2 months 2 weeks ago
மறுபதற்கில்லை விசுகு. இதை மேலே நானும் குறிப்பிட்டிருக்கிறேன். “ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக்காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன்என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப்பிரித்துப் பார்க்கிறோம்” சத்தியராஜ் ஈழத்தமிழருக்கு தேவையில்லாத ஆணி. ஆளும் கட்சி எதுவானாலும் ‘ஜால்ரா’ அடிக்கும் ஆள்தான் அவர் என்பதை அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். இப்பொழுது தனது மகளையும் திமுகவில் இணைத்திருக்கிறார். அதுதான் அவரது அரசியல். அவரது அரசியல் எனக்குத் தேவையில்லாதது. முடியுமானால், ஈழத் தமிழ் கடலில் அத்துமீறி நுளைந்து மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தைஅழிக்காதீர்கள்” என்று தமிழக மீனவர்களுக்குச் சொல்லட்டும்
2 months 2 weeks ago
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் ! அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தையும் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கினார். ‘நோபல் பரிசுக் குழுவிற்கு தான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனவும் அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது எனவும் கூறி அந்த கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார். https://athavannews.com/2025/1438413
2 months 2 weeks ago
வழமை போல புட்டினார் ரோமன் அவர்களை போட்டுத்தள்ளி விட்டார்.🤣 கோசானின் கருத்து முன்னோட்டம். 😎
2 months 2 weeks ago
இந்தச் செய்தி இன்னும் @goshan_che கண்ணில் படவில்லை என்பது பெரிய நிம்மதி. 😂
2 months 2 weeks ago
பெரிதாக வரவில்லை என்றால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்று அர்த்தம். போருக்கு முன்னரும், போர் நடந்த காலத்திலும், போர் முடிந்து ஒரு தசாப்த காலத்திலும் நடந்தவை இப்பொழுது இல்லை. பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது சிங்கம். தமிழர் பகுதிகளில் இருந்து சிங்களக் கட்சிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்புகிற காலத்தில் இருக்கிறோம். கனக்க ஏன்? தமிழ் சிறி கூட சிங்கள சிறிலங்கா நாட்டுக்குப் போய் ஆப்பம்,பொல் சம்பல்,கிரிபத் என நன்றாக சாப்பிட்டு அனுபவித்துவிட்டு வரும் போது கடுகு முதல் கட்டாப்பாரை கருவாடுவரை கட்டிக் கொண்டு வரவில்லையா? அவ்வப்போது பேரினவாத த்துக்கு எதிராக ஏதாவது வடிவமைக்கிறேன். சில வேளை இந்த இணைப்பில் உங்களுக்கு ஏதாவது தட்டுப்படலாம். https://yarl.com/forum3/gallery/album/204-கிறுக்கல்கள்/ பார்க்கவில்லை. சசிகுமார் நடித்த Freedom திரைப்படம் 10ம் திகதி திரைக்கு வருகிறது. ஈழத்தமிழர் சார்ந்த கதை. எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து அவற்றை எதிர்த்து கதையில் நாயகன் போராடினாலும், இந்திய,தமிழ்நாட்டுப் பொலிஸாரை நல்லவர்களாகக் காட்டி படம் முடிவடையும். இறுதியாக, சத்தியராஜ் என்ற நடிகர் அப்பழுக்கற்ற 100 சதவீத சந்தர்ப்பவாதி இது என் கருத்து. நல்லது கந்தப்பு,(முருகப்) பெருமாள் (எல்லாம் முருகனைச் சார்ந்த பெயர்களாகவே இருக்கிறது) இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு என் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் மேற்கொண்டு என்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை. என் வழியில் என் பயணம் இருக்கும்.
2 months 2 weeks ago
ரஷ்யாவில் புதின் பதவி நீக்கிய அமைச்சர் மர்ம மரணம் - என்ன நடந்தது? முழு பின்னணி பட மூலாதாரம்,VLADIMIR SMIRNOV/TASS படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டிற்கு 53 வயதாகியிருந்தது 25 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஸ்டாரோவோய்ட்டை அதிபர் விளாடிமிர் புதின் திங்கள்கிழமை பதவி நீக்கம் செய்திருந்தார். அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதன் பின் சற்று நேரத்தில் போக்குவரத்து துணை அமைச்சர் ஆண்ட்ரேய் நிக்கிடின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது இந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய முயற்சிப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஸ்டாரோவோய்ட் இறப்பு பற்றிய அறிவிப்புக்கு முன், ரஷ்ய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர்கள் ஸ்டாரோவோய்ட் பற்றி கேள்வி எழுப்பினர். குர்ஸ்கில் நடைபெற்ற சம்பவங்களால் ஸ்டாரோவோய்ட் மீது அதிபர் புதின் நம்பிக்கை இழந்துவிட்டாரா? என்பதுதான் கேள்வி. இதற்கு பதிலளித்த பெஸ்காவ், "நம்பிக்கை இழந்திருந்தால், அது அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் போன்ற வார்த்தைகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை." ஸ்டாரோவோய்ட் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் உயிரிழந்திருக்கலாம் என விசாரணை முகமையுடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஃபோர்ப்ஸ் பதிப்பகம் எழுதியுள்ளது. ஸ்டாரோவோய்ட் "நீண்ட காலத்திற்கு முன்னரே" உயிரிழந்துவிட்டதாக ஸ்டேட் டூமாவின் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை) பாதுகாப்பு குழுவின் தலைவர் ஆண்ட்ரேய் கார்டபோலோவ் ரஷ்ய ஊடகமான ஆர்.டி.வி.ஐ. யிடம் தெரிவித்தார். ஆனால் ஸ்டாரோவோய்ட் திங்கள்கிழமை தனது காருக்கு அருகே சில மீட்டர் தொலைவில் இருந்த புதருக்கு பின்னால் உயிரிழந்து கிடந்ததாக ஆர்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட ஒடிண்ட்சோவோ வாகன நிறுத்துமிடத்தில் விசாரணை குழுவினர் வேலை செய்துகொண்டிருக்கும் புகைப்படங்களும், காணொளியும் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்ட் குர்ஸ்க் பகுதிக்கு ஐந்து ஆண்டுகளாக ஆளுநராக இருந்தார் ஸ்டாரோவோய்ட் 2024 மே மாதத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பில் சுமார் ஒரு வருடம் நீடித்தார். முன்னதாக அவர் யுக்ரேன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதி ஆளுநராக சுமார் ஐந்து ஆண்டுகள் இருந்தார். அவருக்கு பின்னர் அலெக்ஸி ஸ்மிர்னாவ் அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக ஸ்மிர்னாவ் குர்ஸ்க் அரசின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். ஊடகம் மற்றும் டெலிகிராம் சேனல்களின் கூற்றுப்படி, ஸ்டாரோவோய்டுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடும். முன்னாள் அமைச்சர் ஸ்டாரோவோய்ட்டுக்கு எதிராக ஸ்மிர்னாவ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுவதாக 'காமர்சண்ட்' எழுதியுள்ளது. ஆர்.பி.சி வெளியீட்டின் கூற்றின்படி குர்ஸ்க் பகுதியை பலப்படுத்தும் கட்டுமானப் பணிகளில் ஸ்டாரோவோய்ட் ஊழல் செய்தாரா என ஒரு விசாரணை நடைபெற்று வருகிறது. 2019-ல் குர்ஸ்க் ஆளுநரானார் ஸ்டாரோவோய்ட் குர்ஸ்க்கில் 1972ஆம் ஆண்டு பிறந்தார். சிறிது காலத்திற்கு பிறகு அவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு குடிபெயர்ந்தது. அவர் தனது அரசியல் பயணத்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து தொடங்கினார். வாலண்டினா மாட்வியென்கோ அங்கு ஆளுநராக இருந்தபோது, ஸ்டாரோவோய்ட் அவரது குழுவில் ஒரு அங்கமானார். ஸ்டாரோவோய்டிற்கு முதலில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வாகன தொழிற்சாலைகளின் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் நகரில் நடைபெற்ற முக்கிய கட்டுமானப் பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார். பின்னர் விளாடிமிர் புதின் தலைமையில் இயங்கி வந்த ரஷ்ய அரசின் தொழில் மற்றும் கட்டமைப்புதுறையில் ஸ்டாரோவோய்ட் இணைந்தார். அந்த காலகட்டத்தில், ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகளிலும் அவருக்கு தொடர்பு இருந்தது. 2012ஆம் ஆண்டில் (ரஷ்யாவில் சாலை அமைக்கும் முகமையான) ரோஸவ்டோடரின் தலைவராக ஸ்டாரோவோய்ட் நியமிக்கப்பட்டார், 2018-ல் அவர் போக்குவரத்து துறையின் துணை தலைவரானார். 2018 அக்டோபரில் அவர் குர்ஸ்க் பகுதியில் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிபிசி ரஷ்ய சேவை செய்தியாளர் கூறியது என்ன? பட மூலாதாரம்,TASS படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் புகைப்படங்களை பல முகமையில் வெளியிட்டுள்ளவெளியிட்டுள்ளன ரோமன் ஸ்டாரோவோய்ட்டின் மரணம் புதினின் ரஷ்யாவுக்கு ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஸ்டாரோவோய்ட்டின் கதை, சோவியத் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த நிகொலாய் ஷ்செலோகோவின் கதையை நினைவுப்படுத்துகிறது. ஷ்செலோகோவ் பதவி விலகிய பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டார். 1984 டிசம்பரில் அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்ட பின்னர் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். பட மூலாதாரம்,TASS படக்குறிப்பு, ரோமன் ஸ்டாரோவோய்டின் கார் அருகே புலனாய்வு குழு ரஷ்ய அரசு முகமைகளின் கூற்றுப்படி, 2022-2023ஆம் ஆண்டு குர்ஸ்க் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றது. ஸ்டாரோவோய்ட் அப்போது அந்தப் பகுதியின் ஆளுநராக இருந்தார். அவரது முன்னாள் துணை அமைச்சர் அலெக்ஸி ஸ்மிர்னாவின் கைதுக்கு பின்னர், ரோமன் ஸ்டாரோவோய்ட் கடந்த மூன்று மாதங்களை அச்சத்திலும் எதிர்காலம் குறித்த கவலையிலும் செலவிட்டதாக நம்பப்படுகிறது. ரஷ்யாவில் கைது செய்யப்படுபவர்கள் தங்களுக்கு மேலான பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பது வழக்கமான ஒன்று. ஸ்டாரோவோய்ட் இதைக் குறித்தும் கவலை கொண்டிருக்கலாம். இதுவரை, தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு இருக்கும் செல்வாக்கு தங்களை காப்பாற்றும் என பெரும்பாலான அதிகாரிகள் நம்பி வந்திருக்கின்றனர். சிலர் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் பகுதியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் (மிகெயில் யுர்யெவிக், மற்றும் அவருக்கு பின்னர் பதவியேற்ற போரிஸ் டப்ரோவ்ஸ்கி) ஏற்கனவே இதை செய்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2vp4rqye7o
2 months 2 weeks ago
08 JUL, 2025 | 12:08 PM செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது என சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார் நேற்றைய நாள் அகழ்வின் முடிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய தினம் 12வது நாளாகவும் அகழ்வு நடைபெற்றது, நிபுணர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அத்துடன் புதியதொரு இடத்தையும் கண்டுபிடித்து அகழ்வாராச்சி இடம்பெறுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மீட்கப்பட்டுள்ள கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் யாவுமே ஒரு குறைந்தளவு - அதாவது ஒன்றரையடிக்குள்ளான ஒரு இடத்தில் புதைத்திருக்கின்றார்கள். இது சாதாரணமாக உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக தெரியவில்லை, மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக தெரியவில்லை அதற்கு மாறாக ஏனோதானோ என்று அவசர அவசரமாக சடுதியாக செய்யப்பட்ட விடயமாக தெரிகின்றது. சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது . இந்த விடயத்தில் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219463
2 months 2 weeks ago
08 JUL, 2025 | 11:11 AM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - 071 8591882 பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி - 071 8592067 பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் - 071 8592714 பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் - 071 8591883 Hunting இலகுவான தொலைபேசி இலக்கம் - 011 2887973 வாட்ஸ்அப் இலக்கம் - 071 8592802 பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையவழி முகவரி - http://www.police.lk/ பொலிஸ் முகநூல் பக்கம் - (https://www.facebook.com/srilankapoliceofficial) பொலிஸ் யூடியூப் - (https://www.youtube.com/@srilankapoliceofficial) பொலிஸ் எக்ஸ் (X) தளம் - https://x.com/SL_PoliceMedia?fbclid=IwY2xjawJtQNtleHRuA2FlbQIxMAABHvHLAIRrlUPeQeM0ReDB_ywX7_qDJjgTZYxUFaSzSHcLH9TVEUmCTZu8ewUw_aem_LYvQlcoYckoWxnjZgQkubw பொலிஸ் டிக்டோக் - https://www.tiktok.com/@sri_lanka_police?is_from_webapp=1&sender%20device=pc பொலிஸ் மின்னஞ்சல் முகவரிகள் - dir.media@police.gov.lk / oic.media@gov.lk / policemedia.media@gmail.com பொலிஸ் தபால் இலக்கம் - பொலிஸ் ஊடகப் பிரிவு, 14ஆவது மாடி, சுஹுருபாய, பத்தரமுல்லை , கொழும்பு மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகள் ஊடாக பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219459
2 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 08 JUL, 2025 | 01:03 PM மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா? அல்லது சேர்க்கப்படவில்லையா என்பதைச் அறிந்து கொள்ள ஒன்லைன் போர்ட்டல் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த போட்டல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் வாகனப் புகை பரிசோதனை விதிமுறைகளை அமல்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சேவையாகும். அதன்படி, வாகன உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ Vet.lk இணையத்தளம் மூலம் தங்கள் வாகன நிலை பற்றி அறிந்து கொள்ள கொள்ளலாம். இந்த போட்டலில் வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து தங்கள் வாகனங்களின் கருப்புப் பட்டியலில் உள்ளதா என அறிய முடியும். வாகன உரிமையை மாற்றும் போது ஏற்படும் சிக்கல்களைத் தடுத்தல், தீர்க்கப்படாத போக்குவரத்து விதி மீறல்களைத் தீர்த்தல மற்றும் வாகனங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள விசாரணைகளை நிர்வகித்த்ல ஆகியவை இதன் நோக்கமாகும். அதிகளவான புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் காண, புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறியும் திட்டம் மற்றும் வீதியோர வாகன சோதனைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் தீவிரமாக நடத்துகிறது. அத்தகைய வாகனங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதங்கள் மூலம், வேராஹெரா மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்காக தங்கள் வாகனங்களை கொண்டுவருமாறு அறிவிக்கப்படும். இந்த அறிவிப்புக்களை செவிமெடுக்க தவறினால், வாகனம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன், வாகனம் ஒன்றின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் சான்றிதழ் மற்றும் வருமான உரிமம் சோதனை மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்கு உட்படும் வரை புதுப்பிக்கப்படாது. மேலும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாகனம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, வாகனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ சேவைகள் அல்லது பரிவர்த்தனைகளையும் நிறுத்துகிறது. அனைத்து வாகன உரிமையாளர்களும், குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குபவர்கள், சட்ட அல்லது நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்க இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாகனத்தின் நிலையை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் www.vet.lk என்ற உத்தியோகபூர்வ இணைய சேவையை அணுகி சரிபார்க்கலாம்: உங்கள் வாகனம் கருப்புப் பட்டியலில் உள்ளதா? https://www.virakesari.lk/article/219467
2 months 2 weeks ago
அண்ணை, அந்த சிங்கங்கள் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதும் பூனைகளாக மாறிவிடுகிறார்களே?!
2 months 2 weeks ago
மெய்ப்புப் பார்த்தல் சரிபார்ப்பு மெய்ப்பு நோக்குதல் https://ta.wiktionary.org/wiki/proofreading
2 months 2 weeks ago
இலங்கை நாடுதான் உலகில் முதன்முதல் விமானத்தைக் கண்டுபிடித்தது. அதனை ஓட்டிய விமானியின் பெயர் இராவணன்.🧐
2 months 2 weeks ago
உங்கள் விளக்கத்திற்கு நன்றி இப்படி பார்த்தால் நாம் யாருமே சுத்தமில்லை. தமிழகத்தில் இருந்து சுத்தத்தை எதிர்பார்க்கும் நாம் , நாம் வாழும் நாட்டில் பத்தாய் நூறாய் ....?
2 months 2 weeks ago
நடையா இது நடையா ....... ! 😍
2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா பெண் : கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன ஆண் : நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன ஆண் : சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா பெண் : கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் .......... ! --- தவமின்றி கிடைத்த வரமே ---
2 months 2 weeks ago
✅ சரி, பிழை பார்ப்பவர். 😂
2 months 2 weeks ago
அவர் தம் மக்களுக்கு எல்லாம் செய்தார் . ........... தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் .......... நினைவில் வைத்திருப்பதற்கு .......! 😒
2 months 2 weeks ago
இதில் என்ன அதிசயம் .......... இங்கும் வீடு , பணம் , நகை , கார் எல்லாம் குடுத்து சிங்கங்களை கட்டி வைத்திருப்பது உங்களின் கவனத்துக்கு வரவில்லைப் போலும் ....... ! 😂
2 months 2 weeks ago
தகவல் சரிபார்ப்பவர் என்றுநினைக்கிறேன்
2 months 2 weeks ago
இங்க கனபேர் கூட்டமாச்சேர்ந்து திமுகாவிற்கு நல்லா முட்டுக்குடுக்கினம் பாருங்கோ சாமியார்!! ஈவேராவின் பக்தர்கள்!!
Checked
Sat, 09/27/2025 - 03:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed