1 month ago
தாய்லாந்து பெண் பிரதமர் நீக்கம் - தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார். 29 ஆகஸ்ட் 2025 தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெறிமுறையை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஷினவத்ராவின் இந்த செயல் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனையே முக்கியமாகக் கருதி, நெறிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் இந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். இவர் தாய்லாந்து நாட்டின் இளம் தலைவராக அறியப்படுகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்டில் தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.இவருக்கு முன்பாக 2011 - 2014ஆம் ஆண்டில் இவரின் உறவினரான யிங்லக் ஷினவத்ரா ஆட்சி செய்தார். இவர் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள். தாய்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பின் இங்கிலாந்தில் உயர்கல்வியை முடித்தார். பின் 2021ஆம் ஆண்டு ஃப்யூ தாய் (Pheu Thai) கட்சியில் சேர்ந்தார். 2023-இல் கட்சியின் தலைவரானார். கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார். 2008ஆம் ஆண்டு முதல் இருந்து அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கப்படும் 5வது பிரதமர் ஆவார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை அங்கிள் என அழைத்தார் ஷினவத்ரா அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹுன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், அவரை 'அங்கிள்' என அழைத்த பேடோங்டார்ன், அவரின் தேவைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, இவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தாய்லாந்து, கம்போடிய எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஹுன் சென்னிடம் தொலைபேசியில் பேசிய பேடோங்டார்ன், 'தாய்லாந்து ராணுவ தளபதி கூலாக தோன்றவே விரும்பினார்' எனக் கூறியுள்ளார். இது நாட்டின் அரசியல் செல்வாக்கு கொண்ட ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். எனினும் இந்த தொலைபேசி அழைப்பை 'பேச்சுவார்த்தை யுக்தி' எனப் பேடோங்டார்ன் கூறினார். இனி ஹுன் சென்னுடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடமாட்டேன் எனவும் அவர் கூறினார். ஹுன் குடும்பத்துடனான ஷினவத்ராவின் நட்பு பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஹுன் சென்னும், பேடோங்டார்னின் தந்தை தக்ஷின் ஷினவத்ராவும் நல்ல உறவில் இருந்துள்ளனர். ஆனால் தொலைபேசி உரையாடல் கசிந்த பின், ஹுன் சென், தக்ஷின் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். பேடோங்டார்ன் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்றார் ஷினவத்ரா நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பேடோங்டார்ன் ஷினவத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார். "ஆனால், தாய்லாந்தை சேர்ந்தவராக இந்த நாட்டுக்காக உழைக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களின் உயிர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பொதுமக்களும் சரி, ராணுவ வீரர்களும் சரி." எனக் கூறிய அவர், நான் ஹுன் உடனான உரையாடலில் சொந்த நலனுக்காக எதுவும் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் "மக்களின் உயிர்களை காப்பாற்றவே நினைத்தேன். அந்த உரையாடலில் அதைதான் வலியுறுத்தினேன்" என்றார். இந்த தீர்ப்பு தாய்லாந்து அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓராண்டாக எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இந்த நாடு, மதம், அரசாட்சியை மிகவும் நேசிக்கிறேன்" என்றார். அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்தாம் வேச்சயாசாய் தற்காலிக பிரதமராக செயல்படுவார். பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியதால், துணை பிரதமர் பும்தாம் வேச்சயாசாய், இவருக்கு பதிலாக பிரதமராக (செயல்) பொறுப்பேற்பார். கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இவரே பிரதமராக செயல்பட்டு வருகிறார். பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly34v4z23do
1 month ago
29 Aug, 2025 | 05:26 PM (நா.தனுஜா) இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்தும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு (30) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருடனான தமது உடன்நிற்பை வெளிப்படுத்தி உரையாற்றிய ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமானது சுமை மிகுந்ததாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கையில் பல தசாப்தகாலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் வாழ்ந்துவருவதாகவும், அந்நிலை தொடர்வதன் ஊடாகக் கடந்தகாலக் காயங்களை ஆற்றமுடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அந்த உறவுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நீதிகோரித் தொடர்ந்து போராடிவருவதாகத் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படாமல் நாடு என்ற ரீதியில் நிலையான வளர்ச்சியோ அல்லது அபிவிருத்தியோ சாத்தியமில்லை எனவும் மார்க் அன்ட்ரூ பிரான்சே எடுத்துரைத்தார். அதேபோன்று தற்போது யாழ். செம்மணியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழியில் சிறுவர்களது மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்களும், பாடசாலைப்புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இது மீறல்களின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாகவும் குறிப்பிட்ட அவர், அண்மையில் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டதை நினைவுகூர்ந்ததுடன் இம்மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நம்பத்தகுந்த சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவேண்டியது அவசியம் எனத் தெரிவித்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி, மனிதப்புதைகுழி அகழ்வு, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் விசாரணை என்பன உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயன்முறைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உரியவாறு உள்வாங்கப்பட்டு, பங்காளிகளாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பிரஸ்தாபித்தார். அத்தோடு 'நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் குறித்த வழக்குகள் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஒத்துழைப்புடன் செயலாற்றுவதன் ஊடாகவே அவர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்பமுடியும்' என்றும் மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டினார். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் இவ்விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படல் என்பன குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அவர், நீதியை நாடுவது என்பது ஒருபோதும் குற்றமாக இருக்கமுடியாது என்றார். 'குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முறையான விசாரணைகள் ஊடாகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருக்கிறது. அதற்கமைய கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்' எனவும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/223723
1 month ago
இந்த சின்ன வயதில் பழையபாடடை அருமையாக பாடுகிறார். பாராட்டுக்கள்.
1 month ago
உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி @Kavi arunasalam அண்ணை.
1 month ago
தமிழ் அரசியல் தலைவர்கள் என்றே கூறுகிறார்கள். அதில் எட்டுப்பேர் என்றும் சொல்கிறார்கள். பார் சிறி என்று எங்கும் சொல்லப்படவில்லை, நானும் சொல்லவில்லை. உங்களின் தவறான புரிதலுக்கு விளக்கம் தர முடியாமைக்கு வருந்துகிறேன்!
1 month ago
ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். மாலைதீவிலும் அப்படி. நேபாலில் நிலமை மோசமாகிறது. 70 வீதமான வாகனங்கள் சீனாவின் மின்சார வாகனங்கள். அண்மையில் 100 மின்சார பேரூந்துகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இந்தியாவால் இப்படி கொடுக்க முடியுமா? நேரமிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
1 month ago
சுமந்திரனையும் அவர் பக்தர்களையும் சனம் ஒதுக்கி வைச்சது கிட்டத்தட்ட ஒரு வித பச்சைமட்டை அடிதான்.என்ன ஒண்டு பட்டும் திருந்தேல்ல. 😂 சுமந்திரன் கொம்பனி திருந்துற நோக்கமும் இல்லைப்போல கிடக்கு..🤣
1 month ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Diver Propulsion Vehicle 1 (class name lost in time) - (craft name lost in time) 1 - Indigenously produced DPV 2 M-tex - - At least 2 Procured 3 Sea-Doo - - 8+ Procured 4 APOLLO AV-1 - The orange DPVs shown in the images above, located in the third row. - 2+ Procured It is widely speculated that a few of these Diver Propulsion Vehicles were destroyed at sea while being transported into de facto Tamil Eelam. In addition, Sea Tigers also possessed a large number of underwater equipment, including IDA71 rebreathers, AQUACOM STX-101 SSC units, BAUER Mariner 200 air compressors, and more. They also used a few improvised underwater breathing rigs, likely for infiltration, made by combining two oxygen tanks and an IDA71 rebreather on a mounting tray, similar to the one shown below. Image 1: improvised underwater breathing rigs *****
1 month ago
இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி இலங்கை ஆடை, கடலுணவு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
1 month ago
ஆடுகள் நனைகிறது என்று இந்த கோவிந்தன் ஓநாய் அழுகிறது... இவன் செய்யாத படுகொலைகளா? பச்சை கொலைகாரப் பாவி... இவன்ட தம்பி ரேப்பிற்கு புகழ் போனவன் கோவிந்தன் கருணாகரம் எ ஜனா (ரெலோ) என்பவர் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்துறையுடன் இணைந்து மட்டக்களப்பில் பெருமளவான படுகொலைகளில் ஈடுபட்டவராவர். இவர் தொடர்பில் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைத் தொகுத்து கோர்வையாக கீழே தந்துள்ளேன் குறிப்பாக, 01/12/1990 அன்று வன்புணர்ச்சிக்குள்ளாகி படுகொலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியின் வணிகவியல் பிரிவு மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி அனுஷ்யா (05/04/1972 - 01/12/1990) என்ற விஜி அவர்களின் படுகொலையுடன் தொடர்புடையவன் ஜனா ஆவான்; அமரர் விஜி அவர்கள் பரதநாட்டியத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கியதோடு மிகவும் வடிவானவருமாவார். இவர் கல்லடியில் தங்கியிருந்து படித்து வந்தார். தன் விடுமுறைக் காலங்களின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு வந்து போவது வழக்கமானதொன்றாகும். அவ்வாறு வந்து செல்லும் வேளையில் அவரை கண்ணுற்ற ரெலோ காவாலிகள் அவரை அடைய வேண்டுமென்ற இச்சையால் இவரது தாய் மாமனான மூதூர் முற்றுகையின் போது மேஜர் கஜேந்திரனுடன் வீரச்சாவடைந்த 2ம் லெப். கோபி (நாகமணி ஆனந்தராசா) அவர்களைக் காரணம் காட்டி இரவில் வந்து தொல்லை கொடுத்துச் சென்றனர். இதனால் இவர் இரவு நேரங்களில் அருகிலிருந்த தோழியின் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போதொருநாள் இரவு அன்னாரை ரெலோ காவாலிகளான ராபர்ட் (சாவொறுப்பு), வெள்ளையன் (சாவொறுப்பு), லோகேஸ்வரராஜா எ ராம், அன்வர் (சோனக இனக்குழுவைச் சேர்ந்தவன்/ சாவொறுப்பு) மற்றும் இந்த ஜனாவின் தம்பியான கோவிந்தன் கருணாநிதி எ ரெலோ மாமா (30.10.2017 அன்று லண்டனில் பார்வை இழந்த நிலையில் இயற்கையால் சாவடைந்தான்) ஆகியோர் அவரது தோழியின் வீட்டில் வைத்து கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றார்கள். கடத்தப்பட்டவுடன் அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ பொறுப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தவனுமான இவனிடம் சென்று கேட்ட போது தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறி மழுப்பினான், அன்னாரின் குடும்பத்தாரிடம். இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இவரது சடலத்தை எடுக்க வேண்டுமெனில் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று கையெழுத்து வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு சிங்கள அரசு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே ஆகும். இத்தனைக்கும் இவர் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவராவார். அத்துடன் 22.10.1990 அன்று படுகொலையான "நாட்டுப்பற்றாளர்" சின்னத்துரை பூரணலட்சுமியின் படுகொலைக்கு உத்தரவிட்டவனும் இவனே ஆவான்; இவரை அவனது உத்தரவிற்கு அமைவாக அன்னாரின் வீட்டிற்கு வந்து கிழவி ரவி, வெள்ளை (சாவொறுப்பு), மற்றும் ராபட் (சாவொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ரெலோ கும்பல் சுட்டுத் தள்ளியது. மேலும் ஜனா நேரடியாகவே தன்கையால் 2ம் லெப். கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற தமிழீழ விடுதலை வீரனை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து சம்மட்டியால் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
1 month ago
ஜமுனாராணியும் இணைந்து பாடியிருப்பார் அன்றைய பிரபலமான பாடல். பல மொழிகளில் இந்தப் பாடல் இருக்கிறது. யேர்மனிய மொழியிலும் கேட்டிருக்கிறேன்
1 month ago
Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று. பல நாடுகளுக்குப் பயணித்திருந்தும், போர்த்துக்கல் மட்டும் எப்போதும் சாத்தியப்படவில்லை. ஆனால் கடந்த வருடம், இந்த வருடக் கோடைகாலத்தில் போர்த்துக்கலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். அந்த முடிவே இந்தப் பயணத்திற்கு வழிவகுத்தது. பயண நகரமாக போர்ட்டோ (Porto)வைத் தேர்ந்தெடுத்தேன். பறப்பதற்கு நேரம் 2 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. போர்ட்டோவிற்கு வந்ததும், உயரமாக வளர்ந்த மரங்களும், பழமையான கட்டிடங்களும்தான் முதலில் கண்களில் பட்டன. எங்கள் ஊரிலுள்ள பூவரச மரங்களின் உயரத்துக்கு இங்கு சிதம்பரத்தை மரங்கள் வளர்ந்து, பூத்து அழகாக நின்றன. சில இடங்களில் பனைமரங்களும் திமிராக நிமிர்ந்து நின்றன. வீதிகளில் நடக்கும்போது, அந்த நகர அமைப்பு எனக்கு கொழும்பு நகரத்தை நினைவூட்டியது. போர்ட்டோவில் இருந்த நாட்களில், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, மீன்களை மட்டுமே சாப்பிடுவது எனத் தீர்மானித்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது Corvina என்ற மீன். இவ்வளவு காலமும் நான் சாப்பிட்ட மீன்களில் இல்லாத ஒரு தனிச் சுவை அந்த மீனில் இருந்தது. ஏன் இந்த மீன் யேர்மனியில் கிடைக்கவில்லை என அறிய இணையத்தில் தேடியபோது, “Meerrabe” அல்லது “Koenigs-Corvina” என்ற பெயர்கள் வந்தன. ஆனால் சந்தைகளில் கிடைக்கவில்லை. தமிழில் அதன் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இனிமேல் மீண்டும் இந்த மீனைச் சாப்பிட விரும்பினால், போர்த்துக்கலுக்குத்தான் போக வேண்டும் போலிருக்கிறது. Corvina மீனை “போர்த்துக்கல் மீன்” என்றொரு பெயரிலும் அழைப்பார்கள் என்று தெரிந்தது. பழமையான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களால் நிரம்பிய தெருக்கள்... என்றிருந்த இந் நகரத்தின் மத்தியில் Livraria Lello என்ற ஒரு பிரபலமான சிறிய புத்தகக் கடை இருந்தது. 1906ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இன்று “உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குள் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடையின் வெளியே நீண்ட வரிசை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுமதிக்கின்றனர். வரிசையில் நின்றபோது, காலநிலை பாதுகாப்பிற்காக சிவப்புக் குடைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முன்னால் ஒரு யேர்மனியக் குடும்பம், இரண்டு பிள்ளைகளுடன் வரிசையில் நின்றனர். அவர்கள் பேசுபவை காதில் விழுந்தன. “முன்பு கடைக்குள் செல்ல இரண்டு யூரோக்கள் மட்டும் கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஐந்து யூரோக்கள் ஆகி, கொரோனாவுக்குப் பிறகு பத்து யூரோக்கள் ஆகிவிட்டது. ஆனால் உள்ளே புத்தகம் வாங்கினால் அந்தப் பத்து யூரோக்கள் கழிக்கப்படும். இல்லையெனில், அவர்களுக்குப் பத்து யூரோக்கள், எங்களுக்குத் திரும்ப வெறும் கைகள்தான்!” புத்தகக் கடைக்குள் சென்றபோது, என்னை மிகவும் கவர்ந்தது, நடுப்பகுதியில் இடது, வலது என இரண்டாகப் பிரிந்து வளைந்து செல்லும் சிவப்பு மரப் படிக்கட்டுகள். மேல்தளத்திலுள்ள வண்ணக் கண்ணாடிகள், அவற்றில் வரும் இயற்கை ஒளி, கடையை ஒரு கலை அரங்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கடையை, ஹரி போட்டர் புத்தகத் தொடர் எழுத்தாளர் J.K. Rowling, போர்ட்டோவில் தங்கி இருந்த போது பார்வையிட்டதாகக் கூறுகிறார்கள். இந்தக் கடையின் சூழலும் படிக்கட்டுகளும் தான் ஹரி போட்டர் கதையில் இடம் பிடித்திருக்கும் ஹோக்வோர்ட்ஸ் பள்ளியின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணம்தான், ஹரி போட்டர் ரசிகர்களையும், உலகளாவிய பயணிகளையும் இங்கே இழுத்து வருகிறது. என் முன்னால் நின்ற யேர்மனியப் பிள்ளைகளும் ஹரி போட்டர் ரசிகர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள். கடைக்குள் பல மொழிகளில் நூல்கள் இருந்தன. தமிழ் புத்தகங்கள் ஏதாவது இருக்குமா என்று தேடினேன். நீண்ட புத்தக அலுமாரியின் ஒரு பகுதியில் “Asian Literature” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சீன, ஜப்பான், கொரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இருந்தன. தமிழ் நூல்கள் எதுவுமே இருக்கவில்லை. “திருக்குறளை என்றாலும் வைத்திருக்கலாமே” என்ற ஏமாற்றம் மனதில் தோன்றியது. Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது. உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றான இந்தக் கடை, உண்மையிலேயே ஒரு வாசகப் பூங்காதான்.
1 month ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 29 Aug, 2025 | 07:16 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 174 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 37வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223736
1 month ago
நாளைய போராட்டத்துக்கு கட்சி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் - கோவிந்தன் கருணாகரம் 29 Aug, 2025 | 06:51 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் நாளை முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்கவேண்டிய கடமை இருக்கிறது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். அதை முன்னிட்டு வடக்கு, கிழக்கு தழுவிய ஆர்ப்பாட்டம் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிக்கு சிவில் சமூகங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். அதேபோன்று அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இந்த பேரணிக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் வேலை செய்துகொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்களும் எங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டோர் என்கிற விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமன்றி, இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதாவது கடந்த போராட்ட காலங்களில் எங்களுடைய மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு மேலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று இறுதி யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தங்களுடைய உறவினர்களினால் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது நிலைமை பதினாறு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் அவர்கள் எங்கு, எவ்வாறு இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகங்கள் எங்களுடைய மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த புதிய அரசாங்கம் இன்று பல கடந்த கால சம்பவங்களுக்கான நீதியை கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களது நிலைமையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய உறவினர்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா, அவ்வாறு இருந்தால் அவர்களை கண்டுபிடித்து தங்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டிய கடமைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஏனென்றால், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் ஏன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போதும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து, இன்று வடக்கு, கிழக்கில் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பெரிய கடமை இருக்கிறது. இந்த தமிழ் மக்களது துயரங்களை நீக்குவதற்காக இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது ஒரு விடயமாக இருந்தாலும், புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து, இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைக் காண்போம் என்று கூறிய இந்த அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நீதியை கொடுக்க வேண்டும். நாளைய தினம் நடைபெற இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் கட்சி பேதமின்றி இன, மத பேதமின்றி அனைவரும் வலுச்சேர்க்க வேண்டிய ஒரு தேவையில், கடமையில் இருக்கின்றோம். அந்த வகையில் நாங்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நாளை நடத்தவுள்ள பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும். இந்த பேரணியை ஒரு பிரமாண்டமான பேரணியாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எங்களுடைய மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுக்கிறது. ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக தெற்கிலே அணி திரண்டிருக்கிறார்கள். எங்களை பொருத்தமட்டில் பல விதமான கதைகள் இந்த கைது சம்பந்தமாக இருக்கின்றன. வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ அரச சொத்துக்களை பிழையாக பயன்படுத்தினார்கள் என்பது போன்ற காரணங்கள் பல இருக்கின்றன. இவ்விடயமாக தனிப்பட்ட ரீதியிலே எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த கைது நடவடிக்கையை பற்றி தற்போதைய நிலைமையில் பெரிதாக விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய தினம் 29ஆம் திகதி அரசியல் கட்சிகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்புடன் வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இந்த செம்மணி புதைகுழி உட்பட வடக்கு, கிழக்கில் இருக்கின்ற புதைகுழிகள் தொடர்பாகவும் கடந்த காலங்களில் வடகிழக்கில் ஏற்பட்ட போர்க்குற்றம் சார்பாகவும் ஒரு கையெழுத்துப் போராட்டத்தை நடத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்த கையெழுத்துகளை அனுப்புவதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் ஒரே நாளில் அதாவது இன்றைய நாள் வடக்கு, கிழக்கு தழுவிய அந்த கையெழுத்துப் போராட்டத்தை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், இன்றைய தினம் வடக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறுகிறது. நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. இந்த தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் கேட்டிருக்கிறோம்... இன்னும் ஒரு திகதியை தீர்மானித்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளும் ஒரு கையெழுத்துப் போராட்டமாக கிழக்கில் செய்ய வேண்டும் என்று. இன்று வடக்கில் நடைபெற்றாலும் இன்னுமொரு திகதியில் மிக விரைவில் கிழக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறும். அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரசாங்கம் அப்படி அரசியல் பழிவாங்கல் அல்ல. கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்களும் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அதேபோன்று புதிதாக வந்த அரசாங்கமும் பல நூற்றுக்கணக்கான கொள்கலன்களை எவ்விதமான பாதுகாப்பு பரிசோதனைகளும் இல்லாமல் விடுவித்திருக்கின்றார்கள். அதுவும் ஒரு ஊழல்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எங்களைப் பொறுத்தளவில் ஊழல் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் ஆட்சேபனை இல்லை என்றார். https://www.virakesari.lk/article/223735
1 month ago
1 month ago
அமெரிக்காவின் 50 % வரி விதிப்பால் ஐ போன் விலை உயருமா? - டிரம்ப் நிர்வாக முடிவுகளை ஆப்பிள் நிறுவனம் எப்படி கையாளுகிறது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இந்த புதிய வரிகள் ஐபோன்களுக்குப் பொருந்துமா? இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டி, இதன் காரணமாகவே இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரிவிதிப்படுகிறது என்கிறார் டிரம்ப். புதிய வரிகளால் என்ன பாதிப்பு? இனி வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இந்தப் புதிய வரி விகிதங்களின்படி அமெரிக்க அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அந்த நிறுவனம் பொருளின் விலையை உயர்த்தி வரிச் செலவை ஈடு செய்தால், இந்தச் சுமை முழுவதும் அமெரிக்க நுகர்வோரின் மீதுதான் விழும். அப்படி சுமத்த விரும்பாத நிறுவனங்கள், ட்ரம்பால் வரி விதிக்கப்படாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பலாம். இதனால், வரி விதிக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்படலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வரி உயர்வின் நேரடி பாதிப்பை எதிர்கொள்வது அமெரிக்க நுகர்வோராகவே இருப்பார்கள் ஐபோன்களுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படும்? தற்போதைய சூழலில் ஐபோன்களுக்கு இந்தப் புதிய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெருமளவில் ஆசியாவில்தான் தயாராகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இறக்குமதி வரி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் ஆறாம் தேதி 'ஆப்பிள்' வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்குப் பெறும் முயற்சியாகவே இந்தத் திட்டத்தை டிம் குக் அறிவித்திருப்பதாக 'ப்ளூம்பர்க்' கூறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தபோது, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஜூலை மாத இறுதியில் அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய டிம் குக், அமெரிக்காவில் விற்பனையாகும் ஐ போன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் ஐபேட், ஐவாட்ச், மேக்புக் போன்றவை வியட்னாமில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். செமி கண்டக்டர்கள் உள்பட எந்தெந்தப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஆராய்ந்து வருதாகவும் அது நிறைவடையும்வரை அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன்கள் மீது வரிகள் விதிக்கப்படாது என்றும் ப்ளூம்பர்க் கூறுகிறது. சீனாவில் பெருமளவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு, தனது உற்பத்தியை வேறு பல நாடுகளுக்கும் பரவலாக்கியது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிகள் மீது வரிகளை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்ததையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் இந்தியா மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வரிகள் அமலுக்கு வந்தபோது, இது 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதாகக்கூறி கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. எதிர்காலத்தில் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டா? பட மூலாதாரம், Getty Images "தற்போதைய கொள்கையின்படி இறக்குமதியாகும் செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றுக்கு எவ்வித வரிகளும் கிடையாது. ஆகவே, ஐபோன்களைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்புப் பிரச்சனை இப்போதைக்குக் கிடையாது. எதிர்காலத்தில் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது" என்கிறார் குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் நிறுவனரான அஜய் ஸ்ரீ வத்ஸவ். ட்ரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பாதிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான தருண். "அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவிற்கு வெளியிலும் போன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தேவை. ஆகவே இதற்கு வரி விதிக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். மேலும் ஐபோன்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் விற்பனை இருக்கிறது. ஆகவே வரி விதித்தாலும் பாதிப்பின் அளவு சற்று குறையும்" என்கிறார் தருண். இந்தியாவில் ஐபோன்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான ஐ போன்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன எதிர்காலத்தில் ட்ரம்ப் ஸ்மார்ட் போன்களுக்கும் வரிகளை விதித்தால் அமெரிக்காவில் நிச்சயம் அதன் விலைகள் உயரும். ஆனால், இந்தியாவில் என்ன ஆகும்? "இந்தியாவில் விலைகள் உயராது. காரணம், இந்தியாவில் விற்பனையாகும் போன்கள் இங்கேயே தயாராகின்றன. மிக உயர்ந்த ரகம் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாடுகளில் தயாராகிறது. ட்ரம்பின் வரி அந்நாட்டிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதால் இந்தியாவில் ஐபோன்களின் விலை உயர வாய்ப்பில்லை" என்கிறார் அஜய் ஸ்ரீவத்ஸவா. ஐபோனின் விலைகளைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே விற்பனையாகிறது என்பதால், உள்ளுர் வரிகள் மட்டுமே விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பொருளாதார நிபுணரான பிரபாகர். ஐபோன்களுக்கு வரி விதித்தால் என்ன ஆகும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐ போன்களுக்கு வரி விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது ஆப்பிள் நிறுவனமாகத் தான் இருக்கும். "ஐபோன்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒருங்கிணைப்பு மட்டும்தான் நடக்கிறது. இதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன. போன்களுக்கு வரி விதித்தால், ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால்தான் இப்போதைக்கு வரி இல்லை. ஆனால், உற்பத்தியை அங்கே மாற்றச் சொல்லி அந்நிறுவனத்திடம் சொல்லிவருகிறார் ட்ரம்ப். ஆப்பிள் என்ன செய்யுமெனப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, இந்த வரியினால் பெரிய பாதிப்பு என்பது ஜவுளி, நகைகள், வாகன உதிரிபாக உற்பத்தி போன்றவற்றில்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேறு சந்தைகளைப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், வேறு சந்தைகள் எதிலும் இவ்வளவு விலை கொடுத்து நம் பொருட்களை வாங்க மாட்டார்கள். ஆகவே இந்தத் துறைகள் குறித்துதான் நாம் பெரிய அளவில் கவலைப்பட வேண்டும். இந்தியாவிலும் ஐபோன் உற்பத்தியாகிறது என்ற பெயரும் வேலைவாய்ப்பும்தான் இதனால் கிடைக்கிறது. வேறு பலன்கள் இல்லை" என்கிறார் பிரபாகர். அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் புதிய, மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடலை வெளியிடவிருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி இந்த புதிய மாடல் அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபோன் 17 மாடலைப் பொறுத்தவரை மொத்தம் நான்கு வேரியண்ட்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நான்கு வேரியண்ட்களுமே இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகவிருப்பதாக ஆப்பிள் வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'ப்ளும்பர்க்' இணையதளம் தெரிவிக்கிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15ljz3n1v1o
1 month ago
இதற்குள் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் யாவும் திகதி வாரியாக 1954ம் ஆண்டு முதல் 2009 வரை பதியப்பட்டுள்ளது.
1 month ago
Published By: Vishnu 25 Aug, 2025 | 06:28 AM அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் முதல் 1985- ஓகஸ்ட் 24 ம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும் தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம் என்பதுடன் இந்த இனஅழிப்பின் 40 வருட நினைவு தினம் 24-8-2005 ஞாயிற்றுக்கிழமை ஆகும். திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8 மையில் தொலைவில் வயலூர் கிராமம் 1972 ம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200 குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது. அரசாங்கம் அக்கால பகுதியில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மரவள்ளிக் கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும் உணவு விடுதிகளில் சோறு சமைக்க கூடாது என கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்க த்தின் திட்டத்தின் கீழ் குடியமர்தப்பட்டது. இக் கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிபாதை மட்டும் உள்ளதுடன் நான்கு சக்கர உழவு இந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன, அதேவேளை ஏழைகள் வழமையாக இத்தூரத்தை நடந்து சென்று வந்தனர். இவர்கள் தடிகள், களிமண், ஒலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து குடியமர்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை. இம் மக்கள் மலோரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன் தமது வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மைலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை பயிர் தொடர்ந்து செய்துவந்ததுடன் அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள், திருடிச் சென்ற அதேவேளை காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன. ஆயினும் அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது. இந்த யுத்த நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான அரசாங்க குழுவும். (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை இயக்கங்களான தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ், ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயம் இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன. 1985ம் ஆண்டு 8ம் மாதம் 24 ம் திகதி அதிகாலைவேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வயலூரின் தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயானவர் அவருக்கு 3 பெண்பிள்ளைகள் அவர் கூறும் பொழுது இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் எனது கணவர் கொல்லப்பட்டார். நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்களான மரக்கறிவகைகள், பழமரங்கள் செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம். ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள், பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை. 1985.8.24 திகதி அதிகாலை 6 மணியிருக்கும் பொழுது நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு தொகை மனிதர்கள் துப்பாகியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை அவதானித்தேன் . நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு மிகப்பயத்தில் நடுங்கினேன். நான் பதற்றப்பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். எனக்கு அவை விளங்கவில்லை, அப்பொழுது எனது கணவர் வந்ததால் நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக் கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர். எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும் வெளியில் கொண்டதுடன் வயோதிபர் நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர். பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர், இதில் பெண்களும் அடங்குவர். அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம். இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு நீர் கொண்டுவருமாறு கேட்டனர். அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள் தண்ணீர் கொண்டுவந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர். ஆனால் நாங்கள் பட்டினியாக இருந்தோம், ஒரு கோப்பை தேனீர் கூட கிடைக்கவில்லை. அவர்கள் தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர், ஆனால் எங்கே என்று கூறவில்லை. அவர்கள் கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிபாதை ஊடாக சென்றோம். அப்பொழுது மற்றுமொரு இராணுவச் சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம். அக்குழுவிற்கு தலைமை தாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக் கண்டுகொண்டார். இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார். அவர் கூறும்போது நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை, இராணுவ வீர்கள் தமக்கு அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர். எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின் கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள், ஆண்கள் திரும்பிவருவார்கள் என்றார். நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம், அவர்கள் குமரன் குளத் திசையில் சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை. சூரியகதிர் தலையை சுட்டெரிந்தன, எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது. எங்கள் குடிசைகளுக்கு திரும்பிவந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம், அப்பொழுது கொலை செய்தி வந்தது. இச் செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர். ஏனையவர்கள் குமரன் குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார். இச் செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன் நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம். பின் படுகொலை செய்யப்பட்டவர்களை வயோதிபர்கள் அவ் இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர். வயலூரில் எங்களின் சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம். கே.வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22) நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன் தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்பருமாறு கூறினார். அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23 ம் திகதி பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர வயலூருக்கு போயிருந்தேன். அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு தங்கிருந்தேன். 24 ம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது அவ்குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. நான் விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன். நான் கைது செய்யப்பட்டாலும் பின் விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல் போயிருந்தது. இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன். ஆனால் குமரன் குளப் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன். சிறிது நேரத்தில் துப்பாகி வேட்டுக்கள் கேட்டன, பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில் சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தார்கள். ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர், ஒருவருக்கு வாய்க்குள் துப்பாகி வைத்து வெடிவைக்ப்பட்டுள்ளது. இவர் இறக்கவில்லை மற்றவரின் பெயர் நடராஜா நான் இச் செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன். இதில் 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கனகசபை உறுதிப்படுத்தினார். வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008ம் ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டுவரமுடிந்தது. இருந்த போதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம் தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன் இது ஒரு கிராமத்தையே அழித்த கறைபடியாத படுகொலையாகும். இக் கிராமம் காடுகளாகிவிட்டது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் நீலாவணைவரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று, திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு, கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராவும் ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியம் படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்ப டவில்லை. இதனால் தற்போதைய சமூதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும் என்பது தமிழ்களின் கடமையாகும். இருந்த போதும். தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி நிற்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/223282
1 month ago
இதற்குள் மே 17, 2009 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை வெளியேற்ற எடுத்த கடைசி முயற்சியான கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் தொடர்பான தகவல்கள் உள்ளது.
1 month ago
நீங்களெல்லாம் "மானம்" இருந்ததால் ஆமியும் பொலிசும் சுடாத ஷொட்கன்னோடு திரிந்த நாட்களிலேயே ஊரை விட்டு வெளியேறி விட்டீர்கள் என்பதை நம்புகிறோம்! எதைச் செய்தாலும் ஊரோடு இன்னும் இருப்போர் கொஞ்சம் "தமிழ்மானம்" குறைவான ஆட்கள் போலத் தான் தெரிகிறது😎!
Checked
Tue, 09/30/2025 - 12:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed