![]() |
|
சொல்லு சொல்லு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சொல்லு சொல்லு! (/showthread.php?tid=543) |
சொல்லு சொல்லு! - வர்ணன் - 03-14-2006 <b>மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமிழர்புனர்வாழ்வு கழகம் தனக்கு ஒன்றும் செய்யலையென்று தரைமண்ணை அள்ளி தூற்றி சபிப்பான்! இவன் சரியில்லை ! அவன் சரியில்லை ! என்றே பேசி காலம் கழிப்பான்! நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால் நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்! தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்! யாரிவனோ? உனக்கு தெரியுமா? என்னை நானே கேட்கிறேன் எனக்கு தெரியுமா? உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு! கேட்கிறேன் - அதில் நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8) </b> Re: சொல்லு சொல்லு! - அருவி - 03-14-2006 நிதர்சனமான வரிகள் வர்ணன் பாராட்டுக்கள். - Niththila - 03-14-2006 வர்ணன் அண்ணா காதல் கவிதை மட்டும் தான் எழுதுவீங்கள் எண்டு நினைத்தன் இனிய ஏமாற்றம் நல்ல கவிதை சுயநலம் பிடித்தவர்களை மற்றவர்களில தேடாமல் நம்மிலயே இக்குணங்களும் இருக்கு எண்டு சொல்ல உங்களுக்கு தைரியம் கூடத்தான் போல இருக்கு - hari - 03-14-2006 அருமை வர்ணன், வாழ்த்துக்கள்! - Senthamarai - 03-14-2006 நல்ல கவிதை வர்ணன் வாழ்த்துக்கள் - ப்ரியசகி - 03-14-2006 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உண்மையை சொல்லும் கவி ஒன்று..வர்ணன்..தொடருங்கள்..
- Mathuran - 03-14-2006 வித்தியாசமாக சொல்லி இருக்கின்றீர்கள். உங்கள் எண்ண ஓட்டம் இனிதே இலக்க்னை அடைய வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வர்ணன் - 03-15-2006 நன்றி அருவி -நித்திலா- ஹரி- செந்தாமரை-ப்ரியசகி-மதுரன்! 8) - Rasikai - 03-15-2006 யதார்த்தம் பேசும் உங்கள் கவிதை அருமை.. வாழ்த்துக்கள்: - RaMa - 03-16-2006 வர்ணன் கவிதை அருமை. எல்லோருமே ஓரு சமயத்தில் சுயநலம் உள்ளவர்களாய் தான் இருக்கின்றோம். உண்மையான வரிகள். வாழ்த்துக்கள் - Kalki - 03-16-2006 வர்ணன் அண்ணா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு....எனக்கும் காதல் கவிதை நல்லா பிடிக்கும்...... - Kalki - 03-16-2006 ஃஉஒடெ="Kஅல்கி"]வர்ணன் அண்ணா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு....எனக்கும் காதல் கவிதை நல்லா பிடிக்கும்......[/ஃஉஒடெ] மன்னிக்கவும்..... - தாரணி - 03-16-2006 நன்றாகவுள்ளது உங்கள் கவி வர்ணன் ! வாழ்த்துக்கள் பலகோடி. நன்றி வணக்கம் - sagevan - 03-16-2006 நன்றாக உள்ளது.குறிப்பாக நாளை எப்படி சிரிக்க வழியென்று என்னி இன்றைய பொழுதை அழுதே தொலைப்பான்.என்ற வரிகள் யதார்தமானது.பாராட்டுகள்.வர்னன்.தொடர்ந்து எழுதுங்கள். - kavithan - 03-16-2006 வர்ணன் கவிதை மிக நன்றாக இருக்கின்றது யதார்த்தமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றது வாழ்த்துக்கள் - அனிதா - 03-16-2006 வர்ணன் கவிதை நல்லா எழுதுறீங்க ,இந்த கவிதையும் நன்று, இப்ப யாழ்ல உங்க கவிதைகளை கூட பாக்க கூடியதா இருக்கு ... தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள் ... ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 03-17-2006 நன்றி ரசிகை-ரமா- கல்கி- (சகோதரம் - காதல் கவிதை எழுத ஆசைதான் - பட் - வையுறாங்களே - உனக்கு வேற வேலையே இல்லையா என்கிறமாதிரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )நன்றி- தாரணி-சஜீவன் -கவிதன் - அனிதா! 8) |