Yarl Forum
யாருங்க லண்டன் பாபா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கலைகள்/கலைஞர்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=54)
+--- Thread: யாருங்க லண்டன் பாபா (/showthread.php?tid=156)



யாருங்க லண்டன் பாபா - காவடி - 04-18-2006

சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார்.
http://www.londonbaba.com/theervu/player.swf
http://www.londonbaba.com/neeraki/player.swf

பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.


- pandiyan - 04-18-2006

இவரும் தேர்தலில் நிக்கிறார் என்று கேள்வி.


- நேசன் - 04-18-2006

அவரது கலை முயற்சியை பாராட்டுவோம்.


- nallavan - 04-18-2006

இருக்கிற கோமாளியளச் சமாளிக்கக் காணேல. உதுக்க இவங்களும் வெளிக்கிட்டிட்டாங்கள்.

ஆள் ஈழத்தவரோ, தமிழகத்தவரோ?


- pandiyan - 04-18-2006

ஆள் ஈழத்தவர்


- Aravinthan - 04-19-2006

இவர் முன்பு தீபம் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வந்த தகிட தகிட என்ற நிகழ்ச்சியில் ரஜனிகாந்தின் திரைப்படப்படல்களுக்கு நடித்தவர்.


- sri - 04-26-2006

இவர் ஈழத்தில் நெல்லியடியை சேர்ந்தவர் புலம் பெயர்ந்து லண்டன் கரோ பகுதியில் வசித்து வருகிறார். இவரது சொந்தபெயர் சுரேஸ் கிருஸ்ணபிள்ளை . இப்போது தனது பெயரை இந்தியபாணியில் சுரேஸ் கிருஸன் என சுருக்கியுள்ளார்.

http://www.londonbaba.com/about.htm


- Thala - 04-26-2006

http://www.londonbaba.com/

மினக்கெட்டு வலைத்தளத்தை உருவாக்கி இருக்காங்கப்பா.....!

http://www.londonbaba.com/yarlG.htm
வாங்கினது காசு குடுத்தா இலவசமாவா..???

http://www.londonbaba.com/thalavan/player.swf
இது என்ன கூத்து...??? ஆ...ஆ....ஆ Confusedhock:


http://www.londonbaba.com/cdrelease/cdrelease.swf
சூப்பரா சொன்னாரப்பா...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: Confusedmile2: தாங்க முடியல்லப்பா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

http://www.londonbaba.com/politics.htm
இங்கிலாந்தில முதலமைசர் இருக்காரா என்ன...??


- nallavan - 04-26-2006

அப்ப இந்தியாக்காரன் எண்டே சொல்ல வேண்டியதுதான்.
சினிமாப்படங்களில வாறமாதிரி சீலையோ ஏதோ குடுக்கிறார், வாங்கிற ஆக்களை ஆசீர்வதிக்கிறார்..... அதோட கதையள்கூட அப்பிடித்தான் கிடக்கு.

அவரின்ர கலைமுயற்சியைப் பாராட்டலாம். அது முயற்சியா இருந்தாத்தானே? சும்மா கண்டகண்ட சினிமாப்படங்களைப் பாத்துப்போட்டு, (அவர் வைச்ச பேரிலயே தெரியுது அவரின்ர முயற்சி) அதை அப்பிடியே இஞ்ச கொப்பி பண்ணிறதோ முயற்சி? ஒருத்தன் பொழுதுபோக்காச் செய்யிறது வேற, ஆனா இதுதான் லட்சியம் எண்டமாதிரி, தான் கலைச்சேவை செய்யிறன் எண்டமாதிரி ஒரு விம்பத்தை உருவாக்கிறதுதான் பிரச்சினை.

அண்ணர் அரசியலுக்குத்தான் சரி. மேடைப்பேச்சிலகூட என்னமா முழங்கிறார்? பேச்சு முடிய என்னமா கைகூப்பிறார்?


- Subiththiran - 04-26-2006

உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா?


- Ilayathambi - 04-26-2006

நல்லவனின் கருத்தோடு நான் முற்று முழுதாக ஒத்துப் போகிறேன். உண்மையில் இந்த பாபாவிற்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மத்தியிலும் இவர்களைப் போன்ற கோமாளிகள் இருப்பது மிக வேதனையான விடயம்

இந்தப் கேலிக்கூத்தை விளம்பரப்படுத்திய தமிழ்நாதத்தை என்னவென்று சொல்வது?


- BASKAR - 04-26-2006

இந்த பாபா முழு கோமாளி


- Bond007 - 04-26-2006

http://www.monkeyworld.org/


- Bond007 - 04-26-2006

http://www.monkeyworld.co.uk/topic.php?Top...mplate=standard


- AJeevan - 04-26-2006

இவர் தன்னால் முடிந்ததைச் செய்கிறார்.

இன்று புகழ் பெற்றுள்ள
பல நடிகர்களும் கலைஞர்களும்
வேறு பலரை
பின்பற்றித்தான் வந்துள்ளார்கள்............

எனவே நாம் விரும்பினால்
அவரது கலைத் திறனை ரசிப்போம்.
தடைகளை போடுவது
வேறு நிலைமைக்கே தள்ளப்படும்
என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

ஏன்
நம் புலம் பெயர் தமிழ் தொலைக் காட்சிகள்
மட்டுமல்ல
மேடை நிகழ்வுகளிலும்
இப்படியான நிகழ்வுகளைத்தானே
நமது படைப்புகளாக தருகிறார்கள்.

அவற்றை நம்மவர்கள்
எப்போதாவது எதிர்த்ததுண்டா?


- sri - 04-26-2006

இது எல்லாம் தேர்தல் காலத்தில் வரும் விளம்பரங்கள்தான். திருமதி லண்டன் பாபா தேர்தல் களத்தில் குதித்துள்ளார்(தமிழ்நாட்டில் அல்ல பிரித்தானியாவில் கரோ பகுதி பிரதேச சபைக்கான தேர்தல) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கந்தப்பு - 04-27-2006

சிட்னியிலும் ஒருவர் விஜய் ரசிகர் சிட்னி மன்றத்தலைவராக இருக்கிறார். அவரும் ஈழத்தில் பிறந்தவர்