| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 440 online users. » 0 Member(s) | 438 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,187
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,181
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,576
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,274
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,574
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,002
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,397
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,080
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,970
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232
|
|
|
| அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி! |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-14-2006, 09:39 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (6)
|
 |
<b>அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!</b>
'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக.
இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார்
''காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.
காதலை மதிக்கப் பழகினால் போதும்... அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.'' ''பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?'' ''இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர... வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.
பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல... அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் - பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்... என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. 'அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது' என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் - பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.
அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்... அதோடு... இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.'' ''காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?'' ''காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.
காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!'' ''காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?'' ''மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் 'காணும் பொங்கல்' காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. 'காதலுக்கு தினம் ஏது தினமும்' என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.
'காதலர் தினம்' என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!''
ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள் நாம் அன்பே!அன்பே!
தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?
அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!
தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!
ராசாத்தி
என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து
உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!
உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து
மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்சி!
ஊனே.. ஊனே... உருக்குறானே...
உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே...
கண்ணால் என்னைக் குடிக்கிறானே...
ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே...
மறப்பதென்றால் அது முடியவில்லை.
நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.
பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!
காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!
மாலை என்வேதனை கூட்டுதடி!
காதல் தன்வேலையைக் காட்டுதடி!
அறிவுமதி
நன்றி: ஆனந்தவிகடன்
|
|
|
| சொல்லு சொல்லு! |
|
Posted by: வர்ணன் - 03-14-2006, 04:07 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (16)
|
 |
<b>மழை வரும்போதுதான்
குடையை தேடுவான்!
மூச்சு முட்டும்போதுதான்
யன்னல் இருப்பதை நினைப்பான்!
நாளை எப்பிடி- சிரிக்க
வழியென்று எண்ணி
இன்றைய பொழுதை
அழுதே- தொலைப்பான்!
உழைக்கும் காலத்தில்
சேமிக்க நினையான்!
உதிரம் செத்து போனதொரு
காலத்தில்- காசை எண்ணி
தேம்பி தேம்பி அழுவான்!
படிக்கும் காலத்தில்
சீ என்ன வாழ்க்கை
என்று சினப்பான்!
காலம் முடிந்தால்
ஐயோ இனி என்னாகுமோ
என் வாழ்க்கை என்று அழுவான்!
அடை மழை பெய்யும் நாளில் -
நீரை சேர்த்து வைக்க நினைக்கான்!
அனல் வீசும் கோடை வந்தால்
குடத்தை தூக்கி கொண்டு
ஊர் ஊராய் திரிவான்!
போர் செய்யும் வீரருக்கு
ஐந்து சதம் கொடுக்கான்!
ஊரெலாம் - குண்டுவீச்சில்
ஒருமூலை சென்றொதுங்கினால்
தமிழர்புனர்வாழ்வு கழகம்
தனக்கு ஒன்றும் செய்யலையென்று
தரைமண்ணை அள்ளி
தூற்றி சபிப்பான்!
இவன் சரியில்லை !
அவன் சரியில்லை !
என்றே பேசி காலம் கழிப்பான்!
நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால்
நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்!
தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்!
யாரிவனோ?
உனக்கு தெரியுமா?
என்னை நானே கேட்கிறேன்
எனக்கு தெரியுமா?
உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு!
கேட்கிறேன் - அதில்
நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8) </b>
|
|
|
| பெரியார்! |
|
Posted by: narathar - 03-13-2006, 10:44 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (3)
|
 |
பெரியார்!
By டிசே தமிழன்
பெரியார், ‘‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர்.
ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. ‘நிறப்பிரிகை’ குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது ‘புதிய கோடாங்கி’- ‘கவிதாசரண்’ என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே).
இவ்வாறான விவாதங்கள், வியாக்கியானங்கள் என்பவற்றினூடாகவும் பெரியார், தன்னைப் புதிதாய் வாசித்து விளங்கி கொள்கின்றவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக விகர்சிப்பதுதான் குறிப்பிட வேண்டியது. இதுவேதான் பெரியார் இன்னும் காலாவதியாகவில்லை என்பதையும், இன்றைய காலத்துக்கும் அவரின் சிந்தனைகளுக்கான தேவையுள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.
கீழேயுள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள்.
நம் காலத்துக் கேள்வி
-ரமேஷ் - பிரேம்
கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?
ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.
பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.
பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.
பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.
இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்துகாட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக்கூறுவது அபத்தமானது.
பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.
பெரியார்கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேசவைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?
பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள்.
(நன்றி - உன்னதம்)
My special thankx to Keetru
http://elanko.net/pathivu/?p=37
|
|
|
| விண்வெளியில் தமிழ்ப்பெண் |
|
Posted by: கறுப்பி - 03-13-2006, 06:47 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
விண்வெளியில் தமிழ்ப்பெண்
கோலாலம்பூர்இமார்ச் 14 : மலேசியாவில் வாழும் தமிழ்ப்பெண் வனஜா சுப்ரமணியம் ரஷ்ய விண்வெளித் துறையினரால் விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கிலாங் லாமாவைச் சார்ந்த சுப்ரமணியம் மற்றும் வினோதினி தம்பதியர்களின் மகளான வனஜா இயற்பியலில் பட்டம் பெற்றிருக்கிறார்.
ரஷ்ய விண்வெளித்துறை, விண்வெளி ஆராய்ச்சிக்காக 120 பேர்களில் இருந்து முதல் கட்டமாக 59 பேரை தேர்வு செய்து அவர்களில் இருந்து 27 பேரை தேர்வு செய்தது. இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 27 பேர்களில் இருந்து 8 பேரை தேர்வு செய்தது.பின்னர் நடைபெற்ற மற்றுமொரு கடினமான தேர்வில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் ஒருவராக, வனஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
http://www.vanakkammalaysia.com
|
|
|
| தேர்வில் 18 முறை தோற்ற வாலிபர் 19-வது முறை எழுதுகிறார் |
|
Posted by: SUNDHAL - 03-13-2006, 05:08 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (12)
|
 |
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது31) இவர் அங்குள்ள மஞ்சா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். 1990-ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தனித் தேர்வு எழுத தொடங்கினார். எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். அக்டோபர், ஏப்ரல் என அடுத்தடுத்து தேர்வு எழுதினார் கடந்த ஆண்டு வரை 18 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டார். ஆனால் வெற்றிதான் பெறவில்லை.
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இந்த ஆண்டும் விண் ணப்பித்துள்ளார். இதற்காக புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வருகிறார். இந்த முறை எப்படியும் வென்று விடுவேன் என கிறிஸ்துதாஸ் உறுதி கூறுகிறார்.
Thanks:Malaimalar..
|
|
|
| ஒவ்வொரு ஆண்டும் மனைவியை மாற்றும் கிராம மக்கள் |
|
Posted by: SUNDHAL - 03-13-2006, 05:07 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் தர்த்ஸ் என்னும் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். தக்னு, தர்சிக், கர்குன் ஆகிய 3 கிராமங்களில் வசிக்கும் இவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகின்றனர். உலகின் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இவர் களைத்தான் மிக, மிக பழமையான இனத்தவர்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.
சுமார் 2500 பேர் கொண்ட இந்த இனத்தவர்கள்மற்ற வர்களிடம் இருந்து முழுமையாக வேறுபட்டு காணப்படு கின்றனர். நல்ல உயரமாக, அழகாக இருக்கும் இவர்கள் சூரியன் சுழற்சியை கணித்து டிசம்பர் 22-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். மற்ற இனத்த வர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. 2500 பேரும் ஒருவரை மாற்றி ஒருவரை சார்ந்து வாழ் கின்றனர்.
பல தாரம் வைத்துக்கொள்ளும் இந்த பழங்குடிகள், ஒவ் வொரு ஆண்டும் மனைவியை மாற்றிக் கொள்வதுண்டு. இதற்காக விழாகூட நடத்துகிறார்கள். அப்போது நீண்ட வரிசையில் நின்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள் வார்கள். யாரைப்பிடிக்கிறதோ, அவரை திருமணம் செய்து கொள்வார்கள்.
அந்த வகையில் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருப்பதுண்டு. ஆனால் இதுவரை எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. மனைவியை மாற்றிக்கொள்ள இவர்கள் நடத்தும் விழாவை 1970ம் ஆண்டு வரை மற்ற இனத்தவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். ஆனால் தற்போது மற்ற இனத்தவர்களுக்கு தடை விதித்து விட்டு மனைவி மாற்று விழாவை நடத்துகிறார்களாம். தர்த் பழங்குடி இன மக்களிடம் சமீப காலமாக கல்வி அறிவு அதிகரித்து வருவதால் பாரம்பரிய பழக்கம் மறைந்து வருகிறது.
Thanks:malaimalar...
|
|
|
| வைகோவின் நிலை சரியானதா? |
|
Posted by: malaravan - 03-13-2006, 05:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சரி பார்க்கலாம். வைகோஇ இது எம்மைப்பொறுத்தவரை இலட்சியம்இ உறுதிஇ தெளிவுஇ கொள்கைஇ மனம்தளராமை இன்னும் பல. இவரைப்போலதான் நான் என்றும் சொல்லுமளவிற்கு பல இளைஞர்களை தன்வசம் ஆக்கியவர் மட்டுமல்லஇ அவர் வசம் சாய்ந்தவர்கள் ஏராளம். குரலில் உறுதிஇ தெளிவுஇ பிடிவாதத்தன்மை. இது அவருக்கு பிடித்ததோ இல்லையோ மற்றவர்களுக்கு அவரைப்பிடிக்க வைத்தன.
தற்போதைய தமிழகத்தைப்பொறுத்தவரையில் கொள்ளைஇ உறுதிஇ தெளிவு என்பனவற்றில் இருவர் பெயர்கள் சாடைமாடையாக வெளித்தெரிந்தது. அதில் ஒருவர் வெளிப்படையாக சொல்லக்கூடிய வைகோ. மற்றொருவர் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
பொதுவாகவே இலட்சியவாதிகளின் பாதை மிகவும் கடினமானதாக இருக்கும். அதிலும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்தல் என்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. என்னடா வைகோ பற்றி எழுத வெளிக்கிட்டு இலட்சியம் பற்றி கிறுக்குகின்றான் என்று யோசிக்க வேண்டாம். வைகோ பற்றி எழுதுவதானால் அதுபற்றியும் எழுதவேண்டும்.
சரிஇ வைகோவின் நிலை சரியானதா? அதைப்பார்ப்போமாகின் முற்றிலும் சரியானதே. வைகோவின் நிலை முற்றிலும் அரசியல் நிலை. ஆம். வைகோவின் நிலை சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவுமாகும்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தளபதியாகஇ பிரச்சார பீரங்கியாக கலைஞரின் வாரிசாக வலம் வந்த வைகோ குடும்ப நலன்கருதி ஆளாக்கப்பட்டவராலேயே அறுக்கப்பட்ட வேதனையையும் அனுபவித்தவர். கலைஞருக்குப்பின் வைகோ என்கின்ற நிலையில் கலைஞர் எடுத்த முடிவு? அவரைப்பொறுத்தவரையில்இ ஒருவாள் உறையில்இ மறுவாள் கையில் என்கின்ற நிலையில் கையில் உள்ளதைக்காட்டி பயமுறுத்திக்கொண்டு உறையில் உள்ளதை அரசவாள் ஆக்க முயற்சி செய்தார். உறைவாள் அரசவாளான பின்னர் கைவாள் கொல்லன் பட்டறையில் பழைய இரும்பாக இருக்கும் என்கின்ற நினைப்பில் இருந்தபோதுதான் தனது முடிவிற்கு தன்கழக உடன்பிறப்புக்களே ஆப்பு வைப்பதை புரிந்துகொண்டார். அதனால் எங்கே தனது பதவிக்கு ஆபத்தா? அல்லது கட்சிக்கு ஆபத்தா?இ என்கின்ற நிலையில் ஆபத்துஇ தன் தலைக்கு ஆபத்து தற்கொலைப்படைகொண்டு தாக்கவருகின்றான் வை. கோபாலசாமி எனக்கத்தி அன்றுவரை தன்தம்பிஇ கழக வாரிசுஇ போர்வாள்இ மனச்சாட்சி என்;று கலைஞரால் கௌரவிக்கப்பட்டவர் கவுக்கப்பட்டார்.
அதன்பின் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் இருகட்சிகளின் தலைவர்களாக கூட்டுச்சேருகின்றனர். அப்போ வைக்கோ தேவைப்பட்டது. அதே வைகோ தேவைப்பட்டது. ஒரே கொள்கையுடைய வைகோ தேவைப்பட்டது ஏன்?. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 40 எம்பிக்கள் தேவை. ஆதலால் தேவைப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் 40ம் வேணும் என்றால் நல்ல கொள்கையுடைய தலைவன் தேவை. 40ம் வந்துவிட்டது. இனி தமிழகதேர்தல். இனியும் தேவை வைகோ. ஆனால் தமிழக தேர்தல் முதல்நாள்வரை கலைஞர் நினைப்பில் இனி வைகோ இருந்தால் என் அணிஇ அல்லது வைகோ தனியாகவே போட்டிபோட வேண்டும் என்கின்ற நினைப்பில் திளைத்திருந்தார். காரணம் மாற்றணிக்கு வைகோ போக விரும்பமாட்டார் என்பதே கலைஞர் நினைப்பு. மாற்றணிக்குத்தாவ வைகோவின் பலமான கொள்கை வைகோவிற்கு தடையாகவும் தனக்கு கொடையாகவும் இருக்கும் என்று நினைத்தார். நடந்தது. நடக்கக்கூடாதது எதுவும் இல்லை. ஆனால் நடந்தது.
ஆம் ஜெயலலிதாவின் கூட்டணியில் வைகோவின் ம.தி.மு.க. இது தேவையா? எனச்சிலர் கேட்கலாம். ஆனால் தேவை எனப்பலர் சொல்கின்றார்கள்.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காக அன்று ஜெயலலிதா வைகோவை சிறையில் அடைத்தார். ஆனால் அதே வைகோஇ அதே ஜெயலலிதா முன்னிலையில் மிக உறுதியாக நான் இப்பவும் சொல்கின்றேன் விடுதலைப்புலிகளை நான் என்றும் ஆதரிப்பேன் என்று. இதுதான் வைகோவின் இமாலய வெற்றி. ஈழவிடுதலை அமைப்பும்இ தமிழக கட்சிகளும் வேறுவேறானவை என்பதை புரிந்துகொண்டால் சரி.
இரா.கு
மலரவன்
www.tamilkural.com
|
|
|
|