| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 385 online users. » 0 Member(s) | 382 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,010
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,051
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,504
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,254
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,534
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,753
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,265
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,888
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,938
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,205
|
|
|
| தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள |
|
Posted by: Vasampu - 04-18-2006, 03:10 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (31)
|
 |
<b>தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள் </b>
<b>கார்த்திக்.</b>
<i>எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக்.
என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எலெக்ஷன் மூலம் தண்டனை கொடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக கடவுளும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்று கூறி விட்டு மேலே கைகாட்டியவரிடம், ஏன் இப்படி? என்று கேட்டோம்.
கார்த்திக்குக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் கொடுத்தால், எரிச்சலை ஏற்படுத்திவிடலாம். இந்தப் பதவியை சுமையாக நினைக்கச் செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அதெல்லாம் பலிக்கப் போவதில்லை. மக்கள் கொடுத்த பதவி இது. அதைத் தக்க வைத்துக் கொள்வேன். அதற்கான பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு நிறைய இருக்கிறது.
<b>அ.தி.மு.க.வில் உங்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்?</b>
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ§டன் முதல்வர் இல்லத்திற்குக் கூட்டணி விஷயமாகப் பேசப் போனபோது, எங்களுக்கு பயங்கர ஷாக், காரணம் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம், அங்குள்ள ஒரு அறையிலிருந்து வந்தார்.
உடனே, பிஸ்வாஸ் முதல்வரிடம், நாங்கள் பக்கத்து அறையிலிருக்கிறோம், நீங்கள் சந்தானத்திடம் பேசி, அவரை அனுப்பிய பிறகு நாம் கூட்டணி பற்றிப் பேசுவோம் என்றார்.
அதற்கு முதல்வர், சந்தானத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் என் விருந்தாளி, இங்குதான் இருப்பார் என்றார். உடனே பிஸ்வாஸ், அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதோடு அல்லாமல் என்னை ரொம்பவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படிக் கூட்டணி பேசமுடியும். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். இதற்கும், கூட்டணி பேசுவதற்கும் என்ன சம்பந்தம். இது, வேறு அது வேறு என்றார்.
ஆனால், முதல்வர் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை.
<b>முதல்வரை சந்திப்பதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தீர்களே...</b>
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதால், மரியாதை நிமித்தமாக பிஸ்வாஸ், கலைஞரைச் சந்திக்க வேண்டுமென்றார். நானும் அவரும் போயிருந்தோம். போனோமே தவிர, கூட்டணி பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை. இதுதான் உண்மை.
ஆனால், யாரோ முதல்வரிடம் நாங்க தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடித்துவிட்டோம் என்று தவறான தகவல் சொல்லி பாலிடிக்ஸ் செய்ய அவரும் அதை நம்பி விட்டார்.
எனக்குள்ள வருத்தம் முதல்வர் என்னை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். கூட்டணியும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் முடிவு செய்தோம்.
<b>உங்களிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதே...</b>
ஆம்... எங்கள் கட்சியின் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். கூட்டணி பற்றிப் பேசினார்கள். நான் அவர்களிடம் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதென்று முடிவு செய்துவிட்டோம் என்று சொன்னதற்கு அவர்கள் ஐந்து தொகுதிகள் தருகிறோம் என்றார்கள். நான் உடனே, அப்படியென்றால் ஒரு நிபந்தனை. நாங்கள் எந்தத் தொகுதியைக் கேட்கிறோமோ அந்தத் தொகுதியைக் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே ஒருவர், ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு வேண்டாம், தனிப்பட்ட கார்த்திக் போதும் என்றார். அப்புறம் ராஜ்யசபா சீட் தருகிறோம். இந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் இயக்கமோ போட்டி போடக்கூடாது என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது என்ன நியாயம்? என்றேன். நீங்கள் ஒதுங்கிக்கொள்ள எத்தனைக் கோடி பணம் வேண்டும்? என்றார் ஒருவர். இன்னொருத்தர் வந்து என் கண் முன்னே பணத்தை அடுக்கி வைத்தார். மூன்றரைக் கோடி பணம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு ஏதோ கடன் பிரச்னை இருக்கிறதாமே! என்றார். எனக்கு இன்னும் ஷாக். எனக்கு இருக்கும் பிரச்னையை எப்போதோ முடித்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியாது பாவம். அப்படியே என்னுடைய பிரச்னை முடியாவிட்டாலும் நான் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.
<b>ஆண்டிப்பட்டியில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா? </b>
அப்படி என் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்ல, அவர்களும் நீங்கள் ஏன் நிற்கக் கூடாது? தொண்டர்கள் விருப்பத்தைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் கட்சிக்காரர்களின் வெற்றிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்... என்றார் கார்த்திக். </i>
நன்றி குமுதம்
|
|
|
| நான் தேடும் ........... |
|
Posted by: sWEEtmICHe - 04-18-2006, 01:30 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<img src='http://img504.imageshack.us/img504/6073/sweetmiche8dh.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:27pt;line-height:100%'><b>நான் தேடும் ...........</b></span>
[size=15]போதும் நான் வெச்ச பாசம்
இரு கண்கள் போதாது…
சோகம் கரைக்க கண்ணீர் கரக்கிறது
காதல் பயணத்தில் நானே ஒரு பாவம்
இதயத்தின் நிம்மதியைத் தேடி துறந்த ஜன்மம் போல்
கனத்தபடி நித்திரை அடைத்து இன்று வாழ்கிறேன்........
<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL</b>
|
|
|
| போர்மூலமே தீர்வெனில் தமிழர்கள் தயார்: தமிழீழ மாணவர் அமைப்புப |
|
Posted by: iruvizhi - 04-18-2006, 12:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>போர்மூலமே தீர்வெனில் தமிழர்கள் தயார்: தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர்</b>
[செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 16:21 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
சமாதானத்தீர்வு ஒன்றை எட்டுவது என்பது போர்மூலம் தான் சாத்தியப்படும் என்றால் அதனை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தயாராகவே உள்ளனர் என்று தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப்பணியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற சிந்தனை அழியாத சிந்தனையாக சிங்கள அரசிடம் தொடர்ந்தும் உள்ளது.
சிங்கள அரசு அன்று முதல் இன்று வரையில் சிந்தனையிலோ, செயற்பாட்டிலோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது செயற்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே திருகோணமலையில் அப்பாவித்தமிழ் மக்கள் மீதான வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பற்றாளர்களும், தமிழீழத்திற்காக உழைப்பவர்களும் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் வெளிப்படையான ஒன்றாகவே இருக்கின்றது.
அவர்கள் மிகவும் மனித பண்புகளில் இருந்து மாறுப்பட்டு, அப்பாற்பட்டு நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இன்றைய நவீன உலகம் ஜனாயகம் உள்ளதாக மனிதாபிமானம் உள்ள சமூகமாக மாறி வருகின்ற அதேவேளை சிங்கள தேசம் மட்டும் காட்டுமிராண்டித்தனமான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் விடுதலையை எட்டுவதற்கான விளிம்பில் நிற்கின்ற சூழலில் தமிழ் மக்கள் போராட்டத்திற்கான பல்வேறு வகையிலான அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சமாதானம் எனப்படுகின்ற காலகட்டத்தில் நாங்கள் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம்.
சமாதானத்தீர்வு ஒன்றை எட்டுவது என்பது போர்மூலம் தான் சாத்தியப்படும் என்றால் அதனை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தயாராகவே உள்ளனர்.
அதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றியை எட்டும்.
இன்று இருக்கின்ற அரசியல் சூழல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கே சாதகமாகவே உள்ளது.
இந்தச் சாதகமான சூழலைச் சரியாகப் பயன்படுத்த ஒருமித்த ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும்.
வயது வேறுபாடின்றி பெரும் எண்ணிக்கையில் மக்கள் முன்வந்து போராட்டத்தில் இணைவது என்பது மிகப்பெரிய வெற்றியைத் தரப்போகின்ற வெற்றியின் தொடக்கம் என்றார் முகுந்தன்.
தமிழர் புனர்வாழ்வுக்கழக நிர்வாக அலுவலகர் ஜெராட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கான சுடரினை வவுனியா மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணிப்பாளர் மூர்த்தி ஏற்றினார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினைச் சேர்ந்த மனோரஞ்சிதன் மலர் மாலையை அணிவித்தார்.
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிக்கொட் திட்டப்பணிப்பாளர் சுடர் நினைவுரை நிகழ்தினார். கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
<b>தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com</b>
|
|
|
| என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... |
|
Posted by: sWEEtmICHe - 04-18-2006, 12:42 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/10001/normal_35%7E1.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:27pt;line-height:100%'>என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா....</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>புலர்ந்த பின்
உன்னை கண்டு
பசுமையை சுவாசித்து உயிர் வந்தது...
வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க,
விடியல் காற்று அறைந்தது...
மேலும் வாழ ஓர் ஆசை,
-பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண--
நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ----
.. நீ எனக்கு மட்டும் சொந்தம் ....
.உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து
செல்லமே! ... \"உயிரே,
அன்பே பொங்கிப் பாயும் நதியே,
நீ கரைந்து-மோதி
நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க
வண்ண ஓவியமாய்,வந்து.........
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.....
<b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b></span>
|
|
|
| Tamil Canadians fear for Sri Lankan homes |
|
Posted by: Vaanampaadi - 04-18-2006, 10:17 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>Tamil Canadians fear for Sri Lankan homes</b>
SARAH ELTON
From Tuesday's Globe and Mail
Tamil Canadians who arrived as refugees from Sri Lanka's civil war fear they will lose the homes they left behind after the Liberation Tigers of Tamil Eelam announced last week that they will seize expatriates' property.
In a Voice of Tigers radio interview that was widely published in Tamil community papers last week in Toronto, an LTTE legal official with the nom de guerre Sudar revealed the plan to take over property belonging to Tamils who left more than 10 years ago and redistribute it to the landless.
"It's quite draconian," said one Toronto Tamil who believes his family will lose a plot of farmland and a house in the town of Jaffna, which they left when they fled northern Sri Lanka to avoid his conscription into the LTTE at the age of 13. The Toronto resident would speak to The Globe and Mail only under conditions of anonymity to protect his family in Colombo.
As detailed in the radio interview transcript, the legislation that will be implemented in the LTTE-controlled north and east will forbid expatriates from selling their property in anticipation of the land seizure. Tamils who live abroad or in other areas of Sri Lanka will be permitted to secure the title to their land only by returning to live on it. Though they will be allowed to hand it over to a relative who can cultivate it, control will remain with the LTTE.
"This is the only worldly possession that we have," said the Toronto Tamil, explaining that the properties are his family's only assets because they have lived as refugees for more than a decade. "That was the last place that my family was together as a happy, united family. Losing that to somebody -- I can't even think about it."
The Canadian Tamil Congress, which aims to provide a unified voice from this country's Tamil community, would not comment on the issue.
"We haven't seen the document. Without seeing it, we can't speculate," said the person who answered the phone at the congress and would not give his name.
News of the planned takeover is spreading fast through the Tamil expatriate community. According to one of the editors of a community paper that published the Voice of Tigers interview, Tamils in Toronto are angry. Of the more than 200,000 Tamil Canadians, many stand to lose their property back home, though no one feels comfortable speaking publicly about it.
Even though readers are upset, he said, none will be writing editorials or letters to the editor to express their outrage here in Canada.
"Most of the people don't write letters to us because they're scared. If they write their names, they get a hard time," he said, also declining to give his name for publication.
This fear of speaking out about the land transfer because of potential reprisal by LTTE affiliates, even though they live in a democratic society far from the conflict, frustrates the Toronto Tamil. He cited the Human Rights Watch report issued last month detailing widespread intimidation and extortion by the LTTE in the West, including Canada, as proof that their fears are well founded.
"We don't have a voice in this war, people who aren't on either side. . . . I'm voiceless because I don't have a gun," he said.
Special to The Globe and Mail
http://www.theglobeandmail.com/servlet/sto...y/National/home
|
|
|
| Three paramilitary cadres killed, one captured - LTTE |
|
Posted by: I.V.Sasi - 04-18-2006, 07:56 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Three paramilitary cadres killed, one captured - LTTE
[TamilNet, April 18, 2006 06:03 GMT]
Three paramilitary cadres who were on a penetration mission into the Liberation Tigers of Tamil Eelam controlled area in Pendukalsenai, west of Kiran in Batticaloa district, were killed when Tigers launched a counter-attack on the attak group, LTTE's Kudumbimalai area coordinator Oliyan told media Tuesday. One paramilitary cadre was captured by the LTTE.
The dead bodies of the paramilitary caders were to be handed over to their relatives, Oliyan further said.
The Tigers also captured Claymore mines, grenades and automatic rifles from the group.
The killed persons were from Korakallimadu, Pendukalsenai and Kiran.
The attack group was also involved in the penetration mission last Thursday in Vakaneri, according to Oliyan.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17811
|
|
|
| ஒட்டுப்படை மீது புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி, |
|
Posted by: I.V.Sasi - 04-18-2006, 07:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஒட்டுப்படை மீது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி - ஒருவர் கைது </span>
- பாண்டியன் - Tuesday, 18 April 2006 12:42
மட்டக்களப்பு மாவட்டம், கிரான் மேற்கு, பெண்டுகள் சேனைப் பகுதிக்குள் ஊடுருவி தாக் குதல் நடத்த முற்பட்ட ஒட்டுப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒட்டுப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுப்படையினரிடமிருந்து கிளைமோர் கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒட்டுப்படையி னரின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை வாகனேரியில் நடைபெற்ற தாக்குதலில் இந்த கும்பலே ஈடுபட்டதாக தெரியவருகிறது.
http://www.sankathi.com/index.php?option=c...=2622&Itemid=26
|
|
|
|