3 weeks ago
அரசியல் கட்சிகளுக்கு பின்னால் திரிந்து, அவர்களின் சிபாரிசில்… ஆசிரியர் வேலை, தாதியர் வேலை, மற்றும் அரச வேலைகளை பெறுபவர்களிடம்… அந்தப் பதவிக்கு உரிய நற்பண்பும், கண்ணியமும், பொறுப்புணர்வும் அறவே இருக்காது. தமது காவாலித்தனத்தை காட்டவே செய்வார்கள். இப்படி.. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்களின் சிபாரிசில் வந்தவர்களால் வடமாகாணத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது.
3 weeks ago
இன்று மைதானத்திற்கு இலவச அனுமதி. SSC மைதானம் நிரம்பி வழியப் போகுது. பாபர் போன்ற ஒரு வீரரை எப்பிடி அப்பிடி சொல்ல முடிகிறது. பாகிஸ்தான் அணியிலேயே சிறந்த பெறுபேறு உள்ள வீரர்.
3 weeks ago
ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.
3 weeks ago
இன்னும் சில வினாடிகளில். பாக்கிஸ்தான் பந்து வீச முடிவு செய்திருக்கிறது.
3 weeks ago
BREAKING: Mohammed Siraj has been added to India's #T20WorldCup squad after Harshit Rana was ruled out with a knee injury
3 weeks ago
அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: Vishnu 07 Feb, 2026 | 05:53 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அவசரகால சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது. இப்போது கூட தையிட்டியில் நாங்கள் போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கும் பாதிக்கப்பட்டுள்ளன. பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும், இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன. கடந்தகால ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம், இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா? இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல் ஹேய்சர் விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது. இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/238037
3 weeks ago
அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் 'உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத' வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என்று இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், டெல் அவிவ் 6 பிப்ரவரி 2026 மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான உலகளாவிய ஊகங்களுக்கிடையே, இஸ்ரேல் தலைவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்து வருகின்றனர். இரானின் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய சில கருத்துகளைத் தவிர, தனது மிகப்பெரிய எதிரிக்கு எதிராக, தனது வல்லரசு நட்பு நாடு நடவடிக்கை எடுப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரது அரசாங்கமும் சமமாக மௌனமாக உள்ளது. "இந்த தருணத்திற்கு நெதன்யாகு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது," என்று இஸ்ரேலின் பாதுகாப்பு உளவுத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவரும் தற்போது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் மூத்த இரான் ஆராய்ச்சியாளராகவும் உள்ள டேனி சிட்ரினோவிச் கூறினார். "அமெரிக்கா வளைகுடாப் பகுதியில் இவ்வளவு படைகளைக் கொண்டிருப்பதும், இரானைத் தாக்குவதற்கு டிரம்ப் இவ்வளவு நெருக்கமாக இருப்பதும், நெதன்யாகுவைப் பொறுத்தவரை, அவர் இழக்க முடியாத ஒரு பொன்னான தருணம்." என்கிறார் சிட்ரினோவிச். இஸ்ரேலின் சிக்னல் உளவுப் பிரிவின் முன்னாள் துணை இயக்குநரான ஆசாஃப் கோஹன், இஸ்ரேலின் மௌனத்திலும் ஒரு உத்தி இருப்பதாகக் கூறுகிறார். "இந்த முறை அமெரிக்கர்கள் வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலியத் தலைமை நம்புகிறது. ஏனென்றால், அவர்கள் அதிக வலிமை வாய்ந்தவர்கள், அதிக திறன்களைக் கொண்டவர்கள், மேலும் உலக அரங்கில் அவர்களுக்கு அதிக சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது," என்கிறார் அவர். பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக இரானை இஸ்ரேல் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தலாகவும், மத்திய கிழக்கில் ஸ்திரமின்மைக்கான மிகப்பெரிய ஆதாரமாகவும் கருதி வருகிறார். அவரது பொதுவான மௌனம், தனது முக்கிய கூட்டாளியான அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்பதைக் குறிக்கவில்லை. சமீபத்தில் இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஷ்லோமி பைண்டர், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இரானில் உள்ள சாத்தியமான இலக்குகள் குறித்து கவனம் செலுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. பட மூலாதாரம்,Getty Images இரானில் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட அதிகபட்ச தாக்குதல்களை நோக்கி நெதன்யாகு தனிப்பட்ட முறையில் அமெரிக்காவைத் தள்ளுகிறார் என்று சிட்ரினோவிச் நம்புகிறார், மேலும் சமீபத்தில் டிரம்பைத் தடுத்து நிறுத்துமாறு நெதன்யாகு வலியுறுத்தியதாகக் கூறப்பட்டபோது, திட்டமிடப்பட்ட அமெரிக்க தாக்குதலை "மிகச் சிறியது" என்று அவர் கருதியதால் தான் என்றும் அவர் கூறுகிறார். கடந்த ஆண்டு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு இரானியர்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக "எதிர்த்து நிற்க" வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது இரானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறார் - அவற்றில் வரையறுக்கப்பட்ட குறியீட்டுத் தாக்குதல்கள் மற்றும் முழுமையான ஆட்சி மாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. பொதுவில், புதிய பேச்சுவார்த்தைகளை பரிந்துரைப்பதன் மூலம் மூலம் இராணுவ அச்சுறுத்தல்களை அவர் மாற்றியுள்ளார். பல அமெரிக்க நட்பு நாடுகள் இரானின் தலைமையை அகற்ற முயற்சிப்பது பிராந்தியத்திற்கு பெரும் அபாயங்களைக் கொண்டிருப்பதாக எச்சரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பலர் தங்கள் பாதுகாப்புக்கான சாத்தியமான நன்மைகளைக் காண்கிறார்கள். டெஹ்ரானில் ஆட்சியை மாற்றுவதன் மூலம், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அது ஒரு நாள் அணு ஆயுதங்களைப் பெறும் சாத்தியக்கூறையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. இது, ஹிஸ்புல்லா உட்பட, பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களையும் மேலும் பலவீனப்படுத்தும். இஸ்ரேலின் அல்மா ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, ஹிஸ்புல்லாவிடம் லெபனான் எல்லையில் இன்னும் 25,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளன. இதற்கு மாறாக, சில இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய ஆட்சியை நீடிக்க அனுமதிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதல் அல்லது இரானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் கூட, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பெரிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகிறார்கள். "முழுமையான தீமையை நீங்கள் கையாளும்போது, நீங்கள் வரையறுக்கப்பட்ட முறையில் செயல்படக்கூடாது," என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ள யேஷ் அட்டிட் கட்சியைச் சேர்ந்த மோஷே டூர்-பாஸ் கூறினார். "இஸ்ரேல் மிகவும் வலிமையாக செயல்பட வேண்டும், மேற்கத்திய உலகமும் அவ்வாறு செயல்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்து. இரான் போன்ற நமது மோசமான எதிரிகள் என்று வரும்போது, பெரிய வேறுபாடுகள் இல்லை. அச்சுறுத்தலை நாம் அனைவரும் புரிந்துகொள்கிறோம்." இரானின் பதிலடியால் ஏற்படும் விலைக்கு, ஆட்சியைக் கவிழ்க்காமல் விட்டுவிடும் மற்றொரு மோதல் சுற்று தகுதியானதாக இருக்காது என்று பலர் கூறுகின்றனர். கடந்த ஆண்டு 12 நாட்கள் நீடித்த போரில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, இரான் நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவி பதிலடி கொடுத்தது. அவற்றில் சில, இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி, டெல் அவிவ்வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது மோதி, குறைந்தது 28 பேரைக் கொன்றன. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,12 நாட்கள் நடந்த போரின் போது, சில இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி ஊடுருவின. இஸ்ரேலிய ராணுவம் இன்னும் பல உயிரிழப்புகளைச் சந்திக்கத் தயாராக இருந்தது, ஆனால் டெஹ்ரானின் (இரான்) தற்போதைய அதிகரித்த பாதிப்பு உணர்வு , இன்னும் தீவிரமான எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும். அந்த மோதலிலிருந்து இரான் கற்றுக்கொண்டதாகவும், போர் முன்னேற முன்னேறத் தனது தந்திரங்களை மாற்றிக்கொண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரை ஆண்டிற்குப் பிறகு, இரான் தனது ஏவுகணை இருப்பை மீண்டும் கட்டியெழுப்பி வருகிறது. அமெரிக்கத் தாக்குதல் ஏதேனும் நடந்தால், டெல் அவிவ் "உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத" பதிலடியைச் சந்திக்கும் என்று இரானின் அதி உயர் தலைவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்தார். "ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால், மீண்டும் ஒரு தாக்குதலின் வலியை இஸ்ரேல் அனுபவிக்க நேரிடும் என்று நெதன்யாகு பயப்படுகிறார்," என சிட்ரினோவிக் கூறினார். "ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமானால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார், ஆனால் ஆட்சி மாற்றம் அமெரிக்காவால் மட்டுமே சாத்தியம்." இரானிய ஆட்சியின் இந்தத் தீவிரமான பாதிப்பு நிலையை - 12 நாள் போருக்குப் பிறகு அதன் இராணுவப் பாதுகாப்பு குறைந்துள்ள சூழல், அதன் பிராந்திய நிழற்படைப் படைகள் பலவீனமடைந்துள்ள நிலை மற்றும் உள்நாட்டில் அதன் ஆட்சிக்கு எதிராகப் பரவலான போராட்டங்கள் நடந்து வரும் நிலை - ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்கிறார் கோஹன். "இரான் இப்போது அதன் பலவீனமான நிலையில் உள்ளது - இது மீண்டும் வராத ஒரு வாய்ப்பு," என்று கோஹன் கூறினார். "இதுதான் சரியான நேரம் - இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று நம்பும் மக்கள் பலர் உள்ளனர்." டெல் அவிவில், கடந்த ஜூன் மாதம் இரானிய ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே இன்னும் வசித்து வரும் குடியிருப்பாளர்கள், மற்றொரு மோதலைப் பற்றி ஊகித்து வருகின்றனர். "எங்கள் தலைவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார் நேரியா என்ற இளைஞர். "தாக்குதல் மூலமாகவோ அல்லது பிற வழிகள் மூலமாகவோ, எனக்குத் தெரியாது, ஆனால் ஆட்சியை மாற்றுவதற்கு நாம் நிச்சயமாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குண்டுகளைச் சந்திப்பது இது முதல் முறையல்ல - அது இனிமையானது அல்ல, ஆனால் நீண்ட கால அடிப்படையில் நாம் இங்கே பாதுகாப்பாக உணர இது உதவுமென்றால், நாம் அதைச் சந்தித்துதான் ஆக வேண்டும்." பட மூலாதாரம்,Dave Bull/BBC படக்குறிப்பு,இரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேலியர்கள் ஆதரிப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அருகிலிருந்த ஷானி என்ற இளம் பெண், தான் கலவையான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். "இரானிய மக்கள் - அவர்களில் பலர் - அமெரிக்கா உதவ வேண்டும் என்று விரும்புவதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். "அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். செயல்களுக்கு விளைவுகள் உண்டு." இஸ்ரேலியக் கருத்துக்கணிப்புகள், யூத குடியிருப்பாளர்களில் பெரும்பாலாலோர் இரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தொடர்ந்து காட்டுகின்றன - கடந்த ஆண்டு நடந்த 12 நாள் போருக்குப் பிறகும் இதே நிலைதான். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கான அபாயங்கள் அப்படியே உள்ளன. இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரைச் சுற்றியுள்ள இராணுவ மற்றும் மத குருமார்களின் கூட்டணியில் வெளிப்படையான விரிசல்கள் ஏதுமில்லாத நிலையில், மற்றும் நாட்டில் பிளவுபட்ட எதிர்க்கட்சி இயக்கம் உள்ள நிலையில், அரசு வீழ்ந்தால் இரானின் கட்டுப்பாட்டை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு இளைய வாரிசு, இஸ்ரேலுக்கான பதிலடியில் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் ஒரு உள்நாட்டுப் போரின் குழப்பம் இரானியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஆழமான உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும். மேலும், வான்வழித் தாக்குதல்களால் மட்டுமே பொதுவாக ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதில்லை என்று பல பாதுகாப்புத் துறை உள்விவகார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ள இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் "மிஸ்டர் செக்யூரிட்டி" (பாதுகாப்பு நாயகன்) என்ற தனது உடைந்த பிம்பத்தை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்து வருகிறார். இரானில் ஆட்சி மாற்றம் - அல்லது காமனெயியின் படுகொலை - ஒரு அரசியல் பரிசாக இருக்கும், ஆனால் அது ஒரு அபாயமும் கூட. "இது ஒரு சூதாட்டம், ஆனால் கணக்கிடப்பட்ட ஒன்று," என்கிறார் சிட்ரினோவிக். "காமனெயி தூக்கியெறியப்பட்டதற்கு அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நெதன்யாகு கவலைப்படுவதில்லை. தான் டிரம்புடன் இணைந்து இரானிய ஆட்சியை அழித்ததைக் காட்ட அவர் விரும்புகிறார். அமெரிக்கர்கள் இறுதிவரை வருவார்கள் என்று தெரிந்தால், அவர் எடுக்கத் துணியும் அபாயம் இது. சிக்கலே டிரம்ப் தான்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் நடந்த போராட்டங்கள் இதுவரை ஆயதுல்லா காமனெயியின் ஆட்சியை வீழ்த்தத் தவறிவிட்டன. அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஆனால் இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவதுடன், பிராந்தியத்திலுள்ள அதன் நிழற்படைகளுக்கான ஆதரவை நிறுத்துவது மற்றும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது ஆகிய நிபந்தனைகளை டிரம்ப் விதித்துள்ளார் - இவை அனைத்தும் இரானிய ஆட்சிக்கு 'சிவப்புக் கோடுகளாக' (மறுக்க முடியாத எல்லைகள்) பார்க்கப்படுகின்றன. இஸ்ரேலியத் தலைமை எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கடுமையாக எதிராக உள்ளது, மேலும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பதில் இஸ்ரேலிய ஆய்வாளர்கள் பிளவுபட்டுள்ளனர். வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் ஆகிய இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும், ஆனால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் தான் கருதுவதாக கோஹன் கூறினார். "இரானின் அதி உயர் தலைவர் மற்றும் டிரம்ப் ஆகிய இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது. அவர்களுக்கு உண்மையில் சிவப்புக் கோடுகள் எதுவும் இல்லை. 2013-ல் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, அவை மாறிக் கொண்டே இருந்ததால் நாங்கள் அவற்றை 'இளம் சிவப்புக் கோடுகள்' என்று அழைப்போம்," என்று கோஹன் கூறினார். "இரானை நாம் எப்போதும் தீயவர்களாகப் பேசுகிறோம், ஆனால் அவர்கள் மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள்," என்று அவர் கூறினார். "சூழ்நிலையை மாற்றுவதற்கு, இதுவரை செய்யப்படாத ஒன்றை அவர்கள் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்." "ஆம், சமரசம் செய்துகொள்ளும் திறன் அங்கு உள்ளது, அவர்கள் வட கொரியா அல்ல, ஆனால் இந்த ஆட்சிக்கும் சில சிவப்புக் கோடுகள் உள்ளன," என்று எச்சரித்த சிட்ரினோவிக், ஒரு போரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்று கூறினார், "ஏனெனில் இரானியர்கள் இது தங்கள் வாழ்வா சாவா போராட்டம் என்று நினைப்பார்கள்." டிரம்ப் தனது பேச்சுவார்த்தை நிபந்தனைகளைக் குறைத்து, இரானின் அணுசக்தி திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. டெஹ்ரான் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தேவையான அளவிற்கு நிபந்தனைகள் குறைக்கப்பட்டால், பிராந்தியத்தின் பெரும்பகுதி நிம்மதிப் பெருமூச்சு விடும் - மேலும் இஸ்ரேலில் பலர் மூச்சை அடக்கிக் காத்திருப்பார்கள். இரான் வெளிப்படையான தடையைத் தவிர்க்கும் அதே வேளையில், நடைமுறையில் எந்தவொரு புதிய செயல்பாட்டையும் தற்காலிகமாகத் தடுக்கும் வகையில் செறிவூட்டல் போன்ற விவகாரங்களில் சமரசங்களை உருவாக்குவதற்கான வழிகள் இருப்பதாக கோஹன் கூறுகிறார். "எங்களுக்கும் இரானியர்களுக்கும் உள்ள அத்தியாவசிய வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் விரைவான முடிவுகளை விரும்புகிறோம், ஆனால் இரானியர்களிடம் மிகுந்த பொறுமை உள்ளது," என்று அவர் கூறினார். "அவர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள் இங்கே 2000 ஆண்டுகளாக இருக்கிறோம், அணு ஆயுதம் பெற எங்களுக்கு இன்னும் 30 ஆண்டுகள் தேவைப்பட்டாலும் பரவாயில்லை'." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn40kmk1px0o
3 weeks ago
சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மூலமாக ஒப்பந்தம் செய்து 2.5 லட்சம் முற்பணமும் வழங்கி வேலையை தொடங்கச் சொன்னால் அவர் தொடங்காது காலந்தாழ்த்திக்கொண்டிருந்தார். காலதாமதமாவதால் அதிருப்தி அடைந்த வைத்தியர் தனது கொழும்பு றோயல் கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஊடாக பிரதமர் ஹரிணியின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இப்பிரச்சனையை சொன்னபோது அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு கட்டும்படி கூறியிருக்கிறார். அவ்வாறு தான் இந்த பாடசாலை கட்டப்பட்டது. இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல் இப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த பிரிவில் 30 மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மேலும் 5 லட்சத்தை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வாங்கிவிட்டார். அப்பாவின் தாய் மாமாவின் மகன் தான் இந்த வைத்தியர். 2010 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்தியருடைய அம்மாவின் இறுதிச்சடங்கின் போது அப்பா அவரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தவர். டொக்ரர் ஆறுமுகம் இராசையா நினைவாக அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யும்படி. அதனை ஞாபகம் வைத்திருந்தாரோ என்னவோ இந்த அரும்பணியை செய்து முடித்துள்ளார்.
3 weeks ago
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதனை நீக்கியுள்ளார். சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில், 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. காணொளியஜஇறுதியில், 'த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' (The Lion Sleeps Tonight) என்ற பாடலுடன், பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி கார்ட்டூன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன. எக்ஸ் தள பதிவு இது தவிர, ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் விலங்குகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். இந்த காணொளி பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ட்ரம்ப்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியின் கறுப்பின செனட்டருமான டிம் ஸ்கொட், "வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது" என்று விமர்சித்ததோடு, உடனடியாக அதனை நீக்க வலியுறுத்தினார். அத்துடன் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் "ஜனாதிபதியால் செய்யப்பட்ட அருவருப்பான செயல் இது; ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இதனை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதேநேரம் எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ட்ரம்ப் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடும் விமர்சனம் ஆரம்பத்தில் இது வெறும் "இன்டர்நெட் மீம் காணொளி" (Internet Meme Video) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வாதிட்டார். ஆனால், சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, "ஊழியர் ஒருவரின் தவறால் அந்த காணொளி பகிரப்பட்டுவிட்டது" என்று கூறி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அதனை நீக்கினார். ஜனாதிபதி ட்ரம்ப் நீண்டகாலமாகவே பராக் ஒபாமாவைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார். முன்னதாக, ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று ஆதாரமற்ற வாதத்தைத் தூண்டிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய இனவெறிச் சித்திரங்கள் அமெரிக்க அரசியலில் நாகரீகமற்ற போக்கை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 14.4வீத மக்கள் கறுப்பினத்தவர்கள் (Black or African American) ஆவர். இத்தகைய இனவெறிச் சித்தரிப்புகள் கறுப்பின மக்களிடையே பெரும் மனக்காயங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. Tamilwinஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீ...அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை...
3 weeks ago
நானும் அறிவேனோ பாவி… என்னை பிடித்தாட்டுது சனி 😂 நான் அனுரவை எதிர்த்து எழுதினால் நீங்கள் ஆதரித்து எழுதுவீர்களா? அப்போ எங்கே போனது உங்கள் மாவீரர் மீதான அபிமானம்? கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்? இந்த off ramp எல்லாம் காலம் கடந்து விட்டது. நான் எழுதா திரிகளில் கூட நீங்கள் அனுர காவடி ஆடியதை களம் கண்டுள்ளது. இனி வேறு பெயரில் வந்தால் தான் உண்டு. முன்பு இன்னொரு பெயரில் வந்தவர் தானே? பரமாத்மா அடுத்த அவதாரம் எடுக்க நே கூடி வந்துள்ளது 😂
3 weeks ago
ஆவண்ண்ணா உடனும் நாம ஸ்டாப்பு .. அப்பால அறிஞ்ஞது உங்கலைப் போல மேதாவி தானுங்க ...😆
3 weeks ago
3 weeks ago
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா: இலங்கை கடற்படையின் அதிரடி ஏற்பாடுகள்! 06 Feb, 2026 | 04:05 PM யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது. அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களைப் பாதுகாக்க உயிர்காப்பாளர்களை நிறுத்தக்கூடிய இடங்களையும், மருத்துவ வசதிகளை வழங்க தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிப்பதையும் கடற்படை கண்டறிந்து வருவதுடன், கடற்படையின் உதவியுடன் அமைக்கப்பட்ட கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது, மேலும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் சாலைகளை சுத்தம் செய்து வருகிறது. மேலும், இந்த வருடாந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பூசாரிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவு தீவுக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கடற்படையால் மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த வருடாந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பூசாரிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவு தீவுக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கடற்படையால் மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/237999
3 weeks ago
அண்ணை தேடும்போது கீழுள்ளவாறு AI தகவல் போட்டுள்ளது. AI Overview இலங்கையில் குளவி கூடுகளைக் கொளுத்துவது நேரடியாக ஒரு பெரிய குற்றமாகப் பார்க்கப்படாவிட்டாலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தீ மூட்டுவது தண்டனைக்குரியது. குளவிகள் சுற்றுச்சூழலுக்கு நன்மையானவை மற்றும் பயிர் பூச்சிகளை வேட்டையாடுபவை, எனவே அவற்றைக் கலைப்பதற்கு பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றுவது அவசியம் Kalki Online. பாதுகாப்பு முக்கியம்: குளவி கூடுகளைக் கொளுத்துவது பெரும் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கலாம், இது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். பரிந்துரை: கூடுகளை அப்புறப்படுத்தத் தேவைப்பட்டால், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் அல்லது நிபுணர்களின் உதவியுடன், பெரும்பாலும் இரவில் குளவிகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் அகற்றுவது நல்லது, தீயிட்டு கொளுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது. மாங்குளத்தில் குளவி கொட்டியதில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி on Tuesday, January 27, 2026 By Batticaloa முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழைய கொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன. குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.battinews.com/2026/01/5_14.html
3 weeks ago
பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுவதால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு கடினமாக இருந்தால் பாபர் பயன்பாடாக இருக்கலாம், பி பி எல் ஆரம்ப ஆட்டக்காராக இறங்கினார், பவர் பிளே ஓவர்களை ஒரு புறத்தில் இருந்து வீணடித்ததுடன் அவருக்கு இணையாக ஆடிய வீரருக்கு அடித்தாட வேண்டிய அழுத்தத்தினை உருவாக்கினார். ரி 20 போட்டியில் ஒரு ஆரம்ப இணையில் ஒருவர் கொஞ்சம் கட்டை போட்டால் அடுத்த நபர் அடித்தாட வேண்டிய நிலை உருவாகி அவுட்டாகும் நிலை ஏற்படும். களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டார், பி பி எல் போட்டி அவருக்கு ஒரு சுய பரிசோதனையாக இருந்திருக்கும். அவுஸ்ரேலிய அடுகளம் போல துணைக்கண்ட ஆடுகளம் இல்லை, பார்ப்போம் பாபர் பாகிஸ்தானை கரைசேர்க்கிறாரா அல்லது காலை வாரிவிடுகிறாரா என. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பையன் சொல்லிவிட்டார் பாபர் ரி 20 க்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.
3 weeks ago
அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றனர். பெற்றோரை பிள்ளைகள் முன் திட்டுவது ஒரு பொறுப்புள்ள ஆசிரியரின் கடமையா?
3 weeks ago
அனுராவை பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டுவதும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளியிடுகிறேன். இதற்கு ஏன் நான் வெட்கப்படவேண்டும்? நீங்கள் ஒருபக்க சார்பாக என்னை அனுரா காவடி என்று விமர்ச்சிக்கும்போதே, நான் உங்களுக்கு வெறுப்பேற்ற எழுதுகிறேன். சிங்கள கட்சிகளுக்கு தமிழ் மக்களின் முழு வாக்கையும் வாங்கி கொடுத்து, தங்கள் சுயநலனை பார்த்து மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிகேட்காத, நிஞாயப்படுத்திய காவடிகளை விடவா நான் காவடி ஆடுகிறேன்? அப்போ யாரும் இப்படி எதிர்ப்போ, ஏளனமோ செய்யவில்லையே, ஏன்? அவர்களுக்கு வக்காலத்து வேறு வாங்கினார்களே அது மட்டும் ஏன் என அறிய ஆவல்! அவர்களை விட நான் ஏதும் செய்யவில்லையே, எதற்காக இவ்வளவு வக்கிரம் என்மேல்? ஒருவர் என்னை இங்கிருந்து துரத்த இவ்வாறான வசைவுகளை பாடினால், எல்லோரும் சேர்ந்தே நான் கருத்து வைத்தவுடன் என்னை துரத்துவதேன்? மற்றைய ஜனாதிபதிகள் செய்தபோது முனகியவர்கள், மௌனம் காத்தவர்கள் அனுராவின் மீதும் அவரை ஏசாதவரை கண்டு பதறுவது ஏன்? இனி வருங்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் அனுராவுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகும், அதற்கு காரணம் இந்த காழ்ப்புணர்ச்சி, தமிழ் அரசியற்தலைவர்களின் எசேச்சாதிகாரமுமே. வடக்கு மக்களே அனுராவை அழைத்து பொங்கல் கொண்டாடினார்களே அவர்களை ஏன் அனுரா காவடி என வர்ணிக்கவில்லை? ஆக, சாத்தான் கருத்து வைக்கக்கூடாது ஒழிய வேண்டும், தாங்கள் புகழாதவரை சாத்தான் ஏதும் சொல்லக்கூடாது. அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க என்று மேலே ஒருவர் குறிப்பிட்டபடி நான் கருத்து வைத்தது தப்பா? அவர் ஏளனமாக வைத்திருந்தால்; நானும் ஏளனமாகவே கருத்து வைத்தேன். இதுதான் சமயம் என்று வந்து விடுவார்கள் விரிந்து கட்டிக்கொண்டு.
3 weeks ago
வில்பத்து பாதுகாக்கபட்ட தேசிய வனத்தில் கள்ள பாதை போட்டால் மூடாமல் எம்ன செய்வார்கள்.
3 weeks ago
அணித் தலைவர்கள்
3 weeks ago
நாம நைட்டே டூட்டி முடிசிடவேணும் ....அதுதான் பனி எல்லாம் வளிச்சிடவேணும்...இல்லையோ நாளைக்கு மச்சுப் பார்க்க தடை போடப்படும்..
Checked
Sat, 02/28/2026 - 11:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed