புதிய பதிவுகள்2

மனைவிக்காக குடிமக்களிடம் பணம் கொடுத்து நிலம் வாங்கிய சோழ மன்னன்

4 weeks 2 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2025, 02:34 GMT தற்போதைய அரசுகள் பொது மக்களின் நிலம் தேவைப்பட்டால், அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து அந்த நிலத்தைப் பெறுகின்றன. பல தருணங்களில் நிலத்திற்கான இழப்பீடு போதுமானதாக இல்லை என அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் நடக்கிறது. ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திரன் தமக்குத் தேவையான நிலத்தை, மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய நிகழ்வு ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து "புதுச்சேரி மாநில கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் "இன்ஸ்டிட்யூட் பிரான்சிஸ் டி பாண்டிச்சேரி" வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்களின்படி, இந்த வரதராஜ பெருமாள் கோவிலின் மேற்குச் சுவரில் கி.பி. 1058ஆம் ஆண்டில் சோழ அரசன் இரண்டாம் ராஜேந்திரன் உத்தரவுப்படி வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்தக் கல்வெட்டு, அரசன் பணம் கொடுத்து நிலம் வாங்கியது தொடர்பான தகவலைத் தெரிவிக்கிறது. படக்குறிப்பு, திருபுவனை கோவிலில் மொத்தம் 188 கல்வெட்டுகள் உள்ளன மக்களின் நிலத்தை பணம் கொடுத்து வாங்கிய சோழ மன்னன் சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரன் மக்களின் நிலத்தை பணம் கொடுத்து வாங்கியதைக் குறிக்கும் அந்தக் கல்வெட்டு உள்ளது. "ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கொல்" எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டில் "பிராட்டியார் பிரா தேக உலோக மாதேவியார் திருநாமத்தால் நம்மூர் தெந்பிடாகை குஞ்சிரமல்ல பேரரி கீழ் புத்தூரா ஜனநாத நல்லூர் கட்டளையில் குடிமக்கள் நிலத்தில் விலைகொண்ட நிலம் முற்ப்பிட்ட" என்ற செய்தி உள்ளது. அதாவது, கி.பி. 1058ஆம் ஆண்டில் இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் மன்னர், தனது மனைவியின் பெயரால் பணம் கொடுத்து நிலத்தை வாங்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. நில வகைப்பாட்டின்படி அதை உரிய பிரிவின்கீழ் வகைப்படுத்தி அதையும் ஆவணப்படுத்தியுள்ளனர். அரசன் அதிகாரம் பெற்றவனாக இருந்தும் கூட, மக்களிடம் இருந்து சோழ அரசர் நிலத்தை வாங்கியபோது அதற்கு உரிய விலை கொடுத்துப் பெற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. படக்குறிப்பு, சோழர் காலத்தைச் சேர்ந்த செய்திகளைக் கூறும் பல கல்வெட்டுகள் திருபுவனை கோவிலில் உள்ளன ஏரியின் 'வயிற்றில் குத்திய' மர்ம நபர்கள் இந்தக் கோவிலின் கல்வெட்டுகளில் வேறு சில சுவாரஸ்யமான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் தெற்கு சுவற்றில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், உடைந்த ஏரியின் கரையை கட்டித் தந்தவருக்கு அரசு மரியாதை செய்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பராந்தக சோழனால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ வீரநாரயணப் பேரேரியைச் சிலர் உடைத்து விட்டனர். இந்த உடைப்பை, இப்பகுதி அதிகாரியான உத்தம சோழ விழுப்பரையன் சரி செய்து கொடுத்துள்ளார். அவரது செயலைப் பாராட்டவும், அவருக்குச் சிறப்பு செய்யவும் மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தானியம், நிலங்களை அளக்கும் மரக்கால், துலாக்கோல் ஆகியவற்றுக்கு அவரது பெயரைச் சூட்டி இந்த முறையிலேயே ஊரிலும் கோவிலிலும் அளக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதை அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், அந்தக் கல்வெட்டில், ஏரியை ஓர் உயிருள்ள ஜீவனை போலவே குறிப்பிடும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏரிக்கரையை உடைத்தவர்களைப் பற்றிக் கூறும்போது, 'ஏரி வயிற்றில் குத்திவிட்ட" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி குலோத்துங்கனின் 9ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 25.7.1079) பொறிக்கப்பட்டுள்ளது. இதே கோவிலின் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதி சுவர்களில் உள்ள முதலாம் ராசாதிராசனின் 33ஆம் ஆண்டு கல்வெட்டு (கி.பி.1051) புதிய ஊரை உருவாக்கிய செய்தியைத் தெரிவிக்கிறது. அதாவது, "முதலாம் ராசாதிராசனின் அதிகாரியாகிய ராஜேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவர் திருபுவனை வடபிடாகையில் கங்கை கொண்ட சோழப் பேரேரி என்ற பெயரில் ஓர் ஏரியை உருவாக்கினார். பின்னர், அதன் அருகிலேயே உள்ள காட்டுப் பகுதிகளைச் சமன்படுத்தி அதற்கு ராஜேந்திர சோழநல்லூர் எனப் பெயரிட்டு புதிய ஊரை உண்டாக்கினார். மக்கள் குடியிருப்பதற்கு முன்பாக இந்தப் பகுதி கொடுக்கூர் என்று அழைக்கப்பட்டது; மக்கள் குடியேற்றத்திற்குப் பிறகு ராஜேந்திர சோழ நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது" என்று அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. திருபுவனை கோவிலில் மொத்தம் 188 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் 187 கல்வெட்டுகள் சோழர்களின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகளைத் தருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3l4762jv0o

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

4 weeks 2 days ago
செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு 31 Aug, 2025 | 09:09 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நாட்டின் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்க வழிவகுக்காது. எனவே செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம், உள்ளக விசாரணை பொறிமுறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வழிகாட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவதில் அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. செம்மணி மனித புதைக்குழி விவகாரம் மற்றும் ஜெனிவா மனத உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். ஆவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதை 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் வெளியேற்றிய விதததிற்கு பின்னர் உலகிற்கு எம்மாள் எதுவும் கூற முடியாது போனது. ஆனால் எமது ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். 2005 ஆம் ஆண்டில் தாரகி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையான சம்பவங்களை மீள் விசாரணைக்கு எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி உத்திரவிட்டார். பாரின் பின்னர் செய்ய குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாம் ஆட்சிக்கு வரும் போது செம்மணி மனித புதைக்குழியில் 30 எழும்புக்கூடுகளே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அங்குள்ள காவலர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்குகின்றது. செம்மணி மாத்திரம் அல்ல, கொக்குத்தொடுவாய், மண்டைத்தீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனித புதைக்குழிகள் இருக்கின்றன. அவற்றை தோண்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது. இந்த புதைக்குழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்ஷர்களே தவிர நாம் அல்ல. சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனித புதைக்குழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. எனவே தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்காது. இருப்பினும் உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்க தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவைப்படலாம். மறுபுறம் சர்வதேச விசாரணைகள் நாட்டிற்குள் வந்ததும், தோல்வியடைந்துள்ள இனவாதிகள் மீள எழுவார்கள். குறிப்பாக ராஜபக்ஷர்கள் இதனை காரணம் காட்டி இனவாத அரசியலை முன்னெடுப்பார்கள். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணிலை நீதவான் நீதிமன்றத்தினால் கைது செய்ய முடியும் என்றால் எமது நாட்டின் நீதித்துறை எவ்வாறு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/223800

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

4 weeks 2 days ago
30 Aug, 2025 | 05:46 PM (எம்.மனோசித்ரா) எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். மஹரகம நகரசபையில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம். எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/223794

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

4 weeks 2 days ago
பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை பொலிஸார் பொறுப்பேற்று நேற்று (30) இலங்கைக்கு விமானம் ஊடாக அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmeznpb5r004zo29ns6su6xd2

யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! அ.நிக்ஸன்

4 weeks 2 days ago
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! -- ---- ----- *இவர்கள் தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள். *செம்மனி பேசும் நிலையில் ரணில் கைது *முறிந்த பனைமரக் குழுக்களின் தொடர்ச்சி *ஜெனீவா கூட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்... -- ---- --- மாற்றுக் கருத்து என்ற போர்வையில் தமிழர்களின் "அரசியல் விவகாரம்" என்ற பிரதான இலக்கை திசை திருப்ப - மலினப்படுத்த பலர் பலவிதமான விடயங்களைக் கையில் எடுக்கின்றனர். 2009 இற்குப் பின்னர் இத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் உருவெடுத்து முளைத்துள்ளது. முறிந்த பனைமரக் குழுக்களிடம் இருந்து 1980 களில் ஆரம்பித்தது தான் இந்த மாற்றுக் கருத்து. உண்மையில், விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றுக்குள் வரக் கூடிய மாற்றுக் கருத்து என்பது, அந்த இனத்தின் விடுதலை உணர்வுக்கு மற்றொரு வகிபாகத்தில் அறிவுசார்ந்து உரமூட்டுவதாக அமைதல் வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்களை சிதைப்பதற்கே மாற்றுக் கருத்து - ஜனநாயகம் - என்று கட்டமைக்கப்படுகிறது. இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் யார் என்று பார்த்தால்---- A) தமிழ் பேசத் தெரியாத ஆங்கிலம் பேசும் தமிழர்களாக இருப்பர். B) அல்லது சிங்களம் கலந்த தமிழர்களாக இருப்பர். C) அல்லது புலி எதிர்ப்பாளர்களாக இருப்பர். D) அல்லது கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரி - முற்போக்கு வாதம் பேசும் தமிழர்களாக இருப்பர். முற்போக்குத் தமிழ் இலக்கியவாதிகள் சிலரும் இந்த மாற்றுக் கருத்தாளர்களுக்குள் அடங்குவர். இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் என்ன செய்வார்கள் என்றால்---- தமிழ்த் தேசிய நோக்கு நிலை எப்போது எழுச்சி அடைகிறதோ அல்லது தீவிரமாக பேச ஆரம்பிக்கப்படும் சூழல் தென்பட்டால், உடனடியாக யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பார்கள். அல்லது கொழும்பு அரசியலில் ஏதேனும் திடீர் அரசியல் சர்ச்சைகள் நடக்கும் (Sudden Political Controversy) உடனடியாக நடந்த சில உதாரணங்கள் -- 1) செம்மணி விவகாரம் கொழும்பில் உள்ளக ரீதியாக பேச ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிலையில்தான் ரணில் கைது நடந்திருக்கிறது. 2) இச் சூழலில்தான் மாற்றுக் கருத்தாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள். 3) கொழும்புத் துறைமுக மனித புதை குழி பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. துறைமுக மனித புதை குழி பற்றி தூதுவர்களுக்கும் விளக்கமளிப்பது இந்த மாற்றுக் கருத்தாளர்கள் தான். 4) இந்த மாற்றுக் கருத்தாளர்கள்தான் ஜேவிபி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருடன் சமப்படுத்தி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் பற்றிய நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட தயார்படுத்தி வருகின்றனர். 4) ஆணையாளரின் உருப்படியில்லாத உள்ளக விசாரணை என்ற, அரசாங்கத்தைக் காப்பற்றும் முன்னோடி அறிக்கையைக் கூட (Pioneer Report to Protect the Government) நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில், மாற்றுக் கருத்தாளர்களின் கூட்டங்கள் - ஆய்வுகள் யாழ்ப்பாணத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து நடக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இலங்கைத்தீவில் மாற்றுக் கருத்தாளர்கள் என்பதன் பொருள், ”ஈழத்தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்” (Political Tools) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/amirthanayagam.nixon

எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன?

4 weeks 2 days ago
3 கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images 28 நிமிடங்களுக்கு முன்னர் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும். சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் செப்டம்பர் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை நடத்தும். 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் 'இதுவரை இல்லாத மிகப்பெரிய' உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ உச்சி மாநாட்டை சீனா நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். சீனா கடைசியாக 2018 ஜூன் மாதம் கிங்தாவில் இந்த நிகழ்வை நடத்தியது. எஸ்சிஓ உச்சி மாநாடு "இந்த ஆண்டு சீனாவில் நடைபெறும் மிக முக்கியமான தேச தலைவர்கள் சந்திப்பு மற்றும் தூதரக நிகழ்வுகளில் ஒன்று", என சீனா கூறியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு தலைவர்கள் கவுன்சிலின் 25-வது கூட்டம் மற்றும் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் உரையாற்றுவார். எஸ்சிஓ விரிவாக்கப்பட்ட வடிவத்தில் இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது. ஷி ஜின்பிங் என்ன கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது? "ஷாங்காய் உணர்வை முன்னெடுப்பதற்கும், காலத்தின் பணியை ஏற்பதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் எஸ்சிஓ-விற்கான சீனாவின் புதிய தொலைநோக்கையும், முன்மொழிவுகளையும் ஷி ஜின்பிங் விரிவாக எடுத்துரைப்பார்", என ஆகஸ்ட் 22 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் "எஸ்சிஓ-வின் உயர்தர வளர்ச்சி மற்றும் முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அறிவிப்பார்" மற்றும் "இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்கவும், உலகளாவிய ஆளுகை முறையை மேம்படுத்தவும் எஸ்சிஓ-விற்கு புதிய வழிகளையும் முறைகளையும் முன்மொழிவார்". எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இணைந்து தியான்ஜின் பிரகடனத்தை வெளியிடுவார்கள், அடுத்த பத்தாண்டு எஸ்சிஓ வளர்ச்சி உத்தியை அங்கீகரிப்பார்கள், மற்றும் "உலக பாசிச எதிர்ப்பு போரின்" 80-வது வெற்றி ஆண்டு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 80-வது நிறுவன ஆண்டு நினைவு அறிக்கைகளை வெளியிடுவார்கள். பாதுகாப்பு, பொருளாதாரம், மக்கள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பு வெளியிடப்படும். ஷாங்காயைச் சேர்ந்த ஜீஃபாங் டெய்லி, ஆகஸ்ட் 26 அன்று வெளியிட்ட செய்தியில், 10 ஆண்டு வளர்ச்சி உத்தி "இந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டது. இது எஸ்சிஓ-வின் "முன்னுரிமை ஒத்துழைப்பு திசையை" நிறுவும், இது அமைப்பின் "நிலையான வளர்ச்சி" மற்றும் "சுய கட்டமைப்புக்கு" முக்கியமானது எனக் கூறியது. யார் கலந்துகொள்கிறார்கள்? பட மூலாதாரம், Xinhua News Agency படக்குறிப்பு, இந்த முறை எஸ்சிஓ மாநாட்டில் முன்பெப்போதையும் விட அதிக நாடுகள் பங்கேற்கும் 2001-இல் சீனா, ரஷ்யா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட எஸ்சிஓ, இப்போது 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. 2017 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டன, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானும் பெலாரஸும் இணைந்தன. 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள், பார்வையாளராக மங்கோலியாவும், அமைப்பின் 14 பேச்சுவார்த்தைகளின் கூட்டாளிகளில் எட்டு நாடுகளான அஜர்பைஜான், ஆர்மீனியா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், துருக்கி, எகிப்து மற்றும் மியான்மரும் பங்கேற்கும். தென்கிழக்கு ஆசியாவுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்படும், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவையும் நட்பு நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் துர்க்மெனிஸ்தானுடன் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். 2024 இல், விருந்தினர் நாடான துர்க்மெனிஸ்தான், பேச்சுவார்த்தை கூட்டாளிகளான அஜர்பைஜான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியுடன் இணைந்து, கசாக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் முதல் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் பங்கேற்றது. உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு விருந்து அளிப்பார், மேலும் சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த அமைப்பில் சீனாவுக்கு இணையான மிக முக்கியமான நாடுகளின் தலைவர்களான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான ஷி ஜின்பிங்கின் சந்திப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். புதின் கடைசியாக 2024 மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், கடந்த ஓராண்டில் இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்கு செல்கிறார். ஆகஸ்ட் 28 அன்றைய ஊடக அறிக்கைகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர் செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள். சீனா வழங்கிய பங்கேற்பாளர்களின் பட்டியலின் அடிப்படையில் பார்க்கையில், 2021 ஆகஸ்டில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உயர்மட்ட பிரதிநிதியை அனுப்பாத ஆப்கானிஸ்தான், இம்முறையும் கலந்துகொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் 2012 இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது, ஜூலையில் ரஷ்யாவிடமிருந்து தூதரக அங்கீகாரம் பெற்றது, மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் வாங் யி காபூலுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். நட்பு அணுகுமுறைகள் இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான் இல்லாதது, தாலிபானின் பங்கேற்பு குறித்து எஸ்சிஓவுக்குள் இன்னும் எதிர்ப்பு குரல்கள் இருப்பதைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 28 வெளியான ஊடக செய்திகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர், செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள். ஊடகங்கள் என்ன சொல்கின்றன? உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, சீன ஊடகங்கள் இப்போது "உலக மக்கள்தொகையின் கிட்டத்தட்ட பாதியையும், உலக நிலப்பரப்பின் கால் பகுதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது", என எஸ்சிஓ அமைப்பின் வளர்ச்சியைப் புகழ்ந்தன. 2024 இல் சீனாவின் மற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடனான வர்த்தகம் 512.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, "புதிய உச்சத்தை" எட்டியது என வணிக அமைச்சகம் ஆகஸ்ட் 27 அன்று தெரிவித்தது. அரசு நடத்தும் நாளிதழான குளோபல் டைம்ஸ், சீன சமூக அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரை மேற்கோள் காட்டி, எஸ்சிஓ-வின் உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் வலுவான செல்வாக்கு "பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்" எனக் கூறியது. "எஸ்சிஓ புதிய வகை சர்வதேச உறவுகளுக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கும் முன்மாதிரியாக உள்ளது, மேலும் குறிப்பிடத்தக்க சர்வதேச செல்வாக்குடன் உருவாக்கும் சக்தியாக விளங்குகிறது," என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி, ஆகஸ்ட் 23 அன்று ஒரு கருத்துரையில் தெரிவித்தது. எஸ்சிஓ "வரலாற்றின் சரியான பக்கத்தில்" மற்றும் "நீதியும் நியாயமும் உள்ள பக்கத்தில்" நிற்கிறது, என்று அது மேலும் தெரிவித்தது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமைப்பின் ஒருங்கிணைந்த குரல், "உலக ஆளுகையை மிகவும் நியாயமான மற்றும் பகுத்தறிவான திசையில் முன்னெடுக்கும், உலக தெற்கை ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்த்தை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிநடத்தும்". என்றும் அது கூறியது. பல கட்டுரைகள், அமைப்பினுள் ஒத்துழைப்பை நெறிப்படுத்தும்,"பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, பல்வேறு நாகரிகங்களுக்கு மரியாதை, மற்றும் பொது வளர்ச்சிக்காக உழைப்பது" ஆகிய கொள்கைகளை கொண்ட "ஷாங்காய் உணர்வு" பற்றி குறிப்பிட்டன. "காலம் மாறும்போது, இதன் சமகால மதிப்பு மேலும் தெளிவாகிறது, தற்போதைய உலக ஆளுகை இக்கட்டைத் தீர்க்கவும், சர்வதேச வேறுபாடுகளை களையவும், மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு சித்தாந்த உத்வேகத்தை வழங்குகிறது," என்று சின்ஹுவா ஆகஸ்ட் 23 அன்று தெரிவித்தது. எஸ்சிஓ-வில் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பொறுப்பான தூதர் ஃபான் சியான்ரோங், "சாங்காய் உணர்வு" எஸ்சிஓ-வின் "வேர் மற்றும் ஆன்மா" என்று விவரித்தார். இது "நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான எஸ்சிஓ நாடுகளின் தேவைகளை முழுமையாக எதிரொலிக்கிறது" மற்றும் "பனிப்போர் மனநிலை, நாகரிகங்களின் மோதல் போன்ற காலாவதியான கருத்துக்களை கடந்து நிற்கிறது" என்று சின்ஹுவா அறிவித்தது. அமைப்பின் உலகளாவிய செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு குறித்த பேச்சுகளுக்கு அப்பால், இணைப்பு, பெரிய தரவு, ஆற்றல் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் அமைப்பினுள் ஒத்துழைப்பு சாதனைகளை ஊடகங்கள் எடுத்துக்காட்டின. 2025-ஐ "எஸ்சிஓ நிலையான வளர்ச்சி ஆண்டு" என்று அவர்கள் குறிப்பிட்டனர், மேலும் நிலையான வளர்ச்சிக்கு தேவையான "பரஸ்பர சாதக அம்சங்கள்" மற்றும் "பெரும் திறன்" உள்ளதாக சுட்டிக்காட்டினர். இந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப, எண்ணெய், வாயு, உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எஸ்சிஓ கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முயற்சிகள் "தொழில்துறை மாற்றத்தை ஊக்குவித்து, எஸ்சிஓ உறுப்பினர்களிடையே தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலி உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்" என்று வணிகத் துணை அமைச்சர் லிங் ஜி-யை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்தது. சீனாவின் கவனம் எஸ்சிஓ-வா அல்லது பிரிக்ஸா? மத்திய ஆசியா பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடைமுறையாக தொடங்கிய எஸ்சிஓ, இப்போது மூன்று கண்டங்களில் உள்ள நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கம், உலக தெற்கின் தேவைகளை பூர்த்தி செய்வது, "உண்மையான பன்முகவாதத்தை" பாதுகாப்பது மற்றும் "ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு" ஆகிய வாதங்கள், இந்த அமைப்பை சீனா தலைமையிலான மற்றொரு சர்வதேச அமைப்பான பிரிக்ஸைப் போல விரைவாக மாற்றுகிறது. 26 எஸ்சிஓ உறுப்பினர்கள், கூட்டாளிகள் மற்றும் பார்வையாளர் நாடுகளில் 9 நாடுகள் பிரிக்ஸிலும் தொடர்புடையவர்கள். இது 10 உறுப்பினர்களையும் 10 பேச்சுவார்த்தை கூட்டாளிகளையும் கொண்டுள்ளது, சமீப ஆண்டுகளில் உலக தெற்கு நாடுகளை ஈர்க்க விரிவாக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கு மற்றும் ஒற்றுமை குறைந்திருக்கலாம் என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஜூலையில் பிரேசிலில் நடைபெற்ற "பலவீனமடைந்த" பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் லி கியாங் கலந்துகொண்டதால், ஷி ஜின்பிங் பிரிக்ஸ்-க்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஷி ஜின்பிங் அதிபராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு எஸ்சிஓ உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார், மேலும் "சீனா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான தூதரக உறவுகளில் எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளித்து வருகிறது" என்றும், இந்த அமைப்பை "மேலும் உறுதியானதாகவும் வலிமையானதாகவும்" மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பெய்ஜிங் உண்மையிலேயே எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக வேண்டும், ஆனால் தற்போதைக்கு, இந்த இரு அமைப்புகளும் பாதுகாப்புவாதத்திற்கு எதிர்ப்பு, ஒருதலைபட்சம், "ஆதிக்கம்" மற்றும் "அடக்குமுறை" ஆகியவற்றை நிராகரித்தல், உலக தெற்கிற்கு ஆதரவாகவும், மிகவும் நியாயமான சர்வதேச ஒழுங்கிற்காகவும் நிற்பது போன்ற செய்திகளை முன்னெடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. எஸ்சிஓ-வில் அதிக உறுப்பினர்களையும் கூட்டாளிகளையும் சேர்ப்பது, மிக முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அமைப்பை பயனற்றதாக ஆக்கலாமா, மற்றும் "சில நாடுகள் தன்னிச்சையாக கூடுதல் வரிகளை விதிக்கும்" "உலகளாவிய கொந்தளிப்புக்கு" மத்தியில் இது ஒற்றுமையின் தோற்றமாக மாறலாமா என்பது வழக்கம்போல, ஊடக செய்திகளில் குறிப்பிடப்படவைல்லை. "எஸ்சிஓ தனது கதவுகளைத் தொடர்ந்து திறந்து வைத்து, ஷாங்காய் உணர்வை ஏற்கும் நாடுகளை பெரிய எஸ்சிஓ குடும்பத்தில் இணைய வரவேற்கும்," என சின்ஹுவாவுடனான நேர்காணலில், தூதர் ஃபான் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93dr9qy6nwo

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

4 weeks 2 days ago
பாகம் - 5 பொதுவாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போவதானால் எத்தனை மைல் நடக்க வேண டும் என்று சொல்லமாட்டார்கள். எத்தனை மணித்தியாலம் நடக்க வேண்டும் என்றே கூறுவார்கள். எட்டு மணித்தியால நடை, பத்து மணித்தியால நடை என்பார்கள். இந்தப் பிரயாண ஆரம்பத்தில் "இந்தப் பிரயாணம் தான் கொஞ்சம் கஷ்டம். பிற்பகல் 2.30க்குப் புறப்பட்டால் அதிகாலை 4.00 மணிக்கு எங்களுடைய நடையில் (திருமலை மாவட்டப் போராளிகளின்) போய்ச்சேரலாம். உங்களுடைய நடைக்கு அதிகாலை 5.30 மணிசெல்லும் என நினைக்கின்றேன் என்றார் பதுமன். இடையில் எங்குமே தங்கமுடியாது. இந்தப் பயணத்தின்பின் நீங்கள் பொது மக்களைச் சந்திக்கக் கூடியதாக இருக்கும் என்றார். 14-9-90 அன்று திருமலையில் கால் வைத்த நாம் 23-9-90 அன்றுதான் பொதுமக்களைக் கண்ணால் காணப்போகின்றோம். (ஏற்கனவே நான் குறிப்பிட்ட வாழைத்தண்டில் இருந்த காய்களை மக்கள் விழுந்தடித்துப் பொறுக்கி முண்டி விழுங்கிய சம்பவம் 25-9-90 பிரயாணத்தின் போது நடந்தது) இதுவரை நாம் சந்தித்த முகாம்களில் இருந்தவர்கள் பொது மக்களைக் காணமுடியாது? அவர்களுடைய உலகம் இந்தக் காடுகளும், போராளிகளும் தான். நான் ஒருநாள் ஒரு போராளியைச் சந்தித்து இதுபற்றி உரையாடியபோது, தற்போதைய போரைவிட ஒரு நெருக்கடி யானநிலை இந்திய இராணுவத்துடனான போரில் இருந்தது என்று குறிப்பிட்டார். தனக்கு இரு மருமக்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர் களின் நினைவு தன்னை அடிக்கடி வாட்டும் என்றும் குறிப்பிட்டார். தான் அப்போது குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இருந்த பகுதியை அண்டிய காடுகளில் இருந்ததால் காலையில் எட்டு மணியளவில் உயரமான மரங்களில் ஏறி நின்று பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறு குழந்தை களைக் கண்டு ஆனந்திப்பதாகக் குறிப்பிட்டார். அந்தக் குழந்தைகளைக் காணு ம் போது தனது மருமக்களைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறினார். “மென்மையான மனது கொண்டவர்களே போராளிகளாகின் றார்கள். அவர்களால்தான் தமது இனத்திற்கெதிரான அடக்குமுறை களைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதைச் சகித்துக்கொள்ளும் மனம் உடையவர்களே போராட்டத்துக்கு வெளியில் இருப்பவர்கள்” என்று ஒருமுறை போராளி சீலன் (சார்ள்ஸ் அன்ரனி) கூறியது நினைவுக்கு வந்தது. எமது பயணத்தில் இன்னோர் அம்சம் ஓர் இடத்திலிருந்து எம்மை அழைத்துச் செல்லும் போராளிகள் நாம் சென்று அடையப்போகும் முகாமைச் சேர்ந்தவர்களை இடையில் சந்தித்து எம்மை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். திரு. பதுமனும் அவரது மெய்ப்பாதுகாவலர் சிலரும் மட்டுமே எம்முடன் திருமலை மாவட்ட எல்லைவரை வருவார்கள். ஏனெனில் ஒவ்வொரு முகாமைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பகுதிக் காடுகளைப் பற்றித் தெரியும். இடையில் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டாலும் அவர்களால் மட்டுமே சரியான பாதையில் எம்மைக் கொண்டு போய்ச்சேர்க்க முடி யும். இன்றைய பிரயாணம் எட்டு இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டிய பிரயாணம் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஒரு முகாமைப் பகலில் கடந்துவிட்டோம். இந்தப் பிரயாணத்தில் யாராவது கதைக்கவோ, இருமவோ முடியாது. முகாம்களுக்கு மிக அருகிலேயே எமது பிரயாணம் தொடர்வதால் சப்பாத்து ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி எம்மைப் பொறுப்பெடுக்கப் போகும் குழுவும் தனது பிரயாணத்தைத் தொடங்கியிருந்தது. பயணத்தின் இடையில் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுப் பபிற்சிச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரவானதும் முகாம்களின் வெளிச்சம் பிரகாசமாய்த் தெரிந்தது. மிக அருகருகே இருந்த இந்த இராணுவ முகாம் ஏழும் ஒரே இரவில் கடக்க வேண்டியவை இந்த ஏழு முகாமில் எந்த முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எமது பாதையில் படுத்திருந்து தாக்கினாலும் சண்டை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. முழுவதும் வயல்கள். இரவு வந்ததும் ஒருவாறு நான்கு முகாம்களைக் கடந்து விட்டோம். ஐந்தாவது முகாமை நோக்கி நேராக நடக்கவேண்டும். முகாமுக்கு நூறு யார் தூரத்திலேயே எமது பாதை மாற்றப்பட்டது. அந்த இடத்தில் எம்மைப் பொறுப்பேற்க அடுத்த குழு தயாராக இருந்தது. புதிய குழுவுடன் இணைந்து பிரயாணத்தைத் தொடர்ந்தோம். ஆறாவது முகாமை அண்மித்ததும் அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பயத்தினால் இரவில் அவ்வாறு இடையிடையே சுடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதன்பின் தான் சிரமம்தெரிந்தது. முழுக்க சேறுகள் நிறைந்த பாதை. அப்போதுதான் நாம் ஒரு பொது மகனைக் கண்டு கொண்டோம். அப்பாடா! இப் பொதுமகன் எமக்கு வழிகாட்ட வந்தவர், இப் பகுதியை அங்குலம் அங்குலமாகத் தெரிந்துகொண்டவர். பெரும்பகுதி முழங்கால் அளவு சேறு, துப்பாக்கிகளையும், முதுகில் தொங்கும் சுமையான பைகளையும் சுமந்துகொண்டு போராளிகள் படும்பாடு பெரும்பாடுதான். பொத்துப்பொத்தென்று விழுவார்கள் உடல் முழுவதும் சேறு பிரளும். சேற்றை எண்ணிச்சப்பாத்தைக் கழற்றினால் பின்பு வரும் வயல்களில் உள்ள தொட்டால் சுருங்கி கால்களை விறாண்டும். திருப்பி சப்பாத்தைப் போட முடியாது. அடுத்த சில நிமிடங்களில் சேறைச் சந்திக்க வேண்டியிருக்கும். வழிகாட்டியாக இருப்பவர் ஒவ்வொரு இடத்திலும் நின்று இங்கே முள்ளுக்கம்பி உண்டு, இங்கே பள்ளம் உண்டு என்று இரகசியமாகக் கூறுவார். முதுகில் சுமை. நடைக் கஷ்டம். நடக்கும்போதே இப்போராளிகள் தூங்குவதும் உண்டு. தூக்க நடை நடப்பவர்கள் வயல் வரம்புகளில் இடறி விழுவார்கள். வரிசையாகச் செல்லும் போது சிலர் நின்ற நிலையிலேயே தூங்குவார்கள். பின்னால் வருபவர் முதுகில் தட்டி முன்னே போ என்று சமிக்ஞை செய்யவேண்டும். இந்தப் பகுதியில் நடக்கும்போது (எமக்கு அடுத்த பயணத்தில்) ஒருவர் தூக்கத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். ஒருவாறு எட்டு முகாம்களையும் கடந்து விட்டோம். ஆனால் போக வேண்டிய இடம் இன்னும் உண்டு. அதிகாலை 3.15 மணியளவில் சோர்ந்து படுத்து விட்டோம். அப்பாடா என்ன சுகம்! இப்போதும் சிலர் காவலில் நின்றார்கள். மீண்டும் காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் காலை 10.30 வரை நீடித்தது. இரவு மாத்தயா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த முட்டைமாவில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து உள்ளங் கையில் கொட்டிச் சாப்பிட்டதைத்தவிர வேறுசாப்பாடே இல்லை. இனிக்கதைக்கலாம் என்றார் பதுமன். "என்ன பதுமன் இவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டோம். ‘உங்களுக்காகத்தான் இந்தப்பாதை. இல்லாவிட்டால் கழுத்தளவு தண்ணீர், சேறு, காடுகளுக்குள்ளால் தான் போகவேண்டும்!' என் றார். வழிவழியே ஆற்றங்கரைகள், காடுகளில் மக்கள் கூட்டம்கூட்டமாக இருப்பதைக் கண்டோம். இவர்கள் அகதி முகாமுக்கு போகவில்லையா? என்று வழிகாட்டியாக வந்த அந்தப் பொதுமகனைக் கேட் டோம். 'நான்கூட ஒருநாள் அகதிமுகாமில் இருந்துள்ளேன். ஆனால் முஸ்லிம் ஊர் காவல் படையினரின் தொல்லை டொறுக்கமுடிய வில்லை. அது தான் ஓடிவந்து விட்டேன் என்னைப்போல் வெளியேறியவர்கள்தான் இவர்கள்!' என்றார். ‘அகதி முகாம்களில் என்னதான் நடக்கிறது?" என்று கேட்டேன். எதையென்று சொல்ல...' என்றவாறே தொடர்ந்தார். (தொடரும்)

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர், அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள்.

4 weeks 2 days ago
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வல்வை மண்ணின் மகத்தான புதல்வன், சந்நிதியான் அருளில் திகழும் தொண்டர், “அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்” எனப் புகழப்படும் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நாளை (31.08.2025) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 🌺 சந்நிதியான் சுவாமியின் பணி பெரியபுராண நாயன்மார்களின் வழியில், “அடியார்க்கு அமுதூட்டல் தான் உயர்ந்த தர்மம்” என்ற கருத்தை வாழ்வின் கடமையாக ஏற்று நிற்கும் மோகன் சுவாமி, 1989 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவினார். அன்று தொடங்கிய அந்த தர்மம் இன்றும் 37ஆண்டுகளாக, வருடம் 365 நாட்களும், தினம் மூன்று வேளையும் அன்னதானமாக தொடர்கிறது... சந்நிதிக்கு வரும் அடியவர்கள் எவரும் பசியோடு செல்லக்கூடாது எனும் உயரிய சிந்தனையில் சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து அன்னதானப் பணியை அரும்பணியாக செய்து வருகிறார். அன்னதானப்பணியுடன் நின்று விடாது சந்நிதியான் ஆச்சிரமம் ஊடாக பல சமூக, சமய பணிகளையும் ஆற்றுகின்றார். 65 முதியோருக்கு உடை, உணவு, மருத்துவம், கல்விக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்கள், சமூக நலத்திற்கான வீடமைப்பு, கிணறு அமைப்பு, மருந்து வழங்கல் என பரந்து விரிந்த அறப்பணிகளின் பெருங்கடலாக வளர்ந்து நிற்கிறது. தன்னடக்கம் மிக்க தொண்டர் அவரை எவ்வளவு பாராட்டினாலும், சுவாமி தன் வாக்கில் தாழ்மையுடன் – “நான் ஒன்றும் செய்யவில்லை; சந்நிதியான்தான் செய்கிறான்; நான் வெறும் கருவிதான்” என்று கூறுவர். இத்தகைய தன்னடக்கமே அவரை அடியார்க்கு அடியார் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 🌺 சைவக் கலாச்சாரச் சேவைகள் 1992 இல் தொடங்கிய சைவகலை பண்பாட்டுப் பேரவை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. 1998 முதல் மாதந்தோறும் வெளிவரும் “ஞானச்சுடர்” ஆன்மிகச் சஞ்சிகை ஆயிரக்கணக்கானோரின் இல்லங்களுக்குச் சென்று சந்நிதியான் அருள்வாக்கினை பரப்பி வருகின்றது. இந்தச் சேவைகளின் இயக்குனர் கலாநிதி மோகனதாஸ் சுவாமி. 🌺 மலையகத்திற்கான கரம் நீட்டல் 2014 அக்டோபர் 29 மீரியப்பொத்த மண்சரிவு மலையக உறவுகளை சோகத்தில் ஆழ்த்தியபோது, முதலில் உதவிக்கரத்தை நீட்டியவர் மோகன் சுவாமி. அதன்பின் பதுளை, கெக்கிராவ, முல்லைத்தீவு என எங்கு துயரம் ஏற்பட்டாலும் அங்கு அவர் ஆச்சிரமத்தோடு விரைந்து சென்று உணவு, மருந்து, கல்வி, வாழ்வாதார உதவி வழங்கும் பணியில் முன்னிலை வகித்து வருகிறார். விருதுகள் மற்றும் கௌரவங்கள் அவரது தொண்டுகளை உலகம் பாராட்டியதன் சின்னமாக, அமுதவாரிதி விருது, அறப்பணி அரசு விருது, சமூகச் சுடர் விருது, 2017 இல் இந்தியப் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், 2018 இல் யாழ்ப்பாண மாநகரசபையின் “யாழ் விருது” என பல கௌரவங்கள் அவரை அணிந்துள்ளன. ஆனால் மக்களின் நம்பிக்கையே மிகப்பெரிய விருது என்று கருதுபவர் தான் மோகன் சுவாமி. வாழ்த்துப் பிரார்த்தனை “சமயம் என்பது சமூக நலனாகவே வெளிப்பட வேண்டும்” என்பதை தன் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டும் வள்ளல் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வுடன், அடியார்க்கு அமுதளிக்கும் அறப்பணியில் பல்லாண்டு சிறக்க சந்நிதியான் அருள்புரியப் பிரார்த்திப்போம். (நன்றி பாபுஜி) நம்ம யாழ்ப்பாணம்

இரசித்த.... புகைப்படங்கள்.

4 weeks 2 days ago
உஸ் ......... மேலே பார்க்காதே . .........மரத்தில நரி ஒன்று நின்று எங்களைப் பார்க்குது ....... உனக்கு மரம் ஏறத் தெரியாது என்று அந்த நரி நினைத்துக் கொண்டிருக்கு . ........ எங்களுக்கு இன்றிரவு டின்னரே அதுதான் என்று அதுக்குத் தெரியாது .......... ஹா .......ஹா ......... ! 😂

அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? – நிலாந்தன்.

4 weeks 2 days ago
அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? – நிலாந்தன். ரணில் ஒரு “வலிய சீவன்” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒர் அமீபாவைப் போல எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு,சுழித்துக் கொண்டு,வளைந்து நெளிந்து விட்டுக்கொடுத்து,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு என்ற பொருளில் அவ்வாறு கூறியிருந்தேன்.ஆனால் அண்மையில் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் அவரைப் பிணை எடுப்பதற்காக சுட்டிக்காட்டிய நோய்களின் அடிப்படையில் சிந்தித்தால், அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கும் அத்தனை நோய்களும் அவரைப் பாதிக்குமாக இருந்தால் அவர் ஓர் ஆரோக்கியமான ஆளாக இருக்க முடியாது. இதை அமைச்சர் லால் கந்த சுட்டிக்காட்டியிருக்கிறார். தடுப்புக்காவல் நாட்களில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களின்படி,கைது செய்யப்பட்டதன் மூலம் ரணிலுக்கு இருந்த நோய்கள் வெளித்தெரிய வந்தன என்றும் அதன் மூலம் அவர் அந்த நோய்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் எடுத்துக் கொண்டால்,அந்த மருத்துவர் கூறுவதுபோல கைது செய்யப்பட்டதால் அவருக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது அவர் கையில் வைத்திருந்த புத்தகம் போரிஸ் ஜெல்சின் எழுதியது. Unleashed-கட்டவிழ்த்து விடப்படுதல் என்பது அதன் பெயர். அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? அந்த மருத்துவர் கூறுவதுபோல நோய்கள் நீங்கப்பெற்று ரணில் புத்திளமையோடு மீண்டும் அரசியலுக்கு வருவாரா ? அல்லது லால் கந்த கூறுவதுபோல ரணில் ஒரு நோயாளியாக அரசியலில் இருந்து ஒதுங்குவாரா? அவர் ஒரு வலிய சீவன்.இப்பொழுது சீண்டப்பட்டிருக்கிறார். காயப்பட்ட பாம்பு. எனவே பழிவாங்கும் உணர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் எதிர்காலத்தில் இயலாத வயதிலும் அவர் அரசியலில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது அவமானத்தோடும் தோல்வியோடும் அவப்பெயரோடும் அவர் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிடலாம்.அவரைப் போலவே தந்திரமும் சூழ்ச்சிகளும் நிறைந்த அவருடைய மாமன் ஜெயவர்த்தன இறந்த பொழுது அவருக்காக நாடு பெரிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். நவீன சிங்கள பௌத்த அரசியலில் ரணில் ஒரு வித்தியாசமான தலைவர். அவர் என்றைக்குமே சிங்கள பௌத்த ஆடைகளோடு காணப்பட்டதில்லை. மேற்கத்திய ஆடைகளோடுதான் காணப்பட்டார்.அவர் என்றைக்குமே சிங்கள பௌத்த தீவிரவாதத்திற்கு தலைமை தாங்க முற்பட்டதில்லை. லிபரல் முகமூடி அணிந்த ஒரு இனவாதியாகவே என்றென்றும் இருந்தார்.அவருடைய லிபரல் முகமூடி தற்செயலானது அல்ல. அவருடைய மேற்கத்தியப் பாரம்பரியத்தினடியாகக் கிடைத்தது. அவர் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகம் இசைவான ஒரு தலைவர்.எனவே அவர் அந்த முகமூடியை அணிந்தால்தான் தனது வாக்காளர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணலாம். இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் என்று பார்த்தால் முக்கியமான மூன்று முயற்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில்தான் முன்னெடுக்கப்பட்டன.முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை.மூன்றாவது நிலைமாறு கால நீதியின் கீழான முன்னெடுப்புகள். இந்த மூன்றில் இரண்டு முயற்சிகளில் ரணில்தான் சிங்கள பௌத்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தியவர். எனவே தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் அதிகமாக ஈடுபட்ட ஒரு சிங்களத் தலைவராக அவரைக் கருத முடியுமா? ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் ரணிலை ஒரு நரி என்று அழைத்திருந்தார். தனது மாமனைப் போலவே ரணிலும் ஒரு தந்திரசாலிதான். ஆனால் அவருடைய மாமன் அளவுக்கு அரசியலில் அவர் அதிர்ஷ்டசாலி அல்ல.அவருடைய கெட்டித்தனங்களையும் தந்திரங்களையும் சிங்கள மக்கள் அங்கீகரிக்கவில்லை.சிங்கள மக்கள் அவரைப் போன்ற மேற்கத்திய பாரம்பரியத்தின் பிரதிநிதியாக தோன்றுகின்ற ஆனால் முகமூடி அணிந்த ஓர் இனவாதியை விடவும் வெளிப்படையாக தெரியும் இனவாதிகளைத்தான் அங்கீகரித்தார்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். இதனால் ரணில் விக்கிரமசிங்க சிங்கள பௌத்த அரசியலில் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்தான்.விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தாலும் அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் தான். அவர் மட்டுமல்ல அவரை அங்கீகரிக்க மறுத்த சிங்கள மக்களும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்தான்.ஏனென்றால் அவரைப் போன்ற ஒரு தந்திரசாலிதான் சிங்கள மக்களைப் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இருந்து காப்பாற்றக் கூடியவர்.ஏனென்றால் எல்லாப் பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு தலைவராக ரணில் மட்டுமே காணப்படுகிறார்.இந்தத் தகுதி காரணமாகவே அவர் தமிழ் மக்களை அனைத்துலக அரங்கில் தோற்கடிக்கும் வாய்ப்புகளை அதிகமாக கொண்டிருந்தவர்.மேற்கு மைய சமாதான முயற்சிகளில் ரணில் எப்பொழுதும் மேற்குடன் நிற்பார். மேற்கும் ஐநாவும் ரணிலுடன் நிற்கும். இதன் இறுதி விளைவாக தமிழ் மக்கள் அனேகமாக சமாதானம் என்ற பெயரில் ஒரு “தருமர் பொறிக்குள்” அகப்பட நேரிடும். அப்படியொரு தருமர் பொறிக்குள் இருந்து தப்புவதற்காகத் தான் விடுதலைப்புலிகள் இயக்கம் 2005 இல் நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிப்பதைத் தடுத்தது.அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்றும் அழைத்தார். அவர் ஒரு நரியாக இருப்பது தமிழ் நோக்கு நிலையில் ஆபத்தானது. பாதகமானது.ஆனால் சிங்கள நோக்கு நிலையில்,அது சிங்கள பௌத்த அரசியலுக்கு அதிகம் வாய்ப்பானது. பாதுகாப்பானது. இலங்கை ஒரு குட்டித் தீவு. இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவு.அதேசமயம் பேரரசுகளின் வணிக வழிகளில் அமைந்திருப்பது என்பதனாலும் மற்றொரு பிராந்திய பேரரசு ஆகிய சீனாவின் உலகளாவிய விரிவாக்க வியூகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு விட்டதனாலும் உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளினதும் இழுவிசைகளுக்குள் இலங்கை சிக்கியிருக்கிறது. ஒரு குட்டித் தீவு என்ற அடிப்படையில் பேரரசுகளோடு புஜ பலத்தால் மோத முடியாத ஒரு நாடு.ஆனால் புத்தியால் மோதலாம்.புத்தியால் தந்திரத்தால் சமாளிக்கலாம்.சிங்கள மக்கள் தங்களைச் சிங்கத்தின் வாரிசுகளாக கருதலாம். ஆனால் நடைமுறையில் அவர்கள் சிங்கங்கள் அல்ல. ராஜதந்திரக் காட்டில் மிகச் சிறிய பிராணிகள் அவர்கள்.உருவத்தில் சிறுத்த நரி தந்திரம் தான் செய்யலாம். எதிரியையும் எதிரியையும் மோத விட்டுத் தன்னைத் தற்காத்துக் கொள்ளலாம். அதைத்தான் ரணிலின் மாமனார் ஜெயவர்த்தனா ஈழப் போரில் செய்தார். மாமனைப் போலவே மருமகனும் ஒரு தந்திரசாலி. புஜ பலத்தை விடவும் புத்தி பலத்தை நம்பிய ஒரு தலைவர். பேரரசுகளின் ஆபத்தான இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு சிறிய தீவின் தலைவர்கள் அப்படித்தான் இருக்கலாம். அவர்கள் நெஞ்சை நிமித்திக்கொண்டு முன் சென்றால் பேரரசுகள் ஒன்றில் அடித்து முறித்து விடும். அல்லது விழுங்கிவிடும். இது ரணிலுக்குத் தெரியும். எல்லாச் சிங்களத் தலைவர்களுக்கும் தெரியும்.ஆனால் இந்த ஆபத்தை கையாள்வதில் அவர்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் இருந்தன. இந்த விடயத்தில் ரணில் ஒரு தந்திரசாலியாக இருந்தார். தந்திரங்களின் மூலம் அதாவது புத்தி பலத்தால்தான் பேரரசுகளை வெட்டியோடலாம் என்பது அவருடைய அணுகுமுறை. அவர் அவ்வாறு எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்து அணுகக்கூடிய கெட்டித்தனமும் தந்திரமும் மிக்கவர் என்பதனால்தான், அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரே சந்தர்ப்பத்தில்,நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்குமாறு இந்தியா தமிழ்க் கட்சிகளிடம் கூறியதா? மேற்கு நாடுகளுக்கும் இது தெரியும். அவரைக் கண்டபடி கையாள முடியாது. ஆனால் மேற்கு நாடுகளுக்கு ரணிலின் விடயத்தில் உள்ள ஆறுதலான விடயம் என்னவென்றால் அவர் என்றைக்குமே நாட்டை மேற்குக்கு எதிரான திசையில் செலுத்த மாட்டார் என்பதுதான். ஏனென்றால் அவர் அவர்களுடைய குட்டையில் ஊறிய ஒரு மட்டை. எனவே ரணில் தந்திரசாலியாக இருந்தது சிங்கள மக்ககமானது ளுக்கு சாதபாதுகாப்பானது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு பேரரசுகளின் மத்தியில் தப்பிப் பிழைப்பது என்றால் அதன் தலைவர் நரியாகத்தான் இருக்க முடியும்.சிங்கமாக அல்ல. ஆனால் சிங்களக் கூட்டு உளவியலானது சிங்கங்களைத்தான் தேடியது. அதனால் ரணில் சிங்கள பௌத்த அரசியலில் அதிஷ்டம் குறைந்த ஒருவராகவே காணப்படுகிறார். தேர்தல்மூலம் ஒரு ஜனாதிபதியாக வரும் கனவு அவரை பொறுத்தவரை இதுவரை பலிக்கவே இல்லை.அதன் விளைவாக சொந்தக் கட்சிக்குள்ளும் உடைவு. இவ்வாறு ஒரு பலவீனமான இலக்காக அவர் இருந்தபடியால்தான் என்பிபி அவரைத் தூக்கியது. ஆனால் இப்பொழுது அவரை நோக்கி ஒரு திரட்சி ஏற்பட்டு இருக்கிறது. அவரைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் மக்கள் எழுச்சிகளின் பின்னணியில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி தலைமை தாங்கவல்ல தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் என்பிபி வெற்றி பெற்றது.லால் கந்த அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அந்த வெற்றிடத்தில்தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பு ரணிலுக்குக் கிடைத்தது.அந்த வெற்றிடம் இப்பொழுதும் உண்டு. ரணிலை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சிங்கள மேட்டுக்குடி என்பன ஒரு பலமான திரட்சியை உருவாக்கினால் அது எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக மாறலாம். ஆனால் அந்த திரட்சிக்கு தலைமை தாங்க, ரணிலால் முடியுமா? அனுர கட்டவிழ்த்து விட்டிருப்பது எதனை? https://athavannews.com/2025/1445341

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

4 weeks 2 days ago
சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்! நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, அரசியலில் முன்னதாக ஊவா மாகாண சபையின் தலைவராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார். அவரிடம், BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார் மற்றும் யாரிஸ் வகை கார் போன்ற நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இவை மனோஜ் ஏகநாயக்க என்ற எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு நுகேகொடை, நாவல வீதியில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு மற்றும் நிலமும், பாலவத்த வீதியில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடும், கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில் 4 அடுக்கு கொண்ட 55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடும், தெஹிவளையில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நாரஹென்பிட்டவில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைதவிர நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லையில் 70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் சீதுவ பிரதேசத்தில் ஒரு வீடு மற்றும் நிலம் 300 கோடி மதிப்பில் சமீபத்தில் விற்கப்பட்டதாகவும், கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சஷீந்திர ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார் எனக் கூறப்படுகின்றது. இவை தவிர, சஷேந்திர ராஜபக்ஷவிடம் இன்னும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்கள் அவர் பெயரிலும், சில நெருக்கமான நபர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முழுமையான விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445387

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

4 weeks 2 days ago
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்! ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. ‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும் எனவும், இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445381

பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம்

4 weeks 2 days ago
பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம் 31 Aug 2025, 2:27 PM மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம் தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது. ஏற்கனவே மதுரை ஆதீனம் தன் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டதாகக் கூறிய நிலையில் மத மோதலை தூண்டும் நோக்கத்தில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/hunger-strike-against-madurai-atheenam/

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

4 weeks 2 days ago
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் August 31, 2025 3:38 pm மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர். அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/tamil-nadu-fishermens-boats-being-smashed-in-myiliti-ahead-of-presidents-visit/

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

4 weeks 2 days ago
யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து , யாழ்.பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். https://akkinikkunchu.com/?p=339064

இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை

4 weeks 2 days ago
இந்திய பிரதமர் மோடி - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை 31 Aug, 2025 | 11:14 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 29ம் திகதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதையடுத்து, இந்தியா , ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு சீனா சென்றார். அவர் சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிகதி புட்டின் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தி பிரதமர் மோடியிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புட்டினை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில் உக்ரேன் ஜனாதிகதி ஜெலன்ஸ்கியின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/223817

சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி

4 weeks 2 days ago
சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி 31 Aug, 2025 | 11:29 AM ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் இந்தியபிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் சீனா-இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷ்ய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/223819

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

4 weeks 2 days ago
அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள் 31 Aug, 2025 | 03:51 PM செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 முழுமையான கிரகணம் - இரவு 11:01 அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 கிரகணம் முடிவு - அதிகாலை 2:25 https://www.virakesari.lk/article/223852

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு

4 weeks 2 days ago
அந்த மர்ம நபர் - புட்டின். 😛 புட்டினுக்கு... கண்டனம் தெரிவிக்கின்ற குரூப் ஒன்றையும் காணவில்லை. 😂 இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையோ. 🤣 முன்னாள் சபாநாயகரையே சத்தம் இல்லாமல் போட்டுத் தள்ளியதை பார்த்த, செலென்ஸ்கிக்கு இப்ப குலைப்பன் காய்ச்சல் எடுத்திருக்கும். 😂 🤣
Checked
Tue, 09/30/2025 - 15:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed