4 weeks 1 day ago
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்! இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். எனினும், தற்போது சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத சில வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 அன்று, அதிவேக நெடுஞசாலைப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையில், ஆகஸ்ட் 30 அன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, இந்த முயற்சி “க்ளின் ஸ்ரீலங்கா” திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கினார். Athavan Newsஅதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவ
4 weeks 1 day ago
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாகும்” என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியா நான்கு தசாப்தங்களாக “பயங்கரவாதத்தின் தாக்குதலை” அனுபவித்து வருவதாகவும், புது டெல்லியின் போராட்டத்தில் துணை நின்ற பங்காளி நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அத்துடன், பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும். இந்தத் தாக்குதல் (பஹல்காம்) மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் ஒரு வெளிப்படையான சவாலாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது நமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயல்பானது. பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும் – என்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டினை அடுத்து பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடம் சந்திப்பில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 01) SCO உச்சிமாநாடு தொடங்கியது. நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன், மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு மற்றும் மியான்மர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஆகியோரையும் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445468
4 weeks 1 day ago
ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்! ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்ட மசார் பள்ளத்தாக்கில் பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டதாக தலிபான் அரசாங்கத்தின் பல வட்டாரங்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரம், மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து அவசர உதவிக்கு தலிபான் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சில கிராமங்களை விமானம் மூலம் மட்டுமே அடைய முடியும். இப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி இடிந்து விழுந்த கட்டமைப்புகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 2023 ஒக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் ஆப்கானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445443
4 weeks 1 day ago
இந்தக் கட்டுரையானது புலிகளின் "விடுதலைப் புலிகள்" என்ற மாதயிதழின் குரல் 21 இல் 1991 ஆண்டு வெளியான புலிக்கொடியின் வரலாற்றோடு ஒத்துப்போகாமல் முற்றிலும் வேறொரு வரலாற்றை கூறுகிறது. https://tamilnation.org/tamileelam/defacto/tamilnationalflag.pdf கட்டுரையாசிரியரான வர்ணகுலத்தான் (பொன். சிவா?!) புலிகளின் காலத்திலிருந்து அவர்தம் வரலாறுகள் சிலவற்றை எழுதுபவராக அறியப்பட்டாலும் இவரின் இக்கட்டுரை புலிகளின் அலுவல்சார் (official) வரலாற்றோடு ஒத்துப்போகாமல் வேறு திசையில் வரலாற்றை சொல்கிறது எனபதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேலும் 1976ம் ஆண்டில் வன்னியிலிருந்த தலைவர் எப்போது 1977 இல் இந்தியா சென்றார் என்பதும் இரு கட்டுரைகளையும் கேள்விக்குள்ளாக்கிறது.)
4 weeks 1 day ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
4 weeks 1 day ago
எனக்கும் விழங்கியது.அவனை மட்டும் குறை சொல்லி வேலையில்லை.
4 weeks 1 day ago
வடக்கிற்கு ஜனாதிபதி அநுர இன்று விஜயம் : பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் அங்குரார்ப்பணம் 01 Sep, 2025 | 06:13 AM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் யாழ் பிரதேச காரியாலயம் காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் செயலக பிரிவில் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளதுடன், யாழ் நூலகத்தின் அபிவிருத்தி பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச புதிய கிரிக்கெட் மைதானத்தின் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (2) ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு விஜயம் செய்து 'தென்னை தினம்' அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அத்துடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டவுள்ளார். அத்துடன் பளை பகுதியில் தென்னை நாற்று உற்பத்தி நிலையத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/223883
4 weeks 1 day ago
Published By: Vishnu 31 Aug, 2025 | 10:28 PM இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அதன் விலை 325 ரூபாவாக இருந்தது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 305 ரூபாவிலிருந்து 299 ரூபாவாக அதன் புதிய விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். https://www.virakesari.lk/article/223877
4 weeks 1 day ago
31 Aug, 2025 | 09:03 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும். திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றார். பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்வது என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால் செப்டம்பர் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/223870
4 weeks 1 day ago
கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன. சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், கிட்டத்தட்ட 400 கி.மீ தூரத்தில் உள்ள பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், US Geological Survey நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது. பட மூலாதாரம், Getty Images உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன. இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. உதவி கோரும் தாலிபன் அரசு தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o
4 weeks 1 day ago
140 mm தெறோச்சி & 152 mm தெறோச்சி
4 weeks 1 day ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Planing Trimaran 1 (class name lost in time) OBM (1) 1) 2) (craft name lost in time) At least 2 The Sri Lankan military captured all of these in damaged condition 2 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 3 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1
4 weeks 1 day ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Vessels 1 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 2 (class name lost in time) OBM (1) 1) 2) (craft name lost in time) At least 2 3 (class name lost in time) IBM (1) 1) 2) (craft name lost in time) At least 2
4 weeks 1 day ago
பாகம் - 6 இராணுவ முகாமுடன் இணைந்ததாக அல்லது அருகில் இந்த அகதி முகாம்கள் இருப்பதால் எப்போதும் மரண பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது. இராணுவத் தினரின் அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினரின் 'மூட்' எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே வாழ்வு நிர்ணயிக்கப்படுகின்றது என்றார். 'எங்கேயாவது ஏதாவது பிரச்சினை நடந்தால் அகதிமுகாமுக்குள் வந்து அப்போது தாங்கள் தீர்மானிக்கும், அல்லது ஏற்கனவே அவர்களின் தீர்மானத்தில் உள்ளவர்களைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்கள். முன்னரெல்லாம் இவர்களை பூஸாவுக்கோ, வெலிக்கடைக்கோ கொண்டு செல்வார்கள். இப்போது கொண்டு செல்லப்படுபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்றார். கதை இங்கேயே முடிந்து விடுகிறது என்றார். சிலவேளை பலர் ஊர்க்காவல் படையால் அல்லது இராணுவத்தால் தாக்கப்படுவார்கள். இதைத்தான் செய்கிறார்கள் என்றால் பெண்கள்மீது இவர்கள் இழைக்கும் கொடுமைதான் கடவுளுக்கே பொறுக்காது’ என்றார். முதன்முதல் சுங்கான் குழியைச் சேர்ந்த ஞானசேகரம் பகவதிப் பிள்ளை என்ற பெண்ணை முஸ்லிம் காவல் படையினர் கற்பழித்தார்கள். 2-8-90 இல் சீனன் குடாவில் சசி என்ற பெண்ணை சிங்கள ஊர்காவல் படை யினர் கற்பழித்தார்கள் என்றார். தொடர்ந்து ‘அகதி முகாமுக்குள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் வருவார்கள். இந்த அகதிமுகாம்கள் மேலே கிடுகினால் வேயப்பட்டு படங்கினால் சுற்றிவர கட்டப்பட்டுமிருக்கும். படங்கை விலத்தி வருவார்கள் இவர்களைக் கண்டதும் பயத்தினால் பெண்கள் முகத்தைத் திருப்பி குப்புறப்படுப்பார்கள். டோர்ச் லைட்டை அடித்து முகத்தைக் காட்டு, முகத்தைக் காட்டு என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாங்கள் தீர்மானிக்கும் பெண்ணைக் கொண்டு போவார்கள். கொண்டு போகும் பெண்களை உயிருடன் விடுவதில்லை. சிலவேளை முகாமுக்குள்ளேயே வைத்தும் கற்பழிப்பார்கள். சுற்றிவர குழந்தைகள் இருக்கும். கதறக் கதற ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் போது அதைப் பார்க்கும் குழந்தைகளின் மனோநிலை எப்படிப் பாதிக்கப்படும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எப்படி அங்கு இருப்பது?’ என்று கேட்டார். குடும்பங்களே சிதறிப்போய்விட்டன. பெரும்பாலான ஆண்கள் மனைவி பிள்ளைகளை விட்டு முல்லைத்தீவுக்கு போய் விட்டனர். புதுக்குடியிருப்பில் சிலர் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். வவுனியாவில் வாங்கி வந்து புதுக்குடியிருப்பிலோ யாழ்ப் பாணத்திலோ விற்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கு வரும் திருமலை மாவட்டப்போராளிகள் மூலமாகவும், திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் மூலமாகவும் தான் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்; முகாமில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றார். 'எந்த ஊர் மக்கள் புதுக்குடியிருப்பில் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். 'பெரும்பாலும் தம்பலகாமம் ஆட்கள்தான் அங்கே இருக் கிறார்கள்' என்றார். பெண்களைக் கொண்டு பேகும் போது தமிழீழம் தானே கேட்டீர்கள். எல்லாம் கிடைக்கும் வாருங்கள் என்று முஸ்லிம் ஊர்காவல் படையினர் கூறுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். (கோவில் குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி என் பவருடைய 18 வயது மகள் 15-10-90 அன்று இவ்வாறு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், இலங்கை சபையில் போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் பாக்கியராசா என்பவரின் மகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தோளில் போட்டுக் கொண்டு போனதாகவும், அவர் உயிருடன் திரும்பவில்லை எனவும் பின்னர் அறிந்தோம்.) தங்களை அலங்காரம் செய்து கொள்ளும் இளம் வயதுப் பெண்பிள்ளைகளெல்லாம் தங்களை அசிங்கமாகக் காட்ட என்னென்ன மாதிரிக் கோலத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் விளக்கினார். தலை இழுக்காமல், முகத்தில் கரி பூசி... என்றெல்லாம் கூறினார். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சகோதரங்கள் உண்டு ஆனபடியால் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெண்பிள்ளைகளின் பெயரைக் கேட்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். (ஆரம்பத்தில் நிலைமையை இயல்பாகக் கதைத்தவர் பெயர்களை நான் குறிப்புப்புத்தகத்தில் குறித்ததும் நிறுத்திக் கொண்டார்) 'எனக்கும் பெண் பிள்ளைகள் உண்டு. எங்களுடைய சமூக அமைப்பு இன்னும் மாறவோ, காலத்துக் கேற்ற மாதிரி வளர்ச்சியடையவோ இல்லை - நீங்கள் இந் தத்தர்மசங்கடமான நிலையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று அவர் வேண்டிக்கொண்டார். சரி ஆண்களுக்கு நடந்ததைக் கூறுங்கள் என்றேன். 5.9.90 அன்று கந்தளாய் அகதி முகாமில் சித்திரவேல் கனகலிங்கம் என்பவர் இராணுவத் தால் தாக்கப்பட்டார். 9.9.90 அன்று தம்பலகாமம் அகதி முகாமைச் சேர்ந்த கந்தசாமி, ஐயாத்துரை ஆகியேர் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொலை செய்யப் பட்டு 98 கொலனி வயல் வெளியில் பிணமாகக் கிடந்தனர். 96 ஆம் கொலனியைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரும் அகதி முகாமிலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு வயது 57. மற்றும் முத்துக்குமா ரு (மேற்கு - கொலனி 42 வயது) ராசதுரை (முள்ளியடி - 45 வயது), பேபி ராசா (மேற்கு - கொலனி - 28 வயது). சந்திரசேகரம் (நடுப்பன் திடல் - 36 வயது), ராசதுரையின் மகள் (முள்ளி யடி 13 வயது), கோணநாய கம் (கள்ளிமேடு - 32 வய து). ஜயா (மேற்குக்கொலனி - 28 வயது), சகோதரர்களான மேற்குக் கொலனி வாசிகளான 30 வயதான பாலகிருஷ்ணன், 26 வயதான கோபால கிருஷ்ணன் இவர்களெல்லாம் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 9 ஆம் மாதத்தில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். ஆட்கள் அவ்வளவு தான்! என்றார். கிண்ணியாப் பக்கம் நிலைமை என்னமாதிரி? என்று கேட்டேன். கிண்ணியா, சின்னக்கிண்ணியாவைச் சேர்ந்த 86 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கருதி பணயக் கைதிகள் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். எங்கே தடுத்துவைத்துள்ளனர்? என்றேன், கிண்ணியா நெற்களஞ்சியத்தில் தான் அந்தத் தடுப்புமுகாம் உண்டு. இவர்களைப்பற்றியும் கந்தளாயில் உள்ள அகதிகள் பற்றியும் அறிவது கொஞ்சம் கஷ்டம் என்றார். “சிங்களவரால் ஏதும் தொந்தரவில்லையா?” என்று கேட்டேன். தொந்தரவு இல்லையா? ஜோண் சில்வா என்று ஒருவன் இருக்கிறான்… என்றவாறே தொடர்ந்தார். (தொடரும்)
4 weeks 1 day ago
எங்களை மாதிரியே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
4 weeks 1 day ago
நியாயமான சிந்தனை
4 weeks 1 day ago
இந்தப் பணத்தை கொடுக்க அங்கே பாடசாலை இருக்க வேண்டும். பாடசாலை இருந்தாலும் மாணவ மாணவியர் இருக்க வேண்டும்.
4 weeks 1 day ago
ஹங்கேரி சொல்வதெல்லாம் உண்மையே. ரஷ்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இந்த ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும்...
4 weeks 1 day ago
இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்குமான தன்மான போர்.இதில் உக்ரேன் வெறும் பொம்மை மட்டுமே.
4 weeks 1 day ago
நடன போட்டியின் பிரமாதங்கள். https://youtu.be/PZNdzwVwPRc?si=qXFiRxpHBzFg9in-
Checked
Tue, 09/30/2025 - 18:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed