக உள்ளது மற்றும் அதன் செயல்படுத்தல் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறியது. எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும்” இல்லை. எனினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 (செவ்வாய்) மணிக்குள் நிறுத்தினால், எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் – என்றார். எண்ணெய் விலை வீழ்ச்சி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியதால், செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன. இது அப்பகுதியில் விநியோக இடையூறு குறித்த கவலைகளைத் தணித்தது. பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0006 GMT மணியளவில் ஒரு பீப்பாய்க்கு $2.69 அல்லது 3.76% குறைந்து $68.79 ஆக இருந்தது. ஜூன் 11 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும் இது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $2.7 அல்லது 3.94% சரிந்து $65.46 ஆக இருந்தது. இது ஜூன் 09 க்குப் பின்னர் அதன் விலை சரிந்த சந்தர்ப்பமாகும். ஈரான் OPEC இன் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. மேலும் பதட்டங்களைத் தளர்த்துவது அதிக எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் மற்றும் விநியோக இடையூறுகளைத் தடுக்கும், இது அண்மைய நாட்களில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாகும். அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. எனினும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கட்டார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது. இந்த நடவடிக்கை குறித்தும் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த தாக்குதல் பலவீனமானது மற்றும் எதிர்பார்க்கப்பட்டது என்று அழைத்தார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் “அழிக்கப்பட்டதை” தொடர்ந்து ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். அவற்றில் 13 இடைமறிக்கப்பட்டன என்றார். https://athavannews.com/2025/1436783
Checked
Thu, 09/25/2025 - 15:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed