2 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் பிபிசி நியூஸ் முண்டோ 6 ஜூலை 2025 சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார். அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது. வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார். திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக, 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார். 'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்: குழந்தைகள் (இறைவன் நாடினால்). உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்). விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது). வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும். இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும். "இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார். "அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: "லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்." பின்னர் அவர் 'திருமணம் செய்யாதீர்கள்' என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்: எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம். மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது. கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல். உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்). நேர விரயம். மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது. உடல் பருமன் மற்றும் சோம்பல். பதற்றம் மற்றும் பொறுப்பு. புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம். உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது). ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில் சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம். தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: "எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு." திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்? ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: "திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னரா?" "நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு" சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது. "முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது" ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார். நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார். "என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை" என்று அவர் எழுதினார். ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: "உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது." மேலும், "கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்." என்றும் குறிப்பிட்டார். நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், "மிகவும் சிறந்த நாள்!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். எம்மாவின் "சம்மதம்" மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல. டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், டார்வினின் 'திருமண ஆசை மற்றும் முன்மொழிவு' எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார். ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான "கிரேட் வைவ்ஸ்"-இல் சுட்டிக்காட்டுகிறார். தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது. பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது. அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது. 'எம்மா- ஒரு அற்புதமான துணைவி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டவுன் ஹவுஸ் தோட்டத்தில் சார்லஸ் டார்வின் (1870). இங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை நடைபயிற்சி மற்றும் சிந்திப்பதில் செலவிட்டார். இந்த வீட்டில்தான் அவர் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர். அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார். மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றியது. டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார். அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார், பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது. ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது. 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும். ஒரு காதல் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேரா (1902-1991) விளாடிமிர் நபோகோவ் (1899-1977) உடன், 1923இல் பெர்லினில். ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது. வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார். வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளைச் சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார். கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார். ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு 'மோசமான இல்லத்தரசி' என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார். மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார். 12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான "லோலிடா" வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார். பின்னர் அவர் எழுதினார்: "என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது." வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார். அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை 'லெட்டர்ஸ் டு வேரா' என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட "தி க்ரூட்ஸர் சொனாட்டா" என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது. அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார். அவர் "அன்னா கரேனினா"-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார். "தி க்ரூட்ஸர் சொனாட்டா"வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார், வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார். "பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மைச் சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்," என்று அந்தக் கதாபாத்திரம் கூறும். டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரைக் காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார். டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாகப் பார்க்கலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டால்ஸ்டாயின் சீடர்கள் சோபியாவை ஒரு மந்தமான, அறிவற்ற பெண்ணாக, பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டவராக சித்தரித்தனர். டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது. சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார். டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாண்டார். மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார். இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட "போர் மற்றும் அமைதி" (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார். 'தி க்ரூட்ஸர் சொனாட்டா' வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார். அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார். எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது. எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார். 'சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக' செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார். அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார். டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது. ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார். "நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்." என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார். "எல்லோரும் கேட்கிறார்கள், 'ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று" எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, "அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், 'எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20w9wqqexgo
2 months 2 weeks ago
செம்மணி புதைகுழியும் அம்மணியின் ஆட்சியும்! இன்றுவரை (06/07/2025) செம்மணியில் 47,தமிழரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு. 1994, நவம்பர்,12 தொடக்கம் 2005, நவம்பர்,19 வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர் சமாதானப்புறா என அழைக்கப்பட்ட சந்திராகா குமாரதுங்க அவர் காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை விபரம்: 1. 1995,யூலை,09, நவாலி தேவாலய படுகொலை-131, தமிழர்கள். 2. 1995, செப்டம்பர்,22,நாகர்கோயில் பாடாசாலை படுகொலை-137, தமிழர்கள். 3. 1996, செம்மணிப்படுகொலை-140, தமிழர்கள். 4. 1996,பெப்ரவரி,11, குமரபுரம் படுகொலை -143, தமிழர்கள். 5. 1996, மார்ச்,16,நாச்சிக்குடா படுகொலை -146, தமிழர்கள். 6. 1996, மே,17,யாழ் தம்பிராஜ் சந்தை குண்டுவீச்சு-148, தமிழர்கள். 7. 1996,யூலை,24-மல்லாவி படுகொலை -150, தமிழர்கள். 8. 1996, செப்டம்பர்,07, கைதடி கிரிசாந்தி உட்பட தமிழினப்படுகொலை படுகொலை-151, தமிழர்கள். 9. 1996, செப்டம்பர்,1997, ஆகஷ்ட்,15, இரண்டு தினங்கள் வவுனிக்குளம் படுகொலை -160, தமிழர்கள்.1998 10. 1996, செப்டம்பர்,27, கோணாவில் குண்டு வீச்சு படுகொலை-153, தமிழர்கள். 11. 1997, மே,13, முள்ளிவாய்க்கால் படுகொலை-155, தமிழர்கள். 12. 1997, யூண்,08, மாங்குலம் செல்வீச்சு படுகொலை-156, தமிழர்கள். 13. 1997, யூலை,05, பன்னங்கட்டி படுகொலை-158, தமிழர்கள். 14. 1997,யூலை,15, அக்கிராசன் அரசினர் வைத்தியசாலை படுகொலை-159, தமிழர்கள். 15. 1998,பெப்ரவரி,01, தம்பலகாமம் படுகொலை-162, தமிழர். 16. 1998, மார்ச்,26,பழைய வட்டக்கச்சி படுகொலை -163, தமிழர்கள். 17. 1998, யூண்,10, சுதந்திரபுரம் படுகொலை -165, தமிழர்கள். 18. 1998, கிளிநொச்சி நகர் படுகொலை-142, தமிழர்கள். 19. 1998, நவம்பர்,25,விசுமடு படுகொலை -167, தமிழர்கள். 20. 1998, டிசம்பர்,02, சுண்டிக்குளம் படுகொலை-169, தமிழர்கள். 21. 1999, செப்ரம்பர்,15,மந்துவில் படுகொலை-169, தமிழர்கள். 22. 1999,நவம்பர்,03, பாலிநகர் படுகொலை -172, தமிழர்கள். 23. 1999, நவம்பர்,20, மன்னார் மடுதேவாலயம் படுகொலை- 173, தமிழர்கள். 24. 2000, அக்கோடபர்,25, பிந்துனு வெவ படுகொலை- 177, தமிழர்கள். 25. 2000, டிசம்பர்,11, மிருசிவில் படுகொலை -180, தமிழர்கள். ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி 11, வருடங்கள் அதில் முக்கியமான 25, படுகொலைகள் அவரின் ஆட்சியிலேயே இடம்பெற்றது. சந்திரிகாவின் ஆட்சிக்கு முன்பிருந்த ஐனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர். பிரமதாச, டி வி.விஜயதுங்க, சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து கைமாறிய மகிந்தராசபக்ச, காலத்து இனப்படுகொலைகள் பற்றிய விபரம் இன்னும் ஒரு பதிவில் எதிர் பாருங்கள்.. தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி, சிந்துப்பாத்தி இந்துமயாணத்தில் தோண்டப்படும் புதைகுழிகளில் இருந்து இதுவரை சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என 40, க்கு மேற்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவைகள் அனைத்தும் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந்தவை என கூறப்படுவதால் அவருடைய ஆட்சிக்கால படுகொலைகள் மட்டும் அறிவதற்கான பதிவே இது… இன்னும் எத்தனை எலும்பு கூடுகள் அங்கிருந்து எடுக்கப்படும் என்பதையும் பார்ப்போம். இனப்படுகொலை வரலாறுகள் இன்றைய இளைஞர்கள் அறியப்படவேண்டும் என்பதற்காகவே இதனை பதிவிட்டேன். -பா.அரியநேத்திரன்- 06/07/2025 Monisha Kokul
2 months 2 weeks ago
எத்தனையோ “பெருங்கவி”களைப் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். ஆனா முதற்தடவையா இப்புடி ஒரு “கொடுங்கவி” யை இப்பதான் பார்க்கிறேன். Rj Prasath Santhulaki
2 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 03:21 PM சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219380
2 months 2 weeks ago
செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்! யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது. மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல. செம்மணியில் நடப்பவை என்ன? அவர்கள்தான் இவர்கள்!! நேரடி சாட்சியம்!!! பூநகரியிலிருந்து கொழும்புதுறைக்கு படகில் வந்தவர்களே எலும்புகூடுகளாக மீட்பு | Chemmani Mass Graves https://tamilwin.com/article/chemmani-mass-graves-jaffna-1751829524
2 months 2 weeks ago
‘என் அம்மாவை விசாரித்தீர்கள் என்றால் கொல்லப்படுவீர்கள்’ என மிரட்டல் விடுத்ததாக சொல்லப்பட்ட டொக்டரின் மகள் கைது! Vaanam.lk
2 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 04:00 PM ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219393
2 months 2 weeks ago
நீங்கள் சொல்ல வரும் ரவுடிக் கதை புரியவில்லை. பெரிய ரவுடி அமெரிக்காவை எதிர்க்க சின்ன ரவுடி ரஸ்யாவை ஆதரிப்போம் என்கிறீர்களா ? தமிழர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டது நீங்கள்தான். அதற்கு ரஸ்யாவையும் ஆதரிக்கிறார்கள் என்று எழுதியவுடன் பெரிய சிறிய ரவுடி என்று ஒப்பீடு செய்கிறீர்கள். இரு தரப்பினராலும் மனித உயிர்களல்லவா இழக்கப்படுகின்றது. மக்களின் மேல் அனுதாபம் இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் மனித இழப்புகள் ஏற்படும்போது கண்டிக்கலாம். ஒரு நாட்டினை அல்லது அதன் தலைவரை ஆதரித்து அதைவிட இது பரவாயில்லை என்ற வாதம் ஒரு பக்கச் சார்பானதாக இருக்கும். அடுத்து, நீங்கள் இணைத்த ஜெய்சங்கர் கூறிய அமெரிக்க சுய சார்பு பொருளாராதம் மற்றும் இனி வரப்போகும் பிறிக்ஸ் நாடுகள் மீதான மேலதிக வரிகள் அழுத்தங்கள் போன்றவை நீங்கள் விரும்பிய ரஸ்ய சார்புடைய ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததனால் எற்பட்டவை.
2 months 2 weeks ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த வாரம் தகவல் வெளியாகியதையடுத்து இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்றபனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவருடைய மகளான மகளான 21 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1438309
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை! அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கைவிட்ட அரசாங்கம், இப்போது அந்த நிறுவனத்தால் ஆரம்பத்தில் செலவழிக்கப்பட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டுடனான இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தது. தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையைக் குறைக்க இலங்கை முயன்றதை அடுத்து, நிறுவனம் அந்த முடிவை எடுத்தது. அதானியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்ட கடந்த அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவை NPP அரசாங்கம் ஏற்கவில்லை. வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரி நகரங்களில் 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, காற்றாலை மின் நிலையத் திட்டத்தை இந்த நிறுவனம் நிர்மாணிக்கவிருந்தது. இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம், நிறுவன அதிகாரிகள், இலங்கையில் நிலையான எரிசக்தி ஆணையத்துடன் (SEA) இணைந்து ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்காக ஆரம்பத்தில் செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். இருப்பினும், SEA-க்கு செலுத்தப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய மதிப்பீடு செய்யப்பட வேண்டிய சரியான தொகையை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை. திருப்பிச் செலுத்துவது குறித்து மின் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்படும் என்று மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏதேனும் பணம் செலுத்தப்பட வேண்டியிருந்தால், அது அமைச்சரவை ஒப்புதல் மூலம் மட்டுமே இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438289
2 months 2 weeks ago
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்! மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. சுமார் 230 வருடங்களாக அப்பகுதி மக்கள் குறித்த மரபினை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சடங்குகள் மழை, விளைநில வளம் மற்றும் மீன்பிடி வளம் பெருக வேண்டி நடத்தப்படும் ஆன்மீக நிகழ்வாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438336
2 months 2 weeks ago
ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள். ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஜூன் 21 ஆம் திகதி தொடங்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், மக்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜூன் 21 முதல் இந்தப் பகுதி சுமார் 1,582 நில அதிர்வு நிகழ்வுகளால் உலுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Athavan Newsஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள்;ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகள...
2 months 2 weeks ago
நல்ல விடயம்.
2 months 2 weeks ago
ஆப்ரேஷன் சிந்தூர்; ரஃபேல் நற்பெயரை கலங்கப்படுத்த முயற்சிக்கும் சீனா! பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பிரான்சின் முதன்மை ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைப் பரப்ப சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரெஞ்சு உளவுத்துறையின்படி, போர் விமானங்களின் விற்பனை மற்றும் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, பிரெஞ்சு இராணுவ போர் விமானத்தை வாங்குவதை நாடுகளை நிறுத்த வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஃபேல் ஜெட் விமானங்களின் விற்பனை மற்றும் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குற்றச்சாட்டை வழிநடத்த சீன தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்களின் விற்பனை பிரெஞ்சு பாதுகாப்புத் துறைக்கு ஒரு பெரிய வணிகமாகும். முதன்மை ஜெட் விமானங்களின் விற்பனை பாரிஸுக்கு ஏனைய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளது. குறிப்பாக ஆசியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய சக்தியாக மாறி வருகிறது. AP செய்திச் சேவையின் தகவலின்படி, பெயர் வெளியிட விரும்பாத ஒரு பிரெஞ்சு இராணுவ அதிகாரி இந்த தகவல்களை வெளியிட்டார். பிரான்சின் குற்றச்சாட்டு, அதன் முதன்மை ரஃபேல் ஜெட் விமானத்திற்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுகிறது. மே மாதத்தில் நான்கு நாள் மோதலின் போது ஐந்து இந்திய விமானப்படை விமானங்களை இஸ்லாமாபாத் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, தவறான தகவல் பிரச்சாரத்தை பாகிஸ்தான் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான சீனா தூண்டிவிட்டுள்ளன என்று பிரான்ஸ் மேலும் கூறியது. பாகிஸ்தான் என்ன கூறியது? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலுக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்லாமாபாத் ஐந்து இந்திய விமானங்களை வீழ்த்தியதாகக் கூறியது, அதில் மூன்று ரஃபேல் விமானங்களும் அடங்கும். மறுபுறம், இந்தியா இராணுவ இழப்புகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளது, ஆனால் ஆப்ரேஷன் சிந்தூரின் போது இழந்த மொத்த விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. பிரெஞ்சு விமானப்படைத் தலைவர் ஜெனரல் ஜெரோம் பெல்லாங்கர், ஒரு ரஃபேல், ஒரு ரஷ்ய தயாரிப்பான சுகோய் மற்றும் ஒரு முந்தைய தலைமுறை பிரெஞ்சு தயாரிப்பான மிராஜ் 2000 ஆகிய மூன்று இந்திய இழப்புகளை மட்டுமே சுட்டிக்காட்டும் ஆதாரங்களைக் கண்டதாகப் பகிர்ந்து கொண்டார். இந்தியா அமைதியாக இருந்தாலும், அது ஒரு ரஃபேலின் முதல் போர் இழப்பாகக் கருதப்படும் என்று பிரெஞ்சு அதிகாரி மேலும் கூறினார். பிரெஞ்சு உளவுத்துறை என்ன சொல்கிறது? பிரெஞ்சு உளவுத்துறையின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் கூற்று ரஃபேலின் செயல்திறன் குறித்து பிரெஞ்சு போர் விமானங்களை வாங்க விரும்பும் பிற நாடுகளிடமிருந்தும், பிரான்ஸ் அவற்றை விற்ற எட்டு நாடுகளிடமிருந்தும் கேள்விகளை எதிர்கொள்ள வழிவகுத்தது. ரஃபேலுக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் கூற்றுகளுக்கு மத்தியில், சீன அதிகாரிகள் ரஃபேலை கைவிடுமாறு சாத்தியமான வாடிக்கையாளர்களை வற்புறுத்தியதாக பிரெஞ்சு உளவுத்துறை வெளிப்படுத்தியது. அதன் கூற்றுக்கள் இருந்தபோதிலும், தவறான தகவல் பிரச்சாரத்தை பெய்ஜிங்குடன் நேரடியாக இணைக்க பிரான்சால் முடியவில்லை. எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை “அவதூறு” என்று சீனா நிராகரித்துள்ளது. https://athavannews.com/2025/1438283
2 months 2 weeks ago
நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன்- தலாய் லாமா பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா,(Dalai Lama) தனது 90வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார். கடந்த 1935 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் திகதி திபெத்தில் உள்ள தக்சேர் கிராமத்தில் பிறந்த தலாய் லாமா, திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாது திபெத் மக்களின் உரிமைகள், மத சுதந்திரம், மற்றும் உலக அமைதி ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாக அமைதிப்பூர்வமாக போராடி வருகிறார். இதற்காக அவர் கடந்த 1989ஆம் ஆண்டு நோபல் அமைதி பரிசு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது பிறந்த நாள் உரையில் ‘நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன். மறுபிறப்பும் தொடரும். என் மறுபிறப்பை நிர்ணயிப்பது என் விருப்பத்திற்கேற்ப இருக்கவேண்டும். இதில் சீன அரசு எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். சீன அரசு, தலாய் லாமாவின் மறுபிறப்பை சட்டபூர்வமாக தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தலாய் லாமா, “Gaden Phodrang Trust” ‘ மூலம் தமது மறுபிறப்பை தீர்மானிக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்இ தலாய் லாமாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கக்கோரி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438329
2 months 2 weeks ago
ஒரு காலத்தில் உலகமயமான திறந்த பொருளாதார கொள்கையினை முன்னிறுத்திய அமெரிக்கா தற்போது தனது சுய சார்பு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ள காரணம் என்ன என ஜெய்சங்கர் கேள்வியினை கேட்டுள்ளார். திறந்த பொருளாதார கொள்கை அடிப்படையில் மிக சிறப்பான கொள்கை, அதன் மூலம் உலக பொருளாதாரம் வேகமாக வளரும், அதற்காகவே பொருளாதார நிபுணர்களால் பிரட் அன்ட் வூட் தீர்மானத்தின் மூலம் அதனை முன்னிலை படுத்தினார்கள், அப்போது உலக வர்த்தகத்தில் காற்பங்கு கொண்ட அமெரிக்காவினை முதன்மைபடுத்தி அந்த திட்டம் உருவாக்கம் பெற்றிருந்த்தது, ஆனால் அமெரிக்கா அந்த நிலையினை ஒவ்வொரு கட்டத்திலும் தந்து தேவைக்காக மாற்றங்கள் செய்து அதனை முழுக்க ஒரு சுரண்டல் பொருளாதார கொள்கையாக மாற்றி தற்போது அதனையே தூக்கியெறியும் நிலைக்கு வந்துள்ளது. உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பமான காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அஸ்தமனகாலம் என கூறப்பட்டபோது அதனை ஒரு ஆரோக்கியமான சந்தேகத்துடன் அதற்கெதிரான வாதப்பிரதிவாதங்களான (நம்ப முடியாத நிலையில்) விடயங்கள் தற்போது இலகுவாக கடந்து செல்லும் நிலைக்கு மாற்றங்கள் உணரும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்கு இதுவரைகாலமும் காணப்பட்ட அடிப்படையான விடயங்கள் இனி அவற்றிற்கான தேவைகள் இல்லாமல் போய் விட்டுள்ளது, இனி வரவுள்ள கூட்டு நாடுகளின் (Block countries)ஆதிக்கமுடைய புதிய ஒழுங்கு நோக்கி தமிழினம் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும். எமது சமுதாயம் ஒரு மெதுவாக தன்னை தயார்படுத்தும் சமூகமாக உள்ளது (Late adopters), பொதுவாக உயர் கல்விநிலை உள்ள சமூகத்தின் பொதுவான இயல்பு இது, சவால்களை எதிர்கொள்ளும் சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமளவில் போரினால் அழிவடைந்ததால் எமது சமூகம் ஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்குள் உள்ளதாக உணருகிறேன் (Late adopters ஒரு சமூகத்தில் 34% இருக்க வேண்டிய நிலை, எமது சமூகத்தில் 60% இற்கும் அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்).
2 months 2 weeks ago
நீ தரும் தண்டனை எது தெரியுமா ........ ! 😁
2 months 2 weeks ago
காணி அபகரிப்புகளூடாக நடைபெறும் தமிழர் விரோத செயல்! July 7, 2025 வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு எனும் பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் சுமார் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாவலித் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. அந்த வகையில் வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பித்தக்கது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் சுமார் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.ilakku.org/காணி-அபகரிப்புகளூடாக-நடை/
2 months 2 weeks ago
கே . பி .சுந்தராம்பாள் ......... எமிருசிரா இராமா எமி ருசிரா ....... மோகனம் .........! 🙏
Checked
Sat, 09/27/2025 - 00:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed