2 months 3 weeks ago
தலைப்பில் உள்ளதுபோல் மிகப் பெரிய வெற்றி கிடையது. கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில்தான் நிறைவேறியுள்ளது. 218 வாக்குகள் ஆதரவாகவும் 214 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன.
2 months 3 weeks ago
இன அழிப்புகளின் நேரடிப்பங்குதாரர்களாக இருந்து போர்த் தளபாட விற்பனையோடு, அதன் பின்னரான மீள்கட்டுமானத்திற்போதும் பெருநிறுவனங்களான பல்தேசிய நிறுவனங்களின் கட்டுமானத்துறைக்கான விற்பனைவரை பெரும் இலாபத்தை அடைவது பெருமுதலைகளான இந்த நிறுவனங்களே. ஆனால், அவற்றின்மீது இந்த நாடுகள் தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிப்பதில்லை. ஆனால், வளர்ந்துவரும் மூன்றாம் மண்டல நாடுகளில் எங்காவது ஒரு நிறுவனத்தில் பணியாளருக்கு சரியான ஊதியம் கொடுக்கவில்லை, பாதுகாப்புப்பொறி முறைகள் இல்லை, குழந்தைத் தொழிளார்கள்(இவை ஏற்புடையனவன்று) எனப் பல்வேறு கெடுபிடிகளை ஏற்படுத்திவரும் இந்த நாடுகள் அல்லது நிறுவனங்கள் காஸாவில் 50000 சிறுவர்களைக் கொன்று மற்றும் காயப்படுத்திய இஸ்ரேலிய அரசு மீது காத்திரமான நடவடிக்கை எடுக்காதிருக்கின்றனர். இது கூட ஒருவகையில் இன அழிப்பிற்கு உதவுவதே. முள்ளிவாய்க்காலைத் தடுத்திருந்தால் அல்லது இன அழிப்பாளர்களைத் தண்டித்திருந்தால் ஏனைய நாடுகளுக்குத் தயக்கம் வரும். இப்போது காஸா இன அழிப்பை ஆதரிப்பதன் ஊடாக அடுத்து எந்த இனம் அழிவுக்குள்ளாகப் போகுதோ யாரறிவார். இன அழிப்பால் பயனடையும் நிறுவனங்கள் மற்றும் அரசுகளைப் பட்டியலிட்டு வெளிப்படுத்துதல் மற்றும் இஸ்ரேலின் உற்பத்திகளை வாங்கும் மேற்குலக நாடுகளையும் பட்டியலிடல் இதுபோன்ற செயற்பாடுகளே வெற்று அறிக்கைகளுக்கு அப்பாற் பயனுடையதாக அமையும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
2 months 3 weeks ago
இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை. ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
2 months 3 weeks ago
பட மூலாதாரம்,RUBINOBS படக்குறிப்பு, சிலியில் உள்ள செரோ பச்சனில் அமைந்துள்ள ரூபின் ஆய்வகம் மற்றும் ரூபின் துணைத் தொலைநோக்கி கட்டுரை தகவல் ஐயோன் வெல்ஸ் தென் அமெரிக்க செய்தியாளர் ஜார்ஜினா ரானார்ட் அறிவியல் செய்தியாளர் 3 ஜூலை 2025 சிலியில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த புதிய தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான இருண்ட பகுதியை, இதற்கு முன் வேறு எந்தத் தொலைநோக்கியும் வெளிப்படுத்தாத முறையில் உற்றுநோக்கும் திறனைக் கொண்டுள்ளது. அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த ஒரு படத்தில், பூமியில் இருந்து 9,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் உருவாகும் பகுதியில், பரந்து விரிந்த வண்ணமயமான வாயு மற்றும் தூசு மேகங்கள் சுழல்கின்றன. உலகின் அதிசக்தி வாய்ந்த டிஜிட்டல் கேமராவை வேரா சி ரூபின் ஆய்வகம் கொண்டுள்ளது. அது, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக உறுதியளிக்கிறது. நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருந்தால், இந்தத் தொலைநோக்கி அதைத் தனது முதல் ஆண்டிலேயே கண்டுபிடிக்கும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். பட மூலாதாரம்,NSF-DOE VERA C. RUBIN OBSERVATORY படக்குறிப்பு, வேரா ரூபின் தொலைநோக்கி எடுத்த முதல் படம் டிரிஃபிட் மற்றும் லகூன் நெபுலாக்களை நுணுக்கமான விவரங்களுடன் காட்டுகிறது. இந்தத் தொலைநோக்கி பூமிக்கு அருகிலுள்ள ஆபத்தான சிறுகோள்களை கண்டறிந்து, பால்வீதியை வரைபடமாக்கும். மேலும், நமது பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை உருவாக்கும் மர்மமான இருண்ட பொருள் (டார்க் மேட்டர்) குறித்த முக்கியக் கேள்விகளுக்கு பதிலளிக்கும். இந்தத் தொலைநோக்கி 10 மணிநேரத்தில் 2,104 புதிய சிறுகோள்களையும், பூமிக்கு அருகில் உள்ள ஏழு விண்வெளி பொருட்களையும் கண்டறிந்ததாக, திங்கள் கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரூபின் ஆய்வகம் தெரிவித்தது. மற்ற அனைத்து விண்வெளி ஆய்வுகளும், பூமியில் இருந்து செய்யப்படும் ஆய்வுகளும் கூட்டாக ஓர் ஆண்டில் சுமார் 20,000 சிறுகோள்களைக் கண்டுபிடிக்கின்றன. வேரா சி ரூபின் ஆய்வகம் தெற்குப் பகுதியின் இரவு வானத்தைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான 10 ஆண்டுக்கால பணியைத் தொடங்கி இருப்பதால், வானியலில் இதுவொரு வரலாற்றுத் தருணமாகக் கருதப்படுகிறது. "நான் தனிப்பட்ட முறையில் இந்தக் குறிக்கோளை அடைய சுமார் 25 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். பல வருடங்களாக இந்த அற்புதமான தளத்தை உருவாக்கி, இதுபோன்ற ஆய்வைச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம்," என்கிறார் ஸ்காட்லாந்தின் ராயல் வானியலாளர் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கேத்தரின் ஹேமன்ஸ். இந்த ஆய்வில் பிரிட்டன் முக்கியப் பங்காளியாக உள்ளது. தொலைநோக்கி விண்வெளியைப் படம்பிடிக்கும்போது, அதில் கிடைக்கும் மிகவும் விரிவான புகைப்படங்களை ஆராய பிரிட்டனில் தரவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வேரா ரூபின் நமது சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை பத்து மடங்கு அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,NSF-DOE VERA C. RUBIN OBSERVATORY படக்குறிப்பு, பால்வீதியைவிட சுமார் 100 பில்லியன் மடங்கு பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள சுழல் நட்சத்திரக் கூட்டங்கள் உள்பட ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த படங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பு பிபிசி வேரா ரூபின் ஆய்வகத்தைப் பார்வையிட்டது. சிலியின் ஆண்டிஸ் மலைத்தொடரில், செரோ பச்சோன் என்ற மலையில் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது. அங்கு, விண்வெளி ஆய்வுக்காக தனியார் நிலத்தில் பல ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகம் மிக உயரமான வறண்ட சூழலில், மிகவும் இருட்டான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களைப் பார்க்க இதுவொரு சரியான இடமாக உள்ளது. இந்த ஆய்வில், இருளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இரவில் காற்று வீசும் சாலையில் பேருந்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தொலைநோக்கி அமைந்துள்ள இடத்தில், முழு வெளிச்சம் கொடுக்கும் ஹெட்லைட்களை பயன்படுத்தக் கூடாது. ஆய்வகத்தின் உட்புறமும் இதேபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு வானத்தை நோக்கித் திறக்கும் தொலைநோக்கியின் குவிமாடம் முற்றிலும் இருட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு தனி பொறியியல் குழு பணியாற்றுகிறது. வானியல் ஆய்வுக்குத் தடையாக இருக்கக்கூடிய எல்ஈடி விளக்குகள் மற்றும் பிற வெளிச்சங்களை அணைக்க அந்தக் குழு உதவுகிறது. தொலைநோக்கியின் மூலம் ஆய்வு செய்ய, நட்சத்திரங்களின் ஒளியே "போதுமானதாக" இருக்கிறது என்று திட்டத்தை மேற்பார்வையிடும் விஞ்ஞானி எலானா அர்பாக் கூறுகிறார். பிரபஞ்சத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதே இந்த வானியல் ஆய்வகத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று என்று கூறும் அவர், அதற்காக, "பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மங்கலான விண்மீன் திரள்கள் அல்லது சூப்பர்நோவா வெடிப்புகளைப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார். "எனவே, நமக்கு மிகவும் கூர்மையான படங்கள் தேவை," என்கிறார் அர்பாக். ஆய்வகத்தின் ஒவ்வொரு வடிவமைப்பும் மிகுந்த துல்லியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SLAC NATIONAL ACCELERATOR LABORATORY படக்குறிப்பு, வேரா ரூபின் ஆய்வகத்தின் 3,200 மெகாபிக்சல் கேமரா, அமெரிக்க எரிசக்தி துறையின் SLAC தேசிய ஆக்ஸலரேட்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தத் தொலைநோக்கி, அதன் சிறப்பு வாய்ந்த மூன்று-கண்ணாடி வடிவமைப்பின் மூலம் செயல்படுகிறது. இரவு வானத்தில் இருந்து தொலைநோக்கிக்குள் வரும் ஒளி முதலில் 8.4 மீ விட்டமுள்ள முதன்மைக் கண்ணாடியில் விழுகிறது. பின்னர் 3.4 மீ விட்டமுள்ள இரண்டாம் நிலை கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அதன் பிறகு, 4.8 மீ விட்டமுள்ள மூன்றாவது கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்டு, அந்த ஒளி கேமராவுக்குள் செல்கிறது. அந்த கண்ணாடிகளைச் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி தூசிகூட படத்தின் தரத்தை மாற்றிவிடும். இந்தத் தொலைநோக்கியின் அதிக பிரதிபலிக்கும் திறனும், அதனுடைய வேகமும், அதிக அளவிலான ஒளியைப் பிடிக்க உதவுகிறது. இது "மிகவும் தொலைவில் உள்ள பொருட்களைப் பார்க்க முக்கியமானது" என்று ஆய்வகத்தின் தீவிர ஒளியியல் நிபுணரான கில்லெம் மெகியாஸ் கூறுகிறார். வானியலில், வெகுதொலைவில் உள்ளன என்பதற்கான அர்த்தம், அவை பிரபஞ்சத்தின் முந்தைய காலங்களைச் சார்ந்தவை என்பதாகும். விண்வெளி மற்றும் நேரத்தின் மரபு ஆய்வின் (Legacy Survey of Space and Time) ஒரு பகுதியாக, இந்தத் தொலைநோக்கியின் கேமரா ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இரவு வானத்தைப் படம் பிடிக்கும். 1.65 மீ x 3மீ அளவுடைய இந்த கேமரா 2,800 கிலோ எடையுடன், பரந்த பார்வையை வழங்குகிறது. நகரும் குவிமாடமும் தொலைநோக்கியின் ஏற்றமும் விரைவாக இடமாற்றம் செய்யும் திறன் கொண்டவை என்பதால், இந்த கேமரா இரவில் சுமார் 8 முதல் 12 மணிநேரம் வரை, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒரு படத்தைப் பதிவு செய்யும். பட மூலாதாரம்,RUBINOBS படக்குறிப்பு, கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன இந்த கேமரா 3,200 மெகாபிக்சல்களை கொண்டுள்ளது (ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் ஃபோனின் கேமராவைவிட 67 மடங்கு அதிகம்). அதாவது, ஒரு புகைப்படத்தை முழுமையாகக் காண, 400 அல்ட்ரா HD டிவி திரைகள் தேவைப்படும். "முதல் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அது ஒரு மறக்க முடியாத சிறப்புத் தருணமாக இருந்தது" என்று பகிர்ந்துகொண்டார் மெகியாஸ். "இந்தத் திட்டத்தில் நான் முதன்முதலில் பணியாற்றத் தொடங்கியபோது, 1996 முதல் இதில் பணியாற்றி வந்த ஒருவரைச் சந்தித்தேன். நான் 1997இல் பிறந்தவன். இதைப் பார்த்தபோது, இது ஒரு தலைமுறை வானியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்த முயற்சி என்பதை உணர முடிந்தது" என்றும் அவர் கூறினார். ஓர் இரவில் சுமார் 10 மில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படும் நிலையில், உலகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும். "தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அம்சம் தான் உண்மையில் புதியதும் தனித்துவமானதும். இது நாம் இதுவரை கற்பனைகூட செய்யாத விஷயங்களை நமக்குக் காண்பிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது" என்று பேராசிரியர் ஹேமன்ஸ் விளக்குகிறார். ஆனால், பூமிக்கு அருகில் திடீரென வரும் ஆபத்தான விண்வெளி பொருட்களை, குறிப்பாக YR4 போன்ற சிறுகோள்களைக் கண்டறிந்து எச்சரிக்கையூட்டுவதன் மூலம் நம்மைப் பாதுகாக்கவும் இது உதவக்கூடும். YR4 சிறுகோள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஒரு கட்டத்தில் கவலை தெரிவித்தனர். கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன. "இதுவொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமது விண்மீனை ஆய்வு செய்ய இதுவரை கிடைத்ததிலேயே இது மிகப்பெரிய தரவுத் தொகுப்பாக இருக்கும். இது பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது ஆராய்ச்சிகளை முன்னேற்றும் சக்தியாக இருக்கும்" என்கிறார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிஸ் டீசன். பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களின் எல்லைகளைப் பகுப்பாய்வு செய்ய, அவர் அந்தப் படங்களைப் பெறுவார். தற்போது கிடைக்கும் பெரும்பாலான தரவுகள் சுமார் 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவற்றை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், வேரா ரூபின் தொலைநோக்கியின் உதவியுடன், விஞ்ஞானிகள் 12 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பொருட்களையும் காண முடியும். பால்வீதியின் நட்சத்திர ஒளிவட்டம் (stellar halo), அதாவது காலப்போக்கில் அழிக்கப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பையும், இன்னும் உயிருடன் இருப்பினும் மிக மங்கலாகவும், கண்டுபிடிக்க கடினமாகவும் இருக்கும் சிறிய விண்மீன் திரள்களையும் காண முடியும் என பேராசிரியர் டீசன் நம்பிக்கை தெரிவிக்கிறார். இவற்றோடு, நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருக்கிறதா என்ற நீண்டகால மர்மத்துக்கு விடை காணும் அளவுக்கு வேரா ரூபின் தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது வியக்கத்தக்கது. அது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட 700 மடங்கு தொலைவில் இருக்கக்கூடும். இது, பூமியில் இருந்து ஆய்வு செய்யப் பயன்படும் மற்ற தொலைநோக்கிகளால் அடைய முடியாத அளவுக்கு அப்பாற்பட்ட தொலைவு. "இந்தப் புதிய அழகான ஆய்வகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால் அதற்காக நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன்" என்கிறார் பேராசிரியர் ஹேமன்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjd2ej1g275o
2 months 3 weeks ago
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர் 04 JUL, 2025 | 11:56 AM மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் மூவர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இலங்கையர்கள் மூவரும் நேற்று வியாழக்கிழமை (03) மாலை 05.20 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் புத்தளம் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நீ்ர்கொழும்பு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். https://www.virakesari.lk/article/219160
2 months 3 weeks ago
Published By: VISHNU 03 JUL, 2025 | 08:04 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் வருடாந்தம் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் 35 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுவர் புற்றுநோயாளர்கள் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இந்திரா டிரேடர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் நோயாளர்களுக்கான ஐந்து மாடிக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (3) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர், மருத்துவமனை கட்டுமானப்பணிகளால் சுகாதார அமைச்சு பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. சில கட்டிடநிர்மாண பணிகள் சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் ஒரு சில காரணங்களால், அப்பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் கட்டுமானப்பணிக்காக மதிப்பிடப்பட்ட தொகையை விட 50 முதல் 60 சதவீத பணத்தை மேலதிகமாக வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில அரச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் போதும் காலதாமதம் ஏற்படுகிறது. ஆலோசனை மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஒப்பந்த திட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியும் கவனம் செலுத்தியுள்ளார். திறைசேரியிலிருந்து பணத்தை விடுவித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றால் மாத்திரமே மதிப்பீட்டின்படி பணிகளை நிறைவு செய்ய முடியும். எதிர்வரும் காலங்களில் புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் அத்திட்டம் முழுமை பெறும் வரையான காலம் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.நாட்டில் வருடாந்தம் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் 35 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுவர் புற்றுநோயாளர்களாவர். அந்தவகையில் வருடாந்தம் மஹரகம தேசிய வைத்தியசாலையில் 11 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சிகிச்சைப் பெறுகின்றனர். புற்றுநோய் சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அரசாங்கத்தால் மஹரகம புற்றுநோய் வைத்திய நாளைக்கு விரைவில் 5 புதிய லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியும் மருத்துவமனைக்கு மேலும் இரு லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்களை வழங்க உள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் மேலும் எளிதாக்கும். மஹரகம வைத்தியசாலையின் சமையலறையை ஒரு முன்னோடி திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனை சமையலறையின் நிலைக்கு மேம்படுத்தப்படும். நோயாளிக்கு ஏற்ற உணவுத் திட்டத்தை வழங்குவதற்குப் பதிலாக, நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களுடனும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்த மருத்துவமனையில் ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/219141
2 months 3 weeks ago
'அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை நான் எடுத்தேன்' - சாட்சியை காக்க வழிகள் உள்ளதா? படக்குறிப்பு, அஜித்குமார் வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கூறியிருந்தார் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 ஜூலை 2025, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் "அஜித்குமாரை தாக்கும் வீடியோவை நான் எடுத்தேன். இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது" என்கிறார், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஊழியர் சக்தீஸ்வரன். தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, தென்மண்டல ஐஜி உத்தரவின் பேரில் ராமநாதபுரத்தில் இருந்து இரண்டு காவலர்கள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 'இந்தியாவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் அதை மாநில அரசு முறையாக செயல்படுத்துவதில்லை' என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 28 ஆம் தேதியன்று வழிபாடு நடத்துவதற்காக வந்த முனைவர் நிகிதா என்பவர், தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை சவரன் நகையைக் காணவில்லை என திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கோவில் காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். அஜித்குமார் தாக்கப்படும் வீடியோவும் வெளியானது. கைதான ஐந்து காவலர்கள் இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளி மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்தது. அப்போது, அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை மனுதாரர்கள் தரப்பில் போட்டுக் காண்பித்தனர். கோவில் நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் வைத்து அவரைத் தாக்கியதாகவும் அப்போது ஒருவர் மறைவாக நின்று வீடியோ எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி தமிழால் சரிபார்க்க முடியவில்லை. ஆனால், போலீஸார் தாக்கும் வீடியோவை தான் எடுத்ததாகக் கூறிய கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரணை நடத்தியது. வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது அங்கு யார் இருந்தார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த சக்தீஸ்வரன், கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தார். "வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும்" எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் ஆவணங்கள், கேமரா பதிவுகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு, ஜூலை 9 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர். படக்குறிப்பு, காவலாளி அஜித்குமாரும் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும் 'உயிருக்கு அச்சுறுத்தல்' - டிஜிபியிடம் மனு இந்த நிலையில், தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய காவலருக்கு குற்றப் பின்னணி உடைய நபர்களுடன் தொடர்பு உள்ளது' எனக் கூறியுள்ளார். அஜித்குமாரை போலீஸ் தாக்கும் வீடியோவை எடுத்தேன் என்பதால் தனக்கும் தன்னைச் சார்ந்துள்ளவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக சக்தீஸ்வரன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது இதே தகவலைக் குறிப்பிட்ட சக்தீஸ்வரன், "அஜித்குமாரை காப்பாற்ற முடியாமல் தவித்தேன். வீடியோ எடுக்கும்போது யாரோ வருவது போல இருந்ததால், 30 நொடிகளுக்கு மேல் வீடியோவை எடுக்க முடியவில்லை" எனக் கூறினார். "அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட வழக்கின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்" எனவும் சக்தீஸ்வரன் குறிப்பிட்டார். சக்தீஸ்வரனின் கோரிக்கையை தொடர்ந்து அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. படக்குறிப்பு, கோவிலின் பின்புறம் "சாட்சி மிக முக்கியம்...ஆனால்?" - சகாயம் சொல்வது என்ன? "கொலை, கொள்ளை அல்லது கொடும் குற்றங்கள் சார்ந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனைகளை வழங்குவதற்கு எந்தளவுக்கு ஆவணங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு மனிதரின் சாட்சி மிக முக்கியமானது" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். ஆனால், சாட்சிகள் அச்சுறுத்தப்படுவது, அலைக்கழிப்பது போன்றவை தொடர்ந்து நடப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "வழக்கு விசாரணை நடக்கும்போது சாட்சி சொல்ல வந்த நபரும் குற்றம் சுமத்தப்பட்ட நபரும் அருகருகே அமரும் சூழல்கள் ஏற்படுகின்றன" என்கிறார். பல்வேறு வகைகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதாகக் கூறும் சகாயம், "பெரும்பாலும் சாட்சிகளை ஊக்கப்படுத்தும் சூழல்கள் நீதிமன்றங்களில் இல்லை. ஒரு வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும்" எனக் கூறுகிறார். மேலும் அவர் பணியாற்றிய வழக்கு குறித்தும் மேற்கோள்காட்டினார். 2014-ஆம் ஆண்டு மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சட்ட ஆணையராக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. அப்போது கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. "சாட்சி சொல்வதற்கு பலர் முன்வந்தனர். புகார் கொடுத்த நபரே நேரில் வந்து நரபலி நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தைக் காட்டினார். அவரைப் பாதுகாக்க வேண்டியது முக்கிய பணியாக இருந்தது" எனக் கூறுகிறார் சகாயம். இதுதொடர்பாக, மதுரை காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால் சாட்சிக்கு சில மாதங்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறும் சகாயம், "அதன்பிறகு அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தான் உட்பட 22 பேருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது," என்று கூறுகிறார். சகாயத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரம், கடந்த மே மாதம் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் எந்தவொரு அச்சுறுத்தலும் அவர்களுக்கு இல்லாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். படக்குறிப்பு, ஒரு வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் சகாயம் "நடவடிக்கை போதுமானதாக இல்லை" "சாட்சியாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பின்மை என்பது பரவலாக உள்ளது. அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது போதுமானதாக இல்லை" எனக் கூறுகிறார் சகாயம். 1950 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாட்சிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து சில பரிந்துரைகளை சட்ட ஆணையம் வழங்கியுள்ளதாகக் கூறும் சகாயம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme) கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார் சகாயம். சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் 2018 'வழக்கின் சாட்சிக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பாக மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்' என சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்திட்டத்தில், சாட்சிக்கான அச்சுறுத்தலை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். சாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது விசாரணை நடக்கும்போது பாதுகாப்பு மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது சாட்சி மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயரைக் கெடுப்பது, குற்றம் இழைக்கும் தீங்குடன் அச்சுறுத்துவது போன்றவை. இதற்காக மாநில அரசு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியின் (CSR) மூலம் இவற்றை செயல்படுத்தலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சாட்சியின் மனுவை பரிசீலிப்பது தொடர்பான வழிமுறைகளையும் இத்திட்டம் பட்டியலிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme) கொண்டு வரப்பட்டது மேலும் அதில், சாட்சிக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும். அவசர சூழல்களைப் பொறுத்து மனு நிலுவையில் உள்ளபோதே சாட்சி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கலாம். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் உடனடி பாதுகாப்பு வழங்குவதைத் தடுக்கக் கூடாது. அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதில் ரகசியத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். அறிக்கையை விரைவாக தயாரித்து 5 நாட்களுக்குள் உரிய அதிகாரியை சென்றடைய வேண்டும். சாட்சியின் பாதுகாப்பு தொடர்பான முழு பொறுப்பும் மாநில காவல்துறையின் தலைவருக்கு உள்ளது. பாதுகாப்பு உத்தரவு நிறைவேற்றப்பட்ட உடன் மாதம்தோறும் பின்தொடர்தல் அறிக்கையை (follow-up report) உரிய அதிகாரியிடம் பாதுகாப்புப் பிரிவு தாக்கல் செய்ய வேண்டும். பாதுகாப்பு உத்தரவை திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் விசாரணை முடிந்ததும் உதவி காவல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் இருந்து புதிய அறிக்கை கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்? சாட்சியை பாதுகாப்பதற்கான அம்சங்களையும் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பு இருக்க வேண்டும். அவை மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விசாரணையின்போது சாட்சியும் குற்றம் சுமத்தப்பட்ட நபரும் நேருக்கு நேர் சந்திக்காமல் பார்த்துக்கொள்வது தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தல் சாட்சியின் தொலைபேசி எண்ணை மாற்றுவதற்கு தொலைபேசி நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்தல் சாட்சியின் வீட்டில் பாதுகாப்பு கதவுகள், சிசிடிவி, அலாரம், வேலி போன்றவற்றை நிறுவ வேண்டும். பெயர்களை மாற்றி சாட்சியின் அடையாளத்தை மறைத்தல் சாட்சியின் வீட்டைச் சுற்றி வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் அருகில் உள்ள நகரத்துக்கு தற்காலிக வசிப்பிட மாற்றம் செய்யலாம். நீதிமன்றம் சென்று திரும்புவதற்கான அரசு வாகனம் அல்லது அரசு நிதி உதவியுடன் போக்குவரத்து வசதி வழங்குதல் கேமரா முன்பு விசாரணையை நடத்த வேண்டும். சாட்சி பாதுகாப்பு நிதியில் இருந்து நிதி உதவிகள், மானியங்கள் வழங்குதல், புதிய தொழில் என தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கலாம். இதனை மேற்கோள் காட்டிப் பேசிய சகாயம், "நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்" என்கிறார். படக்குறிப்பு,அஜித் குமாரின் தம்பி நவீன்குமார் "பயிற்சி முகாம் நடத்தப்படுவதில்லை" - ஹென்றி திபேன் சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், " தமிழ்நாட்டில் இதுதொடர்பாக எந்தப் பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை. 38 மாவட்டங்களிலும் இதுதொடர்பாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்" எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "வழக்கறிஞர்களை விடவும் சாட்சிகள் முக்கியமானவை. சாட்சிகள் பலவீனமாக உள்ளதா என்பது புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால், அதை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை" எனத் தெரிவித்தார். சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறையோ, பாதிக்கப்பட்டவர்களோ பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளாத சூழலே நிலவுவதாகவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,HENRI TIPHAGNE/FACEBOOK படக்குறிப்பு, சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து தமிழ்நாட்டில் எந்தப் பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை என்கிறார் ஹென்றி திபேன் "முறையாகப் பின்பற்றப்படுகின்றன" - முன்னாள் டிஜிபி ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு. பிபிசி தமிழிடம் பேசிய அவர், " சில வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றப் பின்னணி உடையவர்களாகவோ, வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் மட்டுமே இதுபோன்று சாட்சிகளை மிரட்டும் சம்பவங்கள் நடக்கின்றன" எனக் கூறுகிறார். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் புகார் வந்தால் சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்படுவதோடு தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பையும் காவல்துறை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். உடற்கூராய்வுக்கு பின் வேகமாக மாறிய காட்சிகள் - 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? முழு விவரம் 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம் பட மூலாதாரம்,DR.SYLENDRABABU.IPS/FACEBOOK படக்குறிப்பு, சாட்சிகள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் சைலேந்திரபாபு சில நேரங்களில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பது கண்டறிய முடியாமல் போகும் நிகழ்வுகளும் நடப்பதாகக் கூறும் சைலேந்திரபாபு, "சிறிய தவறுகள் நடக்கலாமே தவிர சாட்சிகள் பாதுகாப்புக்கான வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன" என்கிறார். "சாட்சிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது காவல்துறைக்கு கரும்புள்ளியாக மாறும். ஆகவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தொடர்புடைய காவல் ஆணையர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன" எனக் கூறுகிறார் சைலேந்திரபாபு. காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் தொடர்பான வகுப்புகளுடன் சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுவதாகக் கூறும் அவர், "இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் ஆணையர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்வது நடைமுறையாக உள்ளது" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3enzgezpj7o
2 months 3 weeks ago
சுப்மன் கில்லின் இரட்டை சதம் ஏன் இவ்வளவு சிறப்பானது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மான் கில் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை (269) சதத்தைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். 2வது டெஸ்டில் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், ஆட்டத்தின் போக்கு மாறவும் கில் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். பிரிட்டன் மண்ணில் மிகப்பெரிய டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி சந்திக்கிறது. கேப்டன் பொறுப்பில் 25 வயதான சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவாரா என்ற சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கில் பதில் அளித்துவிட்டார். கேப்டனின் பாதுகாப்பான கரங்களுக்குள் இந்திய அணியின் கடிவாளம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கில் தனது இரட்டை சதத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். அது மட்டுமல்ல முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய வீரர்கள் பலரின் சாதனையையும் முறியடித்து வரலாற்று சாதனைகளை கில் படைத்துள்ளார். குறிப்பாக சேனா நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா(S), இங்கிலாந்து (E), நியூசிலாந்து (N), ஆஸ்திரேலியா (A) ஆகிய நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கேப்டனாக கில் உருவெடுத்துள்ளார். இமாலய அளவில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா, கில் கூட்டணி 203 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர் கில்லின் சாதனைகள் சுப்மன் கில் இந்த டெஸ்டில் 269 ரன்கள் சேர்த்ததன் மூலம், டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை பதிவு செய்து கோலியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். கோலி கேப்டனாக இருந்தபோது, 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளுக்கு வெளியே இந்திய கேப்டன் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் கில் அடித்த 269 ரன்களாகும். இதற்கு முன் சச்சின் சிட்னி மைதானத்தில் அடித்த 241 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. வெளிநாடுகளில் இந்திய பேட்டர்கள் அடித்த ஸ்கோர்களில் 3வது அதிகபட்சமாக கில் அடித்த 269 ரன்கள் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் முல்தானில் சேவாக் 309 ரன்களும், ராவல்பிண்டியில் திராவிட் 270 ரன்களும் சேர்த்திருந்தனர், மூன்றாவதாக கில் 269 ரன்கள் இடம் பிடித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் மண்ணில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியில் இரு இந்தியர்கள் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். 2002ல் ராகுல் திராவிட்டும், 1979ல் சுனில் கவாஸ்கரும் அடித்திருந்தனர். ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப்பின் சுப்மன் கில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அடித்த ஸ்கோர்களில் 7-வது அதிகபட்ச ஸ்கோரை சுப்மான் கில் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்துக்கு பயணம் செய்து இதற்கு முன் இரு பேட்டர்கள் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். அதில் 2003-ல் கிரேம் ஸ்மித் 277 ரன்களும், 1971-ல் அப்பாஸ் 271 ரன்களும் அடித்திருந்தனர். அந்த வகையில் 22 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு அணியைச் சேர்ந்த ஒரு பேட்டர் என்ற வகையில் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். உலகளவில் 7 பேட்டர்கள் கேப்டன் பொறுப்பேற்று முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளனர். விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ஜேக்கி மெக்ளூ, அலிஸ்டார் குக், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வரிசையில் கில் இடம் பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை இதுவரை 5 பேட்டர்கள் செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில், இப்போது சுப்மன் கில். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கில்லின் ஆட்டத்தில் 93.28 சதவீதம் கட்டுப்பாட்டுடன் இருந்தது சிம்மசொப்னம் கடந்த இரு நாட்களாக பேட்டிங்கில் அசைக்க முடியாத வல்லமை மிகுந்தவராக கில் களத்தில் இருந்தார். கில்லை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஸ்டோக்ஸ் பலவிதமான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒரு சிறிய தவறைக் கூட கில் செய்யவில்லை. கில்லின் ஆட்டத்தில் 93.28 சதவீதம் கட்டுப்பாட்டுடன் இருந்தது. கிரிக்இன்போ தகவலின்படி டெஸ்ட் போட்டியில் 2006க்குப் பின் இரு பேட்டர்கள் மட்டுமே அதிக கட்டுப்பாட்டுடன் இதுவரை பேட் செய்துள்ளனர். 2006ல் இயான் பெல் இலங்கைக்கு எதிராக 96.45 சதவீத கட்டுப்பாட்டுடன் பேட் செய்து 119 ரன்களும், ஜேம் ஸ்மித் 94.60% சதவீதம் கட்டுப்பாடுடன் பேட் செய்து இலங்கைக்கு எதிராக 111 ரன்களும் சேர்த்தனர். அதற்கு பின் கில் இப்போது கட்டுப்பாட்டுடன் பேட் செய்துள்ளார். இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி முதல்நாளில் ஆட்டமிழந்து சென்ற பின் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருடன் கூட்டணி சேர்ந்த கில் 376 ரன்களை அணிக்காக சேர்த்துக் கொடுத்துள்ளார். ஜடேஜாவுக்கு திட்டம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருந்தது. ஜடேஜா (41), கில் (114) கூட்டணி 99 ரன்களுடன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆட்டம் தொடங்கி முதல் ரன்னை ஜடேஜா எடுத்தவுடன் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய சுப்மன் கில் 263 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். ஜடேஜாவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜடேஜாவுக்கு பவுன்ஸரில் சிக்கல் இருப்பதை உணர்ந்த கேப்டன் ஸ்டோக்ஸ், அதற்குரிய உத்தியை செயல்படுத்தினார். வோக்ஸை பந்துவீசச் செய்து, ஜடோஜாவின் பாடிலைனில் பவுன்ஸர் வீசச் செய்தார். திடீரென வந்த பவுன்ஸரை சமாளிக்க முடியாத ஜடேஜா விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய சுந்தர் கில்லுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. சுப்மன் கில்லும் 348 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தை நெருங்கியபோது, ரூட் பந்துவீச்சில் போல்டாகி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கில்லுக்கு மரியாதை தந்த ரசிகர்கள் கில்லும் 269 ரன்கள் சேர்த்தநிலையில் டங் பந்துவீச்சில் போப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் ஆட்டமிழந்து வெளியேறியபோது அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டினர். கில் ஆட்டமிழந்தபின் கடைசி வரிசை வீரர்கள் சிராஜ்(8), ஆகாஷ்(6) ஆகியோர் விரைவாக வெளியேற இந்திய அணி 151 ஓவர்களில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், டங், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கில்லை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஸ்டோக்ஸ் பலவிதமான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒரு சிறிய தவறைக் கூட கில் செய்யவில்லை அதிர்ச்சித் தொடக்கம் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை மாலை தேநீர் இடைவேளைக்குப்பின் தொடங்கிய நிலையில் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆகாஷ் தீப் வீசிய 3வது ஓவரிலேயே பென் டக்கெட் ரன் ஏதும் சேர்க்காமல் ஸ்லிப்பில் இருந்த கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆலி போப் முதல் பந்திலேயே பேட்டில் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் இருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்கில் வெளியேறினார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. கிராளி, ரூட் நிதானமாக ஆடி வந்தனர். சிராஜ் ஓவரில் தடுமாறிய கிராளி 19 ரன்னில் முதல் ஸ்லிப்பில் இருந்த கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது. 4வது விக்கெட்டுக்கு ஹேரி ப்ரூக், ரூட் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டு விளையாடி வருகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdj937zy8o
2 months 3 weeks ago
https://www.facebook.com/share/v/1CH4J4HNdd/?mibextid=wwXIfr
2 months 3 weeks ago
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 11:00 AM காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக இஸ்ரேல் காசா மீதான தாக்குதலிற்கு சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும் தலைமைகளும் தங்கள் கடமைகளை தட்டிக்கழிக்கும் அதேவேளை இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு , இனவெறி மற்றும் தற்போதைய இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் பெருநிறுவனங்கள் பலத்த இலாபத்தை ஈட்டியுள்ளன என ஐநாவின் அறிக்கையாளரின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இந்த விடயத்தின் சிறுபகுதியை மாத்திரமே அம்பலப்படுத்தியுள்ளது தனியார் துறையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லொக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எவ் 35 போர் விமானத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு கொள்வனவு மூலம் இஸ்ரேலிய இராணுவம் பயனடைந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா அறிக்கையாளர் ஒரேநேரத்தில்1800 குண்டுகளை கொண்டு செல்லும் மிருகத்தனமான முறையில் முதன் முதலில் இந்த விமானத்தை இஸ்ரேலே பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை" என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை அமைந்துள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன ஈடுபாடு சட்டவிரோத குடியேற்றங்களிலிருந்து விளைபொருட்களை விற்கும் விவசாய நிறுவனங்கள் மற்றும் போருக்கு நிதியளிக்க உதவும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இது ஆராய்கிறது. https://www.virakesari.lk/article/219155
2 months 3 weeks ago
செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 08:28 AM செம்மணியில் ஒரு மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார். செம்மணியில் ஒரு புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது - மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார் ஜூலை 1998 இல் தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை அவரைத் தேடி வந்த மேலும் நான்கு பேரின் கொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். அவரது விசாரணையின் போது செம்மணிக்கு அருகிலுள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் நானூறு பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.என அவர் தெரிவித்துள்ளார் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செம்மணிப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் 4வது நாளின் போது, குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று யுனிசெஃப் விநியோகித்த வகையைச் சேர்ந்த தனித்துவமான நீல நிறப் பள்ளிப் பையுடன் புதைக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்ததுஎன அவர் தெரிவித்துள்ளார் இதுவரை, அகழ்வாராய்ச்சியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு அரசு நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மனித உரிமை ஆர்வலர்கள் சாட்சியங்களை சிதைத்து இந்த எலும்புக்கூடுகள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானம் 46/1 இன் படி, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்க, ஒருங்கிணைக்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் உள்ளது. ஐ.நா. தான் கொண்டுள்ள ஆணையைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது. 1998 ஆம் ஆண்டு ராஜபக்சேவின் சாட்சியத்தை பல செய்தி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் அரசு சாரா நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதிலிருந்து, செம்மணியில் ஒரு பெரிய புதைகுழி இருப்பதை உலகம் அறிந்திருக்கிறது. இருப்பினும், இப்போதுதான் அது தோண்டப்படுகிறது. இப்போதும் கூட, சான்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார் . இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம், 46/1 தீர்மானத்தின் கட்டளைக்குள் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார் .. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் 46/1 இன் இணை அனுசரணையாளராகவும், இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வரலாற்றுப் பொறுப்பைக் கொண்ட நாடாகவும், ஐக்கிய இராச்சியம் இந்த பிரச்சினையில் முன்னிலை வகிக்க வேண்டும். செம்மணி படுகொலையின் குற்றவாளிகள் மற்றும் அதைப் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய இப்போது ஒரு சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் உள்ளபடி, இது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்என அவர் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/219147
2 months 3 weeks ago
வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம்! - திலகநாதன் 04 JUL, 2025 | 02:46 AM வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களினதும் நன்மை கருதி அவர்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தேசியமக்கள் சக்தி அரசு எடுத்துள்ளது. அந்தவகையில் கடந்த 2012ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் கூகுள் வரைபடத்தின் மூலம் வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். குறிப்பாக இந்த மாவட்டத்தில் அண்ணளவாக 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 52ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது. அவை அனைத்தையும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் விடுவிக்கவுள்ளது. அந்த காணிகளை அதன் உரிமையாளர்களுக்கும் காணிகள் அற்ற மக்களுக்கும் வழங்குவதற்கான துரித நடவடிக்கையினை நாம் மேற்கொண்டுள்ளோம். அத்துடன் வவுனியாவில் 849 குளங்கள் உள்ளது. அதில் 221 குளங்கள் வனவளதிணைக்களத்தின் எலைக்குள் அமைந்துள்ளது. இவற்றில் தற்போது 44 குளங்களை உடனடியாக விடுவித்து அவற்றை மீளவும் புணர்நிர்மானம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் காடுமண்டி காணப்படுகின்ற ஏனைய 149 குளங்களை மீட்டு அவற்றை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்படும்.இந்த வருடத்திற்குள் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த மாவட்டத்தில் ஆறு பெரிய நீர்பாசன குளங்கள் உள்ளன. அவற்றை புணரமைப்பதற்காக 780 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது. அந்த நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணி விடுவிப்பின் முதற்கட்டமாக நெடுங்கேணியில் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படவேண்டிய இடங்களை அடையாளப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நேற்றயதினம் ஆரம்பித்து வைத்தோம். வவுனியா வடக்கு பிரதேச்செயலாளர்,வனவளதிணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உலக வங்கியானது ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு மக்களின் பொருளாதாரத்தை வளம்பெறசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவோம். என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219145
2 months 3 weeks ago
ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார் 04 JUL, 2025 | 06:03 AM கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பன வற்றுக்கு மத்தியில் செய்தி செய்தியாளராக பணியாற்றியவர். குறிப்பாக பல்வேறு பட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் 2010ம் ஆண்டு முதல் தினக்குரல் வலம்புரி தினகரன் தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களின் கிளிநொச்சி செய்தியாளராக பணியாற்றியுள்ளார். நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் காலமானார். https://www.virakesari.lk/article/219143
2 months 3 weeks ago
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது 04 JUL, 2025 | 10:55 AM முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04 ) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டுள்ளார். எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219154
2 months 3 weeks ago
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "விரிவான கடன் வசதி திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் மற்றும் IMF இன் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டன. விரிவான கடன் வசதி திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுஆய்வுகளின் போது செலுத்தப்படாத செலவுகள் தொடர்பாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் நடைபெற்றது. IMF இற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை வேண்டுமென்றே நடைபெறவில்லை. இதற்கு காரணம், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களால் செலுத்தப்படாத தொகைகள் குறித்து உரிய நேரத்தில் அறிக்கையிடப்படாத பலவீனங்கள் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ‘செலுத்தப்படாத தொகைகள்’ என்பதன் வரையறை தொடர்பாக அதிகாரிகளின் தவறான புரிதல் ஆகும். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள், அதாவது, செலுத்தப்படாத தொகைகளை தற்போதைய நிதி கட்டமைப்பிற்குள் திருப்பிச் செலுத்துதல், மற்றும் எதிர்காலத்தில் செலுத்தப்படாத தொகைகள் குவிவதையோ அல்லது தவறான தகவல்கள் அறிக்கையிடப்படுவதையோ தவிர்க்க, புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு இணங்க பொது நிதி முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை நிர்வாகக் குழுவால் நேர்மறையாக பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல்களுக்கு காரணமான அளவு செயல்திறன் அளவுகோல்களை பின்பற்றாதமைக்கு விலக்கு அளிக்க நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது, மேலும் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டது," என ஒகமுராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmcoc2fc000qsqp4k9prqzakm
2 months 3 weeks ago
அம்ஷிகா விவகாரத்தில் தாமதம் ஏன்? பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவி 15 வயது தில்ஷி அம்சிகாவின் துயர தற்கொலை தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு உரையாற்றிய CTU பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பல உயர் மட்ட விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்குப் பிறகும், இந்த வழக்கில் பொலிஸார் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். 2024 ஒக்டோபரில் தனது முன்னாள் கணித ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தில்ஷி அம்ஷிகா ஏப்ரல் 29, 2025 அன்று கொட்டாஞ்சேனையில் உள்ள தனது வீட்டில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக கல்வி அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கூட்டம் அலரி மாளிகையில் கூட்டப்பட்டதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இருப்பினும், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார். கல்வி அமைச்சினாலும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராலும் நியமிக்கப்பட்ட குழுவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். "ஆண் ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்படாமல் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார், மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தனியார் கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று ஸ்டாலின் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இடமாற்ற உத்தரவுகளைப் பெற்ற எட்டு ஆசிரியர்கள், அதிகாரிகளின் உத்தரவுகளைப் புறக்கணித்து, ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இன்னும் பணியாற்றி வருவதாகவும் CTU கவலை தெரிவித்துள்ளது. ஜூலை 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதற்கு முன்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/அம்ஷிகா-விவகாரத்தில்-தாமதம்-ஏன்/175-360447
2 months 3 weeks ago
கடவுளுக்கும் பிச்சைப் பாத்திரம் கொடுத்து பிச்சை எடுக்க வைத்திருக்கும் மானிட இனத்தில் பிறந்து வாழும் நாங்கள் வேறு எப்படிச் சிந்திக்க முடியும்.?????🤣
2 months 3 weeks ago
வடக்கு மக்களின் நம்பிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு! வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்று நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்து வருகின்றோம் - என்றார். https://newuthayan.com/article/வடக்கு_மக்களின்_நம்பிக்கை_நிச்சயம்_நிறைவேற்றப்படும்;_நீதியமைச்சர்_தெரிவிப்பு!
2 months 3 weeks ago
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம் இதுவரை 40 என்புத்தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு சிதிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் நான்கு மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணிப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 34 மனிதச் சிதிலங்கள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சிறுவர்களின்_2_என்புத்தொகுதிகள்_செம்மணியில்_நேற்று_அடையாளம்
2 months 3 weeks ago
வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை! வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் 10 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இடங்களில் மாணவிகள் மாற்றும் மாணவர்களுக்கான மலசல கூட வசதி, குடிநீர் வசதி என்பன இருக்க வேண்டும் எனவும், அதனை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437983
Checked
Fri, 09/26/2025 - 15:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed