Yarl Forum
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் (/showthread.php?tid=1732)

Pages: 1 2 3 4 5


பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் - Rasikai - 12-28-2005

<b>வணக்கம் உறவுகளே

மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.

தலைப்பு
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

நடுவர்
செல்வமுத்து & தமிழினி

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
இளைஞன் (அணித்தலைவர்)
அனித்தா
விஷ்ணு
சிநேகிதி
அஜீவன்
மதன்
வர்ணன்
பிருந்தன்
குருக்காலபோவான்
மேகநாதன்
நாரதர்
வசம்பு

தீமை என்ற அணிக்காக
சோழியன் ( அணித்தலைவர்)
பிரியசகி
முகத்தார்
வியாசன்
அருவி
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்

இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.

புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்

நன்றி
வணக்கம்</b>


- Selvamuthu - 12-28-2005

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
புலம்பெயர் வாழ்விலே நாம் பல நன்மைகளையும் பெற்றிருக்கிறோம் தீமைகளையும் பெற்றிருக்கிறோம். எம்மில் பலர் பிறந்தது எங்கோ வாழ்வது எங்கோ. இதேவேளையில் எம் வருங்காலச் சந்ததியினர்களுக்கு எமது மொழியையும்இ பண்பாடுகளையும் புகட்டுவதற்கு பலவழிகளில் முயற்சிக்கிறோம். வேகமாக வளர்ந்துவருகின்ற இந்தக்கணினி யுகத்திலே இணையத்தளங்களினு}டாக இளம் சமூகத்தினர் எத்தனையே விடயங்களை வீட்டில் இருந்தபடியே அறியக்கூடியதாக இருக்கின்றது. அது எமது தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் இந்த இணையத்தளங்களினால் பல இளைஞர்கள் நன்மைடைகிறார்கள் என்றும் அதேவேளையில் பலர் சீரழிந்துபோகிறார்கள் என்றும் பெற்றோரும் மற்றோரும் குற்றம் கூறுவதையும் நாம் அறிவோம். அதற்கான விவாதத்திற்கென களத்திலே குதித்திருக்கும் இரு அணிகளும் தயாராகிவிட்டார்கள். முதலில் நன்மையடைகின்றார்கள் என்ற அணியின் தலைவர் குருவிகள் அவர்களை தனது அணிக்கான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நீங்கள் பாடம் சம்பந்தமான வேலைகள் இருப்பதாகக் கூறுவதும் தெரிகின்றது. அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்வரை உங்கள் அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை முன்வைக்கும்படி மீண்டும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய தலைவராக இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை நாளை மாலை முன் வைப்பார்.

சீரழிந்துபோகிறார்கள் என்று வாதாட வந்திருக்கும் அணியின் தலைவர்சோழியன் அவர்கள் அதுவரை பொறுத்திருக்காமல் தனது அணிக்கு உரம்சேர்க்கும் கருத்துக்களை முன்வைத்து ஆரம்பிக்க விரும்பினால் ஆரம்பிக்கலாம்.
_________________


- இளைஞன் - 12-29-2005

<b>வணக்கம்.

இளையவர்க்கு நன்மையளிக்கும் வகையில், பயனளிக்கும் வகையில் பட்டிமன்றத்தை நடத்த
களமமைத்துத் தந்த இணைய ஊடகமான யாழ் களத்துக்கும், அதன் நிர்வாகத்தினர்க்கும்
எனது முதல் வணக்கம். பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து, கள உறுப்பினர்களை ஒருங்கமைத்து
நல்லதொரு பணியை சிறப்பாகச் செய்த இரசிகைக்கு நன்றிகலந்த வணக்கம். அடுத்து
பட்டிமன்றத்தின் நடுவர்களாக, எமது கருத்துக்களின் முன்நிலைப் பார்வையாளர்களாக
வாதப்பிரதிவாதங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து
மற்றும் தமிழினிக்கும் சிறப்பு வணக்கம். இணைய ஊடகம் இளைஞர்களை சீரழிக்கிறது என்று
தமது கருத்துக்களை களமிறக்க ஒன்றிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், அவ்வணியைத்
தலைமையேற்றுள்ள சோழியான் அண்ணாவுக்கும் பண்பான வணக்கம். இறுதியாக எம்
இருதரப்பு வாதங்களையும், கருத்தாடல்களையும் வாசித்துப் பயனுற இருக்கும் ஏனைய
யாழ்கள உறுப்பினர்களுக்கும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் வணக்கம்.</b>

அழிவிலிருந்து ஆக்கம் பிறக்கிறது. ஆக்கத்தின் செயற்தொடரில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
அந்தவகையில், உலகவரலாற்றின் மாபெரும் அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து
உருவாக்கம் பெற்றதே இந்த இணையம்.

அந்த இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்து வாழ் இளம் தமிழ்ச்சமூகம் நன்மையடைகிறதா? அல்லது
சீரழிந்துபோகிறதா? என்பதே யாழ் கருத்துக்களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்
பட்டிமன்றத்தின் தலைப்பு.

தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதிய பரிமானங்களை உருவாக்கித் தந்த இந்த இணைய
ஊடகத்தால் நமது புலம்வாழ் இளஞ்சமூகம் அதிகம் நன்மையே அடைகிறது என்கிற
உண்மையை உறுதிபடக் கூற ஒன்றுபட்டிருக்கும் எனது அணிக்கு தலைமை ஏற்று, எமது
கருத்தியல் தளத்தை தெளிவுபடுத்தவும், அதற்கு வலுச்சேர்க்கவும் முதல் கருத்தாளனாக
எனது கருத்தை முன்வைக்கிறேன்.

இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத்தொழில்நுட்பத்திலும்
மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது என்கிற உண்மையை எதிரணியினர்
ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா?
கீழ்நோக்கி நகர்வதா? - மரம் மேல் நோக்கி வளர்கிறது. வேர் கீழ்நோக்கி வளர்கிறது. எமது
அணியின் கருத்தியல் தளம் இங்குதான் நிலைகொள்கிறது.

* உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?

* இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி. அதனடிப்படையில், இணைய ஊடகத்தால் இளம்
சமூகம் சீரழிகிறது என்று வாதாட வந்திருக்கும் எதிரணி இளைஞர்களும்
நன்மைபெறுபவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.

* அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கி, அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும், இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டி,
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும், நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது.

* வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும்,
தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும்,
வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது
இணையம் என்றால் மறுக்கமுடியுமா?

* சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?

* இளையோர் மீது (குறிப்பாக இளம் பெண்கள்) கருத்தியல் சுதந்திரத்தில் தலையிட்டு,
கருத்தியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வெளியுலகத்துக்கு மாற்றாக, சுதந்திரமாகவும்
சுயமாகவும் தனது கருத்தை, தனது எண்ணத்தை, தனது உணர்வுகளை வெளிப்படுத்த
வழிசமைத்துக்கொடுத்திருப்பது எது? இணையம்தானே? - இது தமிழ் இளையோர்
அடைந்துள்ள மிகப்பெரிய நன்மையில்லையா?

* உலகக் கலைகளெலாம் கற்று தமிழுக்கு வளம் கொணர்ந்து சேர்ப்போம் என்று
பொருள்படும் ஆன்றோர் எண்ணத்தை செயலாக்கும் தளம் எது? கலைகளெல்லாம் விரல்
நுனியில், கலைப்படைப்புகளெல்லாம் கண்ணருகில், சிறு திரையில்.

* பள்ளிக் கல்விக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும்
விலைமதிப்பான புத்தகங்களுக்கு ஈடாக இருப்பது இணையம். நேரத்தை மிச்சப்படுத்தி,
நிறைவான தகவல்களைத் திரட்டிடத் துணைபுரிகிற இணையத்தின் சேவையால் எத்தனை
எத்தனை தமிழ் இளைஞர்கள் நன்மையடைகிறார்கள் என்பதை அறிவீர்களா? இன்று
எதிரணியினர் தமது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்காய் தகவல்களை எங்கு சென்று
தேடுகிறார்கள்? தோள்கொடுக்கும் தோழனை துரோகி என்கலாமா?

* பள்ளி சென்று பயில வாய்ப்புக் கிட்டாத புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்க்கு
இணையமூடான கல்வி எத்தனை வாய்ப்பளிக்கிறது தெரியுமா? ஆசிரியரில்லாமல்
சுயமாகவும், சுதந்திரமாகவும் தனது கல்வியறிவை வளர்த்துக்கொள்ளவும், உலக அறிவை
விரிவுபடுத்தவும் வழிவகுக்கிறது இணையம் - அதன் வழிநின்று உயர்வு பெறுகிறார் தமிழ்
இளைஞர்.

ஏதோ சில விதிவிலக்குகளைக் காரணம் காட்டலாம் என்கிற எண்ணத்தோடு இணைய
ஊடகத்தால் தமிழ் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று வாதாட வந்த எதிரணியினர்
ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்: ஆக்க நினைப்பவர்க்கு இணையம்
என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.

இங்கு நான் அடிப்படையான சில கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்துள்ளேன். அவற்றை
எனது அணியினர் விரிவாகவும், இன்னும் விளக்கமாகவும் உதாரணங்களுடனும்,
ஆதாரங்களுடனும் எழுதுவார்கள்.

பி.கு.: தாமதத்துக்கு வருந்துகிறேன். நேரம் ஒத்துழைக்கவில்லை. தொடருந்துப் பயணத்தின்போதே இவற்றையாவது தட்டச்ச முடிந்தது. எனவே, எழுத்துப் பிழைகள் இருக்கலாம் - மன்னிக்க.


- sOliyAn - 12-29-2005

இரசிகை அவர்களின் ஒழுங்கமைப்பிலே, 'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' என்னும் பட்டிமன்றத்துக்கு நடுவர்களாக முன்வந்திருக்கும் தமிழினி அவர்களே! திரு செல்வமுத்து அவர்களே! வாதப் பிரதி வாதங்களின் மூலமாக இன்றைய உண்மை நிலையை முன்வைக்கக் காத்திருக்கும் அணியிலுள்ள யாழ்கள உறவுகளே! மற்றும் பார்வையாளர்களே! முக்கியமாக களம் தந்த திரு மோகன் அவர்களே! தங்கள் யாபேருக்கும் எனது பணிவன்பான வணக்கங்களுடன், 'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள்' என்ற தலைப்பிலே எனது கருத்துக்களை முன்வைப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

விஞ்ஞான தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியின் மைல் கல் எனும் அளவிற்கு மானிட குலத்திற்கு வரப்பிரசாகமாக அமைந்திருப்பது 'இணையம்' என்றால் அதிலே ஐயமில்லை. பல்வேறு துறைகள் ஒட்டிய தேவைகளை, ஆலோசனைகளை, அறிவூட்டல்களை, தகவல் பரிமாற்றங்களை மிகவும் இலகுவாக்கி மானுட செளகரியங்களின் விரைவு நிறைவேற்றுதல்களுக்கு முக்கிய காரணியாக உள்ளதும் இணையம் என்றாலும் மிகையில்லை.

ஆனால், இத்தகைய இணையத்தின் பயன்பாடு, எம் இளைஞர்களைப் பொறுத்தளவில் எந்தவகையில் பயன்பாடாகிறது என்ற தேடலே இந்தப் பட்டிமன்றத்தின் நோக்கமாகும். அந்தவகையில் எனக்குத் தெரிந்த சில கருத்துகளை இங்கே முன்வைக்க விளைகிறேன்.

<b>புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்.</b>
1. தாயகத்தில் பிறந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலங்களிலோ புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
2. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்பவர்கள்.

இதிலே முதலாவது வகையினரில் பெரும்பாலானவர்களைத்தான் தமிழ் கருத்துக்களங்களிலே, தமிழில் கருத்தாடுபவர்களாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு எதையாவது தருபவர்களாகவோ, அல்லது ஆகக் குறைந்தது அங்கத்துவர்களாகவோ காணக் கிடைக்கிறது. ஆனால், இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது யாழ் போன்ற கருத்துக்களங்களில் காணமுடிகிறதா? ஒரே வார்த்தையில் 'இல்லை' என மனவருத்தத்துடன்தான் கூறமுடிகிறது. வேண்டுமானால் இவர்களை, <b>தமிழ் கருத்துக்களம் என்ற பெயரில் தமிங்கிலத்தில் உரையாடும் களங்களில் காணலாம். அங்கே என்ன செய்கிறார்கள்.. சினிமாவை.. நடிக நடிகையரை.. அவர்களுடைய நெளிகோல படங்களை பக்கம் பக்கமாக அலசுகிறார்கள்</b>. அவ்வளவுதான்.

இன்று புகலிட நாடுகளில் கணனி இல்லாத தமிழ் வீடுகளே இல்லை எனலாம். <b>கணனியை இயக்கத் தெரிகிறதோ இல்லையோ... வானொலி, தொலைக்காட்சி முன்பு வரவேற்பறையில் அலங்காரப் பொருளாக இருந்ததுபோல.. இன்று கணனி அலங்காரப் பொருளாகவாவது வரவேற்பறையில் குந்திக்கொண்டிருக்கிறது.</b> அந்தக் கணனியின் முன்னால் எத்தனை இளைஞர்கள் மணித்தியாலக்கணக்காக குந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. அதுவும் கணக்கிலடங்காதவர்கள். அப்பா அம்மாவை பார்த்தா.. <b>'எங்கடை பிள்ளை கணனீல அந்தமாதிரி பாருங்கே.. சிவகாசி நேற்றுத்தான் வெளியிட்டாங்கள்.. பிள்ளை சீடீல அடிச்சு நாங்களும் பாத்திட்டம்..'</b> எனும்போது... வாளி வாளியாக பெருமை முகத்தில் வழியும். அப்பா அம்மாவைப் பொறுத்தளவில் சினிமா படச் சீடீயும், கலியாணக் காட்டடிப்பும்தான் பிள்ளையின் கணனி வித்தகமாக இருக்க, பிள்ளை கணனியில் என்ன செய்யுது?!

காதலுக்கு வழி தேடுது. அதாவது காதல் என்ற பெயரிலே பருவ உணர்வுக்கு வடிகால் தேடுது. மனதிலுள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க இடம் தேடுது. நாலு சுவர்களுக்குள் இருந்து, 'சற்' ரூம்களிலே மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்குது. தெருவில் இறங்கி நேருக்கு நேராய் தைரியமாய் பேச முடியாததுகளை எல்லாம், 'சற் ரூம்'களிலே கொட்டிக் கிளறி குப்பையாக்கி தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது. இதுதான் பல 'சற் ரூம்'களிலே அதுவும் கண்காணிப்பாளரற்ற தமிழ் 'சற் ரூம்'களிலே வாசிக்க வாசிக்க வந்துகொண்டேயிருக்கும் சமாச்சாரங்கள்.

உதாரணமாக யாகூ சற் ரூம்களுக்கு போய் பாருங்கள். எம்மவரின் இணைய முன்னேற்றத்தை ஒலிவடிவிலேயே கேட்க முடியும். இப்படி கண்காணிப்பாளரற்ற சற் ரூம்களில் பங்குபற்றும் தமிழ் உறுப்பினர்களது எண்ணிக்கையையும் யாழ் போன்ற ஒழுங்கான கருத்துக்களங்களில் பங்குபற்றும் அங்கத்துவர்களின் எண்ணிக்கையையும் கவனியுங்கள். ஒரு வீதமாவது தேறுமா?!

எதிரணித் தலைவர் கூறியதுபோல, <b>'இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி'</b> என்றால்.. 'சற் ரூம்'களிலே நேரத்தையும் காலத்தையும் கண்ணையும் பழுதாக்கிக்கொண்டு குப்பைகளை வாரி இறைக்கிறார்களே... அவர்களும் இளைஞர்கள்தானே?! அதாவது மாற்று அணித்தலைவரின் கணிப்பீட்டின்படி 80 வீத இளைஞர்களாவது இருப்பார்கள்தானே?!

சில விடயங்களை கூற வேண்டுமாயின் வேறு விடயங்களையும் துணைக்கு அழைக்கத்தான் வேண்டும். அதேபோல, 80ம் ஆண்டுகளிலேயே பெரும்பாலான தமிழர்கள் புலம்பெயர்ந்து காலூன்றினார்கள். அப்போது அவர்கள் 20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினரான இளைஞர்கள். அன்று அவர்கள் தமிழ் பாடசாலைகளை நிறுவினார்கள். அமைப்புகளை உருவாக்கினார்கள். வியாபாரங்களை ஆரம்பித்தார்கள். ஆக, <b>இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?</b> என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவதையும் தவிர்க்க முடியாமலுள்ளது. இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிய முடையதாயின், அந்த நன்மையின் பயன்பாட்டை.. எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக் காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே!

தற்போது புலம் பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தளவில் இணையமானது, 'சற் ரூம்'களில் கூத்தடிக்கவும், அதனூடாக 'டேட்டிங்' காண வழி தேடலாகவுமே உள்ளது. இதைத் தவிர, இணையத்தால் அவர்களின் பயன்பாடு.. அந்தப் பயன்பாட்டினூடாக நமது இனம் பெற்ற பிரயோசனம் என்பது 'பூச்சியம்'ஆகவே என்மட்டில் தோன்றுகிறது.

ஆக, <b>வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை.. </b>எனவே, இணையமானது புலம்பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கிறது எனக் கூறி... மேலும் பல கருத்துகளை எனது அணியினர் முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து.. அவர்களை வாழ்த்தி.. விடைபெறுகிறேன். வணக்கம்.


- Selvamuthu - 12-29-2005

அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள்.
இளைஞனுடைய வாதத்தைப்படித்து அதற்காக என் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே சோழியான் தனது கருத்துக்களை முன்வைத்துவிட்டார். அப்படித்தான் நான் நேற்று எழுதியும் இருந்தேன். ஆனால் பின்னர் இரசிகை புதிய அணித்தலைவரைத் தெரிவுசெய்தார்.
இப்போது இரு அணித்தலைவர்களும் தமது கருத்துக்களை தந்துவிட்டனர் எனது கருத்துக்களை சிறிது நேரத்தில் வைப்பேன் அடுத்து கருத்துச்சொல்ல வருபவரை சிறிது பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


- Selvamuthu - 12-29-2005

இளைஞன் தனது பெயருக்கேற்றாற்போல் இளையவர்க்கு… என்று தனது வணக்கத்தினைச்சொல்லி வாதத்தினை ஆரம்பித்தார்.
"இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத் தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது என்கின்ற உண்மையை எதிரணியினர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா?" என்று கேள்விகளை எழுப்பினார்.

பக்கவாட்டில் வளர்வதும் ஒருவித வளர்ச்சிதானே! (அப்படியானவர்கள் மன்னிக்கவும்)

தமிழ் இணையத்தளங்கள் உலகிலே இரண்டாவது இடத்தில் இருப்பதைப்பற்றி அறிந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியான விடயம். ஆனால்
"இந்த இணையத்தளங்கள்தானே பிரச்சினைகளையும் உருவாக்கி, சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன"

என்று எதிரணியினர் வாதாட வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவந்தேன்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" இது இங்கே பொருந்துமா? (எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்).

கருத்தாட வந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இளைஞர்கள் என்று அடித்துக்கூறுகின்றார். எப்படி? பெயர்களைப் பார்த்து வயதுகளைக் கணிப்பது சரியா? இது ஆபத்தில் முடிந்தாலும் முடியும். (நான் வாதாட வந்திருக்கும் உங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பவில்லை, யாரும் பதில் தரவும் தேவையில்லை).

"குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்களைப் புறந்தள்ளுவதாகவும், இந்த அறிவிலிகளைத் தகர்த்தெறிந்து இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த இணைய ஊடகம் என்றால் மிகையாகாது" என்றும், "இளம் பெண்களின் கருத்தியல் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும் தமது எண்ணத்தை, உணர்வுகளை வெளிப்படுத்த வழிசமைத்துக்கொடுத்திருப்பது இந்த இணையம்தானே" என்றும் கூறினார்.

இங்கேதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. (மீண்டும் எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்). இப்படியாக இளையோர் எழுதும் கருத்துக்களை இந்த வயதுபோனவர்கள் இளைஞர்களைப்போல் இணையத்தளத்திலே மணிக்கணக்காக இருந்துகொண்டு படிப்பார்களா? படித்தால்தானே இந்தப்பிரச்சனைகளைப்பற்றி அவர்களுக்கு விளங்கும். (சின்னப்பு, புளுகர் பொன்னையா, முகத்தார் போன்றவர்கள் மன்னிக்கவும்).

பள்ளிக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், பணத்தை மிச்சம்பிடிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இணையம் துணைபுரிகிறது என்றும் தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக வைத்தார்.

இறுதியில் "ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்" என்று ஒரு புதிய பழமொழியையும் ஆக்கித்தந்தார். பாராட்டுக்கள்.

அணித்தலைவர் என்ற காரணத்தால் அவர் தனது நேரத்தையும் பொருட்படுத்தாமல் தொடருந்திலே பயணித்துக்கொண்டே இக்கருத்துக்களை எழுதி முன்வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். கடமையுணர்வும், அணித்தலைவன் என்ற பொறுப்புணர்வும் இளைஞனிடம் நிறையவே இருக்கின்றன என்பதற்கு இவை போதும். அவர் எழுதிய சில கருத்துக்களை எடுத்து எனது கருத்துக்கள் சிலவற்றைத்தொடுத்தேன். அவை எந்த அணிக்கும் உரம் சேர்ப்பதாக எண்ணவேண்டாம்.

சரி, இனி எதிர் அணியின் தலைவர் சோழியான் அவர்களை அழைக்கிறேன். "புலம்வாழ் தமிழ் இளைஞர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்" என்பதற்கு ஆதாரமாக அந்த அணியின் தலைவர் என்ற முறையில் அவரின் கருத்துக்களை முன்மொழியுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்றொரு பழமொழி உண்டு. எங்கள் இந்த அணித்தலைவர் சோழியனுக்கு குடுமி இருக்குதா இல்லையா என்பது தெரியாது. அப்படி இருந்தாலும் அது ஆடுதா இல்லையா என்பதும் தெரியாது. (இதனைப்பற்றி யாரும் கருத்தெழுத வேண்டாம்). கருத்துக்களை மட்டும் கூறுமாறு அழைக்கிறேன்.

(சோழியான் தனது கருத்துக்களை நான் எழுத முன்னரே வைத்துவிட்டார். இப்போதும் ஏதாவது கூறவிரும்பினால் மிக மிகச்சுருக்கமாகக் கூறவும்)


- sOliyAn - 12-30-2005

ஐயா நடுவர் அவர்களே! நான் இணையத்தின் அருமை பெருமைகளைப் பற்றி வாதிட வரவில்லை. இணையம் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தளவில் எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றியே சிலதை கூறியுள்ளேன். மேலும் கருத்துக்களை நமது அணியிலுள்ளவர்கள் தருவார்கள். எனவே அடுத்தவருக்கு வழிவிடுகிறேன். நன்றி.


- tamilini - 12-30-2005

அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கங்கள். 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள்' என்ற தனது அணியின் வாதத்தை ஆரம்பித்து இணையம் பற்றி அழகாகக்கூறி இளைஞனது ஒருசில கருத்தையும் தொட்டு வெட்டிச்சென்றார் சோழியான் அவர்கள். சோழியான் அவர்கள் சட்றூம் பற்றி திரும்பத்திரும்ப சொல்லிவிட்டுச்சென்றிருக்கிறார் (என்ன ஏதாவது பாதிப்பே(இதைப்பற்றிய கருத்துக்கள் வேண்டாம்) ) இந்தச்சற்றூமால் எமது இளையோருக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதை எதிர்அணியினர் கூறுகிறார்களா பார்ப்போம்.

<b>வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும், தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும், வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது
இணையம் என்றால் மறுக்கமுடியுமா? </b> என்று கூறுகிறார் திருவாளர் இளைஞன்.

<b>இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?</b>

என்ற கேள்வியை எதிரணிமுன் வைக்கிறார் சோழியான் அவர்கள். எங்கே இணையம் மூலம் எதை தமிழினத்திற்கு தந்தார்கள் என்று எதிரணியினர் சொல்வார்களா ஒரு உதாரணத்தை காட்டுவார்களா? எதிர்பார்த்தபடி

அணித்தலைவர் சோழியான் இன்னொருமுக்கிய விடையத்தைச்சுட்டிக்காட்டியுள்ளார். புலத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிங்கிலத்தில் எழுதும் களத்தில் தான் நிக்கிறார்கள் தமிழ்க்களங்களில் எழுதுவதில்லை என்கிறார். ( தட்டச்சுப்பழக பட்ட பாட்டையாருக்குச்சொல்லி அழுவது என்று வரப்போகிறார்கள் எதிரணியினர்). அதுவும் சினிமாவை நடிக நடிகைகளின் நெளிகோல படங்களை பக்கம் பக்கமாய் அலசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துச்சென்றார். என்ன செய்யவது எல்லாம் கலை என்ற கறுமாந்திரம் என்று சொல்லப்போகிறார்களா?? இல்லை எல்லாக்களங்களிலும் (யாழ் உட்பட) சினிமா ஒருபகுதியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டப்போகிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.


சிவகாசி சீடியை பிள்ளை அடித்து பெற்றோருக்கு காட்டி அதை அவர்கள் மகிழ்வது பற்றி குறிப்பிட்டுச்சென்றார் அணித்தலைவர் சோழியான். எங்கே எதிரணியினர் எப்படி அடிக்கப்போகிறார்கள். பிள்ளை சீடிவாங்கும் பணத்தை மிச்சப்படுத்துது எனப்போகிறார்களா இல்லை பிள்ளைக்குத் தெரிந்த கணணி வித்தையில் பெற்றோருடன் பகிரக்கூடியது இது மட்டும் தான் எனப்போகிறார்களா.??

<b>ஆக, வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது
பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை</b>

திருவாளர் சோழியான் அவர்கள் இளைஞர்களுக்கு இணையம் எதற்குப்பயன்படுகிறது என்றதை விளக்கியிருக்கிறார். எதிரணியின் பதில் என்னவாய் இருக்கும். அப்பன் அக்கம்பக்கம் பாத்துச்செய்ததை நாங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் உதவியுடன் செய்கிறோம் எனப்போகிறார்களா பொறுத்திருந்து ரசிப்போம். நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக அடுத்த விவாதியை அழைக்கிறோம்.

<b>மற்றுமொருகருத்தோடு சந்திக்கிறேன் அதுவரை வணக்கங்கள்.</b>


- Selvamuthu - 12-30-2005

அணியின் தலைவர் சோழியான் அவர்களே, அனைத்துக் களஉறவுகளே "புலம்வாழ் தமிழ் இளைஞர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்" என்பதற்கு ஆதாரமாக அந்த அணியின் தலைவர் என்ற முறையில் அவரின் கருத்துக்களை முன்மொழிந்தார்

"புலத்தில் வளரும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்" என்று பிரித்தார். இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது இப்படியான களங்களில் காண முடிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். "இல்லை" என்று தானே பதிலையும் கூறினார். நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும். (எதிர் அணியினர் இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டாம்)

இந்த சினிமா மோகம் உலகில் எந்தப் பாகத்தில் இருந்தாலும் ஒருவயதில் எல்லோரையும் தொட்டுச்செல்லும் ஒரு வியாதி என்று சொல்லலாம். இந்த வயதுக்கோளாறு உங்களையும் நிச்சயம் தொட்டிருக்கும். "களவையும் கற்று மற" என்று கூறுவார்கள். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்தானே! இதற்கு கணினி தேவையில்லை.

சி.டி அடிப்பது அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன், கேள்விப்படுகிறேன். இதற்குக் கணினி தேவைதான். கலியாணக்காட் அடித்ததுபற்றி ஒருமுறைதான் கேள்விப்பட்டேன். (இப்போது வெளியே மலிவாக அடிக்கலாம் என்று அவர்களுக்குக் கூறவேண்டும்).

சற் ரூம்களிலே போய்ப்பாருங்கள் காதலுக்கு வழிதேடுது என்று கூறினார். முன்னர் ஊரிலே காதலிக்கு கடுதாசி கொடுத்தால் கட்டிப்போட்டு கண்ணுக்கு மிளகாய்த்து}ள் போட்டுவிடுவார்கள். (என் அனுபவமல்ல) அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் இப்போது பெற்றோர்களாக இருக்கின்றார்கள். அதே கொள்கையைத்தான் இப்போதும் புலத்திலும் கடைப்பிடிக்கின்றார்கள். அப்போ இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இது பருவக்கோளாறு. சற் ரூம் அனுபவம் உங்களுக்கு நிறையவே இருக்கின்றதுபோல் இருக்கின்றது. (கோபிக்கவேண்டாம்).

மேற்கூறிய இரு களங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பிடுவது சரியல்ல என்று எண்ணுகிறேன். அங்கே 80 வீதம், இங்கே 80 வீதம். அப்போ 50 இற்கு 50 என்று கூறலாமா?

மீண்டும் 80 களைக் காரணம் காட்டினீர்கள். 60 களில் வந்தோரில் அதிகமானோர் வேலை செய்வதற்கு என்றுதான் வந்தார்கள். 70 களில் வந்தோர் படிப்பதற்கு என்றுதான் வந்தார்கள். ஆனால் நாட்டு நிலைமைகள் மாறியதால் 80 களில் வந்தோர் இரண்டுக்குமாகத்தான் வந்தார்கள். இப்படியெல்லாம் வருமென்று யார் கண்டார்கள்?

ஆகவே உங்களின் கருத்துப்படி இணையமானது சற் ரூம்களிலே கூத்தடிக்கவும், அதனு}டாக "டேட்டிங்" காணவும்தான் வழிவகுக்கின்றது என்று கூறினீர்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று எடுக்கலாமா?

இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிமுடையதாயின் அந்த நன்மையின் பயன்பாட்டை, எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக்காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே என்றும் கூறினீர்கள்.

நிச்சயம் வருவார்கள், தொட்டும் காட்டுவார்கள் என்றுகூறி தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி கூறி அடுத்தவரை அழைக்கிறேன்.

அனித்தா உங்கள் அணிக்கு பலம் கூட்டும் கருத்துக்களை முன்வைக்கவும்.
நன்றி


- அனிதா - 12-30-2005

<span style='color:blue'>அனைவருக்கும் வணக்கம்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்தி நடத்திவரும் இரசிகை அக்காவுக்கு முதலில் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் நடுவர்கள் செல்வமுத்து ஐயாவுக்கும் தமிழினி அக்காவுக்கும், வெள்ளித்தாமரையில் அமர்ந்திருக்கும் எம்மணித் தலைவர் இளைஞனுக்கும் எதிரணித் தலைவர் சோழியன் அண்ணாவுக்கும், பித்தளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் ஏனைய கருத்தாளர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கும் அனிதாவின் அன்பான பண்பான வணக்கங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனக்கு முதல் வாதடிய எம் அணி தலைவர் இளைஞன் அவர்கள் எம் அணிக்கு வலு சேர்க்கும் அளவுக்கு நல் கருத்துக்களை வழங்கியிருந்தார்... அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!


<b>"புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" </b>என்கிற தலைப்பின் கீழ் இணைய ஊடுகத்தால் இளையோர்கள் நன்மையே அடைகிறார்கள் என்று எனது அணிக்கு வலுச்சேர்க்க வந்திருக்கிறேன்...!

ஒகே விசயத்துக்கு வாரன்...


<b>தாயகத்திலிருந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலத்திலோ வந்தவர்களில் பெரும்பாலானவர்களைத் தான் யாழ் களம் போன்ற தமிழில் கருத்தாடும் தளங்களில் காணமுடிகிறது என்று எதிரணித் தலைவர் சொல்கிறார்.</b> உண்மையை எதிரணித் தலைவர் ஒத்துக்கொள்கிறார். சிறுவயதில் புலம்பெயர்ந்தவர்களில் குறிப்பிட்ட சிலரையே, அதிலும் தமிழார்வம் உள்ளவர்களையே யாழ்களம் போன்ற கருத்துப் பரிமாறும் களங்களில் காணமுடியும் ஏன்றும் சொன்னார்...

<b>எதிரணித் தலைவர் அவர்களே...</b> நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்...

சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!

இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தமிழில் கருத்தாடும் தளங்களில் கருத்தாடுவதால் மட்டுமே நன்மையடைய முடியும் என்பது யதார்த்தமல்ல... இணையம் என்பதே உலகைச் சுருக்கி திரையில் விரிப்பது. அப்பேற்பட்ட இணைய ஊடகத்தில் பல் மொழித்தளங்களின் பயன்பாடு என்பது அளப்பெரியது. எனவே இங்கு பிறந்து வளர்ந்த அல்லது இடையில் வந்தவர்கள்இ அந்தந்த நாட்டு மொழித் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் வேற்றுமொழித்தளங்களின் ஊடாக பல்வேறு நன்மைகளை அடைகிறார்கள் என்பதே உண்மை...!!!</span>

Quote:<b> 'எங்கடை பிள்ளை கணனீல அந்தமாதிரி பாருங்கே.. சிவகாசி நேற்றுத்தான் வெளியிட்டாங்கள்.. பிள்ளை சீடீல அடிச்சு நாங்களும் பாத்திட்டம்..' எனும்போது... வாளி வாளியாக பெருமை முகத்தில் வழியும். அப்பா அம்மாவைப் பொறுத்தளவில் சினிமா படச் சீடீயும், கலியாணக் காட்டடிப்பும்தான் பிள்ளையின் கணனி வித்தகமாக இருக்க, பிள்ளை கணனியில் என்ன செய்யுது?</b>


<b>ஐயா எதிரணித் தலைவர் அவர்களே,</b> சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும், கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்தது, இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள். யேர்மன் எழுத்தாளர் சோழியான் அண்ணா, சுவிசில் வசிக்கும் ஒளிப்பதிவுக் கலைஞர் அஜீவன் அண்ணா, போன்ற இன்னும் பல இலக்கியவாதிகளுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். என்னைப் போன்றவர்கள் கூச்சமில்லாமல் கவிதைகளை எழுதிப் பழகுகிறார்கள். தாயக செய்திகளை உடனுக்குடன் படிக்கிறார்கள். உலக நடப்புக்களை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். இவை பெற்றோருக்கு தெரியாது தான் ஏனென்றால் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்கிறார்கள். எனவே பெற்றோரின் குறுகிற பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு இளைஞர்கள் இணையத்தால் சீரழிகிறார்கள் என்ற வாதம் குழந்தைப்பிள்ளைத்தனமானது....!

<b>எதிரணித் தலைவர் அவர்களே,</b> மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும், பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

யாகூ சாற் ரூம்கள் பற்றி எதிரணித் தலைவர் குறிப்பிட்டார்.... அவர் கெட்டதை மட்டுமே ஒலிவடிவில் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.... அது ஒரு சிறு துளிதான். யாகூ அரட்டை அறைகளிலே ஒலிவடிவிலான பட்டிமன்றங்கள் நடந்தனவே அவற்றை நீங்கள் அறியவில்லையா? ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்..... எதிரணித் தலைவர் யாழ் போன்ற தமிழ்த் தளங்களை மட்டுமே மையமாக வைத்து தனது வாதத்துக்கு வலுச்சேர்க்கிறார்..... யாழுக்கும் அப்பால் பல வேற்றுமொழித் தளங்களின் மூலம் தமிழ் இளைஞர்கள் பயனடைகிறார்கள் என்பதுவும் அதன் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதுவும் எதிரணியினர் அறியவில்லைப் போல் உள்ளது....!

சாட் ரூம்களும், சினிமாத்தளங்களும் தான் இணையம் என்பது குறுகிய பார்வை. அதற்கும் அப்பால் விரிந்து பரந்த பயனுள்ள விதயங்கள் நிறைய உள்ளன. அவற்றை தமிழ் இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள் பயனடைகிறார்கள்.....!

<b>நடுவர் அவர்களே,</b> இணைய ஊடகத்தால் புலம்வாழ் இளைய சமூகம் நன்மையடைகிறதா சீரழிகிறதா என்பதே பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் எதிரணித் தலைவர் நன்மையடைந்த இளைஞர்கள் எமது இனத்துக்கு என்ன தந்தார்கள் என்கிற அடுத்தகட்டக் கேள்வியைக் கேட்டு தமது வாதத்தின் பலவீனத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.... கேள்வியைத் திசைமாற்றி புலம்வாழ் தமிழ் இளம் சமூகம் இணைய ஊடகத்தால் தமிழர்க்கு என்ன நன்மை செய்தார்கள் என்று கேட்கிறார்கள்.... இருந்தாலும் அவரின் கேள்விக்கு எம்மால் நிறைய உதாரணங்களைத் தரமுடியும்... புலம் வாழ் இளம் தமிழ் சமூகம் இணையத்தால் நன்மையடைந்தால் அதை தமிழ் சமூகம் நன்மையடைகிறது என்று தானே எடுத்துக்கொள்ளவேண்டும்? இந்த இளம் சமூகம் தானே நமது சமூகத்தின் தூண்கள்?

<b>எதிரணித் தலைவர் கேட்ட கேள்விக்கு எனது பதில்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:</b>
இன்று பெரும்பாலான பயனுள்ள தமிழ் இணையத்தளங்களை நிர்வகிப்பவர்கள் யார்? தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்தளங்களை வடிவமைத்து வழங்குபவர்கள் யார்? இளைஞர்கள் தான் என்கிற உண்மையை மறுக்கப் போகிறீர்களா? இன்று இந்த பயனுள்ள இணையத்தளமான யாழ் இணையத்தை வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற மோகன் அண்ணா இளைஞர் இல்லையா? இன்று உடனுக்குடன் செய்தியை ஓடிப்போய் புதினம் செய்தித்தளத்தில் பார்க்கிறீர்களே அதனை நிர்வகிப்பவர் யார்? ஒரு இளைஞர் தானே? வலைப்பதிவுகள் பலவற்றில் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதையும் அதன்மூலம் தமிழில் பல நல்லவிதயங்களை அவர்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எப்படி மறந்துபோனீர்கள்? இலக்கிய இதழ்களான அப்பால் தமிழ், தமிழமுதம், பதிவுகள் போன்ற இணையத்தளங்களை மூத்தவர்கள் நெறிப்படுத்த தொழில்நுட்ப உதவிகள் செய்பவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழ் சமூகத்துக்கு எதனைச் செய்தார்கள் என்று கேட்கிறீர்களே தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உறுதுணையாக பல தளங்களை உருவாக்கி நெறிப்படுத்துபவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழீழப் இலக்கியப் படைப்புகள் பல வெளிஉலகத்துக்கு தெரியாமல் இருந்ததே அவற்றையெல்லாம் இணையம் ஊடாக உலகத்தமிழர்கள் அறியும் வகை செய்தவர்கள் யார்? html கற்போம், java கற்போம், வீடியோத் தொழில்நுட்பம் கற்போம், விஞ்ஞானம் அறிவோம் வாருங்கள் என்று தமிழ்சமூகத்தை தொழில்நுட்ப அறிவையும், அறிவியலையும் வளர்க்க இணையம் ஊடாக வழிசெய்தவர்கள் யார்? இன்னும் இன்னும் நிறைய சொல்லலாம்....

<b>எதிரணித் தலைவர் அவர்களே</b> கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !

<b>எமது அணித்தலைவர் இளைஞன் சொன்னதுபோல ஆக்க நினைப்பவர்க்கு இணையம் ஊக்க சக்தி சீரழிய நினைப்பவர்க்கு சிறு துரும்பும் போதும்...!</b>

நமக்குள் ஒளிந்துகிடந்த திறமையை வெளிப்படத்துவதற்கு களமமைத்துத் தந்த சுதந்திர ஊடகம் இணையம் என்றும் யாழ்களம் போன்ற பயனுள்ள இணையத்தளங்களினூடாக புதிய பல உறவுகளை அறிமுகப்படுத்தி நட்பு ஏற்படுத்தித்தந்ததும் இந்த இணைய ஊடகம் தான் எனக்கூறி எனது வாதத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறேன்...

[size=14]மேலும் பல வலுசேர்க்கும் கருத்துக்களை எமது அணியினர் முன் வைப்பார்கள் எனவும் வெற்றி பெறுவோம் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி... வணக்கம்..!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-30-2005

அடடடடே இத்தனை அழகான விவாதத்தை வாசிக்க வேண்டி உள்ளதே நேரடியாக கேக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை எனக்குள் எழுப்பிவிட்டு எல்லோரையும் தாமரையில் இருக்கச் செய்து தனது அணிக்கு வலுச்சேர்க்கும் விதமாக பல கருத்துக்களை ஆணித்தரமாக வைத்துச்சென்றிருக்கிறார் அனித்தா.

அனித்தாவின் வாதத்தில் இருந்து..

ஏற்கனவே சினிமா மோகம் உள்ள இளைஞர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தளங்களிற்குச்செல்கின்றார்கள். இணையத்திற்கு முன்னர் சினிமா பற்றியும் நடிகர் நடிகைகள் பற்றியும் அவர்கள் நெளிகோலங்களை பற்றியும் சஞ்சீகைகள் பக்கம் பக்கமாய் அலசியிருக்கின்றன அவற்றை இளைஞர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள் சினிமா என்பதை அவர்களுக்கு இணையம் புதிதாக அறிமுகப்படுத்தவில்லை ஏற்கனவே தெரிந்தது தான் என்று எதிரணித்தலைவரின் கருத்தை வெட்டிப் தனது கருத்தை வைத்திருக்கிறார் அனித்தா.

சஞ்சிகையில் வந்த அந்த நெளிகோல வரணனைகளை ஒருமுறை ஏதாவது தேவைக்குப்பயன்படுத்தினால் அது அத்தோடு குப்பைக்குப்போய்விடும் ஆனால் இணையத்தில் வருகின்ற வர்ணனைகள் என்றும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது அதை எந்த நேரமும் எத்தனை தரமும் பார்க்கலாம் என்றுகூறபோகிறார்களா எதிரணியினர் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்பதை.

இன்னுமொருமுக்கியமான விடையத்தை கூறிவிட்டுள்ளார் அனித்தா.
<b>தமிழில் கருத்தாடும் தளங்களில் கருத்தாடுவதால் மட்டுமே நன்மையடைய முடியும் என்பது யதார்த்தமல்ல...</b>

<b>ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்....</b> ஒரு சில கெட்டவற்றை வைத்துக்கொண்டு இணையம் சீரழிக்கிறது என்று சொல்லலாமா என்கிறார் அனித்தா. (அப்ப சில சீரழிவுகள் இருக்கின்றன என்கிறார்.)


சினிமாப்படங்களை தரவிறக்குவதும் கல்யாணக்காட் அடிப்பதும் தான் வித்தகம் என்று எண்ணுவது பெற்றாரின் அறியாமை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த அறியாமை நிறைந்த பெற்றோரைத்தான் இப்படியான சிலவற்றை காட்டிவிட்டு பிள்ளைகள் ஏமாற்றி சீரழிந்துபோகிறார்கள் என்று கூறுவார்களோ எதிரணியினர்.

ம் யாகூ சற்றூமில் கெட்டது மட்டும் அல்ல அங்கு நல்லதும் நடக்கிறது என்று உதாரணம் காட்டியிருக்கிறார் அங்கு ஒலிவடிவில் பட்டிமன்றங்கள் நடந்திருக்கின்றன அப்படி என்கிறார் அனித்தா. அறிந்தவர்கள் பகிருங்கள். ஆக நல்லதும் நடக்குது கெட்டதும் நடக்கிது என்றியள் சரி சரி. இந்த சற்றூம்மூலம் தான் நடிகை அசின் என்று ஒரு இளைஞனை ஒரு பெண் ஏமாற்றி பொருட்கள் வாங்கியதாய் செய்தி ஒன்று பரவியதே.. இதை நன்மை என்பதா சீரழிவு என்பதா?? பெண்ணிற்கு நன்மை தானே??

சற்றூமும் சினிமாத்தளங்களும் தான் இணையம் என்பது குறுகியபார்வை என்றும் அதற்கு அப்பால் விரிந்து பரந்து பயனுள்ள விடயங்கள் நிறைய உள்ளன என்றும் கூறுகிறார். இதை மறுப்பார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிரணித்தலைவர் கேட்ட கேள்விக்கு பதில்கள் என்று பல இணைய நிர்வகிப்பவர்களைப்பற்றி அனித்தா குறிப்பிட்டிருக்கிறார். அவர்களும் இளைஞர்கள் தான் எனச்சுட்டிக்காட்டியிருக்கிறார் அந்த இணையங்களால் இளையோர் அடையும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் உள்ள சீரழிவுகள் பற்றி மற்ற அணியினர் குறிப்பிடுகிறார்களா என்று பார்ப்போம்.

எதிரணித்தலைவருக்கு இன்னொரு கருத்தைச்சொல்லிச்சென்றிருக்கிறார் டேற்றிங் செய்வதற்கு இணையம் தவிர்ந்த இன்னும் பல சாதனங்கள் இருக்கின்றது. அந்த சாதனங்கள் மூலமும் அவர்கள் டேற்றிங் செய்து கொள்ளலாம்.. இணையத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்று சொல்லிச்செல்கிறார். எங்கே எதிரணியினர் கருத்து என்னவாக இருக்கும். மற்றைய சாதனங்களை விட இணையத்தில் டேற்றிங் செய்பவர்கள் அதிகம் என்று புள்ளிவிபரம் வரப்போகிறதா இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்...

ஆக்க நினைப்பவர்க்கு இணையம் ஊக்க சக்தி சீரழிய நினைப்பவர்க்கு சிறு துரும்பும் போதும்.. என்று தனது அணித்தலைவரின் வரிகளைச்சுட்டிக்காட்டி இணையத்தால் புலம்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்று உறுதிகூறிச்செல்கிறார் அனித்தா.

அனித்தாவைத்தொடர்ந்து சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து அடுத்த விவாதியை அழைக்கிறோம்.


ஆசிரியர் செல்லமுத்துவின் தாயாரது செய்தி அறிந்திருப்பியள். இனி பட்டிமன்றம் தொடருமா இல்லையா என்பதை ரசிகையும் உறுப்பினர்களும் தான் சொல்லவேண்டும்.


- ப்ரியசகி - 12-31-2005

<i><b>'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' </b></i>என்னும் தலைப்பில் நடைபெறும் இவ் பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி நடுநிலைமை வகிக்க வந்திருக்கும் செல்வமுத்து ஐயாவிற்க்கும், தமிழினி அக்காவிற்க்கும் எனது முதற்க்கண் வணக்கம்!
இங்கே நான் உங்களோடு உறவாட வழி அமைத்துத்தந்த யாழ் இணைய ஊடகத்திற்க்கும், மோகன் அண்ணாவிற்க்கும், பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்தி செல்லும் ரசி அக்காவிற்க்கும் எனது பணிவான வணக்கம்!
அடுத்து, நமது அணிக்கு தலைமை தாங்க வந்திருக்கும் சோழியன் அண்ணாவிற்கும், அணி உறுப்பினர்களுக்கும், நன்மையே கொடுக்கும் இணையமென்று கருத்துக்களை கூற ஒருங்கிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், தலைவரான இளைஞன் அவர்களுக்கும், பட்டிமன்றத்தை பார்த்து ரசிக்க வந்திருக்கும் ஏனைய கள உறுப்பின்ர்களுக்கும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.


<b>'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?'</b> இதுவே நம் பட்டிமன்றத்தின் தலைப்பு.
எங்கள் அணிக்காக வாதாடிய அணித்தலைவர் சோழியன் அண்ணா கூறிய படி. இணையத்தளத்தின் பயன்களுக்கு மிகையானது எதுவும் இல்லை!! அத்தோடு இணையத்தளத்தினூடாகவே தான் நானும் உங்கள் உறவுகளை பெற்று, இங்கே உங்கள் எல்லோரின் முன்னில் என் கருத்துக்களை வைக்க வந்திருக்கின்றேன் என்பதையும் நான் மறுக்கவில்லை! ஆனால் எமது வாதம் என்னவோ அதை எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் (ஏன் மறைக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.) ஆனாலும் அவர்களின் மறுப்பையும், மறைப்பையும் மீறி அவர்களுக்கு நம் தலைப்பை புரிந்து கொள்ள வைப்பதே எமது கண்ணான கடமை என எண்ணிக்கொண்டு எனது வாதத்தை தொடர விரும்புகிறேன்.

கனம் நடுவர் அவர்களே! இணையத்தளத்தின் முதல் தீமையாக நான் கூற விரும்புவது இணையத்தள்ங்களினாலும், இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். இதை நாம் யாழ் களத்திலேயே காணலாம். (ஏன் நான் என்னையே உதாரணமாக கூறுவேன்). இதில் நன்மை பெறுவார்களோ தீமை பெறுவார்களோ என்பதல்ல..அதற்கு அடிமையாகி விடுகின்றார்கள் என்பதே. ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! அப்படியாயின் முதல் தீமையை எதிரணியினர் தங்களையே உதாரணமாக எடுத்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

<b>மேற்கோள்:

எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்... </b>
...என்றார், எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள்.
தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்)


<b>மேற்கோள்:

சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!" </b>

நடுவர் அவர்களே மேலே எதிரணி உறுப்பினர் அனிதா கூறியது போல் , சினிமா அடிப்படைக்காரணம் என்றாலும், சஞ்சிகைகளில் இளையோர் அலசிய விடயங்களை இணையம் இன்னும் விரைவாகவும், இலகுவாகவும் அவர்களிடம் கொண்டு செல்லும் ஒரு கடத்தியாக பயன்படுகிறதல்லவா..? அவர்களின் சினிமா மோகத்திற்கு இணையம் இதனால் இலகுவாக வழி வகுக்கின்றதல்லவா..?
ஆகவே எதிரணியினர் அந்தச் சினிமாவுக்காக இணையத்தைப் பயன்படுத்துவதை சீரழிவு இல்லை என்கிறீர்களா அல்லது இங்கே இணையத்தின் பயன்பாடு சீரழிவுக்கு பயன்படவில்லை என்கிறீர்களா......?

<b>மேற்கோள்:

"தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள்." </b>

தயவு செய்து கருத்தை தெளிவாக உள்வாங்குங்கள். பெற்றோரின் கணனி பற்றிய அறிவின்மையை இளையோர் தமது சீரழிவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூறவந்தால்.. அதற்காக பெற்றோரை குறைகூறாதீர்கள்.. ஒரு சில டொலர்களுடன் நாடுகள் கடந்து.. புதிய சூழலிலே தம்மை நிலைநிறுத்திய அவர்களா அறியாமையுள்ளவர்கள்..? அது உண்மையல்ல. தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்ற நிலையில் ஓய்வெடுக்கிறார்கள். அவ்வளவுதான். இப்படியே பெற்றோரை குறை சொல்லிக்கொண்டு இருந்தால் எப்போது தான் உண்மை வெளிவரப்போகின்றது..?

இங்கே தான் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.
இளையோர்கள், சிறியோர்கள் என்றால், அவர்கள் வளர்ந்து வருபவர்கள், புதிய விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள், கூட படிப்பவர்களோ (அவர்கள் வேற்று நாட்டவராக இருந்தாலும் சரி) அல்லது கூடி பழகுபவர்களோ, செய்யும் காரியங்களை தாங்களும் செய்ய எண்ணுவார்கள். அது இள்மைக்கே உரிய ஒரு குணாதிசயமாகும். நீங்கள் சொன்னது போல, முற்றாக வேறு காலாச்சாரத்தைக்கொண்ட வேற்று மொழியினர்டன் பழகையில் வேற்று மொழியின் தளங்களை பயன் படுத்தவும் செய்கிறார்கள். இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும், வேற்று கலாச்சாரத்தை அவர்கள் பழகும் வாய்ப்பும், அதனால் நம் கலாச்சாரத்தோடு ஒன்றாத குணமும் உருவாகும் என்று. அதனால் அவர்கள் நாளடைவில் வேற்று நாட்டவர்களோடு(அவர்களின் கலாச்சாரத்தின் படி) தவறான இளமையோடு சம்மந்தப்படக்கூடிய எண்ணங்களையோ அல்லது அவற்றை உருவாக்கக்கூடிய தகவல்களை, படங்களை பெற வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு இணையம் ஒரு இலகுவான ஊடகமாக பயன்படுகின்றது. நாட்கள் செல்ல செல்ல...அதன் மேல் கொண்ட மோகம் அதிகமாக அவர்கள் நீங்கள் சொல்லும் நன்மைகளை விட்டு அவற்றையே நாடத்தொடங்குவார்கள்? இதை நீங்கள் மறுப்பீர்களா?? இல்லை இதற்கும் அவர்களின் இளைமையே காரணம் கூற்ப்போகின்றீர்களா? அப்படியே இளமையே காரணம் என்றாலும், அந்த இளமையின் வேகத்தையும் அந்த காலகட்டத்தில் உடலிலும், மனதிலும் உருவாகும் ஒரு வித துடிப்பினை, மோகத்தினை நீக்கும் படியாகவும், அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கவும் எத்தனை ஊடகங்கள் (இதில் தமிழ் ஊடகங்களும், நீங்கள் கூறிய அதே வேற்று மொழி ஊடகங்களும் அடங்கும்) பயன்படுகின்றன?? அதே குணாதிசயங்களை சாதகமாக்கி அதனூடாக பணம் பெற எத்தனை ஊடகங்கள் வழி வகுக்கின்றன.....? இரு வகையிலான இணையத்தளங்களின் எண்ணிக்கைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்....!

இதிலே நீங்கள் யாகூ பற்றி சொல்லலாம். பட்டிமன்றங்கள் நடத்துகின்றார்கள் என்று.
அங்கே சென்று நம் தமிழ் பிரிவில் பார்த்தால் நம் இளைய உறவுகள் தாகாத வார்த்தைகளால் மற்றவர்களைத் திட்டுவது தான் அதிகம். பட்டிமன்றம் எத்தனை தடவை நடத்தியிருப்பார்கள்...? ஆனால் தினமும் தாகாத வார்த்தைகளால் சண்டை என்பது நடக்கின்றது. மேலும் இப்படியான அரட்டைகளில் கீழ்தரமான பாலியல் விடயங்கள் பரிமாறப்படுகின்றன என்று, எம்.எஸ்.என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை அறையைத் தடை செய்திருப்பதை அறிவீர்களா? இது இளைஞர்கள் இணையம் மூலம் சீரழிகின்றனர் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்தி நிற்கின்றதல்லவா!

<b>மேற்கோள்:-

சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?</b>

மறுக்கவில்லை, எதிரணித்தலைவர் அவர்களே! அதன் மறுபக்கத்தையும் பார்க்கும்படி கேட்கிறேன். புதிய உலகம்..அழகான அந்த உலகம் மட்டுமா நம் இளையோர் உருவாக்குகிறார்கள்?? இல்லையே அவர்களை அறியாமலேயே , இருக்கும் இந்த ஒரு உலகத்தினையும் மாற்றியல்லவா அமைக்கிறார்கள்...!
ஒரு வீட்டில் பிள்ளைகள் என்பவர்கள் அந்த வீட்டின் தூண்கள்!! புதிய உலகை உருவாக்குகிறார்கள் என்று உங்களைப்போல் பல புலம் வாழ் பெற்றோரும் நினைத்து எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள் கூறியது போல் ஒரு குறுகிய வட்டத்தையோ, சதுரத்தையோ அமைத்துக்கொண்டு இருந்தால், இருக்கும் இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..?

புலம் வாழ் இளம் தமிழ் சமூகம் இணையத்தால் நன்மையடைந்தால் அதை தமிழ் சமூகமும் நன்மையடைகிறது என்று...அனிதா அவர்கள் கூறினார். அவரின் கருத்தை அப்படியே நான் எடுத்துக்கொண்டால், தூண்களான இளம் சமூகம் நன்மை அடைந்து முன்னேறா விடினும் சீரழிந்து கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமில்லையா..அவை கூறிய்து போல் அது மொத்த
தமிழ் சமூகத்திற்கும் கேடு இல்லையா. ..!


நடுவர் அவர்களே! நம் இளையோர் இணையத்தால் நன்மை மட்டுமே அடையாத பட்சத்தில் அவர்களின் நன்மையில் பங்கு கொள்ளும் தமிழ் சமூகம், அதே இளையோர்கள் சீரழிந்தாலும் பங்கு பெறும் அல்லவா? பல நன்மைகளை பெற்று முன்னேறினால் பாராட்டும் நம் சமூகம் (அநேக சமயங்களில்) ஒரே ஒரு சீரழிவினையோ, தீங்கையோ பெற்றால் அதன் இரட்டிப்பு மடங்காக தூற்றும் இல்லையா....?? ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.! இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் அதற்கும் மேலான எண்ணிக்கையில் எத்தனை எத்தனை சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் , பெண்களை அவமானப்படுத்தும் கேடான படங்கள், செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் ஏன் எதிரணியினர் எண்ணிப்பார்க்கத்தவறி விட்டனர்...?(இல்லை தவற்றி விட்டனரா..?)

இறுதியாக அனிதா அவர்கள்
<b>டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !</b> என்று அடித்து கூறினார்.
புலம் பெயர் நாடுகளில் எத்தனை தடவைகள் இப்படியான சடங்குகள் நடை பெறுகின்றன? அதுவே எத்தனை வீடுகளில் கணணிகள் இருக்கின்றன?
சடங்குகள் மூலம் இப்படியானவற்றை தவறான பாதைக்கு இழுத்துச்செல்லக்கூடிய தகவல்கள் பரிமாறப்படுவதிலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கணணி முன்னால் அதிகமாக பரிமாறப்படுகின்றன என்பதை நீங்கள் அறியவில்லையா...? அதனால் வரும் விளைவுகள் இன்னும் அதிகமானதென்பதை நீங்கள் உணரவில்லையா....?


இறுதியாக நடுவர் அவர்களே! எத்தனையோ காலமாக நம் ஈழ மக்களுக்கும் நன்மையே தந்த அந்தப்பெரும் கடல் கூட ஒரு நாளில் அத்தனை நன்மைகளுக்கும் பதிலாக ஈடற்ற நம் உறவுகளின் உயிர்களை அள்ளிச்சென்றது. நன்மைகளை பெறலாம்...வேறு வழிகளில்! உடலினை விட்டுச்சென்ற உறவுகளின் ஆருயிர்களை திருப்பிப்பெற முடியுமா..? அதே போலவே இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல். நன்மைக்கு பதிலாக நம் இளையோர்களின் இளமையும் இணைந்து அவர்களின் ஈடற்ற, திருப்பி பெற முடியாத எதிர்காலத்தை சீரழிக்கின்றது...என்று வருத்தத்தோடு கூறி......

இந்த அருமையான பட்டிமன்றத்தில், வாதிட எனக்கு வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து, நம் அணியினர் வெற்றி பெற இன்னும் பல சத்தான கருத்துக்களோடு காத்திருக்கும் நம் அணி உறுப்பினர்களை வாழ்த்தி , மலரப்போகும் இப் புத்தாண்டு உங்களுக்கும், எல்லோருக்கும், ஒரு இனிய ஆண்டாக அமைய இறைவனை வேண்டி..., விடை பெறுகின்றேன்.


<span style='font-size:25pt;line-height:100%'><b>நன்றி வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </b></span>


- tamilini - 12-31-2005

'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள் என்ற அணிக்காக தனது கருத்தை வைத்த ப்ரியசகி அவர்கள். முன்னால் கருத்தை வைத்துச்சென்ற அனித்தாவின் கருத்துக்களையும் வெட்டிப்பேசி தனது கருத்தையும் கூறிச்சென்றிருக்கிறார். அதுமட்டும் அல்ல உள்ளங்களை உருக்கும் உண்மை ஒன்றையும் பகிர்ந்துவிட்டுச்சென்றிருக்கிறார். பல ஆண்டுகளாய் வழங்களை அள்ளித்தந்து நமக்கு நன்மையே செய்து கொண்டிருந்த கடற்தாயவள் ஒருசில நொடிகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுவாங்கிச் செல்லவில்லையா?? அதே போல் தான் இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல் சீரழிக்கவும் செய்கின்றது என்று தனது விவாதத்தை உறுதியாக வைத்துச்சென்றிருக்கிறார். அவரது கருத்தில் இருந்து...


இணையத்தின் பயனிற்கு மிகையானது எதுவும் இல்லை அதை தாங்கள் மறுக்கவில்லை ஆனால் பயனுள்ள அந்த இணையமானது எமது இளையோரை சீரழிக்கிறது என்பதே எமது விவாதம் அதை ஏனோ எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் அவர்களுக்கு புரியவைப்பதை கண்ணான கடமையாக கொண்டுள்ளதாய் கூறிச்செல்கிறார் ப்ரியசகி. (கடமை உணர்வைப்பாருங்கள் கண்ணான கடமை ம் ம் )..


<b>தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, போராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்) </b>

ப்ரியசகியின் விவாதத்தில் தொடர்வது அனித்தாவின் கருத்துக்கான பதில். அதாவது தாயகத்தில் வரும் இளையோர் நாட்டுப்பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் நாட்டுநிலமைபற்றிய தகவல்களுக்கே முன்னுரிமை அழிக்கிறார்கள். ஆனால் போராட்டம் பற்றி செவிவழிகேட்டவர்கள் தான்(என்றால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் வந்தவர்களை கூறுகிறார் போலும்) கேளிக்கைகளுக்காக இணையத்தைப்பயன்படுத்துகிறார்கள் என்கிறார். அப்போ தாயகத்தில் இருந்து வரும் இளையோர்கள் கேளிக்கைகளுக்காக இணையத்தைப்பயன்படுத்துவது குறைவு பிரியோசனமாய் பயன்படுத்திறார்கள் என்கிறீர்களா..?? எதிரணியினருக்கு பிடிவிட்டுப்போகிறாரோ??

ஒருசில டொலர்களுடன் நாடுகள் கடந்து வந்து புலத்தின் புதிய சூழலில் தம்மை நிலைநிறுத்திய பெற்றோர்கள் அறியாமையுள்ளவர்களா அப்படிக்குறைகூறாதீர்கள் என்கிறார் ப்ரியசகி. அவர்களுக்கு கணணிபற்றிய அறிவின்மையை அறியாமையாக்காதீர்கள். அதை இளையோர்கள் தமக்கு சாதகமாய் மாற்றி சீரழிகிறார்கள் என்கிறார்..

அது சரி கணணிபற்றிய அறிவின்மையுடன் ஏன் இருக்கவேண்டும். இங்கு தானே எல்லாவற்றையும் படிப்பதற்கு வசதிகள் இருக்கிறது பெற்றார்கள் படித்தால் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் திறனைப்பெறுவதோடு பிள்ளைகளை வழிநடத்தவும் வசதியாக இருக்கும். புலம்பெயர்வாழ் பெரியவர்கள் அந்த அந்த நாடுகளில் உள்ள மொழிகளை படித்து. கணணி இணையம் போன்றவற்றையும் படித்து தங்களையும் தங்கள் அறிவையும் வளர்த்துக்கொள்ளக்கூடாதா..?? தமது தேவைகளை நிறைவேற்ற மொழிபெயர்ப்பிற்காய் அடுத்தவரை அழைக்கும் நம்மவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சரி அதுபோக


ப்ரியசகி தனது கருத்தில் ஒன்றைச்சுட்டிக்காட்டியிருக்கிறார். இளையோர்கள் வளர்ந்து வருபர்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள். பிறர் செய்வதை தாங்களும் செய்ய எண்ணுவார்கள் என்கிறார். இது எவ்வளவு சாத்தியம். சுயசிந்தனைத்திறனற்றவர்களா தமிழ் இளையோர் (சிறுவர்களா பிறர் செய்வதை தானும் செய்ய??) பார்ப்போம் எதிரணியினர் இதற்கு எப்படி கருத்தை வைக்கிறார்கள் என்று.

இன்னொன்றைச்சொல்கிறார் இணையம் மூலம் பிறமொழித்தளங்களை பயன்படுத்துபவர்கள் பிற கலாச்சாராத்தையும் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது இதனால் எமது கலாச்சாராத்தோடு ஒன்றாகாத தன்மை உண்டு என்கிறார். பார்ப்போம் இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா..?? இணயைத்தின் மூலம் மற்றைய கலாச்சரத்தை பின்பிற்ற முடியுமா?? அது எவ்வளவு சாத்தியம்?? எதிரணியினர் கேள்விகேட்பார்களா எதிர்பார்த்தபடி..

ம் இணையம் மூலமான வேற்று நாட்டவர்களுடனான தொடர்பானது நமது இளையோரிற்கு தவறான படங்கள் மற்றும் தகவல்களைப்பெற வழிவகுக்கும் என்று ஒரு முக்கியமான கருத்தை வைத்துள்ளார் பரியசிகி. இன்னும் ஒன்றைச்சொல்கிறார். இளமையின் வேகத்தால் உடலிலும் மனதிலுலும் உருவாகின்ற துடிப்பினை இந்த இணையம் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது என்கிறார். இதை எதரணியினரால் மறுக்கமுடியுமா..?? இணையத்தில் ஆபாசப்படங்கள் நிறையவே இருக்கின்றன அவை இணையம் மூலம் எமது இளையோர்களை சென்றடைகிறது என்கிறார் இது சீரழிவில்லையா இதை மறுக்க முடியுமா?? இதை தடுக்க எத்தனை ஊடகங்கள் உண்டு என்று கேள்வி எழுப்பும் பரியசிகி. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் தான் நிறைய உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.

இது மட்டுமா பொன்னான நேரங்களை மண்ணாக்கிறார்களே இது சீரழிவில்லையா..??

புலம்பெயர் தமிழ் இளையோர் நன்மை அடைந்தால் தமிழ்சமூகமும் நன்மை அடைகிறது அதே போல் சீரழிந்தால் யாருக்குக்கேடு எமது தமிழ்சமூகத்திற்கே.. ஆகவோ நன்மை அடைந்து நாங்கள் முன்னேறா விடினும் சீரழிந்து போகாமல் இருக்கவேண்டாமா என்கிறார் பிரியசிகி. இதை ஏற்றுக்கொள்வார்களா..?? எதிரணியினிர். நன்மை தீமை இரண்டையும் கடந்து சாதிப்பது அல்லவா சாதனை. சீரழிவுகள் இருக்கிறது என்பதற்காக இணையத்தை ஒதுக்கமுடியுமோ..?? அப்படி வினவப்போகிறார்களா ?? இல்லை ஒத்துப்போகப்போகிறார்களா..?? பொறுத்திருந்து பார்ப்போமே..

இணையத்தை பிரியோசனமாய் பாவித்து முன்னேறிய ஒருசிலரை உதாரணம் காட்டும் அதே வேளை ஏன் மற்றவர்கள் முன்னேறவில்லை என்கிறு கேள்வி எழுப்புகிறார் பிரியசகி. (இனி முன்னேறிய எல்லாற்றை பேரையும் இதில எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்ன?? ) அத்தோடு இணையத்தில் நடக்கின்ற சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள், பெண்களை அவமானப்படுத்தும் செய்திகள் மற்றும் படங்கள் வருவதற்கான காரணங்கள் என்ன இதை சீரழிவில்லை என்கிறீர்களா என்று கேக்கிறார் பிரியசகி...

ஆபாசப்படங்களை இணையத்தில் போட்டுவிட்டால் ஒரு சில நிமிடங்களில் உலகம் எங்கும் பரவிவிடும். இதுவே இணையம் இல்லாவிடின் இப்படி பரவமுடியுமா..?? இது இணையம் தந்த கொடையா சாபமா.? எங்கே இணையத்தால் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தரப்பினர் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.


டேற்றிங் இணையத்தின் ஊடகவே அதிகமாக பரவுகிறது என்பதற்கு உதாரணத்தை வைத்துள்ளார். இளையோர் பங்குபற்றும் சடங்குகள் இங்கு அதிகம் நடக்கிறதா..?? ஆனால் கணணி எல்லார் வீட்டிலும் இருக்கிறது அதன் மூலம் இலகுவாக பரவலடைகிறது என்கிறார். இங்க தான் இன்னொன்றைச் சொல்லவேணும் நமது புலம் பெயர் இளையோர் அடிக்கடி செய்யும் ஒன்று கூடல்கள் நிறைய இருக்கின்றனவே... கோவில் திருவிழாக்கள்.. தமிழர் விளையாட்டு விழாக்கள்.. மலிவு விற்பனைகள் என்று பலவிடயங்கள் இருக்கே இதற்கு இளைஞர்களும் போகிறார்களே.. அதுக்க என்ன சொல்றீங்க..?? அப்படி என்று கேட்பார்களா எதிரணியினர். பார்ப்போமே..

கடைசியாக இணையம் பற்றி கசப்பான உண்மை என்னவென்றால். இந்த இணையச்சற்றிங் மூலம் பாதிக்ப்படுவது தமிழ் இளையோர் மட்டும் அல்ல பல்நாட்டு பல்மொழி இளையோரும் தான். எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அண்மையில் பிரித்தானியாவைச்சேந்த ஒரு யுவதி இணைய நண்பரைத்தேடி வேறு நாட்டிற்குச்சென்று பின்னர் அவரை மீட்டுவந்ததாக. இப்படி பற்பல நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இவை எந்த அளவிற்கு எமது இளையோரை அதாவது புலம்பெயர்வாழ் தமிழ் இளையோரை சீரழிக்கிறது. அவர்களும் இப்படி நாடு விட்டு நாடு இணைய நண்பர்களை அல்லது நண்பிகளைத்தேடிச்செல்கிறார்களா..?? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து கருத்து வைத்துச்சென்ற பிரியசகியைத்தொடர்ந்து நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 01-01-2006

பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கும் செல்வமுத்து ஜயா... மற்றும் தமிழினி அக்காவுக்கும் எனது பணிவான வணக்கங்கள். எமது அனைத்து கருத்து பரிமாற்றத்துக்கும் வழிசமைத்துத் தந்த மோகன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைத்த உறவுக்கும்... பின்னணியில் பட்டி மன்றம் சிறப்பாக நடக்க காரணியாக இருக்கு சகோதரி ரசிகை அவர்களும் எனது வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அணித்தலைவர்கள்.... மற்றும் எனது , எதிர் அணி உறுப்பினர்களுக்கும்... பார்த்துப்பயன் பெறும் உறவுகளுக்கும் எனது வணக்கத்தையும்.. புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு எனதுவாதத்துக்கு வருகிறேன்.

<b>பிரியசகி கூறியது:-
இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! </b>

நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் யத்தையும் சேர்த்து கொல்வது எவ்வகையில் பொருத்தமாகும்??


<b>பிரியசகி கூறியது:-
தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.</b>

தவறான கருத்து இது... தாயகத்தில் இருந்து வருபவர்கள் ஒப்பீட்டுரீதியில் தமிழ்கலாச்சாரங்களில் ஈடுபாட்டுடன்.... போராட்ட உணர்வுகளுடன் வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களை குறைகூறுவது தவறு. தாயக உணர்வுகளுடன் கூடிய நிகழ்வுகளில் பங்கேற்கும் இளையோர்களில் எத்தனை தமிழே அதிகம் பேசத்தெரியாத தமிழ் இளையோர்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக சுனாமி நேரத்தில் நிதி சேகரிப்பில் எத்தனை பேர் ஈடு பட்டார்கள்.

இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.



நடுவர் அவர்களே... புலம் பெயர்நாடுகளில் இயந்திரமயமான ஒரு இளைஞனின் வாழ்க்கையில்.... அவனது வாழ்வை மேம்படுத்தவும்... இலகுபடுத்தவும்... ஒரு இணையமானது எப்படி உதவி புரிகிறது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்... எனது அணித்தலைவர் பல கருத்துக்களை கூறிய போதிலும்.... நானும் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.

காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.

வெளியில் செல்லும் போது... காலநிலை தகவல் மற்றும் போக்குவரத்து சாதனங்கள்.. பாதை விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

பாடசாலை நேர அட்டவணை மாற்றங்களை அறிந்துகொள்ளவும்..... பாடசாலை நேரம் தவிர ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான இலகுவான ஒரு ஊடகமாகவும்.... நினைத்த நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு நோட்ஸை பெற்று கொள்ளவோ... ஒரு சந்தேகத்தைதீர்த்துக் கொள்ளவோ..வீட்டுப்பாடங்களை செய்து அனுப்பவும்.. அவற்றுக்கான பிழைதிருத்தங்களை பெற்றுக்கொள்ளவும் இந்த இணையம் பயன்படுகிறது.

யாகூ சாட் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எதிர் அணியினர் இங்கே கவனிக்கவும்.... சாட் மூலமாக வீட்டுப்பாடங்களை நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி செய்கிறார்கள் ( குரூப் ஸ்ரடி ) பாடவிபரங்களை இணையங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

குடும்பத்தை பிரிந்துவாழும் இளையோர் குடும்பத்துடன் இணைந்திருக் சாட் மற்றும் சாட்டுக்கு இணையாக சொல்லகூடிய தொலை பேசி சேவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல... புதிய உறவுகளை பற்று அதனால் பயன் அடைபவர்கள் எவளவு பேர் இருக்கிறார்கள். உதாரணமாக.. இந்த பட்டி மன்றம் சிறப்பாக நெறிப்படுத்தபடுவது சாட் மூலமே.... நாம் இணையத்தில் பெற்றுக்கொண்ட உறுவுகளுடன் சேர்ந்தே என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

<b>எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.</b>

ஆகா அப்படியா?? சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா?? இது பற்றி பிரியசிக்கு தெரியாதா??

எத்தனையோ நல்லவிடயங்கள் இருக்கையில்... எதோ ஒரு உறுதிப்படுத்தமுடியாத தகவலை கூறி தனது கருத்தை கூற முற்படுகிறார் சகி....


மேலும்.........எதை படிக்கலாம் என்று யோசிப்பவர்கள்.. அவற்றை தெரிவு செய்யவும்.... அவற்றுக்கு விண்ணப்பிக்கவும்... படித்து முடித்தோர் நல்லதொரு வேலையினை தேடிப்பெற்றுக்கொள்ளவும்.. அவற்றுக்கு விண்ணப்பிக்கவும். இணையத்தை பயன் படுத்திக்கொள்ளவில்லையா??

மேலும் வங்கி நடவெடிக்கைகள்.. பிரயாண ஒழுங்குகள்... டிக்கட் செய்தல்... பொருட்களை சந்தைப்படுத்தவும்... கொள்வனவு செய்யவும்... வாழ்த்துகளையும் கடிதங்களையும் அனுப்புதல் பெற்றுக்கொள்ளுதல்... சிறந்த வாழ்வு துணையை பெற்றுக்கொள்வது போன்ற எத்தனையோ வகையான விடயங்களுக்கு இந்த இணையம் பயன்படவில்லையா??

எதிர் அணியினர் கேட்கலாம்.. இவை எல்லாம் இணையம் இல்லாமலே சீராக நடக்கவில்லையா என்று. நடந்தன அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால்... மற்றய ஊடகங்களைவிட.... விரைவாக.. இலகுவாக... மலிவாக... நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அத்துடன் இவ்வாறான அனைத்து விடயங்களுக்கும் பயன்பட்ட மற்றைய ஊடகங்களை பின் தள்ளிவிட்டு இணையம் முதல் நிலையில் இருக்கிறது. இதனால் நமது இளையோர் நேரத்தையும் பணத்தையும் குறைவாக செலவு செய்து இலகுவாக தமது இலக்குகளை அடைவதற்கு இணையம் வழி செய்கிறது என்று கூறுகிறேன்.

வேலைச்சுமையுடன் வரும் ஒரு இளைஞம் ரிலாக்ஸ் பண்ணுவதற்கு.. தனது சுமைகளை மறந்து அடுத்த நாள் உற்சாகமாக தனது வேலையை செய்வதற்கு ஒருபொழுது போக்கு சாதனமாக இணையம் பயன்படுகிறது ( பாடல்களை படங்களை செலவின்றி பெற்றுக்கொள்ளல், அரட்டை மற்றும் பல.... )

இணையத்தில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்கள்... தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்... அதே பாதையில் பயணிக்கும் நண்பர்களை இனம்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்பட்டு இலகுவில் தமது இலக்குகளை அடையத்துடிக்கும் இளைஞர்களை இங்கு கூறவிரும்புகிறேன்.

இனையத்தளங்களின் மூலம் வருவாயை பெற்று ஒரு சைட் பிஸினெஸ் செய்பவர்கள்.. விளம்பரபடுத்தலில் ஈடுபடுபர்கள்.. இதனால் தமது பிஸினெஸை விரிபடுத்திக்கொள்பவர்கள் எத்தனை பேர்??

அடுத்து.. புலம்பெயர் நாடுகளில் .... ஈழத்து உணர்வுகளுடன் நாம் நிலைத்திருந்து... நமது ஈழப்போராட்டத்தை திறனாக மேற்கொள்ள, எமது உணர்வுளை வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்த நமது இளையோர் பலபல இணைத்தளங்களை அமைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இந்த எதிரணியினருக்கு தெரியவில்லையா?? இப்போது தமிழ் மொழியில் நமது பண்பாட்டை.. நமது
போராட்ட த்தை கூறிநிற்கும எத்தனையோ இணையத்தளங்களை பார்த்திருந்தால் ......

<b>பிரியசகி கூறியது:-
ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.!</b>

....பிரியசகி இப்படி கூறியிருக்கமாட்டார். பாவம் அவர் கூறியது அவரது அறியாமை. மற்றய எத்தனையோ அண்ணாமார்கள் பின்னணியில் செயல்படுகிறார்கள் என்பதை கூறி.. இனியாவது பின்னணியில் நிற்கும் அண்ணாக்களை கண்டு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறேன்.

இவ்வாறாக கல்வி, பொழுதுபோக்கு, வர்த்தகம், தொடர்பாடல், விளம்பரம் போன்ற இன்னும் பல விடயங்களில் நமது இளையோர் இணையத்தின் மூலம் பல நன்மைகளை பெற்று தம்மை மெருகேற்றி விருகிறார்கள். இவ்வாறாக பயன் கொடுக்கும் ஒரு இணையத்தை.. ஒரு சிலர் சரியான வழி நடத்தலின்றி.. அல்லது தமது தனிப்பட்ட பலவீனங்களால் கேட்டுப்போவதை சாட்டி குறை கூறுவது எந்தவகையில் நியாயமானது??

<b>பிரியசகி கூறியது :-
இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..? </b>

இணையத்தை பயன்படுத்தி முன்னேறவிட்டாலும் பறவாய் இல்லை.... வரும் தீமைகளை தடுத்து நிறுத்துவோம் என்று சின்னபிள்ளைத்தனமாக சொல்கிறார் பிரியசகி.

பாடசாலைக்கு பிள்ளையை அனுப்புகிறோம். அங்கே பிள்ளைகளுக்கு எத்தனை தீயவை காத்திருக்கிறது. தீயவற்றை பழகுவதற்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இதற்காக ஒரு பிள்ளைக்கு பாடசாலை தேவை இல்லை. பிள்ளை படிக்கவிட்டாலும் பறவாய் இல்லை. பிள்ளை நல்லபிள்ளையாக இருக்கட்டும் என்று பிள்ளையை பாடசாலையில் இருந்து மறித்துவிடுவதற்கு ஒப்பானது சகி கூறியது. மேற்கு நாடுகள் படுவேகமாக முன்னேறியதற்கும்... நமது & நமது அயல் நாடுகள் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதற்கு இப்படியான ஒரு மனப்பாங்கே காரணம் என்பதையும் கூறவிரும்புகிறேன்.


<b>பிரியசகி கூறியது:-
இளையோர்கள் வளர்ந்து வருபர்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள். பிறர் செய்வதை தாங்களும் செய்ய எண்ணுவார்கள்....

இணையம் மூலம் பிறமொழித்தளங்களை பயன்படுத்துபவர்கள் பிற கலாச்சாராத்தையும் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது இதனால் எமது கலாச்சாராத்தோடு ஒன்றாகாத தன்மை உண்டு என்கிறார்.

இணையம் மூலமான வேற்று நாட்டவர்களுடனான தொடர்பானது நமது இளையோரிற்கு தவறான படங்கள் மற்றும் தகவல்களைப்பெற வழிவகுக்கும்

ஆபாசப்படங்களை இணையத்தில் போட்டுவிட்டால் ஒரு சில நிமிடங்களில் உலகம் எங்கும் பரவிவிடும்.

டேற்றிங் இணையத்தின் ஊடகவே அதிகமாக பரவுகிறது.....</b>

இளையோர் தம்மை முன்னேற்றிக்கொள்வதற்கு துணைபுரியும் கல்விநிறுவனங்கள்.. தொலைக்காட்சி... சஞ்சிகைகள்... புத்தகங்கள் வரிசையில் இப்போது இணையமும் சேர்ந்திருக்கிறது.... மற்றய ஊடகங்களி பின் தள்ளிவிட்டு முன்னணியிலும் நிற்கிறது. இணையத்தில் மட்டும் அல்ல.. மற்றய ஊடகங்களிலும் நன்மை தீமை உள்ளது.

பிரியசகி கூறிய தீமைகள் இணையத்தில் மட்டும் இல்லை..... புலம் பெயர்நாடுகளில் பாடசாலைகளில், விளையாட்டு கழகங்களில், இப்படியான சந்தர்ப்பங்கள் இளையோர்க்கு ஏற்படுவதில்லையா?? அதற்காக பாடசாலைகளையோ அவை போன்ற ஊடகங்களை குறைக்கூற முடியுமா??

இணையத்தை பயன்படுத்தி இளையோர் கெட்டுப்போவதற்கும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் கெட்டுப்போவதற்கும்... சிறந்த வழிகாட்டல் இன்மை, கட்டுப்பாடு இன்மை, கண்ணி பற்றிய பெற்றோர்களின் அறியாமை அல்லது அவர்களுடைய மனித பலவீனம், ஊக்கமின்மையே காரணமாக அமைகிறதே தவிர இணையம் என்கிற ஊடகம் அல்ல என்பதை கூறிக்கொண்டு.

பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலாவது... நமது அணியினரின் கருத்துக்களை உள்வாங்கி இணையத்தை சிறந்த முறையில் எதிர் அணி இளையோர் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

எதிர் அணியில் இருக்கும் பெற்றோர்கள்...இணையம் எனும் கடலில் தன்னை பாதுகாத்துகொள்ள நீச்சல் பழகும், இணைய கடலை பயன்படுத்தி தனதுவாழ்வை கரையேற்றப்போகும் உங்கள் பிள்ளைகளை முற்றாக தடுத்து நிறுத்தி அவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளாது... அவர்கள் நீச்சல் பழகும்வரை அவர்களின் இடுப்பில் கட்டுப்போடுங்கள்.... அவர்கள் சரியான பாதையில் நீந்தி செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டலும்.. அவர்களின் தனிப்பட்ட அக்கறை.. பலவீனங்கள் தான்.. அவர்கள் கெட்டுப்போவதற்கு காரணமேயன்றி... அவர்கள் முன்னேற்றதுக்கு வழிசமைக்கும் இணையம் காரணமல்ல என்று கூறிக்கொண்டு...

நானும் அனித்தாவும் வெறும் சிப்பாய்கள் தான்... நாம் கொண்டுவந்தது வெறும் மணியோசைத்தான்.... எமது அணிக் கொமாண்டோக்கள் உங்கள் தாக்குதல்களை சிறப்பாக முறியட்டிக்க எமது பட்டியலில் கீழே இருக்கிறார்கள் என கூறி.....

எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை பெற்று தந்த இணைய பொறுப்பாளருக்கு நன்றி கூறி....

பணிவாக விடைபெறுகிறேன். நன்றி.


- tamilini - 01-01-2006

இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் இளையோர் நன்மையே அடைகிறார்கள் என்ற தலைப்பில் தனது கருத்தை மிக அழகாக வைத்துச்சென்றார் விஸ்ணு. ( நேரில பட்டி மன்றம் வைச்சா அடிபிடி நடக்குமோ??)

பிரியசகியின் கருத்தை வெட்டிச்சென்ற விஸ்ணு மனக்கட்டுப்பாடின்மையே ஒருவிடயத்திற்கு அடிமையாவதற்குக்காணரம். மனக்கட்டுப்பாடற்றவர்கள் தான் இணையத்திற்கு அடிமையாகிறார் என்கிறார். அலைபாயும் மனசுடையவர்கள் இளையோர் எதையும் கையாண்டு பார்க்கவேண்டும் என்று எண்ணும் வயசு என்கிறார்கள்.. இளையோரிடம் மனக்கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியுமோ..?? பார்ப்போம் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன கருத்து வருகின்றது என்பதை

இணையமானது சிறுவயதில் இங்கு வந்த இளையோருக்கு தாயக உணர்வை ஊட்டும் பணியைச்செய்கிறது என்று விஸ்ணு கூறுகிறார்.. குறிப்பாக TYO என்கின்ற ஒரு இணையத்தை சுட்டிக்காட்டுகிறார்.. பல்லாயிரக்கணக்கான இணையங்கள் இருக்கையில் ஒரு சில இணையங்கள் தாயக உணர்வை ஊட்டினால் போதுமா என்கின்ற கேள்வியை எழுப்புவார்களோ எதிரணியினர்..??

உடனுக்குடன் உலகச்செய்திகளைமட்டும் அல்ல தாயகத்துச்செய்தியையும் அறிய இணையம் உதவி செய்கிறது. இது நன்மையில்லையா..?? என்கிறார் விஸ்ணு. அது தானே இது நன்மையில்லையா என்ன..??

பத்துப்பேர் மத்தில் பூரணமான ஒருவனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இணையம் உதவுகிறது என்கிறார்.?? எப்படி செய்தியை உடனுக்குடன் அறிந்தால் மட்டும் பூரணத்துவம் அடைந்துவிட முடியுமா..?? பதில் வருகிறதா பார்ப்போமே..??


காலநிலை அறிவது பள்ளித்தேவைகளை நிறைவேற்றுவது என்று எத்தனையோ தேவைகளுக்கு இந்த இணையம் பயன்படுகிறது என்கிறார் விஸ்ணு.

இன்னொன்று... பள்ளித்தேவைகளுக்காக (ஒப்படைக்காக) இணையத்தில் தகவல்களைத்தேடும் மாணவர்கள் இணையத்தில் உள்ளவற்றை அப்படியே பிரதி பண்ணி அதனை ஆசிரியரிடம் தங்கள் ஆக்கமாக கொடுக்கிறார்கள். அப்படிக்கொடுக்கையில் அதாவது இன்னொருவருடைய அவரது ஆக்கத்தை பிரதி பண்ணிக்கொடுப்பதால் குறிப்பிட்ட மாணவனுக்கு என்ன பயன்..?? குறிப்பிட்ட மாணவன் குறிப்பிட்ட பாடத்தை தானாய் படித்து அதற்குரிய விடையைத்தேடாது பிறர் எழுதியுள்ளதை பிரதி பண்ணிக்கொடுப்பதன் மூலம் அவன் அறிவு வளர்கிறதா..?? நடைமுறை ரீதியாக தான் படித்ததை பிரதியிடவேண்டிய சூழ்நிலில் அவனால் என்ன செய்யமுடியும்..?? குறிப்பாக கூகுல் போன்ற இணையத்தில் பாடத்தின் தலைப்பை எழுதிவிட்டால் தேவையான விடயங்கள் வரும் அவற்றை கொப்பி பண்ணிக்கொடுக்கும் போது பயன் என்ன..?? மாறாக மாணவன் வாசித்து அதை விளங்கிக்கொண்டு தனது சொந்த பதிலை தானாய் எழுதும் போது அவனது அறிவு விருத்தியாகிறது. (பலர் இதையே செய்கிறார்கள் ஒருசிலர் விதிவிலக்கு..) இது நன்மையா என்ன..??

வங்கி நடவடிக்கைகள் பிரயாண ஒழுங்குகள் போன்றவற்றை இணையத்தின் ஊடாக மிக இலகுவாக செய்துமுடிக்கலாம் என்பதைச்சுட்டிக்காட்டியுள்ளார் இது நன்மை தான்.

(ஆனால் இப்படி இருந்த இடத்தில இருந்து எல்லாத்தையும் செய்துவிட்டால் மனிதன் சோம்பேறி ஆகமாட்டானா என்ன). எங்கே எதிரணியினர் என்ன சொல்லப்போகிறார்கள்.

எங்கள் இளையோர் இன்னொன்றை செய்யவும் இந்த இணையம் வழிவகுக்கிறது. வங்கி நடவடிக்கைகளை மற்றும் இணையத்தில் வங்கித்தகவல்களை பயன்படுத்தும் நிறுவனங்களை கக் பண்ணி அதனால் பணம் ஈட்டவும் வழிவகுக்கிறது. இது கூட நன்மை தானா..?? எங்கே பதில்


வேலைச்சுமையுடன் வரும் இளையோர் ஓய்வெடுப்பதற்கு இணையம் பொழுதுபோக்கு சாதனமாக அமைகிறது என்கிறார் விஸ்ணு.. பாடல்கள் படங்கள் போன்றவற்றை இலவசமாக இறக்க முடியும் என்கிறார். ம் யாரோ கஸ்டப்பட்டு படம் எடுக்க அதை இணையத்தில் போட்டு அவர்கள் உளைப்பில மண்ணை அள்ளிப்போட்டு சட்டத்தையும் மீறுவது நன்மையா இது சீரழிவில்லையா என்று கேட்பார்களா மற்ற அணியினர் பார்ப்போம்.

சிலர் சரியான வழிநடத்தலின்றி அல்லது தனிப்பட்ட பலவீனம் காரணமாக சீரழிந்து போவதை பல நல்ல விடையங்களை வாரிவழங்கும் இணையத்தை குறை கூற முடியுமா என்கிறார் விஸ்ணு..?? சீரழிவதற்கு காரணம் எதுவானாலும் பயன்படுத்தும் ஊடகம் இணையமாக இருக்கையில் குறை கூறாமல் என்ன செய்வது ..??

<b>இணையத்தை பயன்படுத்தி இளையோர் கெட்டுப்போவதற்கும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் கெட்டுப்போவதற்கும்... சிறந்த வழிகாட்டல் இன்மை, கட்டுப்பாடு இன்மை, கண்ணி பற்றிய பெற்றோர்களின் அறியாமை அல்லது அவர்களுடைய மனித பலவீனம், ஊக்கமின்மையே காரணமாக அமைகிறதே தவிர இணையம் என்கிற ஊடகம் அல்ல என்பதை கூறிக்கொண்டு.
</b>

கடைசியாக ஒரு கருத்தை உறுதியாக வைத்துச்சென்றிருக்கிறார். சீரழிவுகளிற்கு பல காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்கருத்திற்கு சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போமே..


<b>அவர்கள் நீச்சல் பழகும்வரை அவர்களின் இடுப்பில் கட்டுப்போடுங்கள்.... அவர்கள் சரியான பாதையில் நீந்தி செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டலும்.. அவர்களின் தனிப்பட்ட அக்கறை.. பலவீனங்கள் தான்.. அவர்கள் கெட்டுப்போவதற்கு காரணமேயன்றி...</b>

இளையோரைச்சீரழியக்கூடிய விடயங்கள் இணையத்தில் உள்ளன என்பதை ஒத்துக்கொண்டதாலோ என்னவோ.?? இளையோரை இடுப்பில கட்டுப்போட்டு வழிநடத்தச்சொல்றார். பார்ப்போம் எதிரணியினர் என்ன சொல்கிறார்கள் என்று.

கடைசியாக ஒரு மிரட்டல் விட்டுச்செல்கிறார்.. தாங்கள் சிப்பாய்கள் கொமாண்டோக்கள் பின்னால் வருகிறார்கள் என்கிறார். எங்கே கொமாண்டோக்களை எதிர்கொள்ளத்தயாராகுங்கள் எதிரணியினர்.

சீரழிகிறார்கள் என்கின்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். முட்டிமோதுங்கள் பார்ப்போம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 01-02-2006

<b>நீதி தவறாது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் போல அமந்திருக்கும் நடுவர் செல்வமுத்து ஜயா அவர்களுக்கும் தனது பேரிலேயே தமிழையும் தமிழ்பண்பாட்டையும் கொண்டிருக்கும் தமிழினி அம்மா அவர்களுக்கும் எனது முதல் வணக்கங்கள் (பாண்டிய மன்னன் நீதி தவறி தீர்ப்பு வழங்கியதால் என்ன நடந்தது என்பது நடுவருக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்) தேவையில்லாமல். . . . மன்னிக்கவும். . . . நல்ல கருத்துள்ள பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகைக்கும் இங்கு நடாத்துவதற்கு அனுமதியளித்த கள நிர்வாகத்துக்கும் நன்றிகள் நல்லதொரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கவேணுமெண்ட ஆதங்கத்துடன் சோழியன் அவர்களுக்கு கீழ் அணிவகுத்து நிற்கும் தோழர்களுடன் நானும் இருப்பதில் பெருமையடைகிறேன் எதிர் தரப்பில் பரிதாபமாக ஏண்டா இதுக்கை வந்து மாட்டுப்பட்டம் எண்டு முழிபிதுங்க அமந்திருக்கும் எமது எதிரணியினருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்

நடுவர் அவர்களே எனக்கு முன்னால் பேசிய விஷ்ணுதம்பி சிப்பாய்கள் கொமாண்டோ என்று சொல்லி ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வந்து எமது அணியினரையும் உங்களையும் பயப்படுத்தப்பாக்கிறார் இதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேணும் எண்டு கேட்டுக் கொள்கிறேன்
திடீரெண்டு அணியிலை கடைசி ஆட்டக்காரர் முன்னுக்கு வந்தால் எதிரணியினருக்கு ஒரு பயம் இருக்கும்தான். . . . சரி இண்டைக்கு தலைப்பு இணையம் புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு நன்மையை தருகுதா அல்லது தீமையை தருகுதா என்பதே.. . . .முதலில் இந்த தலைப்பை ஏன் வந்தது என எதிர் தரப்பினர் புரிந்து கொள்ளவேணும் அவர்கள் கூறுவதுபோல இணையத்தினால்; நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்பிடி ஒரு தலைப்புக் கீழ் நாங்கள் வாதிடத் தேவையில்லையே அவர்கள்தான் என்ன செய்வார்கள் அங்கை பாருங்க. . .இருக்கிற எல்லாரும் சின்னஆட்கள் இந்த வயசிலை தாங்கள் பிடிச்சதான் சரி எண்டு நிப்பார்கள் எங்கள் அணியில் இருப்பவர்கள் போல அறிவான அனுபவசாலிகளின் கருத்துக்களை அவர்கள் காலவோட்டத்தில் உள் வாங்கி தங்களைத் திருத்திக் கொள்ளுவார்கள் எண்டு நம்புகிறேன்

எதிரணியில் எனக்கு முன்னம் வந்த விஷ்ணு தம்பி [b]இணையத்தில் சீரழிவுகள் இருக்குது தான் ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் கெட்டுப் போவதுக்கு சந்தர்ப்பம் இருக்கு</b> எண்டு கூறிச் சென்றார் அப்ப அவரே ஒத்துக் கொள்கிறார் இந்த மனக்கட்டுப்பாடு எங்கடை இளைஞர் இடத்தில் இருக்கிறதா எண்டதுதானே பிரச்சனையே எதை பாக்கப்பிடாது எண்டு சொல்லுகிறோமோ அதைதான் முதல் போய் பாத்துவிட்டு மற்றவேலை பார்ப்பார்கள் அந்த இளமைத் துடிப்பால் அதிகம் ஈடுபடுபவர்களே அதிகம் என்றே நாம் வாதாடுகிறோம் சரி அப்பிடி மனக்கட்டுபாடோடு சாமியாரைப் போல இருந்தால் தம்பியனுக்கு ஏதோ வருத்தம் எண்டு வைத்தியரிட்டை போற பெற்றோரைத்தானே பாத்திருக்கிறம்

இன்னெண்று குறிப்பிட்டார் <b>சிறந்த வாழ்க்கைத்துனையை பெற்றுக் கொள்ள இணையம் உதவி செய்கிறது </b>எண்டு ஜயா. . .குறிப்புப் பாத்து நேரை போய் பெம்பிளையும் பாத்து பத்துப் பேரிட்டை விசாரித்து செய்யிற கலியாணங்களே பிச்சுக்கிது இந்த லட்சணத்திலை இணையத்திலை போய் பெம்பிளை எடுத்தால். . . . .சிலவேளைகளில் விஷ்ணு போன்றவர்களுக்கு அப்பிடி செட் ஆகியிருந்தால் சந்தோஷம். . .அடுத்தது <b>வேலைப்பளுவால் வீடு வாற இளைஞனுக்கு இணைய அரட்டை புத்துணர்ச்சியை தருவதாக. .</b> .இது நல்ல பகிடி ஒரு இளைஞன் உற்சாகமாக திடகாத்திரமாக இருக்கவேணுமெண்டால் ஜீம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்யுங்கோ அல்லது பீச்சுப் பக்கமா போய் அப்படியே கடலை போட்டுட்டு . .மன்னிக்கவும் . . கடலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நடந்திட்டு வாங்கோ எப்பிடி மனசிலும் உடம்பிலும் உற்சாகம் வரும் எண்டு தெரியும் இதை விட்டுட்டு அறை புூட்டிப்போட்டு கணணிக்கு முன்னாலை குந்தியிருந்தால் உற்சாகம் வராது தலையிடிதான் வரும்

எதிர்தரப்பு தலைவர் கூறினார் <b>தொழிநுட்ப வளர்ச்சி இணைய வளர்ச்சி மேல் நோக்கி இருக்கவேணுமா? கீழ் நோக்கியிருக்கவேணுமா எண்டு . .</b> .நாங்கள் அதை மறுக்கவில்லை அவர்கள் சொல்லுவது போல எந்தப்பக்கத்திலையாவது வளர்ந்துட்டுப் போகட்டும் ஆனால். .அந்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கவேணுமெண்டதே எமது கருத்து அதே போல இன்னெண்டையும் குறிப்பிட்டார் <b>இளம் பெண்கள் சுதந்திரமாகவும் தமது கருத்துக்களை சொல்வதுக்கு இடமளிக்கிறது எண்டு </b>ஜயா இதுக்கு முன்னம் பத்திரிகைகளில் பெண்கள் சுதந்திரமாக கருத்துகள் எழுதவில்லையா. . ?ஆனா இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எத்தனை பெண்கள் இணையத்தின் ஊடாக எங்களைப் போல நல்லா ஆண்களை எல்லாம் கவிழ்த்திருக்கிறார்கள் எண்டு சொல்லட்டா. . .(வேண்டாம் அது வேறை பட்டிமன்றமாகப் போய்விடும்) இன்று புலத்தில் இருப்பவர்கள் பணவிசயத்தில் ஒரு குறையுமில்லாமல்தான் இருக்கிறார்கள் அவர்களின் இந்த நாகாPக வளர்ச்சியில் கணணி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கையாளப்படுகிறது. தனது பிள்ளை இணையத்தில் புகுந்து விளையாடுவான் எண்டு சொல்லிப் பெருமைப்படுகிறவர்கள் பிள்ளைகள் இணையத்தில்; எங்கை புகுந்து நிக்கினம் எண்டதை ஏன்தான் பாக்கிறார்கள் இல்லையோ தெரியேலை. . இதற்கு காரணம் சில இடங்களில் படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள் இருப்பது பிள்ளைகளுக்கு வசதியாகப் போய் விட்டது அல்லது வெளிநாட்டு நாகாPகத்தில் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது அழகில்லை எண்டு எண்ணமும் சில பெற்றோரிடம் இருக்கலாம் இப்பிடி அளவுக்கு அதிகமான சுதந்திரமும் கவனிப்பாரற்று இருப்பதாலும் இளைஞர்கள் தவறான வழியில் இணையத்தை பயன்படுத்த உதவுகிறது

எதிர் தரப்பினர் கூறலாம் இணைய வசதி இருப்பதால்தான் இப்பிடியொரு பட்டிமன்றத்தை நடத்தக்கூடியதாக இருக்கிறது எண்டு .. வருஷத்திலை ஆத்தி பு|த்தாப்போல ஒரு நிகழ்ச்சி இதை வைத்துக் கொண்டு இணையம் நன்மையை தருகிறது எண்டு நடுவர்கள் வரமாட்டார்கள் எண்டு நம்புகிறேன் ஆனா இதிலும் ஒன்றை கவனிக்க வேணும் இங்கு கருத்தாடுபவர்களின் உண்மையான திறமையை எங்களால் அறிய முடியுமா? மேடையில் பேசுவதுக்கும் இதுக்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்வீர்கள்தானே இந்த இணைய வசதி ஒரு துடிப்புள்ள இளைஞனை நாலு சுவத்துக்கு இருந்து தனிய சிரிச்சுக் கதைப்பது பார்பவர்களுக்கு பைத்தியக்காரனோ என எண்ண வைக்கிறது எண்டு சொன்னாலும் தவறில்லைதானே. . ஒரு தங்கை குறிப்பிட்டா <b>இணையத்தளங்களில் இருக்கும் ஆபாசப்படங்கள் புத்தங்களில் இல்லையா எண்டு.</b> . .நல்ல கருத்து ஒரு புத்தகத்தை வைத்துப் பாக்கும் போது அறிவு குறைந்த பெற்றோராலும் அதை கண்டு கண்டிப்பதுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு (நான் இருக்கும் நாட்டிலை அப்படியான புத்தகங்களுக்கும் கறுப்பு மையடிச்சுத்தான் விடுகிறாங்கள் என்னத்தைப் பாக்கிறது) ஆனால் இணையத்தில் அப்பிடியா. . .? டவுண்லோட் பண்ணி கணணியில் ஒளிச்செல்லோ வைக்கிறீயள் எங்கை போய் தேடுறது

அண்மையில் இந்தியாவின் இணையத்தள சேவர் அமைப்பொண்றிடம் இளைய சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் கேட்டார்கள் இணையத்திலிருக்கும் ஆபாச தளங்களை தடைசெய்ய முடியாதா எண்டு அதுக்கு அவர்கள் கூறினார்கள் ஒருநாளுக்கு இணையத்தில் வருபவர்களில் 75 சதவீதமானவர்கள் அப்பிடியான தளங்களைத்தான் பார்வையிடுகிறார்கள் மிகுதி 25 வீதம்தான் சாதாரண தளங்களுக்கு போவதாக இந்த நிலையில் அப்பிடியான தளங்களை தடை செய்தால் நாங்கள் எல்லாரும் மூட்டைகட்ட வேண்டியதுதான் என்று . . .அப்போ இப்பிடியான தளங்களை நம்பித்தான் அவையின்ரை வாழ்க்கையே போகுது என்னைப் பொறுத்த மட்டில் இப்படியான தளங்களை பார்வையிடுபவர்கள் இளைஞர்கள் எண்டுதான் நம்புகிறேன்;. . . .

இணையத்தில் பலதரப்பட்ட செய்திகளை அறிய முடிகிறது என்கிறார்கள் மறுக்கவில்லை ஆனால் எமது இளைய சமுதாயம் எப்பிடியான செய்திகளை உள் வாங்குகிறார்கள் எண்டு கவனிக்கவேணும் அன்று எனது நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன் அவரின் 15 வயதுள்ள மகன் அங்கிள் இந்த வீடீயோ பாத்தீங்களா எண்டு கணணியிலை ஒரு படத்தைக் காட்டினான் நான் திகைத்து போய்விட்டேன் என்னவெண்றால் அண்மையில் ஈராக்கில் அல்ஹாய்தா தீவிரவாதிகளால் பிடிக்கபட்ட ஒரு பயணகைதியை கொலை செய்யும் காட்சி அதுவும் தலையை துண்டாக வெட்டி மற்றைய கையில் எடுத்து காட்டுகிறார்கள் எனக்கு இதை சொல்லும் போது கை நடுங்குது ஆனா இந்த சிறுவன் இதை அடிக்கடி போட்டுப் பாக்கிறான் இப்பிடி மனநிலையுள்ள அந்த பையன் இதை செய்து பாத்தால் என்ன எண்டு வெளிக்கிட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை அப்ப இந்த இணைய வசதியால் ஒருவன் கொலையாளி ஆவதுக்கும் அதை எப்பிடி செய்வது என்பதுக்கும் ஜடியா குடுப்பதாகவும் நாங்கள் எடுக்கலாம்தானே. . . .

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எந்த நாடாவது ஆபாச தளங்களை தடை செய்ய முன்வருகுதோ அதன் பிறகு நாங்கள் பார்க்கலாம் எவ்வளவு இளைஞர்கள் இணையத்தை விருப்புடன் பாக்கிறார்கள் எண்டு அதுக்கு எந்த நாடும் முன்வராது . . (ஆனா. . .ஓரே ஒரு நாடு இருக்குது. .அந்த பாவப்பட்ட பாலவனத்து நாட்டிலிருந்துதான் எனது கருத்தை சொல்லுகிறன் ஜயா) மீண்டும் விஞ்ஞான வளர்ச்சி நாகாPகம் எண்டு அறிமுகமான இணையம் எமது இளைஞரை சோம்பேறிகளாக்கி உடல் திடகாத்திர மில்லாத நோயாளிகளாக் கூட மாற்றியிருக்கிறது /மாற்றுகிறது என்று கூறி வாய்ப்பு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன் நன்றி
<b>வணக்கம் </b>


- tamilini - 01-02-2006

பாண்டிய மன்னிற்கு செல்வமுத்துவை ஒப்பிட்டு களமிறங்கியிருக்கும் முகத்தார் வெருட்டிறமாதிரியும் இருக்கு.. முகத்தார் வீட்டில் அல்ல பட்டிமன்றத்திலும் தனது ஆளுமையைக்காட்டியிருக்கிறார் முகத்தார். சரி முகத்தாரின் விவாதத்தைப்பார்ப்போம்.

சிப்பாய் கொமாண்டோ மூலம் விஸ்ணு பயப்பிடுத்தி நீங்க பயப்பிட்டமாதிரித்தெரியல பிரங்கியோட வந்திருக்கிறமாதிரியிருக்கு.

சரி ஆரம்பத்தலைப்பு "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? "
நீங்கள் கூறுகிறீர்கள். " இணையம் புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு நன்மையை தருகுதா அல்லது தீமையை தருகுதா" சீரழிவு என்றாலே தீமை தானே அப்படி என்கிறீர்களா..?? சரி விசயத்திற்கு வருவோம்.


முகத்தார் மற்ற அணியில இருப்பவர்கள் எல்லாரும் சின்னாக்கள் என்ற உடனை ஏளனமோ..?? "கடுகு சிறிதானாலும் காரம்" பெரிது என்று சொல்லியிருக்கிறார்கள். சிறியவர்கள் என்ற ஏளனம் வேண்டாம் சீறிப்பாயப்போகிறார்கள்.

மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் இணையத்தில் சீரழியமாட்டார்கன் என்ற கருத்திற்கு தனது எதிரக்கருத்தை வைக்கும் முகத்தார். இளையோர் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களா என்றது தான் பிரச்சனையே என்கிறார். எதைப்பார்க்கப்படாது என்கிறார்களோ அதைத்தான் முதலில் பார்ப்பார்கள் என்கிறார் அதையும் மீறி மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களை வைத்தியரிடம் அனுப்பிவிடுவார்கள் என்கிறார். (இப்படிச்சொல்லிச்சொல்லியே மனக்கட்டுப்பாடு உள்ளவர்களையும் கெடுக்கிறியளா.. எனக்கு ஏதோ வியாதி என்று அவர்களை எண்ண வைக்கிறீர்களா என்ன..?? :wink: )

சரி இளையோர்கள் அதாவது புலம்வாழ் இளையோர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் ஏன் இருக்கமுடியாது என்கிறீர்கள். தமிழீழத்தில் போராளிகளாய் எத்தனை இளையோர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லையா? அவர்களால் முடிகிறது ஏன் புலம்வாழ் இளையோரால் முடியாது அவர்களும் முயற்சிக்கலாமே..?? என்று கேட்பார்களா எதிரணியினர்?? பார்ப்போமே.

இணையத்தில் சிறந்த வாழ்க்கைத்துணையை தேடிப்பெற்றுக்கொள்ள முடியும் என்ற விஸ்ணுவின் கருத்திற்கு அனுபவ ரீதியாக பதில் கூறுகிறார் முகத்தார். பேசி பாத்து பத்துப்பேரிட்டைக்கேட்டு செய்கின்ற கலியாணமே பிச்சுக்கிது என்கிறார். (பிச்சுக்குது என்றால் என்ன?? ) தோல்வி அடைகிறதா..?? இது ஒரு நல்ல கருத்துத்தான் இணையம் மூலம் துணைகளைத்தேடி ஒருசிலர் துன்பபப்டும் கதைகளும் உண்டு ஆனால் சிலர் தமக்கு ஏற்றவர்களை சரியாக தேர்ந்தெடுத்து மகிழ்வாய் வாழ்வதும் உண்டு. இரு நிகழ்வும் நடக்கிறது தான். இணையத்துணையைத்தேடி நாடுவிட்டு நாடு சென்று காணாமல்ப்போனவர்களும் உண்டு.. பொலிசார் கண்டுபிடிச்ச ஒருசிலரும் இருக்கிறார்கள். இது எந்த அளவு எமது தமிழ் இளையோருக்குப்பொருந்தும் என்று தெரியாது. இப்படியான செய்தி அறிஞ்சவர்கள் சொல்லுங்கள்.

முகத்தார் இன்னொரு கருத்தை வைத்துச்செல்கிறார். வேலையால் களைத்துவருபவர்கள் புத்துணர்வு பெறுவதற்கு உடற்பயிற்சி செய்யலாம் கடற்கரையில் கடலைபோடலாம். (கடற்கரையில் போடிற கடலையைத்தான் இணையத்திலும் போடிறார்கள்.) சே கடலை வாங்கிச்சாப்பிடலாம் என்கிறார். (கண்ட கண்ட இடத்தில கடலை வாங்கி சாப்பிட்டு வருத்தம் வரப்போது பாத்து முகத்தாரே)

முகத்தாரிடம் ஒரு கேள்வி.. புலம் பெயர் நாட்டில் எல்லா நாளும் உங்களால் கடற்கரைக்குப்போகமுடியுமா..?? அதாவது குளிர்காலங்களில் கொட்டும் பனியுடனும் வாட்டும் குளிருடனும் போராடவே மனிசருக்கு நேரம் காணாது. இதில கடற்கரை போய் நடுங்கி சாவதற்கு வழியா இது..?? கோடைகாலத்திற்கு பறவாய் இல்லை குளிர்காலத்திற்கு எங்கபோய் கடலைபோடிறது சே கடலை சாப்பிடிறது என்று கேக்கப்போறர்கள். ஆனால் இணையமோ எல்லாக்காலத்திலும் இருக்கே.. என்கிறார்கள்.

இளையோர் புத்துணர்ச்சி பெற வழி இணைய அரட்டையா..?? புத்துணர்ச்சி பெறுவதற்கு யோகாசனம் செய்யலாம். (சீடிகளில் விடியோக்களில் அடித்துவிக்கிறார்கள் ஆசிரியர் இன்றியே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்). பத்திரிகை வாசிக்கலாம் புத்தகம் வாசிக்கலாம் அவையால் பிரியோசனம் இருக்கிறது அரட்டைமூலம் என்ன பயன்??

இணையத்தில் பெண்கள் சுதந்திரமாக கருத்தை வைக்க முடிகிறது என்கின்ற கருத்திற்கு முகத்தார் வேறு ஊடகங்களில் அவர்கள் கருத்துக்கள் வைக்கவில்லையா என்று கேட்கிறார்? எப்படிப்பார்த்தாலும் பத்திரிக்கையில் எழுதியவர்களை விட தற்பொழுது இணையத்தில் எழுதுபவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமோ..?? .

இணையத்தின் ஊடாக பெண்கள் நல்ல ஆண்களைக்கவுக்கிறார்களாம்..?? அதே போல இணையத்தின் ஊடாக நல்ல பெண்களை கவுக்கும் ஆண்களும் உண்டு என்று சொல்லியிருந்தா எத்தனை அழகு..??

இந்த இணையவசதியானது ஒரு துடிப்புள்ள இளைஞனை நாலு சுவற்றிக்குள் முடக்குகிறது என்கிறார் முகத்தார். இதை மறுக்கமுடியுமா எதிரணியினரால்..?? தொடர்ந்து கணணியை பாவித்ததால் நோய்வாய்ப்பட்டவர்களது கதைகள் உண்டு. அத்தோடு வெளி உலகுடனான தொடர்புகளை இது குறைக்கிறது அதனால் இளையோர் ஒதுங்கி தனிமைப்படுகிறார்கள். .. இதனால் பாதிப்பு இளையோருக்கே..

ஆபாசப்படங்கள் புத்தகத்தில் இல்லையா என்ற கேள்விக்கு நல்லபதில் தந்தார் முகத்தார். ஆபாசப்படங்களை இளையோர் புத்தகங்களில் பார்க்கும் போது பெற்றார் கண்ணில் அகப்படும். மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இருக்கும் அதனாலேயே அதை பயன்படுத்துவது குறைவு.. கடையில் சென்று அந்த புத்தகத்தை வாங்குவதில் கஸ்டம். இப்படி நிறைய பிரச்சனை இருக்கு.. இணையத்தில் அப்படியல்ல நீங்கள் தரவிறக்கி கணணியில் ஒழிச்சுக்கூட வைக்கலாம் என்று அதை சேமிக்கும் முறையைக்கூறிச்செல்கிறார்.. (அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறாரோ?? )

இன்னொரு கருத்தை சொல்லிச்செல்கிறார் ஒரு நாளில் இணையம்பாவிப்போர் 75 சதவீதமானவர்கள் ஆபாச தளங்கிளிற்குத்தான் சொல்கிறார். 25 சதவீதமானவர்கள் தான் சாதாரன தளங்கிளிற்குச்செல்கிறார் என்று ஒரு தகவலை கூறுகிறார். இதே சதவீதங்கள் எமது புலத்து தமிழ் இளையோரிற்கும் பொருந்துமா?? அப்படிப்பொருந்தும் பட்சத்தில் அது சீரழிவில்லையா இதை மறுக்க முடியுமா எதிரணியினரால்.?? தங்கள் லாப நோக்கத்திற்காக பலரும் ஆபாசதளங்களை நடத்தினால் பாதிப்படைவது யார் இளையோர்கள் தானே??

நண்பரின் 15 வயசு மகன் முகத்தாரிற்குக்காட்டியது தீவிரவாதிகள் தலையை வெட்டும் காட்சி என்று நடுக்கத்துடன் கூறினார் முகத்தார். இணையம் தீவிரவாதிகளிற்கு ஒரு சிறந்த ஊடகமாய் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. தகவல்பரிமாற்றங்கள் செய்ய சிறந்த இடம் இணையம் இதை கண்காணிக்கவே பல புலனாய்வு அமைப்புக்கள் இயங்குகின்றனவாம். அதே தீவிரவாதிகள் இப்படியான கோரக்காட்சிகளை இணையத்தில் இணைக்கிறார்கள் அது இளையோரை மிகவும் பாதிக்கும் அவர்களிற்கு வன்முறையைக்கற்றுக்கொடுக்கிறது. என்கிறார் முகத்தார். இதை ஏற்கிறீர்களா எதிரணியினர். இதைப்பார்த்துக்கொண்டு அந்தப்பிள்ளையின் பெற்றோர்கள் சும்மாவா இருந்தார்கள்.?? அதைக்கண்டித்து இவை உன்னை பாதிக்கும் நீ இப்படியானவற்றைப்பாவிக்கக்கூடாது என்ற புத்திமதியைக்கூறினால் பிள்ளை மறுபடி மறுபடி பார்க்குமோ..?? பெற்றோர்கள் அதை விளக்கினால் அந்த இளையோன் மறுபடி அப்படி ஒரு காட்சியைபபார்க்கும் போது கொஞ்சம் யோசிப்பான். (சரி நீங்களாவது புத்திமதி கூறி அதை அழிக்க வைத்தீர்களா..?? )

ஆபாச தளங்களை நாடுகள் தடைபோட வெளிக்கிட்டால் இணைய பாவனை இளையோர் மத்தியில் குறையும் என்கிறார். இது எந்த அளவு சாத்தியம். எங்கே எதிரணியினர் தான் பதில் தரவேண்டும். பாவம் பாலைவன நாட்டில போய் மாட்டுப்பட்டதற்காக முகத்தார் வருந்துவது போல இருக்கு. தனது கருத்தை உறுதியாக வைத்துச்செல்கிறார் முகத்தார். அவரைத்தொடர்ந்து.. நன்மையடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்...!


- Snegethy - 01-02-2006

மத்தியஸ்தர்களான செல்வமுத்து ஆசிரியருக்கும் தமிழினியக்காவுக்கும் எனது மாண்புமிகு வணக்கம்.இருதரப்பு சகபாடிகளுக்கும் அன்பான வணக்கம்.நாங்கள் பட்டி மன்றம் நடத்தும் அழகையும் வாதப் பிரதிவாதங்களையும் மகிழ்வோடு பாரத்துக்கொண்டிருக்கும் சபையோருக்கும் பணிவான வணக்கம்.எங்களுக்கெல்லாம் இவ்வரிய வாய்ப்பை வழங்கிய ரசிகைக்கு நன்றி.

"\\இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?\\"

சோழியன் அண்ணா இளைஞர்கள் எம்மினத்துக்கு என்ன தரவில்லையென்று இப்படி ஒரு கேள்வியைக் கேட்டனீங்கள்.எங்கட இளைஞர்களான "தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் தாயகத்துக்குச் சென்று அங்குள்ள எம் சகோதர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ இவ்மைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாயகம் சென்று ஆங்கிலம் மற்றும் கணனி வகுப்புக்களை நடத்துகிறார்கள்.அவர்களுக்கு இங்கு பொழுது போகவில்லையனெறா அங்கு போய் உதவி செய்கிறார்கள்.நீங்கள் சொல்ற மாதிரி இங்கு பிறந்து வளர்ந்தவரகள் என்ற வேறுபாடெல்லாம் என் கண்ணுக்குத் தெரியவில்லை.சுனாமி நேரம் கூட அலை மூன்றில் தாயகம் சென்ற மாணவர்கள் மயூரி இல்லத்துக்கும் சென்று அங்குள்ள சிறார்களுடன் அளவளாவிவிட்டு சென்ற சில மணி நேரத்துள் அந்தப் பிஞ்சுகளில் முன்றிலொரு பங்கினர் எம்மோடு இனி இல்லை.அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவுளைச்சலை அகற்ற போராளிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்.மீரா என்றொரு மருத்துவர் இங்கிருந்து சென்று ஆறு மாதங்கள் பணியாற்றி விட்டு வந்திருக்கிறார்.முடிந்தால் அங்கு சென்று பணியாற்றும் இளைஞர்கள் அங்கிருந்து பரிமாறும் ஈமெயிலை உங்களுக்குத் தருகிறேன்.இன்னொன்று கேளுங்கள் சோழியன் அண்ணா வைகாசியில் உலகத்தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழ் மாநாடு நடாத்தப்போகிறார்கள் தெரியுமா?இணையம் மூலம்தான் அதற்கான முழுத்தொழிற்பாடும் நடக்கிறது.தொண்டர்களை உள் வாங்குவதிலிருந்து போஸ்ரர் சரிபார்ப்பது இப்பn அனைத்துமே இணையத்தின் துணையோடுதான் நடக்கிறது.

பணத்துக்காய் பல்லிழிக்கும் புல்லுருவிகள் இல்லையேல் இளைஞர்கள் எவ்வளவோ செய்ய முடியும்.தயவு செய்து என்ன இளைஞர்கள் செய்தவை என்று கேக்காதயுங்கோ.

மற்றது இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளுக்கும் தாயகம் தமிழீழத் தாகம் நிறையவே இருக்கு.தாயக உணர்விருந்தால் பிள்ளை போராடப்போயிடும் என்று நினைக்கிற ஒரு சில பெற்றோரைத் தவிர மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளையால் தம்மினத்துக்கு சிறு உதவியேனும் செய்ய முடியுமா என்றுதான் நினைக்கிறார்கள்.மகமாஸ்ரர் பல்கழைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியம் செஞ்சோலைச் சிறார் இருவரைத் தத்தெடுத்திருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியுமா அது.ஏன் எம்மிளையருக்கு அந்தக்காசை செலவிட வேறிடம் இல்லையா?

இணையத்தால எனக்கு என்ன நனமையென்று சொல்றன்.ஒரு நாள் விரிவுரைக்குப் போக முடியவில்லை என்றால் ஒன்றில் பாடத்தளத்தில் விரிவுரைக்கான வாசிப்பன்.அல்லது பதிவு செய்யப்பட்ட ஒலிவடிய விரிவுரைய ஒரு நண்பர் மூலம் இணையத்தினூடு பெற்றுக் கேட்பேன்.ஒரு ஒப்படையைச் சமர்ப்பிக்கத்தான் அன்று கல்லூரிக்குப் போகவேண்டியிருந்தால் ஒரு ஈமெயில்ல விசயம் முடிஞ்சிடும்.முன்னர் மாதிரி பாடஅட்டவணை எடுக்கவோ புத்தகம் எடுக்கவோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.எக்ஸாம் முடிஞ்ச உடனே டிஸ்கஸனுக்குப் போய் யாருக்கு என்ன விடை வந்தது என்று அறியலாம்.ஒன்லைன் குயிஸ் செய்யலாம்.நூல் நிலைய புத்தகங்களை ஹோல்ட்ல போடலாம் றினியு பண்ணலாம்.யுனி தொடங்க முதலே கோர்ஸ் அவுட்லைன் பார்க்கலாம்.பேராசிரியர் அவேன்ர உதவியாளர்களோட நேரில கதைக்க சந்தர்ப்பம் கிடையாதபோது டிஸ்கஸன் போர்டுக்குப் போய்க்கதைக்கலாம்.இவ்வளவு ஏன் ஒன்லைன் டிகிறீ படிச்சு எடுக்குதுகள் சனம்.வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.

கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட வசதியைப் பயன்படுத்துங்கோ.இன்னும் பத்து வருடங்களில் வங்கி நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் எல்லாரும் இணையத்தினூடுதான் காசுப்பரிமாற்றம் எல்லாம் செய்ய வேண்டி வந்தால் அப்ப என்ன செய்வம்.தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்களை இருகரம் சேர்த்துப் பெற்றுக்கொண்ட நாங்கள் பிரதிகூலங்களையும் சமாளிக்கத்தான் வேண்டும்.

அதே போலதான் இணையத்தில ஆபாசப்படமிருக்கு கெட்டுப்போக வழியிருக்கு என்று புலம்பாம அன்னம் மாதிரி பாலைமட்டும் குடியுங்கோ தண்ணியை விடுங்கோ.ஆபாசம் வன்முறையெல்லாம் தொலைக்காட்சியிலும் இருந்தது தானே அங்க எப்பிடி
பெற்றோர் கட்டுப்பாட்டு வசதி இருந்ததோ அத மாதிரி கணனியிலும் இருக்குப் பாவியுங்கோ.ஒரு கொஞ்சக்காசோட அந்நிய நாட்டில பிழைக்க முடியும் என்று நம்பி வந்த பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் நம்பிக்கை வேணும்.

நடுவர் தமிழினியக்கா வாசிப்பு மனிதனைப் பூரணமடையச் செய்கிறது.வானொலியிலோ தொலைக்காட்சியிலோ செய்திகளை அறிய முடியாத நேரத்தில் உத்தியோக பூர்வ இணைத்தளங்களில் செய்தியை அறிந்து வைத்திருத்தல் அவசியம்தானே.பாடசாலையிலோ வேலைத்தளத்திலோ அக்கறையுள்ள வேற்றின நண்பர் உங்கட நாட்டுப்பிரச்சனை பற்றிக் கேட்டால் நான் இன்றைக்கு செய்தி நேரத்துக்கு வீட்ட இல்லையென்று சொல்லாமல் அக்கறையான ஒருதரோட அளவளவாவது நாட்டு நடப்பை அறிந்து வைச்சிருக்கோணும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.அது மட்டுமில்ல கூகில்ல என்ன நடக்குது பைடோவ யார் வாங்கினவை இப்பிடி எல்லாத்தையும் வாசிக்கிறதால அறிவு விருத்தியடையும் ஆனால் நீங்கள அறிவென்பதை எப்பிடி நோக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

நீங்கள் சொல்ற மாதிரி இணையத்தில உள்ளதைக் கொண்டே குடுக்க அதை வாங்கி திருத்துற அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல.எங்க எப்ப எந்தத்த தளத்தில இருந்து சுடப்பட்டிருக்கு என்று துல்லியமாகச் சொல்லும் மென்பொருள்கள் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் எல்லாமுண்டு.சில பாடங்களுக்கு இணையத்தளங்களை தகுந்த சைற்றேசனோடு பயன்படுத்தலாம்.சில பாடங்களுக்கு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மட்டுமே பாவிக்கலாம்.இணையத்தை கட்டாயம் மற்றவருடைய வேலையக் களவாடத்தான் பாவிக்கவேண்டுமா அவர்கள் ஒரு கடினமான விளக்கத்ததை இலகுவான நடையில் எழுதியிருந்தால் அதை வாசிச்சு அறிவை வளர்க்கலாமே தமழினியக்கா.

உங்கட வங்கி ரகசிய அலுவல்களை மற்றவர் ஹாக் பண்ணமுடியாமல் செய்யத்தான் தீச்சுவர் வைச்சிருக்கோணும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

முகம்ஸ் பட்டி மன்றத்துக்கு வரேக்க ஒட்டகப்பாலென்று வேறென்னத்தயோ குடிச்சிட்டு வந்திட்டார்.விஸ்ணு எப்ப சொன்னவர் சிறந்ந வாழ்க்கைத்துணையை இணையத்தில சந்திக்கலாம் என்று.இருந்தாலும் இணையத்தில நாங்கள் எத்தில நல்ல நண்பர்களைச் சந்திக்கிறம் அப்பிடி வாழ்க்கைத்துணையைச் சந்திக்க நேரிட்டால் அதிலென்ன தீமை? கனடாவிலயே பக்கத்தில இருக்கும் ஆக்களை எல்லாம் யாழிலதான் சந்திச்சிருக்கிறன்.அது நன்மைதானே முகம்ஸ்.ஏன் முகம்ஸ் விஸ்ணு அரட்டையும் இசை கேக்கிறதைச் சேர்ததுத்தானே சொன்னவர் புத்துணர்ச்சி தரும் என்று.உங்களுக்கென்ன அரைவாசிதான் மண்டைக்குள்ள புகுந்ததே.பாலைவனத்தில உங்களுக்கு நிறை பீச் இருக்காக்கும். எனக்கெல்லாம் பீச்சுக்குப் போறதெண்டால் நேரம் காலநிலை எல்லாம் சரியா வரணுமே.உடற்பயிற்சியை எவ்வளவு நேரம்தான் செய்துகொண்டே இருக்கிறது.அரட்டையும் மனசை லேசாக்கிறதால விஸ்ணு அப்பிடிச் சொன்னவர்.அது சரி நீங்கள் வயசு போன காலத்தில பீச்சுக்கு காலார நடக்கப்போறனீங்கள்.நடவுங்கோ கொலஸ்ரோல் மாரடைப்பெல்லாம் வராது.

இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச் சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது.இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே.வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.

முகம்ஸ் பெற்றோருக்குப்பாட அறிவு குறைவென்றாலும் பட்டறிவு நிறையதானே.திருகோணமலைக்கு வந்து கேக்கிறனே முகம்ஸ் செய்த குழப்படியெல்லாம் தெரியாதோ என்று.

கணனில நாங்கள் hide folder option பாவிச்சா நீங்கள் show hide folder option தெரிஞ்சு வைச்சிருங்கோ.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நீங்க சொன்ன இந்தியாவில தான் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மலிவான விலையில் 700 சானல்கள் கொண்ட ஒரு டிஸ்க்கை விற்பனைக்கு விட்டது.சன் ரீவி செய்தியிலை பார்த்தது.பெயர்கள் ஞாபகம் இல்லை.அந்த டிஸ்க் ஏனிப்பிடி மலிவாக விற்கப்பட்டடு எப்பிடி இவ்வளவு விற்பனையானது என்று ஆராய்ந்ததில் அதில் பல வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சானல்கள் இருந்ததாம்.அதால பார்க்கிறதுக்கு இணையம்தான் கதி என்றில்லை.இப்பெல்லாம் ஹிந்திப்படத்திலெல்லாம் எல்லாம் காட்டினமே கெட்டுப்போகணும் என்றால் நிறைய வழியிருக்கு.

ஈராக் படங்கள் பத்திரிக்கைகளில் ஒரு அமெரிக்க அதிகாரி ஆண்கைதிகளை பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுடும் படங்கள் வந்திருந்தனதானே.

முகம்ஸ் அந்த ஒரு மாதிரியான தளங்களுக்குப் போற ஆகள்களில எத்தின சதவீதத்தினர் இளைஞர்கள்??முப்பது நாற்பது வயசெல்லாம் இளையரில்லையாம்.உங்களுக்கொரு விசயம் தெரியுமோ ஆபாச தளங்களுக்குப் போன ஒரு 40 வயசாள் தன் மனனவியை தான் பார்த்த படங்கள் போல பார்க்க ஆசைப்பட்டு இப்ப விவாகாரத்து ஆயிட்டுது.

கனக்க நேரம் எடுத்திட்டன் போல.திரும்பவும் சொல்றன் இணையத்தால் நாமடையும் நன்மைகள் பலப்பல ஆதலால் அன்னமாய் இருப்போம்.


- tamilini - 01-03-2006

இணையத்தால் புலம் பெயர் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தனது தரப்பு விவாதத்தை அழகாக வைத்துச்சென்ற சினேகிதி பல கருத்துக்களையும் வெட்டிச்சென்றார். (விஸ்ணு கொமாண்டோக்கள் என்று சொன்னதன் அர்த்தம் இப்பான் புரியுது)

சரி சிநேகிதியின் கருத்திற்கு வருவம்....

எதிரணித்தலைவர் சோழியான் அவர்களது கேள்விக்கு பதில் வைத்துச்சென்ற சிநேகிதி இளையோர் தாயகத்திற்குச்செய்த
உதாரணங்களையும் காட்டிச்சென்றார். களத்தில் பல இளைஞர்கள் சேந்து தமது ஊரில் ஒரு விளையாட்டுமைதானம் கட்டிக்கொண்டிருப்பதாக கூறிய நினைவு.. ஆங்காங்கே பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் தாயகத்திற்கு தம்மால் ஆனதைச்செய்து கொண்டிருக்கிறார்கள் பல இளையோர். அதேபோல் தாயகம் என்ற பெயரைக்கூறி சின்ன இடைவெளிக்குள் தங்கள் வங்கிகளை நிறைக்கும் இளையோர்களும் இருக்கிறார்கள்.

மற்றக்கருத்திற்கு வருவம்..

இணையத்தால் தான் அடையும் நன்மை என்று பலவற்றைக்குறிப்பிட்டிருக்கிறார். (ம் விரிவுரைக்கான நோட்சை.. குறிப்பிட்ட பாடத்திற்கான கையேட்டிலையும் படிக்கலாம்.) குறிப்பாக நூல்நிலையம் பற்றிக்கூறிய கருத்து முக்கியமானது. காலவதியான புத்தகங்களை உடனுக்குடன் புதிப்பித்துக்கொள்ளலாம் இணைய உதவியுடன் முடிவடையும் திகதிக்கு ஒருநாள் முன்னரே மின்னஞ்சல் வழியாக தகல் வரும் அதற்கேற்ப புதுப்பித்துக்கொள்ளலாம் இது நன்மை தானே இல்லை என்கிறீர்களா எதிரணியினர்.

இன்னொன்றைக்கூறிச்சென்றார்
ஒன்லைன்ல டிகிரியே பண்ணலாம் என்று கூறினார். இந்த இணையவழிப்பல்கழைக்கழகம் மூலம் தமிழில் கூட நீங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். நல்ல கருத்துத்தான்.


<b>வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
</b>

இந்த வேற்று நாட்டில இருக்கிறவையுடனான தொடர்பாடல்
ஊடகமாக இணையம் இருக்கு என்று எல்லாரும் திரும்பத்திரும்பச்சொல்றியள். தெரியாதவர்கள் உடனான தொடர்பாடல்கள் ஏற்படுத்துகின்ற பின்விளைவுகள் பற்றிக்கேள்வி எழுப்பியிருந்தோம் பதிலையே காணவில்லை..?? என்றப்போகிறார்கள் எதிரணியினர்.

<b>கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட
வசதியைப் பயன்படுத்துங்கோ..</b>

நல்ல கருத்துச்சொன்னார்.. அது சரி இப்படி ஏர்கோனோமிக்ஸ் (Ergonomics) தளபாடங்களை வாங்கிறதுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டி வருமே வீடுகளில் இடவசதியின்மை இப்படிப்பல பிரச்சனை இருக்க. அதற்கு என்ன சொல்கிறீர்கள்..?? என்கிறார்கள் எதிரணியினர்.

அத்தோடு இருந்த இடத்தில இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் அப்படி என்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள்.

நான் கேட்டது செய்தியால் மட்டும் மனிதன் பூரணத்துவம் அடைந்துவிடமுடியுமா என்பதே..?? வாசிப்பு நல்ல பழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.. இணையத்தில் செய்திகள்
எப்படி வருது.. ஒரு இணையம் வைத்திருக்கிற செய்தியையே எல்லாரும் பிரதி பண்ணிப்போட்டிருப்பார்கள். வாசித்ததையே திருப்பித்திருப்பி வாசிச்சால் பாடம் தான் வரும். :wink:

இணையத்தைக்களவாட மட்டும் தான் பாவிக்கவேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் சிநேகிதி. களவாடவும்
பயன்படுத்துகிறார்கள் என்கிறேன். ஒரு சில இணையங்களில் பதிவு முறையில் பாவனைக்கு விடும் சேர்ச் என்ஜின்களை மட்டுமே ஆசிரியர்களால் கண்டு பிடிக்கமுடியும். (அப்படியான லிமிட்டட் ஏரியாவிற்குள் எல்லாரும் நுழையமுடியாது) கூகுல் போன்ற பரந்து விரிந்த சேர்ச் என்ஜின்களில் இருக்கின்ற தகவல்கள் யாவும் நிரந்தரமனைவையும் அல்ல சரியானவையும் அல்ல. உங்களுக்கு வேண்டிய தகவலை ஒவ்வொரு பந்தியை ஒவ்வொரு இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்
அவற்றைத்தேடிக்கண்டு பிடிப்பது என்பது ஆசிரியர்களிற்கு கஸ்டமே.. இணையத்தில் உள்ளதை கொப்பி பண்ணிக்கொடுத்து ஒரு சில பாடங்களை திரும்பத்திரும்ப செய்கின்ற மாணவர்களும் இருக்கிறார்கள். சிலதைப்பலதை மாத்தி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதைவிட இணையத்தில் கிடக்கும் தகவல்கள் யாவும் சரியானவை அல்ல. அதை வாசித்து விளங்கி எழுதுவதற்கு. பல பிழையான தகவல்களும் உண்டு. இணையத்தில் உள்ளவற்றை வாசித்து அறிவை வளர்க்கலாம் அது நன்மையே.. இணையத்தில் இருக்கும் தகவல்கள் யாவும் சரியானவை என்பதற்கு என்ன உறுதி??

<b>உங்கட வங்கி ரகசிய அலுவல்களை மற்றவர் ஹாக் பண்ணமுடியாமல் செய்யத்தான் தீச்சுவர் வைச்சிருக்கோணும்
</b>

நல்ல ஒரு கருத்தைத்தான் வைச்சிருக்கிறார் சிநேகிதி வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா போவான்.?? அதைத்தாண்டி எடுப்பதற்கும் பலவழிமுறைகள் இல்லையா..?? எத்தணை வியாபார இணையங்களின் தளங்கள் கக் பண்ணப்பட்டிருக்கு.. யாழ்கூட அந்த அவலத்தைச்சந்திச்சிருக்கிறதே..??


<b>இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச்சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர
குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது .இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே .வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.</b>

எழுதிற பெண்களை எதிர்கொள்கின்ற பிரச்சயை தனியா விவாதிக்கவேணும் என்றியள் அப்ப. சிநேகிதி அவர்களது கருத்தில் முக்கியமான விடையம் என்ன என்றால். சிநேகிதி (இணையத்தில்??) எழுதுவது அவரது பெற்றாருக்குத்தெரியாது என்கிறார்(பெற்றோரிடம் மறைக்கிறீர்கள்) ..அவரது பெற்றோரை ஏமாற்றுகிறார் அப்படியா.. ?? இது நன்மையா..?? அவரது பெற்றோர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அவர்
செய்யும் கைமாறு இதா..?? இப்படி எதிரணியினர் கேக்கப்போயினம்..

<b>கணனில நாங்கள் hide folder option
பாவிச்சா நீங்கள் show hide folder option
தெரிஞ்சு வைச்சிருங்கோ.</b>

கைட் போல்டரைக்கண்டு பிடிக்கிறதுக்கு நீங்கள் show கைட் போல்டர் ஒப்சனைப்பாவிக்கச்சொல்லியிருக்கிறார் சிநேகிதி நல்ல விடயம். பெற்றார்கள் கவிக்கவேண்டிய விடையம். அப்படியே இன்னொரு தகவல். கடவுச்சொல்லைச்சரியாக சொன்னால் தான் குறிப்பிட்ட கோப்பைப்பார்வையிட வைக்கும் மென்பொருட்களளும் உண்டு எதற்கும் உசாராய் இருங்கள். எவ்வளவு கஸ்டப்படவேண்டியிருக்ப்பாருங்கோ..?? இது தான் இணயம் தாற நன்மை என்கிறார்கள் எங்கே எதிரணியினர் இது தொடர்பாக உங்கள் கருத்தைப்பார்ப்போம்..

சிநேகிதி அவர்களது கருத்தில் கூறுகிறார். ஆபாசப்படங்களை இணையத்தால் மட்டும் அல்ல தொலைக்காட்சியிலும் பார்க்க முடியும் என்கிறார். அதைவிட படங்களில் கூட வருகின்றது என்கிறார். தொலைக்காட்சி என்பது வீட்டில் பலரது பார்வையில் இருப்பது. (தனி அறைவழிய வைச்சிருக்கிறவையை கடவுள் தான் காப்பாத்தவேணும்.) கூடுதலாக தொலைக்காட்சியி
போவதை குடும்ப உறுப்பினர்கள் பார்க்க நேரலாம் என்ற பயம் இளையோருக்கு இருக்கும். அதே போலவே படங்களில் போகின்ற ஆபாசக்காட்சிகளை ஓடவிட்டுப்பார்க்கும் குடும்பங்கள் தான் அதிகம். (இப்ப அந்த ஆபாசங்களைப்பத்தி கதை கவிதை எழுதி அதை விமர்சிக்கிறது தான் நாகரீகம் என்கிறார்கள். அதுவும் கூடுதலாய் இணையத்தில் இது சீரழிவில்லையா..?? )

சிறந்த ஒரு விடயத்தைச்சுட்டிக்காட்டினார் ஆபாசப்படங்களில் வருவது போல தன்து மனைவியை பார்க்க ஆசைப்பட்ட 40 வயசு ஆண் மகன் விவாகரத்துவரை சென்றதாய். சரி 40 வயசுக்காரருக்கே இந்த நிலைமை என்றால் இளையோர்கள் அதுவும் துடிப்புடையவர்களது நிலை என்ன என்றகேள்வியை எதிரணியினர் எழுப்பப்போகிறார்களோ..??

இன்னொருவிடையம் இப்படித்தான் தமிழ் இணையத்தில் ஒரு தகவல் வாசித்தேன். (தமிழ்மணத்தில்த்தான்.) ஒரு
வலைப்பதிவாளர் ஒரு இணையத்திற்கு விமர்னம் எழுதிறார். ஒருவர் தனது மனைவியை விதம் விதமாய் படம் எடுத்து
இணையத்தில் போட்டுள்ளாராம். அது அழகாம் கலையாம் என்று. இவர் இணைப்பைக்கொடுத்து அந்த இணையத்திற்கு இளையோரை வழிநடத்துகிறார். இது எந்த வகையில்
நன்மை..?? எத்தகையா சீரழிவு இது..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழ் இளையோர் தீவிரவாதச்செயல்களை இணையத்தின் மூலம் அறிகிறார்கள் என்று முன்னால் வைத்தவருக்கு ஒரு கருத்து எத்தனை தமிழ்ச்சினிமாவில்..?? எத்தனை வன்முறைக்காட்சிகள் இருக்கின்றன இப்ப வரும் படங்களில் நேரடியாகவே கொலைசெய்யப்படுவதையும் குத்தபபடுவதை காட்டுகிறார்கள் இவற்றை யாவரும் பார்க்கிறோமே..

கடைசியாக அன்னம் போல் பாலைக்குடியுங்கள் தண்ணியைக்கழித்துவிடுங்கள் என்று கூறிச்செல்கிறார் சிநேகிதி. அவரிடம் ஒரு கேள்வி.. அன்னத்திற்கு ஏன் பாலையும் தண்ணியையும் கலந்து வைக்கிறீர்கள்.?? அதற்கேன் சும்மா ரோதனை கொடுத்துக்கொண்டு.. பாலை வைச்சாக்குடிச்சிட்டுப்போகுது..?? என்று வருகிறார்கள் எதிரணியினர் பின்னால் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சிநேகிதியின் அனல்பறக்கும் கருத்தைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்வாழ் தமிழ்இளையோர் சீரழிகிறார்கள் என்ன அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 01-05-2006

மதிப்பிற்குரிய நடுவர்களுக்கும் இன்றைய புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையம்
எவ்வளவு கேடுகள் விளைவிக்கின்றது என்ற உண்மையை சொல்லி இளைஞர்களை
திருத்தவேண்டும் என்ற அவாவுடன் களத்தில் நியாயத்துக்காக வாதாடிக்கொண்டிருக்கும்
எனது அணி நண்பர்களே. சமுதாயம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்றவகையில்
உண்மையை தெரிந்தகொண்டும் ஒப்புக்காக வாதாடிக் கொண்டிருக்கும் எதிரணியினரே
அனைவருக்கும் எனது வணக்கம். இரசிகை ஒரு அருமையான தலைப்பை கொடுத்து
அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றார் அவருக்கு எனது நன்றிகள்.
நாங்கள் எதிரணியினர்போல் வார்த்தைஜாலங்கள் செய்யத்தெரியாதவர்கள்
மனசில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவோம். எதிரணியினர் உங்களை குளிரவைப்பதற்
காக தங்கத்தாமரை வெள்ளித்தாமரை என்றெல்லாம் உங்களை ஏமாற்ற முயல்வார்கள்
அதை நம்பி ஒரு பொய்யான தீர்ப்பை வழங்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். நாங்கள் உங்களை
இதயத்தாமரையில்தான் வைத்திருக்கின்றோம். ஏனென்றால் எங்கள் வசதிக்கு அங்குதான் வைத்திருக்க
முடியும்.
எதிரணித்தலைவர் தனது கருத்தில் இணையத்தில் இரண்டாவது இடத்தில்
தமிழ்மொழி இருப்பதாக கூறினார் நாங்கள்அதையும் மறுக்கவில்லை. ஆனால் தமிழில் எத்தனையோ
தோன்றி மறைந்துவிட்டன. காரணம் ஒரு குறிக்கோளின்றி பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு
அவை ஆரம்பிக்கப்பட்டன. இணையம் என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதை புலம்பெயர் தமிழ்
இளைஞர்கள் சரியாகப்பயன்படுத்தவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
இணையத்தை நாம் சரியாக பயன்படுத்தினால் யாழ்
களத்தில் ஏன் உறுப்பினர்கள் புனைபெயரில் வருகின்றனர்.இளைஞன் கூறியிருக்கின்றார் 80 வீதம்
இளைஞர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்று. உண்மையான பெயரில் கருத்துக்களை வைத்தால்
தங்களை இனம் கண்டு தொல்லைகள் கொடுப்பார்கள் என்றுதானே புனைபெயரில் வருகின்றனர். உண்மையான
பெயரில் வந்திருந்தால் என்னுடைய தங்கை தமிழினி எவ்வளவு நச்சரிப்புக்களை சந்திக்க வேண்டிவரும்.
அசிங்கமான தொலைபேசி அழைப்புக்களை சந்திப்பார். இந்த ஒரு காரணமே போதாதா இளைஞர்கள் இணையத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று. எப்போது சொந்தபடங்களுடன் சொந்தப்பெயரில் இணையங்களில் (களங்களில்)
உலாவமுடியுமோ அப்போது சொல்லுங்கள் புலம்பெயர் இளைஞர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்துகின்றனர் என்று
நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

<b>அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கிஇ அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும்இ இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டிஇ
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும்இ நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது. </b>
சில நாட்களுக்குமுன்னர் லங்காசிறி இணையத்துக்கு
சென்றிருந்தேன் பதிவுசெய்யாமல் அரட்டை அடிக்கலாம்என்று கூறப்பட்டிருந்தது. என்னதான் நடக்கின்றது
என்று பார்க்கலாம் என நானும் என்னுடைய மகனுடைய பெயரில் முன்பகுதியை கொடுத்து உள்ளே
சென்று வணக்கம் என்று எழுதினேன். யாரோ ஒருவர் வந்து வணக்கம் என்று என்னுடைய பெயரையும் எழுதினார். அடுத்ததாக எந்த இடம் என்று கேட்டார் நானும் எழுதினேன். அடுத்ததாக எத்தனை
குழந்தைகள் என்று கேட்டார் நானும் எழுதினேன். அடுத்த கேள்வி அந்த கேடுகெட்டவனிடம் இருந்து
வந்தது கணவர் இருக்கின்றாரா? நானும் இவர் என்னதான் செய்கின்றார் என்று பார்ப்போம் என்று அவர்
வேலைக்கு போய்விட்டார்(அப்போது இரவு 11 மணி) இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவார் என்றேன்.
உடனடியாக தொலைபேசி இலக்கத்தை தரும்படி கேட்டான் அந்த தெருப்பொறுக்கி . இதுவே ஒரு
உண்மையான அப்பாவிப்பெண் தொலைபேசி இலக்கத்தை கொடுத்திருந்தால் ஒரு குடும்பமே சீரழிந்து
போயிருக்கும். முன்பு இணையத்தில் திருமணமாகாத பெண்களை தேடிய இளைஞர்கள் இன்று
திருமணமான பெண்ணை தேடுகின்றான் இது இணையத்தால் கிடைத்த வளர்ச்சியா? இதுதான் இளைஞர்கள்
இணையத்தை சரியாக பயன்படுத்துகின்றனரா?
இப்படி ஒரு அனுபவத்தை பெற்ற எந்த பெற்றோராவது இணையத்தில் குழந்தைகளை உலாவ
அனுமதிப்பார்களா? தவறுகளை உங்கள்மேல் வைத்துக்கொண்டு பெரியவர்களை குறை கூறாதீர்கள்.
நேரம்போதவில்லை நாளையும் கருத்துக்களை வைக்கவிரும்புகிறன்றேன். அதன்பிறகு எதிரணியினர் தங்கள் கருத்துக்களை வைக்கட்டும்