| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 368 online users. » 0 Member(s) | 365 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,179
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,171
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,574
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,272
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,564
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,996
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,394
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,061
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,967
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,230
|
|
|
| பி.பி.சி சேவையில் |
|
Posted by: eelapirean - 03-15-2006, 03:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பி.பி.சி சேவையில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.உறவுகளே அதற்கான மறுப்பறிக்கையை அதன் கீழ் இயைக்கலாம்.எனவே உடனடியாகவும் சுருக்கமாவும் உங்கள் மறுப்பறிக்கையை எழுதவும்.
|
|
|
| டென்மார்க் துரோகிகளும் அவர்தம் வரலாறும் |
|
Posted by: Bond007 - 03-15-2006, 10:02 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
டென்மாரக்ககில் ஒரு தமிழின துரோகி தற்போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு நிரந்தர வேட்டுவைக்க முன்வந்துள்ளான். இந்தக் கழுதை மட்டுமல்லாது இதன் குடும்பமுமே 60000 பேரை பலி கொடுத்த தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை குழி தோண்டி புதைக்க முனைப்பாக ஈடுபட்டு வருகிறான். அண்மையில் இர் தமிழ் பேசும் சமூகத்திறகு செய்யத பெருங்கைகங்காரியம் பொய்யான தகவல்களை ஐரோப்பா எங்பும் பரப்பி நம் விடுதலையை இன்னும் பின்ன தள்ள வழி சமைத்ததே. இந்த வெருளிக்கு ஏன் இந்த வேலை என்று நீங்கள் கேட்கலாம். தான் ஜனநாயகத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்ற போர்யை போர்திக்கொண்டு ரீபீசியில் சங்கூதும் இந்த துரோகி உண்மையில் பழிவாங்கும் படலம் ஒன்றை மிகக்கைங்காரியமாக செய்து வருகிறார்.
1997ம் ஆண்டு ஜுலை மாதம் திருமலையில் ஒரு தமிழ் பா.ஊ கொல்லப்பட்டார். அவரின் கொலைக்கு காரண காரத்தா என தற்போது பாராளுமன்னறில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்(முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி) அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கொலைசெய்யப்பட்ட பா.கூவும் அப்போ தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரே அவர் பெயர் தங்க துரை. (இங்கே துரையை கவனிக்கவும்.)
தங்க துரை ஒரு காலத்தில் தங்கமாக இருந்தவர் தான். மக்களின் அதீத செல்வாக்கை பெற்றிருந்த ஒரு நபர். அனால் அவர் ஒரு விசியத்திலை இல்லை இல்லை இரண்டு விசியத்திலை வீக். ஒன்று பெண், மற்றது சொந்தம் பந்தங்களுக்கு பாரத்தும் பாராது உதவி செய்வது. இந்த இரண்டு விடயமும் தான் அன்னாரின் மரணத்திற்கு காரணமாய் போயின. இவரின் பெண் விடய தாராள மனப்பாங்கினால் தான் இவரினட மனைவியே இவரை தள்ளிவைத்திருந்தார். கிட்டத்தட்ட சங்கரி மாதிரி. சங்கரியும் இவரும் நல்ல கூட்டாளியள். திர தங்கதுரையிடம் ஒரு பையன் தனக்கு வேலை எடுத்து தரும்படி கோரி தன் குடும்பத்திடம் இருந்த எல்லாவற்றையும் பொறுக்கி சுழையாக ஒரு தொகை பணத்தை கொடுத்துளள்ளான். ஆனால் துரையே தன் சொந்தங்களுக்கு காட்டிய அக்றையை காசு வாங்கிய இடத்தில் காட்டவில்லை. அந்த பையன் மிகவும் ஆத்திரமுற்றிருந்தான். அப்ப அம்மா சந்திரிக்காமுகியின் ஆட்சி காலம். துரையருக்கம் சும்மா அங்கை இங்கை எண்டு பெண்ணசை கொண்டலைஞ்சாலும் அம்மையார் மீதும் மாறாத காதல். அம்மையாரின் துணிவு கம்பீரம் துரையரை நல்லாவே மயக்கிவிட்டிருந்தது. இந்த மயக்கத்தில் அம்மையாரின் காலுக்குள் பாம்பு போலை சுற்றி சுற்றி வந்தார். சும்மா சொல்க் கூடாது துரையாரை அம்மையார் ஒரு ஓரக்கண்ணால் பார்த்ததுக்கே துரையார் தன் விசுவாசத்தை அந்த மாதிரி காட்ட ஆரம்பித்து விட்டார். இவரின் அம்மையார் விசுவாசம், பணம் கொடுத்து ஏமாந்த இளைஞன் இரண்டுமே ஐயாவுக்கு எமனாக வந்துட்டுது.
துரையார் மரணத்தின் பின் டென்மார்க் துரையார் துவண்டு போனார். என்ன இருந்தாலும் உடன் பிறப்பல்லாவா? ஆனால் மரணம் nhடியது தான் ஆனால் மரணத்தை தாமாக வரவழைப்பவர்களை என்ன செய்வது. துரையரின் சகோதர பாசம் நியாயமானது தான், ஆனால் அதற்காத மொத்த தமிழினத்Nதையே அழிக்க நினைப்பது ஏதோ கண்ணகி மதுரையை எரிச்ச மாதிரி இருக்கு.
துரையாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உங்கள் உடன் பிறப்பு ஒரு நேர்மையான குறைந்த பட்சம் அவர் மனைவிக்காவது நேர்மையாக இருந்திருந்தால் அவர் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் தேசியத்தை கட்டியெழுப்பும் காவலான இருந்திருப்பார். நீங்களும் அவரைப்போல இருந்திருப்பீர்கள். ஆனால் அவர் அவர் செய்த தவறிற்கு என்;றோ ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டளையை ஏன் மறந்தீர்கள்.
டென்மாரக்கிலிருந்து நீங்கள் தமிழ் மக்களை அழிக்க தொடரும் ஒவ்வரு வேலைக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் என்றோ ஒரு நாள் தமிழ் பேசும் மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
|
|
|
| சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான் |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-15-2006, 09:14 AM - Forum: மருத்துவம்
- Replies (4)
|
 |
<b>சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்</b>
கடல் கடந்த தமிழ் மருத்துவம்
மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.
"கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே''
அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.
இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.
இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.
சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.
சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
நன்றி - தாகம்
|
|
|
| டக்ளசின் நியமனத்துக்கு யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் க |
|
Posted by: poonkudiyal - 03-15-2006, 07:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்து யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் நேற்று செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அறிக்கை:
யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ்பேசும் மக்களது மனித உரிமைகளை மீறுகின்ற சிங்களப் பேரினவாத அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் துணைபோகின்ற துணை இராணுவக் கும்பலாகிய ஈ.பி.டி.பியினர் தமிழ்பேசும் மக்களது அபிவிருத்தி குறித்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவோ அபிவிருத்தி கொள்கை வகுத்தலிலோ அல்லது நடைமுறைப்படுத்தலிலோ எவ்வகை அக்கறை கொண்டிருப்பார் என்பது யாவரும் அறிந்ததே.
சிறிலங்கா படையினரது அத்துமீறல்கள் கொடூரங்களுக்கு துணைபோவது மட்டுமன்றி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்பேசும் மக்களை வதைக்கின்ற அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றும் கைங்கரியத்திற்கு துணைபோவோர் மெய்யாகவே தமிழ்பேசும் மக்களது அபிவிருத்தியில் அக்கறை கொண்டிருப்பாரா?
சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் சமாதானம் என்னும் வெற்றுக் கோசத்தை முன்வைக்கும் அதேவேளையில் போரிற்கான முன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் பேசும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒரு பேர்வழியை தனது தேவைக்காக சிறிலங்கா பேரினவாதம் நியமித்துள்ளது.
வழமையாக ஒரு மாவட்டத்தின் பெருன்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் மூத்த உறுப்பினரே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். இதனை மீறி நடைபெற்ற இந்நியமனம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாமரம் வீசும் ஒட்டுக்குழுவினரதும் பேரினவாதத்தினரதும் கபட நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.
எனவே இந்நியமனம் தமிழ்பேசும் மக்களது இயல்பான கண்டனத்தினை பெற்றுள்ளது என்பதை தெரிவிப்பதுடன் இந்நியமனம் மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும். இல்லையேல் இதனை தடுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் தமிழ் மக்கள் போராட்டங்களில் குதித்து இக்கபடத்தை முறியடிப்பர் என்பதை தெரிவிக்கின்றோம்.
பொது அமைப்புக்களின் ஒன்றியம்
யாழ். மாவட்டம்.
நன்றி புதினம்
|
|
|
| வெளிநாட்டு மணமகன் - ஏமாறும் இந்தியப் பெண்கள் |
|
Posted by: Aravinthan - 03-15-2006, 12:59 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வந்து சீதனத்துக்காக இந்திய பெண்களை மணந்து, ஏமாற்றிவிட்டுப்போகும் ஆயிரக்கணக்கான மணமகன்கள் குறித்து இந்திய அதிகாரிகள் பெரும் கவலைகொண்டுள்ளனர்.
நல்ல சீதனத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பணத்தை அபகரித்துச் செல்வதற்காக பல மணமகன்மார் தமக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்தும், தமது வேலை வருமானம் குறித்தும் பொய்யான தகவல்களை கூறி பெண்வீட்டாரை ஏமாற்றுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அப்படியாக பெருத்த வரதட்சணையுடன் திருமணம் செய்துகொண்ட சில ஆண்கள், விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு பின்னர் பெண்ணை தாம் வாழும் நாட்டுக்கு அழைப்பதாகக் கூறிச்சென்றாலும், பலர் அவ்வாறு செய்வதில்லை.
இதனால் பல பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி பணத்தையும், தமது சுகத்தையும் இழந்த கதை குறித்து எமது செய்தியாளர் லியாம் மெக்பெரி வழங்கிய பெட்டகத்தின் தமிழ் வடிவை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
தகவல் - பி.பி.ஸி.
|
|
|
| மெல்பேர்ணில் இந்தியாஅதிகாரி இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் |
|
Posted by: கந்தப்பு - 03-15-2006, 12:25 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
மெல்பேர்ண் நகரில் கொமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வந்த இந்தியா நாட்டின் 35 வயதுடைய அதிகாரி, 16 வயதுடைய அவுஸ்திரேலியா இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்.
http://www.theage.com.au/news/commonwealth...2098465560.html
AN INDIAN Commonwealth Games official has been charged over an alleged sex attack on a teenage cleaner at the athletes village.
The 35-year-old man, a masseur, is alleged to have attacked the 16-year-old girl as she tried to clean his room about 10am on Monday. He is alleged to have tried to hug, kiss and fondle her.
The man,who denied any wrongdoing, was charged yesterday with one count of indecent assault and one count of unlawful assault and bailed by police to appear in the Melbourne Magistrates Court today.
Chief Commissioner Christine Nixon said the man's passport had been seized.
Indian general team manager Gurbir Singh said the team was keen to get to the bottom of the claims but did not want to prejudge the case.
"If it's happened the way it's alleged, it's reprehensible and we would condemn such incidents," he said.
Indian officials were initially planning to keep the man in the village, but were reviewing that decision last night.
Mr Singh said the Indians offered to send the man back to India immediately after learning of the allegations, but he stressed it was not an attempt to avoid the police.
The man has been provided with legal help by Melbourne 2006. "Unfortunately the boy is uneducated, he's completely illiterate, doesn't understand a word of English," Mr Singh said.
A large number of Indian politicians and delegates are in Melbourne observing the Games in preparation for Delhi hosting the next Games in 2010.
Mr Singh said the high-ranking officials were concerned about the image problem created by the claims.
India's chef de mission, H. J. Dora, said he was taking the matter very seriously. "We extend our utmost co-operation with the Australian authorities in this matter," he said.
With little media presence inside the village, officials from several teams said yesterday most athletes were unaware of the incident until told by team leaders.
Several nations have since called team meetings at the village to reinforce behavioural standards.
Management of the cleaning company, Cleanevent, said the alleged incident happened when the girl was left alone in the man's room, which was against procedure. Founder and executive director Craig Lovett said the alleged incident happened in a period of between 10 and 20 seconds when the girl's work partner, a school vice-principal in his 40s, stepped outside the room to collect a towel.
The company yesterday retrained staff on procedures.
Meanwhile, four youths who escaped yesterday afternoon from the Juvenile Justice Centre at Parkville — about 200 metres from the village — were arrested nearby. Games village commander Inspector Matthew Ryan said the four were in the village "for less than 40 seconds and were arrested within three or four minutes of leaving the village."
|
|
|
| North Country (திரைப்படம்) |
|
Posted by: AJeevan - 03-14-2006, 09:37 PM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
<img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/char.jpg' border='0' alt='user posted image'>
<b>North Country</b> (திரைப்படம்)
- டிசே தமிழன்
நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது.. ஒரு நல்ல சிறுகதை என்பது வெட்டி எடுக்கப்பட்ட கயிற்றின் பகுதி போல, எங்கே தொடங்குகின்றது எங்கே முடிகின்றது என்று தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஒரு படைப்பாளி கூறியதுமாதிரி, இந்தப்படமும் ஒரு புள்ளியில் திடீரென்று ஆரம்பித்து இன்னொரு புள்ளியில் சடுதியாய் முடிந்துவிடுகின்றது.
தனது ஆண் துணையால் அடித்து துன்புறுத்தப்பட, குழந்தைகளுடன் ஜோஸி தனது பெற்றோர் வீடு நோக்கிச் செல்வதுடன் படம் ஆரம்பிக்கின்றது. பெற்றோருடன் இருந்தாலும் ஜோஸி தனக்கென்று சொந்த வேலை தேடத்தொடங்க நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கப்போகின்றார். வேலைக்குச் சேரமுன்னர் வழமையான கர்ப்பம் தரித்திருக்கின்றாரா போன்ற வைத்தியப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டாலும், இது பெண்களுக்கு உரிய தொழில் அல்ல என்ற திமிருடன் ஆண்கள வேலைத்ளத்தில் பாலியல் சேட்டைகளைச் செய்தபடி இருக்கின்றனர். சுவர்களில், கழிவறைகளில், கெட்ட கெட்ட வார்த்தைகள் எழுதுவது, பெண்களின் உணவுப் பெட்டிகளில் sex toysஜ வைத்து நீ வாறியா என்று பல்லிளிப்பது, அதற்கும் மேலாய் பெண்கள் வேலையின் பளுவில் இருக்கும்போது அவர்களின் முலைகளைப் பிடித்து, உறுப்புக்கள் பற்றி வக்கிரமான நக்கல்கள் செய்வது என்று பலவிதமான உடல் உள பாலியல் பாதிப்புக்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.
<img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/harass.jpg' border='0' alt='user posted image'>
ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் சகிக்கமுடியாது என்று, ஜோஸி அந்த நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பர்களிடம் முறையிடப் போகின்றார். அங்கே அவர்கள் இவரின் முறைப்பாட்டைக் கேட்கமுன்னரே, நீ என்ன சொல்லப்போகின்றாய் எங்களுக்குத் தெரியும், ஆனால் அதற்கு முன் உனக்கு ஒரு சந்தோசமான செய்தியைத் தருகின்றோம் என்று கூறி, அவரை வேலையில் இருந்து நிறுத்துகின்றோம் என்கின்றார்கள். I am not quiting என்றும் தனக்கு இந்த வேலை கட்டாயம் தனது வாழ்க்கைச் செலவுக்கு தேவை என்கின்றபோது, அப்படி என்றால் முறைப்பாடு எதுவும் செய்யாது வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
மீண்டும் ஜோஸி வேலைக்குபோனாலும், அங்கே நடைபெறும் வன்முறைகள் முன்பு இருந்த்தைவிட இன்னும் மோசமாகின்றது. தொழிலாளர்களுக்கு என்று தொழிற்சங்கம் இருந்து அதில் பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் இப்படி ஜோஸி செய்ததால் தொழிற்சங்க நண்பர்களும் கைவிட்டுவிடுகின்றனர். சக பெண் தொழிலாளிகளும் உன்னாலை எங்களுக்குத்தான் பிரச்சினை என்று ஜோஸியை விலத்தி வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் சக தொழிலாளி மிக மூர்க்கமாய்த் தாக்க, எதுவும் செய்யவியலாத நிலையில் வேலையை விட்டு ஜோஸி விலகுகின்றார்.
ஜோஸி வேலை செய்யும் சுரங்கத்தில்தான் ஜோசியின் தகப்பனார் வேலை செய்தாலும் பெண்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யக்கூடாது என்று அதிக ஆண்கள் நம்புவதைப்போல நினைக்கும் ஒரு ஆணாய் அந்தத் தகப்பனும் இருப்பதால், தனது மகள் அங்கே வேலை செய்வதால் தனது கெளரவம் பாதிக்கப்படுகின்றது என்ற கோபத்தில் ஜோஸியுடன் பேசுவவதை நிறுத்திக் கொள்கின்றார். அதைவிட தனது மகள் பதின்மங்களிலேயேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று, அதற்கு யார் தகப்பன் என்று கேட்டபோது, தெரியாது என்று கூறிய பழைய கோபமும் தகப்பன் - மகள் உறவு உடைந்துபோனதற்கு இன்னொரு காரணமாய் இருக்கிறது.
<img src='http://elanko.net/pathivu/wp-content/uploads/2006/03/work.jpg' border='0' alt='user posted image'>
தான் வேலைக்குப் போவதை நிறுத்தினாலும் ஜோஸி தளர்ந்துவிடவில்லை. நிலக்கரிச் சுரங்ககத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக வழக்குப் போட ஒரு வழக்கறிஞரை நாடுகின்றார். வழக்கு தங்களுக்குப் பாதகமாய்ப் போகின்றது என்று அறிகின்றபோது எதிர்த்தரப்பு ஜோசியின் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது. ஜோஸியின் இரண்டு பிள்ளைகளில், முதல் மகனுக்கு யார் தந்தை? என்று கேள்வி கேட்கின்றார்கள். ஜோஸி அத்ற்குப் பதிலளிக்கத் தயங்க, அவருக்கு பல sexual partners இருந்திருக்கின்றார்கள் என்று நிரூபணமாகின்றது, அவ்வாறே நிலக்கரிச் சுரங்கத்திலும் நடந்துகொண்டு பாலிய்ல வன்முறை நடப்பதாய் பொய்யான குற்றச்சாட்டை தங்கள் மீது சுமத்துகின்றார்கள் என்று நிலக்கரிச் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகின்றது. இறுதியில் அந்த உண்மையை ஜோஸி உடைக்கின்றார். தனது பதின்ம வயதில் தனது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணரப்பட்டு, ஆனால் அந்தக் கொடூரத்துக்காய் தனது வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வளர்ந்த கருவை அழிக்க மனமில்லாதால் குழந்தையாய்ப் பெற்றுக்கொண்டேன் என்கின்றார். ஆனால் எதிர்த்தரப்பு இந்த வல்லுறவு நடந்துபோது சாட்சியாய் இருந்த ஜோஸியின் பாடசாலை ஆண் நண்பனையும் ஜோஸி விரும்பித்தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்று கூறவைத்து வழக்கை திசைமாற்றுகின்றது. இதுவரை காலமும் வேறொரு காரணத்தைக் கூறி வளர்க்கப்பட்ட ஜோஸியின் மகனும், she is a liar, she is a whore… என்று தாயைக் குற்றஞ்சாட்டி விலகிப்போக ஜோஸி உடைந்துபோகின்றார். மேலும் நகரும் இத்திரைப்படம், எப்படி இந்த வழக்கு முடிந்தது என்பதையும், ஜோஸியின் தகப்பன் - மகள் உறவும் ஜோஸி- மகன் உறவும் என்னாவாயிற்று என்பதையும் இயல்பாய் காட்சிப்படுத்துகின்றது.
Charlize Theron எனக்குப் பிடித்த கொலிவூட் நடிகைகளில் ஒருவர். Monster படம் பார்த்தபோதே பெண்களின் அழகு என்று நமக்குப் போதிக்கப்ப்ட்ட விடயங்களை உதறித் தள்ளிவிட்டு அந்தக் க்தாபாத்திரமாய் -முக்கியமாய் ஒரு கொலிவூட் நடிகை- மாறியிருந்தது வியப்பாயிருந்தது.. இத்திரைப்படத்திலும் பாத்திரத்துக்கேற்ற இயல்பான அழகையும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறான் படங்களில் தேர்ந்தெடுப்பதற்கும் நடிப்பதற்கும் தனி துணிச்சல் வேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். (இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் இவர் ஒருமாதிரியான ஆள் என்று கொலிவூட்டில் ஓரங்கட்டியும்விடவும் கூடிய அபாயமும் உண்டு என்பதால்).
இந்தப்படத்தில் காட்டப்படும் வழக்கு முடிந்தபின்னரே முதன்முதலாய் அமெரிக்காவில் (1984ல்) sexual harassment policy என்ற சட்டம் (நிலக்கரிச் சுரங்கங்களில்) வேலை செய்யும் பெண்களுக்காய் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது முக்கியமானது. இன்று நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமில்லாது, பெண்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட கூட, நிஜத்தில் இதைச் சாதித்துக்காட்டிய அந்தப்பெண்ணை நினைவுகூரத்தான் செய்வார்கள். A long journey begins with a single step என்பதற்கு இணங்க சின்னக் காலடியை அந்தப் பெண் எடுத்து வைத்திருக்கின்றார், நீண்ட நெடும்பயணம் பெண்களுக்காய் காத்திருக்கின்றது அதன் அழகோடும், அசிங்கங்களோடும் குரூரங்களோடும்.
நன்றி:
http://elanko.net/pathivu/?p=132
more details:
http://northcountrymovie.warnerbros.com/
|
|
|
| சட் சட்`டென கோபம் வருமா? |
|
Posted by: SUNDHAL - 03-14-2006, 06:32 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (13)
|
 |
கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள்.
கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள்.
சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி கோபம் என்பது அவர்கள் சொத்தாகிப் போவதால் `எதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளணும்` என்று அவரிடம் வீட்டு விஷயம் பற்றி சொல்வதையே தவிர்த்து விடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் நிலைமை சீரியஸாகி விடும்போது, அப்போதும் அந்த குடும்பத் தலைவர் விஷயம் தெரிந்ததும் தாம் தூம் என்று குதிக்கத்தான் போகிறார். அப்போது கூட நாம் சின்ன விஷயத்திற்கும் `சள்`ளென விழுவதால் தான் குடும்பம் நம்மிடம் இது விஷயமாக பேசப்பயந்திருக்கிறது என்பதை அந்த குடும்பத்தலைவர் உணர்ந்து கொள்ளமாட்டார்.
பெரும்பாலும் பொறுப்பை தட்டிக் கழிப்பவர் கள் தான் கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இவர் கள் சும்மா இருக்கும்போது கூட யாரும் வேலை சொல்லி விடக்கூடாது. உடனே முகம் மாறும். கோபத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கத் தொடங்கி விடும். வார்த்தை களை வாரியிறைக்கத் தொடங்கி விடுவார் கள்.
இவர்களாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்கள். அதே நேரம் வீட்டில் எல்லாம் சரியாக நடந்திருக்க வேண்டும். கோபப்பட்டே பழகிப்போன இவர்கள் முகத் துக்கு புன்னகையே மறந்து போகும். இவர் களாக எதற்காவது சிரிக்க முயன்றால் கூட அது செயற்கையாக இவர்களுக்கே தோன் றும்.
இந்த கடுகடு பார்ட்டி இருக்கிற வீடுகளில் எப்போதும் ஒரு அசாதாரண நிலை காணப்படும். வீட்டில் உள்ளவர்களும் இவர்களால் சிரிப்பைத் தொலைத்து விட்டு பரிதாபமாக காட்சி தருவார்கள். எடுத்ததற்கெல்லாம் கோபம் என்பது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுவதுண்டு.
கோபத்தையே தனது முதலீடாக வைத்திருந்த அப்பா அவர். தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகனிடம் கூட ரிங் மாஸ்டர் போலவே நடந்து கொண்டார். சின்னத்தவறு என்றாலும் கூட பெல்ட்டால் விளாசி விடுவார். இதனால் பையன் அவரிடம் பேசவே பயந்தான்.
ஒரு நாள் பக்கத்து தெரு நண்பனை பார்த்து விட்டு வரும்போது தெருநாய் ஒன்று மகனை கடித்து .லேசாக பல் பதிந்து விட்டது. மகனுக்கு அப்பாவிடம் சொல்ல பயம். அம்மாவிடம் சொல்லவும் பயம். இவனுக்கு அடி விழுந்த கையோடு அம்மாவையும் நாலு சாத்து சாத்தி விடுவார் அப்பா. அதனால் சொல்லாமல் மறைத்து விட்டான்.
நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான். `அய்யோ கோபத்தால் என் ஒரே குலக்கொழுந்தையும் இழந்தேனே ` என்று அழுது புரண்டார் அப்பா. அதற்குப்பிறகு எஞ்சியிருந்த காலங்களில் பாதிபைத்தியமாகத்தான் அவரை பார்க்க முடிந்தது.
கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா?
Thanks:Thanthi...
|
|
|
| "கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ |
|
Posted by: ஜெயதேவன் - 03-14-2006, 12:30 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (13)
|
 |
"கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ
தமிழக அரசியலின் லேட்டஸ்ட் பரபரப்பு வைகோ. சட்டென்று அணி மாறி தமிழக அரசியலின் போக்கையே மாற்றிவிட்டார். பொடா, தி.மு.க. என அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்?
"இதற்கு நீண்ட பதில் ஒன்றைத் தர வேண்டும். நானோ, எனது சகாக்களோ திட்டமிட்டு உருவாக்கிய இயக்கமல்ல மறுமலர்ச்சி தி.மு.க. 1993_ல் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நிகழ்ந்திராத சம்பவமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன். தி.மு.க. தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர்.
இந்தத் துயரச் சூழலில் லட்சக்கணக்கான தொண்டர்களும், எனது சகாக்களும் பாதாளத்தில் விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்ததினால் உருவான இயக்கம்தான் ம.தி.மு.க.
96_ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் ஜனதாதளமும் எங்களோடு கரம் கோத்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை நிறுவினார். அன்றையச் சூழலில் சூப்பர்ஸ்டாரின் ஆதரவும் சேர, தி.மு.க., த.மா.கா. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. எங்கள் அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வென்றது. மற்ற இடங்களில் தோற்றுப் போனோம். அதே மூப்பனாரின் த.மா.கா. 2001_ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
2002_ல் பொடாவில் கைதானேன். உடனே எங்கள் இயக்கத்தை களங்கப்படுத்தி முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டார்கள். முரசொலி மாறன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எனது குடும்பத்தினர் சென்று நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து, டாக்டர் கலைஞர் வேலூர் சிறையில் என்னைச் சந்தித்தார். ஜாமீனில் வெளியில் வருமாறு கேட்டுக்கொண்டார். நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதையும், தீர்ப்பிற்குக் காத்திருப்பதாகவும் சொன்னேன். உச்சநீதிமன்றம் எனது பேச்சுரிமைக்கு காப்புரிமை தந்தது. முரசொலி மாறன் மறைந்தார். பொடா நீதிமன்றத்தில் நானே வாதாடி வெளிவந்து, பழகிய நட்பை நினைத்து இறுதி மரியாதை செய்தேன்.
2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய சூழலில், தேர்தலைச் சந்திக்க வைகோ ஜாமீனில் வரவேண்டும் என கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். நானும் வந்தேன். நான் வெளியில் வருவதற்கு முன்பே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து ம.தி.மு.க.விற்கு வெறும் நான்கு இடங்களை ஒதுக்கினார்கள். அதனாலேயே நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நாற்பது தொகுதிகளில் 62 நாட்கள் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டேன். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற முழுமையான வெற்றிக்கு இந்து நாளிதழ் ஐந்து காரணங்களை பட்டியலிட்டது. அதில் மூன்றாவது காரணம், நான்.
பொடாவிலிருந்து வெளியில் வந்தபோதும் சரி, எனது தேர்தல் பிரசாரம், நடைப்பயணம், ம.தி.மு.க., சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வையும் சன் தொலைக்காட்சி காட்டவே இல்லை. எங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது, ம.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் நாங்கள் தொடர்ந்த நிலையில், வாரப்பத்திரிகை ஒன்றில், 'அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க.விற்கு 40 தொகுதி, 20 கோடி' எனச் செய்தி வந்தது. இந்தச் செய்தியைப் பார்த்த ம.தி.மு.க. தொண்டர்கள், அதிக இடங்கள் அ.தி.மு.க. கொடுத்தால் கட்சியை வலுப்படுத்தலாமே என கருதத்தொடங்கினர். நான் மட்டும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை வற்புறுத்தி வந்தேன்.
ஜனவரி 26_ம் தேதி கலைஞருடன் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். 25 தொகுதிகள் தருவதாக உறுதியளித்த கலைஞர், திருச்சி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிந்தபின் 'இருபத்தி இரண்டு இடங்கள் மட்டுமே ம.தி.மு.க.வுக்குத் தரமுடியும். இதை ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் ம.தி.மு.க. தொடரலாம்' எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாவம்... அவர் ஒரு சூழ்நிலைக் கைதி. வேறென்ன சொல்வது.'
ம.தி.மு.க.வை மரியாதைக் குறைவாக தி.மு.க. நடத்துகிறது என எங்கள் தொண்டர்கள் கொதிப்படைந்த நிலையில், கட்சி நலன் கருதி எடுத்த முடிவு இது" என நீண்ட விளக்கம் கொடுத்தார் வைகோ.
கருணாநிதி, சூழ்நிலைக் கைதி என்கிறீர்கள், ஏன்?
"ம.தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்று கலைஞரை நிர்பந்தப்படுத்திய அக்கறையுள்ள சக்திகள் வெற்றி கொண்டுள்ளது. கலைஞர் சூழ்நிலைக் கைதியாகியுள்ளார் என்பது இதன்மூலமே, வெளியில் தெரிகிறது."
கருணாநிதியிடம் இன்றைக்கும் பிடித்தது?
"தினமும் எழுந்தவுடன் அவரது கவிதைகளையும் காலப்பேழையையும் கவிதைச் சாவியும் விரும்பி படிப்பேன். அவரது 'வான்புகழ் கொண்ட வள்ளுவம்' புத்தக நிகழ்ச்சியில் 'காலத்தால், காவிய எழுத்தால் என்றும் உயர்ந்தவர் கலைஞர்' என்றேன். அந்த உணர்வு என்றைக்கும் இருக்கும். ஆனால், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்படும்போது ம.தி.மு.க.வை காவு கொடுக்க நான் தயாரில்லை."
மத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தொடர்வோம் என்கிறீர்கள். மத்திய அரசை ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். இது நெருடலாக இருக்காதா?
"மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கவில்லையா?"
தி.மு.க.வில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
"தி.மு.க.வின் எல்லா கூட்டங்களிலும் கலைஞரைவிட இன்னொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துவதும், எந்தக் காரணத்திற்காக கொலைப்பழி சுமத்தி என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்களோ அந்தக் காரணங்கள் இன்றும் உயிரோடு இருப்பதாகவே கருதுகிறேன்."
எல்லாம் சரி, முடிவெடுப்பதில் இத்தனை தாமதம் ஏன்?
"நானாக முடிவெடுக்கும்போது காலதாமதமே கிடையாது. இலங்கைக்கு செல்லும்போது கொல்லப்படலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையிலும் ஒரே நாளில் முடிவெடுத்தேன்.
கடந்த மூன்று மாதமாக ஊசலாட்டம் எதுவும் கிடையாது. அவசரப்படாமல், எல்லா கோணங்களையும் அலசி ஆராய்ந்து எல்லை மீறிய நிதானத்தைக் கடைப்பிடித்தேன். அவ்வளவுதானே தவிர, தாமதம் ஏதுமில்லை"
http://www.kumudam.com/kumudam/mainpage.php
|
|
|
|