4 weeks 2 days ago
அனுர பின்வாங்க முடியாத இடத்துக்கு வந்துவிட்டாரா ? - நிலாந்தன் ரணில் வெளியில் வந்துவிட்டார். வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் போது கையில் அவர் வைத்திருந்த புத்தகம் தற்செயலானதா? அல்லது அவருடைய வழமையான பாணியா? அது முன்னாள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜெல்சின் எழுதிய Unleashed-கட்டவிழ்த்து விடுதல் என்ற புத்தகம். அதன் மூலம் ரணில் அரசாங்கத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறாரா? அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்தார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். ரணிலைக் கைது செய்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது பின்வாங்க முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறுகிறார். அவர் ஆங்கிலத்தில் “Crossing the Rubicon” என்ற சொற்றொடரைப் பாவித்துள்ளார். அது ஜூலியஸ் சீசரின் துணிகரமான, ஆனால் பின்வாங்க முடியாத ஒரு யுத்த நகர்வைக் குறிக்கும் சொற்றொடர். பின்வாங்க முடியாத ஒர் இடத்துக்கு என்பிபி முன்நகர்ந்திருக்கிறது என்று பொருள். தொடர்ச்சியாக நிகழும் கைது நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தல் என்பிபி அதை நன்கு விளங்கி வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. தமிழ்த் தேசிய அரசியல் நோக்குநிலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அது சில மாற்றங்களைக் காட்டுகிறது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதுவரை 70 க்கும் குறையாதவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் அரசியல்வாதிகள், உயர் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் படைப்பிரதானிகள், அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாக பாதாள உலகக் குற்றவாளிகள் போன்றவர்கள் அடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்த பின் அதிலிருந்து பின் வாங்கினால், இப்பொழுது சீண்டப்பட்டிருக்கும், தற்காப்பு நிலைக்குத்-defensive-தள்ளப்பட்டிருக்கும் சிங்கள மேட்டுக்குடியும் எதிர்க் கட்சிகளும் பழிவாங்கும் உணர்ச்சியோடு அனுரமீது பாயும். அதாவது தாக்கும் நிலைக்கு-offensive- வளரக்கூடும். எனவே என்பிபி திரும்பிப்போக முடியாது. அப்படிப் போனால் அது எல்லாவிதத்திலும் தோல்வி. அதனால் ரணிலைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய தலைகளைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த மேட்டுக்குடியை ஒருவித அச்சச் சூழலில், தற்காப்பு நிலையில் வைத்திருக்கலாம். ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதோடு சிங்கள பௌத்த உயர் குழாம் ஒன்று திரண்டு விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பின்வருமாறு கூறினார்…”கட்சி பேதமின்றி நாம் ஒன்றிணைய வேண்டும். இவை அனைத்தும் இணைந்து இறுதியில் எமது வீட்டுக் கதவைத் தட்டும். நாம் தற்பொழுது ஒன்றிணைந்து எதிர்கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” இது சிங்கள பௌத்த உயர் குழாத்தின் அச்சத்தை பிரதிபலிக்கும் கருத்தாகும். ரணிலைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க்கட்சிகளும் உஷார் ஆகிவிட்டன. இந்த அரசாங்கம் இப்படியே தொடர்ந்து முன் சென்றால் தங்கள் எல்லாரிலும் கைவைக்கக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஒரு ஒத்திகைதான். இப்போதுள்ள சிங்கள பௌத்த உயர் குழாத்தில் ஒப்பீட்டளவில் மென் இலக்காக ரணில்தான் காணப்படுகிறார். அவருடைய தாய்க் கட்சி உடைந்துவிட்டது. அவர் ஒரு பலமான அணியாக இல்லை. உள்நாட்டில் அவர் அனேகமாக பலவீனமான ஒரு தலைவர்தான். அவர் தண்டு சமத்தாக, மிடுக்காக நிமிர்ந்து காட்சி தருபவர் அல்ல. தன்னை ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தின் தீவிர நிலைகளுக்கு தலைமை தாங்குபவர் அல்ல. அல்லது சிங்கள பௌத்த கூட்டு உளவியலைக் கவரும் விதத்தில் ஆடை அணிகலன்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர் அல்ல. மாறாக அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்பட்டார். மேற்கத்திய அறிவுவாதத்தின் வாரிசாகவும் தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டார். ராஜபக்சக்களை போலன்றி ஏன் அனுரவை போலன்றி எல்லா பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய தந்திரசாலியாகவும் கெட்டிக்காரராகவும் அவர் காணப்பட்டார். ஆனால் அவருடைய கெட்டித்தனங்கள் சிங்கள மக்களைக் கவரவில்லை. சிங்கள மக்களைக் கவர்வதற்கு ராஜபக்சக்களிடம் நிறைய இருந்தது. ரணிலிடம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அவர் அநேகமாக தேர்தல்களில் தோற்கடிக்கப்படும் ஒரு தலைவராக காணப்பட்டார். எனினும் உள்நாட்டில் அவர் பலவீனமாக தலைவராக இருந்த பொழுதும், அனைத்துலக அளவில் அவர் ஒரு பலமான ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி வைத்திருந்தார். மேற்கத்திய தலைநகரங்களிலும் சரி ஐநா, ஐஎம்எஃப் போன்ற உலகப்பொது நிறுவனங்களிலும் சரி அவருக்கு கவர்ச்சி அதிகம். இவ்வாறு உள்நாட்டில் கவர்ச்சி குறைந்த ஒருவரை ஒரு மென் இலக்கை முதலில் கைது செய்ததன்மூலம் அனுர ஒத்திகை ஒன்றைச் செய்தார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நிகழப்போகும் கைது நடவடிக்கைகளுக்கான ஒத்திகை. அதேசமயம்,ஏற்கனவே இளைய ராஜபக்சவாகிய சசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார். நேற்று அவருடைய விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருக்கிறது. மூத்த ராஜபக்சங்களில் கையை வைத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது. மூத்த ராஜபக்ஷக்களில் கைவைத்தால் அது இனவாதத்தை மேலும் முன்னிலைக்கு கொண்டு வரும். யுத்த வெற்றி வாதம் மீண்டும் பலமடையக்கூடும். அதனால்தான் பரீட்ச்சார்த்தமாக சஷீந்திரவில், ரணிலில் கை வைத்திருக்கிறார்கள். அது இன்னொரு வகையில் பழைய பகையை, கணக்கைத் தீர்ப்பது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் பிமல் ரட்டநாயக்க கூறினார் ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்று. அது 40ஆண்டுகளுக்கு முந்திய ஜேவிபியின் கணக்கு. ஜேவிபியின் இரண்டாவது போராட்டத்தை கொடூரமாக நசுக்கியது யுஎன்பி. அப்பொழுது ரணில் அரசாங்கத்தில் ஒரு பிரதானி. எனவே அந்தக் கணக்கைத் தீர்க்க வேண்டிய தேவை ஜேவிபிக்கு இருந்தது. ஆனால் இந்த இடத்தில் மேலும் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஜேவிபிக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. அது ஒரு குற்றச்சாட்டாகவே இல்லை. பிமல் ரட்டநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டிக்காட்டிய, தமிழ் மக்களுக்கு எதிரான நூலக எரிப்பு போன்ற குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்படவில்லை. அரச வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதற்காகத்தான் அவர் மீது வழக்கு. போர்க்குற்ற வழக்கு அல்ல. அவரைக் கைது செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவரைப் போன்ற முன்னாள் ஜனாதிபதிகளும் உட்பட ஏனையவர்களைக் கைது செய்வதற்கான ஒரு பரிசோதனையை என்பிபி செய்து பார்த்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பரிசோதனைக்குள் இதுவரை போர்க் குற்றங்கள் அடங்கவில்லை. உள்நாட்டில் ரணில் தேர்தல் கவர்ச்சி குறைந்த தலைவராக இருந்த காரணத்தால் அவரை ஒரு மென் இலக்கு என்று தீர்மானித்து கைது செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுவிட்டன. சிங்கள பௌத்த உயர் குழாம் மீண்டும் ஒன்று திரளுகிறது. ”தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது”என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். சாலிய பீரிஸ் கூறியதுபோல திரும்பிவர முடியாத ஒரு இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்திருக்கின்றது. எனவே அவர்கள் தொடர்ந்தும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து ஊழலுக்கு எதிராக முன்போனால் மட்டும்தான் தமையும் காத்துக் கொள்ளலாம் எதிர்த்தரப்பையும் பலவீனப்படுத்தலாம். அதேசமயம் இந்தக் கைது நடவடிக்கையால் தமிழ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் சாதக பாதக விளைவுகள் என்ன? ரணில் கைது செய்யப்பட்ட காலம் எதுவென்று பார்க்க வேண்டும். அடுத்த ஜெனீவா கூட்டத்துடருக்கு சில கிழமைகளுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அனைத்துலக அரங்கில் எடுத்துக் கூறுவதற்கு அது அனுரவுக்கு உதவும். ரணில் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அதிகம் இசைவானவர். இலங்கைத் தீவில் மேற்கு நாடுகளின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட இரண்டு சமாதான முயற்சிகளில் அவர்தான் அரச பங்காளி. முதலாவது சமாதான முயற்சி நோர்வையின் அனுசரணையோடு கூடிய சமாதான முயற்சிகள். இரண்டாவது சமாதான முயற்சி, 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். இந்த இரண்டிலும் ரணில்தான் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவருடைய காலத்தில்தான் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக சமாதான முயற்சிகள் அல்லது நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் ஐ.எம் எப்பிற்கும் வாலாயமான ஒரு தலைவரை சில நாட்கள் தடுத்து வைத்ததன் மூலம் அனுர அரசு உள்நாட்டு நீதி தொடர்பில் ஒரு புதிய தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்ப முற்படுகின்றது. ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் வெளியிட்ட திருத்தப்படாத அறிக்கையிலும் அதே கருத்தை பிரதிபலித்திருந்தார். ஐநா புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு ரணில் கைது அரசாங்கத்துக்கு உதவும். இது தமிழ் தரப்பின் நிலைமையை ஐநாவில் மேலும் பலவீனப்படுத்தும். ஐநாவின் பொறுப்புக்கூறல் செய்முறையின் பங்காளியாக இருந்த ஒருவரே கைது செய்யப்படும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அரசாங்கம் ஜெனிவாவில் கூறப்போகிறது. இந்த விடயத்தில் அண்மையில், இன அழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கேட்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது சமயோசிதமானது; பொருத்தமானது. எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலைக் கைது செய்தமை என்பது சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகிறது. அதேசமயம் எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டியுள்ளது. உலக அளவிலும் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அது உதவக் கூடும். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரளும் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க் கட்சிகளும் எப்படிப்பட்ட சவால்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப் போகின்றன என்பதுதான் நாட்டின் எதிர்காலத்தையும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தையும் ஐநாவில் தமிழர் விவகாரம் நீர்த்துப் போவதற்கான வாய்ப்புக்களையும் தீர்மானிக்கும். https://www.nillanthan.com/7697
4 weeks 2 days ago
கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு adminAugust 31, 2025 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பிலேயே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போதிலும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219865/
4 weeks 2 days ago
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது adminAugust 31, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர் காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார். கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர். அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். காவல்துறையினர் குறித்த இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை சான்று பொருளாக மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் https://globaltamilnews.net/2025/219869/
4 weeks 2 days ago
உப்பிடியான வேலையளை செய்யக்கூடிய ஆளெண்டால் புட்டின் தான்🤣 எனவே உது புட்டின்ர நாசகார வேலை எண்டு அடிச்சு சொல்லுறன்.😎
4 weeks 2 days ago
4 weeks 2 days ago
4 weeks 2 days ago
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான இலங்கையின் பதில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுவதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டமா அதிபரின் பதில், இலங்கை அரசின் முழுமையான அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அந்த திணைக்களத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445327
4 weeks 2 days ago
ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்! செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445311
4 weeks 2 days ago
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு பாராட்டு! கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுத் தலைவர்களைக் கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 27ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர்கள் ஐவர் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டிற்கு கொண்டு வருவதில் முன்னிலை வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445298
4 weeks 2 days ago
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு. உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தாக்குதல் மிகக் கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்ததுடன், பருபியின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்தார். உக்ரைனின் வெகுஜன போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற பருபி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளை ஆதரித்ததோடு, 2014 இல் ரஷ்ய சார்பு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவி விலகச் செய்ய வழிவகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445303
4 weeks 2 days ago
குற்றவாளிகளைக் காட்டிக்கொடுப்பது குற்றமென்று, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு கையெழுத்து வாங்கி, குற்றங்களில் ஈடுபடாத தனது இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்குகிறார் சரத் வீரசேகர. 🤔
4 weeks 2 days ago
பாகம் - 4 நீங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏதோ சாப்பிட வேன்டும்தானே? என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன். வேதனையுடன் பெருமூச்சு விட்டவாறே தொடர்ந்தார். ஈச்சமரத்தின் குருத்தை வெட்டிச் சாப்பிடுகிறார்கள். காட்டில் கிடைக்கும் சில வகைக் கொடிகளின் கீழ் உள்ள கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டு வருகிறார்கள், தொலைதூரத்துக்குச் சென்று குளங்களில் மீன்பிடித்து அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்கள் என்ன நடந்தாலும் தமது மண்ணை விட்டுச்செல்லமாட்டார்கள். தமது மண்ணைப் பிரிவது என்பது இவர்களால் முடியாத காரியம். தற்போதைய போரில் கூட இலக்கந்தையில் 10 பேரும், மட்டப்புக்களியில் 35 பேரும் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அகதிகளாகச் செல்வதற்கு இவர்கள் முயலவில்லை என்றார். ஈச்சைமரமும், கிழங்குகளும் மீனும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாள் அந்தப்பகுதியால் எமது போராளி ஒருவன் சென்றான். ஏதோ தேவைக்கு தீப்பெட்டி தேவைப்பட்டது. ஒரு வீட்டில் சென்று தம்பி தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டான். "அண்ணை நாங்கள் அடுப்பு மூட்டியே ஐந்து நாட்கள். எங்களிடம் தீப்பெட்டி கேட்கிறீர்களே! என்றான் அந்தச் சிறுவன்" என்றார் ரூபன். நான் அதிர்ந்துபோய் நின்றேன். இதற்கே இப்படி என்றால் இனிச் சொல்லப் போவதை நீங்கள் கேட்டால்... என்றவாறே தொடர்ந்தார். பசியின் கொடுமையால் உப்பூரலில் இருந்து தோப்பூர் என்ற முஸ்லம் கிராமத்துக்கு பிச்சை எடுக்கச் சென்ற முதியவர்களை 13.9.90 அன்று அங்குள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடித்துக் கொன்றுள்ளனர். சிலரைக் காயப்படுத்தியுள்ளனர் என்றார் ரூபன். கதிர்காமம் மாரியான் (75 வயது), மாரியான் வைரவன் (75 வயது) இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கந்தன் வைரவன் (70வயது), சீனித்தம்பி கந்தையா (75 வயது), வைரவன் சித்திரவேல் (60 வயது) ஆகியோர் நடமாட முடியாதளவுக்கு காயப்படுத்தப்பட்டுள்ளனர்? அத்துடன் தமிழருக்கு எவரும் பிச்சைகொடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர் என்றார். இது மட்டுமல்ல அடுத்த நாள் 14.9.90 அன்று காலை காணாமற்போன இவர்களை தேடிப் போன ஆறுபேரையும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பிடித்துக் கொண்டனர். இவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனக்கென்றால் இவர்கள் உயிரோடிருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்றார். உப்பூரல், முதியவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்த அதே தினம் 13.9.90 அன்று நல்லூரில் இருந்து தோப்பூர் சென்ற க. வைரமுத்து (65 வயது), கந்தையா (76 வயது) வைரன் முத்துக்குமார் (46 வயது) ஆகியோரையும் கடுமையான சித்திரவதைக் குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம் ஊர்காவல்படையினர். வயது போன இவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவு சோளம். அண்மைய இராணுவ நடவடிக்கையின்போது இவர்களின் வீடுகளில் இருந்த சோளத்தை இராணுவத்தினர் எரித்துள்ளார்கள். பிச்சைக்குப் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்கின்றார்கள். அகதி முகாமுக்குப் போனால் அங்கும் மரணம். இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அகதிமுகாமுக்குப் போனால்தான் நிவாரணம் தரமுடியும் என்று சொல்கிறது என்றார் ரூபன். தொடர்ந்து இதையெல்லாம் நீங்கள் கண்ணால் தானே காணத்தானே போகிறீர்கள் என்றார். அவர் கூறியது போலவே அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது. திரு. மாத்தயாவின் வருகை திருமலை மாவட்டத்திலுள்ளதமிழ் மக்களுக்குத் தெரிந்து விட்டது. ஆங்காங்கே அகதி முகாம்களிலும், காடுகளிலும் இருப்போர் எப்படியோ நாம் போகும் பாதையில் கூடிவிடு வார்கள். இவர்களுக்கே சாப்பாடு இல்லை. அப்படியிருந்தும் ஒரு வாழைக்குலையுடன் நின்றார்கள். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் அவர்களின் இந்தப்பண்பு நெகிழ வைத்தது. அவர்கள் கொடுத்த வாழைக்குலையைப் பெற்றுக்கொண்டோம். ட்றக்டரில் இருந்தபடியே அனைவருமாகச் சாப்பிட்டோம். வாழைக்குலையின் அடியில் சிறிய காய்கள் இருந்தன. குறிப்பிட்ட இப்பகுதிக் குள்வந்தபோது தான் தண்டை வெளியே வீசினோம். எங்கிருந்தோ இதைக் கவனித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இதையெடுத்து ஆளுக்கொரு காய்களாகப் பிடுங்கினார்கள் அவசர அவசரமாக முண்டி அவர் விழுங்கினார்கள். அவர்கள் ஓடி வந்த வேகமும், காய்களைப் பிடுங்கியவிதமும், அவர்களின் கோலமும் எம்மனதில் சம்மட்டியால் அறைந்தது போலிருந்தன. (தொடரும்)
4 weeks 2 days ago
முதன் முறையாக ஒரே தரத்தில் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலருக்கு செல்வ சந்நதி ஆலயத்தில் திருமணம் முடித்து வைப்பது புதிய விடயம் இல்லை. இப்படியான திருமண வைபவம் செல்வ சந்நிதி ஆலயத்தில் நீண்டகாலம் நடைபெற்று வருகின்றது. இந்த தடவை சமூக ஊடகத்தின் கவனத்தை பெற்றுள்ளது போல் தெரிகின்றது. ஆனால், முன்பு கொடையாளி எவராவது அனைத்து திருமண தம்பதியினருக்குமான திருமண செலவை ஏற்றுள்ளார்களா என தெரியவில்லை. இப்படியொரு தானம் கிடைப்பதும், கொடுப்பதும் மிகப்பெரியதொரு ஆசீர்வாதம்!
4 weeks 2 days ago
27 Aug, 2025 | 11:02 AM இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கும் என்பார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக எனது காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது காலம் இன்று தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் பணியாற்றிய அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும், ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ.-க்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அஸ்வின் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் என பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். தனது ஐ.பி.எல். பயணத்தில், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். https://www.virakesari.lk/article/223471
4 weeks 2 days ago
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 முக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்! 30 Aug, 2025 | 09:25 PM இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 3.30 மணியளவில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பாதாள உலகக் குழுவினரை அழைத்துவந்த விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223796
4 weeks 2 days ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 30 Aug, 2025 | 09:04 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (30) மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223795
4 weeks 2 days ago
வேலை நிறுத்தம் நிறைவடைந்து ஒரு வாரம் கடந்தும் தேங்கியுள்ள ஒன்றரை கோடி தபால் பொதிகள் 30 Aug, 2025 | 03:37 PM தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இவ்வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டு ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் நாடளாவிய ரீதியில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்தியம் பொறுத்தப்பட்டமை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறித்த சுற்று நிரூபம் என்பனவே இதற்கு பிரதான காரணியாகும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 24ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய போது தபால் மா அதிபர் மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு மேலதிக வேலை நேர கொடுப்பனவை செலுத்துவதற்காக பணிக்கு திரும்புமாறு சுற்று நிரூபமொன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்கமைய ஒட்டுமொத்த தபால் பணியாளர்களும் அவ்வாறே செயற்பட்டோம். மத்திய தபால் பரிமாற்ற சேவையில் 30 சதவீதமானவை மேலதிக வேலை நேர கொடுப்பனவு முறைமையை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சேவைகளுக்கு பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. பணியாளர்களை ஒதுக்குவதற்கு பதிலாகவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலேயே இந்த சேவைகள் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பிரதி பலனாக 10 மில்லியனுக்கும் அதிகமான தபால் பொதிகள் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் தேங்கியுள்ளன. தபால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சகல தபாலகங்களிலும் சுமார் 5 நாட்களுக்கான தபால் பொதிகள் குவிந்துள்ளன. இவ்வாறு நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக நம்புகின்றோம். இந்த பொதிகளுக்குள் தரம் ஒன்றுக்குள் மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள், உயர்தர பரீட்சைகளுக்கான கடிதங்கள், நேர் காணல்களுக்கான கடிதங்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் என பல முக்கிய ஆவணங்கள் உள்ளன. பொது மக்களுக்கான முக்கிய கடிதங்களை இவ்வாறு தேக்கி வைத்திருப்பதற்கு தபால்மா அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நெருக்கடிக்கு அவரே முற்றுமுழுதாக பொறுப்பு கூற வேண்டும். இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தபால் துறை முற்றாக வீழ்ச்சியடையும் என்று எச்சரிப்பதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223782
4 weeks 2 days ago
7 வருடங்களுக்குப் பின்னர் சீனா சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி 30 Aug, 2025 | 09:58 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகவுள்ளதால், ஜப்பானிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15வது வருடாந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சீனா பயணம் : முக்கியத்துவம் என்ன? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட வரி விதிப்பு என டிரம்ப் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சீனாவில் நடக்கவிருக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாளை (ஆகஸ்ட் 31 ) மற்றும் செப்டம்பர் 1ஆம் திகதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட சுமார் 20 உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் தணியத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், எல்லைப் பிரச்சினைகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/223798
4 weeks 2 days ago
எந்த அமர்வாலும் அம்மன் சல்லிக்கும் பயனில்லை ....
4 weeks 2 days ago
ஆரம்பத்திலிருந்தே ஐ. நா. வில் எதிர்ப்பு தெரிவிப்பதும் அவகாசம் கேட்பதும் பொய்யுரைப்பதும் உள்நாட்டில் ரவுடித்தனம் காட்டுவதும் இராணுவத்தை காட்டி தாம் தப்புவதும் இவர்களது வாடிக்கை. இது சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. இவர்கள் ஊழல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பாதாள உலகை நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களே. குற்றவாளிகளை காப்பாற்றுவதில் சந்திப்பதில் காட்டும் ஆர்வம், துடிப்பு, வக்காலத்து வாங்குவது, நிஞாயப்படுத்துவது இவற்றில் இருந்தே இவர்கள் யாரென்பது தெளிவாகிறது. ஒரு கள்ளனை கைது செய்தவுடன் எல்லா கள்ளரும் துடிக்கின்றனர். தாங்களாகவே தங்களையும் இனங்காட்டிக்கொள்கின்றனர். கையில் இருக்கவே இருக்கிறது செம்மணி அகழ்வு, ரணில் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை. எடுத்து விடவேண்டியதுதான். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கும் குறைவில்லை. பதினாறு ஆண்டுகளை கடத்தியவர்கள் இனிமேல் கடத்துவது ஒன்றும் கஸ்ரமில்லையே. 'ஆறின கஞ்சி பழங்கஞ்சியே.'
Checked
Tue, 09/30/2025 - 15:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed