புதிய பதிவுகள்2

சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!

2 months 3 weeks ago
சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது! 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் நிர்ணயித்த முழு ஆண்டு இலக்கை (ரூ.2.115 டிரில்லியன்) நாங்கள் தாண்டிவிடுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார். Athavan Newsசுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்...

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

2 months 3 weeks ago
துப்பாக்கிச் சூட்டில் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய சகா உயிரிழப்பு! ராகமை, படுவத்தை பகுதியில் நேற்றிரவு (03) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய நண்பரான “ஆர்மி உபுல்” என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான போட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437976

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
அஜித்தின் பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல். சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான காவலாளி, பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அஜித்தின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் ” அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன. ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன் மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது. தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது பொலிஸார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437996

ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!

2 months 3 weeks ago
ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ் வியாழக்கிழமை (03) அவரது 4.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வரி குறைப்புக்கள் மற்றும் செலவுக் குறைப்புகளுக்கான ஒரு பெரிய சட்டமூலத்தை நிறைவேற்றியது. குடியரசுக் கட்சி தலைமையிலான சபை இந்த சட்டமூலத்தை 218–214 என்ற குறுகிய வாக்குகளில் நிறைவேற்றி கையொப்பமிட அவருக்கு அனுப்பியது. இந்த வாக்கெடுப்பு, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்குக் கிடைத்த ஒரு பெரிய சட்டமன்ற வெற்றியைக் குறிக்கிறது. அவரது குடியேற்ற ஒடுக்குமுறைக்கு நிதியைப் பெறுதல், அவரது 2017 வரி குறைப்புகளை நிரந்தரமாக்குதல் மற்றும் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் உறுதியளித்த புதிய வரிச் சலுகைகளை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும். இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (04) மாலை 5 மணிக்கு சட்டமூலத்தில் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், ஒரு பெரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்று சாதனை, இது இந்த நாட்டை ரொக்கெட் வேத்தில் முன்னேக்கி கொண்டு செல்லப்போகிறது, இது மிகவும் சிறப்பாக இருக்கும் – என்று கூறினார். பெரிய அழகான சட்டமூலம் 800க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம், ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. ‘பெரிய அழகான சட்டமூலம்’ என்று அழைக்கப்படும் ட்ரம்பின் புதிய வரி மற்றும் செலவின சட்டமூலம், நிரந்தர வரி குறைப்புகளுடன் கூட்டாட்சி செலவினங்களில், குறிப்பாக பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் பெரும் ஊக்கங்களை இணைத்து, சமூகப் பாதுகாப்பு வலைத் திட்டங்களை சீர் செய்யும் ஒரு விரிவான சட்டமன்றத் தொகுப்பாகும். இந்த சட்டமூலத்தின் மையத்தில், 2017 ட்ரம்ப் சகாப்த வரி குறைப்புகளை நிரந்தரமாக்குவதற்கான உந்துதல் உள்ளது. ஏனெனில் அவை தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியாக உள்ளன. நீட்டிக்கப்பட்ட வரிச் சலுகைகளுடன், இந்த சட்டமூலம் எல்லைப் பாதுகாப்பு, இராணுவம் மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கான நிதியை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த சட்டமூலத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று 350 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எல்லை மற்றும் தேசிய பாதுகாப்புத் திட்டம். இதில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவரை விரிவுபடுத்த 46 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 100,000 புலம்பெயர்ந்தோர் தடுப்புப் படுக்கைகளுக்கு 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் குடியேற்ற அமுலாக்கத்திற்கான ஒரு அதிரடிப் பணியமர்த்தல் என்பன உள்ளடங்கும். அதேநேரம், இந்த சட்டமூலும் சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மீதான வரிகளை இரத்து செய்யவில்லை. https://athavannews.com/2025/1437997

செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண

2 months 3 weeks ago
‘கிருஷாந்திதனது பரீட்சையை முடித்துக்கொண்டு பிறகு மற்றொரு தோழி சுந்தரம்கௌதமியுடன் சில நாட்களிற்கு முன்னர் உயிரிழந்த சக மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றது‘ - சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த சக மாணவியும் வேகமாக சென்ற இராணுவ வாகனம் இடித்ததினால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 க்கு பிறகு வடக்கு கிழக்கில் ஒருசில பெண்கள் சிங்கள இராணுவத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்ததை எங்கே சொல்லி அழுவது.

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

2 months 3 weeks ago
ஒரு உடையை நிலத்தை வாங்கும்போது தெரிவுசெய்யும்போது எத்தனை யோசிக்கிறோம் விசாரிக்கிறோம் ஆனால் பெண்ணை கொடுக்கும் போது அவ்வளவு சிரத்தை எடுப்பதில்லை பெரும்பாலும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் காரணம் யாராவது காது குத்தி குழப்பிப்போடுவார்கள் என்கிற பயம் இது இருபாலாருக்கும் பொருந்தும். தெரிந்தவர்கள், உறவினர், எதிரிகள், அண்டை வீட்டார், தொழில் புரியுமிடம் என பலரிடமும் விசாரிக்க வேண்டும். இதற்குத்தான் நம்மவர் சொல்வர் "ஒரு கலியாணம் செய்து வைப்பதென்றால் ஏழு செருப்பு தேயவேண்டுமென்று." பெண் வீட்டிலிருந்து பெறும் வரதட்ஷணையில் வாழ நினைப்பதும், தொடர்ந்து வாங்கி வாழலாம் என நினைப்பதும் தவறு. இதுவே இன்றைய ஆண் பிள்ளைகள், அவர்களைப்பெற்றவர்களின் நினைப்பு. பணமும் போய் பிள்ளையையும் இழந்து தவிக்கிறார்கள்.

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!

2 months 3 weeks ago
சேர்ந்து குடித்தவர்கள், விசாரணை என்றவுடன் தலைமறைவு. தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்றா? விசாரணையை எதிர்கொள்ள பயமா? "நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர்." என்றவுடனேயே சொல்லாமலே நண்பர்கள் யார் என்று தெரிந்துவிடும்.

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

2 months 3 weeks ago
இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

2 months 3 weeks ago
இள வயது. இளம் இரத்தம். பயமறியா வயது அவர்களுக்கு. நாமும் அதே வயதை தாண்டி வந்தவர்கள் தான்.அனுபவப்பட்டவர்கள் தான். அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிக்க வேண்டும் எனும் கொள்கையுடையவன் நான். வாழ்க்கை என்பதே கரணம் தப்பினால் மரணம். அது இந்த இளைஞர்களுக்கு நடந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும். எனது இடத்தில் யாழ்மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட தம்பி ஒருவர்(40) 10 நாட்களுக்கு முன் சிறு குளத்தில் மனைவியுடன் நீந்தி விளையாட சென்றிருக்கின்றார். இருவரும் சேர்ந்து நீந்திக்கொண்டிருக்கும் போது மூச்செடுக்க முடியாமல் தத்தளிக்க மனைவி தாங்கி பிடித்திருக்கின்றார்.அவலக்குரல் எழுப்பியிருக்கின்றார். அது மற்றவர்களுக்கு கேட்கவில்லை.கால் நிலத்தில் படாத நீர் நிலையில் மனைவியாலும் தாங்கி பிடிக்க முடியவில்லை. இயலாத கட்டத்தில் கையை விட்டுவிட்டார்.அப்படியே போனது போனது தான் இன்றும் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் காணாமல் போன அந்த தம்பி உதைபந்தாட்டம்,நீச்சல் என பல விளையாட்டுக்களில் ஈடுபாடு உள்ளவர். உடம்பில் கவனம் உள்ளவர். இவ்வளவு இருந்தும் என்ன பயன்/பலன்? விதி வலிமையானது.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
திமுகவுக்கு முரட்டு முட்டுக்கொடுக்கும் இந்த நாடக நடிகை நடிகை சர்மிளா போட்ட நாடகம்தான் இது. நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதை விடுத்து இது என்ன திசை திருப்பல்.நாடகம் நடித்துப்பழகிப்போனதால் ஒரு புது கதை எழுதுகிறார் இந்த நடிகை.

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2 months 3 weeks ago
ஏன் சோலி...இருக்கிறது☝ இவ்வளவுதான்.😂 நான் வந்தவுடனையே பேப்பர் தந்திட்டாங்கள்.😎 சாவகச்சேரியிலை ஜேர்மனியை மாதிரி ஒரு சோசல் காசு தாற ஆபிஸ் திறக்கும் மட்டும் என்ர கால் தூசு கூட அங்கை படாது.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
இந்த கொலை குஜராத் ரயில் எரிப்பு பாணியில் சில சங்கி காவல் அதிகாரிகளை வைத்து பிஜேபி ஆடிய நாடகம் என இப்போ பலர் எழுத ஆரம்பிக்கிறனர். அதாவது நகை காணாமல் போகவே இல்லை, அநியாயமாக ஒரு பொய் குற்றசாட்டை கூறி, சங்கிகளால் வாங்கப்பட்ட டிஸ்பி ஒருவர் மூலம் இந்த பையன் கொலை நடந்துள்ளதாம். நிகிதா முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு வேண்டப்பட்டவர் என கூறி பல மோசடிகளை செய்துள்ளாராம். திருப்புவனம் சம்பவமே அரசியல் டிராமாவா என சந்தேகம் வருது.. பாஜக மீது லைட்டை திருப்பிய டாக்டர் ஷர்மிளா Vignesh SelvarajPublished: Thursday, July 3, 2025, 21:54 [IST] சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். யார் இந்த நிக்கிதா? அஜித் குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில், புகார் அளித்த நிக்கிதா குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள். இவர் மறைந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் நிக்கிதா முனைவர் பட்டம் பெற்றவர்; திண்டுக்கல் அரசு மகளிர் கலை கல்லுாரியில் தாவரவியல் பேராசிரியையாக உள்ளார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. நிக்கிதா, அவரது தாயார் ஆகியோர், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு, திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மோசடி புகார்களும் நிக்கிதா மீது அளிக்கப்பட்டுள்ளன. பயங்கர மோசடி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சர்கள் ஆகியோரிடம் தனக்குப் பழக்கம் இருப்பதாகவும் அவர்களிடம் பேசி அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரை நிகிதா ஏமாற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிக்கிதா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் நகை திருட்டு என்ற புகார் கூட பொய்யான தகவலாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகை திருட்டு வழக்கில் புகார் அளித்த நிக்கிதாவின் அடுக்கடுக்கான மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும் நிலையில் விசாரணை வளையத்திற்குள் நிகிதா கொண்டு வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர் ஷர்மிளா சந்தேகம் இந்நிலையில், நிக்கிதாவின் பின்னணி தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியுள்ளார் டாக்டர் ஷர்மிளா. மதுரையை மையமாக வைத்து பாஜக நடத்தும் அரசியல் டிராமாவாக கூட இது இருக்கலாம் என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஷர்மிளா. டாக்டர் ஷர்மிளா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிக்கிதா மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவராம். முன்னாள் துணை முதலமைச்சர் தனக்கு நெருக்கம் என்று சொல்லி பல பேரிடம் பண மோசடி செய்திருக்கிறாராம். ஐஏஎஸ் அதிகாரி , காவல்துறை உயரதிகாரி என்று பலருடன் இவருக்கு நெருக்கம் இருக்கிறது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி மூலம் எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். காவல்துறையில் பல கருப்பு ஆடுகள் சங்கி ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார்கள் என்று பலமுறை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். பாஜகவின் டார்கெட் மதுரை சமீபகாலமாக சங்கிகளின் டார்கெட் 'மதுரை'.. தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து காய் நகர்த்துகிறது பாஜக. நிகிதா தலைமறைவு... இந்த வழக்கை relevant ஆக வைக்க எதிர்கட்சிகள் காட்டும் ஆர்வம்.. 'நடுநிலையாளர்களின்' நரேட்டிவ் , கோதி மீடியா கொடுக்கும் தேசிய அளவிலான ஊடக வெளிச்சம். இதையெல்லாம் பார்க்கும்போது இந்த நகைத்திருட்டு என்பது ஏன் ஒரு well - orchestrated அரசியல் - டிராமாவாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தான் வருகிறது. சங்கிகள் எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/dr-sharmila-questions-credibility-of-complainant-in-ajith-kumar-case-alleges-bjp-backed-political-d-717645.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

2 months 3 weeks ago
நேற்று புன்னாலைக்கட்டுவனில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சுன்னாகத்தில் விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தார்கள். இந்த இளைஞரும் புன்னாலைக்கட்டுவனில் இருந்து சுன்னாகம் வந்து நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமாகி உள்ளார்.

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!

2 months 3 weeks ago
நேற்று புன்னாலைக்கட்டுவனில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சுன்னாகத்தில் விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தார்கள். இந்த இளைஞரும் புன்னாலைக்கட்டுவனில் இருந்து சுன்னாகம் வந்து நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமாகி உள்ளார்.

கவிஞர் வாலி எழுதிய “நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)” – நூல் அறிமுகம்-எழுதியவர் : இளையவன் சிவா

2 months 3 weeks ago
Posted inBook Review கவிஞர் வாலி எழுதிய “நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)” – நூல் அறிமுகம் Posted byBookday02/07/2025No CommentsPosted inBook Review நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum) – நூல் அறிமுகம் என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி செய்தவருமான வாலி அவர்கள் எழுதிய தன்வரலாறு நூல் இது. “”நேர்க்கோடுகள் என்றும் ஓவியமாகா. குறுக்கும் நெடுக்குமாக மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது. வாழ்க்கையும் அப்படித்தான். ஏற்ற இறக்கங்களோடு எழுதப்பட்ட வரைபடமாக இருக்குமாயின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் அளவு அதற்கு ஒரு விலாசம் கிடைக்கிறது. தேங்கிய குட்டைகளைப் பற்றி தேசங்கள் பேசுவதில்லை. விழுந்தும் எழுந்தும் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் பெயர்களைத்தான் வரலாறு தன் பதிவேட்டில் குறித்து வைக்கிறது. நான் இன்று இருக்கும் இடத்திற்கு ஒரு நதி போல் தான் விழுந்தும் எழுந்தும் ஓடி வந்திருக்கிறேன். இன்னமும் இறையருளால் ஓடிக் கொண்டிருக்கிறேன்”” என்று முன்னுரையில் வாலி தன்னைப் பற்றி ஒப்புவித்திருக்கும் சுய விமர்சனத்தில் பொதிந்திருக்கும் உண்மைகளே நூல் முழுவதும் விரவி நின்று அவரது புலமையையும் வாழ்வையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்தி மேன்மைப்படுத்தாமல் தனது உயர்வுக்குக் காரணமானவர்களை முழுமையாக வணங்கி மகிழும் வாலி அவர்களின் உள்ளத்தில் ஏற்றிவிட்ட ஏணிகளை வணங்கும் பண்பும் பழமையை மறவாத தன்மையும் சிறப்புற அமைந்து அவரது புலமைக்கு சிறந்த அடித்தளம் இடுகின்றன. ஸ்ரீரங்கத்தில் வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் வைணவக் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிப் படித்தவர். ஆனாலும் முருகன் மீது ஆழ்ந்த பற்றும் இறை பக்தியும் கொண்டவர். தனது வாழ்வின் எல்லா செயல்களும் இறைவனின் கருணையினால் மட்டுமே நடக்கின்றது என்பதை செல்லும் இடமெஙகும் தவறாது ஒப்புவிப்பவர். தனது முயற்சியை விட தனது முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை நிற்பது இறைவனின் அருள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர் வாலி. நூல் முழுவதும் அவர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதையே கோடிட்டுக் காட்டுகிறார் “”ஒரு மனிதன் தலைக்கனம் இல்லாமல் இருப்பதைவிட தலையில்லாமல் இருப்பது மேல். நான் என்னும் நினைப்பும் முனைப்பும் இல்லாமல் எந்த மனிதனாலும் நான்கு விரல் கடை அளவு கூட முன்னேற இயலாது. தன்னை அறிதல் எவனுக்கில்லையோ அவன் தோள்களில் தாழ்வு மனப்பான்மை தொற்றிக் கொள்கிறது. நம்மால் இது இயலுமா என நகத்தைக் கடிப்பவர்களுக்கு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்கின்ற குரல் கூட தேர்தல் வாக்குறுதி போல் திகட்டிப் போகிறது. அவர்களெல்லாம் கொட்டாவி விட்டாலே குடல் வெளியே வந்து குதித்து விடும் என்று வாயை அகலத் திறக்க அஞ்சுபவர்கள்.. தன்னைப் பற்றிய ஒரு தலைக்கனம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால்தான் அவன் தலையெடுக்க இயலும். இங்கே தலைக்கனம் என்று நான் குறிப்பிடுவது அவரவர் முயற்சியும் பயிற்சியும்”” என்று முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வாலி அரசியல் ஆன்மீகம் இசை இலக்கியம் என்றெல்லாம் தனது அனுபவம் சார்ந்த விஷயங்களை நூல் முழுக்க எழுதிச் செல்கிறார். “”பத்து வயது முதல் எத்தனையோ தடவை ஆனைக்கா அம்பிகையின் பிரகாரத்தை நான் வலம் வந்திருக்கிறேன். காளமேகத்தின் மீது கடலளவு இறங்கிய அகிலாண்டேஸ்வரியின் கருணை மழை என் மீது கை அளவாவது இறங்கி இருக்கக்கூடும் என்ற நப்பாசையும் நம்பிக்கையும் தான் பாட்டரங்கங்களில் எனக்கு பக்கபலமாக இருந்தன. முறையாக தமிழ் கற்றோர் முன்னே அந்த தைரியம் தான் என்னைத் தலைமை ஏற்க வைத்தது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் தமிழ் தான் எனக்கு சோறு போட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளமாக இருந்ததால்தான் என் பிள்ளை பிராயத்திலேயே இறைவன் அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தான்”” என்று கடவுளின் அருள் பற்றியும் அவன் மீதான தனது நம்பிக்கை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் வாலி தான் அறிந்த தமிழின் வலிமையையும் பொலிவையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியுமாறு கூடை கூடையாக பாட்டு எழுதி கொட்டி வைத்துப் போன பெருந்தகை பாரதியை தனது வழிகாட்டியாக தேர்ந்து கொண்டவர். “”எவனொருவன் தன்னை ஆளாக்கிய அன்னையையும் தந்தையையும் வாழ்நாள் மட்டும் உள்ளத்தில் வைத்து அழுத்தி நன்றியோடு வணங்கி வருகிறானோ அவனை கடவுளே பார்த்து கை தூக்கி விடுகிறார்.”” தனது பெற்றோர் பற்றிய வாலயின் இந்தக் கருத்திலிருந்து பெற்றோர் மீதான அவரது பாசத்தையும் நேசத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சிறு வயது முதலேயே நாடகங்களின் மீதும் தமிழ் மீதும் கொண்ட பற்றின் காரணமாக சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றுகிறார் வாலி. ஒவ்வொரு முறையும் அன்றைய எழுத்தாளர்களில் புலமை வாய்ந்தவர்களையோ முக்கியப் பிரமுகர்களையோ முன்னிலைப்படுத்தி தனது நாடகங்களை அரங்கேற்றுகிறார். அப்படியாக நாடகங்களில் அவர் பயின்ற இசையும் அதற்கேற்ப எழுதுகின்ற பாடல்களும் அவரை பிற்காலத்தில் திரையிசைக்குப் பாடல் எழுதுவதற்கு அருமையான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன. நாடகங்களின் வழியே தான் அறிந்துகொண்ட இசை நுணுக்கங்களையும் ராகங்களையும் நூலில் அவ்வப்போது கோடிட்டுக் காட்டுவதை எண்ணுகையில் அவரது நினைவுத்திறன் மீதும் இசை மீதான அவரது கவனக்குவிப்பு மீதும் நமக்கு பேராச்சர்யம் ஏற்படுகிறது. பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் பணம் சம்பாதிக்காமல் பாட்டெழுதியும் நாடகம் எழுதியும் ஊர் சுற்றித் திரியும் குழந்தையை எந்தப் பெற்றோர்தான் விரும்புவார். ஆனாலும் நாடகம் பாட்டு என்பதைத் தாண்டி தனக்குள் ஒளிந்திருக்கும் ஓவியத் திறமையை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு பெருந்தலைவர்களையும் ஓவியமாகத் தீட்டி அவர்களிடமே கையெழுத்து வாங்குவது வாலியின் வழக்கம். அப்படி ஒரு முறை முக்கியமான ஓவியரிடம் தனது ஓவியத்தை காண்பிக்கவும் முறையாக ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தால் சிறந்த ஓவியராக வர முடியும் என்று தூண்டுகோல் கிடைக்க அப்பாவை வற்புறுத்தி ஓவியக் கல்லூரியில் சேர்கிறார் வாலி. கல்லூரியில் முழுமையாக ஒட்ட முடியாமல் முதலாம் ஆண்டு முடிவிலேயே விடை பெற்றுத் திரும்பவும் சொந்த ஊருக்கே பயணப்பட வாழ்க்கையின் நிலையாமையில் நின்று கொண்டு தன்னைத்தானே கேள்வியைக் கேட்டுக் கொண்டு வாலி ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னையை நோக்கிப் பயணப்படுகிறார். பல ஆண்டுகள் சென்னையில் நண்பர்களின சிறு அறையில் தங்கி பாட்டெழுத முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் அவருக்குத் தோல்வியே மிஞ்சுகிறது. திரும்பவும் ஊர் வாசம். நாடகங்கள் மீண்டும் அரங்கேறுகின்றன. அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் பாட்டு எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வாலி தன்னைப் பற்றிய கர்மமோ ஆணவமோ இல்லாமல் தனக்குப் பாட்டு எழுதும் திறமை இருப்பதாலேயே பாட்டு உலகில் மூன்று தலைமுறைக்கும் மேலாக நிலைத்து நிற்க முடிகிறது என்பதையும் நூலில் கோடிட்டுக் காட்டுகிறார். திரைத்துறையில் பாட்டெழுத கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட வாலி எம் ஜி ஆர் அவர்களுக்கு எழுதிய பாடல்கள் தனித்துவமானவை. ஆனால் ஒருபோதும் எம்ஜிஆர் அவர்களின் தலையீடோ வரிகளில் மாற்றம் ஏற்படுத்தும் நிகழ்வுகள் செய்யப்பட்டதில்லை என்று கூறும் வாலிக்கு தனது எழுத்தின் மீதான நம்பிக்கையும் கர்வமும் அதிகமாகவே இருக்கின்றது. எந்த ஒரு சூழலிலும் யாரிடமும் தனது பாடல் வரிகளுக்கு மாற்று வரிகளை ஏற்காத வாலிக்கு எம்ஜிஆர் அவர்களின் நட்பும் படங்களும் நல்லதொரு வாய்ப்பை வழங்கி அவரை சிறந்த பாடல் ஆசிரியராக உருமாற்றியது. பாடல் எழுதத் துவங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தன்னைப் புறக்கணித்த எம் எஸ் விஸ்வநாதன் பிறகு தனது திறமையை புரிந்து கொண்டு தனக்காக பல தயாரிப்பாளர்களிடம் தூது சென்ற அனுபவங்களையும் தனது பாடலுக்காக பல நாட்கள் காத்திருந்து இசையமைத்த விதத்தையும் நூலில் குறிப்பிடும் வாலி தனது வாழ்வே எம் எஸ் விஸ்வநாதன் கொடுத்த பிச்சை என்பதை ஒவ்வொரு தருணத்திலும் மறவாமல் ஒத்துக் கொள்கிறார். மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? எது சிறந்தது? என்ற கேள்வி சினிமாத்துறையில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கருத்தாழம் விரிந்த பாடல்கள் கலைநயம் மிக்க காட்சி அமைப்புகளும் ஒன்றிணைய இசைக்கட்டு தேவைப்படுகிறது. எழுதப்படும் பாட்டுக்குள் வைக்கப்படும் பொருளும் அது சார்ந்த புலமையும் மெட்டமைத்து எழுதும்போது நன்கு அமையும் என்பதில் பலருக்கு ஐயப்பாடு ஏற்படுகிறது. ஆனால் கதைக்கேற்ப சூழலும் கதை நிகழ்கிற காலகட்டமும் பாடல் உருவாக்கத்தை முடிவு செய்கின்றன. அப்படி ஒரு சூழலில் மட்டுமே எழுதப்படும் பாடலுக்குள்ளும் சிறந்த கருத்துக்களை புகுத்த முடியும் என்று தனது பாடல்களை வழியே நிரூபித்திருக்கும் வாலி அதை நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஒரு படத்தின் சூழலுக்கு ஏற்ப கால நிலைக்கு ஏற்ப பாடல் எழுதப்படும் போது சூழலில் வழங்கப்படும் மெட்டுக்குப் பாட்டு வரிகள் இடம்பெறுகின்றன. சில சமயங்களில் பாடல் எழுதப்பட்டு மெட்டமைக்கப்படுகிறது. எனவே பாட்டுக்கு மெட்டு மெட்டுக்குப் பாட்டு என்பது அந்தந்த சூழலைப் பொறுத்து அமைகிறது. இரண்டிலும் ஒரு பாடல் ஆசிரியர் மனது வைத்தால் சிறப்பான கருத்துக்களை புகுத்தி விட முடியும் என்று நிரூபிக்கிறார் வாலி. கலைஞர் மு கருணாநிதியின் வசனத்தை ஆரம்பகாலப் படங்களின் வாயிலாகத் கண்டு கொண்ட வாலி அவரைப் போலவே தானும் வசனம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே திரைத்துறைக்கு வந்தவர். பட்டுக்கோட்டையின் பாடல்களைக் கேட்ட போதும் கண்ணதாசனின் வரிகளை கவனித்த போதும் தானும் அத்தகு பாடல்களை எழுத முடியும் என்று தன்னை மடை மாற்றிக் கொண்டவர் வாலி. உண்மையில் வாலி என்ற பெயர் வைக்கப்பட்டதன் காரணம் பாடல் எழுதிய சூழலில் பாடல் ஆசிரியராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வைக்கப்பட்ட பெயர் அல்ல. ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அன்றைக்கு சிறந்த ஓவியராக விளங்கி வந்த ஓவியர் மாலி அவர்களைப் பார்த்து தானும் அவரைப் போல் வர வேண்டும் என்ற அடிப்படையில் வாலி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டவர். பல இடங்களில் தான் சந்திக்கும் நபர்களுக்கு பெயர்க்காரணத்தை விளக்குவதே எனக்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது என்பதையும் குறிப்பிடும் வாலிக்கு இயல்பாகவே சிறப்பான நினைவுத்திறன் அமைந்திருப்பதை நூலின் கட்டுரைகள் விளம்புகின்றன. சில சமயங்களில் கண்ணதாசன் பாடல்கள் வாலி எழுதியதாகவும் வாலி எழுதிய வரிகள் கண்ணதாசன் எழுதியதாகவும் பொதுவெளியில் உலவப்படும் கருத்துக்கு வாலி பதிலுரைக்கையில் புகழ்பெற்ற கண்ணதாசன் வரிகளுடன் என்னையும் கவனிப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. ஒரு தலை சிறந்த கவிஞரோடு என்னைத் தொடர்புபடுத்தும் இந்த போக்கு எனக்கு மேலும் மேலும் புகழையே பெற்றுத் தருகிறது என்று நிகழ்வின் கோணத்தை தனக்குச் சாதகமாக மாற்றிக் குறிப்பிடுகிறார். நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர்கள் 50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் தான் எழுதிய காலத்திலும் அதற்கு முன் தோன்றிய தமிழ் பாடல் ஆசிரியர்கள் பற்றியும் தனக்குப் பின் எழுத வந்த கவிஞர்கள் பற்றியும் நிறைய இடங்களில் புகழ்ந்து எழுதும் வாலி அவர்களின் ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் வியந்து போற்றுகிறார். எந்தவொரு இடத்திலும் சூழலிலும் அவர்கள் மீதான குறைகளையோ காழ்ப்புணர்ச்சியையோ வாலி தன் நினைவுத்திறனிலிருந்து வெளிப்படுத்தவேயில்லை. தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருக்கும் திரைத்துறை சார்ந்த ஒவ்வொருவரையும் முழுமையாக இந்த நூலில் குறிப்பிடும் வாலி எந்த ஒரு இடத்திலும் யார் மீதும் ஒரு சிறு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அவர் காணும் ஒவ்வொரு மனிதரிடத்தும் நிறைந்து காணப்படும் நல்ல குணங்களையே நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் நல்ல நல்ல பண்புகளை அவர் கற்றுக்கொண்டு புராணகால வாலியின் குணத்தை பெற்றுக் கொள்கிறார். வளையும் மூங்கில் தான் வேந்தனைச் சுமக்கும் பல்லாக்காகிறது. வளையும் வில்தான் அம்பின் வேகத்தை அதிகப்படுத்தி இலக்கை இலகுவாக எய்துகிறது. வளையாபதிகளுக்கு இலக்கியத்தில் மதிப்பிருக்கலாம். வளையும் பதிகளையே வையம் மதித்து வணங்குகிறது. தன் கூவலினால் தான் கிழக்கு வெளுக்குகிறது என சேவல் என்னுமாயின் வானம் மட்டுமல்ல வையம் கூட விலா நோவச் சிரிக்கும். உண்மையான ஆன்ம பலம் ஒரு மனிதனின் அடக்கத்தில் இருந்து தான் உதிக்கிறது. அடக்கம் தான் மெய்ஞானத்தை கற்பிக்கும் ஆசான் என்பதில் உறுதியாக இருக்கும் வாலி எந்த ஒரு இடத்திலும் தனது பெருமைகளைபா புகழ்ந்து பேசியதில்லை. அதேசமயம் தனது புலமையை எந்த ஒரு இடத்திலும் அடமானம் வைத்ததும் இல்லை என்பதை நூலில் பல இடங்களில் அறுதியிடுகிறார். “”என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துக்களால் தான் நான் பெற்றேனே தவிர என் திறமை புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னுடைய சினிமாத் துறையில் பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே இல்லை. என்னுடைய வளர்ச்சி என்பது எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாது என்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்”” என்பது இந்த நூலில் வாலி அவர்கள் கூறும் கருத்துக்களின் சாரமாக அமைகிறது. நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடும் வாலி தனது வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவத்தையே அதற்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறார். இறை பக்தியும் கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும் வாலிக்கு தனது திருமண நிகழ்வை உடனடியாக நடத்தவேண்டிய சூழலில் திருப்பதி செல்ல நேர்கையில் நடைபெற்ற மூன்று இடையூறுகளைக் குறிப்பிடும்போது அவற்றை சகுனம் என்று பார்த்து புறந்தள்ளி நின்றிருந்தால் தனது வாழ்வு என்றோ முடிந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் நம்பாமல் தொடர்ந்து பயணித்து தனது திருமண வாழ்வை அமைத்துக் கொண்டு வாலி சகுனத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை முழுமையாக விளக்குகிறார். திருப்பதிக்கு காரில் செல்லும் போது முதலில் ஒரு ஆடு குறுக்கே வந்து காரில் அடிபடுகிறது. சகுனத் தடை என்று ஊருக்குத் திரும்பலாம் என்று நண்பர் சொல்ல வேண்டாம் நாம் திருப்பதிக்குச் செல்வோம் என்று தொடர்ந்து வாலி கூறிச் செல்ல இன்னொரு இடத்தில் சாலையின் குறுக்கே சிறு குழந்தை காரில் அடிபட்டு கார் பள்ளத்தில் தலைக்குப்புற விழுகிறது. அப்போதும் சகுனம் பார்க்கும் நண்பர் இது உனது திருமணம் குறித்த நிகழ்விற்கு பெரிதும் இடையூறாக இருக்கும் என்று அஞ்சி நாம் திருப்பதிக்கு செல்ல நேருகையில் நடக்கும் செயல்கள் சகுனத் தடையாகத் தெரிகிறது நாம் இன்னொரு நாள் செல்வோம் என்று மீண்டும் ஊருக்குத் திரும்ப நினைக்கிறார். ஆனால் அப்பொழுதும் வாலி நாம் நிச்சயமாக திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பயணிக்கிறார். குறிப்பிட்ட நாளில் அவரது திருமணம் ஒரு வாரத்திற்குள் திருப்பதியில் நடக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. ஆனால் அங்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அலுவலகங்கள் முன்பதிவு மூலம் நிரம்ப ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சூழலில் அவருக்கு குறிப்பிட்ட நாளில் இடம் கிடைக்குமா என்று தெரியாத சூழலில் திருப்பதிக்குச் செல்கிறார்கள் ஆனால் அவர் விரும்பிய அதே நாள் அங்கே எந்த திருமண நிகழ்வும் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக இருக்கிறது. இதுவே இறைவன் திருவுள்ளம் என்று மகிழும் வாலி நமது வாழ்வில் ஏற்படும் இடையூறுகளை எண்ணிக் கலங்கி நின்று விட்டால் எதிர்காலமே திசை மாறிப் போகும் என்பதை விளக்கிச் செல்கிறார். இதன்மூலம் மூடநம்பிக்கையின் மீது சரியான சவுக்கடியும் தரும் வாலி நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவர்க்கும் தன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கும் என்றும் இறையருளும் துணை நிற்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார். திரைப்பாடல்கள், கவியரங்க மேடைகள், பக்தித் தொடர் கதைகள், கவிதைத் தொகுப்புகள், வசனங்கள் எழுதிய நினைவுகள் என தனது வாழ்க்கைப் பாதையை முழுமையாக நமக்கு அறிமுகம் செய்து அவருடனேயே நம்மையும் உடனழைத்துச் சென்று திறந்த புத்தகம் என அவரது வாழ்வை இந்த நூற்றாண்டில் எழுதிச்செல்லும் வாலியின் எழுத்து எப்போதும் அவரது பாடல்களைப் போல இனிமையாகவும் இளமையாகவும் அன்பு கொண்டும் கருணை கொண்டும் நல்லெண்ணங்களையும் நல்லனவற்றையும் நமக்கு அறியத் தருகிறது. தனக்கான பாதையமைத்துக் கொடுத்த ஒவ்வொரு மனிதர்களையும் நினைவில் நிறுத்துவதன் அவசியத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறார் வாலி. https://bookday.in/kavignar-valis-nanum-intha-nootraandum-book-reviewed-by-ilaiyavan-siva/

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்

2 months 3 weeks ago
இந்தக் கடற்கொள்ளையர்கள் விடயத்தில் சங்கிகள், தும்பிகள், உடன்பிறப்புக்கள், இரத்தத்தின் இரத்தங்கள் எல்லாம் ஒன்றாய் நிற்கிறார்களே! அதுதான் இந்தியன்!

செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண

2 months 3 weeks ago
Published By: RAJEEBAN 03 JUL, 2025 | 04:48 PM Kamanthi Wickramasinghe Daily mirror செம்மணிப் புதைகுழியில் நடைபெற்று வரும் உடல்களை தோண்டும் நடவடிக்கைகள் போரின் போது நடந்த கொடூரமான அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றன. ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் அறிக்கை மட்டும் இல்லாவிட்டால் இந்தப் புதைகுழி இலங்கை மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்திருக்கும். கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் முக்கிய குற்றவாளி 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது செம்மணிப் புதைகுழியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்த குற்றவாளி மற்றும் பலர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினால் அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். இந்தப் பின்னணியில் நடந்து வரும் உள்நாட்டுப் போரின் போது தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் அரசு வழக்கறிஞர் பிரசாந்தி மஹிந்தரத்னவுடன் டெய்லி மிரர் ஒரு பிரத்யோக நேர்காணலை மேற்கொண்டது. குற்றத்தின் கொடூரத்தையும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளிகளை தண்டிக்க புலனாய்வாளர்கள் சாட்சியங்களை கண்டுபிடித்தனர் என்பதையும் இந்த நேர்காணலின் போது அவர் எடுத்துரைத்தார். பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்திய சம்பவங்களில் ஒன்றாக இது இருந்ததால் குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பதில் வழக்கறிஞர்கள் உறுதியாக இருந்தனர். ஆரம்ப அறிக்கைகள் செப்டம்பர் 7 1996 அன்று யாழ்ப்பாணம் கைதடியில் நான்கு பேர் காணாமல் போனார்கள். அவர்களில் ஒருவர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி (18) ஆவார். அவர் அன்றுதான் தான் உயர் தர வேதியியல் பரீட்சையை எழுதியிருந்தார். அவர் ஒரு சிறந்த மாணவி தனது சாதாரண தரத்தில் ஏழு சிறப்புத் தேர்வுகளைப் பெற்றிருந்தார். கிருஷாந்தி தனது தந்தையைஇழந்தவர். மேலும் அவர் தனது தாயார் ராசம்மா (59) மற்றும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் படிக்கும் சகோதரர் பிரணவன் (16) ஆகியோருடன் வசித்து வந்தார். அவருக்கு கொழும்பில் உயர்கல்வி பயின்று வந்த பிரசாந்தி என்ற சகோதரியும் இருந்தார். கிருஷாந்தியும் பிரணவனும் இருவரும் திறமையான மாணவர்கள். அவர்களின் தாயார் கைதடி முத்துகுமரசுவாமி மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஆவார். மேலும் அவர் இறக்கும் போது கைதடி மகா வித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார். அவரது தாயார் பள்ளியிலிருந்து கிருஷாந்தி வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாலும் மதியம் வரை கிருஷாந்தி வீடு திரும்பாததால் அவர் சங்கடப்பட்டார். அதைத் தொடர்ந்து குமாரசாமி குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரரும் நண்பருமான சிதம்பரம் கிருபாமூர்த்தி, ராசம்மா, மற்றும் பிரணவன் ஆகியோர் ஒரே நாளில் காணாமல் போனார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. மோதலின் போது ஆயிரக்கணக்கான கிருஷாந்திகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் கொழும்பிற்கு கதையை கொண்டு வரக்கூடிய ஒருவருடன் தொடர்பு இல்லாததால் அவர்களால் அதைப் பற்றி வெளியே சொல்ல முடியவில்லை. ஆரம்பத்தில் சிபிகேயுடன் (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க) இந்த விஷயத்தை எழுப்பியவர் ஒரு வழக்கறிஞர். இந்த சம்பவம் பற்றி சிபிகே கேள்விப்பட்டதும் அப்போதைய சட்டமா அதிபர் சரத் சில்வா உடனடியாக வழக்கை விசாரிக்க அறிவுறுத்தப்பட்டார். "இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியில் அவர்கள் காணாமல் போனதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய சிபிகே விரும்பினார்" என்று டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில் பிரசாந்தி மஹிந்தரத்ன கூறினார். அந்த நேரத்தில் அவர் 1991 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒரு இளம் வழக்கறிஞராக இருந்தார். "இந்த சம்பவம் 1996 இல் நடந்தது. எனக்கு அழைப்பு வந்து யாழ்ப்பாணம் செல்ல விருப்பமா என்று கேட்டார். அந்த நேரத்தில் வணிக விமானங்கள் எதுவும் இல்லை மேலும் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளும் என்னுடன் இருந்தனர். எனக்கு வழிகாட்டுதல் வழங்குவதற்காக மறைந்த சொலிசிட்டர் ஜெனரல் டி.பி. குமாரசிங்கவையும் சட்டமா அதிபர் நியமித்தார்" என்று அவர் நினைவு கூர்ந்தார். பிரசாந்தி மஹிந்தரத்ன யாழ்ப்பாணம் செம்மணிக்கு சென்றார். அவர் செம்மணி நீதவான்நீதிமன்றத்திற்குச் சென்று இராணுவ போலீசாருடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தார். "இப்படித்தான் எல்லாம் தொடங்கியது. நாங்கள் தொடங்கியபோது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும் காணாமல் போன நான்கு பேர் கைதடியில் வசித்து வந்தனர் என்பதும் செம்மணி சோதனைச் சாவடியில் அவர்கள் காணாமல் போனதாக சில பேச்சுக்கள் இருந்தன என்பதும் மட்டுமே எங்களுக்குத் தெரியும்" என்று பிரசாந்தி மேலும் கூறினார். ஆதாரங்களின் பாதையில் அடுத்தடுத்த விசாரணைகளில் கிருஷாந்தி தனது பரீட்சையை முடித்துக்கொண்டு பிறகு மற்றொரு தோழி சுந்தரம் கௌதமியுடன் சில நாட்களிற்கு முன்னர் உயிரிழந்த சக மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றது தெரியவந்தது. “அவர்கள் இருவரும் சைக்கிளில் இருந்தனர் ஒரு கட்டத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர் கடைசியாக அவர் கைதடி நோக்கி சென்றிருந்தார். தனது பள்ளியிலிருந்து கைதடிக்கு வரும்போது செம்மணி பாதுகாப்பு சோதனைச் சாவடியைக் கடக்க வேண்டும். இது அவள் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பாதை மேலும் சோதனைச் சாவடியில் இருப்பவர்கள் அவளை நன்கு அறிந்திருப்பார்கள்." "எங்கள் விசாரணையில் அவள் அங்கு நிறுத்தப்பட்டு விசாரணைக்காக சாக்குப்போக்கில் பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவந்தது. யாராவது அவளை அங்கு விசாரிக்கப்படுவதைக் கண்டிருக்கலாம். இந்த கட்டத்தில் அவள் வீடு திரும்பாததால் அவள் தாயார் மிகவும் வருத்தமடைந்து அவள் இருக்கும் இடம் பற்றி மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். " எனவே அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் கிருபமூர்த்தி வந்து செம்மணி சோதனைச் சாவடியில் விசாரிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டதாகக் கூறினார். அவர் கொல்லப்பட்டதால் அவருக்கு அது எப்படித் தெரிந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று பிரசாந்தி கூறினார். கிட்டத்தட்ட உடனடியாக ராசம்மா, பிரணவன் மற்றும் கிருபமூர்த்தி ஆகியோர் இரண்டு சைக்கிள்களில் ஏறினர்; ராசம்மா பிரணவனின் சைக்கிளில் ஏறினார். கிருபமூர்த்தி தனது சைக்கிளில் சோதனைச் சாவடிக்குச் சென்று லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விடம் (இந்த வழக்கில் முதல் குற்றவாளி) கிருஷாந்தி இருக்கும் இடம் குறித்து விசாரித்தார். “கிருஷாந்தி வீட்டிற்கு வரவில்லை என்றும் அவள் கடைசியாக இங்கே காணப்பட்டதாகவும் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் அவர்கள் அவரிடம் கூறியிருந்தனர். சோமரத்ன பலமுறை தங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார் ஆனால் இந்த மக்கள் அந்தப் பெண்ணைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்ததால் தொடர்ந்து கூறினர். இராணுவத்தினர் பீதியடைந்தனர் என்பது தெளிவாகத் தெரிந்தது பின்னர் இந்த மூவரும் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டனர்” என்று பிரசாந்தி மஹிந்தரத்ன நினைவு கூர்ந்தார். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி சில மணிநேரங்களைத்தான் கழிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. "அன்றிரவு இராணுவத்தினர் ராசம்மா, பிரணவன் மற்றும் கிருபமூர்த்தி ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்றது மட்டுமல்லாமல் இரவு முழுவதும் கிருஷாந்தியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்கள் அவளை கழுத்தை நெரித்து கொன்றனர் மேலும் நான்கு உடல்களும் செம்மணியில் உள்ள நீர் தேங்கிய பகுதியில் புதைக்கப்பட்டன. நாங்கள் உடல்களை தோண்டி எடுத்தபோது அவை அழுகிய நிலையில் இருந்தன. அவை கயிறுகளால் கழுத்தை நெரிக்கப்பட்டு இருபுறமும் இழுக்கப்பட்டன" என்று பிரசாந்தி மஹிந்தரத்ன மேலும் விளக்கினார். அரசு இயந்திரத்தின் ஆதரவு இன்றுவரை மஹிந்தரத்னே இராணுவ பொலிஸாரை முழுமையாக பாராட்டுகின்றார். அவர்கள் இல்லாமல் இந்த சம்பவம் எந்த துப்பும் இல்லாமல் புதைக்கப்பட்டிருக்கும். இராணுவமோ அல்லது இராணுவ காவல்துறையோ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்திருந்தால் குற்றவாளிகளை தண்டிக்க வழக்கறிஞர்கள் எந்த கணிசமான ஆதாரத்தையும் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். "பொறுப்புக்கூறல் குறித்து அரசியல் உறுதிப்பாடும் இராணுவத்தினர் உறுதிப்பாடும் காணப்பட்டது. எங்கள் இராணுவம் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளையின் கீழ் செயல்படுகிறது மேலும் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி சோதனைச் சாவடியில் இந்த மக்கள் காணாமல் போவது குறித்து சந்தேகம் எழுந்தபோது சோதனைச் சாவடியில் யார் பணியில் இருந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் இராணுவ காவல் பிரிவு வேறு இடத்தில் இருந்தது. எனவே அவர்கள் லான்ஸ் கோப்ரலையும் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அனைவரையும் அழைத்து விசாரிக்கத் தொடங்கினர். " நிச்சயமாக குற்றவாளிகள் இராணுவ போலீசாரால் விசாரிக்கப்படுவதால் நிம்மதியாக உணர்ந்தார்கள், அவர்கள் தங்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த வாக்குமூலங்கள் இராணுவ போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரம் உட்பட என்ன நடந்தது என்று அவர்கள் கூறினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்களிடம் சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாருக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால் இங்கே குற்றம் சாட்டப்பட்டவர்கள் இராணுவ போலீசாரிடம் பேச முடிவு செய்தனர். உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன என்பதை அவர்கள் இராணுவ போலீசாருக்குக் காட்டினர், பின்னர் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன” என்று மஹிந்தரத்ன மேலும் கூறினார். வழக்கின் வழக்கறிஞராக மஹிந்தரத்னே தண்டனை வழங்கப்படுவது குறித்து உறுதியாகயிருந்தார். மேலும் அவர்கள் விசாரணையை கையாண்ட விதத்தில் மிகவும் கவனமாக இருந்தனர். "அந்த நேரத்தில் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நம்பிக்கை இல்லாததால் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக 'இதயங்களும் மனங்களும்' என்ற பிரச்சாரத்தை இராணுவம் முன்னெடுத்தது. "யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ காவல்துறைத் தளபதி கர்னல் கலிங்க குணரத்னவுடன் பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற உண்மை குறித்து உரையாடியதை நான் நினைவில் கொள்கிறேன். எனவே எல்லாம் நன்றாக வேலை செய்தது மேலும் வழக்கைத் தீர்ப்பதில் சிஐடி ஆர்வமாக இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் முழு வீச்சில் செயற்பட்டது. நான் விமானப்படையால் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். உங்களுக்கு உண்மையிலேயே தேவை அரசியல் விருப்பம் என்பதை இது நிரூபிக்கிறது, மேலும் அந்த மாற்றம் உங்களுக்குத் தேவை ”என்று அவர் மேலும் கூறினார். ஒவ்வொன்றாக ஒரு தடயம் "காணாமல் போன நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு 1996 அக்டோபர் மாத இறுதியில் எங்கோ உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது அவை அழுகிய நிலையில் இருந்தன" கொழும்பில் வசித்து வந்த குடும்பத்தில் உயிருடன் இருந்த ஒரே உறுப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி எலும்புக்கூடுகளை அடையாளம் காண வைப்பதில் புலனாய்வாளர்கள் விரும்பவில்லை. "நாங்கள் அவளை சாட்சியமளிக்க அழைக்கவில்லை. பொதுவாக நாங்கள் குடும்ப உறுப்பினர்களை சாட்சியமளிக்க அழைக்கிறோம் ஆனால் அந்த சூழலில் அவளுக்கு கூடுதல் துயரத்தைத் தவிர்க்க விரும்பவில்லை. சூழ்நிலைகளில் உடல்களை அடையாளம் காண மிகவும் பழமையான வழியை நாங்கள் கொண்டு வந்தோம்.'' "1996 இல் எங்களிடம் டி.என்.ஏ சோதனை இல்லை அதன் பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகுதான் இலங்கை டி.என்.ஏ சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இருப்பினும் ஒவ்வொரு வழக்கிலும் டி.என்.ஏ சோதனைகளை மேற்கொள்ள எங்களிடம் இன்னும் முழு வளங்களும் இல்லை." "உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது அவர்களின் உடைகள் குறிப்பாக கிருஷாந்தியின் உடைகள் ஒரே குழியில் வீசப்பட்டன. ஒவ்வொரு துணியிலும் ஒரு தனித்துவமான சலவைத்தொழிலாளர் அடையாளமொன்று இருப்பதைக் கண்டோம். இந்த அடையாளம்(சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள்) எந்த ஆடைகளை எந்த வீட்டிற்குச் சொந்தமானது என்பதை அடையாளம் காண்பதற்கானது. இது மிகவும் பழமையான அணுகுமுறை ஆனால் கிருஷாந்தியின் வழக்கில் காணாமல் போன நான்கு பேர் இவர்கள்தான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது” என்றுபிரசாந்தி கூறினார். இதையொட்டி பிரசாந்தி மஹிந்தரத்னேவும் அவரது குழுவினரும் கைதடி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளியை சாட்சியமளிக்க அழைத்தனர். குமாரசாமி வீட்டிற்கு அவர் திருப்பி அனுப்பிய ஆடைகள் ராசம்மா, பிரணவன் மற்றும் கிருஷாந்தியின் ஆடைகள் என்று அவர் அடையாளம் கண்டார். கிருபாமூர்த்தியின் ஆடைகள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டன. ஆடைகளின் அடிப்படையில் உடல்களின் ஆரம்ப அடையாளம் இதுவாகும். கிருஷாந்தியின் ஆடைகள் தனித்துவமானவை - வெள்ளை சீருடை சிவப்பு டை மற்றும் காலணிகள். டையின் நிறத்தைத் தவிர அவரது பள்ளி சீருடையைப் போலவே சீருடையும் இருந்ததால் மஹிந்தரத்னே மிகவும் எரிச்சலடைந்தார். "நீதிமன்றங்கள் அந்த அடையாளத்தை போதுமானதாக எடுத்துக் கொண்டன. கூடுதலாக ராசம்மாவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக போரின் உச்சம் என்பதால் பல் பதிவுகள் எதுவும் இல்லை மேலும் அவர்களிடம் சரியான பல் சேவைகள் இல்லை. ஒரு குடலிறக்கத்தில் ஒரு அறுவை சிகிச்சை பதிவு இருந்தது அதை நாங்கள் பொருத்த முடிந்தது அதனுடன் உடல்களை அடையாளம் காண முடிந்தது" என்று அவர் தொடர்ந்தார். கதையின் சோகமான பகுதி என்னவென்றால் ஆரம்பத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது கிருஷாந்தி அதனை எதிர்த்தாள். சாட்சியங்களின்படி அவள் ஒரு கட்டத்தில் எதிர்ப்பதை கைவிட்டாள். நான்காவது அல்லது ஐந்தாவது நபர் அவளை பாலியல் வன்கொடுமை செய்யச் சென்றபோது அவள் அவர்களிடம் சிறிது நேரம் கொடுக்கச் சொன்னாள் அவள் தண்ணீர் கேட்டாள். அவர்கள் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வந்திருந்தார்கள் அவள் அந்த போரில் தான் வெற்றியடையப்போவதில்லை என்பதை உணர்ந்திருந்தாள். தனக்கு வேறு வழியில்லை என்பதை ராசம்மா அறிந்தாள் அவள் தன் தாலியைக் கழற்றி முதல் குற்றவாளியிடம் கொடுத்து அதை தன் குடும்பத்தினரிடம் கொடுக்கும்படி சொன்னாள். ஆனால் அவர் அதை தனது சகோதரியிடம் கொடுத்தார், அது பின்னர் விசாரணைகளின் போது மீட்கப்பட்டது. அவர்கள் மூவரும் தங்கள் அடையாள அட்டைகளையும் சோதனைச் சாவடியில் கொடுத்தனர். இருப்பினும் அரசு போரின் போது ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வருவது இதுவே முதல் முறை என்பதால் அரசு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பது வழக்கறிஞர்களுக்கு முக்கியமானது. பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் சம்பவமும் இதுவே. வழமைக்கு மாறாக சிந்தித்தல் "கிருஷாந்தியின் உடல் அழுகும் நிலையில் இருந்ததால் பாலியல் வன்கொடுமைக்கான தடயவியல் சான்றுகள் எதுவும் இல்லை. “எனவே வழமைக்கு மாறாக சிந்திக்க வேண்டியிருந்தது. " "இராணுவத்தால் இராணுவ போலீசாரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களைப் பயன்படுத்துவோம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் சாட்சிய கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையிடம் அளிக்கும் எந்தவொரு வாக்குமூலமும் சந்தேக நபருக்கு எதிராக அடுத்தடுத்த விசாரணையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே நாங்கள் இந்திய நீதித்துறையைப் பயன்படுத்தி ஒரு குடிமகன் ஒரு சிவிலியன் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும்போது அந்த பதற்றம் நிலவுகிறது என்று வாதிட்டோம். இராணுவவீரர் இராணுவ பொலிஸிடம் சாட்சியமளிக்கும்போது ஒரே தொழிலில் உள்ளவரிடம் வாக்குமூலம் வழங்குகின்றார் பதற்றம் இல்லை என்று நாங்கள் கூறினோம்" மேலும் இந்திய நீதித்துறையின் அடிப்படையில் சாட்சிய கட்டளைச் சட்டத்தின் தடை இராணுவ போலீசாரிடம் ஒரு சிப்பாய் அளித்த வாக்குமூலத்திற்கு பொருந்தாது என்று நாங்கள் வாதிட்டோம். இருப்பினும் ட்ரயல்-அட்-பார் அதை உறுதி செய்த போதிலும் உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. ஆனால் எங்களிடம் வேறு ஆதாரங்கள் இருந்தன. இது ஒரு மேல்முறையீட்டுப் பிரச்சினையாக இருக்கலாம் என்று நாங்கள் கவலைப்பட்டதால் இந்த ஆதாரத்தை மட்டும் நம்பியிருக்கவிரும்பவில்லை நம்ப விரும்பவில்லை ”என்று அவர் தொடர்ந்தார். சோதனைச் சாவடியில் ஒன்பது வீரர்களைத் தவிர வேறு இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருந்ததை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இராணுவ போலீசாருடனான கலந்துரையாடல்களின் போது காவல்துறைக்கும் இராணுவ போலீசாருக்கும் இடையிலான படிநிலை பதட்டங்களை புலனாய்வாளர்கள் கவனித்தனர். இராணுவம் போலீஸ்காரர்களை உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தியது, ஆனால் அத்தகைய கொடூரமான குற்றங்களில் அவர்களை ஈடுபடுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. "இரண்டு போலீஸ்காரர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதில் ஈடுபடவில்லை, ஆனால் அவர்கள் உடல்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை வாக்குமூலங்கள் வெளிப்படுத்தின. எனவே நாங்கள் அவர்களுக்கு 'நிபந்தனை மன்னிப்பு' என்று அழைக்கப்படுவதை வழங்கினோம். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் ஒரு சந்தேக நபருக்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கும் திறனைக் கொண்டுள்ளார். நிபந்தனை என்னவென்றால் அனைத்தையும் வெளிப்படுத்தி மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதற்கு எதிராக சாட்சியமளிப்பது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன்வைக்க நாங்கள் விரும்பியதால் அதைச் செய்யக்கூடிய ஒரே வழி ஒப்புதல் வாக்குமூலங்களுடன் சூதாடுவதுதான். ஆனால் எங்களிடம் எந்த சுயாதீனமான ஆதாரமும் இல்லை மேலும் இவர்கள் நேரில் கண்ட சாட்சிகள். உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்த போதிலும் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை உறுதி செய்தது, ஏனெனில் வழக்குத் தொடுப்பு இன்னும் போதுமான அளவு முன்னேறி பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது" என்று அவர் விளக்கினார். மற்றொரு ஆதாரம் பிரணவனின் சைக்கிள் சங்கிலி உறை. அதில் ஹோண்டா என்ற பெயர் கொண்ட ஒரு என்ற அடையாளம் இருந்தது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் அது அவருடைய சைக்கிள் என்று தெரியும். பேட்ஜ் அருகிலுள்ள ஒரு சைக்கிள் திருத்தும் இடத்திலிருந்து இருந்து மீட்கப்பட்டது, மேலும் இருந்த நபர் தனது சாட்சியத்தில் செம்மணி சோதனைச் சாவடிக்கு அருகில் அதனை எடுத்ததாக உறுதிப்படுத்தினார். தண்டனை மற்றும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் உடல்கள் சட்ட மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைக்காக கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன. உடல்கள் அழுகிய நிலையில் இருந்தபோதிலும் சட்ட மருத்துவ அதிகாரிகளால் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முடிந்தது, அது கழுத்தை நெரித்தல். வழக்கறிஞர்கள் முதல் குற்றவாளியின் சகோதரியிடமிருந்து ராசம்மாவின் தாலியை மீட்டனர். அனைத்து சூழ்நிலை ஆதாரங்களுடனும் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியமளித்த இரண்டு சுயாதீன சாட்சிகளுடனும் வழக்குத் தொடுப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரத்திற்கு வழிவகுத்துள்ளது என்று நீதிமன்றங்கள் கண்டறிந்தன. பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதிப்படுத்தியது. "இதனால்தான் அவர்கள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர், அவர்கள் நீண்ட காலமாக மரண தண்டனையில் இருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும்" என்று மஹிந்தரத்ன மேலும் கூறினார். இந்த கட்டத்தில்தான் முக்கிய குற்றவாளி மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். "நமது நீதிமன்றங்களில் நீதிபதிகள் குற்றவாளிகளிடம் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்பது வழக்கம். அந்த நேரத்தில் முதல் குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ "நாங்கள் நான்கு பேரைக் கொன்றதற்காக தூக்கு மேடைக்கு அனுப்பப்படுகிறோம், ஆனால் செம்மணியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்களை நான் உங்களுக்குக் காட்ட முடியும்" என்று கூறினார். செம்மணி புதைகுழி பற்றிய விவரங்கள் இப்படித்தான் வந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் நான் எனது வழக்கை முடித்தேன். அவர்கள் செம்மணி புதைகுழி குறித்து ஒரு புதிய விசாரணையைத் தொடங்கினர். அந்த நேரத்தில் அவர்கள் சுமார் 15 எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்தனர்" என்று அவர் மேலும் நினைவு கூர்ந்தார். பொறுப்புக்கூறல் மற்றும் முடிவிற்கு கொண்டுவருதலிற்கான ஒரு ஊக்கியாக அரசியல் விருப்பம் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சியின் போது நிலைமாறுகால நீதி மற்றும் தொடர்புடைய வழிமுறைகள் பற்றிய விவாதம் தொடங்கியது. நல்லாட்சி அரசாங்கத்தால் ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் காணாமல் போனோர் அலுவலகம் இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் உண்மை ஆணையம் ஆகியவை நிறுவப்பட்டன. ஆனால் அடுத்தடுத்த ஆட்சிகள் இந்தத் தீர்மானத்திற்கு இணைந்து அனுசரணை வழங்குவதில் இருந்து விலகி போரின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து மறுக்கும் போக்கில் இருந்தன. சில நாடுகளில் நடைமுறையில் உள்ள உலகளாவிய அதிகார வரம்பு பற்றி மஹிந்தரத்ன பேசினார். வரையறையின்படி குற்றம் எங்கு செய்யப்பட்டது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் தேசியம் அல்லது வசிப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்களுக்காக தனிநபர்கள் மீது வழக்குத் தொடர மாநிலங்கள் அல்லது சர்வதேச அமைப்புகளை அனுமதிக்கும் ஒரு சட்டக் கொள்கையாகும். "உதாரணமாக உள்நாட்டுப் போரின் போது சரணடைந்த காவல்துறையினரை கொலை செய்தமைக்காக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மீது ஜெர்மனி வழக்குத் தொடர்ந்தது. இலங்கையில் இலங்கையர்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்த ஒரு இலங்கையரை உலகளாவிய அதிகார வரம்பின் அடிப்படையில் ஜெர்மனி வழக்குத் தொடர்ந்தது. எனவே இது நிறுவப்பட்டுள்ளது, மேலும் நமக்கு உண்மையான மற்றும் நம்பகமான உள்நாட்டு செயல்முறைகள் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக இவை இலங்கை குடிமக்களுக்கு எதிரான இலங்கை குடிமக்களால் குற்றங்கள்" என்று அவர் மேலும் விளக்கினார். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களிற்கு முடிவை காண்பதற்கு அரசியல் உறுதிப்பாடு சட்டங்களும் வழிமுறைகளும் மிகவும் நடைமுறையில் உள்ளன என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். காணாமல்போனோர் அலுவலக சட்டத்தை இணைந்து வரைவதில் தனது பங்களிப்பைக் குறிப்பிடுகையில் அது ஆணையர்களுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதாக அவர் கூறினார். சரியான அமைப்பு இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களால் சில பதில்களை வழங்க முடிந்திருக்கும். இராணுவம் அனைத்து ஆவணங்களையும் எவ்வாறு பராமரிக்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன், எனவே இது என் பார்வையில் ஒரு கடினமான செயல்முறை அல்ல" என்று அவர் மேலும் கூறினார். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை காணாமல்போனோர் அலுவலகம் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும் என்று மஹிந்தரத்ன மேலும் கூறினார். இது வடக்கு மற்றும் கிழக்கு பற்றிய விஷயம் மட்டுமல்ல தெற்கைப் பற்றியும் என்ன? ஜேவிபி கிளர்ச்சிகளின் போது காணாமல் போனவர்களைப் பற்றி என்ன? எனவே விடைகிடைக்காமல் பல குடும்பங்கள் உள்ளன ”என்று அவர் கூறினார். அவரது சொந்த வார்த்தைகளில் "நடந்ததை ஒப்புக்கொள்வது நிச்சயமாக நல்லிணக்க செயல்முறையை கொண்டு வருவதற்கான முதல் படியாகும்". "நான் 2018 இல் முன்மொழியப்பட்ட உண்மை ஆணையச் சட்டத்தை இணைந்து வரைவதில் ஈடுபட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் அதில் பணியாற்றத் தொடங்கியது. உண்மை ஆணையத்தை அமைக்கும் நோக்கம் இருந்தது. ஆனால் இந்த விதிகள் நிறைவேற்றப்படுமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு தொடக்கம் இருக்க வேண்டும். இந்தக் குற்றங்கள் நடக்கவில்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லும் வரை நீங்கள் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்??" என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார் அதே நேரத்தில் எங்கள் காலடியில் புதைகுழிகள் இருப்பதை அறிவது வெட்கக்கேடானது என்று கூறினார். இருப்பினும் அரசியல் விருப்பம் இருப்பதால் இந்த வழக்குகளில் சிலவற்றிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் மஹிந்தரத்ன நம்பிக்கை கொண்டுள்ளார். அரசு இயந்திரத்தின் ஆதரவு இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்று அவர் கூறினார். “ஒவ்வொரு நிறுவனமும் என்னை ஆதரித்ததால் கிருஷாந்தி குமாரசாமியின் வழக்கை என்னால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது. அந்த நேரத்தில் ஊடகங்களும் எங்களுக்கு உதவியது. இந்த சம்பவம் நடந்தபோது கைதடியில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை இருந்தது மேலும் இது மற்றொரு கேலிக்கூத்து செயல்முறையாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர். அனைத்து சாதாரண சாட்சிகளும் கைதடியில் இருந்தனர் அவர்கள் வர மறுத்துவிட்டனர். தமிழ் பத்திரிகைகள் எங்களை நேர்காணல் செய்தன மேலும் சாதாரண சாட்சிகள் கொழும்புக்கு வர தயங்குகிறார்கள் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். கொழும்பில் நீதிமன்றம் தயாராக உள்ளது நீதிபதிகள் சிங்களவர்கள் வழக்கறிஞர்கள் சிங்களவர்கள் சிஐடி மற்றும் மற்ற அனைவரும் சிங்களவர்கள் அவர்கள் வழக்கைத் தொடரத் தயாராக உள்ளனர், ஆனால் தமிழ் பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் தெரிவித்தன.” உடனடியாக சாட்சிகள் வர ஒப்புக்கொண்டனர். "அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்த ஒரு தருணம் அது" என்று அவர் மேலும் கூறினார். வழக்கின் போது அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்டபோது பொதுமக்களிடமிருந்து வந்த எதிர்ப்பை அவர் நினைவு கூர்ந்தார். "இது 'போர் வீரர்களை' துன்புறுத்துவதற்கான முயற்சி என்று மக்கள் நினைத்ததால் எனக்கு தொல்லை தரும் அழைப்புகள் வந்தன. ஆனால் அதைத் தவிர வழக்கைத் தீர்க்க பல்வேறு பிரிவுகளின் அழுத்தம் தவிர வேறு எந்த சவால்களும் இல்லை" என்று அவர் நினைவு கூர்ந்தார். ஒரு இளம் வழக்கறிஞராக, மஹிந்தரத்ன குற்றவாளிகளை சிறையில் அடைக்கத் தீர்மானித்தார். இன்றுவரை குற்றத்தின் கொடூரத்தை அவர் பிரதிபலிக்கிறார். இருப்பினும், மோதல் தொடர்பான குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தை அவர் ஆதரிக்கிறார். “ஒரு நாகரிக சமூகம் பொறுப்புக்கூறலைக் கொண்டுவர முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளை விசாரித்து, முடிந்தால், இந்த நபர்கள் உயிருடன் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அல்லது முடிந்தால் அவர்கள் இறந்திருந்தால் எச்சங்களைக் கண்டுபிடித்து குடும்பங்களுக்குத் தெரிவிப்பதற்கும் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகளைத் தவிர, ஒரு குடும்பத்திற்கு கூட அவர்களின் உறவினர்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மீதமுள்ளவற்றைப் பற்றி என்ன?” என்று அவர் முடிவில் கேள்வி எழுப்பினார். அரசின் பொறுப்புக்கூறல் செயல்முறையில் பொது விவாதத்தில் செல்வாக்கு செலுத்துவதில் ஊடகங்களின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். https://www.virakesari.lk/article/219110
Checked
Fri, 09/26/2025 - 15:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed