புதிய பதிவுகள்2

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 2 weeks ago
இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம். ஐயாவுக்கு கொடுத்த அந்த கொழும்பு 7 வீட்டை மகள் திருப்பி அரசுக்கு கொடுத்து விட்டாவா?

பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!

2 months 2 weeks ago
வளர்ந்ததும் - வீரகேசரி, ஆதவன், தினக்குரல், லங்காசிறி போன்ற நிறுவனங்களில் proofreader ஆக சேரலாம் 🤣. அதுசரி proofreader க்கு என்ன தமிழ்? தகவலுக்கு நன்றி.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 months 2 weeks ago
இதெற்கெல்லாம் முன்பே, “திரள்நிதியில் கொழுப்பேன், டெபாசிட்டை கொடுப்பேன்” என்ற மகுடவாக்கியத்தோடு அண்ணன் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். ஈரோடு கிழக்கு இடத்தேர்தலின் பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கட்சியாகிவிட்ட நாதகவை, பிபிசி வேணும் என்றே இந்த கட்டுரையில் புறக்கணித்துள்ளது. புலம்பெயர் தமிழர் ஆதரவுடன் பிரிதானியாவில் நாதக ஆட்சியை கைபற்றி விடல்கூடாது எனும் பயமே இதற்கு காரணம்.

பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!

2 months 2 weeks ago
பாரபட்சத்தை பராபட்சம் என பதாகையில் எழுதி உள்ளார். சரி அது ஒரு புறம் கிடக்கட்டும். ஆசிரியர் வட்டாரம் கூறுவது என்ன என்றால் இந்த மாணவன் முன்பும் ஏதோ பிரச்சனைப்பட்டு மருந்து குடித்து வைத்தியசாலை வரை சென்றாராம். ஆள் கொஞ்சம் குழப்படித்தனம் என்றமையால் சுற்றுலாவுக்கு கூட்டிச்செல்வது என்றால் இவர் தனது பெற்றோரையும் அழைத்து வரவேண்டும் என இவரிடம் கூறப்பட்டது. இவரது குழப்படித்தனம் காரணமாக பெற்றோர் இல்லாமல் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆசிரியர்கள் இணங்கவில்லை. ஆசிரியர்களையும் குறை கூறமுடியாது. சுற்றுலாவில் இவரது குழப்படித்தனம் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் எப்படி பொறுப்பு கூறுவது?

பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ்த்தரப்பு பொதுவேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணையவேண்டும் - கஜேந்திரகுமார்

2 months 2 weeks ago
Published By: VISHNU 07 JUL, 2025 | 07:46 PM (நா.தனுஜா) பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரை காத்திரமான முறையில் கையாளவேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்தகட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியம் எனவும், அதனை முன்னிறுத்தி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பேச்சுவார்த்தைகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால், தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக்கட்சியும் இதில் பங்கேற்கவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும், அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219432

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 2 weeks ago
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா? July 6, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைகளிலாவது நினைவஞ்சலி குறிப்பு ஒன்று வெளியானதாகவோ நாம் அறியவில்லை. சம்பந்தன் பல வருடங்களாக தலைமை தாங்கிய இலங்கை தமிழரசு கட்சியும்கூட அவரை நினைவு கூருவது குறித்து சிந்திக்கவில்லை. சம்பந்தன் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால், சிங்களத் தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதிப்புக்குரியவராக விளங்கினார். அவரது மறைவு தமிழ் அரசியல் சமுதாயத்தில் எளிதில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட மறுக்கமாட்டார்கள். ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வைக் கொண்ட அவரை நினைவு கூருவதற்கு தமிழர்கள் தவறியதை தமிழ் அரசியல் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் ஒரு பிணியின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியிருக்கிறது. சம்பந்தன் பல தசாப்தகால அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு அவர் எவ்வாறு தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பதே அவரின் அரசியல் மரபாக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதில் சந்தேகமில்லை. முதலாவது நினைவு தினத்தில் கூட நினைவுகூருவது குறித்து எவரும் அக்கறைப்படவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு அவரது மரபு ஒதுக்கி விடப்படக்கூடியதா? போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை வழிநடத்துவதில் சம்பந்தன் தலைமையில் பொதுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் கடைப்பிடித்துவந்த கொள்கைகளுக்கும் அணுகுமுறைக்குமான பொறுப்பை முற்று முழுதாகச் சம்பந்தன் மீது சுமத்திவிட முடியாது. விடுதலை புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் சமுதாயம் படுமோசமாக பலவீனப்பட்டிருந்த சூழ்நிலைகளின் கீழ் அதுவும் குறிப்பாக பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக வெற்றிகொண்டாடிய சிங்கள அரசியல் சமுதாயம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதில் அக்கறையற்ற மனோபாவத்தைக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே சம்பந்தன் தமிழர் அரசியலின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை இலங்கை தமிழர்களின் பலம்பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் தவறியதனாலேயே இன்று தமிழ் அரசியல் சக்திகள் பல்வேறு கூறுகளாகிக் கிடக்கின்றன என்பதே அவர் மீதான முக்கியமான குற்றச் சாட்டு. தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை போருக்கு பின்னரான உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளுக்கு இசைவான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரின் முன்னாலேயே சீர்குலைந்தது. அவரால் குறைந்தபட்சம் தனது தமிழரசு கட்சியையேனும் ஐக்கியமான ஒரு அரசியல் இயக்கமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. சம்பந்தன் தனது அரசியல் அனுபவத்தையும் மூப்பையும் பயன்படுத்தி தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்திருக்க முடியும் என்று பரவலான அபிப்பிராயம் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, முன்னைய காலத்தைப் போலன்றி அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கட்சி உறுப்பினர்களையும் அவற்றின் கட்டமைப்புக்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத ஒரு விபரீதமான போக்கு வளரத்தொடங்கிய ஒரு காலப்பகுதியிலேயே சம்பந்தன் தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருந்தது. இன்று இலங்கையில் எந்தவொரு கட்சியின் தலைவரும் தனது கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூறமுடியாது. அண்மைய தேர்தல்களின் பின்னர் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் கட்சிகள் எதிர்நோக்குகின்ற நெருக்கடி இதை தெளிவாக வெளிக்காட்டுகின்ற பிந்திய உதாரணமாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்ட பின்புலத்தில், அவர்கள் மத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்சிமீதான விசுவாசம் என்பது பெருமளவுக்கு தளர்ந்து போய்விட்டது. ஒரு கட்சிக்கு நிலையான வாக்குவங்கி ஒன்று இனிமேலும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அரசியல் சஞ்சலமானதாகிவிட்டது. தலைவரை ஏகமனதாக தெரிவுசெய்யும் தமிழரசு கட்சியின் பாரம்பரியமான நடைமுறையை பேணிக் காக்கக்கூடியதாக தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கூட வழிக்குக் கொண்டுவர முடியாத அளவுக்கு ஒரு கையறு நிலையிலேயே இறுதிக் காலத்தில் சம்பந்தன் இருந்தார். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சிக்குள் நிலவும் அருவருக்கத்தக்க உட்பூசல் தமிழர் அரசியலில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது. ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான தமிழ் மக்களின் நிலையை உணர்ந்தவராக சம்பந்தன் வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை உயர்த்திப்பிடித்து மீண்டும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் பாதையைக் காட்டுவதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை பொறுத்தவரை, அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக் கொடுப்பைச் செய்யாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையாகவே இருக்க முடியும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதேவேளை, நிரந்தரத்தீர்வை நோக்கிய பயணத்தில் இடைக்கால ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைக்க வேண்டும் என்று அரசாங்கங்களை இடையறாது வலியுறுத்த சம்பந்தன் தவறியதில்லை. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும் அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அவர் தவறியதில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்றைக் கோருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது இறுதிவரையான அவரது நிலைப்பாடாக இருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் விடயத்தில் சம்பந்தன் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம் நெருக்குதலை பிரயோகிக்க வேண்டும் என்பதும் அவரது இடையறாத வலியுறுத்தலாக இருந்து வந்தது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை காண்பது சாத்தியமில்லை என்பதும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் சம்பந்தனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள சமூகத்தின் கடுமையான வெறுப்புக்கு உள்ளாகாத ஒரு மிதவாத தமிழ்த் தலைவராக சம்பந்தன் இறுதிவரை விளங்கியதை அவருக்குரிய ஒரு ‘தனித்துவமாக’ கூறலாம். ஆனால், தனது தலைமுறையைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு அமைதியானதும் கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியாதவராகவே சம்பந்தனும் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார். பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளிலும் அரசாங்க தலைவர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் மற்றைய எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்யாத வகையில் சம்பந்தன் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து வரிசைக் கிரமமாக விளக்கம் அளிப்பது சம்பந்தனின் வழக்கமாக இருந்தது வந்தது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக் காலத்தில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்தபோது 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள், மைத்திரிபால சிறிசேன — ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை ஆகியவற்றை சம்பந்தன் தவறாது குறிப்பிடுவார். சமாதான உடன்படிக்கைக்கையை தொடர்ந்து மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் தீர்வை நோக்கிய அந்த செயன்முறைகளை முன்னெடுத்ததன் மூலமாக 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையமுடியாது என்பதை அரசாங்கங்களே ஏற்றுக் கொண்டிருந்தன என்பதை நிரூபிப்பதே சம்பந்தனின் நோக்கமாக இருந்தது. ஜனாதிபதிகளுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் சுமுகமான உறவை சம்பந்தன் கொண்டிருந்தது குறித்து தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அத்தகைய உறவை அவர் கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினையில் சிங்கள தலைவர்களின் தவறுகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் துணிச்சல் அவரிடம் இருந்தது. சம்பந்தன் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழ் அரசியல் தலைவராவார். முதலில் அமிர்தலிங்கம் 1977 ஜூலை தொடக்கம் 1983 ஜூலை வரையும் பிறகு சம்பந்தன் 2015 டெப்டெம்பர் தொடக்கம் 2019 அக்டோபர் வரையும் அந்த பதவியை வகித்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காலப்பகுதிக்கு பிறகு உள்நாட்டுப்போர் மூண்ட அதேவேளை, போர் முடிவுக்கு வந்தததன் பின்னரான காலப்பகுதியில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வந்தார். தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்ததும் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் செயலிழந்த பிறகு அந்த பதவியை சம்பந்தன் வகித்ததும் இருவருக்கும் இடையிலான வேறுபாடாகும். ஒரு எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் சிறிசேன — ரணில் அரசாங்கத்தை ஆதரித்த ஒருவராகவே சம்பந்தன் நடந்து கொண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரையும் செயன்முறையை முன்னெடுத்த காரணத்தால் அதற்கு ஒத்துழைத்து இனப்பிரச்சினைக்கு உருப்படியான அதிகாரப் பரவலாக்கம் மூலமாக அரசியல் தீர்வொன்றை காணும் நம்பிக்கையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது தலைமைத்துவம் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு சிங்கள தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது என்று நம்பியவர்கள் பலர். ஆனால், முன்னைய தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த கவலைக்குரிய அனுபவமே சம்பந்தனுக்கும் கிடைத்தது. எது எவ்வாறிருந்தாலும், சம்பந்தனின் மறைவு தமிழர் அரசியலில் ஏற்படுத்திய வெற்றிடம் அண்மைய எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய வாய்ப்பு தொடர்பில் நம்பிக்கை வைப்பதற்குரிய அரசியல் சூழ்நிலை தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை. தமிழ் மக்களின் நலன்களில் அன்றி தங்களது கட்சி அரசியல் நலன்களிலும் ஆளுமைப் போட்டியிலும் அக்கறை காட்டுவதற்கே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கிறது. சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. https://arangamnews.com/?p=12144

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

2 months 2 weeks ago
"தொடங்கியது தேர்தல் பிரசாரம்" - திமுக, அதிமுக, தவெக கட்சிகளின் திட்டம் என்ன? படக்குறிப்பு, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இன்று (ஜூலை 7) முதல் அ.தி.மு.க பிரசாரம் தொடங்கியுள்ளது. செப்டம்பர் முதல் தமிழ்நாடு முழுவதும் த.வெ.க தலைவர் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்தப் பயணங்கள் கைகொடுக்குமா? கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்கள் உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் பலவும் இப்போதிலிருந்தே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதி 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கவும் தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக கூறுகிறது. தி.மு.க பிரசாரத்தில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, சுமார் 45 நாட்களுக்கு தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். ஜூலை 3 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்தப் பணியில் சுமார் 45 நாட்களுக்கு தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். பிரசாரத்தில் வீடு, வீடாகச் செல்லும் தி.மு.க-வினர், 'மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றால் அவர்களுக்குப் பலன் கிடைத்துள்ளதா?' எனக் கேட்கின்றனர். அவர்கள் தெரிவிக்கும் பதிலை விண்ணப்ப படிவம் ஒன்றில் பூர்த்தி செய்கின்றனர். அடுத்து, 'தி.மு.க ஆட்சியைப் பிடித்துள்ளதா? கட்சியில் உறுப்பினராக சேர விருப்பம் உள்ளதா?' எனக் கேட்கின்றனர். 'ஆம்' எனப் பதில் அளித்தால் அதற்கான காரணம் குறித்து ஆறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. "உறுப்பினராக சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன" எனக் கூறுகிறார், விருகம்பாக்கம் தெற்குப் பகுதி தி.மு.க செயலாளர் கண்ணன். 'ஓடிபி வந்தால் தான் உறுப்பினர்' படக்குறிப்பு, பிரசாரத்தில் விருகம்பாக்கம் தெற்குப் பகுதி தி.மு.க செயலாளர் கண்ணன் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் இதன்பிறகு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயலியில் (App) உறுப்பினராக சேர விரும்பும் நபரின் வட்டம், பாகம் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது, வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது பெயரை செயலியில் காட்டுகிறது. "வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேர்வு செய்யும்போது தொடர்புடைய நபரின் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைக் குறிப்பிட்டால் மட்டுமே அவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார். இதனால் போலி உறுப்பினரைச் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார் கண்ணன். இதுதவிர, 'நீட் தேர்வு ரத்து, மாநிலத்துக்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் போராடுவதை ஏற்கிறீர்களா?' என்ற தொனியிலும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுவதால் கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் வேலை பார்ப்பதாகவும் கூறுகிறார் கண்ணன். தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக அமையாத கூட்டணி ஆட்சி 2026இல் அமைய வாய்ப்புள்ளதா? விஜயின் 2026 தேர்தல் திட்டம் என்ன? – திமுக கூட்டணியை குழப்பும் நோக்கமா? 'கூட்டணி யாருக்கு அவசியம்': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் vs திமுக எதிர்க்கருத்தால் கூட்டணியில் பிளவா? 'அதிருப்தியை சரிசெய்யவே பிரசாரம்' பட மூலாதாரம்,SHYAM படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "பல மாவட்டங்களில் அமைச்சர்களைச் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதை சரிசெய்வதற்கும் தொண்டர்களின் தேவையை சரிசெய்வதற்கும் தி.மு.கவுக்கு இந்தப் பிரசாரப் பயணம் உதவி செய்யலாம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எந்தக் காலத்திலும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை ஒரு கட்சியால் சரிசெய்ய முடியாது. ஆனால், அந்த அதிருப்தியை மென்மைப்படுத்த முடியும்" எனவும் குறிப்பிட்டார். "மக்களிடம் சில வருத்தங்கள் இருந்தால் அதைக் குறுகிய காலத்தில் சரிசெய்வதும் பிரசாரப் பயணத்தின் நோக்கமாக உள்ளது" எனக் கூறுகிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "பெரும்பான்மையான மக்களிடம் இந்த அரசுக்கு ஆதரவான மனநிலை தான் உள்ளது" என பிபிசி தமிழிடம் கூறிய கான்ஸ்டன்டைன், "தேர்தலுக்கு முன்பு எந்தவொரு ஆளும்கட்சியும் மக்களைச் சந்தித்ததாக வரலாறு இல்லை. அது தி.மு.கவுக்கும் பொருந்தும். தற்போது சந்திப்பதன் மூலம் ஆட்சியின் திறத்தை அளவிடலாம்" என்கிறார். "தவிர, எந்தவோர் அரசிலும் 100 சதவீத அளவு மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. அப்படி இருந்தால் ஒரே அரசு தான் தொடர முடியும். மக்கள் அதிகமாக எதிர்பார்ப்பதால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது" எனவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் பட மூலாதாரம்,AIADMKOFFICIAL/X PAGE படக்குறிப்பு, பிரசாரத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க-வைத் தொடர்ந்து, 'மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 7) தொடங்கும் தனது சுற்றுப்பயணத்தை வரும் 23 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அவர் நிறைவு செய்ய உள்ளார். இதற்காக பிரத்யேக பேருந்து ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ரோடு ஷோ ஒன்றை நடத்தி மக்களின் குறைகளைக் கேட்கவும் இந்தப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்டு வந்த 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு, தற்போது 'இசட் பிளஸ்' என மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்ரக பாதுகாப்பில் 12 கமாண்டோ வீரர்களும் 52 காவலர்களும் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். "தி.மு.க ஆட்சியை அகற்றுவதற்காக இந்த சுற்றுப்பயணம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய எடப்பாடி பழனிசாமி, "எனது பயணம் மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்று அ.தி.மு.க ஆட்சியமைக்கும்" எனக் கூறினார். "பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு?" மேட்டுப்பாளையம் பிரசார பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சி கொண்டுவந்தது. மிசா சட்டத்தில் தன்னை சிறையில் அடைத்ததாக ஸ்டாலின் சொல்கிறார். நீங்கள் மிசாவில் கைதுசெய்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்கள். நாங்கள் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு." என கேள்வி எழுப்பினார். அதிமுக எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்ன? படக்குறிப்பு, அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தமிழ்நாட்டில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது" எனக் கூறியுள்ளார். கூட்டணி என்பது தற்காலிக ஏற்பாடு எனவும் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை எனவும் அன்வர்ராஜா பேசியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "கூட்டணி தொடர்பான பல்வேறு கேள்விகளை இந்தப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டியது வரும்" எனக் கூறுகிறார். "ஒவ்வொரு கூட்டத்திலும் பா.ஜ.க தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்" எனக் கூறும் ஷ்யாம், "முதலமைச்சரிடம் கேள்வி கேட்பதில் சில சிரமங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்பதில் பிரச்னை இருக்காது" என்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. "தற்போதும் அ.தி.மு.க அணியில் பா.ஜ.க உள்ளதால் கூட்டணியில் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அப்போது எடப்பாடியுடன் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க-வில் இல்லாமல் இருப்பதை மைனஸாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம். தொடர்ந்து பேசிய அவர், "சிறையில் இருந்து வந்த பிறகு அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியிருந்தார். ஆனால், இந்த தேர்தலில் அவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் எனத் தெரியவில்லை" என்கிறார். ஆட்சி மீதான அதிருப்தி ஓட்டாக மாறுமா? படக்குறிப்பு, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி "தி.மு.க ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி தனக்கு ஓட்டாக மாறும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். ஆனால், அது முழுமையாக கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். இதனை மறுத்துப் பேசும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி, "சட்டம் ஒழுங்கை சரிவர இந்த ஆட்சியால் கையாள முடியவில்லை. அதற்கு ஆம்ஸ்ட்ராங் படுகொலை, திருப்புவனம் காவல் மரணம் என அன்றாட நிகழ்வுகளே சாட்சியாக உள்ளன. அ.தி.மு.கவின் வெற்றிக்கு இது போதுமானதாக இருக்கும்" எனக் கூறுகிறார். அதையொட்டியே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும் பிரதானமாகப் பேசப்படுகிறது. "தி.மு.க மற்றும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை" என, அக்கட்சியின் செயற்குழுவில் நடிகர் விஜய் அறிவித்தது பேசுபொருளாக மாறியது. "தங்கள் கூட்டணிக்கு த.வெ.க வருவதற்கான வாய்ப்புள்ளதாக அ.தி.மு.கவில் உள்ள ஒரு சாரார் எதிர்பார்த்தனர். செலவு செய்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் இருந்தனர். கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டதால், அவர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "விஜய்க்கு வரவேற்பு இருக்கும்" பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க தலைவர் விஜய், சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க தலைவர் விஜய், சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்தார். சென்னை பனையூரில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய எஸ்.ஆனந்த், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தப் பயணம் நடைபெற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார். "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 12,500 கிராமங்களில் கட்சியின் கொள்கைக் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன" எனவும் எஸ்.ஆனந்த் தெரிவித்தார். த.வெ.க-வுக்கு இந்தப் பயணம் பலன் கொடுக்கும் எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "திரை நட்சத்திரமாக இருப்பதால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும். தி.மு.க-வை பொறுத்தவரை எந்தக் கூட்டமாக இருந்தாலும் அது ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும்" என்கிறார். தமிழ்நாடு அரசியல் களத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்கள் முக்கியமாக உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அதன்பிறகு மழைக்காலம் தொடங்கிவிடும். ஜனவரியில் தேர்தல் பேச்சுகள் தொடங்கிவிடும்" எனக் கூறுகிறார். தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் தாமதமாக தொடங்கினால் மழையில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிருப்தி வாக்குகள் யாருக்கு? "திரைப் பிரபலம் என்ற கவர்ச்சி உள்ளதால் த.வெ.க குறித்து அ.தி.மு.க தான் கவலைப்பட வேண்டும்" எனக் கூறும் ஷ்யாம், "தி.மு.க எதிர்ப்பு வாக்கு வங்கியை த.வெ.க பிளவுபடுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார். கடந்தகால தேர்தல்களில் தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் அ.தி.மு.க மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு மடைமாறிய நிலையில், தற்போது இந்த வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்தைச் நோக்கிச் செல்லலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதி, "புதிய வாக்காளர்களின் வாக்குகளை மட்டுமே த.வெ.க பிரிக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் அ.தி.மு.க-வுக்கும் வரப் போவதில்லை" என்கிறார். "அ.தி.மு.க-வில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் த.வெ.க பக்கம் சென்றிருந்தால் மட்டும் இதைப் பற்றிப் பேசலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m8xjkv4lyo

ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்

2 months 2 weeks ago
Published By: VISHNU 07 JUL, 2025 | 08:54 PM 3 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை (07) போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கினார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இருப்பினும், புடின் எந்த காரணத்திற்காக அவரை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் என்பது இன்னும் தெரியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219434

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
"அக்காவுக்காக அர்ப்பணித்து விளையாடினேன்" - எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பின் ஆகாஷ் தீப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்." எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய உதவினார். இரண்டாவது டெஸ்டில் பந்து வீசும்போது, தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். அது அவரது மூத்த சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. போட்டிக்குப் பிறகு, ஜியோ-ஹாட்ஸ்டாருக்காக வர்ணனை செய்து கொண்டிருந்த புஜாராவிடம் ஆகாஷ் தீப் பேசினார். "உங்கள் கையில் பந்து இருக்கிறது. உங்கள் கையில் ஸ்டம்ப் இருக்கிறது. நீங்கள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளீர்கள். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்களா?" என்று ஆகாஷ் தீப்பிடம் புஜாரா கேட்டார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் தீப், "நான் யாரிடமும் சொல்லாத மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், என் அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார். "அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள், ஏனென்றால் அவள் கடந்து செல்லும் மனநிலையைக் கருத்தில் கொண்டால், இந்த மகிழ்ச்சி அவளுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்." "இந்தப் போட்டியை அவளுக்கு அர்ப்பணித்து விளையாடினேன். அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். "என்னுடைய இந்த நிகழ்ச்சி உனக்காகத்தான் சகோதரி. நான் பந்தை கையில் வைத்திருக்கும் போதெல்லாம், உன் முகம் என் கண் முன்னே இருந்தது. உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்பினேன். நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்" என்று ஆகாஷ் தீப் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அவர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப் தனது தேர்வு சரியானது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றையும் படைத்தார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 187 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பிரிட்டன் மண்ணில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பாக பந்துவீச்சாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, ஆகாஷ் தீப் ஒரு சிறப்பு உத்தியை வகுத்திருந்தார். "இந்தியாவில் இதுபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். விக்கெட்டுக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கவில்லை என்பதை பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது எங்கள் கையில் இல்லை. நான் சரியான பகுதிகளில் பந்து வீச வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில், இங்கிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு ஆகாஷ் தீப் பந்து வீசினார். அவருடைய ஒரு பந்து பெரிதும் பேசப்பட்டது. "ஆரம்பத்தில் நான் ஜோ ரூட்டுக்கு நேராக பந்துகளை வீசினேன். ஆனால் அந்த பந்தில், நான் கார்னரிலிருந்து கொஞ்சம் கோணமாக பந்து வீசினேன். அந்த பந்தில் நான் நினைத்தது நடந்தது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES லார்ட்ஸ் டெஸ்ட் பற்றி ஆகாஷ் தீப் என்ன சொன்னார்? இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாரி புரூக்கின் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார். "இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரி புரூக் தற்காப்புடன் விளையாடினார். அவர் விக்கெட்டை மறைத்து விளையாடினார். இரண்டு-மூன்று ஓவர்கள் எப்படி பந்து வீசுவது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. நல்ல பகுதியில் பந்தை கடுமையாக வீசுவதே எனது ஒரே இலக்கு" என்று ஆகாஷ் தீப் கூறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கிடைத்த வெற்றி, தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்று ஆகாஷ் தீப் நம்புகிறார். "இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அதை அனுபவிக்கிறோம். இந்த வெற்றியிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். எங்கள் பீல்டிங்கும் நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் தொடங்குகிறது. லார்ட்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், எட்ஜ்பாஸ்டனில் செய்த அதே திட்டத்துடன் பந்து வீச முயற்சிப்பேன் என்று ஆகாஷ் தீப் கூறினார். "எனது பலத்திற்கு ஏற்ப பந்து வீசுவேன். ஒரு நாள் அது பலனைத் தரும் அல்லது பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் நான் அதையே கடைப்பிடிப்பேன்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பிகாரை சேர்ந்தவர் ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் பிகார் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தில் வசிப்பவர். இருப்பினும், ஆகாஷ் தீப் ரஞ்சி டிராபியில் பிகாருக்குப் பதிலாக மேற்கு வங்கத்திற்காக விளையாடியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது. இதுவரை, ஆகாஷ் தீப் இந்தியாவுக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9k4g99j73o

விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் - சுகாதார அமைச்சர்

2 months 2 weeks ago
Published By: VISHNU 07 JUL, 2025 | 06:35 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் உள்ள விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்து எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (7) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் சிகிச்சையளிக்க வேண்டிய விபத்துகளில் சிக்க நேரிடும். ஒவ்வொரு நிமிடமும் 6-8 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வேண்டிய விபத்துகளுக்கு ஆளாகுகின்றனர். அந்தவகையில் அன்றாட வாழ்வில் நிகழும் விபத்துகளை கருத்தில் கொள்ளும் போது ஒவ்வொரு இலங்கையரும் வருடத்துக்கு ஒருமுறையேனும் விபத்துக்குள்ளாகலாம். 15 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்களே பெருமளவில் விபத்துகளில் சிக்குவதுடன், இவ்வயதினரிடையே மரண வீதம் அதிகரிப்பதற்கு விபத்துகள் முக்கிய காரணமாக உள்ளது. வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் குறிப்பிடத்தக்க தொகை விபத்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. விபத்துகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகையால் தேசிய விபத்து தடுப்பு வாரத்திற்கு ஏற்ப இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்புக்கும், ஜூலை 8 ஆம் திகதி பணியிடங்களில் இடம்பெறும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் சம்பவிக்கும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 10 ஆம் திகதி நீர் நிலை விபத்து தடுப்புகும், ஜூலை 11 ஆம் திகதி பாலர் பாடசாலை, பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலைய விபத்து தடுப்புப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில், சுகாதார அமைச்சு விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்யவது எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219425

சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

2 months 2 weeks ago
07 JUL, 2025 | 06:00 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (7) மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இதன்போது நடைபெற்றது. அவ்வேளை, படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின்போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர். பின்னர், அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர் எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். கடந்த யுத்த காலத்தில் சம்பூர் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 1. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி (அதிபர்) 2. இராசேந்திரம் பத்மநாதன் (உயர்தர மாணவன்) 3. பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு (தரம் 7 மாணவன்) 4. மயில்வாகனம் பிரேமானந்தராஜா (உயர்தர மாணவன்) 5. கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்) 6. மனகசிங்கம் நித்தியசீலன் (தரம் 7 மாணவன்) 7. ச.கனகசிங்கம் 8. கனகசூரியம் சண்முகராஜா (தரம் 10 மாணவன்) 9. ஒப்பிலாமணி இந்திரன் 10. முத்துக்குமார் விஜயகுமார் (தரம் 10 மாணவன்) 11. முத்துக்குமார் விஜயகாந்தன் 12. வைரமுத்து வெற்றிவேல் 13. சங்கரலிங்கம் உதயநாதன் 14. தங்கராசா தில்லைநாயகம் 15. பேச்சுமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்) 16. கணபதி கானசரஸ்வதி 17. க.பேச்சிமுத்து (பரியாரியார்) 18. இ.சொக்கன் 19. இ.ஜெகதீஸ்வரன் 20. இராசேந்திரம் (கூனித்தீவு) 21. இராசேந்திரம் வாமதேவன் (தரம் 10 மாணவன்) 22. சுப்பிரமணியம் விநாயகநேசன் 23. வைரமுத்து சுப்பிரமணியம் 24. கணபதிப்பிள்ளை செல்வராசா (பொலிஸ் உத்தியோகத்தர்) 25. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை) 26. வைரமுத்து அழகம்மா 27. பொன்னுத்துரை அரசரெத்தினம் 28. பொன்னுத்துரை கதிர்காமத்தம்பி 29. முருகேசுப்பிள்ளை கணேசலிங்கம் 30. பியதாச சோமதாஸ் 31. பியதாச கருணதாஸ் 32. வீ.அரசமணி 33. இ.ரவிநேசன் 34. இ.சிவநேசன் 35. சி.சிங்கராசா 36. சி.கோணலிங்கம் 37. சி.கவிரூபன் 38. கோ.நாகரெத்தினம் 39. ந.அருணாச்சலம் 40. க.யோகநாதன் 41. சித்திரவேல் குணராசா 42. சித்திரவேல் மாணிக்கராசா 43. தாமோதிரம்பிள்ளை சிவகுமார் 44. இ.நிர்மலநாதன் 45. வீரசிங்கம் யோகாம்பிகை 46. வீரசிங்கம் ஜீவசாந்தி 47. பரணி 48. பரமானந்தம் 49. அல்லிராசா (சூடைக்குடா) அவருடைய மகன்கள் இருவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த காளி கோவில் பூசகர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். https://www.virakesari.lk/article/219418

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது

2 months 2 weeks ago
பிள்ளையானும், இனிய பாரதியும்.... தம்மை ஏவி விட்ட, சிங்களத் தலைமைகளை காட்டிக் கொடுத்தால், அனுர அரசில் தண்டனை குறைவாக கிடைக்கலாம். ஆனால் இந்த ஊத்தைவாளிகள்... தமிழரைத்தான் காட்டிக் கொடுக்குமே தவிர, சிங்களவனை காட்டிக் கொடுக்காதுகள். அதுகளின் டிசைன் அப்பிடி.

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

2 months 2 weeks ago
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை “நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.” “எனக்குக் கத்னா செய்யப்பட்டது பற்றி நான் முதன் முதலில் அறிந்தபோது, நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்தேன். என்னுடைய அனுமதியின்றி என் உடலில் ஏதோ ஒரு விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யாரின் மீது கோபப்படுவேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் என் மீதே கோபமடைந்தேன்.” இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள். பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர். சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது. அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது. சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும். இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.” https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf தகவல் உதவி - maatram கவ்வாது கேள்விப் பட்டிருக்கிறன்...அதென்ன கத்னா....

இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை

2 months 2 weeks ago
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள் Sunday, July 06, 2025 கட்டுரை “நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.” “எனக்குக் கத்னா செய்யப்பட்டது பற்றி நான் முதன் முதலில் அறிந்தபோது, நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்தேன். என்னுடைய அனுமதியின்றி என் உடலில் ஏதோ ஒரு விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யாரின் மீது கோபப்படுவேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் என் மீதே கோபமடைந்தேன்.” இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல் நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள். பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர். சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக, தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது. கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில் கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது. அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற, தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது. சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும். இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.” https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf தகவல் உதவி - maatram கவ்வாது கேள்விப் பட்டிருக்கிறன்...அதென்ன கத்னா....

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் — கருணாகரன் —

2 months 2 weeks ago
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க. நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் ‘அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாக, மக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதை, பரந்த சிந்தனையை, அவர் விளையும் புதிய அரசியலை, செழுமையான பண்பாட்டுச் சூழலை, புதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று எழுதினேன். கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம். இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும். இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே. செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள். இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது. எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்… இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது. அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ, நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது. ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது. ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம். இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன். செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது. என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது. நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது. ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர். அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும். “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா? குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர். இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே! இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது? ‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும். ‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!! ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு? ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம். நிச்சயமாக அப்படியில்லை. இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை. ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம். இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது. ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும். இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது. சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும். அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது. இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும். இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்.. புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான். https://arangamnews.com/?p=12141
Checked
Sat, 09/27/2025 - 00:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed