புதிய பதிவுகள்2

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

2 months 2 weeks ago
நான் என்ன எழுதினேன், நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் அண்ணை? ஓரு அரைபைத்தியம் பள்ளி சிறுமிகளை (18 வயதுக்கு கீழானவர்களை) கர்ப்பம் தரிக்க உதவி தொகை கொடுக்கிறது, அதை நீங்கள் நல்ல விடயம் என்கிறீர்கள். ஒரு மைனர் பெண் குழந்தை இன்னொரு குழந்தையை சுமப்பதை நல்ல விடயம் என்றா சொல்கிறீர்கள்?

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 2 weeks ago
இந்தியாவும் தமிழ் நாடும் அப்படித்தான் ஐயா, பெரியவரே. ஆனால் பாலகன் நான் சொல்ல வந்தது - இப்படியான கொலைகள் நடக்கும் போது முன்னர் இருந்த அரச அலட்சியம் இங்கே இல்லை. மாறாக ஒரு மாநில அரசு செய்ய கூடிய, வேண்டியதை தா நா அரசு செய்துள்ளது. 🤣 ஈ வே ரா வோ…. வே. பி யோ…. நல்லதை நல்லதெனவும், அல்லதை அல்ல எனவும் சொல்லியே பழக்கம். அப்படி சொல்லும் போது எந்த வண்ணத்தை எவர் தீட்டினாலும் பரவாயில்லை 🤣.

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

2 months 2 weeks ago
தவறு கர்ப்பமாகுமாறு ஊக்குவிக்கப் படும் பள்ளி மாணவிகளின் வயதில் இருக்கிறது. பள்ளி மாணவிகள் என்றால் அதிக பட்சம் 18 வயது தான் அனேக நாடுகளில் வரும். ரஷ்யாவின் தூர தேசங்களான சைபீரியாவில் இன்னும் வறுமை, வேலையின்மை என்பன இருக்கின்றன. இந்தப் பிரதேசங்களில் "மாட்டுப் பட்டிருக்கும்" பள்ளி மாணவிகள் பொருளாதாரம் நாடிக் கர்ப்பமாக ஆரம்பித்தால் ரஷ்யாவின் அனாதைக் குழந்தைகள் இல்லங்களில் தேங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ரஷ்யாவில் பல அனாதைக் குழந்தைகள் இல்லங்கள் இருக்கின்றன என்பதும்,அங்கேயிருந்து மேற்கு நாட்டினர் குழந்தை தத்தெடுப்பது வழமையென்பதும் உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றிய அக்கறை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. நீங்களோ வழமை போல நீங்கள் சிறிலங்காவில் இருந்த போதே உங்களுக்கு சோறு போட்ட மேற்கு நாட்டினரைத் திட்டுவதில் குறியாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 2 weeks ago
ஜந்து வயதை கடக்கவுமில்லை, ஆடையுமில்லை.. அப்படியொரு ஆனந்தம் புத்தரின் பிள்ளைகளுக்கு. Alex Aravinth

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

2 months 2 weeks ago
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி ‘இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ எனவும் வாதாடினார். நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ‘நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார். அதேசமயம் பொலிஸாரின் தரப்பில் ‘இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார். இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து உத்தரவிட்டது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் பிணை அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். https://athavannews.com/2025/1438500

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!

2 months 2 weeks ago
வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கான விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 பெறுதியான மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம், வைத்தியர் அதிகாரப்பூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது. அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438441

ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு

2 months 2 weeks ago
ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு. ”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வான் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சாரதி மற்றும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த கனிமொழி ” ‘கடலூரில் பாடசாலை வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன். இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை” இவ்வாறு கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438465

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2 months 2 weeks ago
இந்த ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை! இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 1,204,046 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எடுத்துக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. SLTDA இன் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். அதன்படி, அந்த மொத்த எண்ணிக்கை 250,047 ஆகும். மேலும், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 112,732 ரஷ்ய நாட்டவர்களும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 111,464 நபர்களும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1438467

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!

2 months 2 weeks ago
ஶ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை விஷேட வைத்தியர் மகேஷி விஜேரத்ன விளக்கமறியல் நீடிக்கப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்படும் இன்றைய காட்சி! இவர் தன்னை சார்ந்த தனியார் நிறுவனம் மூலம் ரூ. 50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு ரூ. 175,000 இற்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார். நோயாளிகளுக்கு இதனால் ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இவர், பல நாட்களாக மூளைச் செயலிழப்பு என அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு மோசடி செய்தமையும் அண்மையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இவரது 21 வயது மகளும் கைது செய்யப்பட்டுள்ளமையும் மேலும் குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு!

2 months 2 weeks ago
இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ள நிலையில், குறித்த கணக்கெடுப்பானது முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடக்காமல் போனது. அதன்பின்னர் நீண்ட காலமாக இப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? ஏப்ரல் 2026 முதல் வீடுகளை கணக்கெடுக்கும் பணியும், பெப்ரவரி 2027 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பும், அதோடு சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் மத்திய அரசின் கணக்கெடுப்பு செயலியை பயன்படுத்தி நேரடியாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுக்க உள்ளனர். இவை மத்திய சர்வரில் (server) பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படும். ஆங்கிலம் மட்டுமல்லாது அனைத்து மாநில மொழிகளிலும் இந்த செயலி பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதில் பொதுமக்களே தங்கள் பெயர் விவரங்களையும் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438391

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 2 weeks ago
சம்பந்தனை... செத்த பிறகுதான் தமிழ்ச் சமூகம் மறந்தது... ஆனால், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானத்தை... உயிரோடு இருக்கும் போதே, தமிழ்ச் சமூகம் மறந்து விட்டது.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months 2 weeks ago
தேவிகாவின் நடையைப் பார்த்தீர்களா Suvy? இடை இருக்கிறதா? அல்லது இல்லையா? “பிரமீளா என்ற தேவிகா எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கின்றார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று ஒரு தடவை கண்ணதாசன் பொது வெளியில் சொல்லப் போக, ஒரு கிசுகிசு அப்பொழுது ஓட ஆரம்பித்திருந்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் புதிய வீடுகள்

2 months 2 weeks ago
தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்! தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழக மாநில செயலகத்திலிருந்து காணொளி மூலமாக இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. 38.76 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகள் விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் அமைந்துள்ளன. இந்த வீடுகள், மாநிலம் முழுவதும் பரவியுள்ள இலங்கைத் தமிழ் முகாம்களில் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2021 ஆகஸ்ட் மாதம் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் பரந்த மறுவாழ்வு முயற்சியின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின்படி, 35 மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 180.34 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில், 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் 2,781 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முகாம்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதில் புதிய உள் வீதிகள், மேம்படுத்தப்பட்ட மின்சார இணைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக வசதிகள் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் உள்ள 67 அரசு முகாம்களில் பல தசாப்தங்களாகத் தங்கள் தாயகத்தில் இன மோதலில் இருந்து தப்பி ஓடிய இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதற்கான திமுக அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த மறுவாழ்வுத் திட்டம் இருப்பதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438462

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு

2 months 2 weeks ago
ஈழத்திற்கு ஆதரவாக இருந்த/இருக்கும் தமிழக உறவுகளை,பிரபல்யங்களை விமர்சிக்கலாம் ஆனால் எதிர்க்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு.

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!

2 months 2 weeks ago
சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்! சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் ஜனாதிபதி ஆவார். மேலும் சீன ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தவகையில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் 2012, 2018, 2023 என தொடர்ச்சியாக 3 தடவைகள் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது. எவ்வாறு இருப்பினும் கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஸி ஜின்பிங் திடீரென்று மாயமானார். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக ஜனாதிபதியாக இவர் பெரும் பங்கு வகித்தார். இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும். தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங். இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது. வாங் யாங்கை ஜனாதிபதி பதவியில் வைத்து கொண்டு மறைமுக ஜனாதிபதி செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பித்தக்கது. இந்நிலையில் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2025/1438407
Checked
Sat, 09/27/2025 - 03:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed