Yarl Forum
விழிகள் பேசட்டும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: விழிகள் பேசட்டும் (/showthread.php?tid=7461)



விழிகள் பேசட்டும் - Paranee - 02-18-2004

[Image: 52519263.jpg.tmp?5741]

விழிகள் பேசட்டும் கவிதை தொகுப்பிலிருந்து சில பார்வைகள் . . 18-02-2003

1)
கனவுத்தொழிற்சாலையில்
விழி இயந்திரங்கள்
விதைத்துக்கொண்ட காட்சிகள்
மனசு என்னும் இயந்திரத்தால்
பார்வையாகின்றன

2)
என்னவோ எழுதவெண்ணி
கையில் பேனா எடுத்தேன் - உன்
எண்ணங்கள்தான் வரைவாகின்றன

3)
விலகியிருந்தாலும் எனக்குள் நீ
விருட்சமாகத்தான் தோன்றுகின்றாய்
என் பிறந்தநாள் பரிசாய் நீ
எனக்களித்த முத்தங்கள்
இன்னமும் என் உள்ளமென்னும்
பொக்கிச அறையில்
பக்குவமாய் உயிர்த்திருக்கின்றன

4)
உயிரே துணிந்தவள் நீ
பரிசாய்ப்பொருள் கொடுப்பாய் என
எண்ணியிருந்தேன் நீயோ
உன்னையே பரிசாக்கிவிட்டாயே
இத்தனைக்கும்மேல் என்னில்
சினேகித்திருந்தும் ஏன்
விலகியே இருக்கின்றாய்

5)
சொல்லில் துணிந்தாய்
செயலில் துணிந்தாய்
என்று என்னை துணையாக்குவாய்
பாலைவனத்தென்றல் நான்
உன் மலைத்தொடர் மேனியில்
என்று மோதி வீழ்வது ?

6)
கைகொண்டு வரைந்த
என் மடல்கள் வேண்டுமென்கின்றாய்
எழுதத்தொடங்கியவுடன் வார்த்தைகள்
வழுக்கி ஓடி மறைகின்றன
பாசி படர்ந்த பாறைகள்மேல்
வீழ்ந்து வழுக்கும் நீர்த்துளிகள்போல

7)
புரண்டு புரண்டு படுக்கின்றேன்
உறக்கம் அருகில் வரமறுக்கின்றது
அதற்கேன் தயக்கம் இல்லையில்லை
பொறாமை உன்னை தினம்
எனக்குள் அணைப்பதால்
தன் நெருக்கம் குறைகின்றதாம்
உன் நினைவை நான் அணைக்கவே
உறக்கம் தொலைகின்றது
உன்னை நிஜமாய் அணைத்தால் ???

8)
தமிழ் எனக்குள் எப்படி வசப்பட்டது
என் இழுப்பிற்கெல்லாம் இசைகின்றது
நாணல்போல தலைசாய்ந்து
ஆல்போல் விழுதிட்டு
வானவில்போல் வண்ணம்காட்டி
ம்
மொழிக்கும் எனக்கும்
பாலமாய் நீ இருப்பதாலா ? ?
உறவை இணைக்கும் உயிரே நீதானே. .

-----------------------------------------------ந.பரணீதரன்------------------------------