ஊர்ப்புதினம்

பேரழிவுக்கு உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது - புபுது ஜயகொட

2 months 3 weeks ago

பேரழிவுக்கு  உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது - புபுது ஜயகொட

Published By: Vishnu

25 Dec, 2025 | 05:16 AM

image

தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இந்நாட்டின் உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனமும் முதலாளித்துவ வர்க்கமுமே இந்த அழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டு மென முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் 'தித்வா சூறாவளியின் துயரத்துடன் முன்னோக்கி' எனும் தொனிப்பொருளில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் 37 சதவீதத்திற்கு  பெரும் சொத்துடையவர்களே பொறுப்பு கூற வேண்டும். இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நாடுகளின் செயற்பாட்டால் ஏற்பட்ட 7 பில்லியன் டொலர் அனர்த்த சேதத்திற்கு வளர்ந்த நாடுகளிடம் இழப்பீடு கோர வேண்டும்.

இலங்கையில் 1996 ஆம் ஆண்டு மண் பாதுகாப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததும் முறையற்ற மணல் அகழ்வு மற்றும் காடழிப்புமே பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கக் காரணம். அனர்த்தத்தின் பெயரால் நவதாராளவாத அடக்குமுறைகளை அரசு திணிக்கக் கூடாது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டின் மீதான வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என அரசு அறிவிக்க வேண்டும். 

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் மீதான வெட் வரியை நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி மற்றும் நுண்கடன் ஆகியவற்றை மீள் செலுத்தும் தவணை காலத்தை ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/234362

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

2 months 3 weeks ago

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வுகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 

Published By: Digital Desk 3

25 Dec, 2025 | 01:45 PM

image

கடவத்தையில்  கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மிதக்கும் பந்து வால்வு (Float Operated Valves) தொகையை  அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது. 

லேபிள் விதிமுறைகளை மீறி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கத்தை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்த பின்னர், அந்த வால்வுகளை அழிக்க நீதிமன்றம் 15ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சுமார் ரூ. 500,000 மதிப்புள்ள  வால்வுகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் லேபிளிங் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்த பின்னர்,  மஹர நீதவான் நீதிமன்றம் அவற்றை அழிக்க உத்தரவிட்டது.

அதன்படி, இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLS) பதிவு இலக்கம் குறிப்பிடாமல் மிதக்கும் பந்து வால்வுகளை விற்பனை செய்தமைக்காக கடவத்தை எல்தெனிய பகுதியில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. 

தரக்கட்டளை நிறுவனத்தின் பதிவு இலக்கம் குறிப்பிடப்படாத வால்வுகளை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்ட்வேர் நிறுவனம் ஒன்றுக்கு  20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் (ITI) உத்தியோகபூர்வ இலச்சினையை அனுமதியின்றி பயன்படுத்தி நுகர்வோரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு நிறுவனம் ஒரு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது. நிறுவனம் மீதான  வழக்கு மீண்டும் 2026 ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், தரம் குறைந்த உதிரிபாகங்கள் விரைவில் பழுதடைவதால் நீர் கசிவு (Water Leaks) ஏற்பட்டு உங்கள் நீர் கட்டணம் அதிகரிக்கலாம். எனவே சந்தையில் உரிய லேபிள்கள் அல்லது விபரங்கள் இல்லாத தரம் குறைந்த வால்வுகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அதிக செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிப்போவது முழு நாட்டுக்கும் ஏற்படும் ஒரு தேசிய குற்றமாகும். தரம் குறைந்த பொருட்களுக்கு ஏமாற வேண்டாம், எப்போதும் தரம் குறித்து விழிப்புடன் இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/234393

“எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை!

2 months 3 weeks ago

🍖 “எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை! 📉🚫

written by admin December 25, 2025

0-1-7.jpeg?fit=1170%2C878&ssl=1

நத்தார் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கையால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி:

  • மாடுகள் மீட்பு: யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான கொல்களத்தில் (Slaughterhouse) அனுமதியற்ற முறையில் இறைச்சியாக்கப்படவிருந்த 2 கன்றுகள் உட்பட 15 மாடுகளை நேற்றிரவு மாநகர சபையினர் மீட்டனர்.

  • விற்பனை பாதிப்பு: இதனால் இன்று நத்தார் தினத்தன்று யாழ். நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாமல் போனது.

  • விலை ஏற்றம்: தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டதுடன், பொதுமக்கள் இறைச்சி வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

வியாபாரிகளின் குமுறல்: “பண்டிகை காலத்தில் அதிக வியாபாரம் நடக்கும் என நம்பி அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்கினோம். மாநகர சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என வியாபாரிகள் மாநகர சபையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். எனினும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரே மாடுகளை விடுவிக்க முடியும் என்பதில் மாநகர சபை அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

https://globaltamilnews.net/2025/224943/

🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰

2 months 3 weeks ago

🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰

written by admin December 25, 2025

tsunami44.jpg?fit=825%2C549&ssl=1

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (டிசம்பர் 26) நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

🕒 முக்கிய நேரங்கள் மற்றும் நிகழ்வுகள்:

  • மௌன அஞ்சலி: நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் நாடு தழுவிய ரீதியில் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • தேசிய நிகழ்வு: 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு, காலியில் உள்ள பெரலிய (Peraliya) சுனாமி நினைவுச் சின்னத்தில் நாளை காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும்.

  • மத வழிபாடுகள்: அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாக சர்வமத பிரார்த்தனைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

📜 வரலாற்றுப் பின்னணி:

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே நாளில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் தேசிய பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


https://globaltamilnews.net/2025/224946/

ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது

2 months 3 weeks ago

ஒற்றையாட்சிக்குள் தமிழரை முடக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சி; இது தொடரும் வரை தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது

GAJA-1.jpg

தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச சமூகம் ஜெனிவாவில் இலங்கை அரசின் கருத்துருவாக்கத்தினை நிராகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது . இங்கு இனப் பிரச்சினை இருப்பதாகவும் இலங்கையில் உள்ள அத்தனை மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுமே அதன் சாராம்சம்.

இலங்கை அரசாங்கம் இங்கு பயங்கரவாத பிரச்சினையே உள்ளதென சொன்ன போது சர்வதேச சமூகம் இல்லை, விடுதலைப் புலிகளின் போராட்டம் 70களில் தான் ஆரம்பித்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது 48 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தது என்பதை தெரிவித்தது.

தமிழ் மக்கள் இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்த அரசியலமைப்பையும் ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள், உரிமைகள் அரசியலமைப்பில் நிராகரிக்கப்படுகின்றன என்று சொன்னால் இங்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதே அர்த்தம்.

எந்த ஒரு நாட்டிலும் ஒரு இனம் அந்த நாட்டின் அரசியலமைப்பை நிராகரித்தால் அங்கு இனப் பிரச்சினை உள்ளது என்பதே அர்த்தம். பிரித்தானியாவில் ஐரிஸ் மக்கள் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு இனப் பிரச்சினை இருந்தது. அந்த அரசியலமைப்பை அங்கு திருத்தம் செய்து இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அரசியல் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தான்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும்.தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தெளிவாக பதிவு செய்யப்படுகிறது.தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய வல்லமையை சர்வதேசம் வழங்குகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் வெளிநாடுகள், சர்வதேசம் பெரிய அளவில் இங்கு முதலீடு செய்ய விரும்பாது.

இனப்பிரச்சினை திரும்பவும் வந்து வெடிக்கும். ஸ்திரத்தன்மை இன்றி குழம்பும் என்ற நிலை உள்ளது.முதலீடு செய்வதாக இருந்தால் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலைமை வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூட புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பேச்சுக்காகவாவது புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக சொல்ல வேண்டியுள்ளது.

இவ்வாறான பின்ணணியில் இந்தியாவினுடைய பங்கு மிக மிக முக்கியம். அயல்நாடு. அயல் வல்லரசு. அந்த நாட்டினுடைய கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் இலகுவில் ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள்.எதிரி நாடுகள் இந்தியாவை மீறி செயற்படலாம். ஒத்துப் போகக் கூடிய மேற்கு நாடுகள் இந்தியாவுடன் ஒத்துப் போகவே விரும்புவார்கள்.

இந்தியாவை தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டுக்குள் உறுதியாகக் கொண்டு வருவது முக்கியம்.இந்திய -இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதே தமிழ் மக்களுக்காகத் தான். அதற்கு இந்தியாவுக்கும் கடமை இருக்கிறது.அவ்வாறான நிலையில் இந்தியாவிடம் எதைக் கேட்பது என்பது முக்கியம்?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு மட்டுமே தமிழின பிரச்சினைக்குத் தீர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திய போது ஏனைய கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பன மாகாண சபை தேர்தலை நடத்துவதும் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது மட்டுமே தேவை என வலியுறுத்தின.

விசேடமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், 13ஆம் திருத்தம் இந்தியாவின் பிள்ளை. அதனை இந்தியா கைவிட விரும்பாது. 13ஆம் திருத்தத்தை நீக்குவதை விரும்பவில்லை. இலங்கை அரசு 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நீக்க விரும்புகிறது. இந்தியா கொண்டு வந்த திருத்தம் என்றபடியால் 13ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் வைத்திருப்பது தான் அவசியம் என்ற அடிப்படையில் தான் பேசினார்.

13ஆம் திருத்தத்திற்குள் இருக்கக்கூடிய அம்சங்கள் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அதில் உள்ள அதிகாரங்கள் உண்மையில் அனுபவிப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைக்குள் 13 ஆம் திருத்தம் முடக்கப்பட்டிருக்கிற வரைக்கும் தமிழ் மக்களுக்கு அதனை அனுபவிக்க முடியாது.

இதனை உயர்நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது..

இதற்கு பின்னரும் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருவது, அதில் ஏதோ இருக்கிறது. அதனால் அரசாங்கம் மறுத்து வருகின்றது என்ற பொய்யை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே இது நடக்கின்றது என்பதை தெளிவாக கூறுகின்றோம்.

13 ஆம் திருத்தம்தான் தீர்வு என இவர்கள் தேர்தல் காலத்தில் சொல்லி இருந்தால் மக்கள் தக்க பதிலை வழங்கியிருப்பார்கள். தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சொல்கின்ற சமஷ்டி ஆட்சியை விட தீவிர தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு 16 வருடங்களாக வாக்குகளைப் பெறுகின்றார்கள்.

மிக முக்கியமான சந்திப்பில் சமஷ்டியை வலியுறுத்தாமல் மாகாண சபை தான் வேண்டும் எனச் சொல்வது, தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைக்கு நேர் மாறானது. அதனை நிராகரித்து துரோகம் செய்கின்ற வகையில் தான் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

இதை 2009 ஆம் ஆண்டு நாம் மக்களுக்கு சொன்னோம். அன்று நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த போது, போர் முடிந்து அடுத்தடுத்த நாட்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனைய தலைவர்களான தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கக்கூடிய 13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அன்றைக்கு சொன்னோம். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய வெளிவார அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு தங்கள் வாயால் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் துணை போய்க்கொண்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக கூறுகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு விட்டார்கள் என்று சொன்னது.. அவர்கள் வந்து அதைச் சொன்னாலும் தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு வாக்கை பெற்றவர்களே ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு இணங்குவது தேசிய மக்கள் சக்தி சொன்னது சரியானது என்பதை உலகமே ஏற்றுக் கொள்ளும். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை. இதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அரசியல் தலைவர்களை சந்தித்ததன் முன்னேற்றத்தை கூட இந்த செயற்பாடுகள் இல்லாமல் செய்துவிடும்.

ஜனநாயகம் என்ற பெயரில் பார்த்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு உறுப்பினர் தான் உள்ளது. தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளார்கள்.அந்த ஒன்பது உறுப்பினர்களும் மக்கள் தந்த ஆணைக்கேற்ப செயற்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தேர்தல் காலத்துக்கு மட்டுமே சொல்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த நிலைப்பாட்டுக்கு நேர் மாறாக செயல்படுகிறார்கள்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பில் சமஷ்டி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த ஒரு இடத்திலும் அதனை செய்யவில்லை.தமிழகத்தில் தமிழகத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை தடுப்பதற்கு இவர்கள் செயல்படுகிறார்கள்.

இந்த போக்கு தொடரும் வரைக்கும் தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு சார்ந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது. ஒற்றையாட்சி முறைதான் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு முறைக்கு அடிப்படை.

மாகாண சபை தேர்தல் நடக்காமலே மாகாண சபைகள் எல்லாம் இயங்குகின்றன என்று சொன்னால் மாகாண முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் ஏமாற்றமே. மாகாண ஆளுநருக்கு தான் சகல அதிகாரமும் உள்ளது. சட்டரீதியாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்களின் பொறுப்பு. அவர்கள் இல்லாமலே ஆளுநர் செயல்பட முடியும். அதுதான் தற்போது நடக்கிறது. தயவுசெய்து மக்கள் ஏமாற்றத்திற்கு விலை போகக்கூடாது.

மக்கள் விலை போக, விலை போக கிடைக்கும் சந்தர்ப்பங்களை இழந்து கொண்டு போகிறோம். இதனால் தமிழ் மக்கள் அழிகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் செல்வராஜா கஜேந்திரனையும் அழிப்பது மட்டுமல்ல நீங்களும் அழிகின்றீர்கள். அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

https://akkinikkunchu.com/?p=353672

இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா

2 months 3 weeks ago

இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்: பிரித்தானியா

December 25, 2025

பிரித்தானிய அரசாங்கம் இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக  தடைகளை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன. தடை விதிப்புக்கள் தொடருமென வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்துள்ளார்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்ட ம் கடந்த வாரம் இம்பெற்றிருந்த நிலையில் அங்கு கருத்துரைத்த உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் விசாரணைகளோ அல்லது சிறப்பு நீதிமன்ற விசாரணைகளோ மேற்கொள்ளப்படவில்லை’ என அவர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று, ‘பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர், தப்பிப்பிழைத்தோர் என யாருக்கும் செவிசாய்க்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின்மீது தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்குமா?’ எனவும் உமா குமாரன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் சார்ந்து நிலவும் கரிசனைக்குரிய விடயங்களுக்குத் தீர்வுகாணுமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் இதுசார்ந்த நிலையான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

‘மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன’ என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

https://www.ilakku.org/sanctions-against-sri-lankan-war-criminals-to-continue-britain/

பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்!

2 months 3 weeks ago

பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்!

Dec 24, 2025 - 11:31 PM

பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து: மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் தையல் கடையின் முன்னால் நின்றுகொண்டிருந்த மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு கடைகளும், மூன்று தையல் இயந்திரங்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் துரத்தி வந்தமையாலேயே கார் மிக வேகமாக வந்து விபத்துக்குள்ளானதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தணிக்க, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmjkblp7j033bo29nt9655fwz

தலைவர்களின் நத்தார் தின வாழ்த்து செய்திகள்

2 months 3 weeks ago

அமைதி, நல்லிணக்கம், தியாகம், இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தார்! - ஜனாதிபதி 

25 Dec, 2025 | 12:48 AM

image

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து,  அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய  நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

உலக மக்களால் குறிப்பாக கிறிஸ்தவர்களால் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அச்செய்தியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கைப் பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். 

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவவேண்டும். 

பெத்லகேமில் ஓர் ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து,  அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த  இனிய  நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/234321

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்!

2 months 3 weeks ago

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நத்தார் ஆராதனைகள்! 

25 Dec, 2025 | 12:23 PM

image

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பை சிறப்பிக்கும் நத்தார் பண்டிகை இன்று (25) உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. 

இயேசு பிறப்பை அனுஷ்டிக்கும் வகையில் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு விசேட ஆராதனைகள்  நடைபெற்றன. 

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பிரதான நத்தார் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் நத்தார் கீதங்களும் பாடப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சி பெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனை ஆயரினால் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத் திருப்பலியை ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

இயேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாக உள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_4073.JPG

IMG_4089.JPG

WhatsApp_Image_2025-12-25_at_00.59.30.jp

IMG_4051.JPG

IMG_4061.JPG

IMG_4094.JPG

IMG_4116.JPG

IMG_4136.JPG

IMG_4144.JPG

IMG_4155.JPG

IMG_4170.JPG

https://www.virakesari.lk/article/234387

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள்

2 months 3 weeks ago

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள்

Dec 24, 2025 - 07:09 PM

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள்  இன்று (24) இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை சுமந்து சென்று சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmjk29f030335o29n7uysh1yz

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை

2 months 3 weeks ago

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை

Published By: Vishnu

24 Dec, 2025 | 06:38 PM

image

"இந்த நோக்கத்திற்கு ஆதரவாக முன்வந்த முதலாவது IT நிறுவனம் நாமே." - டெக்னோசிட்டி நிறுவன தலைவர் ஃபமி இஸ்மாயில் இலங்கையில் HP, ASUS, MSI, Lenovo, BenQ, Raidmax, Kaspersky போன்ற சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முன்னணி விநியோகஸ்தரான Technocity Pvt Ltd (டெக்னோசிட்டி) நிறுவனம், ரூ. 50 மில்லியன் பெறுமதியான பாரிய நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளது. 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கட்டடங்கள் மாத்திரமன்றி, பல பாடசாலைகளின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாகச் சீர்குலைந்துள்ளன. இந்த அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டு, Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் உட்கட்டமைப்புகளை சீரமைப்பதற்காக ரூ. 20 மில்லியன் பணமாகவும், ரூ. 30 மில்லியன் பெறுமதியான அதிநவீன கணனி சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) வசதிகளும் வழங்கப்படவுள்ளது. இதன் கீழ், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 50 'Techno View' 65" மற்றும் 86" செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஸ்மார்ட் போர்ட்கள் (Interactive AI Smart Board Display Panels), மடிகணனிகள், All-in-one பிரின்டர்கள் மற்றும் போட்டோபிரதி இயந்திரங்கள் ஆகியன வழங்கப்படவுள்ளன. இந்த அதிநவீன சாதனங்கள் வகுப்பறைகளை மீள நவீனமயப்படுத்தவும், அனர்த்த நிலைமையிலும் கூட சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமையை உறுதி செய்யவும் வழிவகுக்கும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகத்துடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், இந்த மனிதாபிமான முயற்சியானது ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, Technocity நிறுவனத்தின் தலைவரும் அதன் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில், இதற்கான காசோலையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.

இந்த பணியின் பின்னாலுள்ள முக்கியமான கடமை தொடர்பில், Technocity மற்றும் Laptop.lk ஆகிய நிறுவனங்களின் தலைவரும் அவற்றின் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில் கருத்து வெளியிடுகையில், “உட்கட்டமைப்பு சேதங்கள், கல்வி மற்றும் அத்தியாவசிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளைப் பாதிக்கும் வேளையில், மனிதாபிமானமே முன்னிற்க வேண்டும் என்பதை இத்தகைய தருணங்கள் எமக்கு நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கௌரவத்துடனும் வலிமையுடனும் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவதே எமது நோக்கமாகும். அத்துடன் இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்த முதலாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நாம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

இன்று, இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்துள்ள நிலையில், Technocity நிறுவனத்தின் இந்த மனிதாபிமானம் மிக்க தலைமைத்துவமானது, தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இலங்கை மக்கள் இவ்வாறான கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பார்கள் எனும் காலத்தால் அழியாத உண்மையை இந்த உதவியானது வலியுறுத்துகிறது.

image1.png

இடமிருந்து வலமாக – புகைப்படத்தில், Technocity நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர் சஞ்சுல ஹெட்டிகே, ஜசீம் ஜுனைதீன் (CFO), மின்ஹாஜ் பாரூக் (சில்லறை வணிக பிரவின் தலைவர்), அக்ரம் பதுர்தீன் (CEO), பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்த்ரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தலைவர் மொஹமட் ஃபமி இஸ்மாயில், விநியோக முகாமையாளர் ஜெஹான் தங்கப்பன், கேமிங் விநியோகப் பிரிவு தலைவர் மொஹமட் காதிர் இஸ்மத், நிஸ்ரான் ஷியாத் ஆகியோரை காணலாம்.

https://www.virakesari.lk/article/234353

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

2 months 3 weeks ago

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

24 December 2025

1766544241_2494574_hirunews.jpg

நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும்.

அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு நோக்கிய தொடருந்து சேவை

all_24_12_2025.jpg

மட்டக்களப்புக்கான தொடருந்து சேவை

all_12_24.jpg

https://hirunews.lk/tm/437350/from-today-you-can-travel-by-train-to-kankesanthurai-and-batticaloa

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

2 months 3 weeks ago

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

http://www.samakalam.com/wp-content/uploads/2025/12/Capture-2-300x201.jpg

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

https://www.samakalam.com/மாகாணசபைத்-தேர்தலை-நடத்த/

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

2 months 3 weeks ago

G82bQALagAADeA7.jpg?resize=680%2C219&ssl

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

 

G82bQAHbgAA5K1P.jpg?resize=457%2C287&ssl=1

இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

G82bQAJagAI4Hv6.jpg?resize=360%2C249&ssl=1

எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1457101

‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது

2 months 3 weeks ago

‘Rebuilding Sri Lanka’  திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது

Published By: Vishnu

23 Dec, 2025 | 06:31 PM

image

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும்  ‘Rebuilding Sri Lanka’  திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும்  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-12-23_at_18.06.3565.

சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-12-23_at_18.06.366.j

அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில்  இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர்  பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

WhatsApp_Image_2025-12-23_at_18.06.35.jp

மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’   திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை  மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த  Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச திணைக்கள தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம் Peng Xiubin பிராந்திய வெளியுறவு அலுவலக பணிப்பாளர் நாயகம் Bao Ting, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் Wang Siqi மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதிஅனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/234237

பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு

2 months 3 weeks ago

பாடசாலை விடுமுறை தினங்களில் மாற்றம் - கல்வி அமைச்சு அறிவிப்பு

23 Dec, 2025 | 06:39 PM

image

(எம்.மனோசித்ரா)

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025 கல்வி ஆண்டின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை நிறைவு செய்யும் தினங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை (23) புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தன. அதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன.

அதற்கமைய சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்துக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் 2026 ஜனவரி 5 திங்கட்கிழமை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2026 கல்வியாண்டின் முதலாம் தவணை 2025.12.09 கடிதத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படும்.

அத்தோடு 2026 ஆண்டுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் 2025.09.11 திகதியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படுவதுடன், பரீட்சை திணைக்களத்தால் 2026 சுற்று நிரூபத்துக்கமைய பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்படும் தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234232

இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்

2 months 3 weeks ago

Published By: Vishnu

23 Dec, 2025 | 02:25 AM

image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது.

அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர்.

அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது.  

அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது.

எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது.

ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் | Virakesari.lk

யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை!

2 months 3 weeks ago

Published By: Digital Desk 1

23 Dec, 2025 | 11:32 AM

image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளைப் பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது.

இந்தத்தடை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்படும் எனவும் பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது.

உணவக உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளுக்கு பதிலாக வாழை இலைகள், தாமரை இலைகள், தேக்கு இலைகள் போன்ற இயற்கைப் பொருட்களையும், உணவுப் பொதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அலுமினியத் தகடு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களையும் பயன்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது, நகராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் வணிக உரிமை பத்திரங்கள் இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை! | Virakesari.lk

12 இந்திய மீனவர்கள் கைது

2 months 3 weeks ago

23 Dec, 2025 | 12:50 PM

image

சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர்.

 "தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுடன் தீவில் உள்ள கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்" என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (22), இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸுக்குச் சொந்தமானது என்றும், படகு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத நிலையில் டோக்கன் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.

12 மீனவர்களில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), ஆண்டனி (32) என்பவர்கள்  அடங்கியுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்து விடுவிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மீனவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்தி அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

12 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு

2 months 3 weeks ago

23 Dec, 2025 | 03:54 PM

image

முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (22)  நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது.

இதன்போதே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கூறுகையில்,

கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகைதந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள்.

அந்த வகையில் கொக்கிளாயில் குடியேறி தங்கியுள்ள சிங்களவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானியும் என்னிடம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்தில் வசித்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, எமது தமிழ் மக்களின் பூர்விக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர்.

எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள்  ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறே பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் உள்ளது.

இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன.

ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும். இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை  மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்.

அத்தோடு புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்தளத்துக்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்விக மணலாற்றுப் பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர்.

இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஊழலை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசின் ஆட்சியில் ஊழல்கள் இடம்பெறக்கூடாது.

கொக்குத்தொடுவாயில் இவ்வாறு எமது தமிழ் மக்களுக்குரிய பூர்வீக காணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிராட்டிகுளம், பண்டாரவன்னி, மன்னாகண்டல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி, மாற்று வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு  | Virakesari.lk

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr