![]() |
|
கவியரங்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கவியரங்கம் (/showthread.php?tid=7454) Pages:
1
2
|
கவியரங்கம் - Eelavan - 02-19-2004 அன்பின் நண்பர்களுக்கு பல கவியரசர்களையும் எழுத்தாளர்களையும் அங்கத்துவர்களாக கொண்டது இக்களம் இங்கே கவியரங்கம் அல்லது கவிதைக்கு போட்டிக்கவிதை அப்படி ஏதாவது ஆரம்பித்தால் வித்தகர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு சிறியவர்கள் எங்களுக்கும் கிடைக்கும் அல்லவா? காத்திருப்புடன் ஈழவன் - கெளஷிகன் - 02-19-2004 வெற்றிக் கொடிகட்டி வார்த்தைகளை கொட்டும் வரை கொட்டி விட்டுச் செல்லுங்கள் உங்கள் கவியை அதைத் தொட்டுச் சென்று முட்டிக் கவிபாட முன்வருவோம் யாவரும் - kuruvikal - 02-19-2004 வெற்றிக் கொடி கட்டு குடும்ப வாழ்வில்... கொடி கட்டு மங்கை கழுத்தில் அதுவே நீ கட்டும் இறுதி வெற்றிக்கொடி ஆகிநிற்கும்....! கொடி அறுத்தால் பெண் இராய்ச்சியம் அற்றவள்...! பெண்ணே இராய்சியமில்லா விடுதலை உனக்கெதற்கு.....?! இளைஞனே முடிவு செய் எது உன் வெற்றிக் கொடி....! பெண்ணே குடும்ப வாழ்வில் எங்கே உன் வெற்றிக் கொடி.....! ஆணின் தலையில் மிளகாய் அரைப்பதா....????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 02-23-2004 ஆணின் வெற்றி தாலிக் கொடியெனில் பெண்ணின் வெற்றி தொப்புள் கொடி அரைக்கும் தலைகள் இருக்கும் வரைக்கும் அரைக்கும் கரங்கள் இருக்கும் அரைத்த மிளகாய் உறைக்கும் - Mathan - 02-23-2004 நங்கையர் கைகள் அரைப்பதெல்லாம் அம்மியில் மட்டும்தான் ஆணின் தலையில் அல்ல. - kuruvikal - 02-23-2004 இதோ பரடா கற்கால மனிதனை....! 'கிரைன்டரும்' 'மிக்சியும்' வந்தே நூற்றாண்டு காணப்போகுது இன்னும் அம்மியும் குளவியும் பெண்ணும் சமையலும் என்று கொண்டு....! புத்தியில் இருக்கு பெண்ணென்றால் சமையல் என்று ஆனா எழுதுவதோ தத்துவங்கள் பக்கம்பக்கமாய்....! இவர்கள் தலையே அம்மியாகிப் போனதால் பெண் இன்றும் அரைக்கிறாள் மிளகாயே....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:இதோ பரடா 'கிரைன்டரும்' 'மிக்சியும்' வந்து நூற்றாண்டு ஆகிவிட்டதாம். நமக்கு டிவி வந்தே அரை நூற்றாண்டாகவில்லை. எது வந்து தான் என்ன? மின்சாரம் இல்லாவிட்டால் சம்சாரம் என்ன செய்வது? - kuruvikal - 02-23-2004 வாழ்வதே அரை நூற்றாண்டு என்றாகி வந்தவை எல்லாம் நூற்றாண்டாகி விட்டது....! மழை கொண்டு மின்சாரம் வேண்டிக் கிடந்ததெல்லாம் அந்தக்காலம் இப்ப சூரிய அடுக்கில் அணு உலையில் தப்பாமல் மின்சாரம் கிடைக்கிறது அப்படி இருக்க இன்னும் சம்சாரம் ஒரு மின்சாரம் என்று காலம் கழிப்போரை என்னென்பது....???! பெண்ணே..நீயும் சடமாகி மின்சாரம் ஆனாய் அதில் உனக்கு வருத்தமில்லையோ....??! அது சரி மின்சாரம் நீயென்றால் அதிர்சி வாங்கி அவனல்லவோ....! அதில் உனக்கு மகிழ்ச்சிதானே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:வாழ்வதே அது ஒரு நூற்றாண்டு என்பர் அப்படியிருக்காதே என்றால் அதையே அரை நூற்றாண்டும் என்பர் குறிப்பு தவறானால் திருத்தம் வேண்டும் குருவிக்கோ அது இயல்பு மின்சாரமே நமக்கு கிடைக்காதபோது அது அணு உலையில் வந்தாலென்ன? அரளிக் கொட்டையில் வந்தாலென்ன? - kuruvikal - 02-23-2004 ஏய் மானிடா நீ என்ன வாத்தா....! காலம் மாறச் சிந்தையும் மாறும் மின்சார அரைக்கும் கருவி வந்தது 20ம் நூற்றாண்டில் நாம் இப்போ வாழ்வது 21ம் நூற்றாண்டில் கழித்துக் கூட்டிப்பார்...! பாலர் வகுப்புப் பிள்ளை இப்பக்கம் பார்த்தால் சிரிக்கும்....! அலரிக் கொட்டையை அரைத்துப்பார் மின்சாரம் வரும் உன் சிந்தை அப்படி இருக்க நீ என்ன மின்சார ஒளி வெள்ளத்திலா மிதக்க முடியும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 <b>மின்சாரமே நமக்கு கிடைக்காதபோது அது அணு உலையில் வந்தாலென்ன? அரளிக் கொட்டையில் வந்தாலென்ன?</b> - kuruvikal - 02-23-2004 மற்றவன் முயற்சியில் மின்சாரம் பெற்று வாழ்ந்த சோம்பேறிகள் அலரிக் கொட்டையை அரைத்துதான் மின்சாரம் தேடுவர்...! எங்கே வெள்ளைக்காரன் பிச்சையும் போட்டு உலை ஒன்று கட்டிக் கொடுத்தால் ஆருக்குப் பங்கு கொடுக்கலாம் என்று உரிமைக் குரல் மட்டும் எழுப்பிடுவர்....! தனக்கே இல்லையாம் அதற்குள் வந்தவனுக்கு...??! அப்பம் தின்ற குரங்காட்டம் அவனிருக்க கையைப் பிசையும் பூனையாட்டம் இவை இருப்பினம்....! என்று சிந்தித்து என்று உருப்படுவதோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:[b]மற்றவன் முயற்சியில் யார் அந்த மற்றவன் முயற்சியில் மின்சாரம் பெற்று வாழ்ந்த சோம்பேறிகள் ? - kuruvikal - 02-23-2004 யார் அறிவார் பலாமரமே... நீதான் ஆறிவாயோ....பராபரமே....?! பிறகு கேக்காதேங்கோ யார் அந்தப் பராபரம் என்றுமே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:<b>மற்றவன் முயற்சியில் உங்களுக்கு யார் அந்த மற்றவன் முயற்சியில் மின்சாரம் பெற்று வாழ்ந்த சோம்பேறிகள் என்று தெரியாதா? - kuruvikal - 02-23-2004 அதையும் மற்றவன் சொல்லித்தான் தெரியனும் என்று நினைக்கிறீங்க போல....! எதுக்கும் கவியரங்கம் வேறு விதத்தில் களை கட்ட அனுமதிக்கும் முகமாக இத்தோடு இது தொடர்பான கவிதைக்கு முடிவுகட்டலாம் என்றிருக்கிறம்...! முயற்சி திருவினையாகட்டும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 நாம் நாமாக வாழாது நரகத்துழன்று ஊருக்காய் வாழ்வது வீணல்லவா பெண்ணே! ஊருக்காய் வாழாதே! உனக்காய் வாழ். நன்றி - சந்திரவதனா - kuruvikal - 02-23-2004 பெண்ணே நரகம் மரணத்தின் பின்னாம் இப்போ நகரத்தில் தான் நீவிர்...! நாகரீகம் என்று நடை உடையில் விடுதலை கண்டீர் காட்டி நின்றீர் உம் விடுதலையின் வேண்டுதலை...! வீண் வாதம் வேண்டாம் ஊருக்காய் வாழென்று மனிதனுக்கே மகான்கள் சொல்லி வைத்தார்...! நீவிர் மனிதரென்றால் அவர் வழிபற்றும் அன்றில் தெளிவாய் விளகி நில்லும் மாக்கள் வரிசையில்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-23-2004 kuruvikal Wrote:பெண்ணே நரகம் குருவி நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் இதற்கு முன்னர் பெண்களின் நடை உடை ஆண்களால் அடக்கிவைக்கப்பட்டதாகவும், தற்பொழுது விடுதலை அடைந்து விட்டதாகவும் தோன்றுகிறது. 8) - sOliyAn - 02-23-2004 உன் ஊடலிலும் கூடலிலும்தானே நவரசத்தைக் கண்டேன் உன் பணிவிலும் துணிவிலும்தானே பாகத்தைக் கண்டேன் எத்தனை காலந்தான் தாடிகளையும் மீசைகளையும் கண்டுகொண்டேயிருப்பது?! சலிப்புக்கு விடைகொடுத்து என்னைச் சதிராட அழைத்தவளல்லவா நீ?! அவர்கள் என்னவோ கூறுகிறார்கள் தாலி உனக்கு வேலியெனும் சிறையென உனக்குத் தெரியும் அது என் விலைமதிப்பிலாப் பொக்கிசமென அதனால்தானே.. நீ கர்வமாக என் பொக்கிசத்தைக் கவர்ந்தவளாக..!! |