புதிய பதிவுகள்2

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
கிஸ் அடிக்காத குறை 😂. ஆமியாவது சம்பளத்துக்கு மாரடிப்பவன். அனுர இரத்தத்தில் இனவாதம் ஊறிய விஷ ஜந்து. அனுரவின் சின்னம்மா கூட இப்படி பதற மாட்டார் என நினைக்கிறேன்😂 சீச்சி நீங்கல் ஆனுர தூக்கு காவடி. அதை நிறுவ மேலே உள்ள பந்தி மட்டுமே போதும். அனுர ஈரச்சாக்கை போட்டு ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய உணர்வை அழிப்பதை தெரிந்தும்…. சில்லறை லைக்சுக்காக படம் காட்டும் யூடியூப்பர்கள் போல யாழில் வந்து அனுர காவடி ஆடுவது.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
அதாவது வடக்கு கிழக்கு மக்களுக்கு தீங்கு விளைவித்தது "தமிழ் பாராமிலிட்டரி" மட்டுமே ....அதற்கான விசாரனையை அனுரா மாத்தையா கோஸ்டி முடுக்கி விட்டுள்ளது ...அதிரடியாக கைது செய்யப்பட்டு மெல்ல மெல்ல விசாரணை செய்து ராஜமரியாதை அவர்களுக்கும் கொடுக்க படும்...

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
ம்ம்ம்….உது செய்தவர்…செய்யாதவர் எல்லாரும் வழமையா அடிக்கிற கேட்டு புளிச்சு போன டயலாக்தான் அண்ணை 😂. தலைவர் வெளிநாட்டுக்கு பல்மருத்துவம் படிக்க அனுப்பினவர் என்பது தொட்டு யாழில் எத்தனை கஞ்சா கப்ஸா கதையளை நாங்களும் கேட்டு வாறம்😂. நீங்கள் செய்யலாம்…ஆனால் அதை சொன்னால்தானே நாங்கள் பாராட்ட முடியும். சொல்லவும் மாட்டியள், எனவே பாராட்டவும் முடியாது, சொல்லி செய்பவரை பாராட்டினால் அதையும் நொட்டை சொன்னால்? இங்கே ஆமி விளையாடும் கேம் புரியாத பபாக்கள் அல்ல யாரும். உன்னிப்பாக கவனித்தால்…ராசையா குடும்பத்தை பாராட்டிய எவரும் ஆமியை பற்றி ஒரு வரி குஇட எழுதவில்லை என்பது புரியும். அனுரவுக்கு இத்தனை காவடி எடுத்த நீங்கள் இப்படி எழுத வெட்கமாயில்லை? இராணுவத்தை, மகிந்தவை முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளிநாட்டு அளுத்தத்துக்கு இணங்கி நிறுத்தி விடாதீர்கள், எம் ஆதரவு உண்டு என நெட்டி தள்ளிய பச்சை இனவாதி அனுர, ஜேவிபி. அனுரவுக்கு காவடி தூக்கும் உங்களுக்கு ஆமியை கண்டதும் மாவீரர் நினைவு வந்திட்டாம். நல்ல மாய்மாலம்😂.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
இராணுவத்தினருக்கு வரவேற்பு அளித்த இந்தப்பாடசாலைக்கு அண்மையிற்தான் பறாளை முருகன் ஆலயம் உள்ளது, வசதியாக போய்விட்டது. பாடசாலைக்கு அருகில் விகாரை!

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

3 weeks ago
பெரும் பகிடி. இவர்களால் முடிந்ததா அவர்களின் மனங்களை வெல்ல? அப்படியிருக்கும்போது இந்த விமர்சனம் அபத்தமானது. சரி சிங்களவரே உங்களை இனி தமது அரசியல் தலைவராக தெரிந்தெடுக்க மாட்டார்கள். அது நமது மக்களின் சாபம். முடிந்தால் முயன்று பாருங்கள்! உங்களை தவறை மற்றவர் மேல் சுமத்தி உங்களை புனிதர்களாக காட்ட முயல்கிறீர்கள், உங்கள் தவறு மக்கள் முன் வெளிப்படுத்தப்படும்வரை. அதற்காகவே சில பொய்களை பரப்பி அரசாங்கத்தின்மீது உளவியல் போராட்டம் நடத்துகிறீர்கள், உங்களை பிடித்து உள்ளுக்குள் போடும்வரை துடிப்பீர்கள். ஒன்று, அனுரா அழிவு இல்லை நீங்கள் அழிவு. அதோடு முடியும் இந்தப்போர். மல்லி! நீங்கள் ஜனாதிபதியாகவே வரமுடியாது, வீணாக கனவு கண்டு அழிந்து போகாதீர்கள். தமிழரை அழித்து ஒழித்தீர்கள், இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால், சிங்கள இனமே அழியும்!

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
😂செய்தால் அதை சொல்லி காட்டி படம் காட்ட வேண்டிய தேவை இல்லை...இந்த இராணுவத்தினர் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த சம்பளத்தில் கட்டி கொடுக்கின்றனர் ....ஏதோ உருகி செய்த மாதிரி கதை விட்டு நல்ல பிள்ளை சேர்டிவிக்கேட் எடுக்க நிற்கினம் ....அதை வைத்து சமாதான் புறாக்கள் பறக்க போகுதாம் போராட்டம் தொடங்கிய காலத்தில இருந்து நாங்கள் நொட்டை தானே கதைக்கிறோம் ... பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்...

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம். அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன? அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

3 weeks ago
தம் மக்களை பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் தூக்கினர். தமிழருக்கெதிரான அடக்குமுறைகளை மறைப்பதற்காக அவர்களை பயங்கரவாதிகளாக்கினீர்கள். இங்கு அடக்குமுறை நடந்தது என்பதை பல அரசியல்வாதிகளும் நீங்களுமே ஏற்றுக்கொண்டே, புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென்று சர்வதேசத்துக்கு வாக்குக்கொடுத்துள்ளீர்கள். அதிகாரங்களை பகிர்ந்து வாழ மறுத்தினாலேயே நாடு இந்த அழிவை சந்தித்தது என்றும், நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது என்றும்.அரசியல்வாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றோர் அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் வழங்கியதே என்று ஒரு சிங்கள அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனும் விநாயக மூர்த்தி முரளிதரனும் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தே பிழைத்தனர். கோவணத்துடன் இருந்த அவர்களை வெள்ளை ஆடை அணிவித்து அழகு படுத்தியது திரிபோலி எனும் இராணுவப்பிரிவிலுள்ள ஒரு தனிக்குழு திரிபோலி என்பது 2009 கு பின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைக்கப்பட்டது என ஒரு இராணுவப்புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவரும் இவரை சார்ந்தவர்களும் நமது சில நேர்மைவாதிகள் எனும் பெயரில் புலிகளை சாடுவோரும் இன்னும் புலிகளை சாடுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழர் நாதியற்றவர்கள் ஆனார்கள். ஒரு நல்ல தலைவனே இல்லை அவர்களை தொடர்ந்து வழிநடத்த, அவர்களை வைத்து குறை கூறி தாம் பிழைப்பு நடத்துகின்றனர். சுதந்திரத்தை வென்றவர்கள் இராணுவத்தினரா? பாவம் நாமலும் சில இனவாதிகளும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இனவாதம் மதவாதம் இதைத்தவிர அரசியல் செய்வதற்கு தெரியவுமில்லை, விடயங்களுமில்லை. அவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களிடம் அந்த அறிவு இருந்தாற்தானே வெளிப்படுத்துவதற்கு. அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதைத்தானே கொடுக்க முடியும். இராணுவத்திற்கு சுதந்திர தினத்தில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றால்; அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு நாமல் தயாரா? இந்த இராணுவத்தளபதிகளை சில நாடுகள் தடை செய்திருக்கின்றனவே அதை நீக்க இவர் என்னஉறுதியான நடவடிக்கை எடுத்தார் சுதந்திர தினத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்று அடம்பிடிப்பவர். இவர் இராணுவத்தினருக்காகவா அழுகிறார்? தங்களை ஓரங்கட்டி விட்டார்களேயென புலம்புகிறார், நல்லிணக்கம் மலர்ந்து விடுமோவென அஞ்சுகிறார். மதத்தலைவர்கள் மதத்தைப்பற்றி அதன் கொள்கைகளைப்பற்றி போதிக்காமல் அரசியல், வன்முறைகளைப்பற்றி கதைப்பது கேலிக்கூத்தே, அவர்களை யாரும் அவமதிக்கவே செய்வர். மதத்தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மதக்கோட்பாட்டின்படி நடக்க வேண்டும், இல்லையேல் காவியை கழற்றிவிட்டு போராடவேண்டும். விகாரைக்குள் பதுக்கியிருந்துகொண்டு வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு வன்முறை இரத்தம் பற்றி பேசக்கூடாது, யாரையும் அச்சுறுத்தக்கூடாது, நாட்டை அழிக்கக்கூடாது, அது மதத்துக்கே இழுக்கு. அட இது வேற பெருமை பேச வேண்டுமா? ஆமாம் அவர்கள் நிலத்தில் அவர்களுக்கு சுதந்திரமில்லை இராணுவம் இருக்கிறது. அவர்கள் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்தமுடியவில்லை ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு விகாரைகள் எழுந்து நிற்கின்றன, அவர்கள் தொழில் வளம் அவர்களிடமில்லை, உறவுகள் இல்லை அதற்கு காரணம் இந்த சுதந்திரம். அந்நியர் நாட்டில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்குமா? சுதந்திர நாள் நம் மக்களை அடிமையாக்கிய நாள், அதை நாங்கள் அவ்வாறுதான் அனுஷ்டிப்போம். அதை எதிர்க்கும் நீங்கள், நாங்கள் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் அதனால் நமக்கு எங்கே சுதந்திரமுண்டு என்பதை நிரூபியுங்கள். முதலில் சுதந்திரம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி கருத்து சொல்வதற்குமுன். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சட்டத்தரணி.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
இப்போது அன்பிற்கும் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் அமைதியும் அபி விருத்தியும் கொண்ட தமிழர்கள் பிரதேசங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றார்.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பச்சை இனவாதியாக உள்ள ஒரு நாட்டில்தான் இப்படி எல்லாம் நடக்கும் 😂.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
இராணுவம் இந்த மக்களை அழித்து, பொருளாதாரத்தில் நசுக்கி, உறவுகளை கொன்று, அவர்களின் தொழில் வளங்களை அபகரித்து வாழ விடாமல் செய்து ஏதிலிகளாக்கியது, அதையே சுட்டிக்காட்டுகிறோம். செலவு செய்தது தமிழன், அதை யாரும் நொட்டை சொல்லவில்லை. இராணுவத்தின் அடாவடிகளை, அவர்களால் காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் குடும்பத்தினர் தெருவில் அலைகின்றனர் நிஞாயம் தேடி. இன்னொருபுறம் அவர்களுக்கு மாலை, மரியாதை, ஆரத்தி, தமிழரின் நிலங்களில் இராணுவம். நேற்று ஒரு செய்தி படித்தேன், இராணுவம் வெளியேறுவதை வடக்கு கிழக்கு மக்கள் விரும்பவில்லையாம். அதற்கு ஆதாரமாக இந்தச்செய்தி இன்று. ஏழை மக்களின் நிலங்கள் விடுவிக்க சந்தர்ப்பமே இல்லைப்போலுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

3 weeks ago
ஜாலியன் வாலா பக் படுகொலையில் ஜெனரல் டயர் தான் உத்தரவிட்டவன் மிகுதி எல்லாம் படுகொலையை அரங்கேற்றியவர்கள் இந்திய பிரிட்டிஷ் கை கூலிகளே சொந்த மக்களை கொன்றாலும் அடிமையாக இருப்பதே சுகம் என்று வாழ்பவர்கள் . அதே பிரிட்டிஷ் இராணுவம் கிழக்கு ஆசியா பக்கமும் ஆட்சி பரம்பலை செய்தது அங்கு எல்லாம் இந்தியா போலவோ ஸ்ரீ லங்கா போலவோ அடிமை படைகள் அவர்கள் நாட்டுக்கு எதிராக பெரிதாக சேரவில்லை .இது வரலாறு . இங்கு என்னவென்றால் எப்போதோ மவுனித்த அமைப்பு மேல் சிங்களவனை விட கேவலமாய் காறி உமிழும் தொடற்சியான வண்மம் என்ன ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓட வைப்பம் என்று சொன்னவர்களிடம் கேள்வி கேட்க வக்கற்று குறுகிய மனப்பான்மையில் புலிகளை வசைபாடுவது ஒன்றே முழு நேர தொழில் போல் யாழை உபயோகிப்பது சரியா என்று தெரியவில்லை .

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
இராணுவத்தை ஈடுபடுத்தாமல் நீங்கள் மானிப்பாயில் இப்படி ஒரு காரியத்தை செய்யும் போது அதை இதை விட இரு மடங்கு பாராட்டுவோம் அண்ணா😂. #நொட்டைக்கு குறையில்லை 😂

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

3 weeks ago
எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks ago
அவுஸ்ரேலியா அணியில் சிற‌ந்த‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை Nathan Ellis ப‌ர‌வாயில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள்...............அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை அவுஸ் அணியில் ரிம் டேவிட் விளையாடுவ‌து அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்..........அவ‌ர் முற்றிலும் காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டாரோ தெரியாது......................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks ago
உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 21 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கறுப்பி சுவி முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் 20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி கோஷான் சே நந்தன் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
Checked
Sat, 02/28/2026 - 11:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed