புதிய பதிவுகள்2

பெங்களூருவில் சினிமா பாணியில் ரூ. 7 கோடி கொள்ளையடித்த நபர்களை போலீஸார் பிடித்தது எப்படி?

2 months 3 weeks ago
பட மூலாதாரம், Imran Qureshi கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக 23 நவம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார். கைதானவர்களில், கோபால் பிரசாத் என்பவர் காவலாளியாக இருக்கிறார். சேவியர் என்பவர் பண மேலாண்மை சேவை (CMS) நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். அன்னப்பா நாயக், பெங்களூருவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கைத் தீர்க்க கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கோவா உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 200 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை காவல்துறை நியமித்திருந்தது. பணத்தைத் திருடிய பிறகு திருடர்கள் வாகனங்களை மாற்றியிருக்கிறார்கள். போலியான நம்பர் பிளேட்களைப் பயன்படுத்திய அவர்கள், சிசிடிவி கேமராக்கள் குறைவாக உள்ள, அல்லது இல்லாத இடங்களில் நிறுத்தி பணப் பெட்டிகளை மாற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு புதன்கிழமை மதியம் 12:48 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், போலீஸ் கமிஷனரைப் பொறுத்தவரை சிஎம்எஸ் என்ற நிறுவனம் இதுபற்றிய தகவலை மதியம் 1:20 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறது. வேன் ஓட்டுநரிடம் துப்பாக்கியைக் காட்டி பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? துபையில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தில் இருந்த விமானி யார்? முழு விவரம் பல நாள் பட்டினி கிடந்து, கொடிய விஷத் தவளைகளை உண்ட பாம்புகள் உயிர் பிழைத்தது எப்படி? End of அதிகம் படிக்கப்பட்டது பெங்களூரு நகரின் மத்தியில் பட்டப்பகலில் இந்நிகழ்வு நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. அதன்பிறகு கொள்ளையர்களைப் பிடிப்பதகான திட்டத்தை காவல்துறை வகுத்தது. இதுபற்றி பிபிசியிடம் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், புதன்கிழமை மதியம் ஒரு எஸ்யூவி காரில் வந்த ஆறு பேர் பணத்தை எடுத்துச்செல்லும் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறினார். அப்போது அந்த வாகனம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் ஓட்டுநர், பணப் பாதுகாவலர் மற்றும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்கள் இருந்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடித்த திருடர்கள் அந்தத் திருடர்கள் தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். வேனில் அவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வதற்காக வாகனத்தை நிறுத்தியதாக வேனில் இருந்தவர்களிடம் கொள்ளையர்கள் சொன்னதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். முதல்கட்ட தகவலின்படி, அந்த கும்பல் பணப் பாதுகாவலரையும் காவலர்களையும் தங்களின் ஆயுதங்களை விட்டுவிட்டு எஸ்யூவியில் ஏறச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் வேனை பணத்தோடு ஓட்டிச்செல்லுமாறு அதன் ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார்கள். காவல்துறை கூற்றுப்படி அந்த கொள்ளையர்கள் லால்பாக்-குக்கு அருகில் உள்ள அஷோக் பில்லர் ரோட்டில் அந்த வேனை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த கும்பல் தங்கள் ஆள் ஒருவரை, பணத்தை எடுத்துச் சென்ற வேனோடு அனுப்பியிருக்கிறார்கள். சில தூரம் சென்ற எஸ்யூவி, நிம்ஹான்ஸ் (NIMHANS) பேருந்து நிறுத்தத்தில் அந்த மூன்று பணியாளர்களையும் இறக்கிவிட்டிருக்கிறது. பின்னர் அந்த கும்பல், குறைவான சிசிடிவி கேமராக்களே இருந்த பெங்களூரு டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்திற்கு எஸ்யூவியை ஓட்டிச் சென்றிருக்கிறது. பட மூலாதாரம், Imran Qureshi படக்குறிப்பு, பத்திரிகையாளர்களிடம் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துப் பேசிய ஆணையர் சீமந்த் சிங் (நடுவே இருப்பவர்) மாறிய வண்டிகள், மாற்றப்பட்ட பணம் சிஎம்எஸ் நிறுவனம் இந்த சம்பவம் நடந்த இடமாக டிஜே ஹல்லியைக் குறிப்பிட்டதாக சீமந்த் குமார் சிங் தெரிவித்தார். அது நகரத்தின் கிழக்குப் பக்கம் இருக்கும் இடம். ஆனால், சம்பவம் நடந்த அஷோக் பில்லரோ தெற்குப் பகுதியில் உள்ளது. இதுபற்றிப் பேசிய கமிஷனர், "இந்த விவகாரத்தில் ஏஜென்சியின் பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தின் போது பல ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளன. அவர்களிடம் தவறுகள் ஏதுமில்லை என்று சொல்லிவிட முடியாது" என்று கூறினார். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டிய சீமந்த் சிங், பண வேன்களில் பணப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு தனித்தனிப் பெட்டிகள் இருக்க வேண்டும் என்றார். பயணிகள் பெட்டியில் இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் ஓட்டுநர் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இரண்டு பெட்டிகளிலுமே சிசிடிவி கேமராக்கள் இருக்கவேண்டும் என்று கூறினார். பணம் எடுத்துச்செல்லும் ஒவ்வொரு வேனிலும் ஜிபிஎஸ், நேரடி கண்காணிப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் வழித்தடத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தின் குறிப்பேடு ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வேன்கள் ஒரே பாதையிலோ அல்லது ஒரே நேரத்திலோ மீண்டும் மீண்டும் பயணிக்கக் கூடாது. அவற்றின் இயக்கம் பற்றிக் கணித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறை. சிஎம்எஸ் நிறுவனத்திடமிருந்து இதுபற்றிய கருத்து பெறுவதற்காக பிபிசி முயற்சி செய்தது. அவர்களிடம் கருத்து பெற்ற பிறகு இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும். தன் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்பட எஸ்யூவி போலியான நம்பர் பிளேட்டையும் இந்திய அரசு ஸ்டிக்கரையும் பயன்படுத்தியிருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். அந்த நிறுவனத்துக்கு இந்தக் கொள்ளையுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் காவல்துறை விசாரிப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இந்தக் கொள்ளையில் பயன்படுத்திய எஸ்யூவி காரை காவல்துறை மீட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். ஆனால் கொள்ளையர்கள் தப்பிக்கப் பயன்படுத்திய வாகனம் எது என்று தெளிவாகத் தெரியவில்லை என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா தெரிவித்தார். ''வாகனங்களை மாற்றி பண பரிமாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சமீபகாலமாக கர்நாடகாவில் நடந்த மற்ற வங்கிக் கொள்ளை சம்பவங்களை போலீசார் தீர்த்ததுபோல், இந்த வழக்கையும் விரைவில் தீர்த்து வைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த மே மாதம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 53.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 59 கிலோ தங்கம் திருடப்பட்டது. இதுவரை 39 கிலோ தங்கமும் கொஞ்சம் பணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்தத் திருட்டு தொடர்பாக இரண்டு முன்னாள் ஊழியர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxernjq1jzo

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு

2 months 3 weeks ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும். இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது. இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/good-news-foreigners-who-visting-sri-lanka-1763883182

அஸ்வெசும திட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2 months 3 weeks ago
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. நலன்புரி சபை தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/important-instructions-for-opened-bank-accounts-1763885116

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 months 3 weeks ago
செய்தி - புத்தருக்கு சொந்தமான இலங்கையிலேயே தமிழர்களும், முஸ்லிம்களும் வசிப்பதாக ஞானசார தேரர் தெரிவிப்பு. ஞானசாரரின் கருத்துக்கு ஆதாரமான, கி.மு. 483 இல் கையொப்பமிடப்பட்ட காணி உறுதிப் பத்திரம். Suhirtharaj Logarasa

மாவீரர் நினைவு வாரம்..! அநுர அரசிற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

2 months 3 weeks ago
இந்த நாட்டில் அனைவரும் சமன் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவது போல் எமது மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் பதில பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் தங்கள் தேசங்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூருகின்ற மாதம். போராடி மடிந்தவர்களை நினைவு அதனால்தான் உலகெங்கும் இராணுவத்தினராக இருக்கலாம் போராடியவர்களாக இருக்கலாம் அவர்களைப் பொப்பி மலரால் நினைவு கூருவார்கள். இது உலகம் எங்கும் நடைபெறும் ஒரு நிகழ்வு. இப்படியான கார்த்திகை மாதத்திலே தான் நாங்களும் தங்களுக்காக அன்றி எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற ஒரு வாரத்தை அனுஷ்டிக்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் 13 ஆம் திகதி நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும் விகாரமாதேவி பூங்காவிலே தன்னோடு தோள் நின்று ஆயுதம் ஏந்தி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற படங்களை நாங்கள் பார்த்தோம். தங்களின் அன்றைய தலைவரின் சீருடையோடு அவர் இருக்கின்ற படம் அதன் பின்னணியில் இருக்கின்றது, ஜனாதிபதி அந்த மேடையில் பேசுகின்றார். அன்றும் அதற்குப் பின்பு அவரின் தோளோடு தோள் நின்றவர்கள் இப்படியாக மலர் அஞ்சலி செலுத்தி அவர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தமையை நாங்கள் பார்த்தோம். இனத்தின் விடிவுக்காக போராடியர்கள் அதே போன்று ஓர் இனத்தின் விடிவுக்காக போராடியவர்கள் என்றும் எங்களின் மனங்களிலே நீங்கா இடம் பெற்றவர்கள். ஏனென்றால் எங்களுக்காகக் தங்கள் உயிர்களை அவர்கள் கொடுத்தவர்கள். இது நான் எப்போதுமே சொல்லுகின்ற விடயம். அவர்களுடைய அந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக நாம் எதையும் சொல்ல முடியாது. ஏனென்றால் தங்களிடத்தில் இருக்கும் அனைத்தையூம் அதாவது தமது உயிரையே எமக்காக அவர்கள் கொடுத்தவர்கள். இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்விலே பெற்றோர் வருகின்றபோது விசேடமாக தாய்மார், சகோதரிகள் வருகின்றபோது இன்னமும் அவ்கள் அழுது புலம்புவதை கண்டோம். இங்கே இன்னமும் என நான் கூறுவது இத்தனை வருடங்களாகியும் அவர்கள் அழுகின்றனர் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் இவர்கள் எம்மை விட்டுப் போய்விட்டனர் என்ற வருத்தம் மட்டும் அல்ல அதாவது நான் பெற்றவள் இருக்கப் பிள்ளை மடிந்து விட்டானே என்ற அங்கலாய்ப்பு மட்டுமல்ல, அவர்களின் தியாகத்தினாலே இன்னமும் எமது இனம் ஒரு விடிவைக் காணவில்லையே அது வீணாகப் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்பு அங்கே தென்படுகின்றது. அவர்கள் மடிந்ததாலே இந்த இனம் விடிந்தது என்று தெரிந்தால் ஒரு பூரிப்பும் அதிலே கலந்து வரும். ஆனால் அப்படி இல்லாமல் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்போடு எங்களது இனம் காத்திருக்கின்றது. விடிவு ஏற்பட வேண்டும் தனியான ஓர் இறைமை மிக்க நாடுகாக அவர்கள் போராடினார்கள். ஆனால் சுயமாக ஆட்சி செய்கின்ற முறையிலாவது நாங்கள் எங்களை ஆளுகின்ற ஒரு முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விளைகின்றோம். அவர்களுடைய அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகப் போய் விடக் கூடாது. அவர்கன் பெற்றோர் இருக்கின்ற காலத்திலேயே ஒரு விடிவு ஏற்பட வேண்டும். சுயாட்சி முறையாவது எங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பயணிக்கின்றோம். சில நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியை எங்கள் கட்சி சந்தித்துப் பேசியபோதும் இந்த விடயம் குறித்துப் பேசினோம். அதில் ஒரு மணித்தியாலம் அரசியல் தீர்வு குறித்து பேசினோம். 70 வருடங்களாக வெவ்வேறு வடிவத்திலான போராட்டங்களை நடத்தி வருகிறோம். உலகத்திலே எந்தச் சமூகமும் எந்த மக்களும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ மாட்டார்கள் அதனை ஏற்கவும் மாட்டார்கள். அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம் அப்படியிருக்க ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிலே ஒரு மக்கள் எண்ணிக்கையில் 3 மடங்காக இருக்கின்றபோது எண்ணிக்கையில் குறைந்ததாகக் காணப்படும் சமூகம் எப்படி சம அந்தஸ்து உடையவர்களாக வாழ முடியும்? ஏனெனில் வாக்கெடுப்பு நடத்தினால் அது ஒரு பக்கமாக சாய்ந்துதான் நிற்கும். ஆனபடியால் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். நாட்டிலே நாங்கள் பெரும்பான்மையாக வாழாவிட்டாலும் நாம் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களிலே எங்களுக்கான அரச அங்கீகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள் எனக் கேட்பதன் தார்ப்பரியம் நியாயப்பாடு அதுதான். இது செய்யப்பட வேண்டும். எவர் நிமித்தம் செய்யப்படாது விட்டாலும் மடிந்துபோன எங்களுடைய மாவீரர்களது தியாகத்தின்நிமித்தமாக அது செய்யப்பட வேண்டும். மாவீரர்களது உறவூகள் விசேடமாக அவர்களது பெற்றார்கள் அதனைக் காண வேண்டும். துரோகி பட்டம் என்னுடைய மகன் என்னுடைய மகள் இதற்காகத்தான் தன்னுடையவாழ்வைக் கொடுத்தார், அதன் பெறுபேற்றை நானாவது காண்கின்றேன் என்று சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும். தனி நாடு என்ற இலக்கை விட்டு விலகி விட்டோம் எனத் துரோகி பட்டம் சுட்டுகின்றவர்கள் இன்றைக்கும் எவராவது தனிநாட்டை கோருகின்றார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும். தங்களோடு கூடக் களமாடு மடிந்தவர்களுக்கு என்று அந்தக் காலங்களில் நாட்டின் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு வீதி வீதியாக ரயர்கள் போட்டு எரிக்கப்பட்ட தங்களுடைய சகாக்களுக்காக நினைவு கூருகின்றபோது ஜனாதிபதியிடம் கேட்கின்றோம் அந்த நேரத்தில் அடக்குமுறையை மேற்கொண்டவர்களிடம் கேட்கவில்லை அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் நாம் கேட்கின்றோம். எங்கள் மக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் மடிந்திருக்கின்றார்கள் ஒரு நியாயத்துக்காகப் போரிட்டு மடிந்திருக்கின்றார்கள் நீங்கள் உங்கள் சகாக்களை நினைவூ கூருகின்றீர்கள் அதைப் போற்றுகிறார்கள். இந்த நாட்டில் அனைவரும் சமன் என நீங்கள் சொல்கின்றமை உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வாங்குவது போல் இதோ இந்த மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை ஜனாதிபதி கொடுக்க வேண்டும் என்றார். https://ibctamil.com/article/ma-sumanthithran-speech-in-mullaitivu-1763876050#google_vignette

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

2 months 3 weeks ago
பஹல கடுகன்னாவ மண்சரிவு - சிசிடிவி காணொளி வௌியானது Nov 23, 2025 - 02:05 PM ஆறு பேர் உயிரிழப்பதற்கு காரணமான பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளது. பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் நேற்று (22) மண்சரிவு ஏற்பட்ட நிலையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்தது. இதனையடுத்து 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காணொளி இன்று வௌியாகியுள்ளது காணொளியை பார்வையிட, https://www.youtube.com/watch?v=rYnLb-9cdx8&t=74s https://adaderanatamil.lk/news/cmibgr25o01wio29ni16ltx2j

யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2 months 3 weeks ago
யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க! நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. எனவே இறந்த உறவினர்களை சுகந்திரமாக நினைவு கூர முடியும் இதற்கு பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள் என்று கூறினார். https://athavannews.com/2025/1453624

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

2 months 3 weeks ago
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன். அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன. இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி. பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள். எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று எழுதியிருந்தார். எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது. திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது. ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது. நுகேகொட பேரணியில் தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது. நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும். நுகேகொட பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப் புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன் கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை ஆதரிக்கவில்லை. நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது “எக்ஸ்” பக்கத்தில் அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது. ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது. அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா? கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார். நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது. https://athavannews.com/2025/1453627

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!

2 months 3 weeks ago
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். https://athavannews.com/2025/1453641

சாய் பாபாவின் தபால் தலை வெளியீடு.

2 months 3 weeks ago
சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். https://makkalkural.net/news/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/

இனித்திடும் இனிய தமிழே....!

2 months 3 weeks ago
Paranji Sankar · இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, "தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், "அச்சாணியால்" என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். "நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது. "சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங்-காயத்தால்" என்பது. இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன... இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண் பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர். கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார். இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான். ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார். மதுரைத் தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்? "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?" - எனக் கேள்வி கேட்டார். அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியேன்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள். அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இதுதான்.. "எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை" - என்று வெண்பாவை நிறைவு செய்தார். அதாவது கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள். இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில். பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்.... "அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்தப்பினால் நம்மையது தப்பாதோ? - எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை". எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார். "திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்று தானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார். அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? "திருக்குறள் '#கள்'ளை அனுமதிப்பதில்லை". Voir la traduction

சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு! நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவைத்துள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453616

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 3 weeks ago
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பல மாதங்கள் கழிந்தும், இந்த விவகாரம் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக ரஷ்யாவை பணிய வைக்க, அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரியை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் . இருப்பினும் ரஷ்யா மசிந்து அடிபணியவில்லை. இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு முன்மொழியப்பட்ட அமைதி திட்டம் போன்று, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான துவக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் ஏனைய முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் எனவும் புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார். இதேவேளை, டிரம்பின் குறித்த சமாதான திட்டத்தில் ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதால், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய மதிப்பை இழக்க நேரிடும் எனவும், இந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தினால், நீண்டகால நட்பை அமெரிக்கா இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நலன்களுக்கு துரோகம் இழைக்காத மாற்று திட்டங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார். மேலும், இந்த முன்மொழிவு ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், பரந்த பாதுகாப்பையும் பலவீனப்படுத்தக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில், இந்த சமாதான திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உக்ரைனை வலியுறுத்திஉள்ளது. https://athavannews.com/2025/1453607

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

2 months 3 weeks ago
நன்றி அண்ணா பகிர்விற்கு. கடந்த வருடமோ/ இந்த வருட ஆரம்பத்திலா என நினைவில்லை, காரைநகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் எலும்புமச்சை மாற்று சிகிச்சைக்காக 1.5 கோடி ரூபா சேர்க்க தொடங்கி பின்னர் இறந்துவிட்டார். எங்கட மக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்விற்கு இந்த பதிவு பயன்படும்.
Checked
Thu, 02/19/2026 - 01:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed