Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 665 online users.
» 0 Member(s) | 662 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,456
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,661
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,270
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,765
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  புஷ்பவனம் குப்புசாமி குரலில்..!!
Posted by: sOliyAn - 04-20-2005, 07:16 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

ஆண்டு நினைவில்லை.. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு என்பது நிச்சயம்.. ஐபிசி கலையகம் குப்புசாமி தம்பதிகளை வைத்து ஒரு நிகழ்ச்சி நடாத்தியது. பக்சில்சில பாடல்களை அனுப்பினேனா.. உடனே அவர்களே மெட்டமைத்து பாடினார்கள்.. நாமும் ஏதாவது இணைத்துப் பார்க்க வேணாமா.. அதனால் அந்த நிகழ்ச்சியில் இரு பகுதிகளை இணைத்துள்ளேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/music_page.php?song_id=51
http://www.yarl.com/forum/music_page.php?song_id=52

Print this item

  முறியடிப்போம், காத்திரு!
Posted by: hari - 04-20-2005, 06:26 PM - Forum: கவிதை/பாடல் - Replies (34)

<b>முறியடிப்போம், காத்திரு!</b>

- <span style='color:green'>தொ. சூசைமிக்கேல் tsmina2000@yahoo.com
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/rajinifans-450.jpg' border='0' alt='user posted image'>

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..
இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..

கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!
கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!
மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!
மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...

கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்
கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்
மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!
மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..

காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -
காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -
நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -
நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..
நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...
கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..

திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -
சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -
திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -
செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...

விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!
விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!
அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -
ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..

பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...
பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!
வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!
வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!

ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -
எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -
மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!
முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!</span>

<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/chandramuki03-400.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  பாடல் வேணுமே
Posted by: tamilini - 04-20-2005, 05:47 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (4)

ஓவியா உந்தன் பார்வை என்னைத்தீண்டுமா..

குறும்பு படத்தில வந்த பாடல்.. எங்கையாவது தரவிறக்க முடியுமா.. தந்துதவுங்கள். :wink:

Print this item

  பசியா? 1 நிமிடத்தில் சாப்பிட வேண்டுமா?
Posted by: தூயா - 04-20-2005, 05:35 PM - Forum: சமையல் - Replies (34)

பசியா? 1 நிமிடத்தில் சாப்பிட வேண்டுமா?இதோ சில சுலபமான வழி முறைகள்.

1. பாண் & வாழைப்பழம்
2. பாண் & ஜாம்
3. சோறு & குளிர் சாதன பெட்டியில் இருக்கும் பழைய கறிகள்.
4. பாண் & பப்படம்
5. தனிய பப்படம்

மிகுதி நாளை.நீங்களும் எழுதலாம்

Print this item

  வணக்கம்
Posted by: Baarathi - 04-20-2005, 04:29 PM - Forum: அறிமுகம் - Replies (27)

வணக்கம், நான் பாரதி.நான் யாழ்களத்திற்கு புதியவன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  நண்பரைத்தேடும் நண்பருக்கு உதவுங்கள்
Posted by: tamilini - 04-20-2005, 11:28 AM - Forum: புலம் - Replies (7)

kindly help me to contact Mr.M.Kulendran
we studied together at colombo hindu during 1960 s , reply to mt email

kcmohan20@yahoo.co.uk

regards



நமக்கு கிடைத்ததை இங்க போடுறம். தெரிஞ்;சால்.. சொல்லுங்கையா.. பிரிஞ்ச.. நண்பர்களை இணைத்த புண்ணியம் கிடைக்கும். :wink:

Print this item

  :: காதலித்து பார் ::
Posted by: Kurumpan - 04-20-2005, 01:22 AM - Forum: கவிதை/பாடல் - Replies (113)

காதலித்து பார்ப்போம் வாறியளா........?

http://www.yarl.com/forum/music_page.php?song_id=50

[size=18]யாராவது கருத்து சொல்லாம போனியளோ.... அவ்ளவுதான்..... ஆழுதுடுவேன்....!!

Print this item

  வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் நடாத்தும் இயல்ப்போட்டிகள்
Posted by: Nitharsan - 04-19-2005, 10:17 PM - Forum: புலம் - No Replies

<img src='http://www.vannithendral.net/vannitamil/a.gif' border='0' alt='user posted image'>

<span style='color:red'>மாவீரன் பண்டார வன்னியின் நினைவாக வருடந்தோறும்
வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் நடாத்தும் இயல்ப் போட்டிகள்:
பேச்சுப் போட்டி
(அமையத்தினால் கொடுக்கப்பட்ட பேச்சினை மனனம் செய்து பேசுதல்வேண்டும்)

பாலர்பிரிவு 1 (7 வயதுக்குட்பட்டோர்- 01-09-1998க்குப் பின்னர் பிறந்தோர்)
>>
http://www.vannithendral.net/vannitamil/soma.htm
பாலர் மேற்பிரிவு 2: (8-10 வயதுப் பிரிவினர் 1-09-1994க்கும் 30-08-1998க்கும் இடையில் பிறந்தோர்)
>>
http://www.vannithendral.net/vannitamil/mulli.htm
கீழ்ப்பிரிவு 3: (11-13 வயதுப் பிரிவினர் 01-09-0198க்கும் 30-10-1994க்கும் இடையில் பிறந்தோர்)
>>
http://www.vannithendral.net/vannitamil/emm.htm
மத்திய பிரிவு 4: (14-16 வயதுப் பிரிவினர்- 1-11-198க்கும் 30-10-1987க்கும் இடையில் பிறந்தோர்)
>>
மேற்பிரிவு: 5: 17 வயதிற்கு மேற்பட்டோர்.
>>

வினாவிடைப்போட்டி (வயதுக்கட்டுப்பாடற்றது)
கொடுக்கப்பட்ட வினாக்களோடு பொதுஅறிவு வினாக்களுக்கும் போட்டியாளர்கள் விடையளித்தல் வேண்டும்

கவிதைப்போட்டிகள்: வயதுவேறுபாடின்றி எவரும் கலந்துகொள்ளலாம்
பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் கவிதை அமைதல்;வேண்டும் கவிதை 24 வரிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

1. வங்கமே வாழவழி வைத்தாய் வன்னியிலே
2. வன்னிநாடே வாய்த்த காப்பு
3. வன்;னியே வாழ்வழிக்கும் வழமார் தாயே

கட்டுரைப் போட்டி: கட்டுரை எழுதவிரும்புவோர் பின்வரும் தலையங்களில் ஏதாவது ஒன்றைத் தெரிந்து எழுதலாம்
1. வன்னியி;ன் பொருளாதார மூலங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
2. அண்மைக்காலக் கல்விப் போக்குக்கள்
3. வேலைவாய்ப்புக்களும் மனிதவளப் பயன்பாடும்
4. ;கடல்கோளும் குடியமர்வும்

ஓவியப் போட்டிகள்: வரைதலும் வண்ணம் தீட்டுதலும்
ஓவியப்போட்டி தொடர்பான விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: திரு. யா. மரியநாயகம் 416- 293-4897
பாலர் பிரிவு: கொடுக்கப்பட்ட ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுதல் (வண்ணப் பென்சில் மட்டும்)
கீழ்ப்பிரிவு: ஓவியத்தைப் பார்த்து வரைந்து வண்ணம் தீட்டுதல் (வண்ணப்பென்சில் சுண்ணாம்பு வண்ணம்)
மத்திய பிரிவு: காட்சி ஒன்றைப் பார்த்து வரைந்து வண்ணம் தீட்டுதல் வேண்டும்
மேற்பிரிவு: 16 வயதிற்கு மேற்பட்ட யாரும் பங்குபற்றலாம்) கிராமியச் சூழலைப்பிரதிபலிக்கும் அல்லது கொம்பறை மலரின் முகப்பை அலங்கரிக்கப் பொருத்தமான காட்சியொன்று

போட்டியாளர்கள் பின்வரும் ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

>> நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும்.
>>வயதுக் கட்டுப்பாட்டிற்குரிய இறுதித் திகதி 30-07-2005 ஆகும்.
>>விண்ணப்ப முடிவுத் திகதி 15-07-2005 ஆகும்.
>>போட்டிகள் இடம்பெறும் இடம் பின்னர அறிவிக்கப்படும்.
>>பிரதேசவேறுபாடுகளின்றி அனைவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
>>போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்கள் பேச்சுக்கள்
>>வினாக்கொத்துக்கள் முதலியவற்றிற்குத் தொடர்புகொள்ளவேண்டியவர்கள்

கா. யோகநாதன் (416) 609-3179 த. சிவபாலு (416) -701-9608 மு.மரியநாயகம் (416) 293-4897 ந. நிரோஜன் (416) 908-5023 ச. இராஜேஸ்வரன் (416) 750-9022 க. அம்பலவாணர் (416) 335-7722

அல்லது கீழ்வரும் இணைப்புகளில் இருந்தம் தரவிறக்கி கொள்ள முடியும்
[size=24]PDF Format</span>
http://www.vannithendral.net/vannitamil/vannivila.pdf
<span style='font-size:25pt;line-height:100%'>Word Document</span>
http://www.vannithendral.net/vannitamil/vannivila.doc

வன்னித் தமிழ்ச் சமூககலாச்சார அமையம் (கனடா)

Print this item

  TAMIL V-MIX
Posted by: happy - 04-19-2005, 07:38 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (7)

இதோ நான் செய்த வீடியோ மிக்ஸ்
http://www.mvps.org/access/resources/downloads.htm

Print this item

  நாங்களும் பழமொழி உருவாக்குவோமா?
Posted by: Malalai - 04-19-2005, 04:51 PM - Forum: நகைச்சுவை - Replies (96)

நாங்களும் பழமொழி உருவாக்குவோமா?
நீங்களாகவே பழமொழி உருவாக்கி கருத்தையும் போட்டுவிடுங்க அக்காமாரே அண்ணாமாரே அங்கிள்மாரே......

மழலையின் பழமொழி (உருவி உருக்கினது...அதால என்னுடையதாகிவிட்டது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

<b>பசுந்தோல் போர்த்த புலியா இருப்பதை விட ஓநாயாக இருப்பவர்களே மேல்</b>

பசுந்தோல் போர்த்திருப்பர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியாமலே நாங்கள் பழகி பிறகு சிரமத்தை எதிர் கொள்ளணும்...ஓநாயயாக இருப்பவர்கள் என்பது தெரிந்தால் விலகி நடக்கலாம...எங்களுக்கும் சிரமம் இல்லை அவர்களுக்கும் சிரமம் இல்லை......

Print this item