புதிய பதிவுகள்2

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன். தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான். ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு வெளியே வைடாக வீசுவது, எதிர்மறையான களத்தடுப்பை அமைப்பது, மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பது என. இந்தியாவின் சராசரி ரன்ரேட் இரண்டாவது இன்னிங்ஸில் 3.5 ஆக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 4.5 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி முன்னூற்று சொச்சம் இலக்கை சுலபத்தில் அடைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்மைக் காலங்களில் இங்கிலாந்தில் ஆடுதளமானது 5வது நாள்தான் மட்டையாட்டத்துக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் எஸ்.ஜி பந்தும், ஹெவி ரோலரும் மட்டையாட்டத்தை லட்டு சாப்பிடுவதைப் போலாக்குகிறது. அதனால் ஸ்டோக்ஸின் இலக்கு கடைசி நாள் மட்டையாடுவதும் 90 ஓவர்களுக்குள் அடிக்கிற மாதிரியான இலக்கைப் பெறுவதும்தான். அதற்காகத்தான் அவர் எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க மட்டும் போராடுகிறார், விக்கெட்டுகளை எடுக்க அல்ல. ஏனென்றால் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4.5 ரன் ரேட்டில் ஆடியிருந்தால் கடைசி நாள் இலக்கு 450ஐத் தாண்டி இருக்கும். ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்திருக்கும். முதல் 20 ஓவர்கள் பும்ரா நன்றாக வீசி ரன் ரேட்டை 6க்கு கொண்டு வந்தால் அது சேஸிங்கைச் சிக்கலாக்கும். இப்படி ஸ்டோக்ஸ் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கும்விதமே வித்தியாசமானது. அவரிடம் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினாலும் எடுபடாது. முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைந்தால் மட்டுமே ஸ்டோக்ஸ் இந்த அணுகுமுறையைக் கைவிடுவார். ஸ்டோக்ஸை ("பேஸ்பாலை") முறியடிக்க முதலில் தட்டையான ஆடுதளத்தில் டாஸ் ஜெயித்தால் இங்கிலாந்தை மட்டையாட வைக்க வேண்டும். அவர்களுடைய ரன் ரேட்டைக் குறைத்து நமது பந்து வீச்சின் ஓவர் ரேட்டையும் குறைக்க வேண்டும். எதிர்மறையான உத்திகளைக் கையாள வேண்டும். அல்லது நாம் முதல் நாள் மட்டையாட நேர்ந்தாலும் ரன் அடிப்பதைவிட அதிக நேரம் மட்டையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 2.5 நாட்களையாவது தின்று விட வேண்டும். எனில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு மட்டையாட அரை நாள்தான் கிடைக்கும். இது அவர்களைக் கடுமையாக வெறுப்பேற்றும் என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்து சிக்கிக் கொள்வார்கள். அதே போல அவர்களுடைய வேகவீச்சாளர்கள் காயம்பட வாய்ப்பு அதிகமாகும். பந்து வீசி ஜெயிக்கவே வாய்ப்பில்லாத ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை இங்கிலாந்து கியூரேட்டர்களும் பந்து தயாரிப்பாளர்களும் ஏற்படுத்தும்போது எதிர்மறை கிரிக்கெட்டின் வழியாக மட்டுமே அதைச் சமாளிக்க முடியும். இதையே இன்று கில் செய்ய முயன்றார். அதிகப் பந்துகளை ஆட முயன்றார். ஒரே பிரச்சினை ஜெய்ஸ்வாலும் பண்டும் இந்த வியூகத்துக்கு ஏற்ப ஆடாமல் அதிக ஷாட்களை ஆட முயன்றார்கள். ஜெய்ஸ்வால் 250 பந்துகளில் சதம் அடிக்க முயன்றிருக்க வேண்டும். எனில் அவரும் கில்லுமாக தலா 300 பந்துகளை ஆடியிருந்தால், இன்னும் சிலர் தலா 100 பந்துகளை எடுத்திருந்தால் ஒரே இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பேஸ்பால் வியூகத்தை நாசமாக்க முடியும் (ஆனால் அவர்கள் வேகமாக ஆடி ஆட்டமிழந்தார்கள்). முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதல்ல எத்தனை நாட்கள் ஆடுகிறோம் என்பதை ஸ்டோஸுக்கு ஆப்படிக்க உதவும். இதை இரண்டு போட்டிகளில் செய்தால் இங்கிலாந்து வேறு வழியின்றி தன் ஆடுதளங்களை மாற்றும் நிலை வரும். இதைத்தான் அஷ்வினும் தன் யுடியூப் சேனலில் வலியுறுத்துகிறார். முதல் டெஸ்டில் இந்தியா இதைப் புரிந்துகொள்ளாமல் நான்காவது நாளே பந்துவீச விரும்பி கடைசி ஐந்து விக்கெட்டுகளை வேகமாக அடிக்கும் நோக்கில் தியாகம் செய்தது. ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை ஆடிவிட்டு இங்கிலாந்துக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுதளத்தில் 350-400 என்று இலக்கை அதிகப்படுத்துவார்கள். அதாவது ரன் ரேட்டை உயர்த்துவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்ய சிறந்த மார்க்கம் இங்கிலாந்துக்கு மட்டையாடக் கிடைக்கும் பந்துகளைக் குறைப்பதுதான். இது தடுப்பாட்டம் அல்ல, இங்கிலாந்தில் இதுதான் புத்திசாலித்தனமான ஆட்டம். இரண்டாவது டெஸ்டில் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா 450 அடிக்கிறதா என்பதல்ல நாளை மாலை வரையில் அல்லது நாளைக்கு அடுத்த நாள் காலை வரைக்கும் கில், ஜடேஜா, சுந்தரால் ஆட முடியுமா என்பதே இந்தியாவின் எழுச்சிக்கான அளவுகோல். நாளை மதியத்துடன் ஆல் அவுட் ஆனால், அவர்கள் அந்த ஸ்கோரை 100 ஓவர்களில் அடித்துவிட்டு நான்காவது நாள் மாலைக்குள் இந்தியாவை ஆல் அவுட் பண்ணப் பார்ப்பார்கள். இப்போட்டியில் 5வது நாள் இங்கிலாந்து தமக்கு அளிக்கப்படும் எந்த இலக்கையும் சுலபத்தில் விரட்டி அடைந்துவிடும். ரன்கள் அல்ல, நேரமே இப்போட்டியைத் தீர்மானிக்கும் காரணி. ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/07/bazball.html

நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா

2 months 3 weeks ago
தலாய் லாமா தேர்வு எப்படி நடக்கிறது? - 600 ஆண்டுகளாக தொடரும் 'ஆன்மீக மரபு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கட்டுரை தகவல் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 2 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளை ஜூலை 6ஆம் தேதி கொண்டாடுகிறார். திபெத்திய பௌத்தத்தின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாமல், சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவும் பலர் அவரைப் பார்க்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும்போதும், அடுத்த தலாய் லாமாவாக யார் வருவார்கள் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பது, மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக செயல்முறை என்று அவரைப் பின்பற்றும் மக்கள் நம்புகிறார்கள். தலாய் லாமா என்றால் யார் ? திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்திய பௌத்தத்தின் மிகச் சிறந்த முகமாகவும், தலாய் லாமா அவரைப் பின்தொடர்பவர்களால் பார்க்கப்படுகிறார். அவரை, திபெத்தின் பாதுகாவலராகக் கருதப்படும் தெய்வமான அவலோகிதேஸ்வரா (அல்லது சென்ரெசிக்) என்பவரின் மனித உருவாகவே அவர்கள் பார்க்கிறார்கள். தலாய் லாமாவின் பாத்திரம், பல நூற்றாண்டுகளாக மறுபிறவி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிரப்பப்பட்ட ஒன்று. காரணம்,யாராவது இறந்தால், அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பது பௌத்த நம்பிக்கையாக உள்ளது. தற்போதைய தலாய் லாமா 1935 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, வடகிழக்கு திபெத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு இரண்டு வயது இருக்கும் போது, அவர் 13வது தலாய் லாமாவின் மறுபிறவியாக அங்கீகரிக்கப்பட்டார் "தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்" என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா. முனைவர் துப்டன் ஜின்பா ஒரு முன்னாள் துறவி. அவர் திபெத்திய பௌத்தத்தில் மிக உயர்ந்த இறையியல் தகுதியை அடைந்துள்ளார். மேலும் அவர் 1985 முதல் தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். எல்லா தலாய் லாமாக்களும் ஒரே ஆன்மாவின் தொடர்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்தாலும் , தற்போதைய தலாய் லாமா, இந்த நம்பிக்கையை அப்படியே உண்மையாக எடுத்துக்கொள்வது போலத் தெரியவில்லை என்று முனைவர் துப்டன் கூறுகிறார். "14 பேரும் ஒரே நபரின் மறுபிறவி என்று தலாய் லாமா நம்புகிறார் என்று சொல்ல முடியாது, சில சந்தர்ப்பங்களில், அவரே இதை நேரடியாக நம்பவில்லை என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்," என்று பிபிசியிடம் கூறிய ஜின்பா, "ஆனால் அந்த பரம்பரையில் உள்ள ஒவ்வொருவருக்கும், தலாய் லாமா மரபுடன் ஒரு தனித்துவமான ஆன்மீக தொடர்பு இருக்கிறது என்று அனைவரும் நம்புகிறார்கள்," என்றும் கூறினார். பௌத்தம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான மதமாக இருக்கிறது. ஆனால் தலாய் லாமா என்ற பதவியும், அதனைச் சுற்றியுள்ள அமைப்பும் சமீபத்தில் உருவானதுதான். "முதல் தலாய் லாமாவாக 1391-ல் பிறந்த கெதுன் ட்ருப் என்ற நபர் என்று அங்கீகரிக்கப்பட்டார். ஆனால், ஒரு பௌத்த ஆசிரியர் மறுபிறவி எடுத்து, தங்கள் முன்னோடியின் சொத்துகளையும், அவரைப் பின்பற்றுவபர்களையும் மரபுரிமையாகப் பெறுவார் என்ற சிந்தனை அதைவிட பழமையானது," என்கிறார் அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் இமயமலை ஆராய்ச்சிக்கான ஸ்காட்டிஷ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் மார்ட்டின் ஏ மில்ஸ். "அந்த நம்பிக்கை குறைந்தபட்சம் 300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது" என்று பேராசிரியர் மார்ட்டின் ஏ. மில்ஸ் கூறுகிறார். தலாய் லாமா எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,CHRISTOPHER MICHEL படக்குறிப்பு, 'தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்' என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா. "தலாய் லாமாவைத் தேர்வு செயல்முறை மிகவும் கடுமையானது, சிக்கலானது மற்றும் விரிவானது" என்று ஜின்பா விளக்குகிறார். ஒரு தலாய் லாமாவை அடையாளம் காணும் செயல்முறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். உதாரணமாக, 14வது தலாய் லாமாவை அடையாளம் காண நான்கு ஆண்டுகள் எடுத்தது. முந்தைய தலாய் லாமா இறந்த பிறகு, அந்த நேரத்தில் பிறந்திருக்கக்கூடிய ஒரு சிறுவனைத் தேடுவதற்காக உயர்மட்ட துறவிகள் தங்களது தேடலைத் தொடங்குகிறார்கள். இந்த தேடல் பல துப்புகள் மற்றும் ஆன்மீக அறிகுறிகளால் வழிநடத்தப்படுகிறது. துறவிகளில் ஒருவருக்கு வரும் கனவில் தலாய் லாமாவின் மறுபிறவியாக இருக்கக்கூடிய சிறுவனைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். முந்தைய தலாய் லாமாவின் இறுதிச் சடங்கில் எழும் புகையின் திசையும், மறுபிறவி எங்கு இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு அறிகுறியாகக் கருதப்படுகிறது. சிறுவனின் இருப்பிடம் கண்டறியப்பட்டவுடன், அவனிடம் பல பொருட்கள் காட்டப்படுகின்றன. அவற்றில் சில, முந்தைய தலாய் லாமாவுக்குச் சொந்தமானவையாக இருக்கும். அந்த சிறுவன் அவற்றை சரியாக அடையாளம் காண்பதால், துறவிகள் அதை மறுபிறவியின் உறுதியான அறிகுறியாகக் கருதுகிறார்கள். உயர்மட்ட துறவிகள் திருப்தி அடைந்தவுடன், சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மதப் பயிற்சி மற்றும் இறையியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவான். ஒருவர் மங்கோலியாவிலும் மற்றொருவர் வடகிழக்கு இந்தியாவிலும் என இரண்டு தலாய் லாமாக்கள் மட்டுமே திபெத்துக்கு வெளியே பிறந்துள்ளனர். தற்போதைய தலாய் லாமா, தனக்கு 90 வயது ஆகும் இந்த மாதத்தில், தனது வாரிசு குறித்து மேலும் தெளிவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார். சீனக் கட்டுப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திபெத்திய பௌத்தத்தில் இரண்டாவது முக்கியமான ஆன்மீகத் தலைவரான பஞ்சன் லாமாவாக, தலாய் லாமா 1995-ல் ஒரு ஆறு வயது சிறுவனை தேர்வு செய்தார். அந்த சிறுவன் சில நாட்களில் காணாமல் போனார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் சீன அரசு கடத்தியதாகக் கூறப்படுகிறது. 1950-ஆம் ஆண்டு, திபெத்தின் மீது உரிமை கோர சீனா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியது. 1959-ஆம் ஆண்டு, சீனாவுக்கு எதிரான எழுச்சி தோல்வியடைந்த பிறகு, தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். அங்கு அவர் திபெத்தியர்களுக்காக ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தார். தலாய் லாமா திபெத்திய அரசாங்கத்தின் தலைமை பதவியில் இருந்து விலகியிருந்தாலும், அவர் இன்னும் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவே பார்க்கப்படுகிறார். திபெத்தில் அல்லாமல் வேறு நாட்டில் மறுபிறவி எடுப்பேன் என்ற தலாய் லாமாவின் கூற்று, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு எதிரான ஒரு நடைமுறை தீர்வாகவே பார்க்கப்படுகிறது. மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக் கூறி, திபெத்திலிருந்து வெளியேறிய அரசியல் தலைவர் என்று தலாய் லாமாவை சீன அரசு நிராகரிக்கிறது. 2007 ஆம் ஆண்டில், சீன அரசு 'திபெத்திய பௌத்தத்தில் வாழும் புத்தர்களின் மறுபிறவி மேலாண்மை நடவடிக்கைகள்' என்ற பெயரில் ஒரு ஆணையை வெளியிட்டது. இந்த ஆணை, அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது எனக் கருதப்பட்டது. திபெத்தின் மீதான அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலாய் லாமாவின் பாரம்பரிய இடமான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது சாதாரண திபெத்தியர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பேசினாலோ அல்லது தலாய் லாமாவின் புகைப்படத்தை காட்டினாலோ, சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு திபெத்திய பிரச்சாரகரின் உதவியுடன், திபெத்தில் வசிக்கும் இரண்டு துறவிகளையும், புத்த மதத்தை பின்பற்றும் ஒருவரையும் பிபிசியால் தொடர்புகொண்டு பேச முடிந்தது. தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். "என் கிராமத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் தலாய் லாமாவை அவமதித்தார்கள், மேலும் அங்கு இருந்த அனைவரையும் கடுமையாக எச்சரித்து, மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தினார்கள்," என திபெத்தின் அம்டோ பகுதியில் வசிக்கும் நடுத்தர வயதுடைய ஒருவர் கூறுகிறார். அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அடுத்து வரவுள்ள முக்கிய தினத்தை முன்னிட்டு, சீன போலீசாரும் ராணுவத்தினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் நம்புகிறார். "மடத்திலும் அதைச் சுற்றியும் அதிகமான வீரர்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று அவர் கூறுகிறார். சீன அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதால், சிலரால் தலாய் லாமாவுடன் நெருக்கமாக உணர முடியவில்லை என்றும் அவர் நம்புகிறார். "பல இளைஞர்கள் தலாய் லாமாவை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அதற்கு முரணாக, அவரைப் பற்றிய தகவலை அவர்கள் [சீன] அரசின் பிரச்சார ஆவணங்களிலிருந்து மட்டுமே கேட்கிறார்கள்," என்கிறார் அந்த நபர். தொடர்ந்து பேசியபோது, "வயதானவர்களுடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் நம்பிக்கை பலவீனமானது"என்றும் அவர் குறிப்பிட்டார். பல திபெத்திய மடங்கள் தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் உள்ளன. ஆனால், சிலர் இன்னும் அந்த மதத்துக்கான ஆடைகளை வெளிப்படையாகப் புலப்படும் வகையில் அணிந்து, மத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்." 'குறைவான புதிய துறவிகள்' "நான் என் பெற்றோரின் விருப்பப்படி சிறுவயதிலேயே துறவியாக ஆனேன்," என்கிறார் செரிங் (அவரது உண்மைப் பெயர் மாற்றப்பட்டுள்ளது). 46 வயதான இவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஏழு வயதிலேயே துறவியானார். சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக, மக்கள் துறவியாக மாற 18 வயது வரை காத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, மடங்களில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. "மடத்தில் புதிய துறவிகள் குறைந்து வருகிறார்கள்," என்று கூறும் அவர், "இந்த ஆண்டு, என் மடத்தில் மூன்று புதிய துறவிகள் மட்டுமே வந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைப் போலவே, மற்ற கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து படிக்கவும் வழிபடவும் வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது" என்றும் குறிப்பிட்டார். திபெத்திய கலாச்சார அழிவின் பொருட்டு கிடைத்தது தான் சீன ஆட்சியின் பொருளாதாரப் பலன்கள் என்று செரிங் கூறுகிறார். "சிறுவயதில் எனக்கு உணவுக்கே சிரமமாக இருந்தது. மடத்தில் சில நேரங்களில் மோசமான உணவையே உண்ண வேண்டியிருந்தது," என்ற அவர், "பின்னர் வாழ்க்கை எளிதாகியது. போக்குவரத்து வசதிகள் பெரிதும் மேம்பட்டன. கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டது." எனவும் தெரிவித்தார். ஆனால், "திபெத்திய மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது போலத் தெரிகிறது" என்றும் அவர் கூறுகிறார். அம்டோ நகாபா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு துறவி ஒருவரை நாங்கள் 'கோன்போ கியாப்' என்று அழைக்கிறோம். "நான் நிறைய மாற்றங்களை காண்கிறேன். ஆனால் அதை வளர்ச்சி என்று அழைப்பது கடினம்" என்கிறார் கோன்போ கியாப். தொடர்ந்து பேசிய அவர், "எனது புரிதலின் படி, திபெத்திய மொழியும் எழுத்தும் பௌத்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கத்தால் மட்டுமே நிலைத்திருக்கின்றன என்கிறார். அடுத்த தலாய் லாமா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலாய் லாமா உலகளவில் நன்கு அறியப்பட்ட பொது நபர் மற்றும் 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். தலாய் லாமா பதவியின் 600 ஆண்டுகள் பழமையான ஆன்மீக மரபு தொடர வேண்டும் என்று 14வது தலாய் லாமா உறுதியாகக் கூறுகிறார். தனது வாரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் சீனா தலையிடுவதைத் தடுக்க, எதிர்காலத்தில் சீன அரசு நியமிக்கும் ஒருவரை நிராகரிக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் தலாய் லாமா ஏற்கனவே கூறியுள்ளார். "மக்கள் அமைதியாக நடந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் உயிரை இழக்க விரும்பவில்லை. ஆனால், சீன அரசு நியமிக்கும் தலாய் லாமாவை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்," என்று முனைவர் ஜின்பா கூறுகிறார். "சீனாவால் மக்களை உடல் ரீதியாக கட்டுப்படுத்த முடியும், ஆனால் திபெத்தியர்களின் இதயங்களையும் மனதையும் வெல்ல முடியாது," என்றும் அவர் தெரிவித்தார். திபெத்தில் "செர்ஃப்கள் மற்றும் அடிமைகள்" ஒரு பிற்போக்கான இறையாட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்ற கண்ணோட்டத்தை சீனா தொடர்ந்து ஊக்குவிக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், திபெத்தை நவீனமயமாக்கும் பாதையில் கொண்டு சென்றதாகவும், மக்களின் வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்தியதாகவும் கூறுகிறது. ஆனால் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள், திபெத்திய பௌத்தத்தின் தலைமை சீன அரசின் கட்டுப்பாட்டில் செல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து செயல்படுவார்கள். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2kxnpgk9zo

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

2 months 3 weeks ago
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் - உலக நாடுகள் வர்த்தக உறவுகளை துண்டிக்கவேண்டும் - ஐநா அறிக்கையாளர் 03 JUL, 2025 | 03:52 PM காசா நிலவரம் தொடர்பில் உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என ஐநாவின் அறிக்கையாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள உரையாற்றியுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நிலைமை ஊழிக்காலம் போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் அவரது உரைக்கு கைதட்டி பாராட்டை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219100

15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 2 03 JUL, 2025 | 05:05 PM அரசாங்கத்தின் 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் புதன்கிழமை (02) தீப்பந்தங்களை கையில் ஏந்தி மக்கள் போராட்ட இயக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்கட்டணத்தை கணிசமானளவு குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை வேளையில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு”, சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கேற்க அரசாங்கம் செயல்படுகிறது, சர்வதேச நாணய நிதியம் ஓர் மரணப் பொறி, மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதைகளையும், தீப்பந்தங்களையும் கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கொழும்பு மாவட்ட குழு பிரதிநிதி திலான் சம்பத் குறிப்பிடுகையில், கடந்த மாதம் முதல் மின்சாரக் கட்டணம் 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்சார கட்டணத்தில் மூன்றில் இரண்டைக் குறைக்க முடியும் என்றே அரசாங்கத்தினர் தெரிவித்தனர். எனினும் ஆட்சிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டனர். முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட மின்சார சபை மறுசீரமைப்புக்கான சட்டமூலத்தை செயற்படுத்த அனுமதிக்கப் போவதில்லை, என தெரிவித்த அரசாங்கம் அதை மீள கையில் எடுத்துள்ளது. மின் கட்டண உயர்வால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்படையக்கூடும். அரசாங்கத்தின் இத்தீர்மானத்தால் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகலாம். ஆகையால் மின் கட்டணத்தைக் குறைப்பதுடன் மின்சார சபை மறுசீரமைப்புக்கான சட்ட மூலத்தை மீளப் பெருமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219120

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

2 months 3 weeks ago
🟥 இரு இளைஞர்கள் உயிரிழப்பு! புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் கந்தரோடையை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 🕯️ இளம் உயிர்கள் பிரிந்தது வேதனை! ⚠️ இளைஞர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம் எனும் செய்தியையும் இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது. புதிய விடியல் யாழ்ப்பாணம்

ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு.

2 months 3 weeks ago
ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வீசும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தெற்கு ஸ்பெயினும் ஒன்று. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பார்சிலோனாவில் சனிக்கிழமை வெப்பம் அதிகமாக இருந்தபோது, சாலை துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய ஒரு பெண் உயிரிழந்தார். ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா, ஹங்கேரி, செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆம்பர் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆம்பர் எச்சரிக்கை என்பது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்க கூடிய கடுமையான வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறிக்கும் எச்சரிக்கையாகும். BBC News தமிழ்

எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 11:13 AM எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொரும்பாலான பயணிகளின் மனதை வென்ற நம்பகமான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. LMD வர்த்தக சஞ்சிகையின் விரும்பத்தக்க அதிக தரம் கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. சஞ்சிகை ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள பல மக்கள் அறிந்து கொண்டனர். LMD என்பது இலங்கையின் பிரபல வர்த்தக சஞ்சிகையாகும். பயணிகளுக்கு நம்பகமான சேவையை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை பெருமை கொள்கிறது. ஒவ்வொரு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மதித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையை வழங்குகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவையானது ஐரோப்பா, இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஓசியானியா ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 300 தடவைகள் விமான சேவைகளை வழங்குகின்றது. இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முன்னேற்றம் மற்றும் சேவையை இது எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் உள்ள பயணிகளின் விரும்பத்தக்க விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை காணப்படுகின்றது. எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் | Virakesari.lk

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 02:24 PM நாட்டில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நோய் கொடிய வைரஸ் நோய் தாக்கத்தினால் சுமார் 67,000 பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களைப் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு முற்றாக தடை தடை விதித்தல் உட்பட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில்,மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வைத்தியசர கொத்தலாவல சுட்டிக்காட்டினார். இந்த நோய் 100 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க பண்ணையார்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். "பதிவு செய்வதன் ஊடாக உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தவும் எதிர்கால இழப்புகளைக் குறைக்கவும் எங்களுக்கு உதவுகிறது" என தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு | Virakesari.lk

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 03:11 PM குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர | Virakesari.lk

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 04:46 PM இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார். எமது கடற்றொழில் அமைச்சர் வழங்கிய பதிலை நாங்களும் கூற விரும்புகிறோம். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான கடற்றொழிலையே செய்கின்றனர். இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கும்போது அதற்கான பல்வேறு விடயங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது. எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. இலங்கை வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கிற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல், எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர் | Virakesari.lk

நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 05:40 PM நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக்கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது. 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்கக் கொள்கையின்படி நாய்களைப் பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது 100,000 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக்கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு | Virakesari.lk

யுக்ரேன் போர் வீரர்களின் உயிரை காப்பாற்ற காந்தம் உதவுவது எப்படி?

2 months 3 weeks ago
பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக் தனது இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டை கையில் வைத்திருக்கிறார். கட்டுரை தகவல் அனஸ்தேசியா கிரிபனோவா மற்றும் ஸ்கார்லெட் பார்டர் பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் செர்ஹி மெல்னிக் தனது சட்டைப் பையில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு உலோகத் துண்டை வெளியே எடுக்கிறார். அது துருப்பிடித்திருக்கிறது. அந்த உலோகத் துண்டை கையில் பிடித்தவாறே, "இது என் சிறுநீரகத்தைக் கீறி, என் நுரையீரலையும் இதயத்தையும் துளைத்தது," என்கிறார் அந்த யுக்ரேனிய வீரர். ரஷ்ய டிரோனின் துண்டுகள் போல தோற்றமளிக்கும் அந்த உலோகத் துண்டில், உலர்ந்த ரத்தத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அவர் போராடியபோது இந்த துண்டு அவரது உடலில் நுழைந்தது. "முதலில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் பின்னர் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்" என்று பகிர்கிறார் செர்ஹி மெல்னிக். யுக்ரேன் போரில் டிரோன் பயன்பாடு தீவிரமடைந்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. டிரோன்கள் வெடிக்கும்போது, இதுபோன்ற சிறிய உலோகத் துண்டுகள் மக்களைக் காயப்படுத்தக்கூடும். போர்க்களத்தில் ஏற்படும் காயங்களில் 80 சதவீதம் இந்த வகையைச் சேர்ந்தவை என்று யுக்ரேன் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். செர்ஹியின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அவருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும். "இந்த துண்டு கத்தியைப் போல கூர்மையாக இருந்தது. இந்தத் துண்டு பெரியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்" என்று கூறுகிறார் செர்ஹி. ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றியது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு புதிய மருத்துவ தொழில்நுட்பம் உள்ளது. அதுதான் 'உலோக துண்டை எடுக்கும் காந்தக் கருவி'. அறுவை சிகிச்சை எப்படி செய்யப்பட்டது? பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செர்ஹி மக்ஸிமென்கோ செர்ஹி மெல்னிக்கின் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டின் காட்சிகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செர்ஹி மக்ஸிமென்கோ காட்டினார். அந்த உலோகம், நுனியில் காந்தம் கொண்ட ஒரு மெல்லிய கருவியின் உதவியுடன் மிகக் கவனமாக அகற்றப்பட்டது. "இந்த சாதனம் இதயத்தில் பெரிய கீறல்கள் இடுவதற்கான தேவையை நீக்குகிறது," என்று மருத்துவர் மக்ஸிமென்கோ விளக்குகிறார். "நான் ஒரு சிறிய கீறலைச் செய்து, ஒரு காந்த கருவியை உள்ளே செருகினேன். அது உலோகத் துண்டை வெளியே இழுத்தது."என்கிறார் மக்ஸிமென்கோ. மருத்துவர் மக்ஸிமென்கோவும் அவரது குழுவினரும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் 70 வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர். போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பார்வையை இந்தச் சாதனம் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இதற்கு முன்னதாக, உடலில் நுழைந்த அத்தகைய துண்டுகளை அகற்றுவது ஒரு சிக்கலான பணியாக இருந்தது. ஆனால் போர் முனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மிகச் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, அத்தகைய சாதனங்கள் உருவாக்கப்பட்டன. வழக்கறிஞராக பணிபுரியும் ஓலே பைகோவ், இந்த காந்த சாதனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 2014 முதல் யுக்ரேன் ராணுவத்தில் தன்னார்வலராக சேவை செய்து வருகிறார். போர் முனையில் பணியாற்றும் மருத்துவர்களுடன் நேரடியாக பேசினார் பைகோவ். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, காந்தத்தைப் பிரித்தெடுக்கும் இந்த கருவி உருவாக்கப்பட்டது இருப்பினும், இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற காந்தங்களைப் பயன்படுத்துவது 1850களில் நடந்த கிரிமியன் போரில் கூட பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஓலே பைகோவ் மற்றும் அவரது குழு இந்த பழைய கருத்துக்கு ஒரு நவீன வடிவத்தை வழங்கினர். வயிற்று அறுவை சிகிச்சைக்காக அதன் நெகிழ்வான மாதிரிகளை அவர் உருவாக்கினார். மிக நுண்ணிய மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எக்ஸ்ட்ராக்டர்களான இவை, எலும்புகளில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்றுவதற்காக மிகவும் வலுவான கருவிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அருமையான யோசனை பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, இந்த காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, இது ஒரு கனமான சுத்தியலைக் கூட தூக்கும். அறுவை சிகிச்சைகள் இப்போது மிகவும் துல்லியமானவையாகவும், குறைந்த கீறல்களுடன் நடைபெறும் வகையிலும் மாறியுள்ளன. காயத்தின் மேற்பரப்பில் ஒரு காந்தத்தை மெதுவாக இயக்குவதன் மூலம், உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை வெளியே இழுக்க முடியும். பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிறிய கீறலைச் செய்வதன் மூலம், உலோகத் துண்டு அகற்றப்படும். ஒரு மெல்லிய பேனா அளவிலான கருவியைப் பிடித்துக்கொண்டு, ஓலே அதன் சக்தியை நிரூபிக்கிறார். அதில் உள்ள காந்தத்தைப் பயன்படுத்தி அவர் ஒரு சுத்தியலைக் கூட தூக்கிக் காட்டுகிறார். அவரது பணி உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. டேவிட் நோட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். "பொதுவாக, யோசிப்பதற்கு கூட கடினமான சில விஷயங்கள் போரில் உருவாகின்றன," என்று அவர் கூறுகிறார். இப்போது போரின் முகம் மாறிவிட்டது, இதுபோன்ற துண்டுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடலில் சிக்கிய அத்தகைய உலோகத் துண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால், இந்த சாதனம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார் நோயாளிகளின் உடலுக்குள் இதுபோன்ற சிறிய துண்டுகளைத் தேடுவது "வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடுவது போன்றது" என்கிறார் அவர். அதேபோல், இந்தக் கருவியும் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. பல நேரங்களில், இது காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தும். "இதுபோன்ற சிறிய துண்டுகளை கையால் தேடுவது ஆபத்தானது. இதற்காக, பெரிய கீறல்கள் செய்யப்பட வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. எனவே அவற்றை ஒரு காந்தத்தால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தால், அது மிகவும் நல்ல யோசனையாகும்" என்று டேவிட் கூறுகிறார். இந்தக் கருவி யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவில் விழுந்த ஏவுகணை துண்டு (கோப்பு படம்) போர் முனையில் சோதிக்கப்பட்ட இந்தக் கருவி, இப்போது யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளிலும் போர் முனையிலும் பணிபுரியும் ஆண்ட்ரி ஆல்பன் போன்ற மருத்துவர்களுக்கு இதுபோன்ற 3000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது இந்தக் கருவியைச் சார்ந்து உள்ளார்கள். இந்த மருத்துவர்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டின் மத்தியிலும், பதுங்கு குழிகளிலும், தற்காலிக வெளிப்புற மருத்துவமனைகளிலும், சில சமயங்களில் மயக்க மருந்து இல்லாமலும் பணி புரிகிறார்கள். "வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களின் காயங்களுக்குக் கட்டு போடுவதும், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதும் எனது வேலை" என்கிறார் ஆண்ட்ரி ஆல்பன். இருப்பினும், இந்தக் கருவிக்கு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று யுக்ரேன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், போர், ராணுவச் சட்டம் மற்றும் அவசரநிலை போன்ற சூழ்நிலைகளில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற சான்றளிக்கப்படாத சாதனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. "போரின் உச்சத்தில் அதிகாரத்துவ நடைமுறைகளுக்கு நேரமில்லை" என்கிறார் ஓலே. "யாராவது என்னுடைய வேலையை குற்றம் என்று நினைத்தால், அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தேவைப்பட்டால், நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன். அப்படியானால், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அனைத்து மருத்துவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று ஓலே நகைச்சுவையாகக் கூறுகிறார். இந்த நேரத்தில் (சாதனத்தின்) சான்றிதழ் ஒரு முன்னுரிமை அல்ல என்று டேவிட் நாட் நம்புகிறார். காஸா போன்ற பிற போர் பகுதியிலும் இந்த சாதனம் உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். "போரில், இது (சான்றிதழ்) தேவையில்லை. மக்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையானதை நீங்கள் செய்கிறீர்கள்." லிவிவில் உள்ள செர்ஹியின் மனைவி யூலியா, தனது கணவர் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறார். "இந்தக் கருவியை உருவாக்கியவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிய யூலியா, "அவர்களால்தான் என் கணவர் இன்று உயிருடன் இருக்கிறார்" என்று கண்களில் கண்ணீருடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3njpl13gjo

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 05:40 PM செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை | Virakesari.lk

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!

2 months 3 weeks ago
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

2 months 3 weeks ago
ஏராளன், இவ்வாறான ஒரு சம்பவத்தின் / செய்தியின் புதிய தகவல்கள் பல நாட்கள் கழித்து வருமாயின், அவற்றை புதிய திரி திறந்து பகிருங்கள். ஏற்கனவே உள்ள, பல நாட்களுக்கு முன்னர் திறந்த திரியில் இணைத்தால் அது பலரைச் சேர்ந்தடைய வாய்ப்புகள் குறைவு. நான் இந்த செய்தியை புதிய திரியாக மாற்றியுள்ளேன்.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

2 months 3 weeks ago
வாழ்த்துக்கள் விக்டோரியா. எனது அப்பாவின் ஆரம்பபாடசாலை விக்டோரியா, எனது தாய் வழி மூதாதைகள் பெயர் பலகையில் இடம்பிடித்திருக்கும் பரியோவானோடு மோதுகிறது. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

2 months 3 weeks ago
மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் : விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் அமைதிப் பேரணி 03 JUL, 2025 | 04:57 PM கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை (3) அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்ற டில்சி அம்ஷிகா என்ற மாணவி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219124
Checked
Fri, 09/26/2025 - 15:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed