![]() |
|
வெளிநாட்டு மணமகன் - ஏமாறும் இந்தியப் பெண்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வெளிநாட்டு மணமகன் - ஏமாறும் இந்தியப் பெண்கள் (/showthread.php?tid=535) |
வெளிநாட்டு மணமகன் - ஏமாறும் இந்தியப் பெண்கள் - Aravinthan - 03-15-2006 கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வந்து சீதனத்துக்காக இந்திய பெண்களை மணந்து, ஏமாற்றிவிட்டுப்போகும் ஆயிரக்கணக்கான மணமகன்கள் குறித்து இந்திய அதிகாரிகள் பெரும் கவலைகொண்டுள்ளனர். நல்ல சீதனத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பணத்தை அபகரித்துச் செல்வதற்காக பல மணமகன்மார் தமக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்தும், தமது வேலை வருமானம் குறித்தும் பொய்யான தகவல்களை கூறி பெண்வீட்டாரை ஏமாற்றுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படியாக பெருத்த வரதட்சணையுடன் திருமணம் செய்துகொண்ட சில ஆண்கள், விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு பின்னர் பெண்ணை தாம் வாழும் நாட்டுக்கு அழைப்பதாகக் கூறிச்சென்றாலும், பலர் அவ்வாறு செய்வதில்லை. இதனால் பல பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி பணத்தையும், தமது சுகத்தையும் இழந்த கதை குறித்து எமது செய்தியாளர் லியாம் மெக்பெரி வழங்கிய பெட்டகத்தின் தமிழ் வடிவை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். தகவல் - பி.பி.ஸி. - Jeeva - 03-15-2006 உத விட்டுட்டு யோரட் ஸ்ரிட்ல நின்று பிச்சை எடுக்கலாம். உழைக்க எலாட்டில் கவர்மன்ட் தாறத வேண்டி திண்னவேண்டியதுதான!!! |