புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
மத அடிப்படைவாதம் உலகில் எங்கு இருந்தாலும் அது ஒழிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற நாடுகளில் நேரடியாகவும் மேலும் பல இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாகவும் உள்ள அடிப்படைவாதத்தை எதிர்தது மாற்றங்களை கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டதே. ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் பொஸ்னியா மற்றும் துருக்கிக்குள் நுளைந்தவுடனேயே மத அடிப்படைவாதத்தின் வாசனை மெல்ல மெல்ல ஆரம்பித்துவிடும். நாடுகளின் வளங்களை ஒரு குறிப்பிட்ட வர்ககம் தம்வசப்படுத்தி அனுபவிப்பதற்கே இப்படியான அடிப்படை வாதங்கள் மக்களிடையே தூண்டப்படுகின்றன. இலங்கையில் பௌத்த மேலாண்மை புத்த மதத்துக்கான முன்னுரிமை எந்தளவுக்கு தவறானதோ அதேயளவுக்கு ஈழம் சிவபூமி என்ற கூக்குரலும் தவறானதே. அண்மைக்காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை அழைப்பவர்களிடமும் இவ்வாறான மத அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் போக்கை காணலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
மிகவும் எழுந்தமானமாக, சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாது, உணர்வின்பால் உந்தப்பட்டு எழுதிய கருத்து. இஸ்ரேலினால் பணம் கொடுக்கப்பட்டு ஈரான் மீது ஏவி விடப்பட்ட குழுக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்களென்றால் இதுகுறித்து மற்றவர்களும் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். அடுத்தது இப்போர் ஏன் இவ்வளவு பெரிதானது எனும் விளக்கம். தன்னை அழுத்திப் பணியவைத்து, முற்றுகைக்குள் கொண்டுவந்து, முடக்க ஈரான் பாவித்த ஏவலாளிகளே ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள் மற்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் ஜிஹாதிகள். ஆகவேதான் ஒவ்வொன்றாக ஈரானின் அம்புகளை அழித்த இஸ்ரேல் இறுதியாக ஏவியவனான ஈரானின் மீது தனது கவனத்தைத் திருப்பியது. அடுத்தது பலஸ்த்தினார்களின் தனிநாடு எனும் கோரிக்கை. சரியான கோரிக்கைதான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஈரான் பலஸ்த்தீன விடயத்தில் தலையிடுவது உண்மையாகவே அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. பலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலினை தொடர்ச்சியான முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். சியாக்களான ஈரானிய முல்லாக்களுக்கு தாம் பின்பற்றும் இஸ்லாத்தின் பரம வைரியான சுன்னி பலஸ்த்தீனர்களுக்கு நண்மை செய்யவேண்டிய தேவையென்ன என்பதைச் சிந்தித்தால் ஈரான் இவ்விடயத்தில் ஏன் தலையிடுகிறது என்பது புரியும். உங்களின் புரிதலிற்காக ஒன்றைக் கூறுகிறேன், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டது எமக்குத் தனிநாடு பெற்றுத்தரத்தான் என்று நீங்கள் நம்பினால், ஈரானும் பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு கொடுக்கவே தலையிடுகிறது என்பதை தாராளமாக நீங்கள் நம்பலாம். ஏனென்றால் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததையே பலஸ்த்தீனர்கள் விடயத்தில் இன்று ஈரான் செய்கிறது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
இப்போ இருப்பவர் கமேனி. இதற்கு முன் இருந்தவர் கொமேனி. நீங்கள் நினைப்பது போன்ற வகையில் ஈரானில் தனிமனித ஆட்சி நடப்பதில்லை. அதிஉச்ச தலைவர் என வாழ்நாளுக்கு ஒருவரை தெரிவு செய்தாலும், அவரை நியமிப்பது நிபுணர்கள் குழு எனும் குழாமே. இந்த தலைவர் எப்பொதும் revolutionary guardsஎனும் படையின் தலைவரிலேயே தங்கி இருப்பார்கள். ஈரானின் ஆட்சியை தக்க வைக்கும் பலம் RG யிடம்தான் உள்ளது. அயதுல்லாக்கள் மக்களால் வெறுக்கப்படும் நிலை வந்தால் பங்களாதேசில் நடந்தது போல் படைகள் ஓடி விடும். இஸ்ரேல் அடிப்பதால் மக்கள் கிளர்ச்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஸ்டாலினின், லெனினின் கடைகாலத்தில் என்ன நடந்தது, அவர்கள் விரும்பிய ஆட்களுக்கு அடுத்த தலைமை கிடைத்ததா என்பதை எல்லாம் பார்த்தால் கமேனியின் ஈரானின் மீதான பிடி அத்தனை வலுவானது அல்ல என புரியும். அதே போல் ஈரானின் வான் பரப்பு முழுவதும் இஸ்ரேலின் ஆதிக்கம். ஈரானின் ஒரே ஆயுதம் டிரோன், ஏவுகணைகள் மட்டுமே. இதில் சீனா இறங்கினால் மட்டுமே ஈரானால் நீடித்து நிற்க முடியும். அதே போல் டிரம்பின் போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்றே நான் நினைக்கிறேன். டிரெம்பிற்கு இடியப்ப சிக்கல். அவரின் MAGA மோட்டு கூட்டம் நவ நாஜிகள், யூத வெறுப்பாளர். ஆனால் எப்ஸ்டீன் பைல்கள் உட்பட டிரம்பின் பல பிடிகள், புட்டினை போலவே, இஸ்ரேலிலும் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த யூத வெறுப்பாளரை பேய்க்காட்டி, வேறு வழியில்ல்லை, அதான் அமேரிக்கா முழு வீச்சில் இறங்கியது என காட்ட டிரம்ப் ஆடும் நாடகமே இந்த மோதல் தவிர்ப்பு. பிகு ஈரான் கத்தாரில் இருந்த அமரிக்க தளத்தை தாக்கியதும், அமேரிக்கா பயந்து, மறுவினை காட்டாமல் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது என நான் நம்பவில்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஒன்றும் புரிய‌ல‌ என‌க்கு ஈரான் அணுகுண்டு த‌யாரிப்ப‌தில் இருந்து பின் வாங்காது....................சிறு கால‌ம் க‌ழித்து மீண்டும் ஈரானுட‌ன் போர் செய்ய‌ ர‌ம்ப் திட்ட‌மா ஈரான் விழிப்புண‌ர்வோட‌ இருக்க‌னும்...................................

மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்

3 months ago
கடற்புலி லெப்.கேணல் முல்லைமகள் முகைதீன் ஜெரீனா 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு லெப்.கேணல் தனம் (ஐங்கரன்) நாகலிங்கம் யோகராஜ் கேப்பாப்புலவு, முல்லைத்தீவு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
இந்தியாவில் ம‌ட்டும் என்ன‌வாம் , ஊழ‌ல் அர‌சிய‌ல் வாதிக‌ளின் அராஜகம் , அதை த‌ட்டி கேட்டால் ஈன‌ இர‌க்க‌ம் இன்றி மக்க‌ளை கொலை செய்வ‌து , ஜல்லிக்கட்டு விளையாட்டை த‌டை செய்ய‌ போகிறோம் என‌ சொல்ல‌ , அதுக்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் பெரும் எழுச்சியா போராடின‌ போது , பொது ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு காவ‌ல்துறை நெருப்பு வைத்து எரிச்ச‌வை , இதை விட‌ வ‌ட‌ நாட்டில் கொடுமைக‌ள் அதிக‌ம் ம‌த‌ ரிதியா ம‌ற்றும் அர‌சிய‌லால்.................. ஈரான் அர‌சு த‌ங்க‌ட‌ நாட்டை அவ‌ர்க‌ளின் ம‌த‌ க‌ட்டுப் பாட்டுட‌ன் வைத்து இருக்க‌ விரும்புகின‌ம்👍................................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஆம் இதை அறிந்துள்ளேன். ருசியா எதை உடனடியாக மேற்கு, us, இஸ்ரேல் ஐ உறுத்தக் கூடியதாக செய்து இருக்க முடியும் என்பதை சிந்திப்பதத்திற்கு எந்தஒரு விடயமும் இல்லை. அல்லது (நான்) அறியாமல் இருக்கலாம் அனால் சீனா, அருமை உலோக உற்பத்தி கிட்டத்தட்ட ஏகபோக பிடியால், மேற்கு, us, இஸ்ரேல் க்கு boiling the frog போல வெளியே தெரியாமல் ஆயுதம் செய்வதை குறைப்பதுக்கு ஒன்றும் சொல்லாமல் ஒழுங்குகளை (regulations) ஐ இறுக்கி (சர்வசாதாரணமாக ஏற்றுமதி அனுமதி விண்ணப்பம் - அனுமதி நாட்களை கூட்டலாம்) செய்யலாம். ஏனெனில் இந்த அருமை உலோகங்கள் மிக உணர்திறன் (அதிஉயர் வெப்ப, காந்த, ராடாரை விலத்துவது, உறுஞ்சுவது போன்ற பிரயோகங்களுக்கு) ஆயுத உடற்பதியில் இன்றியமையாதது. (அருமை உலோகங்கள் உண்மையில் அருமை ஏனெனில் இயற்றுகை உலோக தாதுக்களில் அவற்றின் மிக செறிவு குறைவு, வேறு பொதுபவன உலோகங்களை உடற்பத்தி செய்யும் போது பக்கவிளைவை கொண்டு பெறவேண்டி இருப்பதால்.)

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ayatollah ali khamenei 94வ‌ய‌து வ‌ரை வாழுவார் அது என‌து விருப்ப‌மும் கூட‌ 🙏🇮🇷👍 அவ‌ர் இப்ப‌வே தெரிவு செய்து விட்டார் த‌ன‌க்கு பிற‌க்கு ஈரானை யார் ஆட்சி செய்வ‌தென‌ , அதில் மூன்று பேர தெரிவு செய்து இருக்கிறார்.............................ஈரானின் ப‌ல‌ம் என்ன‌ என்று இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ந‌ங்கு புரிந்து இருக்கும்..................................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
இங்கே முல்லாக்களின் அதிகாரம் பிடுங்கப்பட்டு, அவர்களின் ஆட்சி அழிக்கப்பட வேண்டும் என்பது பலராலும் வைக்கப்படும் கருத்தாக இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை. உண்மையில் இது குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட அப்பமாகவோ ஒட்டகத்துக்கு தலை வைக்க இடம் கொடுத்த கதையாகத்தான் முடியும். எனக்கு ஈரானை பிடிக்காது அதற்காக சுயநலன்களுக்காக அந்த மக்களுக்கு அவலங்களை கொடுப்பதை ஏற்கமுடியாது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஈரானின் இன்றைய காலாச்சாரம் என்பது 1979 இன் பின் வலிந்து திணிக்கப்பட்டது. தன் சொந்த மகள்களை இரெண்டாம் தர பிரசையாக நடத்தும் எந்த கொடுங்கோன்மையும் அழிக்கப்பட வேண்டியதே. அப்படி பட்ட கொடுங்கோன்மையை ஆதரிப்பவர்கள், அவர்களும் ஆணாதிக்க வாதிகளே, தாம் இருக்கும் நாடுகள் டின்னு கட்டி விடுவார்கள் என்பதால் அடக்கி கொண்டு இருக்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. பிகு ஈரானிய பெண்ணடிமைவாதிகளை தகைவரோடு, புலிகலோடு ஒப்பிடவே முடியாது. அப்போ சவுதி? அவர்களும் கொடுங்கோலரே, அவர்களுக்கு எதிராக அந்த மக்கள் போராடும் போது அதையும் நான் ஆதரிப்பேன்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ......... ! --- என் கண்மணி உன் காதலி ---

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஈரானில் இளையவர்கள் மிக தெளிவாக இந்த அடிப்படைவாத அரசை எதிர்கிறார்கள். ஆனால் இரும்பு கரம் கொண்டு அடக்கபடுகிறார்கள். எனக்கு இஸ்ரேல்-ஈரான் போரில் இருபகுதி மீதும் ஈடுபாடு இல்லை. ஆனால் அயதுல்லா கொமேனி என்ற முன்னாள் பிரெஞ் உளவாளி, பின்னால் அடிப்படைவாதியின் இஸ்லாமிய புரட்சியின் பின்னான கொடுங்கோல் இஸ்லாமிய தியோகிரசி அழிய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
A majority of Americans disapproves of Trump’s Iran airstrikes, CNN poll finds. President Donald Trump’s decision to launch airstrikes against Iran is broadly unpopular with Americans, according to a new CNN poll conducted by SSRS after the strikes. Americans disapprove of the strikes, 56% to 44%, according to the survey, with strong disapproval outpacing the share who strongly approve. Most distrust Trump’s decision-making on the use of force in Iran, with about 6 in 10 worried that the strikes will increase the Iranian threat to the US. https://www.cnn.com/2025/06/24/politics/trump-iran-strikes-poll-cnn-ssrs

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
@ஈழப்பிரியன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா உங்க‌ட த‌மிழ் பொக்ஸ்ச‌ம் விக்கி , இப்ப‌வும் பாக்கிஸ்தான் இந்தியாவிட‌ம் ம‌ண்டியிட்ட‌து என்று பொய் பொய்யா சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றுகிறார் அவ‌ரின் காணொளிக‌ளை இப்ப‌வும் பாப்பிங்க‌ளா.....................நான் அவ‌ரை த‌ள்ளி வைத்து விட்டேன் அவ‌ர் ப‌க்கா ச‌ங்கி , இந்திய‌ ஆட்சியாள‌ர்க‌ளிட‌ம் காசு வேண்டி விட்டு க‌ண்ட‌ ப‌டி இந்தியா புக‌ழ் பாடுவ‌தாக‌ தெரியுது இஸ்ரேல் ஈரான் பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு சில‌ காணொளிக‌ள் பார்த்தேன் அதுக்கையும் இந்தியாவை எழுத்து வாயால் வ‌டை சுடுவார்.........................பொய்ய‌ ஏக்க‌ர் க‌ண‌க்கில் சொல்லுவார் இந்தியா விடைய‌த்தில் ஹா ஹா😁😛........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
அண்ணா எங்க‌ட‌ த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் எங்க‌ட‌ நாட்டு க‌லாச்சார‌ம் எப்ப‌டி இருந்த‌து..............இப்ப‌ எப்ப‌டி இருக்கு , ஈரான் நாட்டு கலாச்சார‌ம் அப்ப‌டி அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் அதுக்கு ம‌திப்பு அளித்து ந‌ட‌க்க‌னும் , ஈரான் நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் சில‌ர் தாடி வ‌ள‌க்க‌ வில்லையே , கோட் சூட் போட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம் , ஈரான் நாட்டு பார‌ம்ப‌ரிய‌ உடை அனிந்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்.................... ஈழ‌த்தில் வ‌சிக்கும் பெண்க‌ளே போதை பொருளை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் இப்ப‌ , நாங்க‌ள் சின்ன‌ப் பிள்ளைக‌ளாக‌ இருக்கும் போது எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றாலும் என்ன‌ என்று தெரியாது , அதே போல் போதை பொருட்க‌ளும் தெரியாது , ஒரு இன‌த்தின் த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ ஒரு இன‌ம் எப்ப‌டி சின்ன‌பின்ன‌மாய் போன‌துக்கு ந‌ல்ல‌ ஒரு உதார‌ன‌ம் எங்க‌ட‌ த‌மிழ் இன‌ம்....................... 12வ‌ய‌தோட‌ நான் எங்க‌ட‌ ஊரை விட்டு வ‌ந்து விட்டேன் , இப்ப‌ எங்க‌ட‌ ஊரில் ர‌வுடிக‌ள் , கொள்ளை கும்ப‌ல் , போதைக்கு அடிமையான‌ போன‌ 2கே கிட்ஸ் , ஊரில் கால் வைக்க‌ முடியாது , எப்ப‌டி இருந்த‌ ஊரை இப்ப‌டி நாச‌ம் ப‌ண்ணிட்டாங்க‌ளே என்று நினைத்து வேத‌னை ப‌ட்டு இருக்கிறேன்😥☹️..................... ஈரானில் ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ க‌லைச்சா , ஈரானும் இன்னொரு குப்பை நாடாக‌ மாறி விடும் , அமெரிக்காவாளும் ச‌ரி இஸ்ரேலாலும் ச‌ரி ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ க‌வுக்க‌ முடியாது , அவ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ நாட்டின் மீது தீவிர‌ ப‌ற்று...................ஈரான் நாட்டு க‌லாச்சார‌ம் இப்ப‌டியே தான் போய் கொண்டு இருக்கும்..............எந்த‌ கொம்ப‌ன் வ‌ந்தாலுன் இந்த‌ அர‌சை அக‌ற்ற‌ முடியாது...................இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ பிரோ............................
Checked
Thu, 09/25/2025 - 18:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed