புதிய பதிவுகள்2

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
யாழ்களத்தில் மட்டும் 2 பக்கம் ஓடியுள்ளதே புலவர் - அவரிடம் கேட்கும் மனிதாபிமானத்தோடு நாமும் விசாரணை முடியும் வரை சும்மா இருதிருக்க வேண்டும் அல்லவா? அவரவர் தம் அஜண்டாவோடு கருத்து சொல்லலாம். இப்போ அண்ணாமலையோடு அந்த படத்தில் இருப்பது நிகிதா அல்ல தான் என இன்னொரு பாஜக பெண் கூறியுள்ளார். அவர் கருத்து சொல்வது, திசை திருப்பல் என நீங்கள் கருதினால் அதை எழுதலாம். ஆனால் சின்ன திரை நடிகை, நடிக்கிறார் என்பது தேவைதானா? நீங்கள் எழுதும் கருத்தை, உங்கள் தொழிலோடு தொடர்புபடுத்தி, எழுதினால் சரியாக இராதுதானே?

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
அவர் ஒரு மருத்துவர் போல மனிதாபினமாகவா நடந்து கொள்கிறார். ஒரு அநிஞாயமான கொலை நடந்திருக்கிறது. அது பற்றிய விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் காவல்துறையின் மீது கடுமையான விமர்சனத்தையும் கேள்விகளையும் வைத்துள்ளார்கள். இந்த வேளையில் சங்கிகளின் வேலை என்று திசைதிருப்புவது நாடகத்தன்மையானது தானே. இவர் எதற்கு இப்படி கருத்துச் சொல்ல வேண்டும் தனது சந்தேகத்தை காவல்துறையிடமோ நீதிமன்றத்திடமோ முறைப்படி தெரிவித்திருக்கலாமே.அப்படிஇல்லாமல் பொதுவெளியில் சொல்வது திமுக தலைமையிடம் விருது பெறுவதற்கான நடிப்பு என்றுதானே பொருள்கொள்ள வேண்டும்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
தமிழ் தேசியத்தை வளர்க்க இலங்கைக்கு போங்கள் புலவர். அங்கேதான் தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டிய அதீத தேவை உள்ளது. நான் மேலே சொன்னது நானாககவோ, அல்லது அநேமேதய கணக்கு களில், யுடீப் வீடியோ ஆதாரங்கள் அல்ல. தட்ஸ் தமில் எனும் நீண்ட்காலமாக உள்ள ஒரு செய்திதளத்தில் இருந்துதான். சர்மிளா ஒரு மருத்துவர், அவரை சின்ன திரை நடிகை என கேலி பேசுகிறீர்கள். நீங்கள் என்ன? பெரிய திரை நடிகரா? அரசியலில் யாரும் கருத்து சொல்லலாம். அவரின் தொழில் முக்கியம் அல்ல. ஒரு அநியாய கொலை நடந்துள்ளது. அதில் பல மர்ம முடிச்சுக்கள். அதை எதையும் கதைக்காமல், எழுதாமல் தமிழ் தேசியம் வளர்கிறோம் பேர்வழி என அரசு மீது குற்றம் சுமத்துவது, உண்மையான குற்றவாளிகள் தப்பவே வழி வகுக்கும். அதைதான் நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கு திமுக மீது பழி தீரக்க வேண்டும் என்பதால் அஜித் குமார் கொலையை அவர்கள்தான் செய்தார்கள் என இழுத்து மூட முடியாது. என்ன பச்ச புள்ளை மாதிரி எழுதுறீங்க. பாஜக உள்ளே வருவது என்பது ஆட்சி அதிகாரத்தை அவர்கள் பெறுவதை குறிக்கும். இப்போ நடந்துள்ளதாக கூறப்படுவது அதுவல்ல, இங்கே முன்பு திமுக, அதிமுக வுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் பாஜகவுக்கு நெருக்கமாகி போன ஒரு பெண்ணும், சில உயர் பாஜக ஆதரவு அதிகாரிகளும் சேர்ந்து, இதை ஒப்பேற்றி உள்ளார்கள் என்பதே ஒரு தரப்பு வாதம். இது சரி என நான் சொல்லவில்லை. ஆனால் இதுவும் ஒரு கோணம். இதற்கும் பாஜக உள்ளே வருவதை தடுப்பற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தமிழ் நாடு இந்தியாவில் ஒரு மாநிலம், மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிடினும் சில தில்லாலங்கடிகளை செய்ய முடியும்.

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

2 months 3 weeks ago
ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள். இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும். மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்). மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும். நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது. இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது. அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை. இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது. முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்). அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள். தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது. இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
சீமான் பாசக டீ ரீம் சீமானுக்கு ஓட்டப் போட்டா பாசக உள்ள வந்துரும். அததிமுகவுக்கு ஓட்டுப்போடா பாசக உள்ள வந்துரும். பாசகவுக்கு ஓட்டுப் போடா பாசக நேரடியாக உள்ள வந்துரும் அதைத்தடுக்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லித்தனெே ஆட்சியைப் புடிச்சீங்க இப்ப எப்படி பாசக உள்ளே வந்தது. உண்மையில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டால்தான் பாஜக உள்ளே வரும். அவர்களை உள்ளே கொண்டு வந்து எச்ராஸாவை எம்எல் ஏ ஆக்கியதே இந்த த் திருட்டு திமுகதான். சிபிஐ எங்க கேள்வி கேட்கிறது?சிபிஐக்கே காசைக் கொடுத்து 2ஜி வழக்கை டீல் செய்த திமுகவுக்கு இது சிம்பிள்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
ஸ';கேன் எடுப்பதற்கு வைத்தியசாலைக்குதானே போகணும் கோயிலுக்கு ஏன் போனாங்க? அப்புறம் எதுக்கு திமுககாரன் 50 இலட்சம் பேரம் பேசினான்.தீவிர பாசக எதிர்ப்பாளரான சர்வாதிகாரிஸ்டாலின் சாட்டையை ஏன் சுழட்டாமல் இருக்கிறார்?.இப்பொழதுAI காலம் எது உண்யைhன படம் எது AIபடம் என்று சாதரண கண்களுக்கு தெரியாது.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
ஓம் 👍 தமிழ்நாட்டு பொலிஸ் மிக மிக மோச மானது. உறவு வீரபையனுக்கு பிடித்தமான வீரப்பன் என்பவரை பிடிப்பதற்காக அனுப்பபட்ட தமிழ்நாட்டு பொலிஸ் பல தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாம் ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேகமாக செயல்பட்டு பொலிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டணைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும். அது தான் இந்த பொலிஸ் காட்டுமிராண்தனத்தை குறைப்பதற்கு வழி. சீமான் முதல் அமைச்சராகவும் சாட்டை துரைமுருகன் அமைச்சராகவும் இருந்தால் எப்படி இருக்கும் அவரே ரேப் பண்ணுவேன் தொலைத்து போடுவேன் என்று இப்போது பயமுறுத்தி கொண்டு திரிகின்றார். முதல் அமைச்சரானால் பொலிஸ்சுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பெண் : நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே ஆண் : தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே பெண் : தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை ஆண் : { நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே } (2) ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே பெண் : உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா ஆண் : உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ........ ! --- நீரோடும் வைகையிலே ---

ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை

2 months 3 weeks ago
ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை; செவிமடுக்கவும் செயற்படவும் துணிச்சல் உள்ள ஒருவருக்காக நிலத்திற்கடியில் குரல்கள் காத்திருக்கின்றன Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 03:09 PM யாழ்ப்பாணம் செம்மணியில் பள்ளிக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர் சிறுமிகள் கொலைசெய்து புதைக்கப்பட்ட மனித புதைகுழி(அதிக அளவில் புதைக்கப்பட்ட சடலங்கள்) சம்பவம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கெஸ்பேவவில் உள்ள அவரது வீட்டில் காமினி லொக்குகே இயற்கை மரணமடைந்தார். குற்றவாளிகளை தண்டிக்கும் சட்ட அமைப்பை அமல்படுத்த முடியாமல் போன நாம் வாழும் இந்த சிங்கள பௌத்த சமூகம் காமினி லொக்குகே தலைமையிலான செம்மணி மனிதபுதைகுழிக்கு முன்பும் பிறகும் வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களிற்கு விதி தண்டனை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தது. இப்போது லொக்குகே தலைமையிலான அந்தக் குழுவினர் நரகத்திற்கு செல்லும் வரைக்கும் காத்திருக்கும். இலங்கையின் மிகவும் துயரமான காலத்தின் முன்னோடிகளும் அதன் காரணமாக உருவான சித்திரவதை கலாச்சாரத்தின் முன்னோடிகளுமான காமினிலொக்குகேகள் இலங்கையின் வரலாற்றிற்கு வேதனையான நினைவுகளை இன்னமும் கொண்டுவருகின்றனர். லொக்குகேயின் மரணமும் மனித புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டதும் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் பயன்பாடு குறித்த ஒரு முரண்பாடானா உணர்வை எழுப்புகின்றன. செம்மணி மனித புதைகுழியில் பெரியவர்களின் எலும்புக்கூடுகளுடன் காணப்பட்ட குழந்தையின் மனித எச்சங்கள் நாங்கள் நம்பியதை விட செம்மணியிடம் எங்களிற்கு தெரிவிப்பதற்கு அதிக கதைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அவை இழந்த உயிர்களின், சிதைக்கப்பட்ட குடும்பங்களின், இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள யுத்த குற்றங்களின் கதைகள். அவசர அவசரமாக தனிப்பட்ட ரீதியில் அடையாளம் காணப்படமுடியாதபடி பெருமளவு உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பகுதியே பாரிய மனித புதைகுழி எனப்படுகின்றது. ஆனால் இலங்கையின் சூழமைவில் இதன் அர்த்தம் இன்னமும் ஆழமானது. இது இலங்கையில் திட்டமிட்ட வன்முறைகள் காணப்பட்டன, அரசதலையீடு காணப்பட்டது, நீதியின் தோல்வி காணப்பட்டது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. இது சிறுவர்களின், கொல்லப்பட்டவர்களின் மயானம் மாத்திரம் அல்ல, உண்மை, பொறுப்புக்கூறல், அரசின் மனச்சாட்சியின் மயானமும் ஆகும். செம்மணியில் உள்ள உடல்கள் 1990களின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து மீளக்கைப்பற்றிய வேளை கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என கருதப்படுகின்றது. இந்த தனிநபர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்து, படுகொலை செய்யப்பட்டார்கள் என குற்றம்சாட்டப்படுகின்றது. சிலர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் - ஏனையவர்களிற்கு இது கூட்டு தண்டனையாக வழங்கப்பட்டது. செம்மணி கதைகள் தடயவியல் பரிசோதனை மூலமோ அல்லது அரச அமைப்பின் மூலமோ வெளிவரவில்லை. மாறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவவீரர் ஒருவர் மூலமே வெளிவந்தது. 1996 இல் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற தமிழ் பள்ளிமாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக லான்ஸ் கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச ஏற்றுக்கொண்டார். கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தின் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் வழமையான விடயமாக காணப்பட்டன. இந்த ஒப்புதல் வாக்குமூலம் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது மேலும் அரசாங்கம் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1999 ஆம் ஆண்டில் தடயவியல் நிபுணர்கள் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் இந்த எழுத்தாளர் ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் 15 எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தனர். சிலர் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஆனால் பொறுப்பான எந்த மூத்த அதிகாரியும் மீது வழக்குத் தொடரப்படவில்லை. போருக்குப் பிந்தைய இலங்கையில் உள்ள பல அதிர்ச்சிகரமான இடங்களைப் போலவே யுத்தவீரர்கள் யுத்த பிரச்சார தலைப்புச்செய்திகளிற்கு மத்தியில் ஏனைய புதைகுழிகளை போல செம்மணியும் மௌனத்திற்குள் புதையுண்டது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு செம்மணியின் கல்லறைகள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. குழந்தைகள் கொல்லப்பட்ட கடந்த காலத்தின் நினைவுகள் இலங்கை சமூகத்திற்கு மீண்டும் நினைவூட்டப்பட்டாலும், காசாவில் பாலஸ்தீன குழந்தைகள் இறக்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியையோ அல்லது சமூக பிரதிபலிப்பையோ ஏற்படுத்தவில்லையா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும் இலங்கையின் தொடர்ச்சியான நல்லிணக்க வாக்குறுதிகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்ட நிழல்களுக்கு மேலாக இது பெரிதாகத் தெரிகிறது மற்றும் எரியும் கேள்விகளை எழுப்புகிறது: நம் காலடியில் இன்னும் எத்தனை கல்லறைகள் உள்ளன? பாதிக்கப்பட்டவர்கள் யார் குற்றவாளிகள் யார்? உண்மை என்றென்றும் புதைக்கப்படுகிறதா? செம்மணி கல்லறைகளின் கதை வெறும் தொல்பொருள் அல்லது நடவடிக்கை மாத்திரமல்ல. இலங்கையின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தை எதிர்கொள்ளும் தார்மீக மற்றும் அரசியல் விருப்பத்திற்கான ஒரு சோதனை இது. குழந்தையின் எலும்புக்கூடு வெறும் ஆதாரம் அல்ல - அது தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஆழத்திலிருந்து நினைவுகூரவும் நினைவில் கொள்ளவும் செயல்படவும் ஒரு அழுகை. இலங்கையின் காணாமல்போதல் வரலாறு செம்மணிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது 1970களில் அரச ஆதரவுடன் நடந்த கடத்தல்கள் மற்றும் கொலைகளின் முதல் அலை அப்போது நிகழ்ந்தது. 1971 ஜேவிபி கிளர்ச்சி. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு எதிரான தோல்வியுற்ற மார்க்சிய எழுச்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் கிராமப்புற சிங்கள இளைஞர்கள் காணாமல் போனார்கள். பலர் மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை. அவர்களின் உடல்கள் ஆறுகளில் வீசப்பட்டன எரிக்கப்பட்டன அல்லது குறிக்கப்படாத காடுகளில் அழுக விடப்பட்டன. பொது பதிவுகள் எதுவும் இல்லை. நினைவுச் சின்னங்கள் இல்லை. நீதி இல்லை. இந்தக் காலகட்டத்தில் - 1988-1990 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது - இதே பாணி மீண்டும் தோன்றியது. இடதுசாரி நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பள்ளிக் குழந்தைகள் புதைக்கப்பட்ட சூரியகந்தபோன்ற கூட்டுப் புதைகுழிகள் தெற்கில் ஆட்சி செய்த சட்டவிரோத பயங்கரவாதத்தின் அளவை வெளிப்படுத்தின. ஆனால் தெற்கு எரிந்து கொண்டிருந்த அதே வேளையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஏற்கனவே அதில் மூழ்கியிருந்தன. இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் போன்ற பகுதிகள் கட்டாயமாக காணாமல் போனவர்களின் மையங்களாக இருந்தன. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபம் காட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவு இராணுவத் தாக்குதல்கள் அல்லது சோதனைச் சாவடிகளின் போது கடத்தப்பட்டனர் - பலர் திரும்பி வரவே இல்லை. சிலர் செம்மணி போன்ற வயல்களில் புதைக்கப்பட்டனர் மற்றவர்கள் நீர்நிலைகளில் வீசப்பட்டனர் அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளும் காணாமல் போதல்களையும் கடத்தல்களையும் மேற்கொண்டனர். ஆனால் அரசால் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போதல்களின் அளவு மற்றும் தண்டனையின்மை ஆகியவை பயம் மற்றும் வன்முறை கலாச்சாரத்தை இயல்பாக்கின. மே 2009 இல் துப்பாக்கிகள் அமைதியாகிவிட்ட பிறகும் காணாமல் போதல் நிகழ்வுகள் முடிவுக்கு வரவில்லை. பின்னர் அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக மாறியது "வெள்ளை வேன்" கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தன பெரும்பாலும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பத்திரிகையாளர்கள் அல்லது முன்னாள் தமிழ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்தன. இவை அமைதி காலத்தில் பெரும்பாலும் தலைநகர் அல்லது அதன் புறநகர்ப் பகுதிகளில் சில நேரங்களில் பட்டப்பகலில் நடத்தப்பட்டன. விசாரணைகள் குறித்த வாக்குறுதிகள் இருந்தபோதிலும் நாம் இன்னும் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கத் தவறிவிட்டோம்.. ஒரு காலத்தில் தனிநபர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகமாக இருந்த நாடாக இருந்த இலங்கையில் 65000 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடு உள்ளது. சூரியகந்த முதல் செம்மணி வரை மன்னார் முதல் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழிகள் அரச வன்முறைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் துயரம் என்னவென்றால் இந்தப் புதைகுழிகள் இருப்பது மட்டுமல்ல - அவை புறக்கணிக்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது மறக்கப்படுகின்றன. அகழ்வாராய்ச்சிகள் தாமதமாகின்றன. விசாரணைகள் முடிவில்லாதவை. பொதுமக்களின் நினைவு தேர்ந்தெடுக்கப்பட்டவை. இலங்கையின் கூட்டுப் புதைகுழிகள் ஒரு இருண்ட கடந்த காலத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை அதற்கான ஆதாரங்களும் கூட. இலங்கையின் காணாமல் போனவர்களின் கதை ஒரு தமிழ் கதையோ அல்லது சிங்களக் கதையோ அல்ல - இது இலங்கையில் நமது கதை. சட்டத்திற்கு மேலே அதிகாரம் செயல்பட அனுமதித்த ஒரு அரசியல் கலாச்சாரத்தின் கதை. இந்த காணாமல் போனவர்கள் பற்றிய முழு உண்மை அறியப்படும் வரை ஒவ்வொரு கல்லறையும் மனிதபுதைகுழியும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரின் பெயரும் குறிப்பிடப்படும் வரை ஒவ்வொரு குடும்பமும் செவிமடுக்கப்படும் வரை இலங்கை இறந்தவர்கள் உயிர்த்தெழும் நாடாகவே இருக்கும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அசாதாரண திருப்பமாக காணாமல் போன தங்கள் தோழர்களையோ அல்லது கொலைக் குழுவின் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பியவர்களையோ நினைத்து துக்கம் அனுசரித்த பலர் இப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக அரச பயங்கரவாதத்தை நேரடியாகக் கண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முக்கிய நபர்களுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி உருவாக்கப்பட்டது. அவர்கள் நாட்டின் வன்முறையை தொலைதூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் அல்ல; அவர்கள் அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள். இந்த தனித்துவமான நிலைப்பாடு முன்னோடியில்லாத தார்மீக அதிகாரத்தையும் - உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டதன் மூலம் மௌனமாக்கப்பட்டவர்களிற்கு அரச ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் அரசாங்கத்தினால் நீதியை வழங்க முடியுமா? தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் பலர் குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி யைச் சேர்ந்தவர்கள் 1988-1990 பயங்கரவாதத்தின் வடுக்களை தாங்கிக் கொண்டனர். அப்போது தெற்கு கிளர்ச்சியை அரசு இரக்கமற்ற திறமையுடன் நசுக்கியது. மாணவர்கள் ஆர்வலர்கள் அப்பாவிகள் என பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் பெரும்பாலும் சித்திரவதை செய்யப்பட்டு ரகசிய முகாம்களில் கொல்லப்பட்டனர். சில டயர்களில் எரிக்கப்பட்டன மற்றவை அடையாளம் தெரியாத வயல்களில் புதைக்கப்பட்டனர். இந்த அனுபவங்கள் இதுபோன்ற அட்டூழியங்களை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் செய்த தலைவர்களின் தலைமுறையை வடிவமைத்துள்ளன. 2024 இல் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தது ஒரு அரசியல் வெற்றியை விட அதிகம்; பலருக்கு இது வரலாற்றின் கல்லறையிலிருந்து ஒரு குறியீட்டு திரும்புதலாகும். அவர்கள் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சமூக நீதியை மட்டுமல்ல பொறுப்புக்கூறல் உண்மை மற்றும் நினைவாற்றலையும் உறுதியளித்தனர். இந்த தனித்துவமான நிலைப்பாடு முன்னோடியில்லாத வகையில் தார்மீக அதிகாரத்தையும் - உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. அரசு அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட முன்னாள் அரசாங்கத்தால் கட்டாயமாக காணாமல் போனவர்களால் அமைதியாகி வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக நீதி வழங்க முடியுமா? அரசு இதுவரை என்ன செய்துள்ளது? புதிய விசாரணைகள் செம்மணியில் புதிதாக மனித உடற்கூறுகள் குறிப்பாக ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த விசாரணையை அரசு மீண்டும் செயல்படுத்தியதைக் குறிக்கிறது. சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையுடன் அரசாங்கம் செம்மணி மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான கோப்புகளை மீள ஆராய்கின்றது. தடயவியல் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளை காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களுடன் பொருத்தி பார்க்க முயல்கின்றனர். இது சிறியதாக இருந்தாலும் உண்மையை மீட்டெடுக்க எடுத்த முக்கியமான ஒரு முன்னேற்றமாகும். காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை மீண்டும் செயல்படுத்துதல் முன்னதாக செயலற்றிருந்த காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தற்போது புதிய பணிக்கட்டளையுடன் அதிக ஊழியர்கள் மற்றும் நிதியுடன் மீளுயர்த்தப்பட்டுள்ளது. இது காணாமல் போனவர்களை தேடுவதோடு மட்டுமல்லாமல் குடும்பங்களின் வேதனையை ஒப்புக்கொள்வது மைய தரவுத்தொகுப்பை பராமரிப்பது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்வது ஆகிய பொறுப்புகளையும் மேற்கொள்கிறது. கடந்த குற்றங்களை பொது மக்களுக்கு ஒப்புக்கொள்வது முந்தைய ஆட்சி அமைப்புளைவிட தற்போதைய தலைமைத்துவம் தமிழர் மற்றும் சிங்களர் காணாமற்போனவர்களுக்கு அரசு பொறுப்புள்ளதாக பொது வெளியில் ஒப்புக்கொள்கிறது. 1971 - 1989 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த குற்றங்களைப் பற்றிய ஜனாதிபதி உரைகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்கள் பல தசாப்தங்களுக்கு பின்னர் தமிழ் மற்றும் சிங்களர் ஆகிய இருவரையும் ஒரே தேசிய கதைச்சொல்லலில் இணைத்துப் பேசுகின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மாதிரிகளின் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்க அரசு ஆதரவுடனும் குடிமை சமூகத்தின் கலந்துரையாடல்களுடனும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் சாட்சியங்களை திரட்டுவது இழப்பீடுகள் பரிந்துரை செய்வது மற்றும் ஒரு தேசிய நினைவகத்தை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இவ்வளவு முன்னேற்றங்களுடன் கூட நியாயம் இன்னும் தொலைவில்தான். காணாமல்போதல் அல்லது படுகொலைகளிற்கு இராணுவத்தின் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் காரணமாகயிருந்தாலும் கூட அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. மக்களின் பார்வையில் போர் காலத்திலிருந்து வலிமைபெற்ற இராணுவ அமைப்பு இன்னும் குடியரசுச் சட்டத்தைக் காட்டிலும் மேலாக உள்ளது. அதனால் அதன் நடத்தையைக் குறித்த விசாரணைகள் மறைமுக எதிர்ப்பால் அடக்கப்படுகின்றன. அரசாங்கம் முற்போக்கு சக்திகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்குவந்துள்ளது..இருந்தபோதிலும் சிங்கள தேசியவாத உணர்வுகள் போர் குற்ற விசாரணைகளை இராணுவத்தின்மீது தாக்குதலாகவே பார்க்கின்றன. இதனால் விசாரணைகள் மெதுவாக எச்சரிக்கையுடன் பெரும்பாலும் விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என காண்பிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றன. சின்னமாகவே நடைபெறுகின்றன. இதுவே உண்மையான துயரம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் விரும்புவது போல் செயல்பட முடியாத நிலை உள்ளது. பழைய அமைப்புகள் நம்பிக்கையற்ற கூட்டணிகள் மற்றும் அ தண்டனை தவிர்க்கும் கலாசாரம் அவர்களை கட்டுப்படுத்துகிறது. அரசியல் அதிகாரம் ஒரு புதிய மாற்றத்திற்கான ஆணையில்லை மாறாக பழைய வேதனைகளை மேலும் கடந்து செல்லும் ஊர்தியாகவே மாறுகிறது. அப்போதுதான் கேள்வி எழுகிறது: தார்மீக அதிகாரம் சட்ட நடவடிக்கையாக மாறுமா? ஒரு காலத்தில் தங்கள் நண்பர்களை ஆழமற்ற கல்லறைகளில் புதைத்தவர்கள் இப்போது அரசின் குற்றங்களை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவார்களா? அதிகார மண்டபங்களில் முன்னாள் பாதிக்கப்பட்டோர் இருப்பது ஒரு வரலாற்று தருணம். ஆனால் அவர்கள் இந்த தருணத்தை உண்மை நீதிமன்றம் நல்லிணக்கத்தை நிறுவ பயன்படுத்தாவிட்டால் அந்த வாய்ப்பு மீண்டும்—பல வருடங்கள் அல்லது தசாப்தங்களுக்கு—மூடப்பட்டுவிடும். செம்மணி மன்னார் ஆகிய இடங்களின் மண் என்றென்றும் அமைதியாக இருக்காது. பூமியின் அடியில் இருக்கும் குரல்கள் காத்திருக்கின்றன… கேட்கவும் செயல்படவும் துணியும் ஒருவருக்காக. https://www.virakesari.lk/article/219178

2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

2 months 3 weeks ago
திமுக கூட்டணியை 'அசைக்க முயலும்' விஜய் - 2026 தேர்தலுக்கு அவர் போடும் கணக்கு என்ன? பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜயின் இந்த முடிவு திமுகவின் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதேநேரம், இது திமுக எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். "தவெக தலைமையில் 2026 தேர்தலுக்காக அமையப்போகும் கூட்டணியின் தேர்தல் வேட்பாளர் விஜய்தான்" என இன்று நடைபெற்ற தவெக-வின் செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆகையால், இனி எந்தெந்த கட்சிகள் தவெக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய் பேசியது என்ன? சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS படக்குறிப்பு, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய் மேலும், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில அளவிலான மாநாடும், ஜூலை மாதத்தில் இருந்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5 மண்டல மாநாடு மற்றும் மாவட்ட அளவிலான 120 மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பின்னர் செயற்குழுவில் பேசிய விஜய், "கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயத்துக்காக மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழகத்தில் எடுபடாது. பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது" என்று கூறினார். மேலும், "சுயநல அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் திமுகவோ அதிமுகவோ இல்லை" என்று விமர்சித்த விஜய், "அவர்களுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்" என்று கூறினார். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கமா? பட மூலாதாரம்,GETTY IMAGES "விஜயின் இந்த முடிவு திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு விடுக்கப்படும் மறைமுக அழைப்பு" என்கிறார் மூத்தப் பத்திரிக்கையாளர் பிரியன். "திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைக் கூறிவிட்டார். அதே நேரம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது. நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குத் தனது அறிக்கை மூலம் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் விஜய்" என்கிறார் பிரியன். ஆனால் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "விஜய் பேசியிருப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்" என்று கூறினார். மேலும், "தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கும்போது, அதுகுறித்து கருத்து தெரிவிக்க - அது அரசுக்கு எதிராக இருந்தாலும் சரி - கூட்டணிக் கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வைத்தே கூட்டணியில் சலசலப்பு என எடுத்துக்கொள்ள முடியாது," என்று விளக்கமளித்தார். விஜய் பேசியதில் எந்தப் புதிய விஷயமும் இல்லை எனக் கூறிய ரவீந்திரன், "திமுக கூட்டணியில் விரிசல் இல்லை, விரிசல் வருவதற்கான வாய்ப்பு இல்லை" எனக் கூறினார். பாஜக கூறுவது என்ன? பட மூலாதாரம்,@NARAYANANTBJP படக்குறிப்பு, பாஜக கூட்டணிக்கு தவெக வரவில்லை என்றாலும்கூட தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் நாராயணன் திருப்பதி தவெக தலைவர் விஜயின் முடிவு குறித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். திமுக எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட யார் வேண்டுமானாலும் பாஜகவின் கூட்டணிக்கு வரலாம், கதவுகள் திறந்தே இருக்கும். தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. ஆனால், எங்களுடைய இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார். அதேநேரம், பாஜக கூட்டணிக்கு தவெக வரவில்லை என்றாலும்கூட அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் நாராயணன் திருப்பதி. கடந்த மாதம், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க. தலைவர்கள் முன்பாகவே திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த விமர்சனப் படம் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில் இந்து முன்னணி தயாரித்த காணொளி ஒன்று திரையிடப்பட்டது. அந்தப் படத்தில், பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 'தர்மம் காக்க, அதர்மம் அகற்ற' என்ற வார்த்தைகள் இடம்பெற்ற காட்சியில், 'தர்மம்' என்ற வார்த்தை ஒலிக்கும்போது இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலனின் படமும் 'அதர்மம்' என்ற வார்த்தை ஒலிக்கும்போது பெரியார், அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இதைக் குறிப்பிட்டே, "பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற இயலாது" என இன்று நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த நாராயணன் திருப்பதி, "அது பாஜக-வின் மாநாடு அல்ல, இந்து முன்னணி நடத்திய மாநாடு. எனவே அதை பாஜகவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது சரியாக இருக்காது" என்று பதிலளித்தார். 'பாஜகவின் நேர்மையற்ற அரசியல்' படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் ஆனால், "உங்கள் கூட்டணி வேண்டாம் என விஜய் தெளிவாகச் சொன்ன பிறகும், அவரை இன்னும் கூட்டணிக்குள் இழுக்கப் பார்ப்பது நேர்மையற்ற அரசியல்" என பாஜகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கிறார் ப்ரியன். மாநில உரிமைகளுக்காகப் பேசும் கட்சிக்கே தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டே விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், பாஜக- திமுக எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைத்தே விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி. "பாஜக எதிர்ப்பு நிலை என்ற உத்தியே கடந்த தேர்தலில் திமுகவின் ஆயுதமாக இருந்தது. இப்போது அதையே விஜயும் கையில் எடுத்துள்ளார். இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் மட்டுமல்லாது திமுக எதிர்ப்பு வாக்குகளும் தனக்குக் கிடைக்கும் என்று அவர் கணிக்கிறார். அது தவறான கணக்கு," என்கிறார் சிகாமணி. "உண்மையில், விஜய் மற்றும் அவரது கட்சிக்கு இருப்பது அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பம் மட்டுமே" எனக் கூறும் சிகாமணி, களத்தில் தம்மை வலுப்படுத்திக் கொள்ளாமல், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும் ஒரு கட்சியைத் தனது அரசியல் எதிரி என நிலைநிறுத்தும் முயற்சியை விஜய் தொடர்ந்து செய்வதாகவும் விமர்சிக்கிறார். "நடிகர் என்பதைத் தாண்டி, வேறு என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டு மக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் உறுதியாகப் பதிவு செய்ய வேண்டும். அதை விடுத்து, இத்தகைய பேச்சுகள், அரசியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது" என்றும் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwykwwry73yo

"சமூக சக்தி" தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் - ஜனாதிபதி

2 months 3 weeks ago
Published By: VISHNU 04 JUL, 2025 | 10:25 PM நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற "சமூக சக்தி" தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். "சமூக சக்தி" தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். பின்னர் " சமூக சக்தி" தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கலாநிதி உபாலி பன்னிலகே சமூக சக்தி தேசிய செயற்பாட்டை அறிமுகப்படுத்தினார். சமூக சக்தி உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு ஆற்றிய முழுமையான உரை, குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அறிவோம். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எந்தவிதத்திலும் காரணமாகாத கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்கு உணவு கொள்வனவு செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கல்விக்கான வசதிகளை உருவாக்குதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சவாலும் பொறுப்பும் உள்ளது. அது கைவிட முடியாத ஒரு பொறுப்பு ஆகும். எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளில் கிராமிய வறுமையை ஒழிப்பதை ஒரு அத்தியாவசிய காரணியாக நாங்கள் கருதுகிறோம். தற்போது, பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவு நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. நீண்ட காலமாக டொலரின்பெறுமதியை சுமார் 300 ரூபா அளவில் வைத்திருத்தல், அந்நியச் செலாவணி இருப்புக்களை முறையாக அதிகரித்தல், திறைசேரியின் வருமானத்தை நாம் எதிர்பார்த்த இலக்குகளுக்குக் கொண்டு செல்வது, வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்திருப்பது போன்ற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான காரணிகளை கணிசமான அளவில் நிறைவுசெய்ய முடிந்துள்ளது. மேலும், நமது நாடு குறித்து முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை படிப்படியாக வளர்க்க முடிந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பல புதிய திட்டங்களுக்கான ஏராளமான முன்மொழிவுகளும் கிடைத்துள்ளன. அதன் பல முக்கியமான முன்மொழிவுகள் கடந்த அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் செயல்படுத்தும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும். ஆனால், அந்தப் பொருளாதாரப் பலன்கள் கீழ்நிலைக் கிராமிய மக்களுக்கு செல்லவில்லை என்றால், புள்ளி விபரத்தில் மாத்திரம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதில் பயனில்லை. எனவே ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் மறுபுறம் பொருளாதார விரிவாக்கமும் அடைய வேண்டும். கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால், அவர்கள் பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இல்லாவிட்டால், சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் குழுவாக மாறிவிடுவார்கள். எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும், கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மக்களை அந்தப் பொருளாதாரத்தில் பங்கேற்பவர்களாக மாற்றுவதும்தான் எங்களின் முக்கிய அணுகுமுறை என்பதைக் கூற வேண்டும். மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார மூலங்களை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், இலாபகரமாகவும் மாற்றினால் மாத்திரமே அதனை அடைய முடியும். எனவே, கிராமிய மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இலாபகரமான தொழிலாக அதனை மாற்ற வேண்டும். மேலும், அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அதன்படி, கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார மூலங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்ற முடியும். வறுமை என்பது பொருளாதார மட்டத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஏழை மக்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறிவிட்டனர். எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாகக் கருதப்படுகிறது. இந்த விடயத்தில், கல்வி மிகவும் முக்கியமான துறையாகும். வறுமைக் கோடும், கல்வி அறிவில்லாத கோடும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. எனவே கல்வி வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், எந்தவொரு சமுதாயத்திலும், எந்தக் காலத்திலும் கஷ்டப்படும் மக்கள் சமூகம் உள்ளது. வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் கூட இத்தகைய சமூகங்கள் உள்ளன. அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள நிவாரணத் திட்டம் தேவை. நிவாரணம் என்பது ஒரு மோசமான கருவி அல்ல. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இருப்பினும், இந்தப் பொறுப்பு கணிசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. நிவாரணத் திட்டம் குறிப்பிடத்தக்க அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இலக்குமயப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். யார் யாருக்கு? என்ற இலக்குடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு அத்தகைய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் சமூகமும் அதில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் ஏதாவது வழங்கினால், அவர்கள் பெறும் அனைத்தையும் நாமும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது. அது தவறு. நமது அரசு அத்தகைய கலாசாரம், சமூக பிணைப்பு கொண்ட அரசு அல்ல. பராமரிக்க வேண்டியவர்களை எப்போதும் கவனித்துக் கொள்வது நமது கலாசார பண்பு ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட திரிவுபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இன்று உதவி பெறத் தகுதியானவர்களுக்கு நாம் உதவி வழங்க முயற்சிக்கும்போது, அதைத் தாங்களும் பெற வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, ஒரு புதிய கலாசாரம் தேவை. அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரமே கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் தானாக உணர வேண்டும். தனக்கு திறன் இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரருக்கு அதே திறன் இல்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்று உணர வேண்டும். ஆனால், இன்று நமது நாட்டின் கலாசாரம் என்ன? ஏதாவது கொடுக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கு ஒரு போராட்டம் உள்ளது. அது தனக்கு பொருத்தமானதா? இல்லையா? அவசியமா? இல்லையா? தனக்கு அதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்று சிந்திக்காமல். எனவே, மிகவும் வலுவான தரவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, நாம் எப்போதும் கதைக்கும் இந்த நிவாரணத் திட்டத்தை எப்போதும் நம்பியிருக்க முடியாது. எப்போதும் நிவாரணத் திட்டத்திற்கான தேவை உள்ளது. அதனால்தான் எப்போதும் நிவாரணத் திட்டம் உள்ளது. ஆனால் அது ஒரு நபருக்காகவோ, ஒரு சமூகத்திற்காகவோ மாத்திரம் அல்ல. ஏனையவர்களும் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும். இதற்காக குறிப்பிடத்தக்க அளவு அரசாங்கம் பணம் செலவிடப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்திற்கு மட்டும் சுமார் 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிவாரணத் திட்டங்களுக்கு அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை உதவிகள் சென்றடையவேண்டிய சமூகத்திற்கு நாம் கொடுத்திருக்கிறோமா? அந்த பணத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் நன்மைகள் பெறப்பட்டதா? இல்லை, அந்த நன்மை கிடைக்கவில்லை. பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த நாட்டில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவற்றைப் நோக்கும்போது, அவற்றில் 50% க்கும் அதிகமான தொகை உதவி வழங்குவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பதற்கு செலவிடப்படுகின்றன. ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டதும் அதில் ஒரு பகுதி தனக்குப் பெறுவதற்கு அதிகாரி ஒருவர் காத்திருப்பார். அவருக்கு ஒரு தொழில் இருக்கும். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு கொடுப்பனவு தேவை என்று அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நிவாரணத் திட்டத்தில் ஒரு பெரிய தொகை உதவி, பெற வேண்டிய நபர்களுக்கு அன்றி உதவி வழங்குவதற்கான பொறிமுறைக்கு செலவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அது தொடர்பான பயிற்சிக்காக அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். உதவி சென்றடையவேண்டிய சமூகத்திற்கு உதவி வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது. இதனை தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். தகுதியானவர்களுக்கு உதவி வழங்குவதற்கான முன்னெடுப்பொன்றை தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு அமைச்சும் ஏதாவதொன்றை வழங்க வேண்டும் என்று நினைக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மிகவும் துல்லியமான தரவுக் கட்டமைப்பின் அடிப்படையில் என்ன வழங்கப்பட வேண்டும்? எந்த நோக்கத்தில் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், தற்போது அவ்வாறு நடக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் திணைக்களமும் உதவி வழங்க விரும்புகின்றன. இருப்பினும், கிராமப்புற மக்களுக்குச் செல்லும் உதவிகளும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உயிர்வாழ்வதற்காக மட்டுமே எங்கள் உதவியில் அதிக பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு கூட்டு முன்னெடுப்பு தேவை. அந்த முன்னெடுப்பிற்காக நாங்கள் சமூக சக்தி திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது ஒரு இலக்காகக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டம் வரை தயாரிக்கப்பட வேண்டும். தற்போது, நிர்வாகக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் ஒரு குழந்தை இனி பிறக்கும் என்று நான் நினைக்கவில்லை. உரிய வயதை அடையும் போது, அவர் அடையாள அட்டையை பெறுவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் பொறிமுறை செயல்படுத்தப்படும். அப்படியானால், பொறிமுறையில் கீழ் மட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? அதன் தன்மையைக் கண்டறிந்து, அந்த அலகை அந்த இயல்புடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குவதே கீழ் மட்டத்திலுள்ள நிர்வாக அலகின் பொறுப்பாகும்.பிரதேச செயலக அலுவலகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த இடத்திற்காக பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது.அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நமது அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ள ஒரு அரச இயந்திரம் என்பதையும் நான் ஏற்கிறேன். அரச அதிகாரிகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களையும் எடுத்துக் கொண்டால், அவை 15 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. வீதியில் உள்ள பஸ்களில் 50% க்கும் அதிகமானவை வீதியில் பயணிக்கத் தகுதியற்றவை. அலுவலகத்தில் உள்ள கணினிகள் கணிசமானவை பழமையானவையாகும். எங்கள் நிறுவனங்களில் உள்ள முறைமைகள் புதுப்பிக்கப்படவில்லை. கட்டிடங்கள் சிதைந்து வருகின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்த்தால், எங்களிடம் ஒரு அரசு இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஒரு சாதாரண கிராமவாசியைப் போல, எங்கள் பையில் கொஞ்சம் வெற்றிலையுடனும் பாக்குடனும் அலுவலகத்திற்கு வருகிறோம். அதுதான் உண்மை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மனித வளங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டது. எனவே, அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச இயந்திரத்தின் பௌதீக வளங்களை கட்டியமைக்க நாங்கள் பாடுபட இருக்கிறோம்.பெளதீக வளங்களை உருவாக்குவதை விட புதிய மென்பொருள் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச கட்டமைப்பை நவீனமயமாக்குவோம். இருப்பினும், பிரஜைகளுக்காக நாங்கள் அதைச் செய்வோம். அவ்வாறு நவீனமயமாக்கப்பட்ட அரசாங்கத்தில், பழைய நாற்காலியில் அதே பழைய நபர்அமர்ந்தால், அதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்த நவீனமயமாக்கப்பட்ட அரச இயந்திரத்தில் நமக்கு ஒரு புதிய அரச ஊழியர் அமர வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள முடியும். இல்லையெனில், இது ஒரு அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களின் பொறுப்பு கிராம உத்தியோகஸ்தரின் பணி, அபிவிருத்தி அதிகாரியின் பணி, பிரதேச செயலாளர் பணி என நாம் ஆங்காங்கே பிரித்து இதனைச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரத்தையும் அரச இயந்திரத்தையும் கைவிடாத ஒரு கூட்டு நடவடிக்கை தேவை. அரச இயந்திரம், அரச அதிகாரி மற்றும் குடிமகனை ஒரு கூட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதே சமூக சக்தி திட்டத்தின் நோக்கமாகும். அவ்வாறின்றி எதையும் வெற்றிகொள்ள முடியாது. இருக்கும் ஒரு அரசை பராமரிக்க எமக்குத் தேவையில்லை. அவ்வாறு செய்வதானால் இருக்கும் அரசை தற்பொழுது இருப்பது போன்றே பராமரிக்கலாம். வீழ்ச்சியடைந்த ஒரு அரசை கட்டியெழுப்ப , அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் குடிமகனை ஒரு ஒன்றிணைந்த நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். எனவே, வீழ்ச்சியடைந்த அரசில் பொருளாதாரத்தை இழந்த ஒரு சமூகம் உள்ளது. பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க அந்த சமூகத்திற்கு ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது. இந்த சமூக சக்தி திட்டத்தை வெற்றிபெறச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோருகிறேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார். சமூக சக்தி தேசிய கொள்கைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய நடவடிக்கைக் குழுவின் தலைவரும் , கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்ததாவது, நமது நாட்டில் வறுமை பற்றிப் பேசுகையில், கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளைப் நோக்கினால், கிராமத்தை மறந்துவிடாமல் வறுமையைப் பற்றி ஆராய முடியாது. அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 6 ஆம் திகதியை உலக கிராமப்புற அபிவிருத்தித் தினமாக அறிவித்துள்ளது. நம் நாட்டில் கிராமப்புற வறுமை பற்றி பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருவதோடு அதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நம் நாட்டில் நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக இருந்தது. 2010 ஆம் ஆண்டளவில், அது 1.5 மில்லியனாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 1.8 மில்லியனை எட்டியது. வறுமையை ஒழிக்க எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகை வேகமாக நகரமயமாகி வந்தாலும், நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 79% ஆனோர் கிராமப்புறங்களில் அல்லது தோட்டங்களை அண்டியதாக வாழ்கின்றனர். எனவே, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக, எங்கள் கொள்கைகளைத் திட்டமிடும்போது கிராமப்புற வறுமையை ஒழிப்பதை ஒரு முக்கிய எண்ணக்கருவாகக் கொண்டோம். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நம் நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலவீனங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். அந்த பலவீனங்களை ஒதுக்கி நம் நாட்டில் வறுமையை உண்மையிலேயே எவ்வாறு ஒழிப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த திட்டத்தின் மூலம் பல நோக்கங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க உள்ள அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மாகாண ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்,அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/219210
Checked
Fri, 09/26/2025 - 18:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed