Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 403 online users.
» 0 Member(s) | 400 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,285
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,469
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  பிரபாகரனுடன் ஒரே மேசையில் ..
Posted by: yarl - 02-19-2004, 01:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

நன்றி தினக்குரல் 19.02.04

பிரபாகரனுடன் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து நேரடிýயாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒரே அரசியல்வாதி

தான் படைத்த வரலாறு குறித்து கிண்ணியாவில் ரவப் ஹக்கீம்

சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பிரதிநிதியாக தனித்தரப்பாக கலந்து கொள்ள முடிýயுமென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நான் செய்து கொண்ட ஒப்பந்தத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரோடு ஒரே மேசையில் ஒன்றாக இருந்து ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் செய்தோம். அந்த ஒப்பந்தம் இன்று சாமானியமாக பேசப்பட்டாலும், விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் இன்னுமொரு தலைவருடன் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து நேரடிýயாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்த வரலாறு என்றுமே கிடையாது என }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை, கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான ரவ10ப் ஹக்கீம் பெரிய கிண்ணியா கிராமக் கோட்டடிý திடலில் இடம்பெற்ற பொதுக் கூýட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரபாகரனும் ரணிலும் ஒன்றாக அமர்ந்து செய்த ஒன்றல்ல. இருவரும் ஒரே நேரத்தில் வௌ;வேறு இடங்களிலே இருந்து கொண்டு செய்த ஒப்பந்தமாக அது இருக்கின்றது. எனவே இந்த ஒப்பந்தம் பற்றி இன்று எவ்வளவு எடுத்தெறிந்து பேசினாலும் அதிலே ஒரு விடயத்தை நாங்கள் மறந்துவிட முடிýயாது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற எல்லா விடயங்களையும் சிலாகித்துப் பேசுகின்ற விமர்சகர்கள், அதை ஆதரித்து நிறையக் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுகின்ற தமிழ் பத்திரிகைகள் விடுதலைப் புலிகளின் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மட்டும் விமர்சித்து வருகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூýடாது.

முஸ்லிம் தரப்பில் எல்லோரும் அதைப்பற்றி அன்று மகிழ்ச்சியோடு இருந்தார்கள். நல்லதொரு விடயம் செய்யவேண்டுமென்று சொன்னார்கள். காலப்போக்கிலே உடன்பாட்டிýல் தரப்பட்டவைகள் மீறப்படுகின்ற நிலை ஆரம்பித்த பொழுது அந்த உடன்படிýக்கை சம்பந்தமான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது. நம்பிக்கையீனத்தின் காரணமாக கலவர நிலைமை தோன்ற ஆரம்பித்தது. அதைப்பற்றி சற்று கண்டனப் பார்வையோடு பேச வேண்டிýய ஒரு நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்ட பொழுது விடுதலைப் புலிகளின் பிரதேச தலைமைகள் அதை சகித்துக் கொள்ளவில்லை. மாறாக இன்னும் கடூýரமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதற்கும், முஸ்லிம்கள் மீது அட்டகாசத்தையும், ஆயுதத் திணிப்பையும், அவர்களை பலவந்தப்படுத்தி பணிய வைக்கின்ற முயற்சிகளையும், உயிர் பறிப்புகளையும், உடைமைப் பறிப்புகளையும் அரங்கேற்றுகின்ற அந்த அசிங்கம் நாட்டிýன் பல பகுதிகளிலும் நடந்தன.

குறிப்பாக வட, கிழக்கின் எல்லாப் பாகங்களிலும் இது நடந்தது. எப்பொழுது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வருகின்றதோ அன்றுதான் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுகின்ற ஒரு வரலாற்றை நாங்கள் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம். பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வருகின்ற பொழுது நாங்கள் ஒற்றுமைப்படுவதைத் தவிர வேறு வழியிருக்க முடிýயாது. அதனை இந்த தேர்தலிலே நாங்கள் நிரூýபிக்க வேண்டிýய அவசியமிருக்கின்றது.

இந்த தேர்தல் இந்த நாட்டிýலே இருக்கின்ற தேசிய அரசியல் சக்திகளுக்கு காட்ட விரும்புகின்ற ஒரு தேர்தல் அல்ல. இந்த தேர்தல் விடுதலைப் புலிகளின் அலட்சியப் பார்வையை மாற்றுவதற்கும், சர்வதேச சமூýகத்திற்கு முன்னால் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கும் முஸ்லிம் தரப்புக் கோரிக்கையை வென்றெடுப்பதற்குமான ஒரு தேர்தலாகும். தனித்தரப்புக் கோரிக்கையை பற்றி என்னோடு முரண்பட்டு இருக்கின்ற எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து நாங்கள் ஒரே குரலில் பேசினோம். பாராளுமன்றத்திலே அதற்கென ஒத்திவைப்பு நேர பிரேரணையைக் கொண்டுவந்து நான் முன்மொழிந்து பேசிய பொழுது அதை ஆமோதித்துப் பேசிய அத்தனை பேரும் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப்புலிகளின் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டிý அதைப்பற்றி வியாக்கியானம் செய்து திரும்பத் திரும்ப பேசினார்கள்.

இன்று முஸ்லிம் காங்கிரஸில் இணைவதிலும், ஒரே தரப்பாக போட்டிýயிடுவதிலும் விதவிதமான கருத்துகளை வைத்துக் கொண்டு விதவிதமாகப் பலர் பேசுகின்றார்கள். தனித்தரப்பை நாடுவதற்கு முன்பு ஒரே தரப்பு என்கின்ற நிலைமைக்கு நாங்கள் வந்தாக வேண்டும். எனவே இந்த தனித்தரப்பு கோரிக்கையில் நாம் ஒன்றாக நின்று நாங்கள் ஒரே தரப்பாக அதை வென்றெடுக்க வேண்டிýய அவசியம்தான் இந்த அரசியலில் எங்களுக்கு இருக்கின்ற மாபெரும் சவாலாகும். அதை எதிர்கொள்வதற்காகத்தான் நான் இந்த அறைகூýவலை விடுக்கின்றேன். தேர்தலுக்கான நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு 48 மணித்தியாலம் வரை இந்த அழைப்பு வந்து சேர விரும்புகின்ற அனைவருக்கும் இருக்கும்.

நாடு முழுவதிலும் தனித்துப் போட்டிýயிடுவது என்று முடிýவெடுத்துவிட்டால் ஒவ்வொரு இடத்திலும் அந்த நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வது என்பது சாமானியமானதொரு காரியமல்ல. நியமனப் பத்திரம் என்று தாக்கல் செய்யப்பட்டு முடிýகின்றதோ அன்றுதான் முஸ்லிம் காங்கிரஸ{டைய தலைவருக்கு தேர்தல் முடிýந்தது போன்ற நிம்மதி ஏற்படும். அடுத்த இரண்டு கிழமைக்குள்ளாக நாங்கள் இந்த நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான உள்ளக முடிýவுகளை செய்துகொள்ள வேண்டும். அதேநேரம், அடுத்த ஒரு சில நாட்களுக்குள்ளாக இந்த ஒற்றுமையை நாங்கள் காண வேண்டுமென அவாவுறுகின்றேன்.

கிண்ணியாவில் இருக்கின்ற வௌ;வேறு அரசியல் தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அவர்களுக்கிடையில் இருக்கின்ற விருப்பு, வெறுப்புகளைப் பற்றிய சரியான ஆய்வையும், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான சரியான அனுகுமுறையையும் உலமாக்கள் செய்ய வேண்டும். இதை இங்கு இருக்கின்ற புத்திஜீவிகள் செய்யவேண்டும். கூýட்டிýணைந்து ஒற்றுமையாக இந்த சமூýகத்தின் உயர்வுக்காக இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும். எல்லோரையும் ஒற்றுமைப்படுத்திவிட்டு அதற்கான பரிந்துரைகளை என்னிடத்தில் செய்கின்ற பொழுது அவற்றின் ப10ரண உடன்பாட்டைக் காண்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இதைச் சொல்லிவிட்டுப் போவது தான் என்னுடைய தலையாய கடமையாக இருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இது காலவரையிலும் முஸ்லிம் காங்கிரஸ் வகுத்து வந்த விய10கத்தில் விநோதமான அற்புதங்கள் இருக்கின்றன. அது படிýப்படிýயாக ஒரு பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றது.

ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் படிýப்படிýயாக ஆசனங்களின் தொகையைக் கூýட்டுகின்ற இந்த விளையாட்டைச் செய்வதற்கு விகிதாசாரத் தேர்தல் முறையின் விசித்திரங்கள் எங்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றன. அதேபோன்று வேற்று அரசியல் கட்சிகளோடு செய்துகொண்ட உடன்பாடுகளும் இதற்கு உதவியாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ{டைய பரிணாம வளர்ச்சியில் இன்னுமொரு புதிய கட்டம் ஆரம்பித்திருக்கின்றது. இதுகாலவரையும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று ஆசனங்களை வென்றது என்கின்ற ஒரு வரலாறு திருகோணமலை மாவட்டத்திலே இல்லாது இருக்கின்றது. அதை களைவதற்கு எங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ{டன் முரண்பட்டு இருப்பவர்கள், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை அல்லது முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கின்ற அரசியல் பிரமுகர்களை விரும்பாத மாற்றுக் கட்சிக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்த துணை போவதா என சிந்திக்காமல் இது எங்களுடைய இயக்கம், உங்களுடைய பாதங்களில் நான் காணிக்கையாக விட்டுச் செல்கின்ற இயக்கம், இதை தூக்கியெடுத்து, வளர்த்தெடுத்து இதற்கு உரமூýட்டிý இதை பாதுகாக்கின்ற பெரிய பொறுப்பு இங்கு இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவருடைய கரங்களிலும் தரப்படுகின்றது என்றும் ஹக்கீம் தமதுரையில் தெரிவித்தார்.

Print this item

  'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
Posted by: yarl - 02-19-2004, 08:28 AM - Forum: நூற்றோட்டம் - Replies (77)

(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் / ஆசிரியர்: சி. புஸ்பராஜா / 632 பக்கங்கள் / அடையாளம் வெளியீடு, 1204 - 05, இரண்டாவது தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, தமிழ்நாடு / விலை ரூ. 275 / இலங்கை விலை ரூ. 675.)

இந்த நூலைப்பற்றிய தமிழக எழுத்தாளரும் பத்திரிகையாளரும் பாரதியபாஷா வருது பெற்றவருமான திரு பா.ராகவனின் சுயமான விமர்சனம் ஒன்றை அவரது http://writerpara.blogspot.com/உருவி இங்இடுகிறேன்.
நன்றி பாரா

-யாழ்-


நம்பகமான சரித்திரம்

போக இருபத்தியெட்டு மணிநேரம், வர முப்பத்திரண்டு மணிநேரம். ஆகமொத்தம் அறுபது மணிநேரம். இதில் உறங்கிய இருபது மணி நேரங்களைக் கழித்தால் மிச்சமிருந்த நாற்பது மணிநேரங்களும் என்னுடையதாகவே இருந்தது. தொலைபேசி அழைப்புகள் இல்லை, ஈமெயில் இல்லை, மெசஞ்சர் இல்லை, நண்பர்கள் இல்லை, உறவு மக்கள் உடன் இல்லை. இந்தக் கல்கத்தா பயணத்தில் என் ஒரே துணை, ஒரு புத்தகம்தான்.

'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்பது அந்தப் புத்தகத்தின் பேர். ஆசிரியர், சி. புஷ்பராஜா. (அவர் புஸ்பராஜா
என்றுதான் எழுதுகிறார்.) விஷய ரீதியிலும் சரி, பக்க ரீதியிலும் சரி. மிக கனமான புத்தகம்.

என்னை மாதிரி பிறவி தமிழ்நாட்டுக்காரத் தமிழர்களுக்கு ஈழப் போராட்ட விவரங்கள் எல்லாமே புகட்டப்பட்டவையாக மட்டுமே இருக்கும். போராளிகளுக்குச் சாதகமாகச் சிலரும் எதிராகச் சிலரும் காலகாலமாகத் தொடர்ந்து முன்வைத்ததெல்லாமே மதிப்புரைகள், விமரிசனங்கள்தானே தவிர, செய்திகள் அல்ல. ஈழத்தில் நடப்பது என்ன என்பது குறித்த - முழு அளவில் சரியான, திட்டவட்டமான செய்திகள் ஒருபோதும் தமிழகத்துக்கு நானறியக் கிடைத்ததில்லை.

மேற்சொன்ன இரு தரப்பு மதிப்புரைகள், விமரிசனங்கள்கூட அதனளவில் அதிகபட்ச உணர்ச்சி வெளிப்பாட்டுடன் தான் தரப்பட்டிருக்கின்றனவே தவிர, விஷயத்தின் இயல்புநிலை பேணப்பட்டதில்லை. ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர்
ஒட்டுமொத்த தமிழகமும் ஈழப்போராளிகளின்மீது அனுதாபம் கொண்டிருந்ததும், படுகொலைக்குப் பின் தீர்மானமாகப் போராளிகளைத் தீவிரவாதிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதும் இதனால்தான்.

ஈழத்தில் நடப்பதென்ன என்பது பற்றிய யோக்கியமான ஒரு தகவல் அறிக்கை கூட இன்றுவரை தமிழில் பதிவாகாத நிலையில் புஷ்பராஜாவின் இந்நூல் அந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் தன்னாலான அதிகபட்ச சாத்தியத்தைத் தொட்டிருக்கிறது.

இத்தனைக்கும் புஷ்பராஜா ஒரு முன்னாள் போராளி. எழுபதுகளின் தொடக்கத்தில் 'ஈழத்தமிழ் இளைஞர் இயக்கம்' என்று ஜனநாயக ரீதியில் போராடிய அமைப்பில் முதலில் பங்குகொண்டு, பிறகு தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பின் சார்பில் போராட்டத்தைத் தொடர்ந்து, அதன்பின் 'தமிழ் இளைஞர் பேரவை' கண்டு, பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கமான PLO மாதிரி செயல்படவேண்டும் என்று முடிவு செய்து TLO என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைத்
தோற்றுவித்து, வழிநடத்தி, அந்த இயக்கம் கலைந்தபிறகு அனைத்துப் போராளிகளின் இயக்கங்களுக்கும் தம்மாலான உதவிகள் செய்து, இறுதியில் பத்மநாபாவின் EPRLFக்காக அதன் பிரான்ஸ் கிளையின் பொறுப்பை ஏற்றுத் திறம்பட வழிநடத்தி, பிரான்ஸில் ஈபிஆர்எல்எ·ப் கூடாரம் கலைக்கப்படும்வரை அதற்காகச் செயல்பட்டவர் புஷ்பராஜா.

பிறவிப் போராளிதான். துப்பாக்கியும் தோளுமாக அலைந்தவர்தான். ஆனாலும் "சிங்களர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டுமென்ன? அதே வெறியுடந்தானே ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்களப் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்திருக்கிறோம்?" என்று சுயவிமரிசனம் செய்துகொள்ளூகிற நேர்மை அவரிடம் இருக்கிறது.

புஷ்பராஜாவின் இந்நூல் இரண்டு பகுதிகள் கொண்டது. நேரடியாகத் தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றிய மிக விரிவான தகவல்களை முதல் பகுதியிலும் கேள்விப்பட்டவை, அலசி ஆராய்ந்தவை, சரித்திரக் குறிப்புகள், விமரிசனங்கள், சுய விமரிசனம் ஆகியவற்றை அடுத்தப் பகுதியிலும் அளித்திருக்கிறார்.

0

சிங்களர்களின் இனவெறிக்குத் துல்லியமாக வயது சொல்லுவது கஷ்டம். ஆனால் 1948ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து போராட்டம் அதன் தீவிரத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கியதாக நாம் கொள்ளலாம். முதலில் உரிமைப்போராட்டமாகத்தான் அது இருந்திருக்கிறது. பிறகு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி கண்டு விடுதலைப் போராட்டமாகி விட்டதாகச் சொல்லுகிறார் புஷ்பராஜா.

விடுதலைப் போராட்டமே கூட ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், கண்டனப்பேரணி இத்தியாதி. அப்போதெல்லாம் ஈழத்தில் தமிழரசுக் கட்சி மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அரசியல் தீர்வு ஒன்றைத்தவிர யாரும் எதையும் சிந்தித்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.

ஆனால் எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே தமிழ் இளைஞர்கள் ஜனநாயகப்பாதையின்மீது அவநம்பிக்கை கொண்டு, ஆயுதப்போராட்டம் தான் இதற்குத் தீர்வாக முடியும் என்று நம்பத்தொடங்கியதன் விளைவுதான் ஏராளமான ஆயுதப்போராட்டக்குழுக்கள் தமிழ் ஈழத்தில் உதித்தன. இந்த ஜனநாயக அவநம்பிக்கை ஏற்பட்டதற்கான காரணங்களைப் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். சத்தியாகிரக யுத்தத்தின்மூலம் பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்தரம்
பெற்றது போல சிங்கள மேலாதிக்கத்தினிடமிருந்து ஏன் சாத்திய மில்லை என்பதை வெளிப்படையாக அல்லாமல் ஒரு நீரோட்டமாக நூலெங்குமே மௌனமாகத் தெரிவிக்கிறார் புஷ்பராஜா.

ஆயுதம் தான் தீர்வு என்று நம்பி ஏற்றுக்கொண்டவர்களுள் அவரும் ஒருவர். தனது நோக்கத்தில் வெற்றியடைய முடியாமல் உயிர் பிழைக்கவென்று தப்பியோடிப் புலம்பெயர்ந்து வாழ்வது குறித்த குற்ற உணர்வும் கொண்டவர். இந்த இரு சொற்றொடர்களுக்கு இடையில் மறைபொருளாகக் கிடக்கிற கோடி சங்கதிகளைக் கோத்துக் கொடுத்திருக்கிறது இந்தப் புத்தகம்.

ஏன் ஆயுதம் தான் தீர்வு என்று தமிழ் இளைஞர்கள் முடிவு செய்தார்கள்? அப்படி முடிவு செய்தவர்கள் ஏன் ஒரே இயக்கமாக அல்லாமல் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நின்று போராடினார்கள்? ஏன் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் ஒத்துப் போக வேயில்லை? இணைப்பு நடவடிக்கைகளெல்லாம் ஏன் தோற்றுப் போயின? சுமார் நாற்பது போராளிக்குழுக்கள் ஈழப்போராட்டத்தில் பங்குபெற்றபோதும் ஐந்து குழுக்களால் (LTTE, TELO, EPRLF, PLOT, EROS)
மட்டும்தான் ஓரளவேனும் தாக்குப்பிடிக்க முடிந்திருப்பது ஏன்? இந்த ஐந்திலேயே நான்கு குழுக்கள் அழிந்தது ஏன்? LTTE ஏன் தன் சகோதரக் குழுக்களைச் சிதறடித்து, ஒருத்தர் விடாமல் ஓட ஓட விரட்டிக் கொன்றது? சக போராளிகளையே அழித்த விடுதலைப்புலிகள் அமைப்பு எப்படி ஈழத்தின் தனிப்பெரும் விடுதலை இயக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது? மற்ற அனைத்துக் குழுக்களைக்காட்டிலும் புலிகள் அமைப்பு மட்டும் எப்படி அத்தனை பலம் பெற முடிந்தது? பிரபாகரன் என்ன தவறே செய்யாதவரா? காதல் வலையில் விழுந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக உமாமகேஸ்வரனை இயக்கத்தைவிட்டே துரத்தியவர், இறுதியில் தான் மதிவதனியைக் காதலிக்கத் தொடங்கியதும் இயக்கத்தின் சட்டதிட்டத்தையே மாற்றக்கூடியவராக இருந்தும் எப்படி அவரை விமரிசனம் இன்றி மற்றப் புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்? மற்ற எந்தப் போராளி இயக்கத் தலைவர்களிடமும் இல்லாத எந்த அம்சம் பிரபாகரனை அப்படியரு நிகரற்ற தலைவனாக்கியது? அப்படிப்பட்ட தலைவர், மற்ற இயக்கங்களில் இருந்தாலும் அனைத்துத் தரப்பினருடனும் நட்புடன்
பழகக்கூடிய, ஒரு அவசர ஆத்திரத்துக்கு உதவக்கூடிய அனுபவம் மிக்க போராளிகள் அத்தனைபேரையும் ஏன் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை?

இப்படித் தொடரும் அத்தனைக் கேள்விகளுக்கும் பக்கம் பக்கமாக இந்தப் புத்தகம் சொல்லிக்கொண்டுவரும் விடைகளைத் தொகுத்துப் பார்த்தால் இறுதியில் புஷ்பராஜாவும் அவரையத்த பல போராளிகளும் போராட்டத் தாகம் இருந்தும் எதனால் இன்றைக்குப் புலம் பெயர்ந்து வாழவேண்டி இருக்கிறது என்கிற கேள்விக்கான பதில் அகப்படுகிறது.

இதில் வியப்புக்குரிய அம்சம், புஷ்பராஜாவின் குரல் நூலில் ஓரிடத்தில் கூட பாதிக்கப்பட்டவனின் குரலாக ஒலிக்கவில்லை. மாறாக, சுதந்தர தாகம் மேலோங்கிய ஒரு வீரனின் குரல்வளை நசுக்கப்பட்டு, கீச்சுகீச்சென்று அலறும் கதவிடுக்கு பல்லிக்குரலாகவே கேட்கிறது.

தான் சார்ந்த இயக்கம் செய்த குளறுபடிகளைக்கூட பகிரங்கமாக முன்வைக்கிறார் என்பதனால் இந்நூலின் சார்பு நிலை குறித்த சந்தேகம் கூட அடிபட்டுப் போய்விடுகிறது. அதே சமயம் பத்மநாபா என்கிற ஒரு தனிமனிதன்பால் புஷ்பராஜாவுக்கு இருக்கிற அபரிமிதமான அன்பின் காரணமாக அவரைப் பற்றிய விவரணைகளை மட்டும் உணர்ச்சியின் வசப்பட்டு எழுதியிருப்பதையும் குறிப்பிட வேண்டும். ஈபிஆர்எல்எ·ப்பின் தலைவரான பத்மநாபாவை ஒரு மகாத்மா அளவுக்கு புஷ்பராஜா சித்திரிப்பதை ஜீரணிப்பது மிகவும் கஷ்டமான காரியம். சென்னை, கோடம்பாக்கம் சக்கரியா காலனியில்
வெகுகாலம் தங்கியிருந்த பத்மநாபாவை (அங்கேதான் அவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.) தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அளவுக்குத் தமிழகத்துப் பத்திரிகையாளர்களும் மிக நன்றாக அறிவார்கள். ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு அயல்தேசத்துப் போராளி இயக்கத் தலைவராக அவரும் அவரைச் சார்ந்தோரும் தமிழகத்தில் - குறிப்பாகச் சென்னையில் புரிந்த பல சட்டமீறல்கள் குறித்தும் அடாவடிகள் குறித்தும் பலர் சொல்ல நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.

மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் தவறு; ஆனால் அரசின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அரசு இயந்திரத்தை நிலைகுலைய வைப்பதில் தவறில்லை என்று சொல்லுகிற புஷ்பராஜாவால் இதையெல்லாம் ஒரு பிழையாக ஏற்கமுடியாமல் போகலாம். ஆனால் இதுவிஷயத்தில் ஒரு போராளியின் குரல் பொதுவான குரலாக இருக்கமுடியாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

பத்மநாபா விஷயம் ஒன்றைத்தவிர இந்நூலில் புஷ்பராஜா உணர்ச்சிவசப்பட்டு வேறு யாரையும் தூக்கிவைக்கவோ, பாராட்டவோ, போட்டு மிதிக்கவோகூட இல்லை என்று சொல்லலாம். பிரபாகரன் செய்த பிழைகளை தக்க ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தும் புஷ்பராஜா, அத்தனையையும் மீறி அவரது நல்ல குணங்களை, தலைமைத் தகுதிக்கான சிறப்பியல்புகளை, அவரது அற்பணிப்பு உணர்வை, இயக்கத்தைக் கட்டுக்கோப்புடன் நடத்திச் செல்லும் பாங்கைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. எல்.டி.டி.ஈ. இயக்கத்தை 'தமிழ் புதிய புலிகள்' என்கிற பெயரில் முதல்முதலில்
தோற்றுவித்தவரான செட்டி எனப்படும் தனபாலசிங்கத்தை ஓரிடத்தில் கூட ஒரு போராளியாக புஷ்பராஜா குறிப்பிட மறுக்கிறார். அவர் கருத்தில் செட்டி ஒரு கொள்ளைக்காரர். வங்கிகளைக் கொள்ளை யடித்து, இயக்கத்தின் பேரில் சம்பாதிக்க விரும்பியவர். அவருடன் சேர்ந்தே பிரபாகரன் தன் பயணத்தைத் தொடங்கினாலும் பிரபாகரனின் நோக்கம் கொள்ளையடிப்பதல்ல என்கிறார் புஷ்பராஜா. இந்த வரிகளைப் படியுங்கள்:

<b>"பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராகவும், பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் செட்டியைப் போல் அல்லாது மிகவும் நேர்மையானவராகவும், கடுமையான கட்டுப்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராகவும், அதே வேளையில் தனிமையை விரும்பும் அமைதி கொண்டவராகவும் இருந்தார். தனது நெருங்கிய சகாக்களுடன் கூடத் தேவைக்கு அதிகமாகப் பேசமாட்டார். நம்பவும் மாட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்களில் எந்த நேரமும் கவனமான கண்ணோட்டமுள்ளவர் பிரபாகரன்..."</b>
மிகத்தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே இப்படி மிகச்சில வரிகளில் ஒரு நபரின் புகைப்படத்தையும் எக்ஸ்ரேவையும் ஒருங்கே காட்டமுடியும். ஆச்சர்யம், புஷ்பராஜா ஒரு எழுத்தாளர் அல்லர்! அநேகமாக இந்தப் புத்தகம்தான் அவரது முதல் புத்தகமாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்த நூல் முழுவதுமே இத்தகைய சிலவரி விவரணைகளில் நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ்ப் போராளிகள் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியுமான பிம்பங்களை வெகு அநாயாசமாகத் தந்துகொண்டேபோகிறார் புஷ்பராஜா. சிறை அதிகாரிகள் பற்றி - குறிப்பாகத் தன்னை பெண்டுகழற்றிய பஸ்தியாம்பிள்ளை என்கிற ஒரு போலீஸ் ஆபீசர் பற்றி புஷ்பராஜா எழுதுகிற இடங்களெல்லாம் மிகவுமே ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சிறுகதைக்கான இறுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்டதாக அவரது எழுத்து காணக்கிடைக்கிறது.

"நான் இங்கு குறித்துள்ள வரலாற்று நிகழ்வுகள் சரியானவை என்ற திடம் என்னிடம் உண்டு. ஆனால் நான் கூறியுள்ள கருத்துக்கள், எனது விமர்சனங்கள் இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்குச் சரியாக இருக்கவேண்டும் என்ற கடப்பாடு இல்லை என எண்ணுகிறேன்" என்று முன்னுரையில் புஷ்பராஜா சொன்னாலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

உண்மைக்கும் சார்புநிலை எடுத்த கருத்துக்கும் இடைப்பட்ட வித்தியாசம், எழுத்தில் மிக எளிதாகத் தெரிந்துவிடும். பெரிய பிரயத்தனங்களே வேண்டாம். ஏனெனில் அரிதாரம் பூசிப்பூசி மெழுகினாலும் உண்மை அதன் முகத்தைப் பூச்சுக்கு வெளியேதான் எப்போதும் வைத்திருக்கும்.

தன் போராட்ட முயற்சிகளில் சந்தேகமில்லாமல் தோல்வி கண்டு, அந்தத் தோல்வியை முழுப்பிரக்ஞையுடன் ஏற்றுக்கொண்டு, உயிர்தப்பி வாழப்போன இடத்தில் ஆத்ம பரிசோதனை செய்துகொண்டே புஷ்பராஜா இந்நூலை எழுதியிருக்கிறார். எந்தச் சார்பும் எடுத்தாகவேண்டிய கட்டாயம் அவருக்கில்லை. யாரையும் குளிர்விக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரைச் சார்ந்த எல்லாருமே இப்போது கொல்லப்பட்டவர்கள். எஞ்சியிருக்கும் ஒரு சருகு மட்டுமே
அவர். தனது தாயகத்தின் சுதந்தரம் ஒன்றைத்தவிர வேறெதிலும் விருப்பமற்றவராகத்தான் அவர் இந்நூலெங்கும் தென்படுகிறார். அந்தச் சுதந்தரத்துக்கு இனி தான் செய்யக்கூடியது எதுவுமில்லை என்பதையும் நன்கு உணர்ந்துஇருக்கிறார். ஆகவே அறிக்கை அளிக்கும் தலைவராக அல்லாமல் தொகுத்து எழுதும் பத்திரிகையாளனாக
மட்டுமே செயல்பட்டிருப்பதை மிக எளிதாக வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

எனக்கென்னவோ இந்நூல் ஒரு நம்பகமான சரித்திர ஆவணமாகத்தான் தோன்றுகிறது. ஈழத்தமிழ் நண்பர்கள் யாராவது
படித்துவிட்டு, கருத்தைப் பகிர்ந்துகொண்டால் எனக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கே உபயோகமானதொரு காரியமாக அமையும்.

(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் / ஆசிரியர்: சி. புஸ்பராஜா / 632 பக்கங்கள் / அடையாளம் வெளியீடு, 1204 - 05, இரண்டாவது தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, தமிழ்நாடு / விலை ரூ. 275 / இலங்கை விலை ரூ. 675.)

Print this item

  கவியரங்கம்
Posted by: Eelavan - 02-19-2004, 05:59 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (34)

அன்பின் நண்பர்களுக்கு
பல கவியரசர்களையும் எழுத்தாளர்களையும் அங்கத்துவர்களாக கொண்டது இக்களம் இங்கே கவியரங்கம் அல்லது கவிதைக்கு போட்டிக்கவிதை அப்படி ஏதாவது ஆரம்பித்தால் வித்தகர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு சிறியவர்கள் எங்களுக்கும் கிடைக்கும் அல்லவா?
காத்திருப்புடன்
ஈழவன்

Print this item

  படங்களை எந்த வடிவில் பதிய?
Posted by: vasisutha - 02-18-2004, 03:28 PM - Forum: கணினி - Replies (4)

படங்களைக் கணணியில் பதியும்போது பல வடிவங் களில் பதியலாம். இருப்பினும் இவற்றை இரண்டு வகைக ளாகக் காணலாம். ஒன்றில் படங்கள் சார்ந்த பல குணாதிச யங்கள் காணாமல் போகும். இவை தேவையற்றதாகவும் தேவையுள்ளதாகவும் இருக்கும். ஆனால் கோப்பு <span style='color:#b60000'>(file) அளவு மிகவும் குறைவாக இருக்கும்.
இன்னொரு வகை யான வடிவத்தில் தகவல்கள் அனைத்தும் இருக்கும்.
ஆனால் File அளவு மிகப் பெரிதாக இருக்கும். இங்கு படங்கள் அதனுடைய அனைத்து பரிமாணங்களுடன் இருக்கும். இந்த வடிவங்கள் ஒவ்வொன்றாய் இங்கு பார்க்கலாம்.

ஜேபெக் (JPEG)ஆக்குகையில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வடிவத்தில் புகைப்படத்தின் சில பரிமாணங்கள் காணாமல் போனாலும் அவை பார்ப்பவர்களின், பயன்படுத்துபவர்களின் கண்களுக்குப் புலப்படாது. இந்த ஜேபெக் வடிவ அமைப்பின் சுருக்கும் அளவை நாம் நம் கட்டுப்பாட்டில் வைக் கலாம். இதனால் இறுதியாக நாம் பெறும் வடிவத்தின் அமைப்பு நாம் முடிவெடுக்கும் அளவுகளில் தான் இருக்கிறது. இந்த வடிவமைப்பு மக்களி டையே அதிகம் பிரபலமாவதற் குக் காரணம் இதனை நாம் எவ்வளவு சிறிய
கோப்பாக வேண்டுமென்றாலும் சுருக்கலாம் என்பதுதான்.
எந்த அளவில் சுருக்கினாலும் அதன் அடிப்படை பரிமாணங்கள் சிதையாமல் படத்தின் அழகுகெடாமல் இருப்பதுதான் இந்த வடிவமைப்பின் சிறப்பம் சமாகும். ஆனால் அதற்காக மிகவும் சிறியதாக இதனைச் சுருக்கினால் அதன் பிக்செல்கள் (Pixels) இதற்கான வசதிகளைத் தரும் வகையில் தான் பொதுவாக அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக மீடியம் நிலையில் பதியப்படும் பட வடிவில் எந்த பிரச்னையும் இருப்பதில்லை.

ஜீஃப் (GIF) பட்டனைத் தட்டுங்கள். அனிமேஷன் பட வடிவங்கள் தெரிய வரும். பொதுவாகப் பல இடங்களில் ஜீஃப் வடிவ fileகள் போட்டோ இல்லாத படங்களை படவடிவங்களாக அமைத்திட பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக் காட்டாக பட்டன் கள், போர்டர்கள் போன்றவை கள் ஜீஃப் வடிவங்களாக அமைகின்றன.

பி.எம்.பி (BMP) வடிவம் எப் போதும் இந்த வகையில்தான் அமையும்.

டிஃப் ( TIFF ) அமையும் என்பது இதன் சிறப்பு. ஆனால் படத்தின் அனைத்து சிறப்புகளும் இதில் அப்படியே தங்கும். எதுவும் குறையாது.

எனவே பட வடிவங்கள் எப்படி இருப்பினும் நம் தேவையைப் பொறுத்து அதற்கான வடிவை அமைத்துக் கொள்வதே நலம். இருப்பினும் BMP
கோப்பாகச் சேமித்து வைக்கும் வசதி இருந்தால் அப்படியே சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் வேறு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதியை பொதுவாக படங்களைக் கையாளும் தொகுப்புகள் நமக்கு வழங்குகின்றன.</span>

Print this item

  புதிய வானொலி GTR !
Posted by: sandiya - 02-18-2004, 01:42 PM - Forum: புலம் - Replies (1)

புதிய இணையத்தள வானொலி GTR { German Tamil Radio }
web:- www.germantamilradio.com
e.Mail:- germantamilradio@hotmail.com

Print this item

  வரவேற்பு
Posted by: AJANTH - 02-18-2004, 01:06 PM - Forum: அறிமுகம் - Replies (94)

இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் பணிவதும் விழுவதும் இனி இல்லை தமிi; உறவுக்கு அழிவில்லை..............................

Print this item

  நாளை
Posted by: Ramanan - 02-18-2004, 12:02 PM - Forum: அறிமுகம் - No Replies

நாளைக்கு அம்பாறையில உயிர்ப்படுகொலை
தினம் அனுஷ்டிப்பு. இங்க? சும்மா ஞாபகப்படுத்தினனான். ஏதாவது எழுதுங்கோ.

Print this item

  புது வைரஸ் W32.Beagle.B@mm
Posted by: yarlmohan - 02-18-2004, 11:27 AM - Forum: கணினி - Replies (3)

http://securityresponse.symantec.com/avcen...eagle.b@mm.html

<b>W32.Beagle.B@mm</b>

W32.Beagle.B@mm is a mass-mailing worm that opens a backdoor on TCP port 8866. The worm uses its own SMTP engine for email propagation. It can also send the attacker the port on which the backdoor listens and a randomized ID number.

The email has the following characteristics:

From: <spoofed>
Subject: ID <random characters>... thanks
Attachment: <random characters>.exe

Print this item

  &quot;&quot;செயின்&quot;&quot; நதியோரம்
Posted by: sharish - 02-18-2004, 11:05 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<b><span style='font-size:25pt;line-height:100%'>\"\"செயின்\"\" நதியோரம்....</b></span>


சூரியதேவன் தன் ஒளிக்கீற்றுக்களை
©மியைநோக்கி
அள்ளி அள்ளி
வழங்கினாலும்...
குளிர்கால மழைமேகங்கள்
அவற்றை
மறைத்து மறைத்து
மாயம் செய்ய
சில நேரம்மட்டும் ஒளியை
மெல்ல மெல்ல
கசியவிட்டுக்கொண்டிருந்தது
அந்தி வானம்...!

இருள் இல்லாமல்
வெளிச்சமும் இல்லாமல்
இருளும் வெளிச்சமும் கலந்த
அந்தப் பொழுதுக்கு என்ன பெயர்...?
கண்களால் காண்பவற்றை
மொழியினால் சொல்லமுடியாத
ஏதோ ஒரு பொழுது...!

""செயின்"" நதியேரம்...
அமைதியான மாலைநேரம்...!

சல சல
என்ற சத்தத்தோடு
பாரீஸ் நகரை ஊடறுத்துக்கொண்டு
எங்கேயோ போகிறாள் "செயின்"...!
நான்
அவள் கரையோரம்
குளிரில் விறைத்துப்போன
என் கைகளை
சட்டைப்பைக்குள்
புதைத்துக்கொண்டு
நடந்துகொண்டிருக்கிறேன்
ஒரு பேனாவும்
சில காகிதமும்
பல கற்பனைகளுடனும்...!

மாலைநேரக்குளிர்க்காற்று
அவளின் மேல்த்தேகத்தில்
தொட்டு தொட்டு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது
தென்றல்
என்ன பேசுகிறது என்று
என் கவிதைகளால்
மொழிபெயற்க முடியவில்லை...!

கருமேகங்களுக்குள் மறைந்து
சிலநேரம் மட்டும் கசிந்த கதிரவன்
இடைக்கிடையே
ஒளி என்னும் தூரிகைகொண்டு
"செயினின்" முதுகில் வந்து
மஞ்சள் சிவப்பு
ஓவியம் வரைகின்றான்
கதிரவன்
அவளை காதலிக்கிறான் போலும்...!
இருப்பினும்...
அந்த காதலைச் சொல்ல என்
பேனாவுக்கு சக்தியில்லை..!

ஏதோ எழுதலாம் என்று
அவளின்
அரவணைப்பைத்தேடி வந்தேன்
இப்போ
அரங்கேறும்
அதிசயக் கவியரங்கை கண்டு
ஏன் வந்தேன் என்பதே
மறந்துபோனது எனக்கு...!

கதிரொளியும் காற்றும்தான்
அவள் மேனியைத்தடவி
சில்மிஷம் செய்கிறதே தவர
அவள்
அவர்களை கண்டுகொள்ளவில்லை..!
தொடர்ந்து...
எங்கோ அவசரமாக
சல சல
என்ற சத்தத்தோடு பாய்கிறாள்...!

கதிரோனின் ஒளிக்கீற்று
குளிர்கால பனிமேகங்களை
ஊடறுத்துக் கசிவதுபோல்
எப்போதாவதுதான்...
கசியும் என் கவிதைகளும்...!

இன்றும்
கவிதை கசியும் என்று நம்பிக்கையுடன்
காத்திருந்தேன்
பின்
கவிதையை கறப்பதற்கு முயற்சித்து
தோற்றுப்போய்
மீண்டும் மீண்டும்
பேனாவுடனும்
காகிதத்ததுடனும்
போராடிக்கொண்டே இருந்தேன்...!

அப்போதுதான்....
நதிக்கரையோர உணவகத்தில்
இரவுநேர உணவை முடித்துக்கொண்டு
இரவை நதியோடு
இரசிப்பதற்காக-தன்
"ஆபிரிக்கா" தந்தையடனும்
"ஜரோப்பா" தாயுடனும்
"அல்சேசன்" நாயுடனும் வந்த
சுட்டித்தனச் சிறுமி ஒருத்தி
எழுதுவதும்
பின்
சரியில்லையென்று
எழுதுவதை கசக்குவதுமாக இருந்த
என்னைப்பார்த்து
மழலைப் பிரஞ்சில் கேட்டாள்
நீ யார்...?
எதற்காக எழுதுகிறாய்...?

அதுவரைக்கும்
வரமாட்டேன் வரமாட்டேன்
என்று
அடம்பிடித்த கவிதை
இதோ...
வருகிறேன் வருகிறேன் என்றது...!
பேனாவும்...
ஆரவாரத்தோடு வரவேற்று
தலைகுனிந்தது...!

ஆனந்தமாய் தலைநிமிர்ந்த
மனசு
கவிதையைக்கேட்டது
அந்தச் சிறுமி
நீ யார்..?
என்று கேட்டதற்கு
பதில்சொல்லவா வந்தாய்...?

கவிதை சொல்லியது
இல்லை...
எதற்காக எழுதுகிறாய்..?
என்பதற்கு
பதில் சொல்ல வந்தேன்...!!!

<b>த.சரீஷ்
17.02.2004 (பாரீஸ்)</b>

Print this item

  விழிகள் பேசட்டும்
Posted by: Paranee - 02-18-2004, 08:11 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

[Image: 52519263.jpg.tmp?5741]

விழிகள் பேசட்டும் கவிதை தொகுப்பிலிருந்து சில பார்வைகள் . . 18-02-2003

1)
கனவுத்தொழிற்சாலையில்
விழி இயந்திரங்கள்
விதைத்துக்கொண்ட காட்சிகள்
மனசு என்னும் இயந்திரத்தால்
பார்வையாகின்றன

2)
என்னவோ எழுதவெண்ணி
கையில் பேனா எடுத்தேன் - உன்
எண்ணங்கள்தான் வரைவாகின்றன

3)
விலகியிருந்தாலும் எனக்குள் நீ
விருட்சமாகத்தான் தோன்றுகின்றாய்
என் பிறந்தநாள் பரிசாய் நீ
எனக்களித்த முத்தங்கள்
இன்னமும் என் உள்ளமென்னும்
பொக்கிச அறையில்
பக்குவமாய் உயிர்த்திருக்கின்றன

4)
உயிரே துணிந்தவள் நீ
பரிசாய்ப்பொருள் கொடுப்பாய் என
எண்ணியிருந்தேன் நீயோ
உன்னையே பரிசாக்கிவிட்டாயே
இத்தனைக்கும்மேல் என்னில்
சினேகித்திருந்தும் ஏன்
விலகியே இருக்கின்றாய்

5)
சொல்லில் துணிந்தாய்
செயலில் துணிந்தாய்
என்று என்னை துணையாக்குவாய்
பாலைவனத்தென்றல் நான்
உன் மலைத்தொடர் மேனியில்
என்று மோதி வீழ்வது ?

6)
கைகொண்டு வரைந்த
என் மடல்கள் வேண்டுமென்கின்றாய்
எழுதத்தொடங்கியவுடன் வார்த்தைகள்
வழுக்கி ஓடி மறைகின்றன
பாசி படர்ந்த பாறைகள்மேல்
வீழ்ந்து வழுக்கும் நீர்த்துளிகள்போல

7)
புரண்டு புரண்டு படுக்கின்றேன்
உறக்கம் அருகில் வரமறுக்கின்றது
அதற்கேன் தயக்கம் இல்லையில்லை
பொறாமை உன்னை தினம்
எனக்குள் அணைப்பதால்
தன் நெருக்கம் குறைகின்றதாம்
உன் நினைவை நான் அணைக்கவே
உறக்கம் தொலைகின்றது
உன்னை நிஜமாய் அணைத்தால் ???

8)
தமிழ் எனக்குள் எப்படி வசப்பட்டது
என் இழுப்பிற்கெல்லாம் இசைகின்றது
நாணல்போல தலைசாய்ந்து
ஆல்போல் விழுதிட்டு
வானவில்போல் வண்ணம்காட்டி
ம்
மொழிக்கும் எனக்கும்
பாலமாய் நீ இருப்பதாலா ? ?
உறவை இணைக்கும் உயிரே நீதானே. .

-----------------------------------------------ந.பரணீதரன்------------------------------

Print this item