![]() |
|
""செயின்"" நதியோரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ""செயின்"" நதியோரம் (/showthread.php?tid=7460) |
""செயின்"" நதியோ - sharish - 02-18-2004 <b><span style='font-size:25pt;line-height:100%'>\"\"செயின்\"\" நதியோரம்....</b></span> சூரியதேவன் தன் ஒளிக்கீற்றுக்களை ©மியைநோக்கி அள்ளி அள்ளி வழங்கினாலும்... குளிர்கால மழைமேகங்கள் அவற்றை மறைத்து மறைத்து மாயம் செய்ய சில நேரம்மட்டும் ஒளியை மெல்ல மெல்ல கசியவிட்டுக்கொண்டிருந்தது அந்தி வானம்...! இருள் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் இருளும் வெளிச்சமும் கலந்த அந்தப் பொழுதுக்கு என்ன பெயர்...? கண்களால் காண்பவற்றை மொழியினால் சொல்லமுடியாத ஏதோ ஒரு பொழுது...! ""செயின்"" நதியேரம்... அமைதியான மாலைநேரம்...! சல சல என்ற சத்தத்தோடு பாரீஸ் நகரை ஊடறுத்துக்கொண்டு எங்கேயோ போகிறாள் "செயின்"...! நான் அவள் கரையோரம் குளிரில் விறைத்துப்போன என் கைகளை சட்டைப்பைக்குள் புதைத்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன் ஒரு பேனாவும் சில காகிதமும் பல கற்பனைகளுடனும்...! மாலைநேரக்குளிர்க்காற்று அவளின் மேல்த்தேகத்தில் தொட்டு தொட்டு ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது தென்றல் என்ன பேசுகிறது என்று என் கவிதைகளால் மொழிபெயற்க முடியவில்லை...! கருமேகங்களுக்குள் மறைந்து சிலநேரம் மட்டும் கசிந்த கதிரவன் இடைக்கிடையே ஒளி என்னும் தூரிகைகொண்டு "செயினின்" முதுகில் வந்து மஞ்சள் சிவப்பு ஓவியம் வரைகின்றான் கதிரவன் அவளை காதலிக்கிறான் போலும்...! இருப்பினும்... அந்த காதலைச் சொல்ல என் பேனாவுக்கு சக்தியில்லை..! ஏதோ எழுதலாம் என்று அவளின் அரவணைப்பைத்தேடி வந்தேன் இப்போ அரங்கேறும் அதிசயக் கவியரங்கை கண்டு ஏன் வந்தேன் என்பதே மறந்துபோனது எனக்கு...! கதிரொளியும் காற்றும்தான் அவள் மேனியைத்தடவி சில்மிஷம் செய்கிறதே தவர அவள் அவர்களை கண்டுகொள்ளவில்லை..! தொடர்ந்து... எங்கோ அவசரமாக சல சல என்ற சத்தத்தோடு பாய்கிறாள்...! கதிரோனின் ஒளிக்கீற்று குளிர்கால பனிமேகங்களை ஊடறுத்துக் கசிவதுபோல் எப்போதாவதுதான்... கசியும் என் கவிதைகளும்...! இன்றும் கவிதை கசியும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன் பின் கவிதையை கறப்பதற்கு முயற்சித்து தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் பேனாவுடனும் காகிதத்ததுடனும் போராடிக்கொண்டே இருந்தேன்...! அப்போதுதான்.... நதிக்கரையோர உணவகத்தில் இரவுநேர உணவை முடித்துக்கொண்டு இரவை நதியோடு இரசிப்பதற்காக-தன் "ஆபிரிக்கா" தந்தையடனும் "ஜரோப்பா" தாயுடனும் "அல்சேசன்" நாயுடனும் வந்த சுட்டித்தனச் சிறுமி ஒருத்தி எழுதுவதும் பின் சரியில்லையென்று எழுதுவதை கசக்குவதுமாக இருந்த என்னைப்பார்த்து மழலைப் பிரஞ்சில் கேட்டாள் நீ யார்...? எதற்காக எழுதுகிறாய்...? அதுவரைக்கும் வரமாட்டேன் வரமாட்டேன் என்று அடம்பிடித்த கவிதை இதோ... வருகிறேன் வருகிறேன் என்றது...! பேனாவும்... ஆரவாரத்தோடு வரவேற்று தலைகுனிந்தது...! ஆனந்தமாய் தலைநிமிர்ந்த மனசு கவிதையைக்கேட்டது அந்தச் சிறுமி நீ யார்..? என்று கேட்டதற்கு பதில்சொல்லவா வந்தாய்...? கவிதை சொல்லியது இல்லை... எதற்காக எழுதுகிறாய்..? என்பதற்கு பதில் சொல்ல வந்தேன்...!!! <b>த.சரீஷ் 17.02.2004 (பாரீஸ்)</b> - Eelavan - 02-19-2004 அற்புதம் சரீஷ் france ற்கு நான் வந்ததில்லை ஆனால் செயின் நதியை பார்த்துவிட்டேன் உங்கள் கவிதை மூலம். seine - sharish - 02-19-2004 செயின் நதி - vasisutha - 02-19-2004 அழகாய் இருக்கிறது. - vasisutha - 02-19-2004 பரணிக்கு போட்டியாக நானும் கிளம்பிவிட்டேன். :wink: - Mathan - 02-19-2004 வசி நல்லா பண்ணி இருக்கீங்க. என்னோட ஐஸை அதுதான் குருவியோட அக்காவை நதி பக்கத்திலை வைச்சிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். எனிவே உங்க முயற்சிக்கு வாழ்த்து. - Paranee - 02-20-2004 ம் வசி நன்றாகவே செய்துள்ளீர்கள். சரிசீன் கவிதைக்கு போட்டியாகத்தான் வரைந்துள்ளீர்கள். வாழ்ததுக்கள் காதலாகட்டும் தேசத்தின் அழுகுரலாகட்டும் நதிக்கரையின் சலசலப்பாகட்டும் சரிசீஸ் மிகமிக அழகாக கவிதைகளால் தெரியப்படுத்துகின்றார். வாழ்த்துக்கள் நண்பரே - sharish - 02-20-2004 நன்றி வசி அழகாக இருக்கிறது - Paranee - 02-22-2004 கிடைத்த நேரத்தில் கிறுக்கியது - shanmuhi - 02-22-2004 செயின் நதிக்கரையில் கிறுக்கிய கவிதைகளும் படங்களும் நன்றாகவே... போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றது - kuruvikal - 02-22-2004 பரணி பிரசாந்துக்குச் சுப்பரா 'சீன்' போட்டிருக்கிறியள்...சினிமாப் பக்கம் சின்ன 'சான்ஸ்' கேட்டுப்பாக்கலாமே....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-22-2004 வெரிகுட் கீப் இட் அப் பரணி பொஸ் |