Yarl Forum
"கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: "கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ (/showthread.php?tid=540)



"கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ - ஜெயதேவன் - 03-14-2006

"கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ

தமிழக அரசியலின் லேட்டஸ்ட் பரபரப்பு வைகோ. சட்டென்று அணி மாறி தமிழக அரசியலின் போக்கையே மாற்றிவிட்டார். பொடா, தி.மு.க. என அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்?

"இதற்கு நீண்ட பதில் ஒன்றைத் தர வேண்டும். நானோ, எனது சகாக்களோ திட்டமிட்டு உருவாக்கிய இயக்கமல்ல மறுமலர்ச்சி தி.மு.க. 1993_ல் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நிகழ்ந்திராத சம்பவமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன். தி.மு.க. தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர்.

இந்தத் துயரச் சூழலில் லட்சக்கணக்கான தொண்டர்களும், எனது சகாக்களும் பாதாளத்தில் விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்ததினால் உருவான இயக்கம்தான் ம.தி.மு.க.

96_ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் ஜனதாதளமும் எங்களோடு கரம் கோத்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை நிறுவினார். அன்றையச் சூழலில் சூப்பர்ஸ்டாரின் ஆதரவும் சேர, தி.மு.க., த.மா.கா. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. எங்கள் அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வென்றது. மற்ற இடங்களில் தோற்றுப் போனோம். அதே மூப்பனாரின் த.மா.கா. 2001_ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.

2002_ல் பொடாவில் கைதானேன். உடனே எங்கள் இயக்கத்தை களங்கப்படுத்தி முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டார்கள். முரசொலி மாறன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எனது குடும்பத்தினர் சென்று நலம் விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து, டாக்டர் கலைஞர் வேலூர் சிறையில் என்னைச் சந்தித்தார். ஜாமீனில் வெளியில் வருமாறு கேட்டுக்கொண்டார். நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதையும், தீர்ப்பிற்குக் காத்திருப்பதாகவும் சொன்னேன். உச்சநீதிமன்றம் எனது பேச்சுரிமைக்கு காப்புரிமை தந்தது. முரசொலி மாறன் மறைந்தார். பொடா நீதிமன்றத்தில் நானே வாதாடி வெளிவந்து, பழகிய நட்பை நினைத்து இறுதி மரியாதை செய்தேன்.

2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய சூழலில், தேர்தலைச் சந்திக்க வைகோ ஜாமீனில் வரவேண்டும் என கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். நானும் வந்தேன். நான் வெளியில் வருவதற்கு முன்பே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து ம.தி.மு.க.விற்கு வெறும் நான்கு இடங்களை ஒதுக்கினார்கள். அதனாலேயே நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நாற்பது தொகுதிகளில் 62 நாட்கள் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டேன். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற முழுமையான வெற்றிக்கு இந்து நாளிதழ் ஐந்து காரணங்களை பட்டியலிட்டது. அதில் மூன்றாவது காரணம், நான்.

பொடாவிலிருந்து வெளியில் வந்தபோதும் சரி, எனது தேர்தல் பிரசாரம், நடைப்பயணம், ம.தி.மு.க., சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வையும் சன் தொலைக்காட்சி காட்டவே இல்லை. எங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது, ம.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் நாங்கள் தொடர்ந்த நிலையில், வாரப்பத்திரிகை ஒன்றில், 'அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க.விற்கு 40 தொகுதி, 20 கோடி' எனச் செய்தி வந்தது. இந்தச் செய்தியைப் பார்த்த ம.தி.மு.க. தொண்டர்கள், அதிக இடங்கள் அ.தி.மு.க. கொடுத்தால் கட்சியை வலுப்படுத்தலாமே என கருதத்தொடங்கினர். நான் மட்டும் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை வற்புறுத்தி வந்தேன்.

ஜனவரி 26_ம் தேதி கலைஞருடன் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். 25 தொகுதிகள் தருவதாக உறுதியளித்த கலைஞர், திருச்சி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிந்தபின் 'இருபத்தி இரண்டு இடங்கள் மட்டுமே ம.தி.மு.க.வுக்குத் தரமுடியும். இதை ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் ம.தி.மு.க. தொடரலாம்' எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாவம்... அவர் ஒரு சூழ்நிலைக் கைதி. வேறென்ன சொல்வது.'

ம.தி.மு.க.வை மரியாதைக் குறைவாக தி.மு.க. நடத்துகிறது என எங்கள் தொண்டர்கள் கொதிப்படைந்த நிலையில், கட்சி நலன் கருதி எடுத்த முடிவு இது" என நீண்ட விளக்கம் கொடுத்தார் வைகோ.

கருணாநிதி, சூழ்நிலைக் கைதி என்கிறீர்கள், ஏன்?

"ம.தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்று கலைஞரை நிர்பந்தப்படுத்திய அக்கறையுள்ள சக்திகள் வெற்றி கொண்டுள்ளது. கலைஞர் சூழ்நிலைக் கைதியாகியுள்ளார் என்பது இதன்மூலமே, வெளியில் தெரிகிறது."

கருணாநிதியிடம் இன்றைக்கும் பிடித்தது?

"தினமும் எழுந்தவுடன் அவரது கவிதைகளையும் காலப்பேழையையும் கவிதைச் சாவியும் விரும்பி படிப்பேன். அவரது 'வான்புகழ் கொண்ட வள்ளுவம்' புத்தக நிகழ்ச்சியில் 'காலத்தால், காவிய எழுத்தால் என்றும் உயர்ந்தவர் கலைஞர்' என்றேன். அந்த உணர்வு என்றைக்கும் இருக்கும். ஆனால், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்படும்போது ம.தி.மு.க.வை காவு கொடுக்க நான் தயாரில்லை."

மத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தொடர்வோம் என்கிறீர்கள். மத்திய அரசை ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். இது நெருடலாக இருக்காதா?

"மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கவில்லையா?"

தி.மு.க.வில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

"தி.மு.க.வின் எல்லா கூட்டங்களிலும் கலைஞரைவிட இன்னொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்துவதும், எந்தக் காரணத்திற்காக கொலைப்பழி சுமத்தி என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்களோ அந்தக் காரணங்கள் இன்றும் உயிரோடு இருப்பதாகவே கருதுகிறேன்."

எல்லாம் சரி, முடிவெடுப்பதில் இத்தனை தாமதம் ஏன்?

"நானாக முடிவெடுக்கும்போது காலதாமதமே கிடையாது. இலங்கைக்கு செல்லும்போது கொல்லப்படலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையிலும் ஒரே நாளில் முடிவெடுத்தேன்.

கடந்த மூன்று மாதமாக ஊசலாட்டம் எதுவும் கிடையாது. அவசரப்படாமல், எல்லா கோணங்களையும் அலசி ஆராய்ந்து எல்லை மீறிய நிதானத்தைக் கடைப்பிடித்தேன். அவ்வளவுதானே தவிர, தாமதம் ஏதுமில்லை"

http://www.kumudam.com/kumudam/mainpage.php


- aathipan - 03-14-2006

டிவில மூஞ்சிய காட்டலன்னு தொண்டருங்க கோச்சுட்டாங்க. சீட்டு வேற கம்மியாப்போச்சு. செஞ்சது கறட்டுதான் தலைவா.


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-14-2006

கழகக் கண்மணியின் கண்ணீர்க் கடிதம் பிப்ரவரி 26



ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

ஆயிற்று 13 அண்டுகள். தி.மு.க.விலிருந்து கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு புரட்சிப்புயல் வைகோவை வெளியேற்றியபோது பொங்கிய ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. தி.மு.க. எங்களுக்கா, உங்களுக்கா என மல்லுக்கட்டி நின்றோம். தேர்தல் ஆணையம், அறிவாலயத்திற்கே கட்சியும் கொடியும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தபோது, இனிக் கறுப்பு சிவப்புக் கரை வேட்டியை கட்டமுடியாதே எனக் கதறி அழுத வைகோவின் ஆயிரக்கணக்கான தம்பிமார்களில் நானும் ஒருவன்.

கறுப்பும் சிவப்பும் வெறும் நிறங்களாக எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுடைய தோலும், அதனுள் ஓடும் குருதியுமாகவே அறிந்திருந்தோம். அதனை இழக்கிறோமே என்று எங்களின் குருதிக் கொந்தளிப்பு அதிகமானதை அறிந்துதானோ என்னவோ, புதிதாகத் தொடங்கிய ம.தி.மு.க.வில் சிவப்பு நிறத்தைக் கூடுதலாகச் சேர்த்து மேலும் கீழும் சிவப்பு, நடுவில் கறுப்பு என கொடியமைத்தார் வைகோ. எப்படியிருந்தாலும் கறுப்பு சிவப்பிலிருந்து எங்களை நிரந்தரமாகப் பிரிக்க முடியாது. ஆனால் தற்காலிகமாகவாவது பிரித்து விடலாம் எனக் கணக்குப் போட்டுச் செயல்படுகிறது ஜெயலலிதா அரசாங்கமும் அதனிடம் சம்பளம் வாங்கும் உளவுத்துறையும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்குமிடையிலான பிரிவும் பிளவும் பங்காளிச் சண்டையைப் போன்றது. வெட்டுக்குத்து இருக்கும், விளாசல்கள் இருக்கும், உன்னை விட்டேனா பார் என்ற பாய்ச்சல் இருக்கும். அதுவும் திராவிட இயக்கங்களுக்கு இது புதிதல்ல. பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்தபோது, ‘கண்ணீர்த்துளி பசங்க' என்று ஆரம்பித்து அய்யா கொடுத்த வசவுகளையெல்லாம் திரும்ப ஒலிபரப்பினால் காது தாங்காது. அவை யெல்லாம் கோபத்தின் வெளிப்பாடு. உணர்ச்சிக் கொந்தளிப்பு. அதற்காகப் பெரியாரும் அண்ணாவும் கடைசி வரைக்கும் எதிரிகளாகவே இருந்துவிட்டார்களா? மனைவியின் மரணத்தையே தனது பொதுவாழ்வுக்கான சுதந்திரம் எனக் கருதிய அய்யா அவர்கள், அண்ணாவின் மரணத்தில்தான் கதறிக் கதறி அழுதார் என்பதை திராவிட இயக்கம் மறந்துவிட வில்லை. பெரியார் திட்டிய ‘கண்ணீர்த் துளி'யைவிட, அவர் சிந்திய கண்ணீர்த்துளிதான் வரலாற்றின் பக்கங்களில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்கும் நடந்த சண்டைகளைப் புதிதாக விளக்கத் தேவையில்லை. கொலைகாரன் என ஒரு தரப்பின் குற்றச்சாட்டு, வெள்ளைப்புடவை கட்ட வேண்டியிருக்கும் என இன்னொரு தரப்பின் கோபாவேசம் இவற்றை மறைக்க முடியாதுதான். ஆனால், மனம் வைத்தால் மறக்க முடியும். அதனால்தான் வைகோ சொன்னார், ‘அந்தக் காயம் ஆறிவிட்டது. ஆனால் வடு அப்படியே இருக்கிறது' என்று. உண்மைதான். இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்ட மோதலால் மாறாத வடு வைகோ நெஞ்சில் மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றிலும் பதிந்தே இருக்கிறது. அந்த வடுவை மீண்டும் கீறிப்பார்க்கச் சூழ்ச்சியாளர்களும், இன எதிரிகளும் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரு கட்சிகளின் தலைமையும் பலியாகப் போகின்றனவா என்பதுதான் உண்மையான திராவிட இயக்க உணர்வுள்ள தொண்டர்களின் மனத்தில் உள்ள கேள்வி.

பங்காளிச் சண்டை தீர்க்க முடியாததா? சொத்துப் பங்கீட்டில் சிக்கலில்லாமல் பார்த்துக் கொண்டால் பங்காளிப் பிரச்சினைக்கு இடமேது? தொகுதிப் பங்கீட்டில் சரியாக நடந்துகொண்டால் அரசியல் பங்காளிகளுக்குள் அடிதடி ஏது? கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து உண்மையைப் பேசுவோம். வைகோவுடன் 9 மாவட்டச் செயலாளர்களும், கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரி வரையிலும் கணிசமான தி.மு.க. தொண்டர்களும் பிரிந்து போனது ஏன்? ஒவ்வொரு பகுதியிலும் கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போட்டிதானே! கோட்டைக்கான அதிகாரப் போட்டிகூட அல்ல. பட்டுக்கோட்டையில் கட்சிக்கான அதிகாரப் போட்டியில் உடன் பிறப்புகளுக்குள்ளேயே மோதல் எற்பட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாக வில்லையா? ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தரப்பின் கை ஓங்கியிருந்ததும் இன்னொரு தரப்பு ஒடுங்கியிருந்ததும்தானே இந்த பங்காளிப் பிளவை பெரிதாக்கியது. 13 ஆண்டுகாலம் தனிக் கட்சியைக் கட்டிக்காத்து வளர்த்தபோதும் இன்றுவரை சட்டமன்றத்தில் நுழைய வாய்ப்பில்லாமல் இருப்பதும் இந்தப் பிளவை பெரிதாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அண்ணன் - தம்பி என்பது சொல்லளவில் இல்லாமல், செயலில் இருக்க வேண்டும் என வைகோவின் தொண்டன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

தம்பிகள் பல்லக்குத் தூக்குவதும் அண்ணன்கள் அமர்ந்து வருவதும் தலைமையில் மட்டுமல்ல கிளைக் கழகங்கள் வரை நீடிக்க வேண்டுமென்றால் பங்காளிச் சண்டை தீரவே தீராது. தம்பிகளுக்கு உரிய பங்கு வேண்டும் என்று கேட்பது கலகமல்ல. உரிமை! எந்தக் காரணத்திற்காக பிரிந்தோமோ, அதே ஏற்றத்தாழ்வு சட்டமன்றத் தேர்தலிலும் நீடிக்கும் என்றால் இணைந்து செயல்படுவது எப்படி சாத்தியம்? அதனால்தான் கௌரவமான தொகுதிகள் என்ற குரல் ஒலிக்கிறது. இதில் தவறு என்ன? இந்த உரிமைக் குரலை கலகக் குரலாக சித்திரிக்கச் சில குள்ளநரிகள் முயல்கின்றன. அதற்கு முன்னாள் தலைவரும் இந்நாள் தலைவருமான நீங்கள் இருவரும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னைப் போன்ற தொண்டர்களின் பணிவான கோரிக்கை.

உளவுத்துறையின் நாரத கானத்துக்கு மகுடிப் பாம்பாக மயங்கி, பிளவுக்கு காரணமாக அமைந்துவிட்டால் அது இத்தனை நாள் காத்துவந்த பெருமையை அழித்து விடும். முன்னாள் தலைவர் கலைஞரின் ராஜதந்திரமும் அரசியல் அணுகுமுறையும் நாம் அறிந்தவை தாம். இன்று அவரால் இவையெல்லாம் நமக்கு பாதிப்பை உண்டாக்குவனவாக நினைக்கிறோமோ, அவையெல்லாம் அன்று நாமும் சேர்ந்து சாணக்கியத்தனம் எனப் புகழ்ந்தவர்கள்தான் என்பதை மறந்துவிட முடியாது. அவரது அணுகுமுறையிலேயே நாமும் அவரிடம் சீட்டுகளைப் பெறுவதே 13 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் கற்ற ராஜதந்திரமாக இருக்க முடியும். அது பாராட்டுக்குரியதும்கூட.

அதை விட்டுவிட்டு, அ.தி.மு.க. பக்கம் சென்றால் சீட்டும் கிடைக்கும் நோட்டும் கிடைக்கும் என புளகாங்கிதமடைந்து பேசுவது, ‘அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி' என்கிற நமது அடிப்படைக் கொள்கைகளின் அடிவயிற்றில் அரிவாளால் ஒங்கிப் போடுவதாக அமைந்துவிடும். எந்த விதத்தில் அ.தி.மு.க. தலைமை, கூட்டணி உறவுக்குப் பொருத்தமானது என்பதை யோசிக்க வேண்டியது நமது கடமை. நமது உயிரனைய கொள்கைகளில் ஒன்றிலேனும் துளியளவு உடன்பாடாவது அ.தி.மு.க.வுக்கு உண்டா? சேது சமுத்திரத் திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் சிம்ம கர்ஜனை செய்தவர் நமது தலைவர் வைகோ. இன்று அந்தத் திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்கியிருக்கும் நிலையில் அதற்கு எதிராகக் கடற்கரைப் பகுதியெங்கும் கலவரத்தை விதைத்துக்கொண்டிருப்பது அ.தி.மு.க. தலைமை.

ஸ்டெர்லைட் போன்ற பன்னாட்டு ஆலைகள் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கக்கூடாது எனக் குரல் கொடுத்துப் போராடியவர் நமது தலைவர். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாமிரபரணி தண்ணீரையும் அள்ளிக்கொடுத்து, தமிழக மக்களை தாகத்தில் தவிக்க விடுவது அ.தி.மு.க. தலைமை. தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது நமது உயிர்மூச்சுக் கொள்கை. ஈழத்தமிழர் நலனுக்காகப் போராடுபவர்களை ஒடுக்க நினைப்பவர்களுடன் கைக்கோத்துக்கொண்டு செயல்படுவதே தனக்குப் பெருமை என நினைப்பது அ.தி.மு.க. தலைமை.

எந்தவிதத்திலும் ஒட்டோ உறவோ இல்லாத ஒரு தலைமையிடம் சீட்டுக்கும் ஒட்டுக்கும் யாசகம் கேட்டு நிற்பது என்பதை மானமுள்ள இயக்கத்தினரால் சிந்திக்கக்கூட முடியாதே! வென்றாலும் தோற்றாலும் கொள்கையே மூச்சு, தலைவர் வைகோவே எங்கள் இதயத்துடிப்பு என வாழ்கிற இலட்சோபலட்சம் ம.தி.மு.க. தொண்டர்கள் எப்படி அ.தி.மு.க.வுடனான உறவை ஏற்பார்கள்? உயிரினும் மேலான தலைவரை 500க்கும் அதிகமான நாட்கள் பொடா சிறையில் தள்ளிய ஒருவரை ஆதரிப்பது என்று முடிவெடுத்தால், தமிழக மக்கள் எள்ளி நகையாடமாட்டார்களா? நெருக்கடிக் காலச் சிறையில் தள்ளிய இந்திராகாந்தியுடன் கலைஞர் கூட்டணி வைக்கவில்லையா என்ற வாதத்தை வைக்கலாம். அன்றைய தலைவர் செய்த தவற்றை, இன்றைய தலைவரும் செய்ய வேண்டும் என்பது அரசியல் நியதியா? இந்திராகாந்தியுடன் வைத்த கூட்டணியால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா பயனடைந்தார். சட்டமன்றத் தேர்தலில் கலைஞரால் வெற்றிபெற முடிந்ததா? மக்கள் புறக்கணித்தார்கள் என்பதுதானே வரலாறு.


கலைஞர் நம்மை வளரவிடமாட்டார் என்ற கருத்து பரப்பப்படுகிறது. அதற்காக ஜெயலலிதா என்ன ம.தி.மு.க.வை தண்ணீர் ஊற்றி வளர்த்து விடுவாரா? தனது எதிரியை ஒழிக்க வேண்டும் என்பதற்குத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்வார். சீட்டாட்டத்தில் பயன்படும் ஜோக்கர் சீட்டா ம.தி.மு.க.? 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்கள் அனுபவித்த கொடுமைகளை வேரறுக்க வேண்டிய பொறுப்பு, மகத்தான அரசியல் இயக்கமான ம.தி.மு.க.வுக்கும் இருக்கிறது. மக்கள் பக்கம் நாம் நிற்க வேண்டாமா? இன்றைய அரசியல் சூழலின்படி, கலைஞரால் கட்டுண்டிருக்கிறோம். பொறுத்திருப்போம். காலம் மாறும். அதுவரை காத்திருப்போம். அவசரப்பட்டு அ.தி.மு.க. உறவு என்று குரல் கொடுத்து, ம.தி.மு.க.வும் ஒரு சராசரி அரசியல் கட்சிதான் என மக்களிடம் பெயர் வாங்காதிருப்போம்.

கண்ணீருடன்,
க. இளமாறன்
ம.தி.மு.க. தொண்டன், சிவகாசி


நன்றி - கீற்று


- Luckyluke - 03-15-2006

அந்தத் தொண்டரின் உணர்வுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.... ஆனால் வைகோவின் முடிவு?


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-15-2006

þýÉ¡ «ñ½¡ò§¾ §¾Ê §¾Ê ¿õÀ ¨ÃðÊíÌìÌ ¸ÕòÐ ±ØÐÉ¢¸¢§È ! ÒøÄâìÌÐÀ¡ !!!!


- Luckyluke - 03-15-2006

அப்புடி இல்லே உடன்பிறப்பே....

இங்கே இருக்குற தமிழ்நாட்டு தமிழர்கள் நாம ரெண்டு பேரு தான்.....

இனம் இனத்தோட தானே சேரணும்....


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-15-2006

Luckyluke Wrote:அப்புடி இல்லே உடன்பிறப்பே....

இங்கே இருக்குற தமிழ்நாட்டு தமிழர்கள் நாம ரெண்டு பேரு தான்.....

<span style='font-size:16pt;line-height:100%'>இனம் இனத்தோட தானே சேரணும்</span>....




<b>¯¼ýÀ¢ÈôÀ¡¸ ¸Õ¾¢Â¾üÌ ¿ýÈ¢, þÉõ þÉò§¾¡Î¾¡ý §ºÃÛõ. «Ð ºÃ¢ ¾Á¢ú ¿¡ðÎò¾Á¢Æ÷ ±ýÚ ²Ðõ þÉõ ¯ñ¼¡ ¿ñÀ§Ã ! þôÀÊ À¡÷ò¾¡ø «ôÒÈõ ÀðÎ째¡ð¨¼ò¾Á¢Æý , ÀÃí¸¢Á¨Äò¾Á¢Æý ¦º¡øÄ¢ ¦Ã¡õÀ §À÷ ÒÈôÀðΠŢÎÅ¡÷¸û. ¾Á¢Æ¨É þÉÁ¡¸ Á¾¢ôÀÐ ±ýÀÐ ¦ÅÚõ §¾º¢Â þÉõ( NATIONAL RACE ) ±ý¸¢È ¸¡Ã½ò¾¢É¡ø ÁðÎõÁøÄ ÁÃÀ¢Éõ ( ETHINIC RACE ) ±ý¸¢È ¸¡Ã½ò¾¢É¡Öõ ¾¡ý . ¾Á¢Æý ±íÌ þÕó¾¡Öõ ¾Á¢Æó¾¡ý. ´§Ã þÉõ ¾¡ý</b>


- Luckyluke - 03-15-2006

இனம் இனத்தோடு தானே சேரணும் என்று நான் கூறியது ஒரு வார்த்தை அலங்காரத்துக்காகத் தான்.... நாம் இருவரும் ஒரே நாட்டுக்காரர்கள், ஒரே மாநிலத்தவர்கள் என்பதை வலியுறுத்தவே அப்படி கூறினேன்....


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-15-2006

µ ! «ôÀÊ¡ ºÃ¢ , ¾Á¢ú¿¡ðÎò¾Á¢Æ÷ ±ýÀÐõ , ®Æò¾Á¢Æ÷ ±ýÀÐõ , À÷Á¡ ¾Á¢Æ÷ ±ýÀÐõ , ¸÷¿¡¼¸ ¾Á¢Æ÷ ±ýÀÐõ «Å÷¸û Å¡Øõ ¿¢ÄôÀÃôÒ¼ý þ¨ÉòÐ¡øÖõ ¦º¡øÄ¡¸§Å ¿¡ý ¸Õи¢§Èý «§¾ §Å¨Ç «Å÷¸Ùì¸¡É §¾º¢Â¾ý¨Á Á¾¢ì¸ôÀ¼§ÅñÊÂÐ. ºÃ¢ ¾¨ÄôÀ¢üÌ ÅÕ§Å¡õ.

¨Å§¸¡ ¾ý «Ãº¢Âø Å¡úÅ¢ø Á¢¸ô¦Àâ À¢ýɨ¼¨Å ºó¾¢ôÀ¡÷ ±ýÀÐ ±ý ±ñ½õ, ²¦ÉÉ¢ø þô§À¡Ð ¸ñÎûÇ Üð¼½¢ §À¡ø ÓýÒ þÅ÷ «ó¾ «õ¨Á¡ռý «Ãº¢Âø ¯È× . ¨Åò¾¢Õó¾¡Öõ «ô§À¡¨¾Â ¿¢¨Ä §ÅÚ. «ô§À¡Ð þó¾¢Â §¾÷¾ø ¬¨ÉÂõ 6% Å¡ìÌ ¦ÀÚõ ¸ðº¢¸¨Çò¾¡ý «í¸¢¸¡Ãõ «Ç¢ôÀÐ ±É ÓÊ× ¦ºö¾Ð, «ô§À¡Ð Üð¼½¢ ¨Åò¾Ð þÅÕìÌõ Ä¡Àõ , «¾¢Ó¸ ¨ÅÔõ «ô§À¡Ð ¸ñΦ¸¡ûÇ Â¡ÕÁ¢ø¨Ä ±É§Å ºÃ¢¾¡ý. ¬É¡ø þô§À¡Ð ±ýÉ þÅÕìÌ ¿¼óРŢð¼Ð ±ýÚ ¦ÅÇ¢§ÂȢɡ÷ ±ýÚ ÒâÂÅ¢ø¨Ä.

¯í¸û ¸ÕòÐ ±ýÉ?


- Luckyluke - 03-16-2006

எனக்கு என்னவோ 3 சீட்டு தான் பிரச்சினை என்று தோன்றவில்லை.... வைகோவும் அவர் கட்சி பேச்சாளர்களும் 2 மாதங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்து விட்டோம் என்று பேசுகிறார்கள்.... நம்ப வைத்து கழுத்தறுக்க அவர் இந்த நேரத்தில் வெளியேறி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்....

அவர் இந்த தேர்தலில் 35 தொகுதிகளில் நின்று 5 அல்லது 6ஓ தான் வெற்றி பெற முடியும்.... திமுக கூட்டணியில் இருந்திருந்தால் 22ல் 15 வெற்றி பெற்றிருக்கலாம்....

பொதுமக்கள் மத்தியில் அவர் பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்....

(இந்தக் கூட்டணியின் பின்னணியில் அவர் மகன் வையாபுரியின் பங்கு என்னவென்று தெரியுமா?)


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-16-2006

¦¾Ã¢Â¡Ð ! ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾¨¾ ¦º¡øÖí¸û


- Luckyluke - 03-16-2006

வையாபுரி மெதுவாக கழகத்தில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளார்... வைகோவின் நடைபயணத்தை படமாக தயாரித்து விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பியதில் இருந்து அவரது பணி ஆரம்பமாகியது...

98 தேர்தலில் அன்புமணியை வைத்து ராமதாஸை கூட்டணிக்கு அம்மா வலுக்கட்டாயமாக அழைத்தார்.... 2001 தேர்தலில் அப்போது அரசியலுக்கே வராத வாசனை வைத்து த.மா.கா. மூப்பனாரை வளைத்தார்....

அதுபோலவே இப்போது நடராஜன் மூலமாக எல்.ஜி.யை பிடித்து, எல்.ஜி. மூலமாக வையாபுரியை பிடித்து வைகோவை அமுக்கி இருக்கிறார்..... இதற்காக எவ்வளவு பண பரிமாற்றம் நடந்தது என்பது நடராஜனுக்கே வெளிச்சம்....

இதன் மூலம் எல்.ஜி.யின் மகன் அண்ணாவுக்கு ஒரு சீட்டும், நாஞ்சில் சம்பத்துக்கு புது வீடும் (3 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாட்சி நாகர்கோயிலில் இருந்த அவர் வீட்டை இடித்தது) கிடைக்கும்.... மதிமுக தொண்டர்களுக்கு பட்டை நாமம் தான்....

தனிமனித பண்புகளில் தலைசிறந்த வைகோவுக்கு தாய்ப்பாசத்தை விட மகன் பாசம் தான் அதிகமாக போய் விட்டது....


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-16-2006

«ôÀÊ¡ !


6 ¬ñÎìÌ Óý ºõÀò «ñ½Ï¼ý ÀÆÉ¢Â¢ø ´Õ Üð¼ò¾¢ø Àí§¸ü¸ §À¡Â¢Õó§¾ý, 98 À¡Ã¡ÙÁýÈ §¾÷¾ø ÓÊ׸û «È¢Å¢ò¾ §¿Ãõ, «ô§À¡Ð Å¡ˆÀ¡ö ìÌ Á¾¢Ó¸ Å¢ý ¬¾Ã× ¸Ê¾ò¨¾ ¨Å§¸¡ ¦ƒ Å¢¼õ ¾ÃÁÚò¾ §¿Ãõ , «¨ÉòÐ ¦¾¡¨Ä측𺢸ǢÖõ ¨Å§¸¡ ¨Å ÀüÈ¢§Â ¦ºö¾¢¸û ´Ä¢ÀÃôÀ¡¸¢ ¦¸¡ñÊÕó¾Ð. ¿¡í¸Ùõ ¦¾¡¨Ä측𺢨 À¡÷òÐ즸¡ñÊÕ󧾡õ «ô§À¡Ð ¦º¡ý§Éý "«ñ§½ ! ¿õÁ ¦À¡ÐÂÄ¡Ç÷ ¾¡ý þô§À¡¨¾Â man of the headlines " ºõÀò «¨¾ ¬¾Ã¢ò¾¡÷. ¬É¡ø þôÀ×õ «Å¨Ã측ðÊ §À¡Ð ÁÉõ §Å¾¨É¾¡ý Àð¼Ð.

( À¢Ã¾÷ , ºõÀò ţ𨼠þó¾ ¦ƒÂÄÄ¢¾¡ «ÃÍ þÊò¾Ð ¯ñ¨Á. «ó¾ Å£ðÊý Á¾¢ôÒ 7 Äðºõ ¬É¡ø Á¾¢Ó¸ Å¢ý «¨ÉòÐ Á¡Åð¼ ¿¢÷Å¡¸¢¸Ùõ «¾üÌ ºõÀò «ñ½½¢¼õ ¿¢¾¢ ¦¸¡ÎòÐÅ¢ð¼¡÷¸û. ¦ƒÂÄÄ¢¾¡§Å À½õ ¦¸¡Îò¾¡Öõ «Å÷ Å¡í¸ Á¡ð¼¡÷ þÐ ºò¾¢Âõ. "º¡ýŠ ¸¢¼îº¡ ¨ºì¸¢û §¸ôÄ ¬ð§¼¡ µðÊÕÅ£í¸§Ç" :wink: )


- Luckyluke - 03-16-2006

அப்போ சம்பத் அண்ணன் வாரத்துக்கு வாரம் பேச்சை மாற்றி மாற்றி 'டகால்ட்டி' வேலை காட்டுறதுக்கு என்ன காரணம்?

போன மாசம் கலைஞர் தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று மாங்காடு அம்மன் மீது சத்தியம் என்று பேசினாரே...

நீங்க வேணுமின்னா பாருங்க மதிமுக தோத்தாலும் சரி... தேர்தலுக்கு பின்னாடி சம்பத் அண்ணன் குவாலிஸ் காருல தான் வரப் போறாரு..... எஸ்.எஸ். சந்திரனும் மதிமுகவில் இருந்தபோது கொள்கை மறவரா தான் ஆரம்பத்துலே இருந்தாரு....