03-14-2006, 12:30 PM
"கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ
தமிழக அரசியலின் லேட்டஸ்ட் பரபரப்பு வைகோ. சட்டென்று அணி மாறி தமிழக அரசியலின் போக்கையே மாற்றிவிட்டார். பொடா, தி.மு.க. என அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்?
"இதற்கு நீண்ட பதில் ஒன்றைத் தர வேண்டும். நானோ, எனது சகாக்களோ திட்டமிட்டு உருவாக்கிய இயக்கமல்ல மறுமலர்ச்சி தி.மு.க. 1993_ல் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நிகழ்ந்திராத சம்பவமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன். தி.மு.க. தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர்.
இந்தத் துயரச் சூழலில் லட்சக்கணக்கான தொண்டர்களும், எனது சகாக்களும் பாதாளத்தில் விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்ததினால் உருவான இயக்கம்தான் ம.தி.மு.க.
96_ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் ஜனதாதளமும் எங்களோடு கரம் கோத்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை நிறுவினார். அன்றையச் சூழலில் சூப்பர்ஸ்டாரின் ஆதரவும் சேர, தி.மு.க., த.மா.கா. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. எங்கள் அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வென்றது. மற்ற இடங்களில் தோற்றுப் போனோம். அதே மூப்பனாரின் த.மா.கா. 2001_ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
2002_ல் பொடாவில் கைதானேன். உடனே எங்கள் இயக்கத்தை களங்கப்படுத்தி முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டார்கள். முரசொலி மாறன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எனது குடும்பத்தினர் சென்று நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து, டாக்டர் கலைஞர் வேலூர் சிறையில் என்னைச் சந்தித்தார். ஜாமீனில் வெளியில் வருமாறு கேட்டுக்கொண்டார். நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதையும், தீர்ப்பிற்குக் காத்திருப்பதாகவும் சொன்னேன். உச்சநீதிமன்றம் எனது பேச்சுரிமைக்கு காப்புரிமை தந்தது. முரசொலி மாறன் மறைந்தார். பொடா நீதிமன்றத்தில் நானே வாதாடி வெளிவந்து, பழகிய நட்பை நினைத்து இறுதி மரியாதை செய்தேன்.
2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய சூழலில், தேர்தலைச் சந்திக்க வைகோ ஜாமீனில் வரவேண்டும் என கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். நானும் வந்தேன். நான் வெளியில் வருவதற்கு முன்பே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து ம.தி.மு.க.விற்கு வெறும் நான்கு இடங்களை ஒதுக்கினார்கள். அதனாலேயே நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நாற்பது தொகுதிகளில் 62 நாட்கள் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டேன். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற முழுமையான வெற்றிக்கு இந்து நாளிதழ் ஐந்து காரணங்களை பட்டியலிட்டது. அதில் மூன்றாவது காரணம், நான்.
பொடாவிலிருந்து வெளியில் வந்தபோதும் சரி, எனது தேர்தல் பிரசாரம், நடைப்பயணம், ம.தி.மு.க., சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வையும் சன் தொலைக்காட்சி காட்டவே இல்லை. எங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது, ம.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் நாங்கள் தொடர்ந்த நிலையில், வாரப்பத்திரிகை ஒன்றில், 'அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க.விற்கு 40 தொகுதி, 20 கோடி' எனச் செய்தி வந்தது. இந்தச் செய்தியைப் பார்த்த ம.தி.மு.க. தொண்டர்கள், அதிக இடங்கள் அ.தி.மு.க. கொடுத்தால் கட்சியை வலுப்படுத்தலாமே என கருதத்தொடங்கினர். நான் மட்டும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை வற்புறுத்தி வந்தேன்.
ஜனவரி 26_ம் தேதி கலைஞருடன் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். 25 தொகுதிகள் தருவதாக உறுதியளித்த கலைஞர், திருச்சி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிந்தபின் 'இருபத்தி இரண்டு இடங்கள் மட்டுமே ம.தி.மு.க.வுக்குத் தரமுடியும். இதை ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் ம.தி.மு.க. தொடரலாம்' எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாவம்... அவர் ஒரு சூழ்நிலைக் கைதி. வேறென்ன சொல்வது.'
ம.தி.மு.க.வை மரியாதைக் குறைவாக தி.மு.க. நடத்துகிறது என எங்கள் தொண்டர்கள் கொதிப்படைந்த நிலையில், கட்சி நலன் கருதி எடுத்த முடிவு இது" என நீண்ட விளக்கம் கொடுத்தார் வைகோ.
கருணாநிதி, சூழ்நிலைக் கைதி என்கிறீர்கள், ஏன்?
"ம.தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்று கலைஞரை நிர்பந்தப்படுத்திய அக்கறையுள்ள சக்திகள் வெற்றி கொண்டுள்ளது. கலைஞர் சூழ்நிலைக் கைதியாகியுள்ளார் என்பது இதன்மூலமே, வெளியில் தெரிகிறது."
கருணாநிதியிடம் இன்றைக்கும் பிடித்தது?
"தினமும் எழுந்தவுடன் அவரது கவிதைகளையும் காலப்பேழையையும் கவிதைச் சாவியும் விரும்பி படிப்பேன். அவரது 'வான்புகழ் கொண்ட வள்ளுவம்' புத்தக நிகழ்ச்சியில் 'காலத்தால், காவிய எழுத்தால் என்றும் உயர்ந்தவர் கலைஞர்' என்றேன். அந்த உணர்வு என்றைக்கும் இருக்கும். ஆனால், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்படும்போது ம.தி.மு.க.வை காவு கொடுக்க நான் தயாரில்லை."
மத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தொடர்வோம் என்கிறீர்கள். மத்திய அரசை ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். இது நெருடலாக இருக்காதா?
"மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கவில்லையா?"
தி.மு.க.வில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
"தி.மு.க.வின் எல்லா கூட்டங்களிலும் கலைஞரைவிட இன்னொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துவதும், எந்தக் காரணத்திற்காக கொலைப்பழி சுமத்தி என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்களோ அந்தக் காரணங்கள் இன்றும் உயிரோடு இருப்பதாகவே கருதுகிறேன்."
எல்லாம் சரி, முடிவெடுப்பதில் இத்தனை தாமதம் ஏன்?
"நானாக முடிவெடுக்கும்போது காலதாமதமே கிடையாது. இலங்கைக்கு செல்லும்போது கொல்லப்படலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையிலும் ஒரே நாளில் முடிவெடுத்தேன்.
கடந்த மூன்று மாதமாக ஊசலாட்டம் எதுவும் கிடையாது. அவசரப்படாமல், எல்லா கோணங்களையும் அலசி ஆராய்ந்து எல்லை மீறிய நிதானத்தைக் கடைப்பிடித்தேன். அவ்வளவுதானே தவிர, தாமதம் ஏதுமில்லை"
http://www.kumudam.com/kumudam/mainpage.php