| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 226 online users. » 0 Member(s) | 223 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,302
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,292
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,631
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,056
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,460
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,477
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,025
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| Lanka seeks India's help to tame Tigers |
|
Posted by: rajathiraja - 12-29-2005, 10:23 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
From Times of india
http://timesofindia.indiatimes.com/article...how/1349946.cms
NEW DELHI: Sri Lankan President Mahinda Rajapakse met with Indian Prime Minister Manmohan Singh Wednesday in a bid to secure New Delhi's increased involvement in the island's troubled peace process.
The two leaders began talks at noon, a foreign ministry spokesman said.
Rajapakse arrived in India Tuesday for a four-day visit, his first foreign trip since taking office after winning the November 17 presidential election.
Indian officials said that during a series of meetings in New Delhi with Indian leaders, the neighbours would explore ways to consolidate bilateral ties, particularly in the economic field.
Rajapakse was slated to meet the leader of the ruling Congress party, Sonia Gandhi, as well as the ministers of commerce and industry, home, shipping, road transport, and highways and planning.
Ahead of his visit, Rajapakse said last week in Colombo that he would use the trip to seek New Delhi's increased participation in the island nation's faltering peace effort with the Tamil Tigers.
"They are our closest neighbour and it is very important for me to have them involved in the process," Rajapakse told reporters.
The president said he expected India to play a similar role to that of the four so-called "co-chairs" -- the United States, the European Union, Japan and Norway.
The diplomatic quartet are Sri Lanka's key backers and they preside over international efforts to raise money in support of the island's efforts to end three decades of ethnic bloodshed that has claimed more than 60,000 lives.
Rajapakse said he was also keen to study India's system of devolution as it could be a model for Sri Lanka to grant extensive power to minority Tamils.
"I am for a unitary state with maximum possible devolution," he said. "I want to study the Indian model and I am sure we can learn from that."
Rajapakse has gone back on a promise by his party to accept a federal system of government in exchange for ethnic peace as initially agreed with the Tamil Tigers during a round of talks in December 2002.
A recent escalation of violence has heightened fears that Sri Lanka could be slipping back to war despite a February 2002 truce with the rebels.
In the latest bloodletting, suspected Tiger rebels staged two bomb attacks in the island's embattled regions on Tuesday, killing 12 soldiers and a constable.
|
|
|
| 3 குளம் : 3 கோவில் |
|
Posted by: வர்ணன் - 12-29-2005, 05:19 AM - Forum: போட்டிகள்
- Replies (6)
|
 |
கொஞ்ச பூ கொண்டு போகிறீர்கள் சுவாமி கும்பிட..
அங்கே போய் பார்த்தால்
ஒரு அறிவிப்பு எழுதி போடப்பட்டு இருக்கிறது!
கவனமாய் கவனிக்கவும் பின் வரும் வரிகளை!
இங்கே 3 கோவில்களும் 3 குளங்களும் அதற்கு முன்னால் இருக்கின்றன!
நீங்கள் கொண்டு வந்த பூக்களை ஒவ்வொரு குளத்தில் கழுவிய பின் தான் கோவில்களுக்கு வைக்க வேண்டும்.
அதே வேளை எல்லா கோவில்களூக்கும் சமமாய்தான் நீங்கள் வைத்த பூக்கள் இருக்கவேண்டும்!
கட்டாயம் 3 கோவில்களுக்கும் நீங்கள் போயே ஆக வேண்டும்! நீங்கள் கொண்டு வந்த பூக்கள் குளத்தில் கழுவும் போது இரு மடங்கு ஆகும்.(3 பூவை கழுவினால் 6 ஆகும்)
இப்போ கொண்டு வந்த பூவை முதல் குளத்தில் கழுவுகிறீர்கள். இரட்டிப்பாகுது .. அதில் கொஞ்ச பூவை எடுத்து முன்னுக்கு உள்ள கோவிலுக்கு வைச்சிட்டு .. இப்போ 2) வது குளம்--கோவில் ... 3)வது குளம் ---கோவில் இப்படி..
கேள்வி..
எத்தனை பூ கொண்டு வந்தீர்கள் ..
எத்தனை பூ ஒவ்வொரு கோவிலுக்கும் வைத்தீர்கள்?
3 கோவிலுக்கும் வைத்த பூக்கள் சமனாக இருக்கிறதா?
(விடை தெரிந்தவர்கள் அவசர படவேண்டாம் சும்மா போட்டிதானே அதுதான் )
|
|
|
| ¡Ƹá¾¢ |
|
Posted by: ¦ÀâÂôÒ - 12-29-2005, 03:51 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (14)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>¡Ƹá¾¢</span>
<img src='http://www.sun.com/corp_emp/pics/world.gif' border='0' alt='user posted image'>[b]<span style='font-size:25pt;line-height:100%'>þó¾ ¾¨ÄôÀ¢ý ¸£ú ±í¸ÙìÌ ¦¾Ã¢Â¡¾ ¦Á¡Æ¢î¦º¡ü¸¨Ç ¾Á¢Øì§¸¡, «øÄÐ ¾Á¢Æ¢Ä¢ÕóÐ À¢È ¦Á¡Æ¢ì§¸¡, ¯Ä¸¦ÁíÌõ ÀÃÅ¢ Å¡Øõ º¸ ¸Ç ¯È׸Ǣý ¯¾Å¢Ô¼ý ¦Á¡Æ¢Á¡üȢ즸¡ûÇÄ¡õ.</b></span>
|
|
|
| அப்பா எங்கே? |
|
Posted by: Selvamuthu - 12-29-2005, 12:21 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (7)
|
 |
அப்பா எங்கே?
எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது.
"அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன்.
அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன்.
"அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார்.
அம்மா கூறியது சரிதான். அப்பா இருக்கின்ற இடம் அப்படியானது. அடிக்கடி அங்கே போகமுடியாது, தொலைபேசியிலும் பேசமுடியாது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அப்பா அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். அப்பா எல்லாம் ஒழுங்காக, நன்றாகவே செய்வார் ஆனால் அவருடைய கூடாத பழக்கம் அளவுக்குமிஞ்சி மது அருந்துவதுதான்.
அவர் அம்மாவைக் கலியாணம் செய்யமுன்னர் தனியே இலண்டனிலே இருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தப் பழகியிருந்தார். அம்மா நான் பிறந்தபின்னரும் பல தடவைகள் அப்பாவைக் குடிக்கவேண்டாம் என்று தடுத்திருக்கிறார்.
"இலண்டனுக்கு வந்தால் எல்லோரும் குடிக்கப்பழகவேண்டும். இல்லையென்றால் வெள்ளைக்காரன் மதிக்கமாட்டான்" என்று ஒரு சாட்டுச்சொல்லுவார். எங்காவது பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்துபசாரம், விழாக்கள் என்றால் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து நன்றாகக் குடிப்பார்கள். குடிக்கும்போதே எல்லோரும் தமது பழைய இலண்டன் வாழ்க்கையில் நடந்த பல சுவையான அனுபவங்களையும், புதிய அனுபவங்களையும் பெலத்துக்கதைத்துச் சிரித்து மகிழ்வார்கள். பார்ப்பவர்களும் சேர்ந்து சிரித்து மகிழ்வார்கள். ஆனால் அப்படியான வேளைகளில் விட்டிற்கு வரும்போது அம்மாதான் காரை ஓட்டிக்கொண்டு வருவார். அப்பாவைக் காரோட்ட அம்மா ஒருபோதும் விடமாட்டார்.
மார்கழி மாதம் தொடங்கினாலே நத்தார் கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும். அப்பாவின் வேலையிடம் ஒரு கிழமைக்கு விடுமுறை விடுவார்கள். அந்த நாட்களில் மாறி மாறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தினமும் கொண்டாட்டங்கள் இருந்துகொண்டேயிருக்;கும். சென்ற நத்தார் தினத்திற்கு முதல்நாள் அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு விருந்துக்குப் போயிருந்தோம். அன்றும் அப்பா நன்றாக மது அருந்திவிட்டபடியால் வீட்டிற்கு வரும்போது அம்மாதான் காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.
நாங்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதபோதிலும் மற்றவர்கள்போல் எங்கள் விட்டிலும் நத்தார் கொண்டாடினோம். மதிய உணவை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்துமுடிய இரவு பத்துமணி ஆகிவிட்டது. அப்போதுதான் அப்பா தனது கைத்தொலைபேசியை முதல்நாள் நண்பரின் வீட்டில் மறந்துபோய் விட்டுவிட்டு வந்தது தெரியவந்தது. ஏதோ வலது கையை இழந்துவிட்டதுபோல் தவித்தார். தான் உடனே அங்கே சென்று அதனை எடுத்துவரப்போகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
இரவு ஒரு மணி ஆகியும் அப்பாவைக் காணவில்லை. என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. பலமுறைகள் முயற்சிசெய்தும் கைத்தொலைபேசி இணைப்புக் கிடைக்கவில்லை. நண்பரின் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்புச் செய்தபோது அவர்கள் அப்பா பன்னிரண்டு மணிக்கே புறப்பட்டுவிட்டாதாகக் கூறினார்கள். நடந்து வந்தாலே பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் வந்துவிடலாம். என்ன செய்வது? யாருக்கு தொலைபேசி அழைப்புச்செய்து கேட்பது என்று தெரியாமல் இருந்தபோது அப்பா அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்தார். மிகவும் களைத்தும் காணப்பட்டார். அம்மாவை அறையினுள் அழைத்து ஏதோ இரகசியமாகப் பேசினார். மறுகணமே வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
அம்மா அப்படியே நிலத்தில் இருந்துவிட்டார். "அம்மா, அம்மா என்ன நடந்தது? அப்பா ஏன் மீண்டும் வெளியே போகிறார்" என்று நான் கேட்டேன்.
"சௌமி, நீ போய் படு" என்று மட்டும் கூறிவிட்டு படுக்கையில் சென்று பொத்தென்று வீழ்ந்தார்.
நான் நித்திரையாகிவிட்டேன். ஆனால் இடையிடையே விழித்தபோது இரவு முழுவதும் கீழே யாரோ வாசல் மணியை அடிப்பதும், அம்மா அவர்களுடன் சென்று கதைப்பதும் அரைத்து}க்கத்திலும் என் காதுகளில் விழுந்தன.
மறுநாள்கூட அப்பாவை வீட்டிலே காணவில்லை. முதல்நாள் நத்தார் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர் சாப்பிட்ட தட்டுக்கள்கூட கழுவாத நிலையில் அப்படியே இருந்தன. அப்பா ஏதோ சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. ஆனால் அம்மாவைக்கேட்க முடியவில்லை. அப்பாவின் நண்பர்கள் சிலர் வீட்டிற்கு வந்திருந்தபோது அம்மா என்னை எனது அறைக்குச் செல்லும்படி கூறினார். அதனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்குத் தெரியாது. நான் எனது அறையிலே இருந்துகொண்டு எனது கணினியில் விளையாடுவதும், தொலைக்காட்சி பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டினேன்.
இரண்டு மூன்று நாட்கள் சென்றபின்னர்தான் எனக்கு அம்மா எல்லாவற்றையும் கூறினார். தனது மனக்கவலையை ஆற்றுவதற்காகத்தான் அப்படிக் கூறினார் என்று எண்ணுகிறேன். அப்பா அன்றிரவு தனது கைத்தொலைபேசியை எடுப்பதற்காகச் சென்ற வேளையில் அவரது நண்பருடன் அவரது வீட்டில் வேறும் சில நண்பர்கள் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். சம்பிரதாயத்துக்காக சிறிது மது அருந்தும்படி அவர்கள் கேட்டதற்கு இணங்க அப்பாவும் அருந்தினார். ஆனால் ஒன்று, இரண்டு, மூன்று என்று மதுக்கோப்பைகள் காலியானது.
மது அருந்திவிட்டு காரை ஓட்டக்கூடாது என்பது சட்டம். ஆனால் அப்பா இருந்த நிலையில் அவர் அது தவறு என்ற எண்ணவில்லை. அம்மா அங்கே அப்போது இருந்திருந்தால் கட்டாயம் அப்பாவைக் காரோட்ட அனுமதித்திருக்கமாட்டார். காரை ஆரம்பத்திலிருந்தே மிகவும் விரைவாக ஓட்ட ஆரம்பித்தவர் மங்கலான இருளிலே பாதையைக் கடக்க முற்பட்டவரைக் காணவில்லை. அவருடன் காரை மோதிவிட்டார். மோதியபோதுதான் அவர் தான் குடித்துவிட்டுக் காரை ஓட்டியது தவறு என்று புரிந்தது. ஆனால் காலம் கடந்துவிட்டது.
அந்த வேளையில் தன்னை யாரும் கண்டிருக்கமாட்டார்கள் என்கின்ற மனப்பாங்கில் பயம் ஒருபுறம் வாட்ட, சட்டத்திற்குப் பயந்து அவ்விடத்தில் நிற்காது எங்கெல்லாமோ ஓடினார். அவர்; காரை இன்னொரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துதான் அன்றிரவு வீட்டிற்கு வந்தார். அந்த விபத்து தன்னால் ஏற்படவில்லை என்பதை மறைக்க முயன்றார். ஆனால் இவர் திடீரென்று விரைவாக வண்டியை ஓட்டியதைக் கண்ட யாரோ இவரது காரின் இலக்கத்தை எடுத்து வைத்திருந்து பின்னர் விபத்து பற்றியும், அந்த விபத்தில் அகப்பட்டவர் அடுத்தநாள் இறந்துவிட்டதாகவும் கேள்வியுற்ற செய்தியைக் கேட்டதும் சந்தேகத்தின் பெயரில் அதனை பொலிசாரிடம் கொடுத்துவிட்டார்கள்.
பொலிசார் எல்லோரையும் ஒவ்வொருவராக விசாரித்தபோது அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்பாவின் காரைப் பரிசோதனை செய்தபோது அதிலே அடிபட்டதால் ஏற்பட்ட சேதத்தையும், இரத்தக்கறைகளையும் கண்டுபிடித்தனர். அப்பா குற்றத்தை ஓப்புக்கொண்டார்.
அதன்பிறகுதான் எங்கள் வாழ்வில் சோகப்படலம் ஆரம்பமாகியது. பொலிஸ், விசாரணை, நீதிமன்றம், வழக்கு, தண்டனை என்றெல்லாம் அதுவரை அறிந்திராத அப்பாவும், அம்மாவும் தினமும் அழுதார்கள். அன்றிலிருந்து வீட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள்கூட எம்முடன் சரியாகப் பேசவோ, பழகவோ இல்லை. அப்பாவுக்கு அவர் செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை கிடைத்தது. ஒரு வருடத்திற்கு மேலாக அவர் சிறையிலே இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் சிறையிலே இருக்கவேண்டும் என்று அம்மா சொன்னார்.
சென்ற வருடம் நத்தார் அன்று எமது வீடு இருந்த சந்தோசத்திற்கும் இந்தவருடம் எமது வீடு இருக்கின்ற சோகத்திற்கும் காரணம் கூற என்னால் முடிந்தாலும் இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது என்று மட்டும் என்னால் விளக்கம் கூற முடியவில்லை. அப்பா கவனமாக இருந்திருக்கலாம். "கண் கெட்ட பின்னர்தான் சுூரிய நமஸ்காரம்" என்ற யாரோ கூறியது இப்போது நினைவுக்கு வருகின்றது.
என் அப்பாவைப்போல பல அப்பாக்கள் இப்படி மதுவை அருந்திவிட்டு கார் ஓட்டுவதும் அதன் பின்னர் தாம் கெட்டித்தனம் செய்துவிட்டோம் என்ற தோரணையில் பேசுவதை இப்போதும் கேட்டிருக்கிறேன். எத்தனையோ இளம் அண்ணாமார்களும் இப்படிக் குடித்துவிட்டு கார் ஓடி விபத்துக்குள்ளாகி இருப்பதையும் கேள்விப்படுகிறேன். எமது குடும்பத்தில் நடந்த ஒன்றே மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமைந்துவிட்டது. ஆனாலும் இதனை ஓர் எச்சரிக்கையாக மற்றவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல நானும் அம்மாவும் மற்றவர்களுடன் சிறிது சிறிதாக சிரித்துப் பேசினாலும், அப்பா இல்லாமல் நாம் படும் துன்பங்களையும், எமக்குள்ளே இருக்கும் சோகங்களையும் என்னால் எடுத்துரைக்கமுடியாது. அனுபவித்தால்தான் தெரியும். ஆனால் இப்படியான அனுபவம் யாருக்கும் வரவே கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
28.12.2005
|
|
|
| ஏக்கம் எனக்கு மட்டும் தானா? |
|
Posted by: Selvamuthu - 12-28-2005, 11:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
ஏக்கம்
இலண்டனுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டாச்சு
இருப்பிடம் வேலை பிள்ளைகள் இரண்டாச்சு
இன்னும் இரண்டு வீடு வாடகைக்குக் கொடுத்தாச்சு
மனைவிக்குச் சிறிய கார் எனக்குப்பெரிய "பென்ஸ் கார்"
பெரிய வீட்டோடு "பிரிட்டிஸ் பாஸ்போட்"
எல்லாமே வசதியாயிருக்கு எதுவித குறையுமில்லை
இப்படித்தான் எமைப்பார்ப்போர் எண்ணுவார் துன்பமில்லை
இருந்தும் என்மனதில் என்றுமே அமைதியில்லை
தமிழார்வம் எனக்குண்டு தமிழ்நூல்கள் பலவுமுண்டு
நினைத்தவுடன் கதைகவிதை எழுதிடவும் திறமையுண்டு
அன்பான மனைவியுண்டு அறுசுவைபோல் உணவுமுண்டு
ஆனாலும் பிள்ளைகட்கு தமிழுணவில் ஆர்வமில்லை
பிட்டென்றால் "பீசா" தோசையென்றால் "பற்சா"
மரக்கறி சோறுஎன்றால் மற்றவர்க்கு "மைக்டொனாட்"
இப்படியாய் இருபதாண்டு காலத்தைக் கழித்தாச்சு.
தமிழார்வம் கொண்டஎந்தன் தவமிருந்து பெற்றவாயில்
தவறிக்கூட ஏனும் தமிழைநான் கேட்டதில்லை
"அ" னாவும் தெரியாது அழகான தமிழிசையின்
தேனான பாடல்கள் தீண்டாது அவர்செவியை
பட்டுடுத்துப் பொன்நகைகள் பலவணிந்த மனைவியுடன்
பெருவிழா அழைப்பிற்சென்று பலர்பார்க்க முன்வரிசை
இருக்கையில் அமர்ந்து, இருவரும் எழுந்துசென்று
குத்துவிளக்கேற்றி, கூடவந்து அமர்ந்த டாக்டர்
பத்துக் கதைகள்கூற பல்தெரிய சிரித்தும்நெஞ்சு
பக் பக்கென்றே அடிக்கடி இடித்துநிற்கும்
வீதியுலா சென்றமகன் வேதனையை வளர்ப்பானோ?
பாதிஇரவு கழிந்தபின்னால் நாதிகெட்டு நுழைவானோ?
பாதி உடையணிந்து தோழருடன் சென்றமகள்
ஊதிப் புகைவிட்டு தோழருடன் உலள்வாளோ?
ஏழிசையைக் கேட்டுவிழி மேடையிலே மலர்ந்தபோதும்
பாழாய்ப் போனமனம் பெற்றவரையே நினைந்திருக்கும்
ஊரைவிட்டு தூர தேசம் வந்ததினால் பலஉழைப்பு
பேரைச் சொல்ல ஒருவரின்றி போனதினால் இது இழப்பு
நரைவிழுந்து போனபின் தான் ஞானக்கண் திறப்பு
யாருக்குச் சொல்லியழ இங்கு பலருக்கு இது நடப்பு
|
|
|
| பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் |
|
Posted by: Rasikai - 12-28-2005, 07:51 PM - Forum: போட்டிகள்
- Replies (89)
|
 |
<b>வணக்கம் உறவுகளே
மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.
தலைப்பு
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
நடுவர்
செல்வமுத்து & தமிழினி
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
இளைஞன் (அணித்தலைவர்)
அனித்தா
விஷ்ணு
சிநேகிதி
அஜீவன்
மதன்
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
நாரதர்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
சோழியன் ( அணித்தலைவர்)
பிரியசகி
முகத்தார்
வியாசன்
அருவி
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்
இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.
புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்
நன்றி
வணக்கம்</b>
|
|
|
| சந்திரசேகருக்கு மாரடைப்பு |
|
Posted by: Vaanampaadi - 12-28-2005, 05:57 PM - Forum: சினிமா
- Replies (9)
|
 |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு
சென்னை:
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/sachanrasekar-350.jpg' border='0' alt='user posted image'>
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படம் ஆதி. விஜய், த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பாடல் கேசட் வெளியிடப்பட்டது.
ஆதி பட வேலைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் விசாகப்பட்டனத்தில் ஆதி ஷýட்டிங்கில் இருந்த விஜய், உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார்.
Thatstamil
|
|
|
| ஒரு தமிழ்ப் பெண்ணின் சோகம் |
|
Posted by: Vaanampaadi - 12-28-2005, 05:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
மலேசியா: ஒரு தமிழ்ப் பெண்ணின் சோகம்
டிசம்பர் 28, 2005
கோலாலம்பூர்:
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/kaiammal-315.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீருடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் காளியம்மாள்
முஸ்லீமாக மாறிய கணவரின் உடலை எரிக்க அவரது இந்து மனைவிக்கு மலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது.
மலேசியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய தமிழர் மூர்த்தி (வயது 36). இவரது மனைவி காளியம்மாள். கடந்த வருடம் மூர்த்தி இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். தனது பெயரை முகம்மது அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். காளியம்மாள் தொடர்ந்து இந்துவாகவே இருந்து வந்தார்.
திடீரென மதம் வேறுபட்டாலும் இருவருமே மனம் ஒத்த தம்பதிகளாய் வசித்து வந்தனர். 1997ம் ஆண்டு இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலேசிய ராணுவப் படையில் இடம் பெற்றவர் மூர்த்தி.
ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி மூர்த்தி காலமானார். இதையடுத்து அவரது உடலை இந்து முறைப்படி எரிப்பதா அல்லது இஸ்லாமிய முறைப்படி புதைப்பதா என்ற பிரச்சனை எழுந்தது.
தனது கணவரின் உடலை எரிக்க அனுமதிக்க வேண்டும் என காளியம்மாள் கோரியதை அந் நாட்டு அதிகாரிகள் ஏற்கவில்லை. முஸ்லீமாக மாறிய மூர்த்தியின் உடலை புதைக்க வேண்டும் என்றனர்.
இந்தப் பிரச்சனையால் உடல் மலேசிய மருத்துவமனை பிணக் கிடங்கில் வைக்கப்பட்டது.
அவர் கடந்த வருடம் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதால் இஸ்லாமிய முறைப்படி தான் அவரது உடல் புதைக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய தலைவர்களும், இஸ்லாமிய நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து காளியம்மாள் மலேசிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷெரீப், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மலேசியாவில் இந்து, புத்த, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து வசிக்கின்றனர்.
தற்போது தங்களின் கணவரை இந்து முறைப்படி தகனம் செய்ய சம்மதித்தால், பிற மதத்தினர் போராட்டம் நடத்த வசதியாகிவிடும். அதனால் மூர்த்தியின் உடலை இஸ்லாமியத்துறையிடம் ஒப்படையுங்கள்.
முஸ்லீமாக மதம் மாறியவர் இஸ்லாமிய விதிப்படி புதைக்கப்படுவது தான் முறை என்று இஸ்லாமிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, அதை பரிசீலிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று காளியம்மாளிடம் தீர்ப்பளித்தார் நீதிபதி.
ஆனால், காளியம்மாள் பேசுகையில் மூர்த்தி இஸ்லாமியராக மாறியதற்கு எந்த சான்றிதழும் இல்லை. வெறும் வாய் வார்த்தை மூலமே அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அவரது உடலை யார் வேண்டுமானாலும் எடுத்து செல்லட்டும், ஆனால், ஆன்மா என்னிடம் தான் இருக்கும் என்று கண்ணீர் மல்கக் கூறிவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார் காளியம்மாள்.
இதையடுத்து இஸ்லாமிய முறைப்படி மூர்த்தியின் உடல் புதைக்கப்பட்டது.
மலேசிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்த நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும் என காளியம்மாளின் வழக்கறிஞர் சிவநேசன் கூறியுள்ளார்.
Thatstamil
|
|
|
|