02-24-2006, 04:58 PM
மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன்.
ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள்.
அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த தாளை எடுத்துச் சரிபார்த்தேன். பையுடன் கூடிய கடைச்சாமான்...டிக் அடித்தேன். சைக்கிள்...டிக் அடித்தேன்...பர்ஸ்.... டிக் அடித்தேன். திருப்தியுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். மனைவியிடம், 'எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார். இப்போது மறதியை வென்று விட்டேன்' என்று கூறி புன்னகை பூத்தேன். சரிபார்த்தவள், வாசல்பக்கம் போனாள். சைக்கிளை திரும்பக் கொண்டு வந்துவிட்டேனா என்பதைப் பார்க்கப் போகிறாள் என்ரு நினைத்துக்கொண்டேன்.... என்னை ஏற இறங்கப் பார்த்தவள் கேட்டாள்.
" கடைக்குப் போகும்போது, சைக்கிளில் நம்ம பையன் ரமேஷை முன்னால் வைத்துக்கொண்டு போனீர்களே? அவனைக் காணோமே...அவன் எங்கே?...."
திருதிருவென விழித்தேன்.
நன்றி: குமுதம்