Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 285 online users.
» 0 Member(s) | 282 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,220
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,224
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,594
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,278
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,592
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,021
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,412
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,107
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,977
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236

 
  ஈழத் தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் - இந்திய மக்களுக்கு
Posted by: Birundan - 02-25-2006, 04:13 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (1)

ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம்
அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப் படலாமாம். எந்த நூற்றாண்டுக் கதை இது என்பது விளங்கவில்லை. அவை ஏற்கனவே பாகிஸ்தானின் ஏவுகணைகளாலும் சீனாவின் ஏவு கணைகளாலும் குறிவைக்கப்பட்டுத்தான் இருக்கின்றது என்பதை யாராவது அவருக்குக் கூறுங்கள். இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புச் செலவினம் கூடுகின்றது என்ற ஒரு பட்டியல் வேறு. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்கி அழிக்க முயல்கிறது. செலவு கூடுகின்றது. சர்வ வல்லமை படைத்த பிராந்திய வல்லரசு இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகளும் பல பில்லியன்களில் தான் இருக்கின்றது. ஏன் என்று கேட்கின்றோமா?

ஈழப் போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான -பிறிதொரு இனத்தால் சகல வழிகளிலும் ஒடுக்கப்பட்டதனால் அவ்வொடுக்கு முறையில் இருந்து விடுபடவும், தப்பி உயிர் வாழவும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கவும் நடை பெறுகின்ற போராட்டம். வல்லரசு ஆசையிலோ அன்னிய நாடு பிடிக்கும் ஆசையிலோ நடத்தப்படுவதல்ல. இந்த இனவிடுதலையில் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஈழத்தமிழ் மக்களால் தங்களுக்காக நடாத்தப் படும் இன விடுதலைப் போர். பலஸ்தீன மக்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறீர்களே, அப்படியொரு ஆதரவைத் தான் உங்களிடமும் மற்றும் நாடுகளிடமும் எதிர்பார்த்தோம். ஆதரவு தருவதாக வந்தீர்கள். இலங்கையை உங்கள் அடிதொழும் நாடாக வைத்திருப்பதற்காக தமிழர்களுக்கு உதவுவது போல உதவினீர்கள். பிற நாடுகளின் கருத்துக்களையோ ஐ.நாவின் அபிப்பிராயத்தையோ எதிர்பாராது சோத்துப் பார்சல் போட்டீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறியது. சிங்கள அரசு ஓடி வந்து உங்களுடன் ஒப்பந்தம் போட்டது. உங்கள் இராணுவம் தமிழ் மண்ணிற்கு வந்தபோது பூரண கும்பம் வைத்து சந்தன மாலை போட்டு வரவேற்றோம் ஐயா. எங்களை ராங்கிகளின் சங்கிலியின் கீழ்ப் போட்டு அரைத்துப் போட்டீர்களே. பெண்களையெல்லாம் கற்பழித்து பெண்ணுறுப்பில் குண்டு வைத்து வெடித்தீர்களே. எதைச் சொல்வது எதை விடுவது. சமாதானப் படையாக வந்த நீங்கள் இரண்டிலொரு பகுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் விட்டு விலக விரும்புகின்ற பட்சத்தில் அந்தக் கணத்திலேயே "நீங்களே என்னவோ செய்து கொள்ளுங்கள் நாங்கள் போய் வருகின்றோம் "என்று கனவான்களாக திரும்பிப் போயிருக்க வேண்டும். அகிம்ஸை தேசத்தின் புகழ் வான் முட்டியிருக்கும். யாருக்குப் பாதுகாப்பு என்று ஓடிவந்தீர்களோ அவர்களையே சுட்டுப் போடுவது எந்த விதத்தில் நியாயமானது. இரஜீவ் காந்தியின் மரணம் பற்றி பேசுகிறீர்கள். யார் முதலில் துப்பாக்கி ஏந்தியது. சண்டையை வலிந்து திணித்தது. இந்திரா காந்தி சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். கண்ணைப் போல காத்த பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். நீங்களும் ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை வீதிகளில் கொன்று போட்டீர்கள்.அத்துடன் பிரச்சனையை முடித்து விட்டீர்களே. இதோ ஒரு சீக்கிய மகனிடமே நாட்டை நம்பி கொடுத்திருக்கிறீர்களே. இன்னும் சீக்கியர்களுடன் விரோதமா பாராட்டுகிறீர்கள்.

ஈழத் தமிழ் மக்களுடன் உங்களுக்குத் தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவிற்கு அயல் நாடுகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவு சாத்தியமாகும். அன்றைய தினம் பாகிஸ்தானும் சீனாவும் பங்களாதேசமும் உலகப் படத்தில் இருந்து இல்லாது போக வேண்டும். அந்த நல் நாள் உங்கள் கனவு நிறைவேறும் நாள்.

இராணுவம் என்பது அரசின் அடக்குமுறைக்கான ஒரு ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத ஒரு இராணுவம் ஒரு மண்ணில் இருக்கின்றதென்றால் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது அர்த்தமாகின்றது. ஐ.நா வின் அனுமதி இன்றி அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குச் சென்ற போது அது ஆக்கிரமிப்பு யுத்தம் என்று உங்கள் படைகளை அனுப்பாது மெளனம் காத்தீர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர் தரப்பின் எந்த சம்மதமும் இல்லாத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வந்தீர்கள். தமிழர் தரப்பிற்காக சிங்கள அரசுடன் நீங்களே ஒப்பம் இட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்போது இந்தியாவின் குடிமக்கள் ஆனோம். பாதுகாக்க வந்தவர்களே எம்மக்களை கொன்று கொன்று பாடையில் அனுப்பினீர்கள்.

நீங்கள் செய்தது சரியென்றால் தமிழ் நாட்டுமக்கள் உங்களைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க வேண்டும். செய்யவில்லையே. ஈழத்தமிழ் மக்களா சொன்னார்கள் வரவேற்பு அளிக்க வேண்டாமென்று. இல்லையே, சகோதர மக்கள் துன்பத்தில் செத்தொழிந்தது கண்டு இரத்தக் கண்ணீர் விட்ட தமிழ் சகோதரர்கள். தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல் ஒரு மனத்தாங்கல் உண்டு. தாங்கள் போற்றிய தலைவனைக் கொன்று போட்டார்கள் என்று. தங்கள் தலைவன் தாண்டவம் ஆடும் போது தடுக்காது விட்டதனால் அத்துர் மரணத்தில் அவர்களுக்கும் பங்குண்டே. யாரால் மறுக்க முடியும்.

இத்தனைக்கும் காரணம் ஹிந்திப் பெரும்பான்மையைக் கொண்ட இராமாயண இராமனின் மேலாண்மையை விரும்பும் நடுவண் அரசின் நீதியில்லாத நடைமுறையே. தமிழ் நாட்டு மக்கள் சொன்னால் உடனும் கேட்டு செயல்படுத்தக் கூடியவர்களா அவர்கள். யார் யாரினதோ முதுகில் ஏறி ஆட்சி செய்பவர்கள் சொல் கேட்பார்களா? இல்லாவிட்டால் ஒரு மாநில மக்களின் ஜீவாதார உரிமையான காவேரித் தண்ணீருக்கே இத்தனை காலம் கடத்துவார்களா? ஏன் நீங்களும் இந்தியக் குடி மக்கள் தானே ? ஏன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இழுத்தடிக்கப் படுகின்றது. யாராவது கேட்க முடியுமா? கேட்டது கிடைக்காவிட்டால் உங்களால் அவர்களை என்ன செய்து விட முடியும். 21 ஆம் நூற்றாண்டிலும் வயிற்றுப் பசிக்காக எலிகளைச் சாப்பிடும் மக்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பாவப்பட்ட மக்களை ஒரு வல்லரசின் போட்டியாகப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா? தமிழீழம் தான் உங்களுக்கு ஆபத்தென்றால் பாகிஸ்தானும் பங்களாதேசமும் உங்களைக் கபளீகரம் செய்து விட எத்தனை நேரம் ஆகும். அவ்வளவு வல்லமையற்றதா இந்திய நாடு . நடுவண் அரசின் பூச்சுற்றல்களைத் தங்கள் பிரச்சாரப் பீரங்கிகளில் ஊதிக் கொண்டிருக்கும் இவர்களை எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறீர்கள். இரஜீவை துப்பாக்கியினால் அடித்த சிங்களவருடன் உங்களுக்கு அப்படியென்ன பற்றுதல். சிங்களவர்க்கும் இன்னும் புரியவில்லை தாங்களும் பலியாடுகளே என்று. தெரிகின்ற காலம் வரும். அப்போது இதே போராட்டம் தமிழ் சிங்களம் என்ற இரு நாடுகளில் நடக்கக் கூடும்.

ஈழத்து மக்கள் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்களா? இல்லை இந்தியா ஈழத்தமிழ் மக்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றதா? 1991 இரஜீவின் மரணத்தின் பின்னால் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம். இந்தியாவால் ஈழப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சீண்டல்களுக்கு எங்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.

நாம் இந்தியா என்று நினைப்பது தமிழ் நாட்டு மக்களைத் தான். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றது. நிறைந்தளவு சாட்சியங்கள் இருக்கின்றது. எங்கள் மன்னன் எல்லாளன் ஒரு சோழ இளவரசன் தான். 44 ஆண்டுகள் அநுராத புரத்திலிருந்து அரசாண்டான். இராசேந்திர சோழமன்னன் பொலநறுவையில் இருந்து அரசாண்டான். வெள்ளையருக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே கிடையாது. சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழ் நாடுகள் இருந்தது. அவற்றுடன் எங்களுக்கு இரத்த உறவுகள் இருந்தது. நீங்கள் இந்தியராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தமிழர்கள். அந்த உறவுதான் எங்களுக்கும் உங்களுக்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் எதுவும் கிடையாது.

எங்கள் போராட்டம் எங்கள் இருப்புக்கான போராட்டம். யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நடந்தே தீரும். சரித்திரம் அப்படித்தான் சொல்கின்றது. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை எந்த ஆயுதமும் நசித்துவிட முடியாது.

அன்பர் பாஸ்டன் பாலாஜியின் "இந்தியாவும் வான் புலிகளும்" பார்க்க www.tamiloviam.com/unicode/06300505.asp

நன்றி>சிந்து
http://ilanthirayan.blogspot.com/2006/02/b...0581539428.html

Print this item

  கவிதை எழுத வாய்ப்பு
Posted by: anuraj.nl - 02-25-2006, 03:44 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (2)

வணக்கம் அண்ணா.
உங்கள் இணையத்தில் புதிதாக இணைந்துள்ளேன்
உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்று நடந்து கொள்கிறேன்.
சிறிய வருத்தம்
எனக்கு கவிதைகள் .சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம்.
ஆனால் உங்கள் விதிமுறைகளின் படி அந்த பகுதிகளில்
இப்போது என்னால் ஆங்கங்கள் எழுத முடியவில்லை.

Print this item

  அனைவருக்கும் எனது நன்றிகள்
Posted by: anuraj.nl - 02-25-2006, 02:42 AM - Forum: அறிமுகம் - No Replies

என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள்

Print this item

  அகதியா குடியேறியா என்ன நினைக்கிறீர்கள்?
Posted by: வர்ணன் - 02-25-2006, 12:35 AM - Forum: புலம் - Replies (18)

என்ன நினைக்கிறீர்கள்?

நான் பெயர் இங்கு குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் ஒருவர் அனுப்பிய தனிமடல் வாசகங்களை பாருங்கள்:

<b>அண்ணா நானுங்க ஸ்பொன்சருலதான் வந்தேனுங்க. என்னை அகதிகள் பட்டியலில் சேர்காதையுங்கோ ஏனெனில் நான் ******** நாட்டுக்கு விமானம் ஏறும் போது *******குரிய வதிவிட அனுமதியுடன் தான் ஏறினேன். நான் ஒன்றும் உங்களை மாதிரி திருட்டு தனமாக எல்லைகளுக்காலேயோ அல்லது விமான நிலையத்தினூடாகவோ இந்த நாடுகளுக்குள் பிரவேசிக்கவில்லை</b>

இவ்வாறு பெரிய கெளரவபட்டுக்கொள்கிறார் - தன்னோட புலம்பெயர்வு வாழ்வு பற்றி-!
எனக்கு அவர்கிட்ட கேக்கணும் போல இருந்தது என்னன்னா - என்னதான் ஸ்பொன்சரில வந்தேன் என்று அவர் நெஞ்சை நிமிர்த்தினாலும்- அவரை ஸ்பொன்ஸர் பண்ணியவர்கள் எப்படி நுழைந்தார்கள் - அந்த நாட்டினுள்ளே என்பதுதான் -! 8)

இக்கருத்து பற்றி - நீங்க ஏதும் நினைக்கிறீகளா-? 8)

Print this item

  தமிழ்த் தேசியம்
Posted by: இளைஞன் - 02-24-2006, 10:47 PM - Forum: தமிழீழம் - Replies (5)

வணக்கம்...

இங்கு தேசியம் என்றால் என்ன என்கிற கேள்வியும் அது சார்ந்து தேசியத்துக் ஆதரவாய் செயற்படுதல் என்றால் என்ன என்கிற கேள்வியும் எழுந்தது. எனவே முழுமையாக அதற்கு விடையளிக்க முடியாவிட்டாலும் பின்வரும் கட்டுரை உதவியாக அமையும் என்று நம்புகிறேன். வாசித்துப் பயன் பெறுக:

<b>எஸ்.பொவின் தமிழ்த்தேசியம்</b>
<b>Badri Seshadri,
Chennai, Tamil Nadu, May 2004</b>

ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன? <b>'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம்.</b>
<b>அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். </b>

அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.

இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம்.

ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.

எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.

* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.

* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.

* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.

* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.

* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.

* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]

* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.

* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.

* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.

நன்றி: தமிழ்த்தேசியம்.அமை
தொடுப்பு: http://www.tamilnation.org/diaspora/articles/espo.htm

Print this item

  மறதி
Posted by: Jenany - 02-24-2006, 04:58 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (2)

மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன்.
ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள்.

அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த தாளை எடுத்துச் சரிபார்த்தேன். பையுடன் கூடிய கடைச்சாமான்...டிக் அடித்தேன். சைக்கிள்...டிக் அடித்தேன்...பர்ஸ்.... டிக் அடித்தேன். திருப்தியுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். மனைவியிடம், 'எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார். இப்போது மறதியை வென்று விட்டேன்' என்று கூறி புன்னகை பூத்தேன். சரிபார்த்தவள், வாசல்பக்கம் போனாள். சைக்கிளை திரும்பக் கொண்டு வந்துவிட்டேனா என்பதைப் பார்க்கப் போகிறாள் என்ரு நினைத்துக்கொண்டேன்.... என்னை ஏற இறங்கப் பார்த்தவள் கேட்டாள்.

" கடைக்குப் போகும்போது, சைக்கிளில் நம்ம பையன் ரமேஷை முன்னால் வைத்துக்கொண்டு போனீர்களே? அவனைக் காணோமே...அவன் எங்கே?...."
திருதிருவென விழித்தேன்.

நன்றி: குமுதம்

Print this item

  கஜேந்திரகுமாருக்கு கொலைமிரட்டல
Posted by: sri - 02-24-2006, 01:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§ƒó¾¢ÃÌÁ¡ÕìÌ ¦¸¡¨ÄÁ¢Ãð¼ø


¡ú Á¡Åð¼ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§³ó¾¢ÃÉ¢ý «ÖÅĸò¾¢üÌ þáÏÅ ¦À¡Ä¢;Š À¡Ð¸¡ôÒ¼ý Åó¾ ®.À¢.Ê.À¢.¢É÷ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ÁüÚõ Àò¾¢¡¢¨¸Â¡Ç÷¸ÙìÌõ ¦¸¡¨Ä Á¢Ãð¼ø Å¢ÎòÐÅ¢ðÎî ¦ºýÚûÇ¡÷¸û.
þýÚ ¿ñÀ¸ø 252-6540 þÄì¸ À¢ì¸ô Å¡¸Éò¾¢ø ÅóÐ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É¡¢ý «ÖÅĸò¾¢Ûû «òÐÁ£È¢ ѨÆó¾Å÷¸§Ç þó¾ ¦¸¡¨Äô ÀÂÓÚò¾¨Ä Å¢ÎòÐûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

þÅ÷¸Ù¼ý ܼ Ш½Â¡¸ ãýÚ ¸¡ÅøÐ¨È¢ÉÕõ, ãýÚ þáÏÅò¾¢ÉÕõ ¬Ô¾ ¾¡¡¢¸Ç¡¸ ¸¡ÅÖìÌ þÕìÌõ §Å¨Ç¢ø þó¾ ºõÀÅõ þ¼õ ¦ÀüÚûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸¾¡Ìõ.

¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ ¸§ƒó¾¢ÃÉ¢ý §¿÷¸¡½ø ±ÎôÀ¾ü¸¡¸ Åó¾¢Õó¾ °¼¸Å¢ÂÄ¡Ç÷¸û ÀġĢ Å£¾¢Â¢ø ¯ûÇ «ÖÅĸò¾¢ý ÓýÉ¡ø ¬Ô¾õ ¾¡¢ò¾ ¸¡ÅøÐ¨È ÁüÚõ þáÏÅò¾¢ÉÕ¼ý ÜÊ ®.À¢.Ê.À¢.¢ɡ¢ý Å¡¸Éõ ÅóÐ ¿¢ýÈÐõ ÀÂò¾¢ý ¸¡Ã½Á¡¸ ¦ÅÇ¢§ÂÈ ÓÂýÈ §Å¨Ç¢ø Å¡ºÄ¢ø ¿¢ýÈ ®.À¢.Ê.À¢.¢É÷ °¼¸Å¢ÂÄ¡Ç÷¸¨ÇÔõ ÁÈ¢òÐ ÀÂÓÚò¾¢ Å¢ðÎî ¦ºýÚûÇ¡÷¸û.

சங்கதி

Print this item

  பாலுமகேந்திராவின் வீடு
Posted by: kanapraba - 02-24-2006, 12:04 PM - Forum: சினிமா - Replies (12)

தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை.
அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் " வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி.

முழுப்பதிவிற்கு

http://kanapraba.blogspot.com/

-கானா பிரபா-

Print this item

  &quot;58&quot;வது அகவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா!
Posted by: ஜெயதேவன் - 02-24-2006, 11:59 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (5)

இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம்.

எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.

Print this item

  புலம் பெயர் வாழ்வு
Posted by: Eelavan - 02-24-2006, 11:26 AM - Forum: புலம் - No Replies

கவிஞரும் ஊடகவியலாளருமான இளைய அப்துல்லா அவர்கள் திண்ணை வார இதழில் புலம் பெயர் வாழ்வு என்னும் தொடரை எழுதி வருகிறார்.

இவர் "பிணம் செய்யும் தேசம்","எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இரு கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர்.இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியவர்

முதலிரு பகுதிகளுக்குமான தொடுப்பு இங்கே

http://www.thinnai.com/pl02170611.html

http://www.thinnai.com/pl02240611.html

Print this item